புது வரவு - நம்பிக்கை

10/31/2009

The Pixar Story (2007) [--18--] - முற்றும்




இந்தப் பகுதி..., பிக்ஸாரின் இணையப் பக்கதில் இருந்து எடுத்தது. அதன் ஆங்கில வடிவத்தை தமிழில் தர முயற்சிக்கிறேன். இவை அனைத்தும் பிக்ஸாருக்கே சொந்தம். தவறை திருத்துமாறு, சைலண்டாக படித்து (மனதுக்குள் சிரித்து)க் கொண்டிருக்கும், அனிமேஷன் துறை நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.


பிக்ஸாரின் சினிமாக்கள் மொத்தம் நான்கு நிலைகளில் உருவாக்கப் படுகிறது.

1. டெவலப்மெண்ட்: கதையின் ஒன் லைனரோ, ஒன் பாராவோ முடிவு செய்யப் படுவது.
2. ப்ரீ-ப்ரொடக்‌ஷன்: தொழில்நுட்ப ரீதியாக வரப்போகும் சவால்களை கணிப்பது
3. ப்ரொடக்‌ஷன்: படத் தயாரிப்பு
4. போஸ்ட்-ப்ரொடக்‌ஷன்: இதைப் பத்தி சொல்லனுமா என்ன?

இந்த நான்கு நிலைகளை, பதினான்காக பிரித்திருக்கிறார்கள்.

01. கதைக் கரு: சார்.. உங்களுக்குன்னே.. ஒரு ஆக்‌ஷன் கதை இருக்கு. ஒன்லைன் மட்டும்தான் ரெடியா இருக்கு-ன்னு கோடம்பாக்கத்தின் தேசியகீதம்-தான் இது. பிக்ஸாரின் ஊழியர்கள் யாருக்காவது தோன்றும் ஐடியாவை, கொஞ்சம் படங்களாக வரைந்து கொண்டு விவாதிக்க ஆரம்பிப்பது.

02. ட்ரீட்மெண்ட்: இதுவும் கோடம்பாக்கம் வார்த்தைதான். கதை தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், ஒரு ஐடியாவை... ஒன்பது விதங்களில் பார்ப்பது (இவரின் கதைக்கு, மணிரத்னத்தின் ட்ரீட்மெண்ட் என சொல்வோமே).

03. ஸ்டோரி போர்ட்: சத்தியமாய் கோடம்பாக்க வார்த்தை இல்லை. செட்டுக்கு வந்தப் பின்தான் காட்சி/வசனங்களைப் பற்றியே நம்மவர்களில் 90% யோசிப்பார்கள். ஆங்கிலப் படங்கள் அத்தனையும், முதலில்.. காட்சிகளை வரைந்து, அவர்களே அதை நடித்தும் பார்த்துவிட்டு தான் மற்ற ஏரியாவுக்கு செல்வார்கள் (75,000 - 125,000 வரை படங்கள்-ன்னு ஏற்கனவே பார்த்திருக்கோம்).

04. டப்பிங்: இது அனிமேஷனுக்கு மோசமான வார்த்தை. வாய்ஸ் டேலண்ட் என்றுதான் சொல்கிறார்கள். நான்(ம்) நினைப்பது போல, முதலில்.. படத்தை எடுத்துவிட்டு, அப்புறம்.. குரல் கொடுக்கும் ரெகுலர் படங்கள் போல் அல்ல.

முதலில்..., பிக்ஸார் ஊழியர்களே குரல் கொடுத்து.. ஸ்டோரி போர்டின் முழுப் படத்தையும் ஓட்டிப் பார்ப்பார்கள். பின் வசனங்கள் எழுதப்படும். அந்த வசனங்களை, பலப் பல விதங்களில் எல்லா நடிகர்களும், பேசிவிட்டு சென்றுவிட, அதன் பிறகுதான்.. நடிகர்கள் பேசியதிலேயே சிறந்த மாடுலேஷனை தேர்ந்தெடுத்தப் பின், அனிமேஷனெல்லாம் ஆரம்பிக்கும். அவர்களின்.. வாய்ஸுக்கு ஏற்றபடி!!!

05. ரீல்: இது ஸ்டோரி போர்டையும்-வாய்ஸையும் சேர்த்துப் பார்ப்பது. இதிலிருந்து தேவையில்லாத சீன்கள்-வசனங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, ஒவ்வொரு காட்சியின் தொடர்ச்சியையும், காட்சி நீளத்தையும் கணக்கிடப் பயன்படுத்துகிறார்கள்.

06. லுக் & ஃபீல்: கேரக்டர்களை CG-யாக உருவாக்குவது இந்த ஸ்டேஜில் தான். முழுக்க முழுக்க ஆர்ட் டைரக்‌ஷனின் வேலைகள். காட்சிப் படுத்துதல், அந்த காட்சிக்குத் தேவையான பொருட்கள், கற்பனைக் கேரக்டர்களுக்கு வடிவம் கொடுத்தல், அவற்றிற்கான நிறங்கள்.. இதெல்லாம். எல்லாம் 2டியில் மட்டுமே!

07. மாடல்கள்: லுக் & ஃபீல் கிடைத்தவுடன், அவற்றை இரண்டு விதங்களில் கணிப்பொறி டேட்டாவாக மாற்றுதல்.

    7.1  நம் தஞ்சாவூர் பொம்மைகளாக, உயர-அகல-கணங்களை கொண்டு செய்து கொள்வது. ஏற்கனவே முடிவெடுத்த நிறங்களை அவற்றிற்கு பூசுவது, வெயில் காய வைப்பது... etc.. etc...! பின் அதன் முப்பரிமாணங்களையும், ஸ்கேன் செய்து கணிப்பொறிக்குள் செலுத்துவது.

    7.2 நேரடியாகவே.. கணிப்பொறியில், 3டி கேரக்டர்களாக மாடல் செய்வது. இப்படி செய்தப் பின், மாடல்களின் ஒவ்வொரு உடல் பகுதியும் தனித்தனியாக பிரிக்கப் பட்டு Animation Variables (Avars) கொடுக்கப் படுகின்றன. இந்த Avars -ஐ வைத்துத்தான்... கண்ணை சிமிட்டுவதா, கையை ஆட்டுவதா.. என முடிவு செய்து கட்டளை கொடுக்கிறார்கள்.

(மோஷன் கேப்சரில் உருவாகும் படங்களும் இதே Animation Variables முறையைத் தான் உபயோகிக்கிறார்கள்.  சுல்த்தான் த வாரியரில் ல் தலைவர்.. பல்டி அடிக்கப் போவது, Avars- புண்ணியத்தில் தான்.)

08. செட் டெகொரேஷன்: ஆறாவது பாய்ண்டில், கிடைக்கும் ஐடியாவிலிருந்து, 3டி-க்கு மாறியப் பின், காட்சியில் தெரியும்.. ஒவ்வொன்றையும் அழகு படுத்துவது இவர்களின் வேலை. பெரும்பாலும் சுவற்றுக்கு பெய்ண்ட் அடிப்பது, கட்டில் மெத்தைக்கு உறை மாட்டுவது மாதிரியான ‘ஹவுஸ் கீப்பிங் வேலைகள்’ (இண்டோர் சீன்-னாய் இருந்தால்).

09. லே-அவுட்: வரையப் பட்ட, ஸ்டோரி போர்ட் ஓவியங்கள், முப்பரிமாணத்திற்கு மாறும் நிலை. வரைபடத்தில் தெரிவது போன்ற, முக பாவனைகள், கேரக்டர்கள் & பொருட்கள் இருக்கும் இடம் என எல்லாவற்றையும்.. ஒழுங்கு படுத்துவது. ஒரே காட்சி பலவிதங்களில் ஷூட் செய்யப் பட்டு, எடிட்டிங்கில் எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்வது.

10. அனிமேஷன்: ஒரு அனிமேஷன் படத்தின் அனிமேஷனே, பதினாலில் பத்தாவது ஸ்டெப்தான். இந்த நிலையில் கேரக்டர்கள் நடிக்க ஆரம்பிப்பதற்கு (மூவ்மெண்ட்), தேவையான அத்தனைப் பொருட்களும்... அந்த செட்டில் இருக்கும் (ஆர்ட், லேஅவுட், Avars).

(தெரியாதவர்களுக்கு மட்டுமே இந்த பாரா) Adobe Flash அனிமேஷனில், கீ ஃப்ரேம் என்ற முறையில், முதல் செகண்டில் கையை கீழேயும், இரண்டு செகண்ட் கழித்து கையை மேலேயும் வைத்துவிட்டால்.. நடுவில் தேவைப்படும் இரண்டு செகண்டிற்கான அனிமேஷனை, Flash-ஏ எழுதிக் கொள்ளும் (ஒரு செகண்டுக்கு 24 ஃப்ரேம்கள் என்றால் இரண்டு செகண்டிற்கு 48 ஃப்ரேம்களில் 1 & 48 மட்டும் நாம் சொல்கிறோம். 2-47-ஐ சாஃப்ட்வேரே எழுதிக் கொள்ளும்).

அதே கீ ஃப்ரேம் அனிமேஷன் முறைதான், அனிமேஷன் படங்களிலும். தேவைப் படும் இடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்து கொள்வார்கள். (அனிமேட்டர்கள் அடிக்கடி சொல்வது “பெரும்பாலான வேலையை, கணிப்பொறியே செய்தாலும்..., பெயர் மட்டும் எங்களுக்குத்தான்”).

11. ஷேடிங்: Ray Tracing பதிவின் ஒருப் பகுதி. ஒரு பொருளின் நிழல் எங்கே விழுந்தால், என்னவாகும் என்பதை தீர்மானிப்பது. ரிஃப்லெக்‌ஷன்... ரிஃபராக்‌ஷன்.... சரி.. வுடுங்க..! ஏன் வீண் வம்பு!

12. லைட்டிங்: இங்கேதான் நம் பின்னூட்ட நண்பர், சந்தோஷ் வருகிறார். மறுபடியும் Ray Tracing கதைதான்.  ஆனால்.. அதன் இன்னொரு பகுதி. நிழலுக்கும் - எதிரொளி-க்கும் பார்த்த வித்தியாசங்கள், இங்கேதான் பிரிகின்றன (சந்தோஷின் இந்தப் பதிவில் அவருடைய லைட்டிங் டெமோவை இணைத்துள்ளார். இந்த ஏரியாக்களில் நம்மவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டுக் கூட எண்ணத் தேவையில்லை. இதுபோன்ற பதிவர்களை ஊக்குவித்தால்..., அவர்கள் வருங்காலத்தில் எழுதும் டெக்னிகல் பதிவுகளில் நாமெல்லாம்.. கொஞ்சம் தெரிந்து கொண்ட மாதிரியாவது இருக்கும். நம் ஆதரவை அவருக்குத் தெரிவிப்போமாக!) .

13. ரெண்டர்: கார்ஸ் படத்தில், ஒவ்வொரு ஃப்ரேமும் (ஒரு நொடிக்கு 24) ரெண்டரிங் ஆக 17 மணி நேரம் எடுத்தது எனப் பார்த்தோம். பிக்ஸார், இதை ஆறு மணி நேர ஆவ்ரேஜ்ஜாக (Ray tracing-ஐ முழு அளவில் பயன்படுத்தாத சீன்கள்) சொல்கிறது.  அதே நேரம்.. அதிக பட்சமாக 90 மணிநேரம் வரை ஒரு ஃப்ரேம் எடுக்குமாம்.

14. ஃபைனல் டச்: படத்தின் மிச்சப் பகுதிகளான, எடிட்டிங், பிண்ணனி இசை கோர்ப்பு, சவுண்ட் எஃபெக்ட், விஷுவல் எஃபெக்ட் அப்புறம்.. கடேடேடேசியாக... PC to Film/Digital Source.



அனிமேஷன் துறையே, இப்பொழுது கேரக்டர் அனிமேஷன், மற்றும் மோஷன் கேப்சர் அனிமேஷன் என இரண்டாக பிரிந்து விட்டது.  முதல் பிரிவில் Pixar, DreamWorks, Blue Sky Studios என மிக ஸ்ட்ராங்கான போட்டிகள் இருக்கும் போது, அடுத்தப் பிரிவில் Forrest Gump, Back to the Future படங்களின் இயக்குனர் Robert Zemeckis-ன் ImageMovers நிறுவனம் The Polar Express, Beowulf என 2007-ஆம் ஆண்டு வரை கலக்க...

அனிமேஷன் உலகின் ஜாம்பவான் டிஸ்னியோ... இது அது எனப் பார்க்காமல், போட்டியாளர்களை வளைத்து போட்டே காரியத்தை சாதிக்கப் பார்க்கிறது.

ஏற்கனவே பிக்ஸாரை வாங்கி, 3டி கேரக்டர் ஏரியாவை கை வைத்துக் கொண்ட டிஸ்னி, ImageMovers-ஐயும் விலைக்கு வாங்கி (2007), ImageMovers Digital என பெயர் மாற்றி, Motion Capture ஏரியாவிலும் ஒரு இடத்தை போட்டுக் கொண்டு விட்டது.

(எட்டாவது பதிவில் Robert Zemeckis-ஐ அறிமுகப் படுத்தினது இதனால்தான். இதைத் தான் 9-ஆவது பதிவில் சொல்ல வந்தேன். கொசுவர்த்தி + ஜவ்வு பிரச்சனை ஆரம்பிச்சிடனால அப்படியே டீல்ல விட்டுட்டேன்.)

ImageMovers -> ImageMovers Digital என மாற்றப் பட்ட பிறகு எடுக்கப் பட்ட முதல் motion capture படம் A Christmas Carol அடுத்த வாரம் ரிலீஸ்-ற்கு ரெடியாகி விட்டது.

இப்பொழுது, டிஸ்னியின் அடுத்தக் கட்டம்: ஜட்டியை உள்ளே போட்ட... பெரும்பாலான சூப்பர் ஹீரோக்களின்  உரிமையாளர் Marvel Comics நிறுவனத்தார் (Iron Man படத்தை எடுத்தவர்கள்). டிஸ்னி இதையும் இப்பொழுது Marvel நிறுவனத்தையும், கடந்த ஆகஸ்ட் மாதம் வாங்கிப் போட்டு விட்டது ($4 பில்லியன் டாலர்கள்).


அனிமேஷன் துறையில், பிக்ஸார் உள் நுழைந்து, காட்டிய மூன்றாவது பரிமாணத்தினால், காலம் காலமாக இருந்து வந்த 2டி அனிமேஷன், 99% அழிந்து விட்டது. கால ஓட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியாத, 2டி-யையே நம்பியிருந்த பெரும்பாலான ஸ்டுடியோக்கள், 2000-ன் ஆரம்பத்திலேயே கடையை மூடிவிட்டன. 

ஆனானாப்பட்ட டிஸ்னியே, இனிமேல் 2டி படங்களை தயாரிக்கப் போவதில்லை என சொல்லி, அதன் 2டி பிரிவை, 2004-ல் மூடி விட்டது (அதன் கடைசி 2டி படம் Home on the Range). 

ஆனால், பரிகாரமாகவோ என்னவோ, ஜானும், எட்வினும் டிஸ்னியின் (அனிமேஷன்) தலைமைப் பொறுப்பை ஏற்ற பின், அந்த பிரிவை மீண்டும் திறந்து இருக்கின்றனர்.  இதிலிருந்து வெளிவரப் போகும் முதல் 2டி படம் The Princess and the Frog (டிசம்பர் 11, 2009).

ஏழு படங்கள், மனித வாடையே (அவ்வளவாக) இல்லாமல, படமெடுத்த பிக்ஸார் கூட... Ratatouille, Wall-E, படங்களில் மெதுவாக மனிதர்களை புகுத்த ஆரம்பித்து, Up-ல் முழுமையாக மனிதர்களுக்கு வந்து விட்டு... திரும்பவும் Toy Story 3 (2010), Cars 2 (2011) என பழைய ஏரியாவிற்கே போய்விட்டது.

இதில் The Princess and the Frog படத்தின் வெற்றி-தோல்வி, நிச்சயம் 2டி-யின் தலைவிதியை தீர்மானிக்கலாம். அப்படி வெற்றியடையும் பட்சத்தில், நாம் திரும்பவும் 2டி படங்களை ரசிக்கவோ, அல்லது 3டி கேரக்டர் படங்களை மறக்கவோ கூட செய்யலாம். அவ்வளவு ஏன், எதிர்காலத்தில் பிக்ஸாரே கூட, 2டி படத்தை எடுக்கலாம்.

யாரு கண்டா...? வாழ்க்கை ஒரு வட்டம்தானே!



!!முற்றும்!!
!!முற்றும்!! !!முற்றும்!! !!முற்றும்!!





ஓஷோ-வையும், க்ளிஷே-வையும் படிப்பவர்களும், கிம்-கி-டுக்கையும்... டம்-கி-டுக்கையும் பார்ப்பவர்களும் தான் அறிவாளிகள் போலவும்........,

காமிக்ஸ் படிப்பவர்களும், அனிமேஷன் படங்கள் பார்ப்பவர்களும் என்னவோ குழந்தைத்தனமாகத் தான் இந்தியாவில் பார்க்கப் படுகிறார்கள்.

அப்படிப் பார்ப்பவர்களில்..., அவர்கள் பார்க்கும் படங்களை விட, நாற்பது வருட அட்வான்ஸ்ட் டெக்னாலஜியில், நான்கு மடங்கு அதிக உழைப்பில் உருவானவை.. அனிமேஷன் படங்களும்/காமிக் புத்தகங்களும் என... இதைப் படித்த யாராவது ஒருவர் உணர்ந்திருந்தால்.. கூடப் போதும். அதை இந்தத் தொடரின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.


ஊஉவ்வ்...! ரொம்ப டயர்டாகவும், ரிலீஃபாகவும் ஒரே சமயத்தில் உணர முடியுது! ரெண்டு வரி எழுத... 40 பக்கங்கள் எல்லாம் படிக்க வேண்டியிருந்தது. கட்டுரைகள், வீடியோ, இண்டர்வ்யூஸ், வரலாறு, இயற்பியல், வேதியியல் என நான் பேதியியல் ஆகக் கூடிய என்னென்னமோ படிச்சாச்சி.
கிடைத்த நேரத்தில், திரட்டிய தகவல்களை, முடிந்த வரை சரிபார்த்துத் தான் எழுதியிருக்கேன். ஆனால் 100% சரியான தகவலா எனத் தெரியாது. பிழைகளை சுட்டிக் காட்டினால்... திருத்திக் கொள்வேன்.
அப்படி படிச்ச அத்தனைத் தகவல்களையும்.. உங்க மேலயும் திணிக்க முயற்சி செய்து (ஒரு 25% கூட சொல்லலை) .. சில சமயம் ஜெயித்து, சில சமயம் தோற்று..., நிறைய படித்து, நிறைய (உங்களோடு) தெரிந்து கொண்டு, நிறைய (உங்களையும்) குழம்பி Its really.. really fun!!!!!!!!!

ஒரு பதிவு பிரபலம ஆகலைன்னாலும் தொடர் எழுதும் விருப்பம் கம்மியாகியிருக்கும். ஆனா.. அத்தனைப் பதிவுகளையும்...  எழுதிய கொஞ்ச நேரத்திலேயே பிரபலமாக்கிய தமிழிஷ் ஓட்டு நண்பர்களுக்கும், ஒன்னு ரெண்டு விழுந்தாலும் ஓட்டு ஓட்டு தானே... அதனால்.. தமிழ்மண வாக்காளர்களுக்கும்... இமெயிலில் வாழ்த்திய நண்பர்களுக்கும்,

தவறாமல் அத்தனைப் பதிவுகளிலும் பின்னூட்டிய, பப்பு, சென்ஷி, கோபி, விஜய், கிஷோர், வினோத், கனகு (வேற யாராவது விட்டுப் போச்சா?), இன்னும் பல புதிய பின்னூட்ட நண்பர்கள்..., அத்தனை பேருக்கும்....... “நீங்களில்லாமல் இந்தத் தொடர் இல்லை”!!!

முதல் பகுதி, கேபிளுக்குப் போய்விட்டதால்... , உங்கள் எல்லோருக்கும்...... இந்த இரண்டாம் பகுதி...

!!சமர்ப்பணம்!!


இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் - பிக்ஸார்
எங்களை என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!!!
-பாரதி (மன்னிப்பாராக)
[PDF விஷயம் கூடிய விரைவில். கடவுளே.. யாரும் கேஸ் போடாம இருக்கனும்! :)  வேறு நண்பர்கள் இதை PDF-ஆக மாற்றினாலும், அதில் என் ப்ளாக் அட்ரஸை கொடுக்கவில்லை என்றாலும்... எனக்கு 100% சம்மதம்தான். I still feel I don't own anything at all!]



47 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ஹாலிவுட் பாலா said... October 31, 2009 10:05 PM

ஹோ.. மை...! இது.. உ.த-க்கு போட்டியா எழுதின பதிவு மாதிரி இருக்கே?!

ஸாரி நண்பர்களே! :(

பயங்கரவாதி டாக்டர் செவன் said... October 31, 2009 11:35 PM

இப்பத்தான் மீண்டும் ஒரு முறை உங்க பிக்ஸார் பதிவுகள் எல்லாத்தையும் படிச்சேன்!

அற்புதமா எழுதியிருக்கீங்க! ஆனா ஒரேயொரு சிறு குறை!

டிஸ்னிக்கும் ட்ரீம்வொர்க்ஸுக்கும் நடந்து வரும் பனிப்போரில் டிஸ்னி ஆப்பு வாங்கிய THE WILD படத்தை பற்றி குறிப்பிடாதது ஏனோ?

MADAGASCAR படத்தின் பல தீம்கள் இந்த படத்திலும் காணப்பட்டதால் டிஸ்னியை காறித் துப்பி விட்டனர் விமர்சகர்கள்!

மறந்திருப்பீங்களோ?!! I DOUBT IT!

தலைவர்,
அ.கொ.தீ.க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... October 31, 2009 11:40 PM

நண்பர் பாலா,
அற்புதமான முயற்சி, பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் உள்ள ஒன்றை இதை எல்லோருக்கும் புரியும் படி சுவையாக எளிய தமிழில் தந்த ஒன்று.
மற்ற எல்லா பாகமும் இனிமேல் தான் முதல் பாகத்திலிருந்து படிக்கணும்.

நல்லது பண்ணிட்டு ஏங்க இப்படி பயப்படுறீங்க?
ஒட்டுக்கள் போட்டாச்சு

gulf-tamilan said... October 31, 2009 11:43 PM

நல்லா இருந்தது தொடர். நன்றி !!!

சென்ஷி said... October 31, 2009 11:57 PM

//முதலில்..., பிக்ஸார் ஊழியர்களே குரல் கொடுத்து.. ஸ்டோரி போர்டின் முழுப் படத்தையும் ஓட்டிப் பார்ப்பார்கள். பின் வசனங்கள் எழுதப்படும். அந்த வசனங்களை, பலப் பல விதங்களில் எல்லா நடிகர்களும், பேசிவிட்டு சென்றுவிட, அதன் பிறகுதான்.. நடிகர்கள் பேசியதிலேயே சிறந்த மாடுலேஷனை தேர்ந்தெடுத்தப் பின், அனிமேஷனெல்லாம் ஆரம்பிக்கும். அவர்களின்.. வாய்ஸுக்கு ஏற்றபடி!!!//


பல புதிய தகவல்களுடன் இது முற்றிலும் வித்தியாசமான மனதைத் தொட்ட தகவல்!

சென்ஷி said... October 31, 2009 11:59 PM

//
டிஸ்னிக்கும் ட்ரீம்வொர்க்ஸுக்கும் நடந்து வரும் பனிப்போரில் டிஸ்னி ஆப்பு வாங்கிய THE WILD படத்தை பற்றி குறிப்பிடாதது ஏனோ?
//

ஹிஹி.. இதுக்கு நானே காரணம் சொல்வேனே... இந்தத் தொடர் பிக்ஸார் கம்பெனியைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சது. அடுத்து ஹாலி பாலி ட்ரீம் வொர்க்ஸ் பத்தி எழுத ஆரம்பிக்கும்போது அதை பார்க்கலாம்.

The Wild மடகாஸ்கர் மாதிரி இருந்ததா.. என்ன கொடுமை சார் இது... நான் ஏதோ லயன் கிங்கோட கடைசி பார்ட்டுன்னு நினைச்சு பார்த்துட்டு இருந்தேன் :)

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 12:10 AM

////டிஸ்னிக்கும் ட்ரீம்வொர்க்ஸுக்கும் நடந்து வரும் பனிப்போரில் டிஸ்னி ஆப்பு வாங்கிய THE WILD படத்தை பற்றி குறிப்பிடாதது ஏனோ? /////

இல்லைங்க... நண்பா! அந்தப் படத்தை நான் மறக்கலை. ஆனா அந்தப் படத்தை எடுத்தது டிஸ்னி கிடையாது. C.O.R.E-ங்கற கனடா நாட்டு நிறுவனம்.

டிஸ்னி அதை.. வினியோகம் மட்டும்தான் செஞ்சது. இந்த பதில் உங்களுக்கு திருப்தியா?

ஆனா.. நீங்க சொன்ன குற்றச் சாட்டு மிகச் சரியானதுதான். மடகாஸ்கர் - நீமோ - எல்லாத்தையும் கலந்து எடுத்திருப்பாங்க.

சென்ஷி said... November 1, 2009 12:11 AM

தல.. சும்மா அதகளம் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்பத்தான் உங்க பதிவு மூலமா முதன்முறையா பார்க்கறேன். எத்தனை உழைப்பு, எவ்வளவு சுவாரஸ்யம்... எல்லோருக்கும் புரியறா மாதிரி சொல்லனுங்கறதுக்காக நீங்க எடுத்துக்கிட்ட உதாரணங்களும் தேடிக் கொடுத்த விசயங்களும் பதிவுலகத்துல இந்தத் தொடர் ஒரு மைல்கல்ன்னு நிச்சயம் என்னால அடிச்சு சொல்ல முடியும்!

கொடுக்க வேண்டிய விசயத்தை எப்படி கொடுத்தா பிடிக்கும்ன்னு சொல்றதை இவ்வளவு அழகா எழுதி எங்களோட பகிர முடியும்ன்னா உண்மையில் உங்களுக்கு ராயல் சல்யூட்.

என்னைப் போன்ற அனிமேசன், கார்ட்டூன் படங்களின் வெறித்தனமான ரசிகர்களின் மனதில் இந்தத் தொடர் நீங்காத இடம் பிடித்துவிட்டது. இதற்காகவும் தனி நன்றிகள் தலைவா..

சீக்கிரம் தொடர் முடிந்ததற்காக கொஞ்சம் வருந்தினாலும் அடுத்த தொடருக்காகவும் காத்திருப்போம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுக்கா வந்து சூப்பரா கலக்குங்க தல :)

ரொம்ப ரொம்ப நன்றி!

நிறைய்ய எழுதனும்னு தோணுது. இருந்தாலும் அடுத்து வர்ற ரசிகர்களுக்காகவும் இடத்தை விட்டுட்டு போகனும்ல அதான்...

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 12:16 AM

@கார்த்திகேயன்: மிக்க நன்றி! :) முதல் பாகத்தில் இருந்து நானும் ஒருமுறை படிக்கனும்!

பயமெலாம் இல்லை...! சும்மா... ஒரு பயம்தான்! :)


----

@gulf-tamilan: :) :)

-----

@சென்ஷி: லிஸ்டில் லயன் கிங்கை சேர்க்க மறந்துட்டேன்.

மடகாஸ்கர்-நீமோ-லயன்கிங்! :)

இதுக்கு டிஸ்னி நேரடி பொறுப்பு இல்லைன்னாலும், C.O.R.E கம்பெனி பத்தி இழுக்கலாம்னு தான் நினைச்சேன். உங்களுக்கே தெரியும்! ஏன் அதெல்லாம் இந்தத் தொடரில் வரலைன்னு! :) :)

ஓவர் டோஸில் நீங்களே.. ஒரு முறை.. ஏகப்பட்ட புதிய பெயர்கள்ன்னு சொல்லிட்டீங்க! :) :) இன்னும் இதெல்லாம் போட்டிருந்தா???

Busy said... November 1, 2009 12:24 AM

Hatts of Bala !!

Realy its a Good & Hard Work !!

Tnx for these information

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 12:28 AM

@சென்ஷி: இப்படி... கூனிக் குறுகற மாதிரி.. பாராட்டுறீங்களே..? இது உங்களுக்கே நியாயமா? நமக்குள்ள இதெல்லாம் தேவையா சொல்லுங்க!

இந்த மேட்டரெல்லாம் தெரிஞ்சி எழுதியிருந்தா பாராட்டலாம். எழுதறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி படிச்சி... எழுதுனதெல்லாம்.......,

----

இருந்தாலும்... இம்புட்டு எல்லாம் என்னால தாங்க முடியாதுங்க! இதுக்கெல்லாம்.. பழக்கப் படலை! :) :) :)

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 12:30 AM

@Busy: மிக்க நன்றி தல!! :) :)

Cable Sankar said... November 1, 2009 1:41 AM

பாலா.. சூப்பர்.. இந்த தொடரில் உங்களது உழைப்பு எவ்வளவு இருக்கும் என்று நானும் தொடர் எழுதுவதால் தெரிகிறது. அருமை.. முடிந்தால் போன் செய்யுங்கள்.
வாழ்த்துக்க்ள்:

செந்தழல் ரவி said... November 1, 2009 4:48 AM

ரொம்ப நல்லா இருக்கு பாலா.

//காமிக்ஸ் படிப்பவர்களும், அனிமேஷன் படங்கள் பார்ப்பவர்களும் என்னவோ மன வளர்ச்சி குன்றியவர்களைப் போலத்தான் இந்தியாவில் பார்க்கப் படுகிறார்கள்.

அப்படிப் பார்ப்பவர்களில்..., அவர்கள் பார்க்கும் படங்களை விட, நாற்பது வருட அட்வான்ஸ்ட் டெக்னாலஜியில், நான்கு மடங்கு அதிக உழைப்பில் உருவானவை..
//

இத இத இந்த வார்த்தைகளைத்தான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டிருதேன்..

ஊர்சுற்றி said... November 1, 2009 6:09 AM

கலக்கலான தொடர். மிகவும் சுவாரசியமான தகவல்கள். கொஞ்சநாள் வலையில் படிக்கவில்லை என்பதால் - இப்போ எல்லாத்தையும் தேடிப்பிடித்துப் படித்து விட்டேன். :)

கனவுகளின் காதலன் said... November 1, 2009 6:23 AM

நண்பரே, சிறப்பாக ஒர் தொடரை நிறைவு செய்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள். காமிக்ஸ் குறித்த உங்கள் வார்த்தைகளிற்கு நன்றி நண்பரே.

ராஜ நடராஜன் said... November 1, 2009 6:37 AM

பாலா!முதலில் பாராட்டுக்கள்.அப்புறம் PS3 வாங்க வச்சு செலவு வச்சதுக்கு முதுகுல ஒரு தட்டு:)

Cable Sankar said... November 1, 2009 7:13 AM

/எனக்கு 100% சம்மதம்தான். I still feel I don't own anything at all!]//

நான் இதை புத்தகமாய் போட ரெபர் செய்திருக்கிறேன்.

guyfromsg said... November 1, 2009 8:13 AM

அக்டோபர்ல மட்டும் 28 பதிவு எழுதி இருக்கீங்க அதுவும் 16 பிக்ஸார் பற்றிய ஆராய்ச்சி தொடர். இவ்வள்வு நேரம் செலவிட அனுமதித்த உங்கள் மனைவிக்கு முதலில் நன்றி :). உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்க்ள்...

கண்ணன்

Arul said... November 1, 2009 8:14 AM

Very good series... Usually I read all your posts... didnt post any comment so far.. but this time if i dont post a comment it would be a sin.. Great Work Bala brother...

ரங்கன் said... November 1, 2009 8:39 AM

வூவ்..!! u made it man!!

great endings..with another start..!! cool..

Proud of U!!!

Next Movie என்ன மேன்?

Sugumarje said... November 1, 2009 10:07 AM

உங்களின் இந்த வலைமனையை என் மல்டிமீடியா மாணவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளேன்.

வினோத்கெளதம் said... November 1, 2009 10:08 AM

எல்லாம் ஒரு தடவை ஜோரா விசில் அடிச்சு கை தட்டுங்க..

//!!முற்றும்!! !!முற்றும்!! !!முற்றும்!! !!முற்றும்!!//

இந்த வார்த்தைக்கு மட்டும் இன்னும் ஒருக்கா மறுப்படியும் வேகம் கை தட்டுங்க..:))

வினோத்கெளதம் said... November 1, 2009 10:20 AM

//காமிக்ஸ் படிப்பவர்களும், அனிமேஷன் படங்கள் பார்ப்பவர்களும் என்னவோ மன வளர்ச்சி குன்றியவர்களைப் போலத்தான் இந்தியாவில் பார்க்கப் படுகிறார்கள்.//

தல நான் பார்த்த வரைக்கும் என் friends ரெண்டு பேரு இருக்காங்க..எப்ப பாரு animation movies, cartoon network தான்..
ஆனா ரெண்டு பேருக்கும் பயங்கர creativity அப்புறம் செம 'கில்லி'ங்க..

ஆனா நாங்க இந்தியாவில் இருக்கிற யாரும் அப்படி அவர்களை பற்றி 'மனவளர்ச்சி குன்றியவர்கள்' என்று எல்லாம் நினைக்க மாட்டோம்..'குழந்தைத்தனமா' இருக்காரு பாரு அப்படின்னு தான் நினைப்போம்..:)

வினோத்கெளதம் said... November 1, 2009 10:22 AM

அப்புறம் முக்கியமா உங்க உழைப்பு-பிரமிப்பு..

VIJAY said... November 1, 2009 11:44 AM

உங்க சின்சியாரிட்டி,கடின உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் பாலா. என்ன சொல்லி பாராட்டுவது என தெரியல. உண்மைல இது ஒரு பதிவுலக சாதனைதான்.

அப்புறம் இந்தியாவில் பெரியவர்கள் கார்ட்டூன் படம் பார்த்தால் இன்னும் என்ன சின்ன குழந்தை மாதிரி என்றுதான் சொல்வார்களே தவிர நீங்கள் சொல்வது போல் எல்லாம் இல்லை. வினோத் சொல்வது சரி.

Indian said... November 1, 2009 12:27 PM

Dude,

This serial rocks!
Keep it up!

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 12:54 PM

@கேபிள்: ஹா. சங்கர்.. நல்லா தூங்கிட்டேன். சாரி...! முழிச்சிருந்தா.. நான் இப்பவே கால் பண்ணுறேன். இல்லைனா.. காலையில.. நிச்சயம் கால் பண்ணுறேன்! :)

@செந்தழல் ரவி: எதுனா.. பிரச்சனை ஆகப் போகுதுங்களா? :) :) ஹா. ஹா.. ஹா.. யாராவது.. கிழிக்கப் போறாங்கன்னு நினைக்க்றேன்! :)

@ஊர்சுற்றி: உங்களை காணலைன்னப்பவே நினைச்சேன்! திரும்ப வருகை தந்ததுக்கு நன்றி! இன்னும் பதிவை படிக்கலை. கமிங் க்விக்!

@கனவுகளின் காதலன்: நானும் காமிக் ரசிகன்தான் நண்பா. இந்த ஆறு வருடமாய்.. காமிக் புத்தகங்களை அனுபவிக்க முடியாமல் இருக்கேன்!! நீங்களாவது.. என்ஜாய் பண்ணுங்க! :)

@ராஜ நடராஜன்: கலக்குங்க.. தல!!! சூப்பர் நியூஸ்! கேம் விளையாடுவீங்களா?? அப்படின்னா. சொல்லுங்க..! நெட்வொர்க்ல போட்டு... ஒரு போட்டி வச்சிடுவோம்! :)

@கேபிள்: அய்யோ.. இது என்ன புது கதை? சாமி... PDF-ஆ போடவே.. நான் பயந்து நடுங்கறேன். நீங்க என்னடான்னா? :(

உங்க நம்பிக்கைக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை சங்கர்! :) :)

@கண்ணன்: சரியா சொல்லனும்னா..., நன்றியை... சம்பளம் கொடுத்து என்னை வேலைல வச்சிருக்கற பாவப் பட்ட ஜென்மத்துக்குத் தான் சொல்லனும்! :) :) :)

@அருள்: உங்க வார்த்தைக்கும், நம்பிக்கைக்கும், முதல் கமெண்டிற்கும்.. என் நன்றிகள் அருள்! :)

@ரங்கன்: நன்றி தல! அடுத்தப் படத்தை போட்டாச்சி! திட்டுறதுன்னா.. அங்க வந்துடுங்க! :) :)

@சுகுமார்: வாவ்..! என்னங்க இது..?! இப்படி ஒவ்வொருத்தரா.. என்னை திக்குமுக்காட வைக்கறீங்க?!! இதுக்கெல்லாம் நிஜமா.. நான் தகுதியானவனான்னு தான் எனக்குத் தெரியலை! ரொம்ப நன்றிங்க!! வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல!

ஆனா.. இப்ப பார்த்தா உங்க ஸ்டூடன்ஸ்-க்கு ரெஃபர் பண்ணனும். இந்த ஏரியா. இன்னும் ஒரு மாசத்துக்கு வேற.. ஏரியாவுக்கு எண்டர் ஆகப் போகுதே! :) :)

@வினோத் & விஜய்: அந்த வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிக்கனும்! கொஞ்சம் ஹார்ஸாதான் இருக்கு! மாத்திட்டேன்!

சுட்டியதற்கு மிக்க நன்றி வினோத் & விஜய்!! :) :)

@இந்தியன்: நன்றி... நண்பா! :) :)

kanagu said... November 1, 2009 12:55 PM

எனக்கு எப்பவுமே அனிமேஷன் படங்கள்-னா ரொம்ப பிடிக்கும் அண்ணா.... ஆனா பாத்தது கொஞ்சம் தான்... எப்பவுமே அவங்க எப்படி அத உருவாக்குறாங்க-னு திகைப்பா இருக்கும்... உங்களோட இந்த தொடர் பதிவுனால கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டேன்... :)

அருமையான தொடர்.. நான் ரசித்தேன்.. அதே மாதிரி இந்த கார்ட்டூன் படங்கள பாக்குறவங்கள எல்லாம் குழந்தைங்க-னு சொன்னா செம கடுப்பா இருக்கும்....

திரும்ப நேரம் இருக்கும் போது.. இந்த பதிவுகள எல்லாம் வந்து படிப்பேன் அண்ணா... :) :)

அடுத்த விறு-விறு தொடருக்காக வெயிட்டிங்.. :)

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 1:07 PM

@கனகு: உங்க கூட சேர்ந்து நானும் தான் கத்துகிட்டேன். தினசரி எழுதாம வாரக் கணக்கில் எழுதியிருந்தா.. இன்னும் படிச்சி.. இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். ஆனா.. இன்னொரு தொடரா???? சாமி.. ஆளை விடுங்க! :)

உங்க தொடர் பின்னூட்ட ஆதரவுக்கு நன்றி கனகு! :)

கோபிநாத் said... November 1, 2009 6:08 PM

தல மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

ஒன்னும் சொல்லிக்க முடியல...அப்படி ஒரு சந்தோஷம் இந்த தொடரில். நீங்க மட்டும் இங்க இருந்திங்க இன்நேரம் உங்களை நேரில் கட்டிபிடித்து வாழ்த்து சொல்வேன்.

இதெல்லாம் இனிமே வேண்டாம் (அனிமேஷன்) இருந்தேன். இப்போ மீண்டும் கிளறி விட்டுட்டிங்க. ;)

சந்தோஷ் பதிவுக்கு கண்டிப்பாக நம்ம மக்கள் போவாக அவருக்கும் பூஸ்டு கொடுப்போம்.

ஒன்னே ஒன்னு ராசா நீங்க நல்லாயிருக்கானும் ;))

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 8:05 PM

@கோபி: சென்ஷி-யை சொன்னா.. இப்ப நீங்களுமா? நோபல் பரிசு வாங்கின உடனே... பாராட்டை எதிர் கொள்ள முடியாத, அமெரிக்கத் தமிழர் மாதிரி.. ஆய்டுச்சி என்னோட நிலைமையும்! :)

---

இருந்தாலும்... சென்ஷிகிட்ட அப்படி சொல்லியிருக்கக் கூடாதோன்னு அப்பல இருந்து ஒரே ஃபீலிங்ஸ். இதை படிச்சா, அவரிடன் என் வருத்தத்தையும் சொல்லிடுங்க! :(

உங்க... பாராட்டை அப்படியே எடுத்துக் கொள்கிறேன்! என்ன.. இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டு... எழுதியிருந்தா.. சந்தோஷமா.. இதையெல்லாம் வாங்கியிருப்பேன். :) :) :)

குலவுசனப்பிரியன் said... November 1, 2009 10:59 PM

எல்லா பகுதிகளையும் படித்தேன். மிகவும் சுவைபட தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். பிக்சார் நிறுவனத்தைப் பற்றி பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் பிளண்டர்3டி (Blender3D) என்ற கட்டற்ற மென்பொருளை தரவிறக்கி தங்களுக்கு விருப்பமான நுட்பியல் ஒன்றை பழகிப் பார்க்கலாம். கட்டுரையில் சொல்லப்பட்ட அசைவூட்டம், மாதிரியாக்கம் (மாடலிங்), முடி, ஆடை, நீர்மம் முதலியவற்றின் இயற்பியல் மாதிரியாக்கம் போன்ற கணினி மூலம் திரைப்படம் தயாரிக்கத் தேவையான நுட்பியல் அனைத்தையும் இதில் செய்து பார்க்கலாம்.

எனக்கும் வரை கலைத் திறனுக்கும் காத தூரம். அத்தகைய திறன்படைத்தவர்கள் மீது பொறாமையாக இருக்கும். இருந்தாலும், கரிக்கோல், குரங்கு போன்ற எழிய மாதிரி வடிவங்களை செய்து பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

இப்போதெல்லாம், இந்தத்துறை சார்ந்த வேலைகளும் இந்தியாவிற்கு வெளியூற்று ஆகிறதாம், PBS தொலைக்காட்சியில் பார்த்தேன். உ.ம்:
http://www.dataquestinfoway.com/Website/index.shtml

உங்கள் சேவை பாராட்டுக்குறியது.

ஹாலிவுட் பாலா said... November 1, 2009 11:42 PM

@குலவுசன்ப்பிரியன்: விரிவான விளக்கத்திற்கு ரொம்ப நன்றி! :)

நானும் Blender-ஐ கொஞ்ச நாள் முன்னாடி உபயோகித்துப் பார்த்திருக்கேன்(வரைஞ்சு இல்லை)! அ.ஆ விலிருந்து கத்துக்கனும்.

இந்த ஊர்ல படிக்கலாம்னு பார்த்தா... இல்லாத சொத்தை எழுதிக் கேட்குறானுங்க. இந்தியா வந்தால்.. நிச்சயம்.. ஒரு ஸ்பீட் கோர்ஸாவது படிச்சிட்டுதான் வருவேன்னு சொல்லிகிட்டு இருக்கேன்.

நீங்க கொடுத்த லிங்க் ரொம்ப இம்ப்ரஸிவ். ஆனா... புராணத்தை விட்டு நம்ம ஆளுங்க வெளியவே வர மாட்டாங்க போல இருக்கே! :(

KISHORE said... November 2, 2009 1:44 AM

great job bala..

KISHORE said... November 2, 2009 1:46 AM

Dr.ஹாலிவுட் பாலா Ph.d.

சுப.தமிழினியன் said... November 2, 2009 2:10 AM

//@cable:நான் இதை புத்தகமாய் போட ரெபர் செய்திருக்கிறேன்..//

cable அண்ணே கட்டாயம் செய்யனும்.

அண்ணன் பாலாவுக்கு எழுதியதற்கும்
கேபிள் அண்ணனின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்...

Arunachalam said... November 2, 2009 5:45 AM

நண்பர் பாலா, ஒரு சிறந்த தொடரை முழுமையாக முடித்து இருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இன்று தான் நான் இந்த தொடரை தமிழிஷில் பார்த்தேன்.. ஒரு ரெண்டு மணி நேரம்... 18 பதிவுகளையும் படித்து விட்டேன்... விறு விறுப்பான நடை... தெளிவான விவரணங்கள்... 'pixar' பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் யாருக்கும் இது ஒரு மிக அருமையான பதிவு... 'cable' சங்கர் மற்றும் சுப. தமிழினியன் அவர்கள் சொன்னது போல இதனை ஒரு புத்தகமாகவே போடலாம்... உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்.... நம்பிக்கையோடு அருணாசலம்

வண்டிக்காரன் said... November 4, 2009 2:38 PM

The Pixar Story (2009)

A film by
Hollywodd Bala

"Great Work"

ஹாலிவுட் பாலா said... November 4, 2009 2:47 PM

@கிஷோர்: ஒன்னியும் படிக்காம... படிச்ச மாதிரி டகால்டி கொடுக்கறீங்களா? :)

@சுப.தமிழினியன்: அண்ணாத்த வுடுங்க... சார்! நான் பொழச்சி போறேன்! :)

@அருணாச்சலம்: உங்க பாராட்டிற்கு நன்றி! படித்த அத்தனையும் இங்க சொல்லிடனும்னுதான் ஆசை. 100 பதிவா போய்டும்! :)

புத்தகம் வர்ற அளவுக்கு எல்லாம் இதில் மேட்டர் இல்லை! :)

@வண்டிக்காரன்: நன்றி தல! :) அலப்பரையை ஆரம்பிங்க சீக்கிரம்! :)

vijay said... February 4, 2010 8:01 AM

ஆமா... டெய்லி ரூம் போட்டு யோசிப்பீங்களா இல்ல மாசத்துக்கு ஒரு தடவை போட்டு மொத்தமா யோசிப்பீங்களா :)

கலக்குறீங்க தல...

Suresh said... February 9, 2010 5:08 AM

Kadantha rendu varama unga blog la ulla pala padangalain vimarasanam parthu athai download seithu parthu vitu marupadi vimarsanam padichaen miga arumai endru oru variyil ungalin ullaipu, rasanai, eluthu ellathaiyum thanks solla mudiyala, i want to say more than than that. Thanks a lot bala, romba nermaya irunthathu, nalla padangalai pattri oru thivira cinema rasigaroda nerla pesi urai adina anubavama irunthathuithu.

Suresh said... February 9, 2010 5:09 AM

Kurpia pixar enakku romba piditha productions avangala pathi solli oru eluchiyae erpaduthi vittirgal, kudiya viravil mail la santhipom mail to suresh.sci@gmail.com

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... June 26, 2010 1:36 PM

//
அப்படிப் பார்ப்பவர்களில்..., அவர்கள் பார்க்கும் படங்களை விட, நாற்பது வருட அட்வான்ஸ்ட் டெக்னாலஜியில், நான்கு மடங்கு அதிக உழைப்பில் உருவானவை.. அனிமேஷன் படங்களும்/காமிக் புத்தகங்களும் என... இதைப் படித்த யாராவது ஒருவர் உணர்ந்திருந்தால்.. கூடப் போதும். அதை இந்தத் தொடரின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.//

சும்மா ஒரு படத்தை எடுத்துட்டு, வித்தியாசமா பண்ணிட்டோம், கிழிச்சிட்டோம்னு பீத்திக்கிட்டு திரியற நம்ம ஊரு டைரக்டர்கள் காதுல உரைக்கிற மாறி சொல்லுங்க...

//I still feel I don't own anything at all!]//
பெருந்தன்மை என்கிற வார்த்தை ரொம்ப சிறியது...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... June 26, 2010 1:47 PM

கடைசியாக இந்த தொடரை எழுதிய உங்களுக்கும், உங்களை ஊக்கப் படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

யோசிப்பவர் said... July 6, 2010 7:02 AM

ஹாலிவுட் பாலா,
இதுவரை உங்கள் ப்ளாக் பக்கம் நான் வந்தது கிடையாது. டாய் ஸ்டோரி 3 பற்றிய இந்தப் பதிவு படித்துக் கொண்டிருக்கும்பொழுது கிடைத்த லிங்க் மூலம் இந்தத் தொடரைப் படிக்க ஆரம்பித்தேன். நான் Finding Nemo பார்த்த பொழுதிலிருந்தே பிக்ஸாரின் படங்களை தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். பிக்ஸாருக்கும் டிஸ்னிக்கும் இருந்த ஐந்து பட ஒப்பந்தம், டாய் ஸ்டோரி 2 வி்வகாரம், டிஸ்னி-பிக்ஸார் ஆனது என்று மேலோட்டமான சில விஷயங்கள் மட்டும் தெரியும். இப்பொழுதுதான் இவையெல்லாம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கு நன்றி!!!

இதை கொஞ்சம் டிங்கரிங் பார்த்தால்(ப்ளாகிற்கு மாட்டுமே தகுந்தாற்போல் எழுதியிருக்கும் சில வரிகள்) புத்தகமாகவே போடலாமே. பத்ரியை காண்டாக்ட் செய்து பாருங்களேன். இந்தக் கட்டுரையின் நடை கூட மாற்றாமல் புத்தகமாக வர அதிகம் வாய்ப்பிருக்கிறது.

முடிந்தால் என்னையும் காண்டாக்ட் செய்யவும். எனது மெய்ல் ஐடி yosippavar@gmail.com

ஹாலிவுட் பாலா said... July 7, 2010 11:48 AM

பிரகாஷ்.. ஏகப்பட்ட கமெண்ட்டை போட்டுத் தாக்கியிருக்கீங்க!! ரொம்ப நன்றி தல. அந்த ரேஞ்சுக்கெல்லாம்... நான் வொர்த் இல்லை. சத்தியமா!! சொன்னா நம்புங்க.

---

யோசிப்பவர்,

ஸாரிங்க தல. எனக்கு புத்தகமா இதை கொண்டு வரும் எண்ணம் நிச்சயம் கிடையாது. PDF-ஆ வெளிவரும்.

நீங்க சொன்ன மாதிரி, புக்கா வர இதில் நிறைய மாற்றங்களும், என் ஸ்டைல் ரைட்டிங்கையும் மாத்துற மாதிரி இருக்கும்.

எனக்கு அதில் விருப்பமில்லை. ஏற்கனவே கேபிள் சங்கர் ரொம்ப முயற்சி பண்ணினார். என் பதில் எப்பொழுதும் “ஸாரி”.

உங்கள் பாராட்டுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil