புது வரவு - நம்பிக்கை

10/26/2009

The Pixar Story (2007) [--13--]



ஒரு லட்சத்து அறுபதாயிரம் கார்கள். மொத்தம் 3000 கம்ப்யூட்டர்கள். The Incredibles படத்திற்கு உபயோகித்ததை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்த ப்ராஸஸர்கள். டாய் ஸ்டோரி படங்களின் ப்ராஸஸர்களை விட 1000 மடங்கு திறன். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமையும், ரெண்டரிங் செய்ய, சராசரியாக எடுத்துக் கொள்ளப் பட்ட கால அளவு.............. மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்: 17 மணி நேரமாம். இது நடந்தது கார்ஸ் படத்தில்!


ஒவ்வொரு ஃப்ரேமும்” - என டிஸ்னி சொல்கிறது. ஒரு நொடி காட்சிக்கு 24 ஃப்ரேம்கள் என கணக்கிட்டாலே, தலை சுற்றுகிறது. இந்த ஃப்ரேம் ரேட் பற்றி சந்தேகம் இருப்பவர்கள், முரளிக் கண்ணனின் IMAX: தமிழ் சினிமாவுக்கு சாத்தியமா? பதிவையும், அதில் டாக்டர் ப்ரூனோவின் பின்னூட்டங்களையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

[இந்த ஒவ்வொரு ஃப்ரேம் மேட்டர் கொஞ்சம் ஓவர் என்றாலும், நிச்சயம்.. படத்தின் ரேஸ் காட்சிகளில் மட்டும் பயன்பட்டிருக்கலாம்.  கார்ஸ் படம்..., வேகம்.. வேகம்.. வேகம்... என்ற வார்த்தையை மட்டுமே முதலில் இருந்து கடைசி வரை கடைபிடித்தப் படம். எனவே... குறைந்தது 40-50% படத்திற்கு, இந்த 17 மணிநேர கணக்கு பயன்பட்டிருக்கலாம்.]

ரெண்டரிங் செய்ய.... பதினேழு மணி நேரம் எடுக்கக் காரணம்? லைட்டிங் ரிஃப்லெக்ஸன், நிழல்கள், டெக்ஸ்ஷர் போன்றவை, சரியாக... மிகச் சரியாக.... மிக.. மிகச் சரியாக விழ வேண்டும் என்பதற்காக, ஜான் தேர்ந்தெடுத்த டெக்னிக்கின் பெயர்...


Ray Tracing
:-- அட.. பெயர் புதுசா இருக்கே (அட்லீஸ்ட் எனக்கு) என கொஞ்சம் ‘விக்கி’யதில் புரையேறியதுதான் மிச்சம். பின்நவீனத்துவங்கள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் போல. ஒரு மாதிரி சுமாராக ஒப்பேத்திச் சொல்ல வேண்டுமென்றால்.....

கண்ணாடியில் தெரியும் நம் அதே உருவம்தான், தரையிலும் (நிழலாகத்) தெரிகிறது. ஆனால் வெளிச்சத்தை ஒரு பொருள் தடுக்கும் போதும் ஏற்படுவது: நிழல்; அதே பொருள், அதே ஒளியில் தன் பிம்பத்தை உள்வாங்கி-வெளிவிடும் இன்னொரு பொருளில் தெரிவது: எதிரொளி.

ஒரு இருட்டு அறைக்குள் நிறைய பொருட்கள் உள்ளன. அந்த அறைக்குள் நீங்கள் நுழைந்து, லைட்டை போடுகிறீர்கள். வெளிச்சம் பொருட்களின் மேல் பட்டு எதிரொளிக்க ஆரம்பிக்கிறது. இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம்.

வெளிச்சம் ஒரு பொருளின் மேல் படும்பொழுது, அதிலிருந்து போட்டான்’ என்னும் இயற்பியல் துகள் வெளியாகிறதாம். அது நம் கண்ணின் ரெட்டினா-வை அடையும்போதுதான், நாம் அந்தப் பொருளை பார்க்கிறோமாம். இது ஒரு வகை.

Ray Tracing - இதை, பொருளின் போட்டானிலிருந்து பார்க்காமல், நம் கண்களில் இருந்து (View Point) அந்த பொருளை பார்க்கும் முயற்சி. இந்த எதிரொளி... இன்னொரு பொருள் மேல் பட்டு, இன்னொரு எதிரொளி உருவாகும். வெளிச்சம் படும் பொருளின் மேல்பரப்பின் (surface) பளபளப்பிற்கு ஏற்ற வகையில்தான், திரும்ப வரும் வெளிச்சத்தின் அளவு இருக்கும் இல்லையா?

வெய்ட்ட மினிட்.. ஃபார்.. ஒன் மினிட்...! இன்னும் யாராவது படிச்சிட்டு இருக்கீங்களா...??

 ............ சரி விடுங்க. கிஷோர் இப்பவே எஸ்கேப் ஆகியிருப்பாருன்னு நினைக்கிறேன். மிச்ச மீதி படிக்கறவங்களையாவது காப்பாற்றிக் கொள்வோம்.


ஒளி ஒரு பொருளின் மேல் படும்பொழுது மொத்தம் மூன்று நிகழ்வுகள் நடக்கிறதாம்.

1. Absorption: இது ஒளிக் கதிர்கள், ஒரு பொருளின் மீது படும்போது ஏற்படும் எல்க்ட்ரோ மேக்னடிக் ரேடியஷன் பத்தின மேட்டர். போட்டான், எலக்ட்ரான், அந்தட்ரான்..இந்தட்ரான் என பேசுகிறார்கள்.

2. Reflection: இதுப் பத்தி சொல்லத் தேவையில்லை.

3. Refraction: இது ஆப்டிகல் எஃபெக்ட். முக்கால்வாசி நிறைந்திருக்கும் ஒரு கண்ணாடி டம்ளரில், ஒரு குச்சியை உள்ளே வைத்தால், ஒரு Bending - எஃபெக்ட் கிடைக்குமல்லவா... (சில சமயம் உடைந்த மாதிரியும் தெரியும்) அது!!!

இதையெல்லாம் புரிய மாதிரி எழுதுங்கய்யான்னா... சைன் ஸ்கொயர் தீட்டா பை காஸ் ஸ்கொயர் தீட்டா என, பத்தாம் வகுப்பில் அலர்ஜியக்கிய அதே கணக்கை இங்கேயும் போடுகிறார்கள்.

மேலே நான் விட்ட கதைகளை புரிந்தது என யாரும் பொய் சொல்ல வேண்டாம். நமக்கு புரியாத.. ஒரு விஷயத்தை இன்னொருத்தருக்கு, நமக்கு புரிந்தது போல சொல்வதுதான் பின்நவீனத்துவமாமே..! இது என் பின்நவீனத்துவ முயற்சி. :) :)






[மேல்யுள்ள படம், ஒரு பொருளின் Shadow, Reflection, Refraction, Texture, Lighting என பார்த்துப் பார்த்து செய்த Cars-ன் ஒரு துளி]

எதோ.. ஒரு எழவு ட்ரேசிங். அதுவா முக்கியம்? இந்த Ray Tracing, ரியலிஸ்டிகாக நம் நிஜ உலகின் வெளிச்ச அற்புதங்களை கம்ப்யூட்டர்களில் உருவாக்குகிறதாம். மெட்டல்களின் உலகமான Cars படம், இந்த Reflection-Refraction-Absorption-களை முடிந்தவரை தன் படத்தில் உபயோகப் படுத்தியது.

பிக்ஸாரின் படங்களிலேயே மிக.. மிக அதிக அளவு Ray Tracing Rendering உபயோகப் படுத்தியது... Cars படத்தில்(மட்டும்) தான்.

யோசித்துப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. ஒரு ஃப்ரேமின் அவுட்புட் என்னவென்று தெரிய, ஒரு லைட்டிங் ஆர்டிஸ்ட்... டீ குடிக்க 17 மணிநேரம் வெளியே போக வேண்டுமாம்.


