புது வரவு - நம்பிக்கை

10/21/2009

The Pixar Story (2007) [--10--]



முதலாம்/இரண்டாம் உலகப்போர், பானிப்பட் போர் எல்லாம் கேள்விப் பட்டிருக்கோம். முதலாம்/இரண்டாம் “Save Disney” போர், கேள்விப் பட்டதுண்டா?


‘எங்கிருந்தாலும் வாழ்க’ - என்றுதான் இரண்டு சிஇஓ-க்களும் அறிக்கை ராக்கெட் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால்.. கூடவே உள்/வெளி குத்துக்களை இணைத்து வெளியிட்டனர். “பிக்ஸாரின் வெற்றியில்.. டிஸ்னி இனி பங்கேற்காது” என்றார் ஸ்டீவ். “கம்ப்யூட்டர்ல ரெண்டு படத்தை ஆட்டிட்டா, டிஸ்னியே காணாம போய்டுமா?” என்றார் மைக்கெல்.

கூடவே, “டாய் ஸ்டோரி 3 & 4-யையும்.. நாங்களே தயாரிப்போம்” என்று சபதம் வேறு போட்டு, அனிமேஷன் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். அப்பொழுது டிஸ்னியின் நிலைமை அப்படி. டிஸ்னியின் மறுமலர்ச்சிக் காலம் முடிந்து (1999)... அஜித்தை விட அதிகமாகவே ஃப்ளாப் கொடுத்துக் கொண்டேயிருந்த டிஸ்னியின் மதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருந்தது. “நானின்றி நீயில்லை” என்ற எண்ணம் வேறு பிக்ஸாருக்கு வந்துவிட்டது. இதையெல்லாம் சரி செய்ய, ஒரே வழிதான் உண்டு.

“என்னய்யா பெரிய 3டி?! நேத்து முளைச்சதெல்லாம்... 3டி-ங்கறான், 4டி-ங்கறான். இதா பாரு.. நாங்களும் 3டி-ல படமெடுத்துக் எடுத்துக் காட்டுறோம்” - என மைக்கெல் சவால் விட்டார். 

நவம்பரை விட்டால்.. டிஸ்னிக்கு வேறு மாதம் தெரியாதா... 2005 நவம்பரில், டிஸ்னி தனது முதல் CGI படத்தை வெளியிட்டது.


Chicken Little
: தன்னை விட்டால், டிஸ்னிக்கு 3டி நாதி கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால்..., டிஸ்னியின் இந்த, முதல் CGI படம் வெற்றியடையக் கூடாது என்பதுதான், பிக்ஸாரின் நோக்கமாக இருந்திருக்கும்.  ஆனால் 80 வருடங்களுக்கும் மேலாக திரைத் துறையில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும், உலகிலேயே மிகப் பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னிக்கு இது மானப் பிரச்சனை.

யாருக்கு வெற்றி என்று கேட்டால், இருவருக்குமேதான்.  Chicken Little வசூல் ரீதியாக, $300 மில்லியனை சம்பாதித்து ($150 பட்ஜெட், 2டி-க்கே அவ்வளவு செலவு பண்ணுற ஆளுங்க அவங்க), பிக்ஸார் இல்லாமலும் தன்னால் 3டி படம் எடுக்க முடியும் என டிஸ்னி நிரூபித்ததில்.. அதற்கு வெற்றி.

ஆனால், “வெற்றி.. வெற்றி” என டிஸ்னி, பாடிக் கொண்டே எண்ட்ரி கொடுத்தால்..., படம் பார்த்தவர்கள், Chicken-ஐ வறுத்தெடுத்து... 65 ஆக்கிவிட்டனர்.  அந்த அளவில், டிஸ்னியின் பெயர் மீண்டும் நாறியதில், பிக்ஸாருக்கு வெற்றி. இந்த சுற்று 3டி ஆட்டம் ட்ரா!

பிக்ஸார்.. பிள்ளையாருக்கு 50 தேங்காய் உடைத்திருக்கலாம்.


நாம் இன்னும் 2005-ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம். முடிந்த வரை, இதே ஆண்டில் வைத்தே கதை சொல்லப் பார்க்கிறேன். டார்டாய்ஸை சுத்தியே ஆக வேண்டுமென்றால்.... கொசுவர்த்தி அலர்ஜி இருப்பவர்கள் மன்னிக்கவும்.

அதே ஆண்டில் (2005) வெளியான் அனிமேஷன் படங்களில், Robots (Blue Sky Studios) நல்ல வெற்றியையும், Madagascar (DreamWorks) மிகப் பெரிய வெற்றியையும் கண்டன.

ஆனால் வெளிவருதாக சொன்ன பிக்ஸாரின் ஏழாவது படம் மட்டும் வரவில்லை.  பட வெளியீடு, 2005 நவம்பரில் இருந்து, அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு (2006) தள்ளிப் போடப் பட்டது.

முதல் காரணம் முன்னே பார்த்ததுதான். ஜூன் மாதம், ஸ்டீவ் ஜாப்ஸின் ச்சாய்ஸ். இரண்டாவது காரணம், இன்னும் டிஸ்னி-பிக்ஸார் சண்டை ஓயவில்லை. புதிதாக யாரும், படத்தை வினியோகிக்க கிடைக்கவில்லை. மூன்றாவது காரணம், படத்தை எட்டு மாதம் தள்ளி போட்டால், அதற்குள் ஏதாவது நடக்காதா... என்ற எதிர்பார்ப்பு!

அது என்ன அந்த ஏதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பு??

டொய்ங்... டொய்ங்.. டொய்ங்...... கொசுவர்த்திதேங்ங்ங்ங்ங்ங்........!!!!!


இந்தத் தொடர் முழுக்க, ‘மைக்கெல் ஐஸ்னர்’ என்ற பெயரைக் குறிப்பிடும் பொழுதெல்லாம்... அவருக்கு ஒரு வில்லன் தோற்றம்தான் இருந்தது. கிட்டத்தட்ட அவர்தான் கதையின் வில்லன். ஆனால்.. அவர் பிக்ஸாருக்கு மட்டுமல்ல, டிஸ்னிக்கே வில்லனாகி விட்டார்.

வெய்ட்...! போன வரியின் ப்ளூ கலர் டிஸ்னி, நிறுவனத்தின் பெயர் அல்ல.  அது ராய் டிஸ்னி (Roy Disney).  திரு. வால்ட் டிஸ்னி-யின் அண்ணன் மகன். குழப்பம் வராமல் இருக்க, இவரை ‘ராய்’ என அழைக்கலாம்.

ராய், The Walt Disney Company-யின் நீண்டகால போர்ட் மெம்பர். அவருடைய அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து உருவாக்கிய கம்பெனிதான் இது. கம்பெனியின் சிஇஓ பொறுப்பை இவர் ஏற்கவில்லை என்றாலும், கம்பெனிக்கு ஒன்று என்றால், தல சிலிர்த்து விடுவார்.


Save Disney" என்ற பெயரில், இவர் இருமுறை... குட்டி குட்டி போராட்டங்களை கம்பெனி அளவில் நடத்தி, டிஸ்னியின் இரண்டு CEO-க்களை வெளியே அனுப்பியுள்ளார். இவர் வீட்டுக்கு அனுப்பிய முதலாவது CEO....... திரு. வால்ட் டிஸ்னி-யின் மருமகன்.

நீங்கள் முறைப்பது நன்றாகத் தெரிகிறது என்றாலும்... வரலாறு ரொம்ப முக்கியமல்லவா!  இதை மட்டும் பார்த்து விட்டு.. போய்விடலாம்.

முதலாம் “Save Disney” போர்: 1984
1983-ல் வால்ட் டிஸ்னியின் மருமகன் (பெயர் மில்லர்), CEO பொறுப்பை ஏற்க, கம்பெனியையே லவட்டிக் கொள்ள ஒரு கும்பல் முயல ஆரம்பித்தது. உடனே நம்ம ராய், குட்டியாய் ஒரு போராட்டம் + ஸ்டண்ட் எல்லாம் செய்து, இவரை தூக்கிவிட்டு, மைக்கெல் ஐஸ்னரை CEO ஆக்கினார். இது வரைக்கும் இது போதும்.

இரண்டாம் “Save Disney” போர்: 2003
தான் பதவியில் வைத்து அழகு பார்த்த, மைக்கெலை... தானே... மீண்டும் ஒரு போராட்டம் செய்து, துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு, ராய் ஆளானார். மைக்கெலின் நிர்வாகக் குளறுபடிகள், டிஸ்னியின் கம்பெனி நெறிகளில் இருந்து விலகியது, அவரின் பிடிவாதம், டிஸ்னியின் தொடர் தோல்விகள், அது.. இது.. என..........

டிஸ்னியின் மேனேஜ்மெண்ட் குளறுபடிகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால்.... பா.ரா.வின் மாயவலை-யை விட பெரிய தொடராகிவிடும். அதனால்.. இது வரைக்கும் மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும்.

இதற்கு மேல் இதைப் பற்றி தெரிய வேண்டுபவர்கள், James B. Stewart-ன் DisneyWar என்ற புத்தகத்தை தேடிப் பிடித்து படிக்கவும்.



!.......ங்ய்டொ... ங்ய்டொ... ங்ய்டொ

ஹைய்யா.. திரும்பவும் 2005-க்கு வந்துட்டோம். இந்த இரண்டாம் டிஸ்னி உலகப் போர், இரண்டு வருடம் தாக்கு பிடித்து, 2005-ல் முடிவிற்கு வந்தது. மைக்கெல் ஐஸ்னர் தனது CEO பதவியிலிருந்து விலகி, வேலையை விட்டுப் போய்விட்டார்.

இனி நமக்கும் அவருக்கும் தொடர்பில்லை. அவர் ஊதி விட்ட பிக்ஸார் புகை மட்டுமே இன்னும் இருந்தது. ஆனாலும்... அவருடைய பெயரை... ரப்பர் போட்டு... உங்க மெமரியில் இருந்து அழித்துவிடவும். ஆச்சா?????

இங்கே இந்த புதுப் பெயரை... ஆளுக்கு, 100 தடவை... மனசுக்குள்ளயே... சொல்லி நியாபகத்துல வச்சிக்கங்க பார்ப்போம்!!!

Robert "Bob" Iger



ராபர்ட்டின் பெயரை, டிஸ்னியின் CEO தேர்விற்கு, 1999-ல் இருந்தே... பரிந்துரைக்கப் பட்டு வந்தது.  ‘திண்ணை எப்ப காலியாகும்’ என்றுதான் வெய்ட்டிங். ஆனால் ராபர்ட்-டின் பெயர், ராய் (டிஸ்னி)-க்கோ, ஜாப்ஸ்-க்கோ சந்தோஷம் கொடுக்கும் பெயராகவும் தெரியவில்லை.

ஏனெனில், ராபர்ட், இதற்கு முன் இருந்த டிஸ்னி CEO-க்கு (அதான் பேரை ரப்பர் போட்டு அழிச்சிட்டீங்க...இல்ல!), ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தவர். ‘இவராவது தன் குடும்ப நிறுவனத்தின் பெயரை காப்பாற்றுவாரா’ - என்பது ராய் (டிஸ்னி)-யின் கவலை. ‘இந்த குரங்காவது தன் பங்கு ரொட்டியை சரியாக பிய்த்துத் தருமா’ -என்பது ஜாப்ஸின் கவலை.

“வாலு போயி... கத்தி வந்தது” - என்ற நிலைமையில்தான்... இருவரும் இவரை பார்த்துக் கொண்டிருந்தனர். பிக்ஸார், தனது ஏழாவது படத்தின் வெளியீட்டை, 8 மாதம் தள்ளிப் போட்டது.... “இது போல, ஏதாவது நடக்காதா”- என்பதற்குத் தான்.

2006-ஆம் ஆண்டு வந்தது!!!! ஸ்டீவ் ஜாப்ஸ், ஜானையும் - எட்வினையும் (இவரை நினைவிருக்கா... முதல் பகுதியை திரும்ப படிக்கவும்) தன் வீட்டிற்கு அழைத்தார்.

பேசியதை..., நாளை ஒட்டு கேட்போம்!!!!!!


நான், மடகாஸ்கர், படத்தின் கிங் ஜூலியன் கேரக்டரின் ரசிகன். அந்த கேரக்டருக்கு குரல் கொடுத்தது, போராட் & ப்ரூனோ புகழ் சாஷ்சா கோஹென். படத்தில், கிங் ஜூலியன் பேசும் ‘வட இந்திய’ உச்சரிப்பில்.  I LIKE TO MOVE IT... MOVE IT பாடலை கேட்டிருக்கிறீர்களா (படம் பார்க்காதவர்கள்). கேட்டவுடன் பற்றிக் கொள்ளும், இந்தப் பாடலை பாடியதும், சாட்ச்சாத், சாஷ்சா-வேதான். கேட்க நினைப்பவர்களுக்கும், மீண்டும் கேட்க நினைப்பவர்களுக்கும், யூட்யூப் வீடியோ.



Physically Fit.... Physically Fit....
Physically... Physically... Physically...Fit!!

Physically Fit.... Physically Fit....
Physically... Physically... Physically...Fit!!


33 தியேட்டர் கமெண்ட்ஸ்:

PREMKUMAR C said... October 21, 2009 3:19 AM

r u from namakkal?
This is premkumar from namakkal.
premkumar2184@gmail.com

Manian said... October 21, 2009 3:25 AM

கடந்த ஆண்டுகளின் வரலாறு அருமை...!
மேலும் என்ன நடந்தது என அறிய ஆர்வமாய் உள்ளோம்
அடுத்த இடுகையை எதிர்பார்த்து...

சென்ஷி said... October 21, 2009 3:25 AM

எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு அது.... வழக்கமான விறுவிறுப்பு சட்டுன்னு குறைஞ்ச மாதிரி ஃபீல் வந்ததுக்கு காரணம் நிறைய்ய கேரக்டர்ஸை இண்ட்ரோ கொடுத்ததால இருக்கலாம் :-)

மறுக்கா ஒரு தபா படிச்சுட்டு வர்றேன்!

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 3:38 AM

@பிரேம்குமார்: ஆமாங்க. நாமக்கல்தான். :)

@மணியன்: உங்களுக்கு வரலாறு பிடிக்கும் போல! :) கீழ கமெண்ட் போட்டவரை.. தலையில் குட்டுங்க சார்! :) வருகைக்கு நன்றி!

@சென்ஷி: நிறைய கேரக்டர்களா? அண்ணே.. ரெண்டே ரெண்டு பேரு.

பதிவு ரொம்ப பெரிசு! மி ஸோ ஸாரி! :( :(

Busy said... October 21, 2009 3:39 AM

U Rocking !!!

Good One !!!!!!!

Where u frm Collect this Things, Kindly Issue in Ananada Vikatan ..............

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 3:43 AM

@Busy: நன்றி. :)

டிவிடி எக்ஸ்ட்ராஸ், இணையம், DisneyWar புத்தகம், இணையம்... இணையம்... இணையம்.... ரொம்ப முக்கியமா...., முதல் பதிவில் சொன்ன டாகுமெண்ட்ரி.......!!!

The Pixar Story (2007)

pappu said... October 21, 2009 6:40 AM

ஏன் வட இந்திய உச்சரிப்புன்னு குறிப்பா சொல்லுறீங்க?

மடகாஸ்கர் பாக்கனும். 2 பார்ட் எப்படி?

அக்யுசிஷன் பத்தி வருதோன்னு பாத்துட்டு இருந்தேன் முதல் பதிவிலிருந்து. இப்போ தான் ஐஸ்னர் சண்டைக்கு வந்திருக்கீங்க! நடத்துங்கோ!

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 6:55 AM

வட இந்திய உச்சரிப்பு... நடிகர் கார்த்திக் தமிழ் பேசற மாதிரி இருக்கும்.

இங்கே.. இந்திய உச்சரிப்பை கிண்டல் பண்ணுறப்ப, இவங்க.. இந்த மாதிரி பேசித்தான் கிண்டல் பண்ணுவாங்க. நம்முடையது வேறு மாதிரி சவுண்ட் வரும்.

முதல் பாகம் நல்லா இருக்கும். 2-வேஸ்ட். ஆனாலும்.. இரண்டாம் பாகத்தில்.. அந்த பென்குயின்களுக்காக மட்டும் பார்க்கலாம்.

அடுத்தப் பகுதியில்.....!

சுப.தமிழினியன் said... October 21, 2009 7:18 AM

//அஜித்தை விட அதிகமாகவே ஃப்ளாப் கொடுத்துக் கொண்டேயிருந்த டிஸ்னியின் மதிப்பு//

//நாம் இன்னும் 2005-ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம். முடிந்த வரை, இதே ஆண்டில் வைத்தே கதை சொல்லப் பார்க்கிறேன். டார்டாய்ஸை சுத்தியே ஆக வேண்டுமென்றால்.... கொசுவர்த்தி அலர்ஜி இருப்பவர்கள் மன்னிக்கவும்//

// ‘இந்த குரங்காவது தன் பங்கு ரொட்டியை சரியாக பிய்த்துத் தருமா’//

பின்றீங்களே தலைவா.

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 8:40 AM

@சுப.தமிழினியன்: :) :) நன்றி! :)

வினோத்கெளதம் said... October 21, 2009 9:08 AM

வுடுறா..ஆட்டோவ ஃ ஃப்ளோரிடாவுக்கு..

VIJAY said... October 21, 2009 11:18 AM

I LIKE TO MOVE IT...MOVE IT....கேட்டால் தானாக உடம்பு ஆட ஆரம்பித்துவிடும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கல. MADAGASCAR 3வது பாகம் வர வாய்ப்பு இருக்கா?

KISHORE said... October 21, 2009 11:56 AM

//அஜித்தை விட அதிகமாகவே ஃப்ளாப் கொடுத்துக் கொண்டேயிருந்த டிஸ்னியின் மதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருந்தது//

டேய் வினோத் வேணாம் விட்டுடுடா.. தெரியாம சொன்னாலும் உண்மையதான சொன்னாரு பாலா.. அதுக்கு போய் அவர்கிட்ட.. டேய்.. சொல்றேன்ல.. அட போடா.. இப்படி அழுவுறதே உனக்கு வேலையா போச்சி.. என்ன பண்றது ஒழுங்க நடிச்சிக்கிட்டு இருந்தவர. 'தல' 'தல' ன்னு ஏத்தி விட்டு தறுதலை ஆகிடிங்க.. இப்போ அழுது என்ன பண்றது.?

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 12:05 PM

@கிஷோர்: ஹா. ஹா. ஹா.. அதான் மேட்டரா...! வினோத்.. அஜித் ரசிகர்ன்னு இன்னைக்குத் தான் தெரியும். :) :)

வினோத்... உண்மை சொல்லும்போது கோவம் வரும். அதை கண்ட்ரோல் பண்ண பழகிக்கனும். ஹாலிவுட் வரைக்கும் ஆட்டோ விட்டீங்கன்னா.. ரொம்ப செலவு ஆவுமே.., தல கொடுப்பாரா? :)

@விஜய்: 2012-ல் வெளி வருதாம். பார்ட் 2 மாதிரி சொதப்பாம இருந்தாங்கன்னா சரிதான்.

pappu said... October 21, 2009 12:12 PM

டேய் வினோத் வேணாம் விட்டுடுடா.. தெரியாம சொன்னாலும் உண்மையதான சொன்னாரு பாலா.. அதுக்கு போய் அவர்கிட்ட.. டேய்.. சொல்றேன்ல.. அட போடா.. இப்படி அழுவுறதே உனக்கு வேலையா போச்சி.. என்ன பண்றது ஒழுங்க நடிச்சிக்கிட்டு இருந்தவர. 'தல' 'தல' ன்னு ஏத்தி விட்டு தறுதலை ஆகிடிங்க.. இப்போ அழுது என்ன பண்றது.?//

ஹா ஹா.... ஹி ஹி..... ஹு ஹு.... ஹே ஹே....
வினோத் இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?

pappu said... October 21, 2009 12:17 PM

i like to move it ...i like to move it...i like to move it..i like to move it... you like to MOVE IT!

physically fit... physically fit...physically fit...physically fit

காமெடியா இருக்கு!

KISHORE said... October 21, 2009 12:29 PM

only 10 days more..
ஒரு சின்ன விண்ணப்பம் .. 18 + பதிவு நவம்பர் மாசம் 1 ஆம் தேதி இந்திய நேரம் மாலை 4 மணி அல்லது அதற்கு பிறகு வெளியிடுங்கள் .

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 12:44 PM

@பப்பு: புடிச்சிருந்தா.. சரிதான்! :)

@கிஷோர்: எல்லா 18+ பதிவையும் அதே டைமுக்கு ரிலீஸ் பண்ணிடுவோம்.

என்னா.. கடமை உணர்ச்சி உங்களுக்கு. புல்லரிக்குது.

KISHORE said... October 21, 2009 12:54 PM

என்ன பண்றது பாலா.. 31 st மாலை முதல் 1 st மதியம் வரை பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இந்த விண்ணப்பம்..
புல்லரிச்சா சொறிஞ்சி விட்டுட்டு.. பதிவ போடுங்க..

வினோத்கெளதம் said... October 21, 2009 2:42 PM

//டேய் வினோத் வேணாம் விட்டுடுடா.. தெரியாம சொன்னாலும் உண்மையதான சொன்னாரு பாலா.. அதுக்கு போய் அவர்கிட்ட.. டேய்.. சொல்றேன்ல.. அட போடா.. இப்படி அழுவுறதே உனக்கு வேலையா போச்சி.. என்ன பண்றது ஒழுங்க நடிச்சிக்கிட்டு இருந்தவர. 'தல' 'தல' ன்னு ஏத்தி விட்டு தறுதலை ஆகிடிங்க.. இப்போ அழுது என்ன பண்றது.?//

//ஹா ஹா.... ஹி ஹி..... ஹு ஹு.... ஹே ஹே....
வினோத் இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?//

தம்பி எத்தனை தடவை தோத்தாலும் திருப்பி அதே வேகத்தோட "புயலா" வறோம்ல..அதான் மேட்டர்..

வினோத்கெளதம் said... October 21, 2009 2:46 PM

//ஹாலிவுட் வரைக்கும் ஆட்டோ விட்டீங்கன்னா.. ரொம்ப செலவு ஆவுமே.., தல கொடுப்பாரா? //

எவ்வளவு செலவு ஆனாலும் 'தல' கொடுக்கும்..கோலிவுட் 'தல' இல்லை 'ஹாலிவுட்' தல..
வர்றது ஃ ப்ளோரிடா..ங்கறதால.

pappu said... October 21, 2009 3:15 PM

மீசையில மண்ணு ஒட்டலைங்கறதுல வினோத் எவ்வளவு பிடிவாதமா இருக்காரு பாருங்க!

வினோத்கெளதம் said... October 21, 2009 3:34 PM

CAT ku Padikka sonna inga Boat vittukitu irukaa..
poi padingappu..:)

ஹாலிவுட் பாலா said... October 21, 2009 6:59 PM

@கிஷோர்: உத்தரவுங்க! அப்படியே பண்ணிடலாம்.

@வினோத்: உங்க ஆளுகிட்ட பிடிச்சதே அதுதான். எத்தனை தடவை விழுந்தாலும், திரும்ப எழுந்து வருவார்.....

... இன்னொரு ஃப்ளாப் தர்றதுக்கு!

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்! :) தல... வாழ்க.. வாழ்க!

@பப்பு: உங்க.. ஐபியை ப்ளாக் பண்ணனும். படிக்கறதை விட்டுட்டு.. இங்க என்ன பண்ணுறீங்க?

jackiesekar said... October 22, 2009 2:44 AM

பாலா ரொம்ப அழகா எழுதிகிட்டு வரிங்க.. மக்கியமா இதற்க்கான உழைப்புக்கு எனது ராயல் சல்யுட்..
அன்புடன்
ஜாக்கி

கோபிநாத் said... October 22, 2009 5:34 AM

\\பேசியதை..., நாளை ஒட்டு கேட்போம்!!!!!!\\\

ரைட்டு..வெயிட்டிங்...;)

ஆனா இந்த சென்ஷியும் வினோத்தும் எனக்கு முன்னாடி இருக்கனுங்க..;((

KISHORE said... October 22, 2009 7:04 AM

//எவ்வளவு செலவு ஆனாலும் 'தல' கொடுக்கும்..கோலிவுட் 'தல' இல்லை 'ஹாலிவுட்' தல..
வர்றது ஃ ப்ளோரிடா..ங்கறதால.//
ஒரு 'தல' ய தறுதலை ஆக்குனது பத்தாத? இவரயுமா ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... October 22, 2009 7:30 AM

அருமை நண்பர் பாலா ,
உங்கள் தளத்தில் என் தளத்தை படிக்க சொல்லி சுட்டி கொடுத்து
குறிப்பிட்ட பாங்கும் உங்க பெருந்தன்மையும் மிக அருமை,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை!.
மிக்க நன்றிகள் மீண்டும்
கார்த்திக்கேயன்
சார்ஜா

pappu said... October 22, 2009 1:19 PM

என்ன இன்னைக்கு பதிவில்ல? கதை கேக்காம எப்படி தூங்கறது?

navan said... October 22, 2009 5:03 PM

ரொம்ப பிஸி ஆயாச்சா? :)

ஹாலிவுட் பாலா said... October 22, 2009 8:47 PM

@கோபி: ஒட்டு கேட்டதை போட்டாச்சி. கேட்டுதான்னு பார்த்துட்டு சொல்லுங்க! :)

@கிஷோர்: இனிமேதான் ஆக்கனுமா? :)

வினோத்திற்காக, அஜித்தை கிண்டல் செய்வது.. இன்றிலிருந்து தடை செய்யப் படுகிறது! :)

@கார்த்திகேயன்: என்னங்க இது.., இதுக்கெல்லாம்... பெருந்தன்மை. அது இதுன்னு! நானும் உங்களை மாதிரிதாங்க. இப்படியெல்லாம் பேசி..தனியா உட்கார வச்சிடுவீங்க போல இருக்கே! :) :)

@பப்பு: ஸாரி... கொஞ்சூண்டு பிஸி நேத்து.

@நவன்: ஹி.. ஹி.. ஹி..., எப்பவாவதுதானே?! :)

Cable Sankar said... October 23, 2009 1:36 AM

எனக்கு ரொம்பவும்பிடிச்ச பாட்டு.. பாலா

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... June 26, 2010 9:43 AM

எப்படி உங்களுக்கு இவ்வளவு எழுத நேரம் கிடைக்கிறது...? பதிவுல எழுதுறதுக்கு முன்னாடியே, பக்கத்துல ஏதாவது நோட் புக் வெச்சு குறிப்பு எடுத்துக்குவீன்களா...? இல்ல நோட்பாடுல எடுத்து வெச்சுக்குவீகளா...? ஆனா பிரம்மாண்டமான உழைப்பு தெரிகிறது.. நிறைய புத்தகங்கள் வேற படிப்பீக போல.. எப்படி நேரம் கிடைக்குது..? மற்ற பகுதிகளுக்கு வந்து பின்னூட்டமும் போடுரீக... எப்படி.. ஒரே குழப்பமா இருக்கு....

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil