இப்படி ஆரம்பிக்கும்... Borat-டின் கொட்டம்... பின் படம் முழுக்க.. சிரித்து.. சிரித்து நம் வயிற்றை புண்ணாக்காமல் நிற்காது. யாராவது இன்னும் இந்த படத்தை பார்க்காமல் இருக்கீங்களா? உங்களுக்கு கண்ணாலம்.. காட்சி... ஃபைனல் எக்ஸாம் என்றால் கூட... தள்ளி வச்சிட்டு இந்த படத்தை பாருங்க. :-))
ஒரு ஏழை நாட்டின் டிவி ரிப்போர்ட்டர், U.S and A கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு, அதை தன் நாட்டின் நலத்திற்க்காக உபயோகிக்க வேண்டி.., U.S and A சுற்றுப்பயணம் வரும்போது நடக்கும் காமெடிதான் படமுழுக்க.
Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan - இதுதான் படத்தோட முழு பேரு. கஸகஸ்தான் நாட்டின் டி.வி ரிப்போர்ட்டர் போரட்.
ஒருவழியா தன்னோட ஃபேமிலி, பக்கத்து விட்டுக்காரங்க, கிண்டர் கார்டன் -ன்னு சுத்தி காட்டி முடிக்கும்போது, அந்த நாட்டு அரசாங்கமே அவரை U.S and A-வுக்கு அனுப்பி அவங்க கல்ச்சரை தெரிஞ்சிக்க இவரை அனுப்ப, தன் காஸ்ட்லி காரில் ஏறி... ஏர்போர்ட் கிளம்பி, தல U.S and A வந்துடுவார். ஆச்சா... இதுவரைக்கும்.. ஒரு ஏழை நாட்டோட வறுமையையே... இப்படி கிண்டல் பண்ண முடியும்னா... அப்ப.. U.S and A வை? பின்னி பெடலெடுக்க ஆரம்பிச்சிடுவார் மனுசன்.
Taken படத்து ஹீரோ... ஏர்போர்ட்-ல ஆரம்பிக்கிறதை..., போரட்... எலக்ட்ரிக் ட்ரெய்ன்ல தொடங்குவார். ரோடில்... எல்லோரும் தெறிச்சி ஓட ஆரம்பிக்க, ஒரு வழியா மனுசன் ஒரு ஹோட்டல்ல செட்டில்! டிவியில் ‘பே வாட்ச்’ பார்த்ததுல இருந்து, ‘நமீதா’ பைத்தியம் பிடிச்சி திரியற ‘கேபிள்’ சங்கர் மாதிரி, பமீலா ஆண்டர்சன் மேல போரட்டுக்கு. நியூயார்கில் மட்டும் பேட்டிகளை முடிச்சிட்டு திரும்பலாம்னு பார்த்தா.., பமீலா இருக்கறதோ... கலிஃபோர்னியால. இப்ப.. போரட்டுக்கு, U.S and Aவின் ஒரு மூலையில இருந்து அடுத்த மூலைக்கு போகனும். கூட வந்திருக்கற... ‘ப்ரொட்யூசருக்கு’ அது பிடிக்கலைன்னாலும், ‘கலிஃபோர்னியாலதான்... பேர்ல் ஹார்பரும், டெக்ஸாசும் இருக்கு’ன்னு சொல்லி... போரட் கூட்டிட்டு போறார்.
ரெண்டு பேரும் $700-க்கு ஒரு ஐஸ்க்ரீம் விக்கற வண்டியை வாங்கிகிட்டு... கிளம்புவாங்க. அதுக்கப்புறம்.. வழியில் நடப்பதை எல்லாம்... எழுதி... சொல்லுறது ரொம்ப கஷ்டங்க. கடைசி பத்து நிமிசம் மட்டும்தான்.. படத்தோட ப்ரேக். மத்த 1:20 மணிநேரம்... சும்மா.. பிச்சி கிட்டு போகும். நியூயார்க்ல இருந்து கலிபோர்னியா போற வழியில்..., U.S and A வையும், அதன் பலதரப்பட்ட மக்களையும், அவங்க பழக்க வழக்கங்களையும் பொலி போட்டுடுவார்... போரட்.
இந்த அளவுக்கு வேற எந்த படத்துக்கும் நான் சிரிச்சதா நினைவில்லீங்க. நான் மட்டுமில்ல... தியேட்டர்ல... அதுவும்.. தன்னோட நாட்டையும், தன்னையும் தானே கிண்டல் பண்ணுறாங்கன்னு கூட... நினைக்காம... இந்த வெள்ளகாரங்க எல்லாம் சிரிச்ச சிரிப்பு இருக்கு பாருங்க...! நெறய எடத்துல.. என்ன டயலாக்குன்னு கூட கேக்க முடியாம.. அத்தனை களேபரம் தியேட்டர்ல.
ஒட்டு மொத்தமா 260 மில்லியன் வசூல் பண்ணின பின்னாடிதான் நின்னுச்சி. இந்த படத்தோட ஹீரோ.., சாஷ்சா கொஹன்... ஒரு ப்ரிட்டிஷ் டிவி நடிகர். டிவி-யில் பிரபலங்களை.. பேட்டி எடுக்க, மூணு விதமான கெட்டப்பும் அதற்கான மேனரிசமும் யூஸ் பண்ணுவார். அலி ஜி, ப்ரூனோ, அப்புறம் இந்த போரட். ஏற்கனவே Ali G Indahouse-ன்னு ஒரு படம் வந்துடுச்சி. அடுத்ததா.. Borat. இந்த வருசம்.. இதோட தொடர்ச்சியா.. Bruno வரப்போகுது (ஜூலை).
இவர் இண்டர்வியூ எடுக்கறவங்களுக்கு, அது ஒரு நிஜ கேரக்டர்ன்னுதான் தோணுமாம். ஸேம்பிளுக்கு இந்த வீடியோக்களை செக் பண்ணி பாருங்க. அலி ஜி போரட் ப்ரூனோ ரிலீஸ் ஆன முதல் வாரம், ஏகப்பட்ட நாடுகளில் (இருபத்திரெண்டு??) பாக்ஸ் ஆஃபீஸில் முதலிடம் பிடித்ததாம் இந்த படம் (U.S and A & UK உட்பட). ஆனா ரஷ்யா, கஸகஸ்தான்ல எல்லாம் தடை பண்ணிட்டாங்க.
பாத்தீங்கன்னா... வெறும் 5 நிமிசம்தான் கஸகஸ்தானை கிண்டல் பண்ணுவாங்க. மீதி நேரமெல்லாம் U.S and A தான் படாதபாடு படும். ஜோக்கை எப்படி எடுத்துக்கனும்னு இவங்க கிட்டதான் நாம எல்லாம் கத்துக்கனும். Black Comedy வகை படங்கள் உங்களுக்கு பிடிக்கும்னா..., நீங்க கண்டிப்பா பார்த்திருக்க வேண்டிய படம். ஆனா குடும்பத்தோட பார்த்துடாதீங்க. பார்த்துட்டு.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.!
BoЯat = The worst comedy movie ever .....NOT!

44 தியேட்டர் கமெண்ட்ஸ்:
உண்மை தான்...அடிக்கடி டிவிடியில் போட்டு சிரிப்பது வழக்கம்
:-)
தமிழ் படத்துக்கு ‘வசூல்ராஜா’, PKS மாதிரி.. ஆங்கிலத்துக்கு எனக்கு இதுவும், American Pie படங்களும்.
வருகைக்கு நன்றி.. ‘டொன்’ லீ.! :-)
சாஷ்சா கொஹன் madagascarல கிங் ஜுலீயன் வாய்ஸ் குடுத்திருப்பாரு..அவரு தான் போரட்டா?..நம்பவே முடியல..
என்ன த்ரில்லர்லெந்து காமடிக்கு மாறிட்டீங்க?
அதிக ஓட்டே... காமெடிக்குதான்..! அதைப்பத்தி எழுதலன்னா... ஓட்டு போட்டவங்களுக்கு என்ன மரியாதை? :-)
நான் என்ன அரசியல்வாதியா.. ஓட்டு போட்டவங்கள மறக்கறதுக்கு!! இன்னும் படம் பார்க்கலையா.. நீங்க?
இவ்வளவு பாராட்டை நீங்கள் எந்தப் படத்துக்கும் தந்ததில்லை என்று நினைக்கிறேன்.அவசியம் பார்க்க முயல்கிறேன்.நன்றி பாலா.
நானும் பார்க்கணும்னு நினைச்சிருந்தேன்.. பின்பு மறந்தேவிட்டேன்.. இப்போது ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி பாலா..!
இன்னும் பார்க்கிலை பாலா..இந்த வாரம் பாத்துட வேண்டியது தான்..
//அதிக ஓட்டே... காமெடிக்குதான்..! அதைப்பத்தி எழுதலன்னா... ஓட்டு போட்டவங்களுக்கு என்ன மரியாதை? :-)//
நீங்க அடல்ட்டையும் ஆர்ட்டையும் பிரிச்சு திரும்ப ஓட்டு எடுத்து பாருங்க..ரிசல்ட்டே வேற மாதிரி இருக்கும் :)
:-))))))))))))))))))))))))))
//அவரை U.S and A-வுக்கு அனுப்பி அவங்க கல்ச்சரை தெரிஞ்சிக்க இவரை அனுப்ப, தன் காஸ்ட்லி காரில் ஏறி... //
அந்த கார் ஞாபகத்திற்கு வந்துருச்சி....
அட... நான் கூட.. இதை போஸ்ட் பண்ணினப்ப.. எல்லோரும் பார்த்திருப்பீங்கன்னு.. பயந்துகிட்டேதான் இருந்தேன். நிறையபேர் பார்க்கலையா..?! :-))
வருகைக்கு நன்றி.. ஷண்முகப்ரியன், உண்மைத்தமிழன் & பிரேம்ஜி..! பார்க்காதவங்க.. உடனே.. பாருங்க.. நண்பர்களே..! :-)
நீங்க அடல்ட்டையும் ஆர்ட்டையும் பிரிச்சு திரும்ப ஓட்டு எடுத்து பாருங்க.
ஹா.. ஹா.. ஹா...! தெரிஞ்சதுதானே..! :-))
என்னவோ தெரியல இன்னைய வரைக்கும் படம் பார்கணும்ன்னு எடுத்து வச்சு பாக்காமயே இருக்கேன். இப்ப பார்த்துடறேன்.
ஆஹா. நீங்களுமா. சங்கர்...?! இன்னேரம் பார்க்க ஆரம்பிச்சி இருக்கனும் நீங்க..!! :-)))))
நானும் இதுவரையில் பார்த்தது இல்லை, உடனே பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி
ஆகட்டும் முரளி...! பிடிச்சிருந்துதான்னு பார்த்துட்டு சொல்லுங்க.!
பாத்துட வேண்டியது தான்.
பாருங்கோ... பாருங்கோ..!
இன்னும் பார்க்கவில்லை பாலா. You Don't Mess with the Zohan. இதையும் கண்டிப்பாக பாருங்க. I bet you will dig it.
அந்த படத்தை.. பார்த்து மாசங்கள் ஆய்டுச்சி பூச்சி சார்! :0
hiiiyyaaaaa
சூப்பர் ஜ)ப்பர் படம்ங்க. ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள். வாசிச்சதுமே மீண்டுமொருதரம் பார்க்கணும்போல இருக்கு.
ஃஃஃ
யாராவது இன்னும் இந்த படத்தை பார்க்காமல் இருக்கீங்களா? உங்களுக்கு கண்ணாலம்.. காட்சி... ஃபைனல் எக்ஸாம் என்றால் கூட... தள்ளி வச்சிட்டு இந்த படத்தை பாருங்க. :-))ஃ
ஃஃஃஃ
உண்மையிலேயே எக்சாம் டைம்லதான் பார்த்தேன்.
அது என்னமோ பரீட்சை டைம்ல பார்க்கற படங்களெல்லாம் அருமையாக இருக்கும். ஹிஹி
ஃஃஃ
கடைசி பத்து நிமிசம் மட்டும்தான்.. படத்தோட ப்ரேக்.
ஃஃஃஃஃஃ
அமெரிக்கன் ஸ்டைல அவங்க நாட்ல அறிமுகப்படுத்தும் கடைசி காட்சிகளும் அருமை. ( கிரைண்டர் ஆண்டி ஐபோட்டுடன் இருக்கறது! )
//’டொன்’ லீ, March 18, 2009 3:29 PM
உண்மை தான்...அடிக்கடி டிவிடியில் போட்டு சிரிப்பது வழக்கம்//
me too :)
//ஹாலிவுட் பாலா, March 18, 2009 3:31 PM
தமிழ் படத்துக்கு ‘வசூல்ராஜா’, PKS மாதிரி.. ஆங்கிலத்துக்கு எனக்கு இதுவும், American Pie படங்களும்.//
:) உண்மைதான்
///சாஷ்சா கொஹன் madagascarல கிங் ஜுலீயன் வாய்ஸ் குடுத்திருப்பாரு..அவரு தான் போரட்டா?..நம்பவே முடியல..///
அட உண்மையாவா? மெக்சிக்கன் ஸ்டைல் கிங் ஜீலியட் வாய்ஸ் அப்படி பிடிக்கும் எனக்கு
- கிங் ஜீலியட் பாத்திரத்தை மையமாக வைத்து மடகாஸ்கர் குழுவினர் விரைவில் ஒரு படம் வெளியிட இருக்கிறார்களென ஏதோ ஒரு வெப்பில் படித்தேன். உண்மைதானா ???
ஃஃஃநீங்க அடல்ட்டையும் ஆர்ட்டையும் பிரிச்சு திரும்ப ஓட்டு எடுத்து பாருங்க.
ஹா.. ஹா.. ஹா...! தெரிஞ்சதுதானே..! :-))ஃஃஃஃ
ஹிஹிஹிஹி
ஃஃYou Don't Mess with the Zohan. இதையும் கண்டிப்பாக பாருங்கஃஃ
என்னமோ! இத விட லவ் குரு எவ்னவோ தேவல னு நிரனக்கிறேன்.
எனக்கு காமடினாலே Scary movies டைப் படங்களும் அமரிக்கன் பை டைப் படங்களும் பிடிக்கும். இரண்டுமில்லாமல் லோ பட்ஜட் காமடிகளும் பிடிக்கும்.
பாலா சார் நீங்க இதெல்ாம் பார்திருப்பீங்கனு நிரனக்கிறேன்.
Meet the focker / Parents
Guess Who
Euro trip
Zack and miri make a porno
knocked up
step brothers
மற்றும் ஜிம்கரியின் படங்கள் ஆல் டைம் பேவரைட்
:)
மெக்சிக்கன் ஸ்டைல் கிங் ஜீலியட் வாய்ஸ்
ஆக்சுவலி.. அது இந்தியன் அக்ஸண்ட் சுபாஷ்!!!
I LIKE TO MOVE IT... MOVE IT...!! வாவ்... எவ்வளவு அருமையான பீட் அது...! கலக்கல் இல்ல?!
அந்த பாட்டை பாடியதும்.. சாஷ்சா. கொஹென் தான்!!
Euro Trip தவிர.. மத்ததெல்லாம் பார்த்தாச்சி.. சுபாஷ். ஜூட் ஆப்டொவ் படங்கள் எல்லாம் எழுதனும்னு ஆசை. எழுதுவோம்.. எழுதுவோம்..! :-)
Yekzimaaash...!
Check this review
Chinqui....
அட... ஏங்க.. பெத்ராய்டு.. எழுதறதை நிறுத்திட்டாரு? :(
சூப்பரா எழுதியிருகாரே..! :))
சின்குய்..! :)
Add these movies also..
Dude where is my car?
Joe Dirt
Saving Silverman
Roadtrip
Next Friday
Malibu's Most Wanted
Hot Shots! series
My cousin Winny
Airheads
Road Trip தவிர வேறு எதையும் பார்க்கலை இந்தியன். பட்டியலுக்கு நன்றி.! பார்த்துடுறேன். :-)
கலக்கலான விமர்சனம்.. உங்கள் நடை அருமை..
இன்னைக்கே பதிவிறக்கிடறேன்..
//ஆக்சுவலி.. அது இந்தியன் அக்ஸண்ட் சுபாஷ்!!!//
iooo இப்பதான் தெரிந்துகொண்டேன்
------------------------------
ஃஃI LIKE TO MOVE IT... MOVE IT...!! வாவ்... எவ்வளவு அருமையான பீட் அது...! கலக்கல் இல்ல?!ஃஃ
you like to move it move it...
we like to move it move it
Blast sound track :)
------------------------
// ஜூட் ஆப்டொவ் படங்கள் எல்லாம் எழுதனும்னு ஆசை. எழுதுவோம்.. எழுதுவோம்..! :-)
///
உங்களுக்கு ஆதரவுக்கென நாங்க எல்லாருமு இருக்கோம். டைம் கிடைக்கும்போது ச்சும்மா அடிச்சு விடுங்க
-------------------
ஃஃ Road Trip தவிர வேறு எதையும் பார்க்கலை இந்தியன். பட்டியலுக்கு நன்றி.! பார்த்துடுறேன். :-)
ஃஃஃ
road trip ஐ நீங்க சுமாரான காமடினு சொல்றதா வச்சிக்குவோம். Euro trip பாத்துிங்கனா அதுதா காமடீனு சொல்லுவீங்க. படம் அப்படி comedy
கேள்விப்பட்டிருக்கேன் பாத்துருவோம். காமெடியும் த்ரில்லரும்(ஐடண்டிடி மாதிரி) கலந்து கலக்குங்க. Euro Trip பாத்திங்களா? உங்களுக்கு பிடிச்சதா?
@திலீப்குமார்: மிக்க நன்றி.. தல! :-)
@சுபாஷ்/pappu: லைப்ரரியில் அவைலபில் இல்லை. டவுன்லோட்தான் பண்ணனும். :(
//road trip ஐ நீங்க சுமாரான காமடினு சொல்றதா வச்சிக்குவோம். Euro trip பாத்துிங்கனா அதுதா காமடீனு சொல்லுவீங்க. படம் அப்படி comedy//
i feel the otherway. what to do? taste differs...!
//i feel the otherway. what to do? taste differs...!//
அதனாலதான் எல்லாமே சுவாரசியமா இருக்கு.
road trip எனக்குப்பிடித்த படம்தான். ஆனா ஏனோ தெரியல. மறுபடி மறுபடி பார்க்கணும்கற எண்ணம் வருவதில்லை.
இன்னும் சில பிடித்த காமடி படங்கள்
Dumb and dumber
I now pronounce you
superhero movie
super bad
Herold and kumar white castle + escape from da ... ( forgot it :P )
licence to wedding
i'm back
I see that Kishore. Good to see you. Its working now.
thankyou very much
இந்தப்படத்தை எடுத்ததற்காக கஜாகிஸ்தான் அரசு இவர் மேல் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய மற்றும் அமேரிக்கர்களிடையே இருக்கும் யூத வெறுப்பை அப்பட்டமாகக் காட்டியிருப்பார்.
இவரும் இவரது நண்பரும் இருவேரு மொழிகளில் பேசிக்கொள்வார்கள். இவரது நண்பர் ப்ரொடியூசர் துருக்கி மொழியிலும், இவர் ஹீப்ரூ மொழியிலும் பேசுவர்.
படம் இஸ்ரேலில் படு ஹிட். டாப் டென்னில் பல வாரங்கள் தாக்கு பிடித்தது.
தகவலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி Vajra! :-) எனக்கு அவங்க பேசுறது ரெண்டு மொழிகள்ன்னு இன்னைக்குதான் தெரிஞ்சது.
கஸகஸ்தான்லயே இவதான் நாலாவது பெரிய ப்ராஸ்டிட்யூட்!!!! என்று ஆரம்பித்து தனது நாட்டை சுற்றி காட்டுவதும் தனது பொழுதுபோக்கு விஷயங்களை பட்டியலிடும் போதும், அமெரிக்கா கிளம்பும் போது ஆரம்பிக்கிற கார் வித் மாட்டு வண்டி, அவரது வீட்டினுள் இருக்கும் மாடு, அவரது பக்கத்து வீட்டுகாரர் என்று காட்டும் போது அந்த நாட்டின் நிலைமயை நமக்கு உணர்த்துகிறார்கள். அப்புறம் அமெரிக்கா பயணம் - கேட்கவே வேண்டாம்.. காணாத மாடு கம்பு காட்டினுள் புகுந்தது மாதிரி அவரது நடிப்பு அருமை. எலோரையும் முத்தம் இடுவதும், நடுரோடில் சுயஇன்பம், ஷிட் அடிப்பது, பமீலாவை பார்த்து ஜொள்ளு விடுவது, என்று சகலத்துக்கும் மனிதர் பின்னி எடுக்கிறார்...
கடைசி வரை அவர் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை...படம் முழுதும் சிரிப்பலை தான்...
அண்ணா படம் சூப்பர்
நன்றி
ராம்.R
நீங்கள் அனிமேஷன் படங்கள் பார்பதிலையோ? அதையும் பாருங்கள், எழுதுங்கள்...
ராம்.R
நீங்கள் அனிமேஷன் படங்கள் பார்பதிலையோ? அதையும் பாருங்கள்
இதென்ன இப்படி கேட்டுட்டீங்க?! :-(
ஒரு குழந்தையை விட அதிகமா கார்டூன் பார்க்கறது நானாதான் இருக்கும்னு என் வைஃப் சொல்லுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்ணும் சொல்லுவா! :-)
Dear Bala,
Jus happened to see this movie because of ur recommendation.
Don't get time to see this movie and having in hard disk long time.
Complement to you.
Non stop laugh after long time :)))))
மிக்க நன்றி யாசவி!! இப்ப நீங்க சொன்ன பின்னாடி திரும்பவும்.. இந்தப் படத்தை பார்க்கனும்னு தோணுது! :)
எத்தனை முறை பார்த்தும் டயர்ட் ஆகாத படம்!! :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!