10/31/2009

The Pixar Story (2007) [--17--]


#1: வேற வழியே இல்லை. அந்த ஆளு ரத்தம் பார்த்தே ஆகனும். அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை பண்ணிடுங்க.
#2: நெசமாத்தான் சொல்லுறீங்களா? இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே!
#1: எதுக்குமே ஒரு ஆரம்பம் வேணுமில்ல மாமு?
#2: இதை மத்தவங்க எப்படி எடுத்துக்குவாங்களோ? பெரியவரு இதுக்கு ஒத்துக்குவாரா?
#1: கஷ்டம்தான். ஆனா நமக்கு வேற வழியிருக்கா சொல்லுங்க? வேணும்னா.. ஆக்ஸிடண்ட் மாதிரி ஏற்பாடு பண்ணிடலாம்.
#2: இருந்தாலும்.......
#1: இல்லைங்க! முடிவு பண்ணிட்டேன். அந்த கார்ல் தாத்தா கேரக்டர், கன்ஸ்டரக்‌ஷன் ஆளை அடிக்கும் போது, சிராய்த்த மாறி ரொம்ப லேசா ரத்தம் காட்டித்தான் ஆகனும். ப்ரொடக்‌ஷன் டீம்ல சொல்லிடுங்க.
#2: ????????????????
#1: !!!!!!!!!!!!!!!!!!!!!!

=====================

#2: அப்ப ரத்தக் களறி-ன்னு, அவன் --15--வது பதிவில் பில்டப் கொடுத்தது?
#1: இன்னுமாய்யா... அவன இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு?
மேல் சொன்ன டயலாகில் #1 - Monsters, Inc படத்தின் இயக்குனர் பீட்(டர்) டாக்டெர்! #2 யாராக வேணும்னாலும் இருக்கலாம்! [என்னங்க இது... சூன்யம்-ன்னு சொன்னாலும்.. நம்பறீங்க! ரத்தக் களறின்னு சொன்னாலும் நம்பறீங்க! இம்புட்டு அப்பாவியா நீங்கெல்லாம்?! பில்டப் கொடுக்கறதுன்னு ஆய்டுச்சி...! அதான் சரியா கொடுக்கலாமேன்னு ரத்தக் களறி-ன்னு சொன்னேன்! நீங்களும் என்னை மாதிரியே ஒரு குழந்தையா இருந்து கீழேயிருக்கற படத்தைப் பாருங்க!!! இது ரத்தக் களறிதானே? ஹி.. ஹி.. ஹி! ]

Up: பிக்ஸாரின் பத்தாவது படம். படத்தின் விமர்சனம் இந்தப் பதிவில் உள்ளது (விஜய் நினைவிருக்கா? அன்னைல இருந்து.. என்கிட்ட காமெடிப் படங்கள் லிஸ்ட் கேட்டுகிட்டு இருக்கீங்க! :)). அதனால.. நேரடியாக டெக்னிகல் மேட்டருக்கு போய்விடலாம்.


முதலில் லோகேஷன்!  ரேட்டடூயி-க்கு பாரீஸ் சென்று மூக்கை பிடித்த அனிமேட்டர்களும், டிஸைனர்களும், இந்த முறை தென் அமெரிக்க நாடுகளுக்கு கிளம்பி, நாக்கை சப்புக் கொட்டினால், அங்கு தேள் கொட்டியது. வெனிசுலா, கயானா, பெரு, ப்ரெஸில் நாடுகளின் ஏரியாவில், இதுவரை... மொத்தமே சுமார் பத்துபேர் மட்டுமே... ஏறியுள்ள மலையுச்சிகளில் எல்லாம்..., பிக்ஸாரின்.. டிஸைனர் டீம் முக்கி.. முக்கி ஏறியுள்ளனர்.

காடு.. மலை... கடல் எல்லாம் கடந்து, மூன்று நாட்கள் பயணம் (நீர்-நிலம்-ஆகாயம்) செய்து, பல மலையுச்சிகளை அடைந்து, புகைப் படங்கள், வீடியோக்கள், மற்றும் பிக்ஸாரின் குல வழக்கமான.. “குப்பை பொறுக்குதல்” எல்லாம் முடித்து, திரும்ப ஊருக்கு வந்தால்...,
படத்தில் காட்டப் படும் அருவிக்காக, இவர்கள் உலகின் மிக உயரமான ஏஞ்சல் ஃபால்ஸில் (2648 அடிகள்) ஏறியுள்ளனர். ஆனால்.. படத்தின் டிஸைனில்... அந்த அருவியின் உயரம் 9000 அடிகளுக்கும் மேல்!
................... இந்த படைப்பாளிகளை நம்மால் நிச்சயம் புரிந்துகொள்ளவே முடியாது! ஜானின் விருப்பத்தில் Cars படத்தில், வரும் அத்தனை கார்களும்.. நிஜக் காரை.. 100% பிரதிபலிக்க, பீட் இப்படி சொல்லியிருக்கிறார். “கேரக்டர்கள் அத்தனையும்... நிஜ மக்களின் caricature வடிவத்தில் (கேலிச்சித்தரத்தின் ஒருவகை. கீழ் படத்தில் ஜார்ஜ் க்ளூனியின் படம் போல) இருக்கனும். அது ஒரிஜினலாவும் இருக்கக் கூடாது. கார்ட்டூன் மாதிரியும் இருக்கக் கூடாது”.

மாதக் கணக்காக வரைந்து.. வரைந்து.. வரைந்துதான்...., படத்தில் பார்க்கும் அத்தனை கேரக்டர்களையும் (பலூன்கள், மனிதர்கள், நாய்கள், ஸ்னைஃப் பறவை, அருவி, மரம், செடி,  கொடி..) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

நீங்கள் கவனித்திருந்தால் (சத்தியமா.. நானில்லை), படத்தில் வரும் அத்தனை மனித கேரக்டர்களுக்கும், காதிலோ மூக்கிலோ ஓட்டை இருக்காது. நார்மல் சைஸ் கை-கால்களில் இருந்து... பெரிதாகவோ.. சிறிதாகவோதான் வரையப் பட்டிருக்கும். எனக்கு கார்ல் தாத்தாவும், ரஸ்ஸல் பையனும் மட்டுமே கண்ணுகுத் தெரிந்தார்கள், கார்ட்டூனாக அல்ல!

பிக்ஸாரின் டிஸைனர்கள் & அனிமேட்டர்கள் எல்லோரும் கோரஸாக... சொல்வது... என்னவென்றால்.. இதுவரை பிக்ஸார் உருவாக்கிய... கேரக்டர்களிலேயே.. மிகவும் கடினமான கேரக்டர், கார்ல் தாத்தா கேரக்டராம்! இரண்டு பக்கம் எழுதும் மேட்டருக்கு அவர் முகம்-உடலில்.. வேலை செய்துள்ளார்கள். நமக்கு ‘கடினமான’ வார்த்தை மட்டும் போதும்.

ரஸ்ஸலுக்கு கழுத்தே கிடையாதாம்! இப்படி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு கதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். என் கேள்வியெல்லாம்... ‘இந்த எழவை எல்லாம் எவன் கவனிச்சான்? நான் எப்பவும் போனமா.. படத்தை பார்த்தமா... அத தெரிஞ்ச மாதிரி.. உங்க கிட்ட கத உட்டமா’-ன்னுதான் இன்னைக்கு வரைக்கும் பண்ணிகிட்டு இருக்கேன். 

இவர்கள்.. யாருக்காக.. இத்தனை சிரமப் படவேண்டும்?? எல்லி என்ற கார்ல் தாத்தாவின் மனைவி கேரக்டர் வரும்வரை.. படம் 50mm கேமராவில் (சாஃப்ட்வேர்தான்) சூட் செய்யப் பட்டதாம். பின் எல்லி வரும்போதெல்லாம்... ‘மெஜந்தா’ கலர்கள் அதிகமாகியதாம். எல்லி இறந்த பின்னும்.. அவளின் நினைவை கார்லுக்கு கொடுக்க, படமுழுக்க ‘மெஜந்தா’ கலர் தூவப் பட்டதாம்.

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க..., படம் பார்க்கும் நமக்கும், குழந்தைகளுக்கும் 50mm, மெஜந்தா எல்லாம் எங்காவது தெரிந்ததா?
எல்லி கேரக்டருக்கு குரல் தந்தது, படத்தின் இயக்குனர் பீட்டர் டாக்டெரின் மகள், எல்லி டாக்டெர்.
கீழேயிருப்பதையும் படித்துப் பாருங்கள். அனிமேஷன் படம்தானே என உதாசீனப் படுத்தும் பெரும்பாலான மக்களும், அனிமேஷன் படமெடுத்தால் கால்ஷீட், கைஷீட், வெளிநாட்டில் படம்பிடிக்கும் செலவை குறைக்கலாம் என நினைக்கும் நமக்கும்... இவர்களின் டெடிகேஷன் என்னவென தெரியும்.


சரியான எண்ணிக்கை வேண்டுமென்றால், 20,622 பலூன்கள், அந்த வீட்டை தூக்கத் தேவைப் பட்டது (உண்மையாக ஒரு வீட்டைத் தூக்க 30 மில்லியன் பலூன்கள் தேவைப்படுமாம்). காட்சியின் கோணத்திற்கு ஏற்ப, பலூன்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திலிருந்து, இருபதாயிரம் வரைக்கும் காட்சியில் தெரியும்.

என்ன பிரச்சனையிருக்கப் போகிறது?  மற்ற படங்களின் கேரக்டர்கள் தனித்தனியே... அனிமேட் செய்யப் பட்டால், இதில் இந்த 20,622 கேரக்டர்களும்(!) ஒன்றுக் கொன்று தொடர்புடையவை.  ஒரு பலூன் ஆடினால்.., அதன் எஃபெக்ட், 20,621-க்கும் போய் சேர வேண்டும்.  அத்தோடு... அவைகளோடு இணைந்த, 20,622 சிக்கல் விழுந்த நூல்களும், அதற்கேற்ப அசைய வேண்டும். அனிமேட்டர்கள் இதை தனித்தனியே.. ஆட்டிக் கொண்டிருந்தால், இந்தியா வல்லரசாகும் ஆண்டில்தான் படம் வெளிவந்திருக்கும்.

பின்? வேறு என்ன..? முன்பு பார்த்த சிமுலேஷன் முறைதான்! படத்திற்கு வேலை செய்த எழுபது அனிமேட்டர்களோடு, பிக்ஸாரின் நெட்வொர்க் கணிப்பொறிகளும் சேர்ந்து.. பலூன்களை ஆட்ட.... பிக்ஸாரின் கொடி பறந்தது.


மயிருக்கும், பிக்ஸாருக்கும் அப்படி என்னப் பிரச்சனையோ? The Incredibles படத்திலிருந்து, இந்த முடிப் பிரச்சனை முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை அது மனித முடியல்ல. கெவின் கேரக்ட்டரில் வரும்.. அந்த நெருப்புமயில்வாத்துக்கோழி டைப் பறவையின் சிறகு.  இதுவரை பிக்ஸார்... சிறகுகளை உருவாக்கியது இல்லை (For the Birds குறும்படத்தின் சிறகுகள் சிமுலேஷன் டைப் இல்லை). பிக்ஸார் அனிமேட்டர்கள், அவர்களின் மற்ற குல வழக்கங்களான...., ‘சுவற்றில் முட்டிக் கொள்ளுதல்’, ‘முடியை பிய்த்துக் கொள்ளுதல்’ போன்றவற்றை ஆரம்பித்தனர்.

Up, படம் பிக்ஸாருக்கு இன்னொரு ‘முதல்’.  இது பிக்ஸாரின் முதல் 3டி டிஸ்ப்ளே படம். விமர்சனத்திலேயே என்னுடைய டெக்னாலஜி அறிவை பீத்திக் கொண்டுவிட்டதால்.. நோ காமெண்ட்ஸ். $600 மில்லியனை தாண்டிய நான்காவது பிக்ஸார் படம் Up (முதல் மூன்று: Finding Nemo, The Incredibles, Ratatouille).


இந்த ஆண்டு (2009) வெளிவந்த DreamWorks-ன் Monsters VS Aliens, Up-ஐ விட $240 மில்லியன் குறைவாகவே சம்பாதித்தது. ஆனால்..., இவர்கள் இருவரின் (பிக்ஸார், DreamWorks) போட்டியான Blue Sky Studios விஸ்வரூபம் எடுத்தது.

Ice Age-ன் மூன்றாவது பாகமான, Ice Age: Dawn of the Dinosaurs படம், அதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த பிக்ஸாரின் Finding Nemo-வை பின்னுக்குத் தள்ளிவிட்டு, $880 மில்லியன் சம்பாதித்துள்ளது (புது வேலை கிடைத்த பிஸியில்.. இந்தப் படத்தைப் பத்தி எழுத முடியாமலேயே போய்டுச்சி!).


எல்லாம் சரி...... இத்தனை பதிவுகளில்.. இத்தனை அனிமேஷன் படங்களை பார்த்து முடித்து விட்டோம். இவர்கள் பட்ட/படும் கஷ்டங்களை பார்த்து விட்டோம். ஒரு அனிமேஷன் படம் எத்தனை வருடங்கள், எவ்வளவு உழைப்பு என அங்கங்கே பார்த்தோம். இந்த அனிமேஷன் படங்கள் எவ்வாறு உருவாகின்றன என யோசித்திருக்கிறோமா? ஒரு படத்தை உருவாக்க பிக்ஸாரின் வழிமுறைகள் என்ன தெரிந்து கொள்ளலாமா?

அவை, நான்(ம்) நினைத்தது போல... நிச்சயமாக இல்லை!

அது நாளை(யோடு முற்றும்) !!!!!!!!




Up படத்தின் தியேட்டர் ரிலீஸோடு வெளிவந்த பிக்ஸாரின் குறும்படம், Partly Cloudy. மிக அருமையான ஐடியா + அனிமேஷன் நிறைந்தது. ஆரம்பக் காட்சிகள், ஒரு 20 வருடங்கள் முன்பு, இந்தியத் திரையரங்குகளில் காட்டப் பட்ட ‘குடும்பக் கட்டுப்பாடு’ விளம்பரம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. உங்களுக்கு??



மேலுள்ள வீடியோவின் க்வாலிட்டி எனக்குப் பிடிக்கவில்லை. இந்த லிங்கில் இன்னும் அருமையான வீடியோ உள்ளது. பாருங்க.


Up படத்தின் டிவிடியோடு வெளிவந்த பிக்ஸாரின் (இப்போதைய) கடைசி குறும்படம். Dug's Special Mission. இதுவும், Deleted Scene மாதிரியாக உருவாக்கப் பட்டதுதான். ரஸ்ஸலும், கார்லும் முதன் முதலாக, அந்த Dug நாயை பார்க்கும் முன் நடந்த விசயங்களாக காட்டப் பட்டிருக்கும். VERY FUNNY!!!!!






10 தியேட்டர் கமெண்ட்ஸ்:

சென்ஷி said... October 31, 2009 12:12 PM

அருமை!

வினோத்கெளதம் said... October 31, 2009 12:16 PM

நாளை என்ற நாளை மறந்து விடாதிர்கள்..
நாளைக்கு சண்டே அதுவுமா வெளியே போனாலும் Auto Publishல போட்டு விட்டு போகவும்..:)

kanagu said... October 31, 2009 2:18 PM

நல்ல இருந்துது அண்ணா.... நிறைய தகவல்கள் :) :)

VIJAY said... October 31, 2009 3:04 PM

ரத்த களறி கார்ட்டூன் படத்திலா? அதுவும் பிக்சார் படத்திலா? நமக்கு தெரியாம இருக்கு போலிருக்கு என நினைத்தேன். கடைசில பார்த்தால்...நற..நற...நற....

VIJAY said... October 31, 2009 3:11 PM

காமெடி படம் லிஸ்ட் கேட்டு கேட்டு எனக்கு மறந்தேவிட்டது. சரி உங்களை டார்ச்சர் பண்ணவேண்டாம் என விட்டிருப்பேன் போலிருக்கு. ஆனா நீங்க இன்னும் ஞாபகம் வைத்துள்ளீர்களா? அப்ப இனி என் டார்ச்சரை தொடங்க வேண்டியதுதான். ஆனால் இனி உஷாராக இருப்பேன் தல. ரத்த களறி சமாச்சாரம் எல்லாம் இனி வேலைக்கு ஆவாது.

VIJAY said... October 31, 2009 3:15 PM

பிக்சாரின் ஷார்ட் பிலிம் கலெக்‌ஷன்ஸ் டோரண்ட் ல கிடைக்குது. டவுண்லோட் பண்ண ஆரம்பித்துவிட்டேன்.

VIJAY said... October 31, 2009 3:24 PM

#1: என்னய்யா இது ஏரியா பூரா ஒரே நச நச என்று ஈரமா இருக்கு?
#2: எல்லாம் நம்ம பசங்க விடற ஜொள்ளுதான்பா!
#1: யோவ்..கார்ட்டூன் படத்துக்கு எதுக்குய்யா ஜொள்ளு விடணும்?
#2: அட இது கார்ட்டூன் படத்துக்கு இல்லப்பா. சுத்த குழந்த பையனா இருக்கியே. உன்னோட நேரம் எல்லாம் முடிந்தது. இடத்த காலி பண்ணு. நாளைக்கு நவம்பர் 01. நினைவிருக்கா?
#1: அட பாவி பசங்களா...அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா? பார்த்து சூதானமா இருங்கப்பு. ஒரே மழை,குளிர் சீசனா வேற இருக்கு???!!!அப்ப நான் வரட்டுமா?

ஊர்சுற்றி said... October 31, 2009 5:02 PM

நல்ல தொடர். பல தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி.

கோபிநாத் said... October 31, 2009 7:35 PM

\\இன்னுமாய்யா... அவன இந்த ஊரு நம்பிகிட்டு இருக்கு?\\

தல...இன்னும் நான் உங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கேன். ;)

\\#1: அட பாவி பசங்களா...அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா? பார்த்து சூதானமா இருங்கப்பு. ஒரே மழை,குளிர் சீசனா வேற இருக்கு???!!!அப்ப நான் வரட்டுமா?
\\

விஜய் தல இதுல ஏனி உள்குத்து!?? ;)))

ஹாலிவுட் பாலா said... October 31, 2009 10:22 PM

@சென்ஷி: நன்றி! :)

@வினோத்: மறப்பேனா?! நிச்சயமாய்! :)

@கனகு: உள்குத்து இல்லாம இருந்தா சரிதான்! :)

@விஜய்: நான் ஒவ்வொரு காமெடி படம் பார்க்கும் போதும், அது இன்னும் என் மனசை உறுத்திகிட்டேதான் இருக்கு. 18+ முடிஞ்சி இதுக்குன்னு ஒரு மாசம் ஒதுக்குவோம். ஹாலோவீன் மாதிரி ஏமாத்த மாட்டேன்னு நினைக்கிறேன்! :) :)

ஆமா.. என்ன இது.. நீங்க எஸ்கேப் ஆகறீங்களா? இம்புட்டு நல்ல பிள்ளையா நீங்க? :)

@ஊர்சுற்றி: பாராட்டிற்கு மிக்க நன்றி தல. இப்பல்லாம் உங்களை ஆளையே பார்க்க முடியறது இல்லை. ரொம்ப ஊரு சுத்தறீங்களோ? :)

@கோபி: அய்யோ.. பாவம்! இன்னுமா???? :) :)

Post a Comment / கிஷோர் கமெண்ட்

ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Green Zone Remember Me She is out of my league