ஸீக்வல்ஸ் பற்றிய பிக்ஸாரின் கொள்கையை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். DreamWorks, Blue Sky Studios, ImageWorks (Sony) எல்லோரும் தன் வெற்றிப் படங்களின் தொடர்ச்சியை எடுத்து பெரும்பாலும் பெயரை கெடுத்துக் கொண்டால், பிக்ஸார் மட்டுமே... இதில் கவனமாக இருந்திருக்கிறது.

ஒரு படம் வெற்றியடைந்தாலே, அதை ஃப்ரான்ச்சைஸ் ஆக்கிவிடும் நிலைமைதான் ஹாலிவுட்டில். டிஸ்னி இதில் கிங். 2-3-4-5 என நம்பர் போட்டு வெளியே விட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஜாப்ஸ் இதை பலமுறை விமர்சித்திருக்கிறார்.

பிக்ஸார், தொடராக எடுத்துள்ள ஒரே படம் டாய் ஸ்டோரி மட்டுமே. இதற்குப் பிறகு, பிக்ஸார் தேர்ந்தெடுத்துள்ள ஒரே படம் கார்ஸ்.  2011-ல் வெளிவரப் போகும் இந்த படத்தின் இயக்குனர் Brad Lewis (ஜான் இல்லை).

இன்னொரு ‘17 மணிநேர ஃப்ரேம் வேலைகள்’  நடந்து கொண்டிருக்கின்றன. பிக்ஸாரின் ‘டீ கடை’,  களைகட்டிக் கொண்டிருக்கும். இந்த 0.5% பாபுலேஷன் என்னென்ன வேலை பண்ண வச்சிருக்காங்க பாருங்க!
இந்த Ray Tracing டெக்னிகை, சினிமாவில் முதன் முதலில் உபயோகப் படுத்தியது Tron (1982) என்ற படத்தில்.


Cars படத்தின் கேரக்டர்களுக்கு உயிர் கொடுக்க, சில நிஜ ரேஸ் கார் ட்ரைவர்களையே உபயோகித்தனர் (மைக்கெல் ஷூமெக்கர் கடைசியில் குரல் கொடுத்திருப்பார்). Doc Hutson -ஆக் வந்த, மறைந்த நடிகர் பால் நியூமேன் கூட ஒரு ரேஸ் பிரியர்/ட்ரைவர்.  நம்ம ‘தலை’ பத்தி, அப்ப அவங்களுக்குத் தெரியலை போல!

Cars
படம், ஜானும் அவரின் 3000 கம்ப்யூட்டர்களும்.. உழைத்த உழைப்பிற்கு சரியாக போகாத படம் என்றே சொல்லலாம்.  படம் $460 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது. ஆனால் இதற்கு முன் வெளியான Finding Nemo & The Incredibles படங்களின் வசூலை விட குறைவுதான். படம் ஆஸ்கருக்கு தேர்வும் ஆனது.

ஆனால்..., ஒரு பென்க்வின், தன் Happy Feet-ட்டால் போட்ட ஆட்டத்தில், அந்த வருட ஆஸ்கர், ஒரு ஆஸ்திரேலிய கம்பெனிக்கு போய்விட்டது. இதே ஆண்டு (2006) DreamWorks- இரண்டு படங்களும், Blue Sky Studios ஒரு படமும் வெளியிட்டன. இதில் Blue Sky Studios மீண்டும் ஒருமுறை பிக்ஸார்/ட்ரீம் வொர்க்ஸிற்கு, தன் போட்டியை, Ice Age: Meltdown (Ice Age படத்தின் இரண்டாம் பாகம்) மூலம் நிரூபித்தது ($650 மில்லியன்).


சராசரியாக.. ஒவ்வொரு அனிமேஷன் படமும் சுமார் நான்கு வருடங்கள் தயாரிப்பில் இருக்கும். வெகுசில படங்கள் மட்டுமே (உதா: டாய் ஸ்டோரி 2) மட்டுமே மிக மிக விரைவாக 2 வருடங்களுக்குள் வெளிவந்துள்ளன. 

அப்படி கார்ஸ் படம் தயாரிப்பி இருக்கும்போது பிக்ஸார் இன்னொரு படம் எடுத்துக் கொண்டிருந்தது. கார்ஸ் படம் 2006 மேமாதம் ரிலீஸ் ஆக, இந்தப் படத்தை அதே வருடம் நவம்பர் (கர்மம்டா சாமி) மாதம் வெளிவர நாள் குறித்தார்கள்.

DreamWorks... கெக்.. கெக்.. கெக்கென... என்று சிரித்துக் கொண்டிருந்தது!

அது நாளை மறுநாள்!



கார்ஸ் படத்தின் தீமில், டிஸ்னி வெளியிட்ட ஆறு நிமிட குறும்படம் Mater And the Ghostlight! உங்களுக்கும் பிடிக்கும்!! Youtube வீடியோ.. உங்களுக்காக.


21 தியேட்டர் கமெண்ட்ஸ்:

pappu said... October 26, 2009 2:41 PM

கார்ஸ் தான் கம்மியான rotten tomatoes வாங்கின பிக்ஸார்னு போட்டிருந்தாங்க. என்னன்னு பாத்தா அதுவுஏ 75 ப்ர்சண்ட் வருது!

pappu said... October 26, 2009 2:44 PM

அம்மாடி... ரொம்ப நாள் கழிச்சு நான் முதல்ல வந்து குப்ப கொட்டிருக்கேன்.

கார்ஸ் வாங்கிய அடிக்கு க்ளைமாக்ஸ் காரணமா இருக்கலாம். ஒரு ஸ்டீரியோடைபிக்கா இருந்தது. மத்தபடி வழக்கம் போல பிக்ஸாரின் ஹீரோ சுய அறிதல்(self realisation) கதை

ILA(@)இளா said... October 26, 2009 3:25 PM

இந்தப் படம் எந்த அளவுக்கு வெற்றியோ. என் வாரிசு கார்ஸ் படத்துல வர்ற காரையும் வாங்கி நிப்பாட்டிட்டாரு. படத்தை அவரோட சேர்ந்து நாங்களும் 100 தடவையாவது பார்த்திருப்போம். என்ன இன்னும் சலிக்காத படம்

ஹாலிவுட் பாலா said... October 26, 2009 3:37 PM

@பப்பு: நானும் இளா கட்சிதான். ராட்டனின் நம்பர் நீங்க சொல்லித்தான் தெரியும். படம் என்னுடைய ஃபேவரிட்.

எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்காதப் படம். வசூல் அளவிலும் நல்ல கலெக்‌ஷன் தான். அப்புறம்... எனக்கு இந்த க்ளைமேக்ஸ்தான் ரொம்ப பிடிச்சிருந்தது.

வெற்றி மட்டும்தான் ஒரே குறிக்கோள்-ன்னு நாம் வளர்த்தும் குழந்தைகளுக்கு, விட்டுக் கொடுத்தல்ன்னு இன்னொன்னை (நாம் சொல்லிக் கொடுக்காத) காட்டியப் படம்.

அது நான் எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ். I love it! :)

அப்புறம் இந்த முதல்ல குப்பை கொட்டுறது எல்லாம்... கொஞ்சம் ஓவர்தானே? :) நிறைய நேரம்.. யாராவது வரமாட்டாங்களான்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கற நம்ம ஏரியாவில்...! :) :) :)

அரசூரான் said... October 26, 2009 5:08 PM

ஹ்ம்ம்...கார்ஸ் பத்தி கலக்கல் செய்திதான். நிமோ படத்த விட இதுல நல்ல விசயங்கள் நிறைய இருந்தது உண்மை, உதாரணத்திற்க்கு ரவுட்-66-ன் அழிந்து வரும் பெருமை, வெற்றி பெற்றால் மட்டுமே நாம் ஹீரோ அல்ல விட்டுக்கொடுத்தாலும் நாம் ஹீரோ (அப்படித்தான் நான் என் பெண்ணுக்கு சொன்னேன்)-ன்னு புரிய வைக்கிற படம்

