புது வரவு - நம்பிக்கை

10/28/2009

The Pixar Story (2007) [--14--]




இது மூன்றாவது முறை! டிஸ்னி பிக்ஸாரும், DreamWorks-உம் ஒரே மாதிரியான படங்களை வைத்து மோதிக் கொள்வது.  ஏற்கனவே a bug's life - Antz, பின் Finding Nemo - Shark Tale.  இப்பொழுது மீண்டும் ஒரு முறை. ஆனால்.. இந்த முறை.. யாரை குறை சொல்வது? (DreamWorks-உம் டிஸ்னியும்.. இதுபோல பல முறை ஒரேமாதிரியான படங்களை, ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள்)

2000-ம் ஆண்டில், Chicken Run என்ற ஸ்டாப் மோஷன் அனிமேஷன் (Stop Motion Animation) படத்தை, Aardman Animation என்ற இங்கிலாந்து நிறுவனம் தயாரிக்க, அதை வினியோகித்த DreamWorks, அந்நிறுவனத்துடன் ஒரு மூன்று பட டீலை ஒப்பந்தம் செய்து கொண்டது. 

அதன்படி அவர்கள் அதே ஆண்டு (2000) தயாரிக்க ஆரம்பித்தப் படத்தின் பெயர் Ratropolis. எலிக் கூட்டத்தின் ‘கடற் கொள்ளையர்கள்’ பற்றிய படம் அது. ஆனால்.. பல காரணங்களுக்காக.. படம் தள்ளி வைக்கப்பட்டு... ஒருவழியாக 2003-க்கு மேல் தயாரிப்பில் இறங்கி, 2006- நவம்பரில் வெளி கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார்கள்.

இதே நேரத்தில்தான் (2001), பிக்ஸாரும் தன் எட்டாவது படத்த்தின் வேலையில் இறங்கியது. Geri's Game குறும்படத்தை (நான்காவது பதிவு) இயக்கி, ஆஸ்கர் வாங்கிய,   Jan Pinkava (அவருடைய கதை) இயக்குவதாக அறிவித்து, அதை அதே 2006 நவம்பரில் வெளியிட தயாரானது. படத்தின் பெயர்: Ratatouille.

ஆனால் 2005 நவம்பரில் வரவேண்டிய கார்ஸ், 2006 ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போடப் பட்டதால், Ratatouille-ஐ, 2007 ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போட்டனர்.  போன இரண்டு முறையும், பழி ட்ரீம்வொர்க்ஸ் மேல் விழ, இந்த முறை... ஒரு வருடம் தயாரிப்பில் முந்தியிருந்த DreamWorks-க்கு, இது பிக்ஸாரின் முறை என்பதில் கொண்டாட்டம்.

இரண்டு படங்களின் கேரக்டர் மட்டுமல்லாம, தலைப்பும் ஒரே மாதிரி இருந்தாலும், படத்தலைப்பை பிக்ஸார் மாற்ற மறுக்க, DreamWorks தன் படத்தின் பெயரை Flushed Away என மாற்றிக் கொண்டது.

ஆனால்... இதுபோல மோதும் பொழுது, ஒரேயொரு வித்தியாசம் மட்டும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இருக்கும்.  பிக்ஸாரின் படங்கள் எப்பொழுதும் குழந்தைகளை குறிவைத்தால் (a bug's life, Finding Nemo, Ratatouille), DreamWorks-ன் படக் கதைகள் அடல்ட் வெர்ஸன் (Antz, Shark Tale, Flushed Away) .

Flushed Away... வெகு சுமாரான வெற்றியையே பெற (அமெரிக்காவில் படு மோசம்) ... ரேட்டடூயி மட்டும்...............


சமயலறையை கண்டாலே பயந்து நடுங்கும் எலிகளுக்கு மத்தியில், ஒன்று மட்டும்.. அங்கே சமைக்கவே ஆரம்பித்து, கூடவே, சமையலே தெரியாத ஒரு கார்பேஜ் பாய்-க்கு, சமயலை கற்றுக் கொடுக்கும் ஒரு பாரீஸ் எலியின் கதை.... ரேட்டடூயி.

முதலில் Jan Pinkava இயக்க ஆரம்பித்தாலும், அவரின் கதை போக்கில் ஆர்வமில்லாத பிக்ஸார், The Incredibles படத்தை இயக்கிய Brad Bird-ஐயே இயக்குனராக்கியது.  ப்ராட், சில அனிமேட்டர்களோடு பாரீஸ் நகருக்குச் சென்று (ஐந்து முறை பயணம் செய்தார்களாம்) ஒவ்வொரு ரெஸ்டாரெண்டிலும், பரிமாறுதல், உணவுப் பொருட்களை வரிசைப் படுத்தல், பாரீஸின் டேபிள் மேனர்ஸ் என கற்றுக் கொள்ள, கம்பெனி செலவில் மூக்கை பிடித்தார் (ஸ்டடி!).

பின், பாரீஸின் தெரு அமைப்புகளை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். மொத்தம் 4,500 புகைப்படங்கள் எடுக்கப் பட்டு.. அவை மாடலாக படம் முழுக்க உபயோகப் பட்டுள்ளன. கார்ஸ் படத்திற்கு ஒரிஜினல் கார் மாடல் உபயோகப் பட்டது போலவே, இதில்.. ஒரிஜினல் பாரீஸ் நகர வரைபடங்கள் உபயோகப் படுத்தப் பட்டனவாம்.

இதெல்லாம் ப்ரொடக்‌ஷனின் ஆரம்பக் கட்டம் தான். அனிமேஷன் என உட்காரும் போது... பிக்ஸாரின் அனிமேட்டர்கள் மறுபடியும் எல்கேஜியில் சேர ரெடியானார்கள்.


முதலாவது.... உணவை சமைக்கும் போது ஏற்படும், நிறம் & வேதியல் மாற்றங்கள்.  உதாரணத்திற்கு, குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் வெண்ணைய், தோசை சட்டியில் சூடாகும் போது ஏற்படும் பல வகை மாற்றங்கள், அதிலிருந்து வெளியாகும் ஆவி, நிற மாறுபாடு, கொப்புளங்கள், அல்லது முட்டையை உடைப்பது, அல்லது அது.. அல்லது இது.. என.. ஒவ்வொன்றிற்கும் மாட்டிக் கொண்டு முழித்து... அத்தனையையும் கடந்து வந்தது. கார்ஸுக்கு பெட்ரோல் என்றால், ரேட்டடூலிக்கு.. கொஞ்சம் நல்லெண்ணையை விட்டால் போதும்.

அடுத்து, மற்ற கேரக்ட்டர்களை கூட... பழைய படங்களில் இருந்து எடுத்து போட்டுக் கொள்ளலாம். இந்த எலி மேட்டர் பிக்ஸாருக்கு புதிது. கார்ஸ் படத்துக்கு ‘தெரு பொறுக்கி’யவர்கள், நல்ல வேளை, ரேட்டடூயி படத்திற்கு சாக்கடையில் தூர் வாராமல் விட்டார்கள்.

அதற்கு பதில், எலிகளை செல்லப் பிராணியாக வளர்க்கும் ஒருவரை, அவரின் செல்லப் பிராணிகளோடு பிக்ஸாரின் ஸ்டுடியோவில் ஒரு வருடத்திற்கு மாடல் போல நிற்க வைத்து, எலிகளின் முக அசைவை படித்தார்களாம்.

ரெமி என்ற ஹீரோ எலிக்காக மட்டுமே மொத்தம் 160 புதிய முக அசைவுகள், 270 உணவு வகைகள், சுமாராக பத்து லட்சம் வரை படங்கள் (ஒரு ஃப்ரேமிற்கு சராசரியாக 10 வரைபடங்கள் ரெடியாகுமாம். அதில் ஒன்று தேர்ந்தெடுக்கப் படும்), என பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்த 3 அடி, ஆறு அங்குல ஸ்கின்னர் கேரக்டரின் வித்தியாசமான அங்க அசைவுகள், ஃப்ரெஞ்ச் அக்ஸண்டில் ஆங்கிலம் பேசும்போது வேறு மாதிரி நகரும் வாயசைவுகள், அதற்கேற்ற மேனரிசம், கூடவே.. ஒரு எலி மழையில் நனையும்போது, அதன் உடல்-முடி மாற்றங்கள், ஒரு மனிதன் தண்ணீரில் விழும்போது, அவன் உடை எங்கெல்லாம் உடலில் ஒட்டுகிறது...

...அடுத்து The Incredibles படத்தில் சந்தித்த அதே ‘முடி அனிமேஷன்’ பிரச்சனை. இந்தப் படத்தில் மனித முடி, வெகு க்ளோஸப்பில் காட்டப் படும். அது ரெமியின் சமையலுக்கு, ஒரு ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படும். அனிமேட்டர்கள்.. இந்த ‘முடி’யை ஆட்ட, தங்கள் முடியை பிய்த்துக் கொண்டனர். மீண்டும் சிமுலேசன்.. மீண்டும்.. மீண்டும்... மீண்டும்.....!

இதுவரை எதாவது ஒரு உலகத்தை மட்டுமே காட்டியவர்களுக்கு, இதில் இரண்டு உலகங்களை காட்ட வேண்டிய அவசியம்.  ஒன்று நம்முலகம். அடுத்து எலிகளின் உலகம். எலியின் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால்... மனிதன் ராட்சசன் போலத் தெரிவான்.

அதற்காக மிக கவனமாக, அதன் பார்வையை தவிர்த்து ஸ்கேலிங்கை மனிதர் பக்கமே மாற்றி வைத்தார்கள் (Antz படம்... எறும்பின் பார்வையில் சொல்லப் பட்டிருக்கும்). எலிகள் மட்டுமே காட்சியில் இருக்கும் போது, ஸ்கேல்.. அவர்களுக்கு ஏற்ப குறையும்.

இதையெல்லாம் விடுங்க.  ரெமி எலியின் இதயத் துடிப்பும், மனித கேரக்டர்களின் இதயத் துடிப்பும் கூட, ஓடும்போது ஒரு மாதிரியும், நிற்கும் போது ஒருமாதிரியும் துடிக்குமாம்.  சத்தியமா இதில் ஒன்றைக் கூட, நான் படத்தில் கவனித்ததில்லை. இப்படி... ஒவ்வொரு... இன்ச்சையும் பார்த்து பார்த்து சமைத்தவர்கள்.......

...அனிமேஷன் நேரத்தை மிச்சப் படுத்த, எந்த மனித கேரக்டர்களுக்கும் பாத விரல்களை மட்டும் உருவாக்கவில்லையாம். காரணம் ஏன் என இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்!

ரேட்டடூயின் டெக்னிகல் டீடெய்லுக்கு மட்டுமே.. ஒரு புத்தகம் போடலாம் போல. அத்தனை விசயங்கள் கொட்டுகிறது.  இப்பவே எத்தனை பேர் படிச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியலை! :)
இத்தனை கஷ்டங்களுக்கும், படத்தின் வெற்றியும்.. அது பெற்றுத் தந்த ஐந்து ஆஸ்கர் பரிந்துரைகளும் (அனிமேஷன் படத்திற்கான அப்போதைய ரெக்கார்ட்) ஆறுதல் தர, சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை மீண்டும் ப்ராட் வாங்கினார். 620 மில்லியன், படத்தை, பிக்ஸாரின் கலெக்‌ஷனில் மூன்றாவது இடத்தை பிடித்தது (முதல் இரண்டு இடங்களில் இன்னமும், Finding Nemo & The Incredibles).

ஒவ்வொரு படத்திலும், தன் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாம, தனக்கே சவால் விடும் வகையில், தொழில்நுட்பங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கும், டிஸ்னி பிக்ஸார், தன் ஒன்பதாவது படத்தில்....

.....அந்த டெக்னாலஜியினாலேயே, தனக்கே ‘சூன்யம்’ வைத்துக் கொண்டது!!!

கூடிய விரைவில்!!


19 தியேட்டர் கமெண்ட்ஸ்:

pappu said... October 29, 2009 12:11 AM

நான் தான் முதலா?

pappu said... October 29, 2009 12:14 AM

நான் தான். தலைவா டெக்னிக்கல் கொஞ்சம் ஜாஸ்தி ஆகுது. நான் படிக்கிறேன். எல்லாரும் படிக்கிறாங்களா? இல்ல பாதிலயே 'ஜூப்பர்'னு கமெண்ட் போடுறாங்களான்னு தெரியல.

யோவ், என்னய்யா இது அநியாயமா இருக்கு. இவருக்கு மொக்க பிஸிக்ஸ் சொன்னா கேக்குறீங்க? நாங்க கஷ்டப் பட்டு சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதுனா வந்தவங்க எல்லாம் பெருசா இருக்கு, புரியலன்னு சொல்லுறீங்க?

மகா said... October 29, 2009 12:25 AM

the way u describe the story is too good sir

சென்ஷி said... October 29, 2009 12:29 AM

ரொம்ப விறுவிறுப்பா எழுதிட்டு வந்து எல்லாத்தையும் படிக்கறாங்களான்னு என்ன கேள்வி.. பொறுமையா எல்லா விசயத்தையும் படிச்சுட்டு இருக்கோம்.

நெக்ஸ்ட் பார்ட் நாளைக்கு படிச்சுட முடியும். ஆனா வோட்டு சனிக்கிழமைதான் போடமுடியும்

சுப.தமிழினியன் said... October 29, 2009 2:35 AM

Animation படம்னா அது பப்பாங்க படம்னு ஒரு எகத்தாளம் இருந்துச்சு... ஆனா இத்தனை விஷயம் கவணிச்சு செய்றாங்களா? நான் இவ்ளோ கவணிச்சதே இல்ல

தொடர்ந்து படிக்குறோமான்னு டவுட் எதுக்கு?

ஹாலிவுட் பாலா said... October 29, 2009 3:01 AM

@பப்பு: கம்மி பண்ணிக்கறேன் பப்பு. எழுதும் போது.. இந்த மாதிரி எந்த டீடெய்லையும் விட்டுட்டு எழுத முடியலை.

எல்லாம் எழுதினா.. திகட்டவும் செய்யுது. என்ன பண்ண? :(

@மகா: நன்றி மகா! ஆனா.. too-ன்னு நீங்க சொல்லுறது.. வேற மாதிரி சவுண்ட் வருதே?! :) :)

@சென்ஷி & சுப. தமிழினியன்:

நான் சொல்ல வந்தது என்னன்ன... எல்லாம் எழுதின பின்னாடி பார்த்தா.. பதிவு ரொம்ம்ம்ப.. பெரிசா இருந்தது.

அதைத்தான் சொன்னேன்! நெக்ஸ்ட் பார்ட்டே சனிக்கிழமைதான் போட முடியும்னு நினைக்கிறேன்.

நாளைக்கு Saw அப்புறம் Astro Boy அப்புறம்.. விஜய்-க்கு த்ரில்லர் படங்கள்! :) :)

மீ.. ஸோ.. பிஸி!

Busy said... October 29, 2009 3:18 AM

Good Job Bala !!!!!!!!!!!

Can u Give the List of Pixar Films (Including Short Films)

Where I can Download ?

Tnx

ஹாலிவுட் பாலா said... October 29, 2009 3:25 AM

இது ஷார்ட் ஃப்லிம் லிஸ்ட்

The Adventures of André and Wally B
Luxo Jr
Red's Dream
Tin Toy
Knick Knack
Geri's Game
For the Birds
Mike's New Car
Boundin
Jack-Jack Attack
One Man Band
Mater and the Ghostlight
Lifted
Your Friend the Rat
Presto
BURN-E
Partly Cloudy
Dug's Special Mission

இது எல்லாமே.. youtube-ல் இருக்கு.


படங்கள்னு பார்த்தீங்கன்னா. இதுவரை சொன்னது இல்லாம.. Wall-E & Up மட்டும் இருக்கு.

இந்த எல்லா படங்களையும்.. isohunt.com மூலம் ட்டோரண்ட் டவுலோட் பண்ணலாம். பெரும்பாலான படங்கள் megaupload, mediafire மாதிரி சைட்களில் கிடைக்கும் போல.

Monks said... October 29, 2009 3:29 AM

//Animation படம்னா அது பப்பாங்க படம்னு ஒரு எகத்தாளம் இருந்துச்சு... ஆனா இத்தனை விஷயம் கவணிச்சு செய்றாங்களா? நான் இவ்ளோ கவணிச்சதே இல்ல //
அதே அதே !
நடிக நடிகைகளுக்குக் கொடுக்கப்படும்
கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்று
நினைத்தேன். 'அம்மாடி', இந்தத் தொடர் படித்த
பின்புதான் அனிமேஷன் எவ்வளவு நுணுக்கம் மற்றும்
சிரமம் என்று புரிகிறது. Well done Bala

Busy said... October 29, 2009 4:12 AM

Thanks Bala !!

How thy Made the Animation Film, But Here Easily Dubbed in Tamil Language in Worst, if u see Finding Nemo in Tamil, they Killed the Film (But its Funny !)

Again Tnx Bala

ஹாலிவுட் பாலா said... October 29, 2009 9:50 AM

@Monks: நடிகர்கள் சம்பளம் மிச்சங்கறது எல்லாம் சும்மா. படம் எடுப்பதிலேயே கடினம் அனிமேஷன் படங்க்ள்தான். சுமாராக 4 வருடங்கள் தேவைப் படும். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டும் இப்பொழுதெல்லாம் 150 மில்லியன் ஆகுது.

பெரிய நடிகர்கள் படமே..இதை விட கம்மியாதான் ஆகும்.

@Busy: அதைப் பத்தியும் படிச்சேன் நண்பா. நிச்சயம் எழுத முயற்சிக்கிறேன். :)

வினோத்கெளதம் said... October 29, 2009 10:35 AM

கடவுளே..எல்லாரும் நல்லபடியா இருக்கணும்..

Sampath said... October 29, 2009 10:42 AM

நான் பாத்த முதல் அனிமேஷன் படம் .... it impressed me a lot ..... இதுக்கப்புறம் தான் மத்த அனிமேஷன் படங்களை பாக்க ஆரம்பிச்சேன் .......

ஹாலிவுட் பாலா said... October 29, 2009 11:57 AM

@வினோத்: குசும்புதானே! :)

@சம்பத்: வாவ்.. என்ன சம்பத் சொல்லுறீங்க.. 2007 வரை..ஒரு அனிமேஷன் படம் கூட பார்த்தது இல்லையா?

kanagu said... October 29, 2009 12:17 PM

nalla padhivu anna... :)

suniyam vacha kadhaya padikka aavalaaga ullen.. :)

Sampath said... October 29, 2009 4:05 PM

ஆமாங்க ... 2007'ல தான் நான் முதல் அனிமேஷன் படம் பாத்தேன் .... ஆனா இப்போ நீங்க சொல்லிருக்க படங்கள்ல ஒரு சிலதை தவிர மத்த எல்லா அனிமேஷன் படங்களையும் பாத்திருக்கேன் .... இதுல எல்லா pixar படங்களையும் ஒரு தடவைக்கு மேல பாத்திருக்கேன் ..... :)

கோபிநாத் said... October 29, 2009 7:09 PM

ரைட்டு...ஆனா சனிக்கிழமை தானா!! அடுத்த பகுதி ;(

ஹாலிவுட் பாலா said... October 30, 2009 1:54 PM

@கனகு: நீங்களாவது! :) :( :)

சூன்யம் வச்சாச்சி..! படிச்சிட்டு சொல்லுங்க!

@சம்பத்: இங்கே சொல்லியிருக்கறது எல்லாம் அமெரிக்கப் படங்கள்தான் சம்பத். இன்னும்.. நிறைய படங்கள்.. வெளிவந்திருக்கு. இதில் சொல்லாதப் படங்களும்.. இன்னும் நிறைய இருக்கு.

தேடிப்பிடிங்க! :)

@கோபி: இப்பவே போட்டாச்சி! இன்னும் 2 பதிவில் முடிஞ்சிடும்(னு நினைக்கிறேன்)! :)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... June 26, 2010 12:38 PM

//ரேட்டடூயின் டெக்னிகல் டீடெய்லுக்கு மட்டுமே.. ஒரு புத்தகம் போடலாம் போல. அத்தனை விசயங்கள் கொட்டுகிறது. இப்பவே எத்தனை பேர் படிச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியலை! :)//

உங்களுக்கு எதுக்கு இந்த கவலை தலைவா...?

தொழில்நுட்ப விஷயங்களை புட்டு புட்டு வேக்கிரீன்களே... நீங்க என்ன படிச்சு இருக்கீங்க...? என்ன வேலை பாக்குரீக..? கடைசியில ஒரு த்ரில் வெச்சு முடிச்சிடீங்க.. சரி எனக்கொரு சந்தேகம்.. பிக்சார் இவ்வளவு மெனக்கெட்டு தயாரிக்கிறது என்றால், மற்ற நிறுவனங்கள் எளிதில் அதை செய்து விட முடியாதே..? அவர்களும் இதே போல் மெனக்கெட்டு இருப்பார்கள் தானே..? இது ஒரு சின்ன சந்தேகம் தான்.. ஏனென்றால், பிக்சாரை ஹீரோவாக உருவகப் படுத்திக் கொண்டதால், மற்ற கம்பெனிகள் எல்லாம் நோகாமல் நோம்பி கும்பிடுவதைப் போல் ஒரு பிம்பம் தோன்றுகிறது... அப்படி கும்பிட்டால் அதைக் குரிப்பிடுங்களேன்... இல்லை என்றால், dreamworks, பற்றியும் கூட நீங்கள் ஒரு பதிவு போடலாம்..

நன்றி..(இது ரொம்ப பழைய பதிவு.. என்னுடைய இந்த பின்னூட்டங்களை நீங்க படிக்கிரீகளா இல்லையான்னு எனக்குத் தெரியல..)

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil