ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஹாலிவுட் எண்ட்ரி என்பதாலேயே, நம் எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு, இந்தப் படத்திற்கு இருப்பது/இருந்தது நிஜம். அந்த பெயர் இல்லையென்றால் நான் கூட தியேட்டர் பக்கம் எட்டிப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். எதுக்கும் போய் பார்ப்போமே என்று பார்த்தால்...........
நான்கு நண்பர்கள். குடும்பஸ்தர்கள்! அவர்களில் ஒருவரின் திருமண வாழ்க்கை,
நான்கு குடும்பமும் (பிள்ளைங்களை வீட்டுல விட்டுட்டுத்தான்), ஒரு தீவிற்கு செல்கிறார்கள். ஜாலியாய் என்ஜாய் செய்யலாம் என நினைத்தால், “சாரி.. ரூல்ஸ் & ரெகுலேஷன் படி.. அதெல்லாம் நடக்காது. நீங்க நாலு பேரும், டெய்லி... க்ளாஸ் அட்டண்ட் பண்ணனும்” என்று சொல்லிவிட, நான்கு கப்பிள்ஸும் க்ளாஸ் அட்டண்ட் செய்ய, இல்லாத பிரச்சனைகளெல்லாம் வருகிறது.
திடீரென ஒருவனின் கேர்ள் ஃப்ரண்ட் காணாமல் போக, அவளைத் தேடி மற்றவர்கள், கிழக்குப் பக்கம் இருக்கும் இன்னொரு தீவிற்கு போகின்றனர் (கிழக்குப் பக்கத் தீவு, கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டுமாம்). கண்டு பிடித்தார்களா... திருமணம் என்ன ஆயிற்று... என்பதெல்லாம்... வெண்திரையில் தான்!
வின்ஸிற்கு, போன வருடம் நடித்த, ஃபோர் க்ரிஸ்த்துமஸை தவிர வேறு படம் கைவசம் இல்லை. கையில் கொஞ்சம் பணம் இருந்திருக்கும் போல.., கதை-வசனம் எழுதி தயாரிச்சிட்டார்.
முதலில் R ரேட்டிங் வாங்கியிருந்த படத்தை திரும்ப எடிட் செய்து PG-13 வாங்கியிருக்காங்க. R-ன்னு விட்டிருந்தால் கூட.. சுமாரா சிரிச்சிருக்கலாம். இது கொடுமை! மிஞ்சிப் போனா மூணு இடத்தில் சிரிச்சிருக்கலாம் (அந்த யோகா சீன் மட்டும் எக்ஸெப்ஷன்). பேசியே கொல்லுறானுங்க, பரதேசிப் பசங்க.
நம்ம ARR தான் பாவம்! ஒரு நல்ல படத்தில் அறிமுகம் ஆகியிருக்கலாம். பெரும்பாலான நேரம் சைலண்டாகவே போகும் படத்தில், எப்பவாவதுதான் BG எட்டிப் பார்க்குது... அதுவும் அதிக பட்சமா அஞ்சு செகண்டில், ம்யூட் ஆகிடுது. சஜுனா பாடல் மட்டும்.. எழுத்து போடும்போது வருகிறது (அது மட்டும்தான் எனக்கு நினைவு இருக்கு). தமிழ்ப் பாட்டை காணாம். ஒருவேளை வந்துதோ என்னமோ... நான் தூங்கியிருந்தாலும்... இருப்பேன் -ன்னு நினைக்கிறேன். எழுதியதிலேயே மோசமான படம் என “Mall Cop" படத்தை சொல்லலாம். ஆனால்.. அந்தப் படத்தையெல்லாம்.. கோவில் கட்டி கும்பிடலாம் போல.
அடப் போங்க... இது வரைக்கும் எழுதவே... கடுப்பா இருக்கு. இதுக்கு மேல இந்த கருமத்தை எழுதி, ரெண்டு பேர் டைமும் வேஸ்ட் ஆகனுமா........ (சரி வந்துட்டீங்க... குளிர்ச்சியா பார்த்துட்டு போகட்டும்னுதான்.. மேலேயிருக்கற ரெண்டு படங்களும்! :) )
படத்தின் கடைசியில் ஜீன் ரெனோ, ஒவ்வொரு தம்பதிக்கும், அவர்களுடைய ‘விலங்கு’ பக்கத்தை விவரித்து (Animal Spirit), அதற்கு ஏற்ற மாதிரி ஆளுக்கு ஒரு பொம்மை கொடுக்கறார்.
அவர் வின்ஸ் வேகன் தம்பதிக்கு கொடுக்கும், பொம்மைதான்... இன்றைய பன்ச்சும்.
Couples Retreat = சென்ஸார்ட்
விவரங்களுக்கு......

30 தியேட்டர் கமெண்ட்ஸ்:
தல பார்க்கும் பொழுதே படம் சொதப்பல் என்று ஓரளவுக்கு யூகித்து வைத்து இருந்தேன்..
Trailer விட்டு போச்சு..சேர்த்துக்கொள்ளுங்கள்..
எனக்கும் ஒன்னும் கிடையாது..மத்தவங்க தப்பா எடுத்துப்பான்களோ..
பஞ்ச் பத்தி சொல்றேன்..
எடுத்திட்டேன் வினோத்! :)
ட்ரெய்லெர்-ன்னு எதை சொல்லுறீங்க? முன்னாடி ட்ரெய்லருக்கு லிங்க் கொடுத்திட்டு இருந்ததையா?
முதல் கமெண்ட்ல Trailer என்ற வார்த்தை விட்டு போனதை சொன்னேன் தல..
தல பஞ்ச் எனக்கு தப்பாக தெரியவில்லை.:))
<<<
பேசியே கொல்லுறானுங்க, பரதேசிப் பசங்க
>>>
ஹஹஹ... :)
<<<
ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஹாலிவுட் எண்ட்ரி என்பதாலேயே, நம் எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு, இந்தப் படத்திற்கு இருப்பது/இருந்தது நிஜம். அந்த பெயர் இல்லையென்றால் நான் கூட தியேட்டர் பக்கம் எட்டிப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
>>>
உண்மைதான்.
@வினோத்: ஹஹஹா.. குழப்பறீங்க. இருந்தாலும்... சென்ஸார்டாவே இருக்கட்டும். உங்க பேர் மட்டும் காணாம் போயிருக்கும்! :)
@மஸ்தான்: :) :) ஏரியா பக்கமே போய்டாதீங்க. ARR பேரைச் சொல்லி இந்தியாவிலும் ரிலிஸ் பண்ணினாலும் பண்ணுவாங்க.
hahhaha... thanx.
அய்யயோ.... நம்ம ரஹ்மானுக்கு முதல் படம் இப்பிடியா அமையணும்....
ஆனாலும்.. ரஹ்மானுக்கு பின்னனி இசையில் எப்போதுமே தடுமாற்றம் தான்..
இதுவும் கடந்து போகும் ..
ஓகே இண்ட் போட்டுற வேண்டியதுதான்
நான் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் BG இசை கேட்டேன் நன்றாக இருக்கிறது.
ரஹ்மான் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
படம் நிச்சயமாய் சொதப்பிவிடும் என்று முன்பே தோன்றியது..
அது சரி.. பொண்ணுங்க எல்லா ஃப்ரொபைலில் ரொம்ப வத்தி போய் இருக்காங்க.. மேற்படி விஷயத்தில..:(
மோசமான படம் கிடைத்தால்,விமர்சனம் எழுத என்ன ஜாலியாக இருக்கிறது,இல்லை பாலா!
எனது மெயில் கிடைத்ததா?
கேபிள் சங்கர் சார்.. நீங்க பொண்ணுங்க "கை " பத்தி தான சொல்றிங்க..
//அய்யோ.. சாமி... சங்கை அறுத்துட்டுத் தான் வெளியே விடுறாங்க.//
ஹஹஹா. :)
பாவம் தல நீங்க ;)
ழுதியதிலேயே மோசமான படம் என “Mall Cop" படத்தை சொல்லலாம். ஆனால்.. அந்தப் படத்தையெல்லாம்.. கோவில் கட்டி கும்பிடலாம் போல.//////
என்னங்க Chronicles of bow படத்தை விட்டுட்டீங்க?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீஈஈஈஈ!
அந்த பஞ்ச் லைன் என்ன?
//என்னங்க Chronicles of bow படத்தை விட்டுட்டீங்க?//
அதை விட மட்டமா "வில்லு" வந்துட்டதால .. அதை நல்ல படம் லிஸ்ட் ல சேர்த்து இருப்பாரு..
//அந்த பஞ்ச் லைன் என்ன?//
எனக்கும் தான் சாமியிய்.. சொல்லுங்க
பூச்சி: :) :) இருக்கட்டும் இருக்கட்டும்!
@கனகு: இன்னொரு படம் கிடைக்கும் என நம்புவோமாக! :(
@முரளி: கொஞ்சம் பெரிய இண்ட்-ஆ போட்டுக்குங்க தல!
@கிரி: எனக்கு சஜுனா தவிர வேற எதுவும் மனசில் பதியலை. படத்தில் எதுவும் எடுபடலை.
@கேபிள்: ஹய்யோ.. சங்கர்.. இதில் நாலாவது கப்பிள் போட்டோவை நீங்க பார்க்கலையே! கொடுமை.. கொடுமை..!!
@ஷண்முகப்ரியன் சார்: உண்மைதான் சார். நல்லப் படங்களை எழுதறதை விட.. இது ரொம்ப ஈஸி! :)
@கோபி: கடமைன்னு ஒன்னு இருக்கே கோபி! என்ன பண்ணச் சொல்லுறீங்க?! :) ஆனா.. கேபிள் பார்க்கற சில மொக்கைகளுக்கு, இது எவ்வளவோ மேல்!
@பப்பு: அது தமிழ்ங்கறனாலதான் சேர்க்கலை. அதுவே... பரவாயில்லைன்னா பார்த்துக்கங்களேன்.
பஞ்ச்சா...: ஜீன் கடைசியில் கொடுக்கும் பொம்மை... ஒரு கழுதை. அதோட இன்னொரு ஆங்கில வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் இருக்கு இல்லையா.., அதைத் தான் எழுதியிருந்தேன். காதை கொண்டாங்க... xxx(xxxx). புரிஞ்சிதா... இல்ல நேரடியா சொல்லனுமா?
ப்ச்... கண்ணு கலங்கிடுச்சு வாத்யாரே! எங்களைக் காப்பாத்தறதுக்காக நீ இம்புட்டு கஷ்டப்படுற பாரு.. அங்கதான் செம்ம பன்ச்சாக்கீது! ;)
ஓகே.. ரகுமானின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு அவல் கிடைத்துவிட்டது..!
அச்சச்சோ!!! அப்போ இசை கேட்டதோட நிறுத்திக்கலாமா?????
//அதுவும் அதிக பட்சமா அஞ்சு செகண்டில், ம்யூட் ஆகிடுது. சஜுனா பாடல் மட்டும்.. எழுத்து போடும்போது வருகிறது (அது மட்டும்தான் எனக்கு நினைவு இருக்கு).//
என்னது இந்த ப(ப்)டத்த எழுத்து போட்ற வரைக்கும் பார்த்தீங்களா..விதி யாரை விட்டது??
கண்ணன்..
@சென்ஷி: :( :( :( :( நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே! :)
@உ.த: ஓட்டுக்களை பார்த்தீங்க இல்ல?! நல்ல இருக்குன்னு சொன்னாலே... நம்ம ஆளுங்க குத்த மாட்டாங்க. இப்ப 21!!! க்யூவுல நின்னு குத்தறாங்க சாமி! :)
@ச்சின்னப் பையன்: மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!
@கண்ணன்: அங்கயாவது அந்த ‘தமிழ்’ பாட்டு வருதான்னு பார்த்தேன். அப்புறம் எழுத்தெல்லாம் முடிஞ்சி கூட ஒரு சீன் இருக்கு. எழவு அதுக்கும் சிரிக்க முடியலை! :(
மூணு எழுத்து வார்த்தை ஓ.கே. அந்த நாலு எழுத்து...... ஓ அப்படி இருக்குமோ....
அப்படியில்ல. அது வேற!
அடக்கொடுமையே ஆப்ரோ பாட்ட தேடுதேடுன்னு தேடி புடிச்சேன்
படம் அவ்வலவு மொக்கையா :-((
ஹைய்யோ... அதை ஏன் கேட்கறீங்க!!! கொடுமை!!!!!
Post a Comment / கிஷோர் கமெண்ட்
உங்களுக்கு ஓட்டு போடுற வயசாகலை... சரி..!!! கமெண்ட் போடறதுக்கு கூடவா???