கோபிநாத் said... October 26, 2009 7:03 PM

யப்பா...இந்த டீ கடையில எல்லாம் நானும் கொஞ்ச காலம் இருந்துயிருக்கேன். ம்ம்ம்..அது ஒரு காலம் ;))

\\நம்ம ‘தலை’ பத்தி, அப்ப அவங்களுக்குத் தெரியலை போல!
\\

வினோத்தை கூல் பண்ணிட்டிங்க போல ;))

sharehunter said... October 26, 2009 8:53 PM

பாலா,

கார்ஸ் படத்தில் க்ளைமாக்ஸ் முடிந்த பிறகு என்டிங் கிரடிட்ஸ் போடும்போது வருகின்ற ஒரு காட்சியை பார்த்திருக்கிறீர்களா?

பிக்ஸரின் மற்ற படங்களை கார்களை வைத்தே எடுத்திருப்பதாக வரும். முதலில் ரசிக்கும் ஒரு பாத்திரம் தீடீரென "டேய் ஒரே கேரக்டரை வைச்சே ஒப்பேத்தியிருக்கான்டா." என அட்டகாசமாக ஒரு கமெண்ட் அடிக்கும். மிகவும் இரசித்த கட்டம் இது.

இது போன்ற படங்களை பற்றி குழந்தைகள் படம் என்ற தவறான அபிப்பிராயம் நிறைய பேருக்கு இருக்கிறது. உங்கள் தொடர் அதனை மாற்றும் என்றே நம்புகிறேன்.

josh

Santhoshkr said... October 26, 2009 9:37 PM

"ஒரு ஃப்ரேமின் அவுட்புட் என்னவென்று தெரிய, ஒரு அனிமேட்டர்... டீ குடிக்க 17 மணிநேரம் வெளியே போக வேண்டுமாம்."

animatorககு இந்த கவலை இல்லை பாலா.. என்னை போல பாவப்பட்ட ஒரு Lighitng Artist தான் வெளியே போக வேண்டும்.

ஹாலிவுட் பாலா said... October 26, 2009 10:13 PM

@அரசூரான்: உண்மை! அதைத் தான் நானும் கத்துகிட்டேன்! இதுக்கு முன்னாடி பின்னூட்டத்தில்.. ‘குழந்தைகள்’-ன்னு சொல்லி ஒப்பேத்திட்டேன்! :)

@கோபி: நெசமாவா? அப்ப ஏரியாக்குள்ளவே ஒரு ஆள் இருந்திருக்கீங்க. நான் விட்ட கதையெல்லாம் படிச்சி சிரிச்சிட்டு இருந்தீங்களா? :)

@ஜாஸ்: பார்த்திருக்கேன்/பார்த்துக் கொண்டே இருக்கேன் தல! சீன் பை சீன் மனப்பாடம்! :)

உண்மைதான். கார்ட்டூன் படங்கள் என்பது குழந்தைகள் படமாதான் நிறைய பேர் நினைக்கிறோம். அட்லீஸ்ட் DreamWorks படங்களையாவது இவங்க பார்க்கலாம். இந்த எண்ணம் மாறினால்... ரொம்ப சந்தோசப் படுவேன்.
----

ஆஹா.. உண்மைதாங்க. அனிமேட்டர்ன்னு எழுதி எழுதி.. அதுவே வந்துடுச்சி. இப்பவே திருத்திடுறேன். சுட்டியதற்கு மிக்க நன்றி. இந்த பதிவில் எதாவது (விளக்கத்தில்) தப்பு இருக்குங்களா தல?

Ray Tracing பத்தியே..., நான் பதிவெழுதும் போதுதான் படிச்சேன். அந்த ரேஞ்சுக்குத்தான் புரிஞ்சது. தப்பிருந்தால் திருத்தவும்! :)

மகா said... October 27, 2009 12:11 AM

அருமையான பதிவு சார்

ஹாலிவுட் பாலா said... October 27, 2009 12:18 AM

பாராட்டிற்கு ரொம்ப நன்றி மகா! :)

D.R.Ashok said... October 27, 2009 1:02 AM

கேபிளும் சென்ஷியும் சொன்னது உண்மை.. உங்கள் ப்ளாக் rocking man, keep it up.

(physics இப்பதான் லைட்டா புரிறமாரி இருக்கு)

வினோத்கெளதம் said... October 27, 2009 3:02 AM

தல தல தான்..சயின்ஸ்ல கூட சும்மா வூடு கட்டி அடிக்குது பாரு..பொளந்து கட்டி இருக்கு போ..

(கொடுமையே இந்த வரப்போற 'அடுத்த மாசத்துக்காக' என்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு..அடுத்த மாசம் மட்டும் எதாவது சொதப்பட்டும்..இந்த மாசத்துல இன்னும் 5 நாளுனு எடுத்தா கூட இன்னும் குறைந்தப்பட்சம் மூனு PIXAR பதிவு இருக்கே..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சுப.தமிழினியன் said... October 27, 2009 3:30 AM

Pixar storyக்குள்ளே physics ஐ வச்சி... கலக்குறீங்க தலைவா

இளவஞ்சி said... October 27, 2009 5:13 AM

அசத்தலா எழுதறீங்க நடை சும்மா பின்னறீங்கன்னு நான் இப்பவும் சொன்னா மட்டும் நீங்க நம்பவா போறீங்க?!

நடத்துங்கப்பு :)

pappu said... October 27, 2009 7:18 AM

நான் என்ன சொன்னேன்னா, கம்மி மார்க்குன்னு சொல்லிட்டு அதுவே 75 இருக்கேன்னு. அதாவது பிக்ஸார் படங்களிலே கம்மி மார்க். படம் நல்லாருக்கு என்பதில் மாற்றுக் கருத்து ஏது?

VIJAY said... October 27, 2009 12:47 PM

சிறந்த விமர்சக ஆராய்ச்சியாளர் 2009 goes to HOLLY BALA.

ஹாலிவுட் பாலா said... October 27, 2009 4:38 PM

@அஷோக்: அவங்க.. என் மேல இருக்கற நம்பிக்கையில்(?) ஓவரா ஹைப் கொடுக்கறாங்க. அதையெல்லாம் நம்பாதீங்க. :) :) :)

@வினோத்: நண்பர்கள் ரெண்டு பேரும்... எப்படிதான் ஒன்னா சேர்ந்தீங்களோ போங்க. 18+-ன்னு இப்படியா..????? :) :)

@சுப.தமிழினியன்: நமக்கு புரியாத மேட்டரை... தெரிஞ்ச மாதிரி விட்டாதானே மதிக்கறாங்க தல?! :)

@இளவஞ்சி: ஹா.. ஹா.. ஹா..! :) நோ வே..! திரும்ப படிச்சி பார்த்தா... இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்னுதான் எப்பவும் தோணுதுங்க தல. அந்த எண்ணம் மாறும் வரை..... மீ ஸ்டில்.. குட்டிப்பையன் தான்! :)

@பப்பு: நானும் அப்படித்தான் நினைச்சேன் பப்பு. ஓவரா உணர்ச்சிவசப் பட்டுடேனோ? :( :(

@விஜய்: சிறந்தை ‘கதைவிடு நிபுணர்’-ன்னு ஒன்னு கொடுங்க. அதுதான் கரெக்டா இருக்கும்! :)

ஊர்சுற்றி said... October 31, 2009 4:34 PM

பல விசயங்கள் படித்துத் தெரி(ளி)ந்துகொண்டேன்.

ஹாலிவுட் பாலா said... October 31, 2009 10:25 PM

நானும்தான் தல! இதை எழுதற வரைக்கும் இதெல்லாம் என்ன கன்றாவின்னே தெரியாது! :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... June 26, 2010 12:01 PM

கார்ஸ் படம் நிஜமாவே பிரமிப்பு தான்.. ஆனால் அதற்குப் பின்னால் இவ்வளவு பெரிய உழைப்பு இருக்கும் என்று தெரியவில்லை.. இது அவதார் படத்தையே மிஞ்சி விடும் போல் இருக்கே..

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil