புது வரவு - நம்பிக்கை

10/18/2009

The Pixar Story (2007) [--08--]



லயன் கிங்கின் வசூல் சாதனையை.. நீமோ முறியத்த ஒரே வருடத்திற்குள் (நீமோ வந்தது, 2003 மே), 2004-ஆம் வருடம் ஏப்ரலில், DreamWorks, தன்... மிகச் சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஏவியது. Shrek 2. டிஸ்னிக்கு Beauty and the Beast, பிக்ஸாருக்கு Finding Nemo வரிசையில்..., Shrek 2,  DreamWorks-ன் மணி மகுடம். டாய் ஸ்டோரி 2 போலவே..., ஒரிஜினலை விட.. பெட்டர் என்ற பெயர் கிடைத்தது.

மிகச் சரியான... பதிலடி.  அன்றிலிருந்து... இந்த நிமிடம் வரை... Shrek 2-ன் வசூலை வேறு எந்த அனிமேஷன் படத்தாலும் நெருங்க முடியவில்லை. $920 மில்லியன் டாலர்கள். அதற்கு முன்... நீமோ.. வைத்திருந்த.. அத்தனை ரெக்கார்டுகளையும்..., முறியடித்த... Shrek 2, Far Far Away-யாக நின்றது/நிற்கிறது.

Finding Nemo, இரண்டாம் இடத்திற்கு தள்ளப் பட்டது அப்பொழுத்தான். வெய்ட்.. வெய்ட்.. இரண்டாம் இடமா? போன பதிவில்.. மூன்றாம் இடம்னுதானே சொல்லியிருந்தேன்.


நீமோவை, மூன்றாவது இடத்திற்கு தள்ளிய படம் அப்பொழுது வரவில்லை என்றாலும், அதன் காரண கர்த்தா ஏற்கனவே... எண்ட்ரி கொடுத்திருந்தார். நாம் கேள்வியே பட்டிருக்காத பெயர்: Blue Sky Studios.

நாம் இப்பொழுது, 2004-ல் இருக்கிறோம். ஸ்ரீராம் நாராயணனின் கொசுவர்த்தியை நாமும் கொஞ்சம் சுற்றி, 2002-ற்கு போனால், அந்த ஆண்டு..., நீமோ வருவதற்கு ஒரு வருடம் முன்பு, இன்னொரு 3டி படம் வெளியாகியிருந்தது. Ice Age.

எந்த விடுமுறைக்கும் சம்பந்தமே இல்லாமல், மார்ச் மாதம் வெளியாகியும், $380 மில்லியன் டாலர்களை வசூலித்து, எல்லோர் புருவங்களையும் உயர்த்த வைத்தது. என்னுடைய ஃபேவரைட் காமெடி ஆக்டர் Ray Romano (Everybody Loves Raymond), படத்தில் வரும் ஹீரோ யானைக்கு குரல் கொடுத்திருப்பார்.

பிக்ஸாரை பற்றி மட்டும் பேசலாம் என ஆரம்பித்த பதிவு, எங்கெங்கோ... ஜம்ப் ஆவது போல் தெரிகிறது. Blue Sky Studios பற்றி, வேண்டுமென்றால்.... வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஆனால்.. கதை BSS-உடன் நிற்கப் போவதில்லை.  இன்னொரு ஆளும்.. ஆட்டத்தில்... சேரப் போகிறார்.


அது 3டி அனிமேஷன் துறையின் பொற்காலம். அனிமேஷன் என்பது, அட்வர்டைஸிங் எஃபெக்டிற்கு மட்டுமல்ல.., இது ஒரு பணங்காய்ச்சி மரத்தின் கீழ் வசிக்கும் தங்க முட்டை வாத்து எனத் தெரிந்து விட்டதும் புற்றீசல் போல.. அங்கும்.. இங்கும்.. பல கம்பெனிகள் தோன்ற ஆரம்பித்தன.

Ice Age, Finding Nemo, Shrek 2, Shark Tale என ஒரே 3டி மயம். நடுவில் வந்த, குட்டி.. குட்டி கம்பெனிகள் எல்லாம்... ஆளுக்கொரு படம் எடுத்து விடுவார்கள் போலிருந்தது. Blue Sky Studios, DreamWorks, Pixar என எல்லோரும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அதே ஆண்டு, வெளிவந்த The Polar Express (2004) -ன் Motion Capture டெக்னாலஜி, அதை 3டி அனிமேஷனுடன் கலக்கலாக உபயோகித்து, வித்தை காட்டியிருந்த, ImageMovers (அந்த படத்தின் இயக்குனர், Robert Zemeckis-ன் நிறுவனம்) வேறு இந்த ஏரியாவில் கால் வைத்துவிடுமோ (அல்ரெடி வச்சாச்சி) என்று வேறு எக்ஸ்ட்ரா பயம் (Polar Express-ஐ IMAX-ல் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது).

ஆனால் நெடுங்கால.. தா(த்)தா.. டிஸ்னியோ... இன்னும்.. 2டி-யை விட்டு வெளியே வருவதாகத் தெரியவில்லை. கூடவே..., கன்னா பின்னாவென படமெடுத்துத் தள்ளி, அதன் பழைய க்வாலிடியையும் மெய்ண்டெய்ன் செய்யாமல்.. ஒரு வித சோர்வில் இந்த 3டி ஆட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான்......


முன்பு போல் இல்லாமல், அனிமேட்டர்களை பேட்ச்.. பேட்சாக பிரித்து, ஒரே சமயத்தில்... ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிக்ஸார்.. தயாரிக்க ஆரம்பித்திருந்தது. இதற்காக தனது மேனேஜ்மெண்ட் முறைகளில் ஏகப் பட்ட மாற்றங்கள் கொண்டு வந்திருந்தது.

இதில் தன் அடுத்தப் படத்துக்கான இயக்குனர் தேர்வில்.. இன்னுமொரு ஆச்சரியம் காட்டியிருந்தது.  இதுவரை.... தங்களுடைய நிறுவனத்திற்குள் மட்டுமே, இயக்குனர்களை கண்டுபிடித்த பிக்ஸார் (ஜான் லேஸஸ்டர், பீட்டர் டாக்டெர், ஆண்ட்ரியு ஸ்டேண்டன்), முதல் முறையாக, பிக்ஸாருக்கு சம்பந்தமில்லாத..., அதுவும் 3டி அனிமேஷனே தெரியாத ஒருவரை தேர்ந்தெடுத்தது. ஆனால்.. அதற்கு முன்.......

மேனேஜ்மெண்ட் பற்றி பேசும்போதே.. இதையும்.. பார்த்துவிடுவோம்.  ஜாப்ஸும், மைக்கெல் ஐஸ்னரும்... தேவர் மகன்(கள்) மாதிரி ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டேதான் இருந்தனர். 50-50 பார்ட்னர்ஷிப் என்று ஆகிவிட்ட பின்னும்.. ஒப்பந்தத்தில்.. ஒரு பிரச்சனை இருந்தது.  அது....

”பிக்ஸாரின்... எந்த கார்ட்டூன் கேரக்டர்களுக்கும், அதன் கதை உரிமையையும், பிக்ஸார்.. உரிமை கொண்டாட முடியாது. அந்த உரிமை டிஸ்னியிடம் இருந்தது. டிஸ்னியை விட்டு பிக்ஸார் பிரிந்து, தனியே.. டாய் ஸ்டோரி 3, எடுக்க வேண்டுமென்றால் அது முடியாது.  ஆளாக்கின பிள்ளைகளை தத்துக் கொடுத்தது மாதிரிதான்.”

ஆனால் 2004 கால கட்டத்தில், ”பிக்ஸார் இல்லையேல் டிஸ்னி இல்லை” என்ற நிலைமை ஏற்கனவே கண்ணுக்கு தெரிந்து கொண்டிருந்த பொழுது.... பிஸினஸ் புலி திரும்பவும் டிஸ்னியை பிறாண்டியது.... இந்த முறை மிக அழுத்தமாக!

அது நாளை!

2002-2005 கால கட்டத்தில்.. ஏகப்பட்ட நிகழ்வுகள்!  ப்ளான் இல்லாமல், தினமும் கொஞ்சம், கொஞ்சம் என பார்த்தது-படித்தது-கேட்டதை, கலந்து கட்டி எழுதுவதால்..., எப்பவோ முடிஞ்சிடும்னு நான் நினைத்த.. கதை..., போய்கிட்டே இருக்கு. முடிந்த வரை ஸ்பீடாக்க முயற்சிக்கிறேன்.
2003-ஆம் ஆண்டு தயாரிக்கப் பட்டு, 2004-ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியிடப் பட்ட, நான்கு நிமிட குறும்படம் Boundin'. பாரதியின் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ - வரிகளுக்கு, பிக்ஸாரின்...... அனிமேஷன் வடிவம்.  பார்க்கத் தவறாதீர்கள்!!!



