உங்களுடைய ரெஸ்யூம்... அல்லது வேறு எதாவது ஒரு வேர்ட் ஃபைலை, பாஸ்வேர்ட் ப்ரொடெக்ஷன் கொடுத்துவிட்டு, அப்புறம் பாஸ்வேர்டை மறந்து கஷ்டப்பட்டதுண்டா? அந்த பாஸ்வேர்டை ரிமூவ் பண்ண நிறைய டூல்ஸ் இணையத்தில் கிடைக்கும். பெரும்பாலும்.. காசு கொடுக்க வேண்டியிருக்கும். அந்த முறைகளை முயற்சிக்கும் முன்... கீழேயுள்ள வழிகளை ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.
1. பாஸ்வேர்ட் ப்ரொடெக்டட் ஃபைலை ஓப்பன் பண்ணுங்க. எதையாவது எடிட் பண்ண முயற்சிக்கும் போதுதான் Restrict format and editing செக்ஷனை பார்த்திருப்பீங்க. Stop Protection பட்டனை க்ளிக் பண்ணினா, பாஸ்வேர்டை எண்டர் பண்ணச் சொல்லும். அது தெரிஞ்சாதான் பிரச்சனையில்லையே. இதுக்கு வொர்க் அரவுண்ட் என்னன்னா....
2. அந்த ஃபைலை மூடிவிட்டு, புதுசா.. ஒரு ஃபைலை ஓப்பன் பண்ணுங்க (New).
3. 2007 வெர்ஷனில் Insert tab போங்க (2003-ல் Insert Menu Item). அதில் Object பட்டனை க்ளிக் பண்ணினா, "Text from File"-ன்னு ஒரு பட்டன் இருக்கும் (படத்தில்).
4. அதை க்ளிக் செய்தால், ஃபைல்/ஃபோல்டர் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களோட பாஸ்வேர்ட் ப்ரொடெக்டட் ஃபைலை செலக்ட் பண்ணுங்க.
5. Voilà!!!!!!!!!!!! :) :) :) :)
இது ரொம்ப நாளுக்கு முன்னாடி, இணையத்தில் படித்தது. இன்னைக்கு ஆஃபீஸில் உபயோகப் படுத்த வாய்ப்பு கிடைத்தது. சில சமயங்களில்.. கொஞ்ச இடங்களில்.. அலைன்மெண்ட் செய்ய வேண்டியிருக்கலாம். அதுக்கு வாய்ப்பு கம்மிதாம்.
உங்களுக்கும் உபயோகப் படலாம். முயற்சி பண்ணிப்பாருங்க.
Subscribe to:
Post Comments (Atom)

23 தியேட்டர் கமெண்ட்ஸ்:
voila!
ஸ்பெல்லிங்க் தப்பு வாத்தியாரே!
டீம் அமெரிக்கா வேர்ல்ட் போலீஸ், வைல்ட் திங்ஸ் னு ரெண்டு படம் கெடச்சிருக்கு. எப்படி இருக்கும்?
நீங்க எழுதுனதுலே சரியான ஹரார் மூவி இது தான் :)
useful information bala..
நன்றி பாலா, ;)
@பப்பு: திருத்திட்டேன் வாத்தியாரே! :)
@கிஷோர் & பீர்: உபயோகப்பட்டா சரி! :)
என்ன பாலா கொஞ்சம் பாடம் சொல்லிகுடுத்தா ஒருத்தரையும் காணோம்..
அது சரி.. குஜிலி படம் ஓடுற தியேட்டர்ல வார் ரீல் ஓட்டுனா யாரும் வர மாட்டாங்களோ..
@பப்பு: டீம் அமெரிக்கா... பப்பெட்ஸ் வச்சி படம் எடுத்திருப்பாங்க. கொஞ்ச சீனுக்கெல்லாம்... யாரும் பக்கதில் இல்லாம பார்த்துக்கங்க.
Wild Things இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன். :(
@கிஷோர்: :) :) :) :)
ஹா.. ஹா.. ஹா.. இன்னும் ரெண்டு பாடம் எடுத்தா.. வர்ற.. 1-2 பேரும் காணாம போய்டுவாங்க போல இருக்கு? :)
//////
குஜிலி படம் ஓடுற தியேட்டர்ல வார் ரீல் ஓட்டுனா யாரும் வர மாட்டாங்களோ.
/////
அடப்பாவிகளா... குலிஜி பட தியேட்டராவே.. நம்ம ஏரியாவை ஆக்கிட்டீங்களா??
எதுக்கும்.. நவம்பர் மாசத்தை 18+ மாதம்-னு கொண்டாடிடலாமா? கூட்டம் களை கட்டும்!
நன்றி ஹாலிபாலா.!!!
//நவம்பர் மாசத்தை 18+ மாதம்-னு கொண்டாடிடலாமா?//
பாலாண்ணா பாலா தான்.. ஊருக்கு வந்தா நிச்சயம் டிரீட் உண்டு..
இன்னும் 29 நாள் இருக்கா நவம்பர் மாதத்துக்கு....ஏதும் ட்ரெய்லர் உண்டா?
@ரவி: :) :)
@கிஷோர், விஜய்: விளங்கிடும்! :) ட்ரெய்லர் தானே... சீக்கிரம்.. ரிலீஸ் பண்ணிடுவோம். :)
தல என்னது இது ஏன் இதே மாதிரி ஒரு திடிர் பதிவு..
//நவம்பர் மாசத்தை 18+ மாதம்-னு கொண்டாடிடலாமா?//
உங்களோட இந்த நேர்மையான முடிவு ரொம்ப பிடிச்சு இருக்கு..
@வினோத்: என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க?! மார்ச் மாசம் எத்தனை PS3 பதிவுகள் எழுதியிருக்கேன்னு பாருங்க?! :) :)
///////
உங்களோட இந்த நேர்மையான முடிவு ரொம்ப பிடிச்சு இருக்கு..
//////
இப்படித்தான் இருக்கனும்! :)
தல, மேட்டர் சூப்பர், எங்கிருந்து பிடிக்கிறீங்க இது மாதிரியெல்லாம், இனிமே நீங்க டாக்குமெண்ட் அனுப்புனா, நான் அத்த என் இஷ்டத்துக்கு மாத்தல்லா,ஐயா ஜாலி...
அப்புறம் efax இன் byproduct ஆ PDF file இல் இருக்கும் மேட்டரை எடிட் பண்ணலாம், நீங்க ஒரு கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் ஒரு லெட்டரை அனுப்பினால், என்னால் அதில் இருக்கும் மேட்டரை எடிட் பண்ணவும், மொத்தமாக அழித்துவிட்டு வெறும் லெட்டர் ஹெட்டையும் கொடுக்க முடியும், டிரை பண்ணி பாருங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
wild thingsல தாறு மாறா ட்விஸ்ட் வச்சிருக்கானுங்க பாலா!
@ஸ்ரீராம்: PDF ஃபைல் எடிட்டிங் ரொம்ப நாளாவே புழக்கத்தில் இருக்கு. Adobe Writer/Primo PDF மாதிரி நிறைய மென்பொருட்கள் உபயோகத்தில் இருக்கு. EFax மேட்டர் இன்னைக்குத்தான் தெரியும்! :)
@பப்பு: பார்த்துடுவோம்..! :) :)
தாறுமாறு மேட்டர் தல... நல்ல பகிர்வு.. எனக்கு உபயோகப்படும்-னு நினைக்கிறேன். :)
ஹாலிபாலா - இந்த பேரு நல்லாயிருக்கே!
:)
உபயோகமான தகவல்னு நினைக்கிறேன்.
@கனகு & ஊர்சுற்றி: தன்யனானேன்! :)
ஓகே.. உருப்படியான ஒரு விஷயத்தைக் கத்துக் கொடுத்திருக்கீங்க..!
மிக்க நன்றி பாலா..!
நண்பரே,
என் பதிவிற்கு உங்கள் அருமையான வலைப்பூவில் சுட்டி அமைத்து தந்ததிற்கு நன்றி.
ஜாலியான, அழகான எழுத்து நடை உங்களது. உற்சாகத்துடன் தொடருங்கள் நண்பரே.
@உ.த: இந்த நக்கல் தானே வேணாங்கறது?! :) இதுவரைக்கும் போட்ட 18+ பதிவெல்லாம் வேஸ்டுங்கறீங்களா?? :)
@கனவுகளின் காதலன்: உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி! :) :) லிங்க் எல்லாம் மேட்டரா? :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!