“ஓவர் நைட்ல பெரிய ஆள் ஆய்ட்டான்யா” - என்பது ஒரு ‘உலகப் பொதுவுடமை’ டயலாக்! ஒவ்வொரு சாதனையாளர்களையும், அவர்களின் வெற்றியை பழிக்க, நாம் எடுக்கும் ஆயுதம்!
குழந்தைகளின் மாய உலகத்திற்கு, மூன்றாவது பரிமாணம் கொடுத்த பிக்ஸாரும் இதிலிருந்து தப்பவில்லை, இன்று வரையிலும்! ‘ஓவர் நைட் வெற்றி’யாகவே கருதப் படும், பிக்ஸாரின் பிண்ணனி என்ன, அவர்கள் அந்த ‘ஓவர் நைட்’டிற்கு கொடுத்த விலை என்ன, அந்த ‘ஓவர் நைட்’ சுமார் எத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமா? Leslie Iwerks இயக்கிய இந்த டாகுமெண்ட்ரியை ஒரு முறை பார்க்கவும் அல்லது தொடர்ந்து படிக்கலாம்!
ஜார்ஜ் லூகஸ்! இண்டியானா ஜோன்ஸ் படங்களின் தயாரிப்பாளர்; ஸ்டார் வார்ஸ்
இதற்கு கொஞ்சம் வருடங்கள் முன்பு, Dr. Edwin Catmull, தனக்கு அனிமேஷன் சரியாக வரவில்லை என்பதால், இயற்பியல் படிக்கப் போய், இயற்பியல் சூத்திரங்களை அனிமேசனில் பயன்படுத்த ஆரம்பித்தார். முதன் முதலில் (1973) தனது இடது கையை அனிமேட் செய்து காட்ட, அது 1976-ல் சினிமாவின் (Futureworld) முதல் 3-டி அனிமேடட் காட்சியாக வெளிவந்தது. Graphics Group-ன் தலைவராக இவர், தன் பணியை ஆரம்பிக்க, இதில் அடுத்த பெரிய தலை ஒன்று வந்து சேர்ந்தது.
எட்வினுக்கும், ஜானுக்கும், கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸிலேயே ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், லூகஸுக்கு அப்பொழுது பணப் பிரச்சனை. அவரின் ஸ்டார் வார்ஸ் ஃப்ரான்ச்சைஸிலிருந்து வரும் பணம் குறைந்து விட்டதாலும், அவர் தயாரித்த Howard the Duck என்ற படம், பணத்திற்கு பதில் வெறும் ‘முட்டை’ போட்டதாலும் இக்கட்டில் மாட்டிக் கொண்டார்.
அதை விட பெரிய பிரச்சனை (1984) அவருக்கு ஒன்று இருந்தது. அது இந்த ஊரில்,
க்ராஃபிக்ஸ் க்ரூப்பில் அதி முக்கியமான ஆள் சேர்ந்தது இந்த சமயத்தில்தான். R&D-க்கே செலவு கட்டுப்படியாகததால், வந்த விலைக்கு கம்பெனியை தள்ளிவிட ரெடியாக இருந்த லூகஸின் கண்ணில், தான் உருவாக்கிய கம்பெனியில் இருந்தே.. நாகரிமாக வெளியே தள்ளிவிடப் பட்ட ஒருத்தர் தென்பட்டார்.
அது ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைவர், உலகின் மிகச் சிறந்த பிஸினஸ் மேன்-களில் ஒருவர், எலக்ட்ரானிக் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து 1985-ல் வெளியேறிய ஜாப்ஸ், 1986-ல் $5 மில்லியன் டாலரை கொடுத்து Graphics Group நிறுவனத்தை வாங்கினார். உடனே.. கம்பெனியில் பாலும் தேனும் பெருக்கெடுத்தா?
அப்பொழுது க்ராஃபிக்ஸ் க்ரூப், பிக்ஸார் என்ற ப்ரேண்டில் கம்ப்யூட்டரை அஸம்பிள் செய்து, பெரிய பெரிய கம்பெனிகளுக்கு விற்றுக் கொண்டிருந்தது. அதில் டிஸ்னியும் ஒன்று. கூடவே... விளம்பரங்களுக்கான அனிமேஷனும். ஜாப்ஸ், க்ராஃபிக்ஸ் க்ரூப்பை, பிக்ஸார் என்று பெயர் மாற்றி, அதே தொழிலை செய்து கொண்டிருந்தார்.
பிக்ஸார், இனி அதோ கதிதான் என எல்லோரும் நினைத்த பொழுதுதான், இவர்களிடம் கம்ப்யூட்டர் வாங்கி, அதை தன் 2-டி அனிமேஷன் படங்களுக்கு உபயோகித்துக் கொண்டிருந்த டிஸ்னி..., பிக்ஸாருடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அது பிக்ஸாரின் வாழ்க்கையையும், ஹாலிவுட்டின் அல்லது உலகப் படங்களின் “அனிமேட்டட் கார்ட்டூன்” என்ற பிரிவின் தலையெழுத்தையும், தலை கீழாக்கியது.
மீதி... நாளைக்கு!
நேத்து Couples Retreat போக முடியலை. இன்னைக்கு நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
விவரங்களுக்கு......

29 தியேட்டர் கமெண்ட்ஸ்:
நல்ல விறுவிறுப்பான ஆரம்பம் பாலா.. தொடருங்கள். பிக்சாரின் திரைப்படங்களுடன் அவர்களின் குறும்படங்களைப் பற்றிய அறிமுகத்தையும் இத்தொடரில் இணைக்க முடிந்தால் பயனடைவேன்.
வாங்க சென்ஷி! :)
அல்ரெடி.. நீங்க சொன்னதைத் தான் எழுதியிருக்கேன். இதில்... பிக்ஸாரின் அத்தனை குறும்படங்களையும், மற்ற ஒன்பது திரைப்படங்களையும் (Up ஏற்கனவே எழுதியாச்சி) நீங்க எதிர்பார்க்கலாம். :)
///அல்ரெடி.. நீங்க சொன்னதைத் தான் எழுதியிருக்கேன்./////
எழுதியிருக்கேன்னு சொன்னது, நாளைக்கு பப்ளிஷ் பண்ண வேண்டிய மேட்டரில் அதை எழுதியிருக்கேன் -ன்னு சொல்ல வந்தேன். அர்த்தம் மாறிடுச்சி! மன்னிக்கவும். எழுதிக் கொண்டிருக்கேன் -ன்னும் படிக்கலாம். :)
அட, பிக்ஸாரா அப்படியே வாங்க.... டிஸ்னி அக்யுஸிஷன்... எல்லாம் சொல்லுங்க! இது டாகுமெண்ட்ரி வந்த்தா. பரவாயில்லயே!
Steve Jobs is one hell of a man...
அது கடைசி மேட்டர்தானே பப்பு. சொல்லிடுவோம்! நீங்க சொல்லிட்டா அப்பீல் ஏது?!
அந்த 9 படம் என்ன என்னனு சொல்லிட்டா தேடிகிட்டு இருப்பேன்:)
Toy Story
A Bug's Life
Toy Story 2
Monsters Inc
Finding Nemo
The Incredibles
Cars
Ratatouille
Wall-E &
Up [http://www.hollywoodbala.com/2009/05/up-2009.html]
என்ஜாய்!!
Ratatouille
Wall-E &
Monsters Inc
Finding Nemo
பார்த்தாச்சி பாக்கி தேடுகிறேன் :)
டாய் ஸ்டோரி தவிர மீதி படம் எல்லாமே பார்த்துருக்கேன் :)
டாய் ஸ்டோரி மாத்திரம் டோரண்ட் லிங்க்ல சீடர்ஸ் கிடைக்க மாட்டேங்கறாங்க குருவே! :)
@மின்னல்: தேடுங்க.. தேடுங்க! :) :)
@சென்ஷி: நான் பார்க்கறேன் சென்ஷி. ப்ரைவேட் டோரண்ட் சைட்-களில் மெம்பரா இருக்கீங்களா? அங்க நிச்சயம் கிடைக்கும்.
Toy Story (1995)
http://stagevu.com/video/fcvuovlmftlv
Toy Story 2 (1999)
http://stagevu.com/video/fvpawktozdzz
:)
பாலா... எம்ப்பயர் பத்திரிக்கையில இதைப்பற்றி ரொம்ப அழகாக டிசைன் செய்த கட்டுரை வந்திருந்தது. க்ரோனாலஜிகலாக இருந்த அதன் இணைய இணைப்பு இதோ, எம்பெட் செய்ய முடியுமா பாருங்கள்:
http://www.empireonline.com/features/the-story-of-toy-story/default.asp?c=default
@சென்ஷி: இது துரோகம். அதெப்படி டாய் ஸ்டோரியை விட்டுடுறது?இப்போ தான் மீடியா ஃபயர் இருக்கே, டாரெண்ட்டை எல்லாம் தூக்கி குப்பையில கடாசுங்கோ! Mediafire m-HD என்று கூகுளில் தேடினாலே கொட்டும். சாதாரண டவுன்லோட் மேனேஜர்களே போதுமானவை. இன்னும் அபரிமிதமான வேகத்துடன் பம்ப் அடிக்க: IDM.
அணுக வேண்டிய முகவரி:
http://venkiraja.wordpress.com/2008/09/21/pillar-post-i/
பழைய பக்கத்திலிருந்து தோண்டி எடுத்தது!
Thanks venkiraja...just now i came to know about Mediafire. I fed up with these torrents.
ஓ! சாரி நான் தான் கொஞ்சம் லேட் ஆ?
விட்டா எல்லோரோட ஜாதகத்தையே எழுதிடுவிங்க போல இருக்கு..?
really superb..
அழுக்கனாலும் நான் மிக ரசித்தது wall-E
//நேத்து Couples Retreat போக முடியலை. இன்னைக்கு நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.//
ம்ம்ம்ம்ம்ம்ம் பார்க்கலாமே..
சிறப்பான ஆக்கம் நண்பரே.தொடருங்கள்.
எனக்கு பிக்ஸரின்படங்கள் மிகவும் பிடிக்கும்.. டாய் ஸ்டோரியை நிறைய முறை பார்த்து வியந்திருக்கிறேன்.
கலக்கல்..வரவேற்க்கப்பட வேண்டிய தொடர்..
மின்னல் & வெங்கி: லிங்கிற்கும், மீடியா ஃபயர் ஆல்டர் ஆப்ஷனிற்கும், விஜய் & சென்ஷி சார்பாக என் நன்றி.
வெங்கி: லிங்க் ரொம்ப அருமை. அதே ஆர்டரில்தான் டாகுமெண்ட்ரியும் இருந்தது (ஒரே வித்தியாசம் அதில் ஜார்ஜ் லூகஸ் முதலில்). நான் எடுத்திருக்கிற ஆர்டரும், டாகுமெண்ட்ரியை பின்பற்றிதான். முடிஞ்ச வரைக்கும் வரிசையா எழுதப் பார்க்கிறேன்.
ஆனா எம்பட் பண்ண முடியுமான்னு (asp) தெரியலை. அப்புறம் அந்த மீடியா ஃபயர் மேட்டரை தமிழில் எழுதி... பப்ளிஷ் பண்ணினா என்ன தல? :)
@கிஷோர்: லேட்டுதான். பொறுப்பில்லாம போய்ட்டு இருக்கீங்க? ஏன் லேட்? :X
@கனவுகளின் காதலன்: மிக்க நன்றி தல! :)
@வினோத்: :) :) :) தொடரெல்லாம் இல்லீங்க.. ஒரு 10-12 எபிஸோடில் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். :)
ம்.. தொடரா..?? கலக்கு பாலா.
அண்ணாத்த.. இந்த நேரத்துல என்ன பண்ணுறீங்க? தூங்கலையா?
தொடர் விறுவிறுப்பா போகுது அண்ணா... தொடருங்கள்..
எனக்கு பிக்ஸாரின் படங்கள் மிகவும் பிடிக்கும்... ஹீம்ம்ம்... யாருக்கு தான் பிடிக்காது,... :)
பாலா, மின்னல், வெங்கிராஜா...
மூவருக்கும் மிக்க நன்றி. டவுன்லோடு செஞ்சு இன்று இரண்டு பாகத்தையும் பார்த்து விடுகிறேன் :)
நல்ல பதிவு பல செய்திகளை எங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்
கலக்கல் தல...;) ;) ;)
@கனகு: உண்மை. அப்பவும், நம்ம மேல இருக்கற கடுப்பில், எதிர் வோட்டு எல்லாம் விழுது. ஹா. ஹா. ஹா.! :)
@சென்ஷி: சீக்கிரம் பார்த்து முடிங்க தல. ஏன் இவ்வளவு நாள் பார்க்கலைன்னு வருத்தப் பட போறீங்க. அதுமட்டும் நிஜம்.
@வெண்ணிற இரவுகள்: எனக்கு தெரிஞ்ச/படிச்ச/பார்த்ததை நிச்சயம் பகிர்ந்துக்கறேன். :)
@கோபி: :) :) :) நன்றி
nice one & energetic
மிக்க நன்றி அஷோக். :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
உங்களுக்கு ஓட்டு போடுற வயசாகலை... சரி..!!! கமெண்ட் போடறதுக்கு கூடவா???