புது வரவு - நம்பிக்கை

2/06/2009

This Film is Not Yet Rated (2006) [18+]


டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப்பதிவில் சந்திப்போம். 



'Be Cool' என்றொரு காமெடி படம். ஜான் ட்ரவோல்டா-உமா த்ருமன் நடித்து 2005-ல் வெளிவந்தது. அதில் ஜானும் அவரது நண்பரும் ஒரு திரைப்படம் எடுப்பது பற்றி விவாதித்து கொண்டிருக்கும் பொழுது, பேசும் வசனம். (வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிக்கவும்).

ஜான்: PG-13 படங்கள்ல ஒரே ஒரு தடவை மட்டும் F-ன்னு ஆரம்பிக்கற அந்த வார்த்தையை உபயோகிக்கலாமாம். நீ கேள்விப்பட்டிருக்கியா?
நண்பர்: அப்படியா?!
ஜான்: FUCK THAT..!! I am done!!!


Be Cool படத்திற்கு MPAA கொடுத்த (கொடுத்தாக வேண்டிய) ரேட்டிங்: PG-13. பார்த்த MPAA போர்டு மெம்பர்களுக்கு பிடறியில் அடித்தது போல இருந்திருக்கலாம். இதற்கு அடுத்த ஆண்டு, 2006 வருடம் அவர்களுக்கு சம்மட்டியிலேயே அடி விழுந்தது. அடித்தது ஒரு டாக்குமெண்ட்ரி படம். பெயர் “This Film is Not Yet Rated”. இந்தப்படமே... ஒரு விமர்சனம் என்கிற பொழுது இந்தப்படத்தை பற்றி விமர்சிக்க வழியில்லை. ஏனெனில் “இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை”. ஃபாரன்ஹீட் 9/11 பார்த்திருப்பீர்கள். அமெரிக்க அரசியலையே மாற்றிவிடப்பார்த்த டாக்குமெண்ட்ரி படம். அப்படத்தின் வீரியத்திற்கு கொஞ்சமும் சளைத்தல்ல இது. ஆனால் ஃபாரன்ஹீட்டின் தீம் யுனிவர்சல். இது லோக்கல்.


ஹாலிவுட் படங்களுக்கு ‘சென்சார்’ கிடையாது, ‘ரேட்டிங்’ மட்டுமே! (நம்மூரில் எனக்குத்தெரிந்து ‘சென்சார்’ கொடுக்கும் சர்டிபிகேட், U - U/A - A மற்றும் S. இதில் S சர்டிபிகேட்டை நான் இதுவரை பார்த்தில்லை). இங்கு ரேட்டிங் கொடுப்பது MPAA (Motion Picture Association of America) என்ற ஒரு அமைப்பு. முதல் உலகப்போருக்கு பின், 1922-க்கு பிறகே அமெரிக்க படங்களுக்கு (தயாரிப்பு நிறுவனங்களால்) துவங்கிய ‘சென்சார்’, சரிவர வேலை செய்யாததால், மாநில அரசாங்கங்களே அந்த வேலையை துவங்க, இன்றளவும் ஹாலிவுட்டை தன் கையில் வைத்துள்ள மிகப்பெரிய (Disney, Warner Brothers, Sony, Paramount, etc.) தயாரிப்பு நிறுவனங்கள் விழித்துக்கொண்டு, 1968-ல் அவர்களே உருவாக்கிய அமைப்பு, MPAA. 5-திலிருந்து 17-வயதிற்குள்ளான பிள்ளைகள் உடைய பெற்றோர் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட(அப்படிதான் MPAA சொல்லுது), தன்னார்வ அமைப்பு. ஆனால் அந்த உறுப்பினர்கள் யார் என்ற விபரம் மட்டும் யாருக்கும் தெரியாமல் இதுவரை மறைத்து வருகின்றனர். இந்த அமைப்பு படங்களுக்கு கொடுக்கும் ரேட்டிங்:

G - பெற்றோரின் வழிகாட்டுதல் தேவையில்லை

PG - பெற்றோரின் வழிகாட்டுதல் தேவை

PG-13 - 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குபெற்றோரின் வழிகாட்டுதல் தேவை

R - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குபெற்றோரின் வழிகாட்டுதல் தேவை

NC-17 - கண்டிப்பாக 17 வயதிற்கு மேலுள்ளவர்கள் மட்டுமே அனுமதி.


[இதில் NC-17 மட்டும் முன்பு X என்று அழைக்கப்பட்டு, இப்பொழுது X என்பது அடல்ட் ஃபோர்னோ படங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வெறும் ஒரு X தான். XXX-ன்னு போடுவது எல்லாம் சும்மா பந்தாவுக்கு. தங்களின் ‘X தயாரிப்பு’ எவ்வளவு ‘சிறந்தது’ என்று சொல்ல அவர்களே கூட்டிக்கொண்டது.]

அதாவது தங்கள் தயாரித்த திரைப்படத்தை, தாங்களே ‘ரேட்’ செய்து, அதை ‘மக்களே’ செய்த்துபோல ஒரு தோற்றத்தை தருவதே இந்த MPAA-வின் வேலை. இந்த MPAA என்ற ஒரே கல்லில் இந்த பெரிய நிறுவனங்கள் அடிப்பது பல மாங்காய்கள்.

1. சென்சாரோ, ரேட்டிங்கோ இல்லை என யாரும் அரசிடம் அழமாட்டார்கள்
2. பிற சிறிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை R/NC-17 போன்ற ரேட்டிங்கை காட்டி பயமுறுத்தலாம்
3. தங்களின் ரேட்டிங் முறையால், பெற்றோர்கள் தன் பிள்ளைகளை நம்பி தியேட்டருக்கு அழைத்துச்செல்லலாம் என அரை லூசு அமெரிக்க பெற்றோர்களை நம்ப வைப்பது
4. ‘ரேட்டிங்’ என்பது அவசியமல்ல. ஆனால் ரேட்டிங் செய்யவில்லையெனில் யாரும் அப்படத்தை வினியோகமோ அல்லது தியேட்டரோ கிடைக்க விடாமல் தடுப்பது
5. ஹாலிவுட் என்பதின் நிஜ ஹீரோ, தயாரிப்பு நிறுவனங்களான தாங்களே தவிர, இயக்குனர்களோ, ஹீரோ/ஹீரோயிங்களோ அல்ல என்பதை, அவர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருப்பது.

இதுபோல இன்னும் ஏராளமான தகிடுதத்தங்களை கொண்ட அமைப்பை தோலுறித்து உப்பு கண்டம் போட்டது இந்த டாக்குமெண்ட்ரி.


இதன் இயக்குனர் Kirby Dick, தன்னுடைய நக்கலை, டைட்டிலிருந்தே ஆரம்பித்து விடுகிறார். அதிலும் கார்டில் அவரின் பெயர் வரும்பொழுது, தன் பெயருக்கு ஏற்றவாறு காண்பிக்கும் அந்த காட்சி, ‘ஏ’ க்ளாஸ். ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை வைத்து, MPAA-வின் உறுப்பினர்கள் யார்-யார், அவர்களின் பின்புலம் என்ன, அவர்களின் சொத்து மதிப்பு, அவர்களுக்கு நிஜமாகவே 5-திலிருந்து 17-வயதிற்குள்ளான பிள்ளைகள் உள்ளனரா என, இதில் நடக்கும் அத்தனை ‘கோல்மால்’-களையும் வெளிக்கொண்டு வருகிறார்.

இதனிடையில் MPAA-வால் பாதிக்கப்பட்ட (NC-17 Rated) இயக்குனர்களின் நேர்காணல் காட்சிகளும், அவர்களின் வாதங்களும், அவர்களின் படக்காட்சிகளுக்கும், MPAA உறுப்பினர்கள் தயாரித்த படங்களின் காட்சிகளுக்கும் உள்ள ஒப்பீடு என மிக மிக சுவாரசியமாக நகருகிறது. இதன் மிகப்பெரிய + பாய்ண்ட், இதில் காட்டப்படும் ‘லைவ் இன்வெஸ்டிகேஸன்’. மிக அருமையாக தொகுக்கப்பட்டிருக்கும் படக்காட்சிகளும், கேலியும் கிண்டலுமாக சமயம் கிடைக்கும்போதெல்லாம் MPAA-வை வாறும் காட்சிகளும், இதை ஒரு பொழுதுபோக்கு படம்போலவே தோன்ற வைக்கும்.

உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் கிடைத்தவுடன், அவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் திறமையான அந்த பெண் துப்பறிவாளருக்கு ஹாலிவுட் இயக்குனர்கள் அனைவரும் மனதிற்குள் ஒரு கோவில் கட்டியிருப்பார்கள். வெறும் 40-60 ஆயிரம் ஊதியம் வாங்கும் உறுப்பினர், மல்ட்டி மில்லியன் டாலர் வீட்டில் வசிப்பதும், அவருக்கு 22 மற்றும் 25 வயதில் பிள்ளைகள் இருப்பதும் (இன்னொருவருக்கு குழந்தைகளே இல்லை) என ஏராளமான விசயங்கள் மொத்தமாக அம்பலத்திற்கு வர............................

இதுதான் ‘மாஸ்டர் டச்’: இந்த MPAA உறுப்பினர்களை துப்பறிந்து, அந்தப்படத்தை அவர்களுக்கே போட்டு காட்டி, இப்பொழுது ரேட்டிங் வாங்க வேண்டும். இந்திய இயக்குனர்கள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இதை கனவு மட்டுமே காண முடியும். Kirby Dick அதையும் செய்கிறார். முதல்முறையாக அந்த உறுப்பினர்கள் அந்த படத்தை பார்க்கும்பொழுது எவ்வாறு அவர்களின் முகம் போயிருக்குமோ?!! பாவம். இவர்கள் மற்ற இயக்குனர்களை ‘கட்’ செய்தால் மட்டுமே ‘R’ ரேட்டிங் தருவோம் என்று சொன்ன, அத்தனைக்காட்சிகளின் ஒட்டு மொத்த தொகுப்பாக இந்த படம், அவர்களின் ஆணித்தரமான வாதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, படம் பார்க்கும் உறுப்பினர்களின் அந்தரங்கத்தையே படமாக எடுத்திருப்பது. விடுவார்களா?

MPAA இந்த படத்திற்கு கொடுத்த ரேட்டிங்: NC-17. Dick கவலையேதும் படாமல், படத்தை அனைத்து கண்காட்சிகளுக்கும் அனுப்பினார். வாயடைத்துதான் போயினர் அனைவரும். Dick அதோடு விடவில்லை. சிறிது நாட்கள் கழித்து, அந்த ‘ரேட்டிங்’கை, “இந்தா.. நீயே வச்சிக்க”-என்று திருப்பி அனுப்பிவிட்டு இன்னும் கடுப்பேற்றினார். முன்பே பார்த்து போல அமெரிக்கப்படங்களுக்கு ‘ரேட்டிங்’ அவசியமல்ல. ஆனால் போட தியேட்டர்தான் கிடைக்காது. கொசுறு செய்தி: இத்தனை ஆட்டம் போடும் இவர்கள், ஒரு இயக்குனருக்காக (அவரின் செல்வாக்கிற்காக) ஒரு புதிய ரேட்டிங்கயே கொண்டு வந்தனர். அந்த ரேட்டிங்: PG-13. அந்த இயக்குனர்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். தன்னுடைய Indiana Jones: Temple of Doom படத்திற்கு PG ரேட்டிங் கிடைத்ததற்கு கிளம்பிய எதிர்ப்பினால், இவர் தன் செல்வாக்கை உபயோகிக்க, PG-க்கும் R-க்கும் நடுவில் PG-13-ஐ உருவாக்கினர்.


இந்த ஆவணப்படம் ஹாலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. ஆனால் ஒரு சிறிய அதிர்வையாவது உண்டாக்கியது. இதன் பெரிய வெற்றியாக கருதப்படுவது, இதன் DVD வெளியாவதற்கு சில நாட்கள் முன்னர் (அதுவரை இந்தப்படம் பொது மக்களை சென்றடையவில்லை), MPAA தனது பல கொள்கைகளை மாற்றி அமைத்ததை சொல்லலாம். ‘குட்டு’ வெளிப்பட்டு விட்டாலும் தங்களின் கொள்கை மாற்றத்திற்கும், இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை என ‘சப்பை கட்டு’ கட்டியது MPAA.


‘ஹாலிவுட்டில் சென்சார் இல்லை’யென்றோ, ‘இந்திய சென்சார் போர்டு ஒரு செயல்படாத அமைப்பு’ என்றோ புலம்பும் இயக்குனர்களே, இந்தப்படத்தை பார்த்து கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை எத்தனையோ நூறு படங்களுக்கு “இந்த படத்திற்கு எப்படி PG-13/R கொடுத்தார்கள்” என யோசித்துள்ளேன், இதைக்காணும்வரை. ஆனால் இதைவிட கொடுமையாக, வெறும் மூன்றே பிரிவுகளை வைத்துக்கொண்டு, அதிலும்.. மிக மிக அருவருப்பான படங்களுக்கு கூட 'U' சர்டிபிகேட் தரும் இந்திய சென்சாரை விட MPAA நிச்சயம் 100 மடங்கு மேல்.

ஒரு தமிழக சென்சார் போர்டு அதிகாரி ஒரு பேட்டியில் கூறியது: “சிவாஜி படத்துல ஸ்ரியாவோட தொப்புள்ள வளையம் போட்ட மாதிரி ஒரு சீன் இருந்துச்சி. அதை வெட்டினா U சர்டிபிகேட் தருவோம்னு சொன்னோம். அதேமாதிரி U கொடுத்துட்டோம்”(அடா.. அடா.. என்னே.. இவர்களின் கலாச்சார பிடிப்பு). இதைவிட கொடுமை: நியூ அல்லது அ..ஆ...! என்று நினைக்கிறேன். இயக்குனர் சூர்யா ஒரு பேட்டியில் சொன்னது. ”குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி 2 பாட்டு எடுத்து இருக்கேன் சார்”.


டிவி ரேட்டிங் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலும், அது அத்தனை சுவாரசியமானது அல்ல, மற்றும் முற்றிலும் அன்னியமானது (அமெரிக்க நண்பர்களை தவிர) என்பதால் தவிர்த்து விட்ட. மேலும்... நீளம் கருதி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ’கேபிள்’ சார்.... ப்ளீஸ்.. இந்திய சென்சார் போர்டு பத்தி.. ஒரு கட்டுரை எழுதுங்களேன்..!!!!! உங்கள் ஆயிரக்கணக்கான வாசக ரசிகர்களின் சார்பாக என் வேண்டுகோள்.


This Film Is Not Yet Rated: (MPAA) Busted..!!!



24 தியேட்டர் கமெண்ட்ஸ்:

Cable Sankar said... February 7, 2009 9:49 PM

மிக அருமையான, ஆய்வு செய்யப்பட்ட, இன்பர்மேட்டிவான, நீங்கள் விமர்சனம் எழுதிய படத்துக்கு சம்மந்தமான கட்டுரை.. வெரிகுட் பாலா.. எங்கயோ போயிட்டீங்க..

ஹாலிவுட் பாலா said... February 7, 2009 9:55 PM

வசிஷ்டர் வாயால் ‘மகரிஷி’ பட்டம் கிடைச்ச மாதிரி இருக்குங்க சங்கர். என் தகுதிக்கு அதிகம்னாலும் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

Bee'morgan said... February 7, 2009 11:41 PM

Good post.. :) arumaiyana thagavalgal. Thanks for sharing..

ஹாலிவுட் பாலா said... February 7, 2009 11:48 PM

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி Bee'morgan

Anonymous said... February 8, 2009 12:15 AM

Body of Lies பார்த்தாச்சா ?

vignesh said... February 8, 2009 12:15 AM

good man

ஷண்முகப்ரியன் said... February 8, 2009 12:23 AM

very nice.To know something new itself is a pleasant reading.Thanks.Carry on.

ஹாலிவுட் பாலா said... February 8, 2009 12:25 AM

//good man//
மிக்க நன்றி.

ஹாலிவுட் பாலா said... February 8, 2009 12:32 AM

//Body of Lies பார்த்தாச்சா ?//

Ridley Scott-ன் படங்களில் பிடிக்காத சிலவற்றில் இதுவும் ஒன்று.

ஹாலிவுட் பாலா said... February 8, 2009 12:36 AM

//very nice.To know something new itself is a pleasant reading.Thanks.Carry on.//

ரொம்ப தேங்க்ஸ் டைரக்டர் சார். I'm honored.

Anonymous said... February 8, 2009 12:45 AM

I have seen this movie in blockbuster but never thought of renting... but after this review I have to rent this.... Thanks for the review....

ஹாலிவுட் பாலா said... February 8, 2009 12:48 AM

//I have seen this movie in blockbuster but never thought of renting... but after this review I have to rent this.... Thanks for the review....//

Please do! And if possible plz share your thoughts after u watch. Thx for coming!

jackiesekar said... February 8, 2009 1:31 AM

மிக மக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

ஹாலிவுட் பாலா said... February 8, 2009 1:52 AM

நன்றி சேகர்.!! வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

Anonymous said... February 8, 2009 12:21 PM

SILENCE OF THE LAMBS படத்திற்க்கு தயவுசெய்து விமர்சனம் எழுதவும். நன்றி.

ஹாலிவுட் பாலா said... February 8, 2009 2:00 PM

//Anonymous said...
SILENCE OF THE LAMBS படத்திற்க்கு தயவுசெய்து விமர்சனம் எழுதவும். நன்றி.
//

மன்னிக்கனும் நண்பரே! பெரும்பாலானவர்களுக்கு தெரியாத சில நல்ல பழைய படங்களை மட்டுமே அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். Silence of the Lambs -ஐ தமிழின் அத்தனை பத்திரிக்கைகளும் எழுதி தள்ளிவிட்டனர். அதனால் அதை தவிர்க்கவே விரும்புகிறேன்.

SPIDEY said... February 9, 2009 12:13 AM

திரைப்படங்களின் ஆரம்பத்தில் ஒரு சில நொடிகளே காட்டப்படும் அந்த SLIDEகளுக்கு பின்னால் இவ்வளவுப் பெரிய அரசியலா?. அனைத்து படவுலகிலும் CASTING COUCH, CENSOR CERTIFICATE போன்ற பொதுவான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது போல. THAT WAS A REALLY INFORMATIVE POST

வண்ணத்துபூச்சியார் said... February 9, 2009 9:35 PM

Nice movie & Review.. Bala .. Busya..?? Awaiting your comments on "Three Monkeys"

யாத்ரீகன் said... February 21, 2009 1:09 PM

ohhhhh.. ivlo matter irukaa..

ஹாலிவுட் பாலா said... February 21, 2009 1:56 PM

படத்தை பார்த்தீங்கன்னா.. இன்னும் நிறய ’மேட்டர்’ தெரியும் யாத்ரீகன். பக்கத்தில் யாரும் இல்லாதப்ப பார்க்க வேண்டிய படம்.

கண்ணன் said... February 22, 2009 5:02 PM

பாலா சார்...எப்படி சார் உங்களால இப்படிலாம் எழுத முடீது??..இத படிச்சுட்டு netflix..வரிசைல முதல் இடத்துல போட்டுருக்கேன்...பார்த்துட்டு சொல்றேன்...

ஒரு கேள்வி தமிழ் எழுத என்ன மென்பொருள்?..கூகிள் indic transliteration..தாங்க முடில...இதை எழுத பதினைந்து நிமிடம் ஆச்சு :((

ஹாலிவுட் பாலா said... February 22, 2009 7:33 PM

கூகிள் indic transliteration..தாங்க முடில...இதை எழுத பதினைந்து நிமிடம் ஆச்சு

நான் NHM Writer யூஸ் பண்ணுறேன் கண்ணன். இப்பதான் தமிழ் டைப் ரைட்டிங் கத்துக்கறேன். ஆனா இன்னைக்கு வரைக்கும் ஃபொனிடிக் கீபோர்டுதான்.

இப்ப கொஞ்சம் ஈஸியா வருது. ஆனா இந்த விமர்சனம் எழுத எனக்கு 3-4 மணி நேரம் ஆச்சி. எழுத எழுத வேகம் அதிகமாய்ட்டே வருது. நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிங்க தல. அப்புறம் பாருங்க.. உங்க ஸ்பீடையும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 9, 2009 10:24 AM

தல ஆகா தெய்வமே
இதை அப்புடியே பிடிஎஃபா சேவ் பண்ணிக்கிட்டேன்.புக்மார்க்கும் போட்டுக்கிட்டேன்.
இனி யாராவது என்கிட்ட இது சம்மந்தமா கேட்டா
கழுத்துமேலயே போட்டு இங்க அனுப்புவேன்.
ரொம்ப உபயோகமான அகராதி இது.
இனி உங்க பழைய பதிவு ஒவ்வொன்னா படிக்கனும்
இங்க ஒரு சின்ன ஐஎம்டிபி ஏ இருக்குங்க ஜி.

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 10:38 AM

ஐய்யா... கொஞ்சம் சும்மா இருங்க, நீங்க வேற! நான் எதோ... அங்க இங்க படிச்சி... எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒப்பேத்திகிட்டு இருக்கேன். இப்படியெல்லாம் ஏத்தி விடாதீங்க. அப்புறம் எனக்கு தலை கால் புரியாம ஆட ஆரம்பிச்சிடுவேன்! :)

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil