புது வரவு - நம்பிக்கை

6/07/2009

Star Trek (2009)


முதல் க்ளியரன்ஸ்: ஸ்டார் ட்ரெக், T4-க்கு ஜஸ்ட் எதிர்ப்பதம். இந்தப்படத்தை பார்க்க முதலில்.. வேறு எந்த ஸ்டார் ட்ரெக் படத்தையும் பார்த்திருக்கத்தேவையில்லை. 1966-ல் ஸ்டார் ட்ரெக் சீரியல் ஆரம்பித்த இடத்திற்கு முன்னிருந்த காலத்தைதான் இதில் காட்டியுள்ளார்கள் (Prequel/Reboot). அதனால் பயப்படாமல் போய் உட்காரலாம். ஆனாலும் ஒரு பிரச்சனை இதிலும் உண்டு. அது பின்னாடி..........

1980-களில், தூர்தர்ஸனில் வந்த சிக்மா/ஸ்பேஸ் சிட்டி சிக்மா (Sigma/Space City Sigma)-வை மொழி புரியாமல், ‘ஆ’ என திறந்த வாய் மூடாமல் பார்க்க ஆரம்பித்த பழக்கம், ஸ்டார் வார்ஸ் படங்களை பார்க்க ஆரம்பித்து... பின் ஸ்டார் ட்ரெக் சீரியல் என தொடர்ந்து (அப்ப இங்கிலிபீஜும் ததிங்கினத்தோம்தான்) இப்பொழுது, என்னுடைய ஸ்பேஸ் வாயேஜர் பயணம் இந்த படத்தில் வந்து நிற்கிறது.

1966-ல் ஆரம்பித்த Star Trek-ன் பயணம்... இன்று வரை.. பில்லியன்களில் பணத்தை கொட்டிக்கொண்டே இருக்கிறது. சீரியல்கள்.. கார்ட்டூன்கள்... காமிக் புத்தகங்கள்... திரைப்படங்கள் என வந்து கொண்டேயிருந்தாலும்... அமெரிக்கர்களுக்கு.. இன்னும் இந்த Star Trek க்ரேஸி குறைவதாயில்லை. மாறாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அந்த க்ரேஸிக்கு தூபம் போடுவதற்கென்றே... இந்த ஃப்ரேன்ச்சைசில் பதினோறாவதாக வந்துள்ளது இந்த படம்.

லாஸ்ட் (Lost) சீரியலின் வெறிப்பிடித்த விசிறி நான் (சீசன் 5 முடிந்து விட்டது. அடுத்த/கடைசி சீசன், 2010 ஜனவரியில்). அந்த சீரியலின் ஒரிஜினல் க்ரியேட்டர் JJ Abram-ன் இயக்கத்தில் வரும் இரண்டாம் படமென்றால் விடுவேனா..., அடித்து பிடித்து முதல் நாளே.. ஐமேக்ஸில் துண்டை போட்டு உட்கார்ந்தால், பக்கத்தில் அல்லது தியேட்டர் முழுக்கவே... என்னைப்போல வேலையில்லாத அல்லது ரிட்டயர் ஆன... மூத்த குடிமக்கள்.


இது வரை எந்த ஸ்டார் ட்ரெக் சீரியல்/படங்களையும், பார்க்காத-கேள்விப்படாத மக்களுக்கு மட்டும், இந்த சீரியலில் வரும் கேரக்டர்களில் அறிமுக பாரா இது.

கிர்க்: இவர் ஒரு ஸ்பேஸ் ஷிப்பின் கமாண்டர்; காமெடியாய் பேசுபவர்; என்ன பிரச்சனை வந்தாலும் அசால்ட்டாய் ‘ஊதி’ தள்ளிடுவார்; அதி பயங்கர புத்திசாலி; யாரோட அட்வைஸையும் கேட்க மாட்டார்; அரொகண்ட்..., இத்தனை தகுதிகள் இருக்கறவர்.. வேற யாராக இருக்கும்.? யெஸ்... இவருதான் ஹீரோ.  

ஸ்பாக்: மனித தலையும், சிங்க உடலும் கொண்ட ஸ்பிங்ஸ் மாதிரி, இவரு(ம்.. இவரின் வால்கன் வம்சமும்) நேபாளி டைப் புருவங்கள், அதே போல ஏறி நிற்கும் காதுகள், சட்டியை கவிழ்த்து வெட்டியது மாதிரியான ஹேர் கட். வேறு கிரகவாசி (வால்கன்); வால்கன் அப்பாவிற்கும், பூமி அம்மாவிற்கும் பிறந்தவர்; பூமிக்கான வால்கன் தூதர்; அப்ப நிச்சயமா இவரு செகண்ட் ஹீரோதான்.

மெக்கோய்/போன்ஸ்: இவர் ச்சீஃப் மெடிக்கல் ஆபீசர். ஹீரோவோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அப்பப்ப குட்டி குட்டியா அவர் கூட சண்டை போடுவார்.

ஜான் ச்சோ: ஒரிஜினலாக இந்த கேரக்டர் ஒரு ஜப்பானியர் (இந்த படத்தில் கொரியன்). A-Z எல்லாத்தையும் பேசுவார். சண்டை போடுவார்.

இவர்கள் எல்லாம் வேலை செய்யும் யு.எஸ் கவர்மெண்ட் கம்பெனியின் பெயர்... ஸ்டார் ஃப்ளீட்.

முதல் பாராவில் சொன்ன ‘பிரச்சனை’ என்னவென்றால் T1-T4 மாதிரியே.. இதிலும்... எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு போகும், ‘டைம் ட்ரேவல்’ கதை. புரிந்தால் தப்பித்தீர்கள். இல்லையெனில் ஸ்பாக்-கின் கட்டிங் போலவே... உங்கள் தலையும் மொட்டையாவது நிச்சயம். ஏற்கனவே இந்த சீரீஸ் படங்களை பார்த்தவர்களுக்கு பிரச்சனை இருக்காது. ஒவ்வொரு படத்திலும் இந்த ‘டைம் ட்ரேவல்’ கண்டிப்பாக இருக்கும்.


ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ஷிப் ஒன்று..., ப்ளாக் ஹோலில் இருந்து வெளிவருகிறது. அதை... என்ன.. ஏது என ஆராய்சி செய்யப்போகும் யு.எஸ் கெல்வின் என்ற பூமியின் ஷிப்பை... அந்த பெரிய்ய ஷிப் கண்ணா பின்னாவென தாக்கி விட்டு... கெல்வின் ஷிப்பின் கேப்டனை (கேப்டன் எக்ஸ்-ன்னு வச்சிக்குவோம்), அவர்கள் ஷிப்பிற்கு வரச்சொல்கிறார்கள்.

அங்கே புறப்படும் முன்.., (அப்பா) கிர்க்கை, கெல்வினின் கேப்டனாக்கி விட்டு... போனால்.. அவரிடம் (கேப்டன் எக்ஸ்) மூன்று கேள்விகள் கேட்கிறார்கள்.

1. (ஒரு ஷிப்பின் மாடலை காட்டி) இந்த ஷிப்’ஐ தெரியுமா? : தெரியாது!

2. (ஒரு ஆளின் மாடலை காட்டி) இந்த ஆள் பேரு... அம்பாஸிடர் ஸ்பாக். இவரை தெரியுமா? : ஸ்பாக்...??? யாரது???

3. இது என்ன ஸ்டார் வருடம்?: 2233 ஏப்ரல்...!

அவ்வளவுதான்..., வருடத்தை கேட்டதும்... வில்லன் நீரோ..., கேப்டன் எக்ஸ்-ஐ கொன்றுவிட்டு, கெல்வின் ஷிப்பை தாக்க ஆரம்பிக்க... அப்பா கிர்க்... தன் கர்பிணி மனைவியையும்.. இன்னும் நிறைய பேர்களையும் தமிழ் சினிமா போலவே காப்பாற்றி விட்டு... ஷிப்பிலேயே மண்டையை போட, இதெல்லாம் நடக்கும் போதே... ஜேம்ஸ் கிர்க் அந்தரத்தில் பிறக்கிறான். பூமியில் தறுதலையாக வளர்கிறான்.

திடீரென ஒரு நாள்... மனம் மாறி.. தன் அப்பா பெயரை காப்பாற்ற ஸ்டார் ஃப்ளீட் கம்பெனியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். யாராலுமே தோற்கடிக்க முடியாத ஒரு சிமுலேசன் விளையாட்டை, வில்லு விஜய் மாதிரி.. இவன் ‘ஜஸ்ட் லைக் தட்’, செய்து முடிக்க... ஸ்பாக்கிற்கும், கிர்க்கிற்கும் முட்டிக்கொள்கிறது.

அந்த நேரம் பார்த்து.. பூமியின் நட்பு கிரகமான வல்கன் கிரகத்தில் இருந்து..., உதவி கேட்டு சிக்னல் வருகிறது. ஆனால் இந்த சிக்னலில் ஏதோ ஒரு ‘சதி’ இருப்பதை கிர்க் கண்டு பிடித்தாலும், ஸ்பாக் அதை மறுக்கிறான். அவனுக்கு தன் கிரகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். அப்பொழுது இவர்களை காண்டாக்ட் செய்யும் வில்லன் நீரோ (வல்கன் கிரகத்தை அழிக்க ஒரு பெரிய போர் போட்டுக்கொண்டே), ஷிப்பின் கேப்டன் பைக்-ஐ வரச்சொல்ல... மூன்று பாராவிற்கு முன் சொன்ன அதே கதை/வரலாறு திரும்ப நடக்கிறது. இந்த முறை.. ஸ்பாக் கேப்டனாகவும், (மகன்) கிர்க் கமேண்டிங் ஆஃபீசராகவும்.

நீரோவிற்கு இரண்டு குறிக்கோள்கள். 1. வல்கன் கிரகம் அழிய வேண்டும் 2. அது அழிவதை ஸ்பாக் பார்க்க வேண்டும். ஏன்.. எதற்கு... என்பதும்..., வல்கன் கிரகம் அழிந்ததா... ஏன் நீரோ அதை அழிக்க வேண்டும்..., நீரோ வந்த அந்த பெரிய ஷிப்.. எங்கிருந்து வந்தது, முதல் பாராவில் சொன்ன கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், க்ரிக் தன் தந்தையை போலவே, ஹீரோ ஆனாரா என்பதெல்லாம்... மீதிக்கதை.


ஒரே வரியில்.. சொல்ல முடியாத... சொல்ல ஆரம்பித்தால்.. முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டிய கதை-திரைக்கதை. ‘ஸ்பேஸ்’, ‘டைம் ட்ரேவல்’, இறந்த-நிகழ்-எதிர்காலம் முன் பின் போகும் திரைக்கதை, கமெடி, ஆக்‌ஷன், அட்வஞ்சர், சஸ்பென்ஸ்.... வாவ்... வாவ்.. வாவ்... இந்த படத்தை இயக்க.. JJ Abram-ஐ தவிர வேறு யார் சரியான ச்சாய்சாக இருக்க முடியும். ‘டேக்கன்’-ஐயே டேக் ஆஃப் செய்யும் திரைக்கதை வேகம்தான் படத்தின் மொத்த பலமும்.

ஒவ்வொரு காட்சியிலும்.. யாராவது ஓடிக்கொண்டோ.. சண்டை போட்டுக்கொண்டோ இருக்க, புரிந்தாலும்.. புரியாவிட்டாலும்... மொத்த படமும் (2 மணி நேரம்), அரை மணி நேரத்தில் முடிந்தது போல அப்படியொரு காட்டுத்தனமான வேகம். இத்தனைக்கும்.. Abram, மற்ற எந்த ஸ்டார் ட்ரெக் படத்தையும் பார்க்காதவராம். இருபத்தி மூன்று எபிசோட் சீரியலையே.. பஞ்சாய் பறக்க வைத்தவருக்கு.. இரண்டு மணி நேர படம்... ஜுஜுபி (இவருடைய முதல் படம் Mission: Impossible 3.).

க்ரிக்காக, க்ரிஸ் பைன்: வில்லியம் ஷேட்னரையே, க்ரிக்காக பார்த்து பழகிய மக்களுக்கு (படத்தில்), புதிதாய் ஒரு க்ரிக். அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் இவரை பார்க்கலாம். வெகு இயல்பாக நகைச்சுவை வரும் நேரத்தில், ஷேட்னரையும் காப்பியடிக்காமல், கலக்கலாக நடித்துள்ளார்.  

ஹீரோஸ் சீரீஸில், சைலர் பாத்திரத்தில் வில்லனாக கலக்கிய குய்ண்டோ, இதில் ஸ்பாக் வேடத்தில். மனுசனை பார்த்தாலே (ஹீரோஸில் பார்த்து பார்த்து ‘நம்பியார்’ ரேஞ்சிற்கு நான் பயந்த பாத்திரம்) இன்னும் அந்த பயம் வருகிறது. போதா குறைக்கு ஸ்பாக்கின் மேக்கப் வேறு. இவரையும் அடுத்த ஸ்டார் ட்ரெக் படங்களில் பார்க்கலாம்.

ஸ்டார் வார்ஸ் திரைப்படங்கள்.. குழந்தைகளை கவர்ந்தது போல.., ஸ்டார் ட்ரெக் படங்கள் பெரியவர்களுக்கு. காரணம் கதையின் ஃபேண்டசி குறைவு.. ஆனால் காம்ப்ளஸிடி அதிகம். எதிர்கால ஸ்பாக்கும் - நிகழ்கால ஸ்பாக்கும் பேசிக்கொள்ளுவது, கடந்த கால கிர்க்கும்- எதிகால ஸ்பாக்கும் சந்திப்பது.... என.. படம் முழுக்க யார்.. யார் எந்த காலத்தில் இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டுமெனில்.. வீட்டுக்கு வந்தபின் கொஞ்சம் ஹோம்வொர்க் செய்ய வேண்டும். அது ஒன்றை தவிர.. படத்தில் வேறு குறைகளை கண்டு பிடிப்பது சிரமம்.

ஆனால் ஒரு கிரகத்தையே ஓட்டை போடும் டெக்னாலஜி கொண்டவர்களும் (கிபி 2387-ல் இருந்து வந்தவர்கள்), அவர்களை எதிர்த்து சண்டை போடும் அளவிற்கு சமமான மனிதர்களும் (கிபி 2253-ல் இருப்பவர்கள்), துப்பாக்கியை எடுத்தோமோ.. சுட்டோமா-ன்னு இல்லாமல், இன்னும் எம்ஜியார்-நம்பியார் டைப்பில், கத்தி சண்டை போடுவதுதான் பெரிய ஜோக் (ஸ்டார் வார்ஸ் படங்களில் ஃப்ளோரசண்ட் கலர் ட்யூப் லைட் குச்சிகளை வைத்து சண்டை போடுவார்கள்).

என்ன சொன்னாலும்... மற்ற அத்தனை ஸ்டார் ட்ரெக் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு... ‘த பெஸ்ட்’டாக நிற்பது இந்த பதினோராவது படம் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே.. முன்னூறு மில்லியனை பாக்கெட்டில் போட்டுவிட்டார்கள். இன்னும் ஒரு 50-60 தேறும். ஸ்பேஸ் வாயேஜர் டைப் நாடகங்கள், திரைப்படங்கள் எல்லாம் நீங்கள் பார்த்தவர்/பார்ப்பவர் என்றால்... இதை மிஸ் செய்து.. பாவத்தை கட்டிக்கொள்ளாதீர்கள்.


Star Trek = Big Bang




14 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ஜியா said... June 7, 2009 9:14 PM

Cool!! Naan paaththa ellaa padathaiyum lineaa review ezuthittu vareenga.. Up kku appuram naanum vera entha padamum paakala.. so unga aduththa post konjam lateaa thaan varum pola ;))

ஹாலிவுட் பாலா said... June 7, 2009 9:28 PM

Up-க்கு அப்புறம், Land of the Lost & The Hangover ரெண்டும் பார்த்தாச்சி ஜியா.

முன்னாடி மாதிரி நிறைய எழுத முடியாத சூழ்நிலை. :)

’டொன்’ லீ said... June 7, 2009 11:08 PM

அப்படியா...நான் இதுவரை Star Trek படங்கள் பார்த்ததே இல்லை...

ஷண்முகப்ரியன் said... June 7, 2009 11:17 PM

As usually cool,Bala.

சென்ஷி said... June 8, 2009 12:54 AM

ஓக்க்கேய்ய்ய் :))

Cable Sankar said... June 8, 2009 1:14 AM

cool review.. bala's mark

Rafiq Raja said... June 8, 2009 3:09 AM

வெல்கம் பேக் பாலா,

ஸ்டார் ட்ரெக் படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் அனேகமானோர் இது ஒரு புதிய முயற்சியாக எடுக்கபட்டு நல்ல விதமாக வெளிபட்டிருகிறது என்று சொல்லி கேள்விபட்டேன்... இப்ப நீங்களும் சொல்றீங்க.... பார்த்துட்டு கருத்த பதிஞ்சுற வேண்டியதுதான். :)

தண்டோரா said... June 8, 2009 8:17 AM

என்னாச்சு?நீண்ட இ.........டைவெளி?

sunnyravee said... June 8, 2009 10:11 AM

valkyrie move paarthacha?

கலையரசன் said... June 8, 2009 11:34 AM

வெல்கம் பேக்!
அப்ப படம் பாக்கலாமுன்னு சொல்றீங்க?
பாத்துடவேன்டியதுதான்!

ஹாலிவுட் பாலா said... June 9, 2009 7:17 PM

வாங்க.. டொன் லீ, ஷண்முகப்ரியன் சார், சென்ஷி, சங்கர், ரஃபீக், தண்டோரா, சன்னிரவீ & கலையரசன்.!!

என்னங்க தண்டோரா.. இம்புட்டு மெதுவா கேக்கறீங்க...! அதுவும் மூணு பதிவு எழுதின பின்னாடி..! :) :) :)

கலையரசன் said... June 10, 2009 2:24 PM

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.asp

ஹாலிவுட் பாலா said... June 10, 2009 8:22 PM

தகவலுக்கு நன்றி கலையரன்.! :) :)

Subash said... June 11, 2009 3:55 AM

star track ம் star wars ம் பெரிதாக பிடிப்பதில்லை. ஏனோ தெரழயவில்லை. ஆனா நீங்க சொல்றதபார்த்தா இந்தப்படம் பார்க்கவேண்டும்போலழக்கிறது.

Heroes Syler என் favorite.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil