தலை முழுகும் பிரச்சனை, பிக்ஸாருக்கு. வெற்றியை ருசிக்க முடியாமல் டெக்னீஷியன்களில் பலருக்கு (60%, பெரும்பாலும் லைட்டிங் டீமில் இருந்தவர்கள்), தலைக்கு குளிக்க முடியவில்லை!
இது இன்னாபா புதுக் கதைன்னு கேக்கறீங்களா? RSI கேள்விப் பட்டிருக்கீங்களா? Repetitive
இதெல்லாம் தெரியாமல் இருப்பதே நல்லது. தெரிந்தால்... மனம் அதை ஊதிப் பெரிதாக்கிவிடும். லைட்டிங் டிஸைனர்ஸ் எல்லாம்... “சார்.. எனக்கு சோப்பு போட முடியல... ஷேம்பூ போட முடியல”- என கம்ப்ளெய்ண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
காரணம்... தொடர்ந்து 4 படங்கள் (தூக்கிப் போட்டதையும் சேர்த்து), அதுவும் Toy Story 2-ற்கு இவர்கள் உழைத்த அசுர வேகம்..., RSI-யில் கொண்டு வந்து நிறுத்தியது.
பிக்ஸார் (மே..பி.. மற்ற கம்பெனிகளும்) ஒரு பெரிய பாடம் கற்றுக் கொண்டது அதிலிருந்துதான். இந்த RSI பிரச்சனையிலிருந்து பாதிக்கப் பட்டவர்களை சரிப் படுத்தி, மீட்டுக் கொண்டு வர பெரு முயற்சிகள் எடுக்கப் பட்டன. புதிய ரூல்கள் போடப் பட்டன. அன்றிலிருந்து, தன் அனிமேட்டர்களுக்காக, ஒவ்வொரு படத்திற்கும்... இந்தியக் குடும்பக் கட்டுப்பாட்டைப் போல, குறைந்த பட்ச இடைவெளி விட ஆரம்பித்தது.
இன்னொரு புறம் டிஸ்னியும் - பிக்ஸாரும் மறுபடி முட்டிக் கொண்டது, இந்த முறை ரொம்ப சீரியஸாக!
மற்றவர்களுக்கும் வாய்ப்புத் தரவேண்டுமென நினைத்த பிக்ஸார், இரண்டாம் முறையாக ஜான் இல்லாமல் (ஆனால் வெளி வந்தது, ஜான் இல்லாத முதல் படம்), புதிதாக ஒருவரை களத்தில் இறக்கியது. பீட்டர் டாக்டெர், டாய் ஸ்டோரி 1 & 2 படத்தின் கதைக்கு சொந்தக்காரர்.
Monsters, Inc: மறக்க முடியுமா...? குழந்தைகளை பயமுறுத்தி, அழ வைத்து மின்சாரம் தயாரிக்கும் Monsters, Inc- நிறுவனத்தை, தவறுதலாக உள்ளே நுழையும் ஒரு குழந்தை படுத்தும் பாடும், கடைசியில், குழந்தையின் சிரிப்பை விட.., நமக்கு அதிக ‘கரண்ட்டை’ வேறு எதனால் தர முடியும் என மெசெஜ் சொல்லி.. 2001-ஆம் ஆண்டு, நவம்பரில் (இந்த முறை ரொம்ப முன்னதாகவே), Monsters, Inc வெளிவந்து (தசாவதாரம் மாதிரியே.... ‘என்னோட கதை.. என்னோட கதை’ என 1-2 கேஸ் போடப்பட்டு, ரிலீஸிற்கு முதல் நாள், தள்ளுபடி செய்யப் பட்டதாம்), $525 மில்லியனை குவித்தது .
ஏகப்பட்ட எறும்புகளை பேட்ச்.. பேட்ச்சாக அனிமேட் செய்துவிட்டாலும், இந்த முறை இன்னொரு பிரச்சனை. சல்லிவன் கேரக்டருக்கு, அந்த பொசு.. பொசு முடி வேண்டும். அடுத்து.... ஆயிரக் கணக்கில், ஒரே நேரத்தில்... நகரும் கதவுகளை, அனிமேட் செய்ய வேண்டும். வேறு வழியில்லாமல் திரும்பவும்.. எல்.கே.ஜியில் இருந்தே ஆரம்பித்தார்கள். (Monsters, Inc -ல் திருச்சியை சேர்ந்த இரண்டு பேர் (ஒரு ஆண், ஒரு பெண்), அனிமேட்டர்களாக வேலை செய்ததாக... ஆ.வியில் படித்த நியாபகம் இருக்கிறது).
முன்னதாக... அதே 2001-ஆம் ஆண்டு, DreamWorks-வும்.. தனது முதல் பெரிய ஹிட்டை கொடுத்தது: Shrek -ன் முதல் பாகம். Antz-ன் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டால்... Shrek-ல் DreamWorks மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைக் காட்டியது. வசூ
ஆஸ்கர் விருதுகளில், அந்த ஆண்டு உருவாக்கப் பட்ட ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ என்ற பிரிவில், Monsters, Inc-ஐ பின்னுக்குத் தள்ளி, விருதை பெற்றது. மைக் மையர்ஸ், எட்டி மர்ஃபி, கேமரூன் டயஸ் என அத்தனையும் பெரிய தலைகள். இந்த படத்தில், வெறும் குரலுக்காகவே, ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரை கேமரூன் டய்ஸ் பெற்றார் ($10 மில்லியன்).
பிக்ஸாரும், DreamWorks-உம், அடுத்த கோதாவுக்கு ரெடியானார்கள். இரண்டுக்குமான... நிஜ போட்டி... இந்த ஆண்டில்தான் ஆரம்பித்தது.
பிக்ஸார், Finding Nemo என்ற அனிமேஷன் காவியத்தை உருவாக்க ஆரம்பித்ததும், புலியை பார்த்து இன்னொரு புலி சூடு போட்டுக் கொண்டதும்.......
நாளைக்கு!
Monsters, Inc வெளிவந்த 2001-க்கு முன்னும் பின்னும் (2000 & 2002), பிக்ஸார் இரண்டு குறும்படங்களை வெளியிட்டது. 2000-ல் வெளியான For the Birds, மற்றும் 2001-ல் வெளியான Mike's New Car-ன் யூட்யூப் முழு வீடியோ உங்களுக்கு.
என்னுடைய ஃபேவரைட், For the Birds.., 2001-ற்கான சிறந்த அனிமேஷன் குறும்பட ஆஸ்கர் விருதை, தட்டிச் சென்றது.
[தீபாவளிக்கு ஒபாமா லீவு விட்டிருக்காராமே-ன்னு வினோத் கேட்டதும்.. ‘தீபாவளி என்னைக்குன்னு தேடாம’, ஆசையாசையா... ‘லீவு விட்டிருக்காரா’ன்னு தேடினா.... ஹும்....., என் சார்பா... வினோத்தை துபாய்ல இருந்து நாடு கடத்தினா... என்ன??]
நண்பர்கள் எல்லோருக்கும்... தீபாவளி வாழ்த்து(க்)கள்!!!!!!!!!!

19 தியேட்டர் கமெண்ட்ஸ்:
pixar story series romba arumaiya pogudhu... neraya informations collect panni sollureenga... valthukkal thodarattum indha payanam....
அருமையான தொடர். உலகின் மிக சிறந்த திரைப்படங்களை தயாரித்து வணிகரீதியிலும் பெரும் வெற்றி பெற்றிருக்கும் நிறுவனம் பிக்ஸார். ஒவ்வொரு படமும் தரத்தில் முந்தையதை விஞ்சுவதை பார்த்தால் அடுத்து என்ன செய்வார்கள் என்ற பிரமிப்பு உண்டாகிறது. Finding Nemo, Ratatouille, Wall -E, Up ஆகிய படங்களைப் பற்றி நீங்கள் எழுதவிருப்பதை படிக்க காத்திருக்கிறேன்.
summa express vegathula poguthu na... :)
Pixara-yum.. dreamworksa-yum compare panrathu super :)
ungalukku enathu iniya deepavali nalvazthukkal :)
உங்களுக்கும் அண்ணிக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
முக்கியமாக க்யுட் அஞ்சலிக்கு.. எனது சிறப்பான தீபாவளி நல்வாழ்துக்கள்..
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.. கலக்குங்க..
அப்புறம் வினோத் அ துபாய் விட்டு நாடு கடத்துனா அதை விட சந்தோசம் அவனுக்கு உலகத்துல வேற எதுவும் இல்ல.. அவன "பனிஷ்" பன்ணனும்ன்னு நெனச்சா.. இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு துபாய்ய விட்டு வெளில வராம இருக்க சொல்லலாம்..
\\அப்புறம் வினோத் அ துபாய் விட்டு நாடு கடத்துனா அதை விட சந்தோசம் அவனுக்கு உலகத்துல வேற எதுவும் இல்ல.. அவன "பனிஷ்" பன்ணனும்ன்னு நெனச்சா.. இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு துபாய்ய விட்டு வெளில வராம இருக்க சொல்லலாம்..\\
:))) கிஷோர் கொலைவெறி போல!;)
தீபாவளியை முன்னிட்டு ஏதாச்சும் சிறப்பு விமர்சனம் உண்டா!?
குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தல ;)
தல .. தொடர் அருமையா போயிட்டிருக்கு ... பெரிய எழுத்தாளர் ஆயிட்டிருக்கீங்க ...
Pixar is my favorite animation studio... almost i have watched all their movies/clips... I never watched an animation movie in theater other than Pixar ... :)
Pixar shows constant improvement in their product/work .. கமல் மாதிரி ... :)
நண்பரே உங்களிற்கும்உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். பேர்ட்ஸ் அருமையாக இருந்தது.
வழக்கம்போல சூப்பர்... என்னோட ஆல்டைம் ஃபேவரைட் மான்ஸ்டர்ஸ் இன்க்.. :))))))
அப்பாலிக்கா திருச்சிக்காரங்க அனிமேசன் கம்பெனில ஒர்க் செஞ்சது ஷ்ரெக் படத்துக்காகன்னு நான் ஆவில படிச்சுருக்கேன். பட் அது ஒரே ஒரு பொண்ணுன்னு படிச்சேன். அனிமேசன் லைட்டிங் எஃபெக்ட்காகவும் பெஸ்ட் அகாடமி அவார்ட் கிடைச்சது. அதுல திருச்சிக்காரங்களும் உண்டு.
தீபாவளி வாழ்த்துக்கள் தல!
//பிக்ஸார், Finding Nemo என்ற அனிமேஷன் காவியத்தை உருவாக்க ஆரம்பித்ததும், புலியை பார்த்து இன்னொரு புலி சூடு போட்டுக் கொண்டதும்.......//
ஷார்க் டேல்!? :)))
என்ன தல நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்களா.. உங்களுக்கும் யாரோ ஒருத்தன் மைனஸ் ஓட்டு குத்தியிருக்காங்க போல.. நான் நாளைக்கு ஆபிஸ் போய்த்தான் ஓட்டு போடமுடியும் :)
DIWALI WISHES BALA
@கள்வன்: மிக்க நன்றி... உங்க பாராட்டிற்கு! :)
@பென்: நீங்க ஆவலுடன் எதிர்பார்ப்பதா சொல்லிட்டீங்க. அது இப்ப எனக்கு ப்ரஷர் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. என்னால் முடிந்த வரைக்கும், படித்த கிடைத்த நியூஸை வச்சி எழுதறேன். :)
@கனகு: உங்களுக்கும்.. தீபாவளி வாழ்த்துக்கள்! :)
@கிஷோர்: அப்ப.. அவரை.. இந்தியால இருந்து... நாடு கடத்துவோம்.
@கோபி: எனக்கு தீபாவளி, நாளைக்குன்னு, இதோட கடைசி வரி எழுதற வரைக்கும் தெரியாது. எதுக்கும் ப்ரிப்பேர் ஆகலை. மன்னிக்கனும்! :(
@சம்பத்: ஓவர்.. ஓவர்..! :) :)
பிக்ஸாரை மாற்றுப் பார்வை பார்க்கறவங்களும் இருக்காங்க. முடிஞ்சா.. அதையும் எழுதப் பார்க்கறேன். :)
@க.கா: நன்றி! உங்களுக்கும்.. என் வாழ்த்துக்கள்! :)
@சென்ஷி: அப்படியா? அப்ப நான் அப்பீட்டு ஆய்க்கறேன். எனக்கு அந்த ‘கட்டச் செய்தி’யை, மான்ஸ்டர்ஸ்-ன்னுதான் படிச்ச நியாபம். இருந்தாலும்... என் நியாபகத்தை விட.. என் மறதி மேல் எனக்கு நம்பிக்கை அதிகம். நீங்க சொல்வதை ஏற்கிறேன். :) :)
ஸார்க் டேல் - சரி! :) :)
நெகடிவ் ஓட்டு எல்லாம்.. ரொம்ப மாசமாவே வந்துகிட்டு இருக்கு. எப்பவும் ஒன்னே ஒன்னுதான் விழுது. அவருக்கு என்ன கஷ்டம் கொடுத்தேனோ... யாருக்குத் தெரியும். :(
@விஜய்: நன்றி விஜய். என்ஜாய் பண்ணுங்க! :) :)
தீபாவளி வாழ்த்துக்கள். லீவு? பலகாரம்? வெடி?
ஒபாமா முந்தா நாள் விளக்கேத்தி தீபாவளி கொண்டாடுனாராமே!
நெகடிவ் ஓட்டு எல்லாம்.. ரொம்ப மாசமாவே வந்துகிட்டு இருக்கு. எப்பவும் ஒன்னே ஒன்னுதான் விழுது. அவருக்கு என்ன கஷ்டம் கொடுத்தேனோ... யாருக்குத் தெரியும். ///
உங்களுக்கு நீங்களே குத்துறேன்னு தப்பா குத்திட்டிருக்கீங்களோ!
நிச்சயம் புக் மேட்டர் பாலா.. அடுத்தபகுதிக்காக வெயிட்டிங்க்
Excellent post. Keep continuing this interesting series.
@பப்பு: வாழ்த்துக்கள்...! பலகாரமாவது.. பட்டாசாவது! நம்ம கதையெல்லாம் வாழ்த்து சொல்லுறதோட சரி. நாத்திகர்கள் இதையெல்லாம் கொண்டாட மாட்டங்க, பப்பு! :)
அட.. இந்த மேட்டர் தெரியாம போய்டுச்சே..., இல்லன்னா.. முதல்ல இருந்தே.. நெகடிவ் ஓட்டு போட்டு... பிரபலமாயிருப்பேனே...!
@கேபிள்: நீங்களுமா.. சங்கர்..??? :) :)
@Toto: நன்றி.. நண்பரே! :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!