10/08/2009

The 40 Year Old Virgin (2005) [18+]




டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.


எக்ஸ்ட்ரா டிஸ்க்: இந்தப் பதிவு எந்த பதிவரையும் மனதில் வைத்து எழுதியதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதிக பட்சமாக, பதினாறு வயதுக்குள், அமெரிக்காவில் எல்லோருக்கும் எதாவது ஒரு வகை உடலுறவு அனுபவம் கிடைத்து விடுகிறதாம் (என் ஸ்பானிஷ் தோழிக்கு 14-லிலாம்). அப்படிப்பட்ட கலாச்சாரத்தில், ஒருத்தருக்கு... அதுவும் ஒரு ஆணுக்கு (இது எவ்வளவு கஷ்டம்னு நமக்குத்தானே தெரியும்), 40 வயது வரை, அப்படிப்பட்ட அனுபவம் கிடைக்காமல் இருந்து, அந்த முதல் அனுபவத்திற்காக அவனும், அவனுக்காக அவன் நண்பர்களும் எடுக்கும் ‘ச்சீசீய்.. ச்சீசீய்’ ரக முயற்சிகள்தான், The 40 Year Old Virgin.


Andy -க்கு 40 வயது.  ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை. ஒண்டிக்கட்டை.  கலெக்டர்ஸ் எடிசன் பொம்மைகளை சேர்ப்பதும், வீடியோ கேம் விளையாடுவதும்தான் அவன் பொழுது போக்கு.  அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களும், வயதானர்வர்களாகவே இருக்க, அவனுக்கு அந்த விஷயத்திற்க்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது.

ஒரு நாள், உடன் வேலை செய்யும் நண்பர்களுடன், சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதுதான், ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது தலைவரின் ‘கன்னித்தன்மை’ கதை வெளிவருகிறது (“கேள்வி: அதைத் தொடும்போது எப்படி ஃபீல் பண்ணின? பதில்: ரெண்டு மணல் மூட்டை மாதிரி!!” [தொடும்போது-ங்கற வார்த்தை நாகரிகம் கருதி எழுதியது. படத்தைப் பார்த்தால் யு நோ வாட் ஐ மீன்]).

அப்பொழுதிலிருந்து, விஜயகாந்த் ‘செந்தூரப் பூவே’-வில் ஆரம்பித்து, நிறைய படங்களில் ஒரு வேலை செய்வாரே.... அதே வேலையை, Andy-யின் நண்பர்கள் ஒரு சபதமாக (மவனே.. உன்னை கன்னி கழிய வைக்காம விடுறதா இல்லை) ஏற்று, அவனுக்கு ஒரு ‘பெண்’ தேட ஆரம்பிக்கின்றனர்.

அங்கு ஆரம்பிக்கும் படம் அப்புறம், ஒரே குஜாலாக நகர்ந்து (பாடி வேக்ஸ், பார் ஹிட்டிங், ப்ராஸ்டிடியூட்... எக்ஸட்ரா.. எக்ஸட்ரா) , எப்ப முடியுதுன்னு கூட தெரியாமல், கிஷோர் மாதிரி நண்பர்களை, வாயிலிருந்து வாட்டர் ஃபால்ஸ் வருவது தெரியாமல் பார்க்க வைக்கும்.  கலாச்சார காவலர்கள் எல்லாம் எதுக்கும்... ஒரு கட்டையை ரெடி பண்ணிக்கங்க. உபயோகப் படலாம்.

அதே நேரத்தில், ஈபே (EBay) கடை ஒன்றை நடத்தி வரும் ட்ரிஷ் என்னும் நடுத்தர வயது பெண், Andy-க்கு பழக்கமாக... கொஞ்ச நேரத்தில்.. அவள் மூன்று பிள்ளைகளுக்குத் தாய் எனத் தெரிய வருகிறது.  இன்னும் கொஞ்ச நேரத்தில்.. அந்த மூன்றில் ஒரு பிள்ளைக்கு..... ஒரு பிள்ளை இருப்பதும் தெரிகிறது (புரியலையா..? ட்ரிஷ் = பாட்டி).

இருந்தாலும் Andy-க்கு த்ரிஷ் மேல் ஒரு ‘இது’ வந்துவிட, தானொரு வர்ஜின் என்ற உண்மையை (ப்ரெஸ்டீஜ்) த்ரிஷிடம் மறைத்து, அவளோடு பழக ஆரம்பிக்கின்றான். முதல் ‘டேட்’டிலேயே... மேட்டருக்கு ரெடியாகிவிட... Andy-க்கு ஒரு பிரச்சனை! ஆணுறையை எப்படி உபயோகிப்பது எனத் தெரியாது. அதே நேரத்தில் ட்ரிஷின் மகள் வீட்டிற்குள் வந்துவிட, அவன் ‘கன்னி’ முயற்சி வீணாகப் போகிறது.  கூடவே.. சில எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் சேருகிறது.

இனிமே “20 டேட் முடிஞ்ச பின்னாடி... செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்”- என இருவரும் முடிவெடுக்க, Andy-க்கு கொஞ்சம் நிம்மதி வருகிறது (உண்மையை சொல்ல இன்னும் கொஞ்ச அவகாசம் இருக்கே). ஆனால் ‘நான் மட்டும் யார் கூடவும் செக்ஸ் வச்சிக்கக் கூடாது... ஆனால் நீ வச்சிக்கலாமா(?)” என்ற நியாயமான கேள்வியை மகள், அம்மாவைப் பார்த்து கேட்க, சரி வேணும்னா.. போய் க்ளாஸ் எடுத்துகிட்டு, ஒழுங்கா கத்துக்கனும்.. சரியா” - எனச் சொல்லி அம்மா அனுப்பி வைக்க, துணைக்கு Andy-யும் க்ளாஸ் போகிறான்.

க்ளாஸில்... மற்ற இளசுகள் அத்தனையும், கேள்வியெல்லாம் கேட்காமல் ‘தெளிவாக’ இருக்க, Andy-க்கு மட்டும் ஏகப்பட்ட சந்தேகங்கள். இங்கு ட்ரிஷின் மகளுக்கு, இவனின் ‘Mr. Joe from south pole’-யைப் தெரிய வருகிறது... அதே நேரத்தில், 20-ஆவது டேட்டும்!

20-ஆவது டேட்-டில், தன்னுடைய கலெக்டர்ஸ் எடிஸன் பொம்மைகளை ஈபே-யில் விற்க விரும்பாமல் (ட்ரிஷின் ஐடியா) குட்டி சண்டை போட்டு, இருவரும் ஊடல் ஆகிவிட...... க்ளைமேக்ஸ்! (க்ளைமேக்ஸில் என்ன நடந்ததுன்னு சொல்லித்தான் தெரியணுமா?!) :)


The Boy in the Striped Pajamas பதிவில் Judd Apatow படங்களைப் பற்றி எழுத ஆசை-ன்னு சொன்னேன். இத்தனை நாள் ஆய்டுச்சி! படங்களை இயக்கினாலும் சரி..., தயாரித்தாலும் சரி... இவரின் பெரும்பாலானப் படங்கள், ஸ்ட்ரெய்ட் 18+, தான்.

அதிலும், இந்த படத்தின் வசனங்களில், உபயோகித்திருக்கும் வார்த்தைகளை கேட்பதற்கு பதில், பத்து குழாயடி சண்டையை பார்த்து விடலாம். குறிப்பாக, பாடி வேக்ஸ் செய்யும் காட்சி.  அந்த காட்சிக்கு, எப்படி வசனம் எழுதினார்கள் என்பதை, Unrated DVD-யின் எக்ஸ்ட்ராவில் தேடிப் பாருங்கள். நாராசம்!!!

படம் வசூலிலும், ரேட்டிங்கிலும் பெரிய ஹிட்.  அதுவரை ஒரு ஆளே இல்லாத, ஸ்டீவ் கார்ல்-லை, பெரிய ஹீரோ ரேஞ்சிற்கு உயர்த்தி விட்டது.  கிட்டத்தட்ட நின்றே போய்விட்ட, இவர் நடித்துக் கொண்டிருந்த ஒரு டி.வி நாடகம் (The Office), இந்த படத்தின் வெற்றியால், திரும்ப உயிர் பெற்று, இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் பார்த்துட்டு என்னை திட்டினால் போதும். என்ஜாய்!!!!

18+, 18+ -ன்னு கேட்டு பழியெடுத்த கிஷோருக்கு, பதிவு சமர்ப்பணம்! :) :)


The 40 Year Old Virgin = Funny, Sexy... all the way!



47 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ராஜாதி ராஜ் said... October 8, 2009 2:30 PM

இன்னொரு நல்ல விமர்சனம்....இந்த படம் hit ஆனதுக்கு அப்பறம் தான் ஸ்டீவ் கார்ல் பெரிய ஆளானார்-ங்கறது செய்தி எனக்கு...
அப்புறம், அந்த காலைல தூங்கி எந்திரிச்சு வர்ர முதல் சீன்....ரொம்ப எதார்த்தமா இருக்கும்ல :)

கலக்குங்க பாஸ்....சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் தவற விடறதில்ல போல... etc disc ல இருக்குற உள்குத்த ரொம்ப ரசிச்சேன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... October 8, 2009 2:42 PM

[[[டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.]]]

ஏன் இப்படி?

எல்லா விமர்சனமும் இப்படியே வருதே..? நல்ல படமெல்லாம் உமது கண்ணுக்குத் தெரியவே தெரியாதா..?

டூ அண்ட் த்ரீ மச்..!

வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 2:46 PM

////// அப்புறம், அந்த காலைல தூங்கி எந்திரிச்சு வர்ர முதல் சீன்....ரொம்ப எதார்த்தமா இருக்கும்ல/////

ஹா.. ஹா.. ஹா..! உண்மை! உண்மை.. உண்மை!!

அப்புறம்... எக்ஸ்ட்ரா டிஸ்க்-ல.. என்ன உள்குத்து? எனக்கு ஒன்னும் புரியலையே! :) :)

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 2:47 PM

ஹா.. ஹா. உ.த: அப்ப நீங்க எக்ஸ்ட்ரா டிஸ்க்-ஐ படிக்கலையா?? :) :)

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 2:51 PM

//எல்லா விமர்சனமும் இப்படியே வருதே..? நல்ல படமெல்லாம் உமது கண்ணுக்குத் தெரியவே தெரியாதா..? //

அட போங்க தல.! Zombieland ரொம்ப நல்லப் படம்னு எழுதினேன். எத்தனை பேரு படிச்சாங்கன்னு நினைக்கறீங்க? இப்ப ஆன்லைனில் 11 பேராம்! :):)

sriram said... October 8, 2009 3:21 PM

//எக்ஸ்ட்ரா டிஸ்க்: இந்தப் பதிவு எந்த பதிவரையும் மனதில் வைத்து எழுதியதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

இந்த மேட்டர் ஜூப்பரு, இத்த எழுதும் போது நீஙக உ.த சரவணனை நெனைக்கவேயில்லன்னு நம்பிட்டோம்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 3:34 PM

அப்படியா ஸ்ரீராம்? உங்களுக்கு அப்படியா தோணுது? :) :(

VIJAY said... October 8, 2009 3:37 PM

நல்ல விஷயத்துக்கு மதிப்பில்லைதான் பாலா. அது சரி..உங்களுடைய ஸ்பானிஷ் தோழி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...ஹிஹி..ஹிஹி

sriram said... October 8, 2009 3:55 PM

//அப்படியா ஸ்ரீராம்? உங்களுக்கு அப்படியா தோணுது?//
ஐயோ இங்க பாருங்க இந்த புள்ளைக்கு வாயில வெரல வச்சா கடிக்கக்கூட தெரியல.

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 4:11 PM

///// நல்ல விஷயத்துக்கு மதிப்பில்லைதான் பாலா. அது சரி..உங்களுடைய ஸ்பானிஷ் தோழி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...ஹிஹி..ஹிஹி
////////

ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ரொம்ப ரசிச்சேன்! :)

@ஸ்ரீராம்: ///இந்தப் பதிவு எந்த பதிவரையும் மனதில் வைத்து எழுதியதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்///

-ன்னு நான் தான் தெளிவா சொல்லியிருந்தேனே..?? ! :) :)

KISHORE said... October 8, 2009 9:17 PM

//எக்ஸ்ட்ரா டிஸ்க்: இந்தப் பதிவு எந்த பதிவரையும் மனதில் வைத்து எழுதியதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

பல பேரு இருக்காங்க.. இருந்தாலும் ஒரு ரெண்டு மூணு பேர சொல்றிங்கன்னு தெரியுது ஆனா குறிப்பா யார சொல்றிங்கன்னு சொன்ன கட்டைய தூக்கிட்டு வந்துடுவாங்களோ..?

//தொடும்போது-ங்கற வார்த்தை நாகரிகம் கருதி எழுதியது. படத்தைப் பார்த்தால் யு நோ வாட் ஐ மீன்]//

ஐயா என்ன சொல்ல வரிங்க?

//எதாவது ஒரு வகை உடலுறவு //
இந்த வரியா படிக்கும் போது சம்பந்தமே இல்லாம "ஜெனிசிஸ் " படம் நினைவிற்கு வந்து தொலைக்கிறது ..

//Andy-க்கு ஒரு பிரச்சனை! ஆணுறையை எப்படி உபயோகிப்பது எனத் தெரியாது.//
ஐயோ ஐயோ இப்படியும் ஒரு பய புள்ள.. பலூன் மாதிரி ஊதி விளையாடனும்னு கூட தெரியாம இருக்கு பாரு மக்கு..

//18+, 18+ -ன்னு கேட்டு பழியெடுத்த கிஷோருக்கு, பதிவு சமர்ப்பணம்! //

18+ னா இதானா .. சீ.. சீ.. கடவுளே கடவுளே ..


சூப்பர் பதிவு.. தொடரட்டும் உங்கள் கலை சேவை.. .

தேங்க்ஸ் பாலா..

KISHORE said... October 8, 2009 9:21 PM

எக்ஸ்ட்ரா டபுள் டிஸ்க்..

உங்க ஸ்பானிஷ் தோழிய நீங்க இந்திய வரும் போது அழச்சிக்கிட்டு வாங்களேன்.. அவங்களும் இந்தியாவ சுத்தி பார்த்த மாதிரி இருக்கும்ல.. ( டேய் கிஷோர்.. நீ ரொம்ப நல்லவன்டா.. )


ஐ.. திரும்பவும் பலோயர் செஞ்சுரி அடிச்சாச்சா.. வாழ்த்துக்கள்..

ஷண்முகப்ரியன் said... October 8, 2009 9:38 PM

படிக்கப் படிக்கவே குபீரென்று சிரித்த இடுகை அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் பாலா.
ஆனால் அதை விட டாப் இதுதான்:

ஹா.. ஹா. உ.த: அப்ப நீங்க எக்ஸ்ட்ரா டிஸ்க்-ஐ படிக்கலையா?? //

நீங்கள் உ.த வைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் எனத் தெரிந்தவுடன் ஹா..ஹா..ஹா..

காலை நேரத்தைச் சிரிப்பு ரண களமாக்கிய பாலாவுக்கு ஜே!ஜே!

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 10:05 PM

@கிஷோர்: எல்லோரும் நான் உ.த-வை சொன்னேன்னு நினைக்கிறாங்க. நீங்க அதையெல்லாம் நம்பாதீங்க. :(

’தொடும்போது’-ங்கற வார்த்தைக்கு பதிலா, படத்தில் இவங்க உபயோகிக்கும் வார்த்தைகளும், செய்கைகளும்... படத்தை பாருங்க. புரியும்! ;)

அப்புறம் ஸ்பானிஷ் தோழிதான்.. இப்ப கல்யாணம் பண்ணி செட்டில் ஆய்ட்டாங்களே. 1 1/2 வயசில் ஒரு பையன் இருக்கான். பரவாயில்லையா?

வாழ்த்துகளுக்கு நன்றி! :) எவ்ளோ பேர் பிச்சிக்கப் போறாங்களோ?

--------

@ஷண்முகப்ரியன் சார்: நீங்கதான்.. இந்த பதிவுக்கு கோவிச்சிக்குவீங்கன்னு நினைச்சேன். நிஜமான ‘யூத்’ நீங்கதான்னு திரும்ப ஒருமுறை ப்ரூஃப் பண்ணிட்டீங்க! :) ஆனா உ.த தான்.. ஹா..ஹா. ஹா! :) :)

உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி!

KISHORE said... October 8, 2009 10:08 PM

//அப்புறம் ஸ்பானிஷ் தோழிதான்.. இப்ப கல்யாணம் பண்ணி செட்டில் ஆய்ட்டாங்களே. 1 1/2 வயசில் ஒரு பையன் இருக்கான். பரவாயில்லையா?//
நான் "andy" மாதிரி ..

ஹாலிவுட் பாலா said... October 8, 2009 10:12 PM

ஹா.. ஹா. ஹா.. இருக்கும்.. இருக்கும்!

அப்ப நாற்பது வரைக்கும் வெய்ட் பண்ணுங்க! கூட்டிகினு வாரேன்!

முரளிகண்ணன் said... October 8, 2009 11:56 PM

பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம். அடக்கு அடக்கு என்கிறது வேலை.

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 12:11 AM

கையிலிருக்கும் லிஸ்டுக்கு, நீங்க ஒரு மாசம் மெடிக்கல் லீவு போடவேண்டியிருக்கும். சீக்கிரம்.. வேலைப் பலு குறைந்து, முன்னாடி மாதிரி நிறைய பதிவு போட அட்வான்ஸ் வாழ்த்துகள்.

erbalaji said... October 9, 2009 1:05 AM

அப்படியே வர்ற 23ம் தேதி SAW-VI ரிலீஸாகுது, கொஞ்சம் பார்த்துட்டு விமர்சனம் செஞ்சீங்கன்னா நல்லாயிருக்கும்.
உங்க விமர்சந்த்தை வைச்சித்தான் அத டவுண்லோட் பண்ணலாமா? வேண்டமான்னு யோசிக்கணும்.....

KISHORE said... October 9, 2009 3:33 AM

ah.. wat a puppy shame?

jackiesekar said... October 9, 2009 3:49 AM

பாலா இந்த படத்தை நான் எப்போதோ பார்த்து விட்டேன் நான் எழுத இருந்தேன் நீங்கள் எழுதி விட்டீர்கள்... நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்...

♫சோம்பேறி♫ said... October 9, 2009 7:33 AM

சொல்ல மறந்துட்டீஙக பாலா.. வாய் விட்டு சிரிக்கும் படி நிறைய காட்சிகள் படத்தில்..

அதிலும், ஹீரோ சீரியஸாகப் புலம்பிக் கொண்டிருக்கும் போது, 'Grudge' படம் பார்த்துக் கொண்டே கதை கேக்கும் ந்ண்பர் கத்து கத்து என கத்துவது செம காமெடி..

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 7:37 AM

@erbalaji: கண்டிப்பா தல! இரண்டாம் பாகம் ஆரம்பிச்சி, முதல் நாளே படம் பார்த்துகிட்டு இருக்கேன். இதை விடுவேனா?

@கிஷோர்: இன்னாபா?

@ஜாக்கி: நன்றி ஜாக்கி! :)

@சோம்பேறி: அப்படி எழுதனும்னா படத்தை முழுக்க எழுதினாதான் உண்டு இல்லையா?

அது Grudge இல்லை. Dawn of the Dead!

pappu said... October 9, 2009 9:31 AM

தலைவா கூட்டத்த பாத்தீகளா? நேத்து சோம்பிஐலாண்ட் எழுதனப்ப நானும் கிஷோரும் தான் கும்மி அடிச்சிட்டிருந்தோம். இன்னைக்கு எத்தன வோட்டு, வருகை, ஃபாலோயர் 104! (ஓடிப் போன ஆள் வந்துட்டார் போல!)

///அதிக பட்சமாக, பதினாறு வயதுக்குள், அமெரிக்காவில் எல்லோருக்கும் எதாவது ஒரு வகை உடலுறவு அனுபவம் கிடைத்து விடுகிறதாம் (என் ஸ்பானிஷ் தோழிக்கு 14-லிலாம்). ////

இங்க நிலைமைய பாருங்க 26 வயசு ஆனாலும் பசங்க ஏ,பி,சிடி படிச்சிட்டிருக்காங்க! அங்க அதுக்குள்ள பட்டம் வாங்கி பறக்க விட்டுடுவாங்க போல!

r.selvakkumar said... October 9, 2009 11:28 AM

உங்க பதிவுகளின் மூலமாக புதுப்புது படங்கள் மற்றும் டெக்னிஷியன்களைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றேன். நன்றி!

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 12:02 PM

@பப்பு: ஹா.. ஹா.. ஹா..! உண்மை..! அதையும் தப்பு தப்பாதான் கத்துக்க வேண்டியிருக்கு. :) ஆமா உங்களுக்கு வயசு 26? :) ;)

@செல்வா: மிக்க நன்றி! உங்க பதிவுகள் மூலமாதான் இப்ப, கணக்கு கத்துக்கறேன். ஸ்கூல் படிக்கும்போது இதில் ரொம்ப ஆர்வம் இருந்தது. அப்புறம் மறந்தே போய்ட்டேன், உங்க பதிவை படிக்கும் வரை! அதுக்கு இன்னொரு நன்றி! :)

kanagu said... October 9, 2009 12:11 PM

படத்தை நான் சிறிது காலம் கழித்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் :)
நல்ல விமர்சனம் அண்ணா...

pappu said... October 9, 2009 12:21 PM

எனக்கு 20 தாங்க. கிஷோருக்கு ஒரு 26 இருக்காது?

(நண்பர் கிஷோர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்).

Karthick Krishna CS said... October 9, 2009 12:40 PM

Steve Carell ஒரு அருமையான காமெடி நடிகர் என்பது இந்தப் படத்துக்கு அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சுது. இதுக்கு முன்னாடி, இவரும், Jim Carrey சேர்ந்து, Bruce Almighty படத்துல ஒரு காட்சியில மிரட்டியிருப்பாங்க. அந்த நியூஸ் வாசிக்கும் காட்சியில, யார் நல்லா பண்ணிருப்பாங்கன்னு ஒரு முடிவுக்கு வரவே முடியாது...

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 2:07 PM

@கனகு: என்ன ஆச்சி? இன்னும் 18 ஆகலையா? :)

@பப்பு: 20?! :) :) கிஷோரைப் பார்த்தால் 39 மாதிரி சொல்லலாமில்ல?! :)

@கார்த்திக்: உண்மை. ஸ்டீவ் வெளிச்சத்திற்கு வந்ததே, ப்ரூஸ் அல்மைட்டியில்-தான். அதிலும் வில்லன் கேரக்டர். அசத்தியிருப்பார்.

வெண்ணிற இரவுகள்....! said... October 9, 2009 2:27 PM

//இனிமே “20 டேட் முடிஞ்ச பின்னாடி... செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்”- என இருவரும் முடிவெடுக்க, Andy-க்கு கொஞ்சம் நிம்மதி வருகிறது (உண்மையை சொல்ல இன்னும் கொஞ்ச அவகாசம் இருக்கே). ஆனால் ‘நான் மட்டும் யார் கூடவும் செக்ஸ் வச்சிக்கக் கூடாது... ஆனால் நீ வச்சிக்கலாமா(?)” என்ற நியாயமான கேள்வியை மகள், அம்மாவைப் பார்த்து கேட்க, சரி வேணும்னா.. போய் க்ளாஸ் எடுத்துகிட்டு, ஒழுங்கா கத்துக்கனும்//
நல்ல அம்மா நல்ல பெண்

prabhukumar said... October 9, 2009 2:31 PM

நாங்கள்லாம் நிஜ யூத்து. 20ஏ தான்! கேபிள் சங்கர் மாதிரி 40 யூத்து இல்ல. கிஷோருக்கு 39? அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கனும்னா 69னு கூட சொல்லலாம்!

Cable Sankar said... October 9, 2009 2:32 PM

/ஏன் இப்படி?

எல்லா விமர்சனமும் இப்படியே வருதே..? நல்ல படமெல்லாம் உமது கண்ணுக்குத் தெரியவே தெரியாதா..?

டூ அண்ட் த்ரீ மச்..!

வன்மையாகக் கண்டிக்கிறேன்..!
//


itho..இங்கபாருங்கய்யா.. நம்ம டைட்டில் ஹீரோ.. :)

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 2:33 PM

அது நிஜமாவே நல்ல விசயம் தல. இங்க சுமார் 11-13 வயசுக்குள், பெற்றோர்களே, செக்ஸை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பாங்க.

சொல்லிக்கொடுக்கலைன்னா மட்டும், தெரியாமலா போய்டப் போகுது, சொல்லுங்க?!

Cable Sankar said... October 9, 2009 2:34 PM

இது ஒரு சூப்பர் படம்.. நானும் ரொம்ப நாளுக்கு முன்னமே பார்த்துவிட்டேன். செம காமெடி.. நான் கூட. எ.வ.த.இ.மா.படம் லிஸ்டில் எழுதலாம்னு நினைச்சேன்.

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 2:38 PM

@பிரபு: ஹா.. ஹா.. டென்சன் ஆகாதீங்க தல! :) சும்மா.. ஒரு தமாசுக்கு சொன்னேன். இதப்பாருயா.., கிஷோருக்கு சப்போர்ட்டை! :) :)

@சங்கர்: ஹா.. ஹா. ஹா.. இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்... உங்க கமெண்டை படிச்சி! :) :)

[மிஸ்டு கால் வரவே இல்லையே சங்கர்? பிஸி?]

pappu said... October 9, 2009 3:55 PM

நம்ம டென்ஷ்னா? ச்சே... ச்சே... நம்ம எப்பவும் காமெடிதான் :) கிஷோருக்கு சப்போர்ட்டா? நீங்க அவர 69 வயசுன்னு சொன்னால் கூட பரவாயில்லன்னு சொல்றேங்க!
:)

அய்யோ சங்கர வச்சு காமெடி பண்ணும் போது அவரும் வந்துட்டாரே! ஹாலிவுட் காமெடி மாதிரி ஆயிடுச்சு! சங்கர் சார்... ரொம்ப சாரிங்கண்ணோவ்!

pappu said... October 9, 2009 3:58 PM

ஆனா இந்த டைட்டில கேள்வி பட்டப்போ நான் பொண்ணப் பத்தினு நெனச்சேன். you know, guys always relate virginity to women. ஆணாதிக்கம்! :)

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 5:52 PM

@பப்பு: கர்ர்ர்ர்ர்ர்... அது நீங்கதானா? ப்ரொஃபைல் இல்லையா..! நான் கூட வேற யாரோன்னு நினைச்சிட்டேன். :) :) :)

KISHORE said... October 9, 2009 9:48 PM

கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.. அதுக்குள்ள 39 ஆ .. ?
நல்லா சொல்றிங்க டீடைலு.. எனோட வயசு 16 வருடம்.. 18 நாள் 20 மணி 25 நிமிஷம் 28 நொடி.. ஒரு சின்ன பையன போட்டு இப்படியா படுத்துறது ? பய புள்ளைங்களா .. இனிமேலாவது.. திருந்துங்க..

ஹாலிவுட் பாலா said... October 9, 2009 10:38 PM

பதினாறு வயசுப் பையன், இந்த பதிவில் கும்மி அடிப்பது ஏனோ?

pappu said... October 9, 2009 11:13 PM

16 வயசு பையனுக்கு ப்ளாக்கர் அக்கவுண்ட்டே இருக்க முடியாதே,இதுல ஆர்குட் வேற சுத்திட்டு இருக்கீரு!

கனவுகளின் காதலன் said... October 10, 2009 4:13 AM

நண்பரே, கலகலப்பான விமர்சனம். பதிவிற்கு சுட்டி அமைத்தமைக்கு நன்றிகள் நண்பரே.

கோபிநாத் said... October 10, 2009 5:04 AM

தல...நான் இந்த படத்தை பார்த்துட்டேன் ;))))

செம படம் ;)

ஹாலிவுட் பாலா said... October 10, 2009 7:13 AM

@கனவுகளின் காதலன: :) பாராட்டிற்கு நன்றி! :)

@கோபி: படமெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா தல?

butterfly Surya said... October 10, 2009 5:18 PM

hahah.. xlent write up. பார்க்கணும்.

TamilNenjam said... November 27, 2009 7:21 PM

Dawn of the Dead! -- இதை சப்டைட்டில் இல்லாமல் டவுன்லோட் செஞ்சு 20 நாள் பார்க்கவே இல்லை.
எந்த சப்டைட்டிலும் மேச் ஆகவே இல்லை.
இறுதியில் ஒரு சப்டைட்டில் அச்சு அசலாகப் பொருந்தியது. பிறகு என்ன? காலை ஆறு மணிக்கு பார்க்க ஆரம்பித்தேன். (:-

Post a Comment / கிஷோர் கமெண்ட்

உங்களுக்கு ஓட்டு போடுற வயசாகலை... சரி..!!! கமெண்ட் போடறதுக்கு கூடவா???

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

WolfMan PercyJackson ValentinesDay