ஆச்சரியமாக.., மேலுள்ள பாரதியின் வரிகளை..  டைப் செய்துவிட்டு, தமிழிஷை க்ளிக் பண்ணினா..., முதல் பதிவாக... கீழுள்ள பதிவு.. ‘பிரபலத்தில்’! :)





27 தியேட்டர் கமெண்ட்ஸ்:

SurveySan said... October 18, 2009 8:09 PM

interesting details.

boundin was fun.

i didnt like polar express that much.

ஹாலிவுட் பாலா said... October 18, 2009 9:01 PM

@சர்வேசன்: முதன் முதலாய், நான் ஐமேக்ஸில் பார்த்த படம் அதுன்னு நினைக்கிறேன். மோஷன் கேப்ட்சர் பத்தி நான் அப்ப கேள்விப் பட்டதில்லை. அந்த டெக்னாலஜியை.. அவ்வளவு பெரிய ஸ்க்ரீனில்.. பார்த்து வாய் பிளந்தது.. இன்னும் நினைவிருக்கு. :) :)

சுப.தமிழினியன் said... October 18, 2009 9:25 PM

அடப் பாவிங்களா, இந்த அனிமேஷனுக்குத் தானே வர்றான் வர்றான் பூச்சாண்டி பாட்டை போட்டு காமெடி பண்ணாங்க,கொடுமையே கொடுமையே

நெஞ்சு பொறுக்குதில்லையே.......................

KISHORE said... October 18, 2009 9:32 PM
This post has been removed by the author.
KISHORE said... October 18, 2009 9:37 PM

Respected sir,
As i'm ill, i unable to read the "pathivu" fully. so i request you to kind enough to grant me leave for only one day (19.10.09)today.
thanking you. yours obediently,
Kishore.C

ஸ்ஸ்ஸ் எப்பா.. எவ்ளவு டகால்டி விட வேண்டி இருக்கு..

யாசவி said... October 18, 2009 9:45 PM

Really impressive

Pls write in order. Bit difficult to follow.

Looks u r stretching :)

ஹாலிவுட் பாலா said... October 18, 2009 10:18 PM

@சுப.தமிழினியன்: அது என்ன பாட்டுங்க? லிங்க் கிடைக்குமா?

@கிஷோர்: க்ராண்டட். உடம்பை பார்த்துக்கங்க. ஹேங்க் ஓவர் போனதும்..., மெதுவா.. வந்தா போதும்.

@யாசவி: ரொம்ப முயற்சி பண்ணுறேன். எழுதுறது சம்பந்தமா, இன்னொரு விசயம் எழுதும் போது... டைம் லைன் ஜம்ப் ஆகிடுது.

ஏரியாக்குள் மாட்டிகிட்டு வெளிய வரமுடியாம முழிக்கிறது... எனக்கு மட்டுமே தெரியும். :( :)

சென்ஷி said... October 18, 2009 11:33 PM

//2002-2005 கால கட்டத்தில்.. ஏகப்பட்ட நிகழ்வுகள்! ப்ளான் இல்லாமல், தினமும் கொஞ்சம், கொஞ்சம் என பார்த்தது-படித்தது-கேட்டதை, கலந்து கட்டி எழுதுவதால்..., எப்பவோ முடிஞ்சிடும்னு நான் நினைத்த.. கதை..., போய்கிட்டே இருக்கு. முடிந்த வரை ஸ்பீடாக்க முயற்சிக்கிறேன்.//

ஒன்னும் பிரச்சினையில்ல தல.. இதே போல டெய்லி ஒரு பதிவாச்சும் பிக்ஸாரைப் பத்தியும் மத்த ஹாலிவுட் அனிமேசன் கம்பெனிகளைப் பத்தியும் எழுதுங்க..

ஷ்ரெக் 1 ஆஹா ஓஹோன்னு இருந்ததுக்கு முக்கியக் காரணம்னு நான் நினைக்கறது அதுல வந்த பிரபலங்களின் குரல்..

அதிலும் 2ம் பாகத்தில அன்டானியோ, பூனை கேரக்டருக்கு குரல் கொடுத்ததும் புதிய புதிய கேரக்டர்களின் அறிமுகமும் எனக்கு ஷ்ரெக் 2வை மறக்க முடியாத படமாக மாற்றி விட்டது.

நான் இன்னும் போலார் எக்ஸ்பிரஸ் பார்க்கல தல.. அதோட விமர்சனம் எழுதுவீங்களா?!

சென்ஷி said... October 18, 2009 11:39 PM

//மோ வருவதற்கு ஒரு வருடம் முன்பு, இன்னொரு 3டி படம் வெளியாகியிருந்தது. Ice Age.//

:)

அட ஆமாமுல்ல... நீங்க சொன்னதுக்குப் பிறகு இப்ப கூகிள்ல Blue Sky எடுத்த படங்களோட லிஸ்ட் எடுத்துப் பார்த்தேன்.. வார்ரே வாஹ்... அவங்களோட கம்பெனி எடுத்த அனிமேசன் படம் அஞ்சும் பார்த்தாச்சு. :):):)

சென்ஷி said... October 18, 2009 11:40 PM

இப்பத்தான் ஆபிஸ் வந்திருக்கேன். அதனால உடனே குறும்படம் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம் கழிச்சு படம் பார்த்துட்டு குறும்படம் பத்தின கமெண்ட் போடுறேன். பை..பை! :)

வினோத்கெளதம் said... October 19, 2009 1:02 AM

கடவுளே அடுத்த பிறவியில் நான் ஹாலிவுட்(Florida?)பாலாவாகவோ இல்லை சென்ஷியாகவோ பிறக்க வேண்டும்..இங்லிபிக்சு படத்தை ஒன்று விடாமல் பார்க்க வேண்டும்.வரம் தாரயோ..

சென்ஷி said... October 19, 2009 1:22 AM

குறும்படம் பார்த்தாச்சு. நல்ல மெசேஜ்! :)

கோபிநாத் said... October 19, 2009 5:38 AM

\\பிக்ஸாரை பற்றி மட்டும் பேசலாம் என ஆரம்பித்த பதிவு, எங்கெங்கோ\\

உண்மை....ஆனா நல்லாயிருக்கு தல ;))

\\ஏரியாக்குள் மாட்டிகிட்டு வெளிய வரமுடியாம முழிக்கிறது... எனக்கு மட்டுமே தெரியும். \\

உங்க கஷ்டம் பிரியுது தல..அலுவாதிங்கோ..ஒன்னியும் பிரச்சனை இல்லை நாங்க கிறோம் ;)

pappu said... October 19, 2009 7:16 AM

இவ்வளவு மேட்டர் எங்களுக்கு வேணும். பேசிட்டே இருங்க! பக்கத்துல உக்காந்து கதை சொல்லுற மாதிரி நல்லா இருக்கு. :)

கனவுகளின் காதலன் said... October 19, 2009 10:22 AM

நண்பரே, நீளம் பற்றிய கவலையை விட்டுத்தள்ளுங்கள் தொடர்ந்து உங்கள் மனம் திருப்தியாகும் வரை எழுதுங்கள். தொடர் நன்றாக இருக்கிறது.

VIJAY said... October 19, 2009 11:24 AM

சுவராஸ்யமாக போகிறது பாலா. ஆனால் யாசவி சொல்வது போல கொஞ்சம் சிக்கலாக்குவது போல செல்கின்றது.

VIJAY said... October 19, 2009 11:29 AM

தமிழினியன் சொன்ன அந்த பாட்டுக்கு லிங்க் இதோ....
http://www.youtube.com/watch?v=AsOaSUE_NHU

VIJAY said... October 19, 2009 11:33 AM

3டி படம் பற்றி விவரம் மற்றும் UPSCALING PLAYER என புதிதாக ஒன்று வந்துள்ளதாமே...அது பற்றி கொஞ்சம் என ஒரு தொழில்நுட்ப பதிவு போடமுடியுமா?

Nakkiran said... October 19, 2009 12:14 PM

i feel little confused here.. i feel that i am unable to follow the story because of more company/person names and oscilating between the years... I am sorry to say this.. the details are very good and interesting.. but I could not follow.. Do not mistake me...

Sampath said... October 19, 2009 3:21 PM

தல தொடர் நல்லா போயிட்டிருக்கு .. எனக்கு எந்த குழப்பமும் இல்ல ...

முன்னாடியே சொன்ன மாதிரி நான் pixar'ரோட எல்லா படம்/short films பாத்திருக்கேன் .. but my personal favorite short films are Lifted & One man band .. :)

ஹாலிவுட் பாலா said... October 19, 2009 3:22 PM

@சென்ஷி: நீங்க சொன்ன காரணம், பெரியவர்களுக்கு தெரிஞ்சிருக்குமே தவிர, குழந்தைகளுக்கு, யாரா இருந்தா எனக்கென்ன கதைதான். ஆனா, அந்த விஷயம் பெரியவர்களையும் தியேட்டருக்கு இழுத்து வந்தது என்பது உண்மை.

உங்களை மாதிரியே நானும்.. Puss in Boot ரசிகன். அதிலும்... வெளியே தள்ளி கதவை சாத்தின உடனே.. மாறும் அந்த முகம்...! லவ் இட்!

போலார் எக்ஸ்ப்ரஸ் எழுத இனிமே நேரம் இருக்குமா? அடுத்த மாதம் வேற” ப்ளான் இருக்கே! :) :)

@வினோத்: க்ராண்டட்..!!

@கோபி: ஆகட்டுங்க தல! நீங்க சொல்லிட்டீங்க. அப்புறம் இன்னா..! :)

@பப்பு: :) :) மதுரை நக்கல் போக மாட்டேங்குதே..!

@கனவுகளின் காதலன்: புரிதலுக்கு நன்றி! :) முடிஞ்ச வரை குழப்பாமல் போக பார்க்கறேன்.

@விஜய்: போன பதில்தான் விஜய். இனி ஆர்டரா போக முயற்சிக்கிறேன்.

3டி பத்தி எழுதலை. ஆனா Upscale Players பத்தி மார்ச் மாதம் PS3 பதிவுகளில் எழுதியிருக்கேன். விஜய். நீங்க படிச்சீங்களான்னு தெரியலை. ஒருமுறை பார்த்துடுங்க.

@நக்கீரன்: தப்பா எடுக்க ஒன்னுமில்லை தல. இனிமே.. இப்படி நிறைய பெயர் வந்தா.. பதிவை சின்னதாக்க முயற்சி செய்கிறேன்! :)

Sampath said... October 19, 2009 3:47 PM

தல மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் சிரிஸ் பத்தி எழுதுங்க .... எனக்கு ரொம்ப பிடிச்ச படங்க அவை ..

Its not urgent ... Take your time .. :) But I think one post wont be enough to explain the story completely ..

ஹாலிவுட் பாலா said... October 19, 2009 4:37 PM

@சம்பத்: ரொம்ப நாளுக்கு முன்னாடி, இதைப் பத்தி யாரோ எழுத சொன்னாங்க. இதெல்லாம்.. ஒரு பதிவில் ஆகற கதையான்னு விட்டுட்டேன். :)

நிச்சயம்.. முயற்சி செய்யறேன். சம்பத்! :)

KISHORE said... October 19, 2009 9:33 PM

//அது என்ன பாட்டுங்க? லிங்க் கிடைக்குமா?//

"வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே வாரணாசி கோட்டை தாண்டி மைலு வண்டியிலே..."
எங்க ஊரு கேபிள் டிவி ல தினம் இதை போடுவாங்க.. குஷ்பூ, ரோஜா, நடிக்க இருந்த படத்துக்காக போட்ட பாடு அது.. படமும் முடியல.. அவங்க நடிக்கவும் முடியல(நல்ல வேளை ) . பாட்டு நல்லா தான இருக்கு அதுவும் குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்குனு நம்ம ஊரு மக்கள் இந்த அனிமேஷன் படத்தோட சேர்த்து விட்டு ஹிட் ஆக்கிட்டாங்க .. சும்மா சொல்ல கூடாது ஒரிஜினல் படத்த விட இந்த சாங் நல்லாவே இருக்கும்.. http://www.youtube.com/watch?v=AsOaSUE_NHU

Suresh said... October 19, 2009 10:58 PM

Amazing work read all ur posts first ithai than padichen i respect pixar very much, i loved ur writing bala sema ulaipu ungalidam.... thanks it took 1 hr to read all the posts

ஹாலிவுட் பாலா said... October 20, 2009 7:22 AM

@கிஷோர்: கேட்டேன்.. கேட்டேன்... பார்த்தேன் அந்த கொடுமையை. ஆரம்பத்தில்... ரொம்ப அழகா பொருந்தி இருந்தது. அப்புறம்... வேஸ்ட்!! :(

நெஞ்சு பொறுக்குதில்லையேதான்!

@சுரேஷ்: பாராட்டிற்கு நன்றி சுரேஷ். ஒரு மணி நேரம் படிக்கிற அளவுக்கு எழுதிட்டேனா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கேனோ???

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... June 26, 2010 8:49 AM

ice age எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம்... இதற்குப் பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்குன்னு உங்க பதிவப் பாத்ததுக்கு அப்புறம் தான் புரியுது.. நல்ல மெனக்கெட்டு உக்காந்து எழுதுவீங்க போல...

polar express நான் பாத்ததில்லை.. தகவலுக்கு நன்றி..

எனக்கொரு சந்தேகம்.. 3d டிவின்னு சொல்றாங்களே, அதுல இந்த மாறி 3d படங்களை அப்படியே அதே effectல பாக்க முடியுமா....? இனி வருங்காலத்துல நிறைய 3d படங்கள் வரும்போல தோணுது..கண்ணாடி போடணுமா...?

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil