இது ஒரு யுனிவர்சல் சப்ஜக்ட்யா...! அதுக்கு என்னென்ன வேணும்?
கண்டிப்பா.. ஒரு ஸ்பானிஷ் மூஞ்சி வேணும் : செக்!
சப்ப மூக்கு சைனாக்காரன் இல்லாமயா? : செக்!
இந்தியாவை காட்டாம வேலைக்காவுமா? : செக்!
ஒரு கருப்பு ஹீரோ.. ஒரு வெள்ளை ஹீரோ : செக்!
உயிர வுடுறதுக்குன்னே.., ஒரு பத்து கேரக்டர்கள்: செக்!
தியாகம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி: செக்! செக்!
PG13 தான் கிடைக்கும். PG-ஐ கவர் பண்ண ரெண்டு குட்டி பசங்க : செக்!
ஒட்டு மொத்த உலகத்தையும் அழிக்கனும்: செக்!
அந்த அழிவு அமெரிக்காவுல இருந்துதான் ஆரம்பிக்கனும்: செக்!
செண்டிமெண்ட்: செக்!
செண்டிமெண்ட்: செக்!
செண்டிமெண்ட்: செக்!
செண்டிமெண்ட்: செக்!
செண்டிமெண்ட்: செக்!
.
.
.
கதை: ஸ்டார்ட் கேமரா! ஆக்ஷன்!!!
உடனே... உலகத்தில் உள்ள பெரிய பெரிய பணக்காரங்க கிட்ட இருந்து 1 பில்லியன் யூரோ வாங்கிகிட்டு, சய்ண்டிஸ்டுங்க எல்லாம் சேர்ந்து... பெரிசா.. மூணு கப்பல் கட்ட ஆரம்பிக்கிறாங்க (ஆர்க்). இந்த கப்பல் மேட்டரை யாராவது வெளிய சொல்லப் பார்த்தா.. அவங்க பொசுக்குன்னு உயிர விட்டுடுறாங்க.
இன்னொரு ஏரியால.. ஜான் புத்தகம் எழுதறாரு. ஆனா... லிமொஸின் ட்ரைவரா வேலை பார்க்கறாரு. டைவர்ஸ் ஆய்டுச்சி. அவருக்கு ஒரு பையன்.. ஒரு பொண்ணு. பழைய வைஃபுக்கு ஒரு காதலன்.
ஜானுக்கும்.. ஒரு கட்டதுல... உலகம் அழியற மேட்டரு, மேட்டர் தெரியுது. அப்புறம்தான்... நீங்களே பார்த்தீங்களே! அந்த அஞ்சு நிமிட வீடியோவை!! படத்துல.. இன்னும் ஒரு 3-4 நிமிஷம் அதிகம். இவங்க.. எங்க போனாலும்....... அது காரா இருந்தாலும் சரி...., பஸ்ஸா இருந்தாலும் சரி...., ஃப்ளைட்டா இருந்தாலும் சரி.....!! அவங்க ஏரியா தாண்டுற வரைக்கும்...., பூமி மாதா.. பொறுத்துக்கறாங்க. ஏரியா தாண்டிட்டா.. பொங்கிடுறாங்க.
அப்புறம்... ஜானும்.. அவர் கோஷ்டியும்.. சைனாவுல கட்டிகிட்டு இருக்கற... அந்த கப்பலுக்கு தஞ்சம் போகப் பார்க்கறாங்க. அமெரிக்க ஜனாதிபதி.. தன்னோட உயிரைப் பத்திக் கவலைப் படாம... மக்களோட மக்களா மண்டைய போட்டுடுறாரு. சைனாவுக்கு போனா... கப்பலுக்குள்ள போறதுக்குள்ள... தாவு தீந்துடுது. ஜானுக்கு இல்ல.. நமக்கு!
போய்டுறாங்க! கதவை மூடப் பார்த்தா.... அம்மாம் பெரிய கப்பல் கதவை.. தக்குளூண்டு கயிறு தடுத்துடு. சுனாமி வருது... எரிமலை வெடிக்குது. யார் யாரோ.. சாவறாங்க.. யார் யாரோ... தியாகம் பண்ணுறாங்க......, “பரதேசிப் பயலே... பத்து செகண்டுல அணுகுண்டு வெடிக்கப் போவுதுடா... அந்த பச்சை வொயர கட் பண்ணுடா” ன்னு கமாண்டு கொடுத்தா..., கம்மனாட்டி.... ஒம்போது செகண்டுக்கு.... பழைய பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்துகிட்டு இருக்கான்.
அப்புறம்... Roland Emmerich படங்களுக்கு க்ளைமேக்ஸை பத்தி சொல்லனுமா? அப்பிடியே கம்ப்யூட்டர்ல... “இங்க பாரு.. தண்ணியெல்லாம்.... வேகமா வடிஞ்சிகிட்டு இருக்கு” -ன்னு ஸ்க்ரீனை காட்டி.... உலகம் 0001 -ல ஆரம்பிக்குதுன்னு.... சொல்லிடுறாங்க.
இந்த Roland -க்கு உலகத்தை அழிக்கறதை விட்டா... வேற வேலையே கிடையாதுங்க.
இவுரு படத்துல நடிச்சா... ஆஸ்கராவது... பூஸ்கராவதுன்னு... நடிச்சவங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அந்த குட்டீஸ் உட்பட! எல்லாம்.. வீல்.. வீல்னு கத்திகிட்டே.. ப்ளூ ஸ்க்ரீன்ல ஓடுறாங்க. குதிக்கிறாங்க!! எமோஷனலா பேசறாங்க. அதுலயும்.... இங்கிலாந்து ராணிம்மா.. ஒரு செண்டி டயலாகை பேசிட்டு..., சாவகாசமா ரெண்டு செகண்ட் கழிச்சி கன்னத்து சதைய ஒரு ஆட்டு ஆட்டராங்க பாருங்க. புல்லரிச்சிரிச்சி!
என்ன பண்ணியும்...., எவ்வளவு கண்ட்ரோல் பண்ணியும்... உடம்பை முறுக்கி கிட்டுதான் படம் பார்க்க முடியுது. Ground Breaking -ன்னு சொல்லுவாங்களே! அப்படி இருக்கு.... விஷுவல் எஃபெக்ட் எல்லாம்!! செஞ்சவங்களுக்கு சுத்திப் போடனும். அப்பவும்.. தண்ணிய காட்டும் போதெல்லாம்... தசாவதாரம்தான் நினைவுக்கு வருது. அந்த அளவுக்கு மோசமில்லீன்னாலும்..., செயற்கையா தெரியுது.
அதுவுமில்லாம பாருங்க..! அது கடினமான நிலமா இருந்தாலும் சரி.... மணலா இருந்தாலும் சரி.., கட்டடமா இருந்தாலும் சரி..... எல்லாமே.. ஒரே பேட்டர்ன்ல தான்... பீஸ் பீஸா இடியுது.. உள்ள போகுது. ஒரு வேளை பூமி மாதாவும்... ஸ்பெஸிஃபிகேஷனை யுனிவர்சல் ஆக்கிக் கிட்டாங்களோ என்னமோ தெரியலீங்க.
ஸ்க்ரீன் ப்ளே..: ஆங்...! பழைய பேப்பர் கடையில.. இவரோட.. இண்டிபெண்டண்ட்ஸ் டே-வோட ஸ்க்ரிப்ட் கிடைச்சிருக்கும் போல. மனுசன் ஒன்னு விடாம... அதுல இருந்தே எடுத்துக் கிட்டாரு. ஆனா.. பாருங்க.... இதுல..பிழிஞ்ச.. செண்டிமெண்டுக்கு..... அந்த சுனாமியே தேவலாம்னு ஆய்டுச்சி. அப்படி செண்டி சீன் வரும்போதெல்லாம்... தியேட்டர்ல.. குபீர்ன்னு சிரிப்பு. கொன்னுபுட்டாரு போங்க!
பின்ணணி இசை..... அட போங்க தல!!!
மாற்றுப் பார்வை பார்க்கலைன்னா.. அதெல்லாம் விமர்சனமே இல்லீயாமே?! பார்த்தீங்கன்னா..., மேட்டரை கண்டு பிடிக்கிறது நம்ம இந்தியர். அமெரிக்கா அவரை டீல்ல உட்டுடுது. அவரும்.. அவரு பொண்டாட்டியும்... பையனுக்கு முத்தம் கொடுத்துகிட்டே... பரலோகம் போய்டுறாங்க.
கப்பல்.... சைனா தயாரிப்பு. பேச்சுக்கு மூணு சைனாக்காரங்க மட்டும்.. கப்பல்ல காப்பாத்தப் படுறாங்க. மத்தவங்க.. எல்லாம்.... ஐரோப்பா & அமெரிக்கா காரங்க மட்டும்தான். அதாவது.. ரோலண்ட் தன்னோட... இனவெறிய காட்டிட்டாரு. அவரு கணக்குப் படி... 0001-ல ஒரு இந்தியன் கூட உசுரோட இருக்கக் கூடாது. மாற்றுப் பார்வை எப்பிடிங்க?
இங்க பாருங்க தல...! நான் என்ன சொன்னாலும்.. நீங்க இந்தப் படத்தை பார்க்காம விடப் போறது இல்ல...! அதனால.. தாராளமா போய் பாருங்க. விஷுவலுக்காகத்தான் நீங்க போகப் போறீங்க. அதுக்காகத்தான் நானும் போனேன்.
அது நல்லா... இருக்கு..! ஆக்ஷுவலி... ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு! வேற என்ன வேணும் சொல்லுங்க?!
2012 = Visually Stunning
விவரங்களுக்கு......

56 தியேட்டர் கமெண்ட்ஸ்:
மணி... காலைல 4.30 ஆய்டுச்சிங்க. நான் போய் தூங்கிட்டு வாரேன். வர்றதுக்குள்ள.. இதுவும் ஃபேமஸாகியிருக்கனும் சொல்லிப்புட்டேன்.
போன பதிவுகளுக்கு... சம்பளம் கொடுக்கற இடத்துல இருந்து காலையில்... பதில் போடுறேன். கோவிச்சிக்காதீங்க.
//இங்க பாருங்க தல...! நான் என்ன சொன்னாலும்.. நீங்க இந்தப் படத்தை பார்க்காம விடப் போறது இல்ல...!//
புரிஞ்ச சரி பாலா
Bala, I would say this is something like
rajinikanth movie. No logic, full magic. :)
Stunning, Memorable visual effects!!..
Worth for my 8$. I enjoyed it though it have
plenty of flaws. Yeah, that climax kiss scene was really irritating :).. and also Mr.President
scenes :).
2012 முதல் விமர்சனம்..
கலக்கலான விமர்சனம் தல
you are 100% right. it is looks like a comedy movie in someplaces. athu ellam konjam thaduthiruntha innuam nalla irunthurukkalaam.
அப்புறம், மாற்றுப்பார்வை ஜீப்பர்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தல எங்களையெல்லாம் எப்படி காப்பாத்துறீங்க? நீங்க
வாழ்க வளமுடன் தல
நான் பார்த்தது இந்த
Nostradamus: 2012
ஐ மிஸ்டேகென் யூஸீ.
ஓட்டுக்கள் போட்டாச்சி.
பதிவும் ப்ரபலமாயாச்சி
ஹாலிவுட் பாலா போட்டு பிரபலமாகாட்டி எப்படி?
HI bala I hope u are also a Raakkozhi like us. However superb Vimarsanam wish u all the best.
PS3 la PS2 software load panna mudiuma????
பாஸ்!
எக்ஸாமுக்கு சுத்தமா படிக்கலை. இனி ஒரு ரெண்டு வாரமாவது இங்கனயெல்லாம் வரப்போறதில்லை.. சோ, சீ யூ சூன். எழுதிகிட்டே இருங்க. நான் ரீடர்ல வாசிச்சுகுறேன்.
//மாற்றுப் பார்வை எப்படி?//
சூப்பர்.
பிரபலமாக்கியாச்சு பாஸ்.
இப்போ தியேட்டருக்கு போய் பாக்குறது வேஸ்டுன்னு சொல்லுங்க!
/ “பரதேசிப் பயலே... பத்து செகண்டுல அணுகுண்டு வெடிக்கப் போவுதுடா... அந்த பச்சை வொயர கட் பண்ணுடா” //
பாவி பாலா..அவனா நீயீ...தலைவரே .உண்மையில் சூப்பர்..பகடி வேற பின்னுறீங்க...இங்க ராமநாரயணன் தமிழ்ல டப்பறாரு...
பாலா ..உனக்கும் ஒரு மைனஸ் ஓட்டுப்பா...
call me @9193400 89989
//ரோலண்ட் தன்னோட... இனவெறிய காட்டிட்டாரு. அவரு கணக்குப் படி... 0001-ல ஒரு இந்தியன் கூட உசுரோட இருக்கக் கூடாது.//
ஒரு இந்தியன் புத்திசாலி என்பதை தவிர, வேறு எந்த ஆணியும் புடுங்கல................
இந்த மாதிரி படத்துல கதைலாம் பாக்க கூடாது தல... நானும் ஒரு உலக படத்துக்கு விமர்சனம் பண்ணிருக்கேன் முடிஞ்சா படிங்க தல..
சொன்ன மாதிரி எல்லோரும் பார்க்க தான் போறோம்..
2012 kellam periya expectation enaku illa anna...
epdiyum vishual than nalla irukkum...
naan next week paakalam nu mudivu panniten...
inga reservation pinnuthu... mass hero opening mathiri padathuku opening... :)
ஒரு நல்ல காமெடி படத்தை போய் பார்க்க வேண்டாம் என்று சொல்றிங்களே. என்ன தல...?
என்ன இருந்தாலும் உலகம் அழியிறதை பார்க்கமா இருக்க முடியுமா தல! ;)
அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான் பாலா,சினிமா,வாழ்க்கை எல்லாமே.
வாழ்க்கையில் கூட,ஜனனமும்,மரணமும் எல்லோருக்கும் அடிப்படையில் ஒன்றுதான்.
நடுவில்? இருப்பது பட்ஜெட்தான்!
சின்ன பட்ஜெட் என்றாலும்,பெரிய பட்ஜெட் என்றாலும்,நாம் கொடுக்கும் டிக்கட்டும்,நாம் செலவு செய்யும் கம்ப்யூட்டர் நேரமும் ஒன்றுதான்,ஒன்றைத் தவிர.
இயக்குநர்,தயாரிப்பாளர் இருவரின் இடுக்கண்களைத் தவிர.
காதல் ஒன்றுதான் என்றாலும், பொள்ளாச்சியில் பிறந்த பையன் ஆனைமலையில் பிறந்த பெண்ணைப் பார்த்துக் காதலிக்கும் சீன் வேறு,நியூயார்க்கில் வாழும் அமெரிக்கப் பெண்ணை நம் ஊரில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கரூர்ப் பையன் காதலித்து மணம் புரிவது வேறு.
மரணம் ஒன்றுதான் என்றாலும்,பைக் விபத்தில் சாவதைக் காட்டுவது வேறு,அபோல்லோ13 வெடித்துச் சாவதைக் காட்டுவது வேறு.
எந்த மரணத்தை மக்கள் ஜாஸ்தி பார்க்க விரும்புகிறார்கள்,யார் சாவதை மக்கள் ஜாஸ்தி பார்க்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து பட்ஜெட் எகிறும்.
பட்ஜெட் எகிறும் போது நெஞ்சம் நெகிழ்ந்து வடியும் கண்ணீர்த் துளிகளைப் பற்றிப் போடும் தப்புக் கண்க்குகள் சில சமயங்களில் நேர்ந்து விடும்.
அது பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகழ்வது சாதாரணம்.ஆனால் புள்ளி விவரங்கள் பெரிய ப்ட்ஜெட் படங்கள்தான் லாபகரமான சினிமா என்று திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
2012 கூட அந்த ஜாதி என்று நினைக்கிறேன்.
சூதாட்டத்தில் அர்த்தம் என்ன இருக்கிறது,லாபத்தைத் தவிர.
உங்கள் பாஷையில் TAG LINE IS:
சினிமா, மக்களுடன் ஆடும் சூதாட்டம்.
திங்கட்கிழமை பார்க்க போறேன்..
baala, appo intha palam pulikkumaa?
பார்த்துட்டீங்களா.. Preview show-வா? கலக்குறீங்க ..
Yahoo Critics - C users B+
"2012 = Visually Stunning" -True
இப்பத்தான் PS3,Tversity யெல்லாம் செட் ஆகி இருக்குது!மெல்ல மெல்ல ஊர்ந்து படம் பார்க்க வந்துருவோமில்ல:)
நாளைக்கு போறோம்ல..!
@ஸ்ரீ: புரிஞ்சி ரொம்ப நாள் ஆச்சிங்க! :)
@யாசின்: 100% சரியான வார்த்தைங்க! ஆனா எப்பிடி $8-க்கு பார்த்தீங்க. இங்கெல்லாம் $10. $8-க்கு வொர்த். $10-க்கு இல்லை! :( :( $2 போச்சி!
@அகல் விளக்கு: மிக்க நன்றிங்க! :) எதோ நம்மால முடிஞ்ச மறுபார்வை. யாருக்காவது இதை டெவலப் பண்ண உதவுமில்ல? :)
@இரவு கவி: முதல்ல.. உங்ககிட்ட இருந்து.. பேர் எப்படி வைக்கனும்னு கத்துக்கனும்! :) :) அருமை!
@கார்த்திக்கேயன்: ஓட்டுப் போட்டு என்னை வாழ வைக்கும் அமீரகம் வாழ்க வாழ்க! :) :)
எனக்கு.. இந்த நாஸ்டர்டாமஸ் ஜோக்கை எல்லாம் பார்க்க பிடிக்கிறது இல்லீங்க தல! அதுக்கு இந்தப் படத்தைக் கூட இன்னொரு தபா பார்த்துடலாம். ;)
@முரளி: திரும்ப கால் பண்ண பார்த்தா ரொம்ப டைம் ஆய்டுச்சிங்க தல! நாளைக்கு நீங்க ஃப்ரீதானே.. கால் பண்ணுறேன்! :)
@கேட்: என்ன சாஃப்ட்வேர் - பத்தி நீங்க இங்க குறிப்பிடுறீங்க தல? கொஞ்சம் ஸ்பெஸிஃபிக்கா சொல்ல முடியுமா? பதிலை கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்.
பாராட்டிற்கு நன்றி! :) :) நான் ராக்கோழிதாங்க! :)
@வெங்கி: ஆகட்டுங்க வெங்கி! ஆல் த பெஸ்ட்!!!! :)
@சுப. தமிழினியன்: நன்றி.. நன்றி.. நன்றி! :) :)
@வால் பையன்: ஆஹா.. இல்லீங்க தல. இதை தியேட்டர்ல மட்டும்தான் பார்க்கனும்! இல்லீன்னா... இந்த படத்துல பார்க்க வேற எதுவுமே கிடையாது.
@தண்டோரா: தல.. ஏரியா பக்கம் ரொம்ப நாள் கழிச்சி.. வந்து மூணு பின்னூட்டம் போட்டு கலக்கிட்டீங்க! :)
மைனஸ் எல்லாம்.. ரொம்ப நாளா குத்தறாங்க. ஒரு வேளை உ.த-வா இருக்குமோன்னு ஒரு டவுட்டு! :)
@ஊடகன்: நம்ம ஏரியாவுக்கு ‘ஆணி’யெல்லாம் அவசியமே இல்லீங்க! :) :) புரிஞ்சிதா? :)
@பேநா மூடி: படிச்சேங்க தல..! அது.. 2012-ஐ விட பெரிய டெரர் படம்! கலக்கிட்டீங்க! :) :) அடுத்தப் பதிவுக்கு வெய்ட்டிங்.
@வினோத்: தியேட்டர்ல.. தியேட்டர்ல...!!!
@கனகு: பாருங்க கனகு. தியேட்டரில் மட்டும். இந்தியா ஓப்பனிங் பத்தி, கேபிள் சொன்னாரு. அசந்துட்டேன்! :) :)
@விஜய்: நான் எங்கீங்க.. பார்க்க வேணாம்னு சொன்னேன்?! :) :)
@கோபி: வுடாதீங்க.. கோபி..! :) :)
////////////
சின்ன பட்ஜெட் என்றாலும்,பெரிய பட்ஜெட் என்றாலும்,நாம் கொடுக்கும் டிக்கட்டும்,நாம் செலவு செய்யும் கம்ப்யூட்டர் நேரமும் ஒன்றுதான்,ஒன்றைத் தவிர.
இயக்குநர்,தயாரிப்பாளர் இருவரின் இடுக்கண்களைத் தவிர.
///////////
ஹா.. ஹா.. ஹா.. உண்மைதாங்க சார். ஆனா.. அவங்க ‘இடுக்கண்’னில்.. நாம ‘நகுக’றோம்.
ஸீபக்ல் பர்க், ரானல்ட், லூகஸ் யாரா இருந்தாலும்.. இப்படி.. ‘கண்ணீர்’ திரைக் கதையை.. டிபிகலா வச்சிருக்காங்க. எல்லா படத்திலும் ஒரே மாதிரி காட்சிகள்.
Day After Tomorrow பார்த்ததுக்கும்.. நேத்து 2012 பார்த்ததுக்கும்... ஆடியன்ஸ் கிட்ட இருந்து வந்த ரெஸ்பான்ஸில் நிறைய மாற்றங்கள்.
ஆனா.. ரெண்டுமே.. ஒரே மாதிரி கதையம்சம் & திரைக்கதை யுக்திதான். இந்தப் படம்... ஆரம்ப வாரங்களிலேயே.. போட்ட காசை எடுக்கலாம்.
ஆனாலும்.. இங்க எல்லோரும் சிரிச்ச காட்சிக்கு.. இந்தியாவில் கை தட்டி ரசிச்சாங்களாம். என்னன்னு நினைச்சி.. யாருக்குன்னு படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுத முடியும் சொல்லுங்க! :) :)
நீங்க சொன்ன மாதிரி......
“சினிமா, மக்களுடன் ஆடும் சூதாட்டம்.” - 1000000% உண்மை!!!
@கிஷோர்: ரைட்டு! :) :)
@முரளி: புளிச்சப் பழம் தாங்க! ஆனா புளிக்கும்னு தெரிஞ்சிதானே சாப்பிடுறோம். போய் சாப்பிட்டுப் பாருங்க, தல!
@வண்டிக்காரன்: நிறைய படங்கள், ப்ரீவியூ ஷோ தாங்க பார்ப்பேன். இப்ப கொஞ்சம் கம்மியாகிடுச்சி. :) :)
@ராஜ நடராஜன்: ஆஹா.. இன்னும் மார்ச்சில் தானா? :) வாங்க... வாங்க.. வெய்ட் பண்ணுறோம்! :)
@உ.த: கலக்குங்க உ.த!!!! :) :)
என்ன பாலா.. இப்படியா..?? ரொம்ப எதிர்பார்த்தோம்... ?????
பூச்சி.., இந்தப் படத்துல எதிர்பார்த்தது.. ரொம்ப நல்லாவே வந்திருக்குங்க! :)
அப்புறம் இந்த FM மேட்டர் என்னன்னு சொன்னீங்கன்னா பரவாயில்லை!
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
ரைட்டு... அப்ப இந்தப் படத்தையும் டீல்ல வுட்டுரலாம் :)
ஹைய்யா.. சூப்பர்.. உங்களூக்கும் மைனஸ் ஓட்டு விழ ஆரம்பிச்சுடுச்சேய் :)
வாழ்த்துக்கள் பாலா!
அன்பு பாலாவுக்கு
நேற்று இரவு காட்சிக்கு படத்துக்கு போனேன் அரங்கம் நிறைந்த் காட்சியை பார்த்தவுடன் ஒன்னு தோனுச்சு உலகம் அழியரத பார்க்க என்னை போல் எல்லோருக்கும் ஆசை இருக்கும் போல.உங்கள் விமர்சனம் 100 க்கு 100 உன்மை.எனக்கு படத்துல பிடிக்காத முதல் விசயம் அமெரிக்க பிரசிடண்ட்டாக வரும் அந்த கதாபாத்திரம் பின் அவருடைய காஸ்டூயும் ஏதோ அமெரிக்காவில் வேலை இழந்தவன் போல். என்ன கொடுமை என்றால் Hollywoodடும் அரசியல்வாதிக்கு சொம்பு அடிக்க்ராங்க ஓபாமா ஒரு கருப்பர் என்பதர்க்காக படத்திலும் ஒரு தியாகமே மொத்த உருவம் போல் ஒரு கருப்பர். எப்படி கலைஞர் தசாவதாரத்தில் வந்தார்ரோ, எல்லா இடத்திலும் அரசியல்வாதிக்கு ஆயில் போடுர பாலிசி இருக்கு. கேபில்சங்கர் என்ன சொல்ரார்னு பார்போம்.
நன்றி
பேசறாங்க. அதுலயும்.... இங்கிலாந்து ராணிம்மா.. ஒரு செண்டி டயலாகை பேசிட்டு..., சாவகாசமா ரெண்டு செகண்ட் கழிச்சி கன்னத்து சதைய ஒரு ஆட்டு ஆட்டராங்க பாருங்க. புல்லரிச்சிரிச்சி!/////////////
செம காமெடி!
நல்ல வேளை பரிட்சையால பிழைச்சேன்!
பால சார் விமர்சனம் அருமை!
விசுவல் எபக்ட்,க்காக படம் பார்த்தேன் அந்தவகையில் நல்லாருக்கு.
அதென்ன கொடுமை புதுசா உருவாக்கற உலகத்துல ஒரு இந்தியனுக்கும் இடமில்லயா? அட நம்ம”மன்மோகன்சிங்”கு கூட இடமில்லயா என்னயா அநியாயம இருக்கு!!!
மிருகங்கள எல்லாம் கட்டி தூக்கிட்டு பொறானுவளே போகட்டும்.
புதிய உலகத்துல எல்லா மொழிகளும் தழைத்திருக்க ஒன்னூமே பண்ணலயே?
என்னமோ போங்க எல்லாம் ரோலண்டுக்கே வெளுச்சம்!
Bala, itz in singapore. Only in weekend, the ticket price is 10$, rest of the days itz between 6.50$-8.00$ depends upon the theatre.
But Rajini and Kamal movies will go for 15$ in the first 2-3weeks. Have nice weekend.
அவங்களும் உலகம் அழியஅறதுன்னா வேற எப்படி எடுப்பாங்க.........நல்ல சென்டிமென்டுக்கு ஸ்பீல்பேர்க்க அடிக்க யாராலும் முடியாது
பாலு, 2012ல உலகம் அழியிலனா... வேற எப்ப அழியுமாம் உலகம்? அத பத்தி எதாவது சொல்றானுங்களா? ஏன்னா... அதுகுள்ள கல்யாணம் பண்ணிடனும் நானு!!
உங்களுக்கு நான் எப்பவோ ஃபாலோவர் ஆகிட்டேன்.. ஆனா, உங்க பதிவு என் டேஷ்போர்டுல அப்டேட் ஆக மாட்டேங்குது! என்ன எழவுன்னே தெரியுல!! உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பாலு..
கலக்கல் ஹாலிபாலா.... நானும் பார்த்துபுட்டேன். தமிழில். டப்பிங் அருமையோ அருமை. அவுங்களுக்கும் சுத்திப் போடலாம். :)
எனது பார்வை காலை 10:45 க்குப் பிறகு - இந்திய நேரப்படி வெளியிடப்படும் :).
கலையரசன், November 15, 2009 6:43 AM
பாலு, 2012ல உலகம் அழியிலனா... வேற எப்ப அழியுமாம் உலகம்? அத பத்தி எதாவது சொல்றானுங்களா? ஏன்னா... அதுகுள்ள கல்யாணம் பண்ணிடனும் நானு!!
உங்களுக்கு நான் எப்பவோ ஃபாலோவர் ஆகிட்டேன்.. ஆனா, உங்க பதிவு என் டேஷ்போர்டுல அப்டேட் ஆக மாட்டேங்குது! என்ன எழவுன்னே தெரியுல!! உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க பாலு....
டேய் மாப்பி அப்ப புத்திசாலித்தனமா கூகிள் ரீடர்ல படிடா,ஆமாம், உனக்குத்தான் எப்பவோ கல்யாணமாகிடுச்சேடா? ஏண்டா இப்படி அலப்பரய குடுக்குற?
நம்பிடுங்க தல கலைக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.:))))
ஹாய் பாலா.. நான் ஒரு வீடியோ டவுன் லோட் பண்ணுனேன்.. அது DVIX file.. அதை எப்படி mpg க்கு convert பண்றது? any video converter ல add பண்ண முடியல.. அப்படி ஒரு file இருக்குனு காமிக்க மாட்டுது.. என்ன காரணம்.. யார் செய்த தாமதம்?
ஆனா அந்த file எதாவது பிளேயர் வச்சி ஓபன் பண்ணுனா வாய்ஸ் மட்டும் கேக்குது. video வரல..
@நன்றி தமிழ்நெஞ்சம்! :)
@சென்ஷி: ரொம்ப நாள் கதை அது! :) ஒருவேளை உ.தவா இருக்குமோன்னு ஒர் டவுட்டு.
@சரவணன்: ஜனாதிபதி கேரக்டரை பத்தி சரியா சொன்னீங்க. எனக்கும் அவரைப் பார்த்தா ராப்பிச்சைக்கு.. கோட்டு போட்ட மாதிரிதான் இருந்துச்சி! :)
@பப்பு: அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கங்க! :)
@சரவணன்: :) :) ஆனா.. ஒரு திருத்தம். படமெல்லாம்.. ஒபாமா ப்ரஸிடெண்ட் ஆகறதுக்கு முன்னாடியே தயாராகிடுச்சி. போஸ்ட் ப்ரொடக்ஷன் மட்டுமே ஒரு வருசத்துக்கு மேல நடந்ததுன்னு நினைக்கிறேன்.
ஒருவேளை... ஒபாமா வரலாம்னு கணிச்சி, அந்த கேரக்டர் போட்டிருக்கலாம். அது வெள்ளை கேரக்டரா இருந்தாலும்.. அவரும் கண்டிப்பா.. உயிரை விடுவாரு! :) :)
@யாசின்: :) காட்சா! அப்ப... நான் கொடுத்த காசு கொஞ்சம் கம்மிதான். நீங்கதான் நிறைய கொடுத்திருக்கீங்க! :) :)
@பாலவாசகன்: இங்க யாருக்குமே அதை எடுக்க வராதுங்க. ஸ்பீகல்பெர்க்கும்..., ஓவராதான் எடுப்பாரு.
@கலையரசன்: நீங்க கல்யாணம் பண்ணின பின்னாடி..., எப்படா.. அழியும்னு தான்.. வெய்ட் பண்ணிகிட்டு இருக்கப் போறீங்க. :) :) :)
ஸோ... உங்க கல்யாண நாள்ல இருந்து... உலகம் அழியற நாளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். :) :)
மீ.. வெய்ட்டிங்! ரெண்டுக்கும்! :) மறக்காம கூப்பிடுங்க தல!
=======
ஃபாலோவர் மேட்டர் எனக்கும் நடந்திருக்குங்க. பப்பு ப்ளாகில் நடந்தது. கூகிளை கேட்டாதான் உண்டு. :(
@உர்சுற்றி: படிச்சிட்டேனுங்கோவ்! :) :)
@கார்த்திக்கேயன்: என்னது கல்யாணம் ஆய்டுச்சா? அட ஆமாமில்ல..! தங்கமகள் இப்பத்தான் நினைப்புக்கு வருது. கர்ர்ர்ர்ர்ர்!
அவரு.. ரெண்டாவது மேட்டரை பத்தி பேசிக்கிட்டு இருக்காரா? எதுக்கும் அவங்க வைஃபுக்கு இந்த லிங்கை அனுப்பி வைங்க தல.
உலகம்... அழியற நாள்.. அவருக்கு உடனே... தெரிஞ்சிடும்! :)
கிஷோர்.. நான் கால் பண்ணினேன். உடனே கட் ஆய்டுச்சி. வேலைல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
மிஸ்ட் கால் கொடுங்க. போன்ல எக்ஸ்ப்ளெய்ன் பண்ணப் பார்க்கறேன்.
DivX-ஐ ஏன் Mpeg-ஆ கன்வர்ட் பண்ணனும்? அதை DivX-ஆவே பார்க்க வேண்டியதுதானே?
சவுண்ட் மட்டும் வர்றதுக்கு காரணம்.. தேவையான கோடக் இல்லங்கறதுதான்.
இந்த லிங்கில் இருந்து பேஸிக் பேக்கேஜை இன்ஸ்டால் பண்ணுங்க. சரியாகிடும். இல்லைன்னா... கால் பண்ணுங்க. சரி பண்ணிடுவோம்.
http://www.free-codecs.com/K_lite_codec_pack_download.htm
I'm planning to apply for Africa Visa... Ur suggestion Bala... lol :D
அட.. ஆமாங்க..! சூப்பர் ஐடியா..! ஆனா எந்த நாட்டுக்கு அப்ளை பண்ணுறது?
படத்தைப் பாத்துட்டேன். படம் - கிராபிக்ஸ் = குப்பை. இது என்னோட கருத்து.
நேற்று படம் பார்த்தேன்.வழக்கமா $5 டிக்கட்டுக்கு டிஜிட்டல் எபெக்ட்ன்னு சொல்லி $12 புடிங்கிட்டாங்க.விஷுவல் எபெக்ட் ஒன்றைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.இடைவெளி கூட இல்லாம படத்தை முடிச்சிட்டாங்க.
திரை அரங்கிலே மட்டும் பார்க்க வேண்டிய படம்.
@ராகவன்: குப்பைங்கற அளவுக்கு மரியாதை வச்சிருக்கீங்களே?! உங்களுக்கு பெரிய மனசுங்க தல! :) :) என்னை கேட்டீங்கன்னு வச்சிக்கங்க......... :)
@ராஜ நடராஜன்: அண்ணாத்த.. நீங்க சென்னைல இருக்கீங்கன்னே நினைச்சிட்டு இருக்கேன். சிங்கப்பூரா?
//@ராஜ நடராஜன்: அண்ணாத்த.. நீங்க சென்னைல இருக்கீங்கன்னே நினைச்சிட்டு இருக்கேன். சிங்கப்பூரா?//
அண்ணாத்தே!இருப்பிடம் குவைத் புரபைல்ல தூக்கிட்டேன் போல இருக்குது:)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
உங்களுக்கு ஓட்டு போடுற வயசாகலை... சரி..!!! கமெண்ட் போடறதுக்கு கூடவா???