11/08/2009

Antichrist (2009) [18+/-]





புது டிஸ்கி
: இப்பிடியே.. என்னை ‘push’ பண்ணினீங்கன்னா..., இனிமே.. ஜென்னா ஜேம்ஸன், ஜெஸ்ஸி ஜேன் படங்களுக்குத் தான்.. இந்த மாசம் விமர்சனம் (?!) வரும்... சொல்லிபுட்டேன்.... ஜாக்கிரதை!

இதெல்லாம்.. 18+ -ன்னு சொல்லி ஏன்டா எங்க மானத்தை வாங்கறன்னுதான் “கலாச்சார காவலர்கள்” நினைச்சிட்டாங்க போல. அதனால.. இனிமே.. எது 18+, எது 19+ -ன்னு எல்லாம் நீங்களே தீர்மானிச்சிக்கங்க (தலைப்பை கவனமா திரும்ப ஒருமுறை படிச்சிக்கங்க).


Dogme95 -ன்னு ஒரு இயக்கம் இருக்குங்க. “படமெடுக்க பத்து ரூல்கள்” -ன்னு சொல்லி... அவங்களாவே கொஞ்சம் ரூல் போட்டு வச்சிருக்காங்க. ‘ஹேண்டி கேமரா, நேச்சுரல் லைட், நேச்சுரல் சவுண்ட், நிஜமான எந்த மாற்றமும் இல்லாத லொகேஷன், நோ சிஜிஐ, இயக்குனரின் பெயர் போடாத படம்” -ன்னு மொத்தம் பத்து ரூல்கள்.

இதை உருவாக்கியதில் ஒருத்தர் Lars Von Trier -ன்னு ஒரு உலகப் புகழ் பெற்ற டென்மார்க் இயக்குனராம். நான் ஹாலிசட்டிக்குள்ளயே... குதிரை வண்டி ஓட்டிகிட்டு இருக்கறனால, மத்த ஆளுங்க படங்களை பார்க்கறது இல்லீங்க. இதுக்குதான் பூச்சி இருக்காரேன்னு விட்டுட்டேன் (பூச்சியின் உலக சினிமா ப்ளாகை படிச்சிட்டு, இயக்குனர் சேரன்.. அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கார். வாழ்த்து கிடைத்தற்கு வாழ்த்துகள் பூச்சி!).

Lars Von Trier - இவர் ஒரு பின்னவீனத்துவ வாதி போல தெரியுது. எடுத்தப் படம் புரியலைங்கறனால மட்டுமில்ல...., ஆனால் ஹாலிவுட் காட்டத் தயங்கும் (அல்லது அதுக்கெல்லாம் ஹாலிவுட்டுக்கு இன்னும் தைரியம் வரலை) பல “விஷயங்களை”...., அது ஆன்மீகம் ஆகட்டும், வன்முறையாகட்டும்..., செக்ஸ் காட்சிகள் ஆகட்டும்...., இவர் எப்பவும் தன்னுடைய ‘ஸ்கேலை’ கொஞ்சம் அதிகப் படுத்தித்தான் வச்சிருக்காராம்.


Antichrist: இது என்ன மாதிரி படம்னு தெரிய வேண்டாம்னா..., முதல்ல படத்தை போய் பார்த்துட்டு அப்புறமா வந்தீங்கன்னா கூடப் போதும். படத்தை பார்க்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி... கையோடு ஒரு டிக்‌ஷனரியையும் எடுத்து வச்சிக்கங்க.

ப்ரோலாக்.. எபிலாக் என, க்வெண்டின் ஸ்டைலைப் போலவே மொத்தம் ஆறு பிரிவுகளாகப் பட்டு, சொல்லும் கதையில், முதலும் முடிவும் மோனோக்ராமில்!

Unsimulated Sex : உடலுறவுக் காட்சிகளுக்கு, உடை முழுக்க கழற்றிவிட்டு, சும்மா.. வெறுமனே இடித்துக் கொண்டு, போலியாக உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல், “நேச்சுராலிட்டி”க்காக... உண்மையாகவே உடலுறவு கொள்ளுதலைத் தான் இப்படி சொல்கிறார்கள்.

இது அமெரிக்கப் படங்களில் மிக அரிதாக பார்க்கும் காட்சி. ஐரோப்பியப் படங்களுக்கு ரொம்ப சகஜம். Antichrist படமும் ஐரோப்பியத் தயாரிப்பு (டென்மார்க் - ஜெர்மெனி) என்பதாலும், இயக்குனர் Lars இதுபோன்ற காட்சிகளுக்கு பெயர் பெற்றவர் என்பதாலும்... படமுழுக்க, யாருக்கும் simulate செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது... முதல் காட்சியில் ஆரம்பித்து (டபுள்ஸ் உபயோகப் படுத்தியிருக்கிறார்களாம். இதுக்குக் கூடவா?).

Prologue: மெய்ன் ஸ்ட்ரீம் படங்களில் இப்படி ஒரு காட்சி ஆரம்பித்து நான் பார்த்ததில்லை. சூப்பர் ஸ்லோமோஷனில் அவனும்-அவளும் (இதுதான் பெயர்) ஷவரில் ஆரம்பித்ததை, கட்டிலில் முடிக்க, இடையில் இவர்களின் மகன் நிக் மரணத்தை தழுவுகிறான். அடுத்த ச்சேப்டர் ஆரம்பிக்கிறது!

Grief: அவளுக்கு, தன்னால்தான் தன் மகன் இறந்து விட்டான் என்ற மன அழுத்தம் & குற்ற உணர்வு (Grief) உருவாக ஆரம்பிக்கிறது..., கூடவே பிரச்சனையும்! ஆனால் இந்த குற்ற உணர்வில் வரும் வலியையும் அவள், உடலுறவின் மூலமே தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறாள்.

அவன் ஒரு சைக்கோ தெரபிஸ்ட்! தன் மனைவிக்கு பல தெரபிகளை நடத்தும் பொழுது, ஒரு தெரபியில்..., அவளுக்கு Eden என்ற மலைக் காட்டின் மீது பயம் இருப்பது தெரிகிறது. இந்தக் காட்டில்தான்... அவளும், மகன் நிக்-கும் போன கோடையை கழித்திருந்தனர்.
அந்த பயத்தை போக்க, அவனும்-அவளும் Eden -னுக்கு பயணிக்கின்றனர்.
Pain (Chaos Reigns): இந்த சேப்டர் ஆரம்பிக்கும் முன், இது எந்த மாதிரியான படம் என ஓரளவுக்கு தீர்மானிக்க ஆரம்பித்து இருப்பீர்கள். Eden-ல் புல் தரையில் கால் வைத்தவுடன்.. அவளின் பாதங்கள், ஷூவையும் தாண்டி சுட ஆரம்பிக்கின்றன. அவர்கள் தங்கியிருக்கும் மரக் குடில், சாதாரணமானது அல்ல என.. கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கிறது.

மனதை சரி செய்ய வந்த.. இடத்திலும்... மேலும்.. மேலும்.. அவளின் காமம் தலைக்கேற, வலியை சரி செய்யும் மருந்தாகவே, உடலுறவை பயன்படுத்த ஆரம்பிக்கின்றாள். வலி (Pain) மட்டுமே அதிகரிக்கிறது.... அவள் மனநோயும்!

Despair (Genocide): அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவன் அந்த கேபினை தேட ஆரம்பிக்கின்றான். அதில் அவள் எழுத ஆரம்பித்த Genocide என்ற கட்டுரை தெரிகிறது.  தெளிவாக எழுத ஆரம்பித்த கட்டுரை... பக்கங்கள் புரட்டப் பட... கொஞ்சம் கொஞ்சமாக... கிறுக்கலாகிறது. கட்டுரையின் சாரம் misogynist (பெண்களை வெறுப்பது). மகனின் மரணம்..., அவளையே.. பெண்கள் மீதான வெறுப்பாக மாற்ற ஆரம்பித்திருக்கிறது.

இப்பொழுது.. நிலைமை இன்னும் முற்றிப் போய், உடலுறவின் பொழுது... தன்னையே.. துன்புறுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றாள். அவனையும்... அதில் ஈடுபடுத்துகிறாள். முடியாது என்றால்... ஒரு மர பொந்திற்கு அருகில் சென்று, சுய இன்பம்(?) அடைகிறாள் (bold and the creep).

போன வருடம், அவளும் - நிக்கும் அங்கு இருந்த பொழுது,  எடுக்கப் பட்ட நிக்கின் சில போட்டோக்களும், நிக்கை போஸ்ட்மர்டம் செய்த டாக்டரின் ரிப்போர்ட்டும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை வெளிக் கொண்டு வருகின்றன.

இது மூன்றாவது சேப்டரின் பாதிதான். அங்கிருந்து... ஆரம்பிக்கும் காட்சிகள், நீங்களே.. பார்த்து.. அனுபவிக்க வேண்டிய வலி!!

The Three Beggars: சாக வேண்டியது அவனில்லை..., ஆனால் அது என்கிறாள் அவள். மீண்டும் ஒரு முறை... அதே நிலைமையில் உடலுறவு கொள்ள முயற்சிக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் அதுதானே என்ற எண்ணம் வந்தவுடன், ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்து......................................... க்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்!

Epilogue: போங்க.. போங்க.. போய் படத்தை பாருங்க!!!


யாருக்காவது படத்தை மாற்றுப் பார்வை பார்க்கத் தெரிந்தால்... புரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். எனக்கு நேர்பார்வையே கோணல்தான்.  நிறைய விஷயங்களை... புரிந்து கொள்ளவே ரொம்ப கஷ்டம்.

பார்த்தவுடன்.. எழுதிவிட முடியவில்லை. ரொம்ப யோசித்து(? கிழிஞ்சது!), இது ஏன் இப்படி.. இது ஏன் அப்படி.. என கிட்னியை தட்டிக் கேட்டதில்..... ஸாரி... மௌனம்தான் மிஞ்சியது!!! இதையெல்லாம்.. தாண்டி... படத்தில்.. ஒரு ஈர்ப்பு இருக்கும்.

ஆரம்பத்தில் இருந்து... கடைசி வரை... எதோ நம்மை கட்டிப் போட்டிருக்கும். அது அடுத்தடுத்து வரும் உடலுறவு காட்சிகளாகக் கூட இருக்கலாம். அல்லது... மேக்கிங்.. கீக்கிங்.. என பந்தாவாக கதை விடலாம்.

10 செகண்ட் வரும் நிக்-கை தவிர, படத்தில் அவனும் அவளும் மட்டும்தான். அவனாக William Dafoe (ஸ்பைடர் மேன் பட வில்லன்), அவளாக Charlotte Gainsbourg (ஃப்ரெஞ்ச்காரம்மா). டென்மார்க்கில், மே மாதம் படம் வந்த புதிதில், Torrent சைட்களில் பரபரப்பாக பேசப் பட்டப் படம்.

கேன்ஸ் பட விழாவில், ச்சார்லோடிற்கு சிறந்த நடிகைக் கான விருது கிடைத்ததும், பற்றிக் கொண்டது. அதுவரை நேர் பார்வை பார்த்தவர்கள் எல்லாம் மாற்றுப் பார்வை பார்க்க ஆரம்பிக்க, படத்தின்... வன்முறை, பெண்களுக்கு எதிரான காட்சிகள் (அதை செய்வது ஒரு பெண்), என சூடு பிடிக்க ஆரம்பித்தன.

படம் ஹாரர் என்பதை மட்டும் தொடாமல், ஆன்மீகம், ரிலீஜியன், மாரல், சைக்காலஜி என பல விஷயங்களை பேசினாலும், அமெரிக்கா மட்டும் யோசித்து.. யோசித்து.. போன மாதம், ஹாலோவீனுக்கு முன் ஹாரர் படம் என விளம்பரம் செய்தது, லிமிடட் ரிலீஸை அறிவித்தது (என்ன வெர்ஷன் என்பதெல்லாம் தெரியவில்லை). ஒரே வார்த்தையில் நாம் ‘மேற்கத்தியர்கள்’ என்று சொன்னாலும், ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள “கலாச்சார” வித்தியாசம் இது!

கேத்தொலிக்
வெர்ஷனில்... எந்த வன்முறையும், உடலுறவுக் காட்சிகளும் இருக்காது. ப்ரொட்டெஸ்டெண்ட் வெர்ஷனில்... அத்தனையும். இது Lars -ன் மாஸ்டர் பீஸ் என்கிறார்கள்.  நான் பார்த்தது ஒரேயொரு பீஸ்தான் என்பதால்... அதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். இவரது தயாரிப்பில்.. சில.. ‘அருமையான’ படங்கள் வந்திருக்கு. அதையும் கூடிய சீக்கிரம் பார்த்துடுவோம்.

நிர்வாணம், உடலுறவு, சுய இன்பம், வன்முறை, டார்ச்சர் எல்லாம் படங்களில் பழக்கப் பட்டிருந்தாலும், இதில் பார்க்கும் போது......... ....be prepared for something! (இதெல்லாம் என் மன தைரிய அளவில்தான் எழுதறேன்).

ஒரு வித்தியாசமான... ஹாரர்(??) படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ..................


.............. I prefer, "Protestant"



65 தியேட்டர் கமெண்ட்ஸ்:

சுப.தமிழினியன் said... November 8, 2009 8:46 PM

//சாக வேண்டியது அவனில்லை..., ஆனால் அது என்கிறாள் அவள். மீண்டும் ஒரு முறை... அதே நிலைமையில் உடலுறவு கொள்ள முயற்சிக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் அதுதானே என்ற எண்ணம் வந்தவுடன், ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்து......................................... க்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்!//

ஹைய்யோ கொடுமையா இருக்கும் போல?

ஹாலிவுட் பாலா said... November 8, 2009 8:55 PM

ஹைய்யா.. நீங்களாவது... இதை 18+ -னு ஒத்துக்குவீங்களா?

சுப.தமிழினியன் said... November 8, 2009 9:02 PM

ஒத்துக்காம பின்ன

VIJAY said... November 8, 2009 9:03 PM

விமர்சனம் படிக்கும்போதே ஒரு வித்தியாசமான படம் போல தெரியுது. நிஜமா இது வித்தியாசமான படமா இல்ல சும்மா சீன் காட்ட வேண்டும் என எடுத்த படமா பாலா? நம்ம ஊரில்தான் அதுபோல எல்லாம் எடுப்பார்கள்.

ஹாலிவுட் பாலா said... November 8, 2009 9:06 PM

@சுப: :) :)

@விஜய்: வித்தியாசமான படம் விஜய். தனியாய்.. அமைதியான சூழ்நிலையில் இந்த படத்தை பாருங்க. நிச்சயம் ஏமாற மாட்டீங்க.

Karthick Krishna CS said... November 8, 2009 9:09 PM

அக்சுவலா இந்த படம் எடுக்கும்போது அந்த டைரக்டர் டிப்ரஷன்ல இருந்தாரமா. அதனாலா பெர்பெக்டா எடுக்கமுடியளைன்னு வருத்தம் வேற பட்டாரு. இந்த வெர்ஷன் இப்படின்னா, பெர்பெக்டா எடுத்திருந்தா???? நினைச்சே பாக்க முடியலை. இந்தப் படத்தோட முடிவி உங்களுக்கு புரிஞ்சுதா, புரிஞ்சா எனக்கும் கொஞ்சம் விளக்குங்க..

ஹாலிவுட் பாலா said... November 8, 2009 9:14 PM

அவர் இன்னும் டிப்ரஷன்ல தாங்க இருக்காராம்!!

முடிவை பத்தி.. இன்னொரு பதிவு போடலாமானு யோசிச்சிகிட்டு இருக்கேன். ஆனா.. எழவு.. அவரு என்ன சொல்ல வர்றாருன்னு அவருக்கு மட்டும்தானே தெரியும்.

நாம யோசிக்கறது எல்லாம்... வேலைக்காகுமான்னு தெரியலை.

வேற யாராவது ‘வெவரம்’ தெரிஞ்சவங்க்.. சொன்னா.. நானும் உங்க கூட நின்னு கேட்டுக்கலாம்னு இருக்கேன். :)

Karthick Krishna CS said... November 8, 2009 9:18 PM

ரைட்டு... :)

ஹாலிவுட் பாலா said... November 8, 2009 9:21 PM

எனக்கும் முடிவு புரியலைன்னு... உங்களுக்கு புரிஞ்சதா? :) :)

ஹாலிவுட் பாலா said... November 8, 2009 9:22 PM

புரிஞ்ச மாதிரிதான் ஸ்மைலி சிரிக்குது! :)

சுப.தமிழினியன் said... November 8, 2009 9:51 PM

///புரிஞ்ச மாதிரிதான் ஸ்மைலி சிரிக்குது! :) ///

:-) :-) :-)

ஷண்முகப்ரியன் said... November 8, 2009 11:00 PM

உடலுக்கும்,மனதுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசமே வலி, அதிகமானால் உடல் மரத்துப் போகும்.மனம் அதீதமாக ஆட்டம் போடும்.

நமது மனநிலையில் இருந்து,அந்த மனித மனங்கள் போடும் ஆட்டத்தைப் பார்க்க அதீத ‘தில்’வேண்டும்,பாலா.

இந்தப் படத்திற்கும் அருமையான அறிமுகம் செய்தீர்கள்,பாலா,வழக்கம் போல.

சென்ஷி said... November 8, 2009 11:03 PM

:-)

அமீரகத்தின் அறிவுத் தேடலான கார்த்திக்கிட்ட இந்த படமும் இருந்ததுன்னு நினைக்குறேன் :)

பிரசன்னா said... November 9, 2009 12:11 AM

பாலா, நான் இப்போ டவுன்லோட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. பாத்துட்டு திரும்பவும் வரேன்..

போன மாசம் Orphan அப்படின்னு ஒரு படம் வந்துதே.. பாத்துட்டீங்களா??
நல்லா இருக்கும்.. Evil Kid அப்படிங்குற மாதி ஆரம்பிச்சு வேற மாதி கொண்டுபோய் முடிச்சுருப்பாங்க..

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 12:20 AM

@ஷண்முகப்ரியன் சார்: உண்மையாவே.. கொஞ்சம் தில் வேண்டும் சார்.. இந்தப் படத்தை பார்க்க. முழு கருத்தும் புரியலை. திரும்ப பார்க்கலாம்னா பயமா இருக்கு!

நீங்க பார்த்தீங்கன்னா.. உங்களிடம் இருந்து தெளிவான கருத்தை எதிர்பார்க்கறேன்! :)


@சென்ஷி: டிவிடி ரிலீஸ் ஆகிடுச்சி சென்ஷி! டவுன்லோட் பண்ணிடுங்க.

@பிரசன்னா: அதைப் பத்திதான்.. போன பதிவின் பின்னூட்டத்தில் பேசிகிட்டு இருந்தோம் பிரசன்னா...!

பிரசன்னா said... November 9, 2009 12:31 AM

ஆமா பாலா, இப்போ தான் பாத்தேன்.. போன பதிவோட பின்னூட்டங்கள முழுசா படிக்கல நான்..

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 12:45 AM

எனக்கு அவ்வளவா பிடிக்கலை பிரசன்னா!

கலையரசன் said... November 9, 2009 2:03 AM

கார்த்திகேயன் இந்த படத்தை பத்தி சொல்லியிருக்கான்! என் லாப்டாப்பில் ரொம்ப நாளா டெலீட் பண்ணலாமா, வேண்டாமான்னு யோசிச்சிகிட்டு இருக்குற படம்!! உங்க புண்ணித்தால... ரூமுக்கு போன முதல் வேலையா இந்த படத்தை...

"டெலீட்" பண்ணிடறேன்!

சில படங்கள் அப்படிதான்.... I deem this is that sort of film bala…

KISHORE said... November 9, 2009 2:43 AM

நீங்க விளக்கமா விமர்சனம் எழுதுனாலே.. எனக்கு படம் பார்க்கும் போது புரியாது.. இப்படி எழுதுனா? சரி இருந்தாலும் நிர்வாணம், சுய இன்பம், உடலுறவு .. இப்படி பல "டெக்னிகல்" விஷயங்கள் இருக்குறதாலும்.. குஜிலி தியேட்டர் போஸ்டர் கூட ஒரு மார்கமா இருக்குறதாலும்.. பார்க்கணும்..

KISHORE said... November 9, 2009 2:44 AM

"the orphan" and "drag me to hell" பார்த்தேன் பாலா.. "orphan" கூட கடைசில ஓகே.. ஆனா "darg me to hell.."? ஐயோ சாமி.. சூனியம் வைக்கிறது, சொறிஞ்சி விடுறதுன்னு.. ராமநாராயணன் படம் மாதிரி.. இதே டைப்ல "grave dancers" ன்னு ஒரு படம் பார்த்துருக்கேன்.. ஒரே வித்யாசம் அதுல கல்லறை மேல டான்ஸ் ஆடி அவங்களே சூனியம் வச்சிபாங்க. இதுல ஆயா வைக்குது.. அதுல அஞ்சி பேரு இதுல ஒரே பொண்ணு அவ்ளோ தான்.. "grave dancers" கூட மேக்கிங் பரவாஇல்லை மாதிரி தோனுச்சி.

கோபிநாத் said... November 9, 2009 2:48 AM

\\"டெலீட்" பண்ணிடறேன்!\\

தோடா நம்பிட்டோம் ;)))

தல உங்களுக்குக்கே இது என்ன படமுன்னு தெரியலைன்னா அப்போ நாங்க எல்லாம்!?

கார்த்திக் இருக்காரு...அவரு இந்த மாதிரி படத்தை எல்லாம் கலக்கலாக எழுதுவாரு. சொல்லிடுவோம் ;)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 9, 2009 3:35 AM

சூப்பர் தல,இந்த படம் ஆண்டி க்ரைஸ்ட் எழுதிட்டீங்களா?

நான் உங்களுக்கு இதை சொல்லனும்னு இருந்தேன்.
அருமையா பிரிச்சு விளக்கினீங்க.

என்ன ஒரு தைரியமான இயக்கம்.
படம் கேன்ஸ் ஃபெஸ்டிவல்ல கல்லடியும் கர்கோஷமும் சரிசமமா வாங்குச்சுன்னு கேள்விப்பட்டேன். பல சந்தேகங்கள் உங்கள் பதிவு மூலம் தீர்ந்தது.காட்டுக்குள்ள அந்த கேபினே ரொம்ப பயமுறுத்தும்.அந்த சானைபிடிக்கும் கல்லை எடுத்து கடவுளே...அதெல்லாம் ரொமப கொடுமையான
சித்திரவதைகள், அப்போதும் கூட அவன் அவளிடம் அன்பாய் இருப்பான்.
அவள் அந்த கத்தரிக்கோலை எடுத்து ............................. அந்த காட்சிகள் எந்த படத்திலும் பார்க்காதவை.எனக்கு எப்போடா அவன் அவளை முடிப்பான்னே? இருந்தது...அவ்வளவு திக் திக் திக்.........ரொம்ப சாதாரண் முகங்கள் என்றாலும் ரியாக்‌ஷன்.சான்சே இல்லை.முக்கியமா அந்த முதல் கூடல் காட்சி கவிதை. இது போல ஒரு உள்ளே வெளியே சீன்.எந்த ஆங்கில படத்திலயும் பாக்கலை.
ப்லாக்கர் உள்ளேயும் போக முடியலை,கருத்தும் போட முடியலை.அதுதான்.
ஓட்டுக்கள் போட்டாச்சு தலை.

Karthick Krishna CS said... November 9, 2009 7:22 AM

purinjiducchu... :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 9, 2009 8:25 AM

தல,
இதை nc-17 னு சொல்லியிருக்காங்க.
இதைப்பற்றி படிக்கும் போது ஒரு சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த கும்மியின் நிரல் ஒன்னு மாட்டிச்சு
நீங்களும் பாருங்க.
http://www.imdb.com/title/tt0870984/board/nest/150544404

மின்னுது மின்னல் said... November 9, 2009 9:15 AM

action,adventure படமே உங்க லிஸ்டில் இல்லையா.?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... November 9, 2009 9:31 AM

ஹாலிவுட்ஜி.. வரக் கூடாதுன்னு சொல்லியும் வந்திருக்கிறதால ஒரு சலாம் போட்டுக்குறேன்..

இந்தியா வரும்போது அத்தனை டிவிடிக்களும் வந்தாகணும்..!

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 9:56 AM

@கலையரசன்: இன்னா.. தல இப்படி சொல்லிட்டீங்க. ஒரு பத்து பேரு பார்த்தாதானே.. யாருக்காவது புரியும்? இப்படி எஸ்கேப் ஆய்ட்டீங்களே? :(

@கிஷோர்: ஹா.. ஹா.. ஹா.. இப்பல்லாம்.. ரொம்ப டெக்னிகலாவே யோசிக்கறீங்க! அந்த a-z பதிவில் ஆரம்பிச்சி! பார்த்து! சிதம்பரத்துல.. எதுக்கெடுத்தாலும்.. அருவா தானாமே??

Drag Me to Hell படம் பிடிக்கலைன்னு.. நிறைய பேர் சொல்ல ஆரம்பிச்சீட்டீங்களே? :( அது நல்ல படம்ப்பா..! சொன்னா நம்புங்க! :(

@கோபி & கார்த்திக்கேயன்: இன்னாங்க இது..? அவரு... நான் புரியலைங்கற மாதிரி எழுதியிருக்கேன்னு சொல்லுறாரு. நீங்க.. பிரிச்சி மேய்ஞ்சியிருக்கேன்னு சொல்லுறீங்க? ஒரே கன்பீஜ் பண்ணுறீங்களே?

கோபி சொன்னது சரிதான். எனக்கு படம் புரிந்தும்-புரியாமலும் டைப்பாதான் பட்டது.

ஆனா.. கார்த்திக்கேயன் சொன்ன காட்சிகளை எல்லாம்.. ஹாலிவுட்டில் யாரும் எடுக்க முடியாது. அந்த ‘தில்’ இன்னும் இவங்களுக்கு வரலை! :) :)


கார்த்திக்கேயன், நான் அந்த லிங்கை படிச்சேன். ஹைய்யோ..தல... சொன்னா நம்ப மாட்டீங்க. நான் அடுத்த பதிவா போட வச்சிருந்த மேட்டர்ல.. அந்த ‘பாய்ண்ட்’டையும் சொல்லியிருந்தேன். நமக்கு முன்னாடியே.. யாரோ... ‘புரட்சிகரமா’ யோசிக்கிறாங்கப்பா...!!!

NC-17 மேட்டரை லேபிள்-ல போட்டிருக்கேன் தல. இதுக்கெல்லாம்.. MPAA கண்டிப்பா NC-17 தான் தரும்.

நீங்க இந்தப் பதிவுகளை படிச்சிப் பாருங்க.

http://www.hollywoodbala.com/2009/02/this-film-is-not-yet-rated-2006-18-only.html

http://www.hollywoodbala.com/2009/03/boys-dont-cry-1999-18-only.html

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 10:10 AM

@மின்னுது மின்னல்: இந்த மாசம் 18+(?)ங்க தல. அதுல போயி.. ஆக்‌ஷனாவது அட்வெஞ்சராவது? :) :)

@உ.த: நீங்க.. வந்து திட்டினாலும்.. 18+ எல்லாம். முதல்ல படிச்சிடுவீங்கன்னு தெரியுமே! :)

உங்களுக்கு முதல்ல.. எப்படி டோரண்ட்ல இருந்து டவுன்லோட் பண்ணுறதுன்னு க்ளாஸ் எடுக்கனும்.

VIJAY said... November 9, 2009 10:33 AM

"இது மூன்றாவது சேப்டரின் பாதிதான். அங்கிருந்து... ஆரம்பிக்கும் காட்சிகள், நீங்களே.. பார்த்து.. அனுபவிக்க வேண்டிய வலி!!"

தலைவா..இப்படி எல்லாம் TWIST கொடுக்க வேண்டும் என அவசியம் இல்ல. 18+ என்ற ஒரு டைட்டில் போதும். அது எப்படி இருந்தாலும் நான்(ங்க) பார்த்துவிடுவேன்(வோம்).

VIJAY said... November 9, 2009 10:37 AM

"DRAG ME TO HELL" படத்தில் என்ன இருக்கு என்று எனக்கு தெரியல. நீங்கள் பயத்துடன் பார்த்து இருப்பீங்க என நினைக்கிறேன். அதான் உங்களால் மறக்க முடியல. நல்லா இருக்கு என்று சொல்றிங்க.

VIJAY said... November 9, 2009 10:41 AM

அது என்ன பாலா...18+ பதிவு என்றால் மட்டும் ஓட்டும் கமெண்ட்சும் சும்மா வந்து குவியுது? போன இரண்டு பதிவுகளிலும் வந்த கமெண்ட்ஸ் அளவுக்கு நான் பழைய பதிவு எதிலும் பார்க்கல. RIGHT ஆ?

KISHORE said... November 9, 2009 11:23 AM

கார்த்திகேயன் குடுத்த லிங்க் பார்த்தேன் பாலா.. நல்லா தான் யோசிகிறாங்க.. எழுதுனவருக்கு "bruno" படம் தான் போட்டு காட்டனும்.. ஆசை தீர பார்த்துட்டு போவட்டும் பாவம்..

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 11:32 AM

@விஜய்: ஹா. ஹா. ஹா. அதெல்லாம் இல்லீங்க. அதையும் சொல்லிட்டா. படத்தில்.. ஒரு இண்ட்ரஸ்ட் போய்டும். அதை படம் பார்க்கும் போது தெரிஞ்சிக்குவீங்க பாருங்க! :)

இனிமே.. Drag Me to Hell படத்தை நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டேன்..! இது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்! எல்லோரும் என்னை துரத்தி துரத்தி அடிக்கறீங்களே!! :) :) :) :)

ரொம்ப பழைய பதிவுகளில்.. இந்த அளவுக்கு கமெண்ட்ஸ் வந்துகிட்டு இருந்தது விஜய். நடுவில் 2 மாதம் நான் காணாம போனப்ப.. இதுதான் சாக்குன்னு.. எல்லாரும் ஓடிட்டாங்க! :) :) ஆனா.. ஓட்டு மட்டும்.. சடார் சடார்ன்னு விழும். அது உண்மை! :)

@கிஷோர்: அடுத்து இன்னொரு படம் வருதுங்கோவ்! ப்ரூனோவாவது.. ஒன்னாவது! :)

முரளிகண்ணன் said... November 9, 2009 11:40 AM

படிக்கவே கஷ்டமா இருக்கு. எப்படித்தான் பார்த்தீங்களோ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 9, 2009 11:46 AM

@கிஷோர்: அடுத்து இன்னொரு படம் வருதுங்கோவ்! ப்ரூனோவாவது.. ஒன்னாவது!

என்ன?படம் அது தல?

அப்புறம் தல “forgetting sharah marshal" என்னும் படத்தில் ஜேசன் சீகல் ஒரு காட்சியில் அப்படி வருவார்.
அப்புறம் “You Don't Mess with the Zohan"
ஆடம் சாண்ட்லரும் ஒரு காட்சியில் அப்படி வருவார்.

இன்னும் சில படங்கள் பெயர் நினைவில்லை

:)))

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 11:53 AM

@முரளி: வாங்க முரளி..! ரொம்ப நாளா ஏரியா பக்கமே வர மாட்டேன்னுட்டீங்க! :) படம் பாருங்க தல..! உடம்பு கூசுது! :) :)


@கார்த்திக்கேயன்:

8MM (http://www.hollywoodbala.com/2009/02/8mm-1999-18-only.html)

Wild Things

Hangover (http://www.hollywoodbala.com/2009/06/hangover-2009.html)

Rated X

இன்னும் நிறைய படங்கள் இருக்கு. ஆனா.. பெண்களை காட்டியதை விட, ஆண்களின் எண்ணிக்கை கம்மிதான்னு நினைக்கிறேன்.

KISHORE said... November 9, 2009 12:13 PM

//இன்னும் நிறைய படங்கள் இருக்கு. ஆனா.. பெண்களை காட்டியதை விட, ஆண்களின் எண்ணிக்கை கம்மிதான்னு நினைக்கிறேன். //
ஆஹா .. 18+ வேற எங்கயோ போகுது போல இருக்கு.. பாலா.. ஸ்டிய்ரிங் ரைட்ல திருப்புங்க..

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 12:16 PM

ஹைய்யா.. ஒரு கலாச்சார காவலரை கண்டுபிடிச்சிட்டேன்! :) :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 9, 2009 12:16 PM

தல இதை அந்த ஐஎம்டிபி ஆசாமிக்கு பார்சல் போடுரலாமா?தல?

தல இந்த மூணில் 8mm அஞ்சு வருஷம் முன்பு பாத்திருக்கேன், மீண்டும் பார்க்கிறேன்.பதிவையும் படிக்கிறேன்.
இந்த wild things & hangover இருக்கு பார்க்கிறேன்.

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 12:26 PM

@கார்த்திக்கேயன்: :) :) :) அவங்களுக்குத் தெரியாததா நண்பா? :)

Hangover என்னோட ஃபேவரிட் படம் தல! என்னை திட்டி வந்த ஒரே கமெண்ட் அந்தப் பதிவில் கடைசியா இருக்கு! பொக்கிஷமாட்டம் வச்சிருக்கேன்! :)

KISHORE said... November 9, 2009 12:56 PM

//action,adventure படமே உங்க லிஸ்டில் இல்லையா.?//
யாருப்பா அது அந்தபுரத்துல வந்து அம்புலிமாமா கேக்குறது.. ?
உங்களுக்கு கண்டிப்பா வேணும்னா ரெண்டு மாசம் பின்னாடி போய் படிங்க.. இல்ல ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க. நாங்களே ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே துண்டு போட்டு இடம் பிடிச்சிருக்கோம்.. இப்போ போய்..

KISHORE said... November 9, 2009 1:01 PM

//ஹைய்யா.. ஒரு கலாச்சார காவலரை கண்டுபிடிச்சிட்டேன்! //

ரொம்ப சந்தோஷ படாதிங்க.. நாங்க எல்லாம் எல்லாத்தையும் பாக்குற ஆளு.. அது போக.. காடை,கவுதாரினு எதையும் விடுறது இல்ல.. நான் சொல்ல வந்தது.. இந்த விஷயத்துக்கு இன்னொரு 18+(?) மாசம் தனியா வச்சிக்கலாம் இப்போ குஜிலி 18 + வேலைய பாருங்கன்னு சொல்ல வந்தேன்..
அதுக்குள்ள கலாச்சாரம்.. காவல்ன்னு பேசிகிட்டு..

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 1:09 PM

@கிஷோர்: பாவங்க.. மின்னுது மின்னல். அவங்களைப் போய் கலாய்க்கறீங்களே! :) அது சரி.. ஒரு மாசம் போதுமா? பரவாயில்லையே.. நல்ல பையன் ஆய்ட்டீங்களா?!

அதானே.. பார்த்தேன்! கிஷோராவது.. காவலராவது! :) அடுத்தப் படத்துக்கு சத்தியமா எனக்கு ஆப்புதான்ன்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

வினோத்கெளதம் said... November 9, 2009 2:37 PM

தல 4D Movieன்ன என்ன..Fourth dimension nu சொல்லாதிங்க..:))

கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்..அதை நான் சாதரணமாக உபயோகப்படுத்தும் லேப்டாப்ல பார்க்க முடியுமா..!!

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 3:27 PM

@வினோத்: Universal Studios (Florida) -ல ஒரு தியேட்டர்ல Shrek 4-D -னு ஒரு ஷோ இருக்கு. அதில் என்ன பண்ணுவாங்கன்னா, 3-டி ல படம் ஓடிட்டு இருக்கும் போது, நம்ம சீட் மேலேயும் கீழேயும்.. சைடிலும் ஆட ஆரம்பிக்கும்.

Shrek பறக்கற மாதிரி ஒரு சீன் இருந்தா... 3டி எஃபெக்ட்டோடு... நம்ம சீட்டும் ஆடும்போது... நமே.. அதில் பறக்கற மாதிரி இருக்கும். தண்ணிக்குள்ள போகும்போது.. நம் மேல்.. தண்ணிய ஸ்ப்ரே பண்ணுவாங்க. இதில்.. வைப்ரேஷனும் உண்டு.

Fast & Furious படம் D-Box -ங்கற டெக்னாலஜியில் ரிலீஸ் பண்ணினாங்க (இந்த சீட் இருக்கும் தியேட்டர்கள் மொத்தம் 4-5 தான்னு நினைக்கிறேன். இதுவும் வைப்ரேட் பண்ணும். இதில் கடைசி படம் Final Fantasy 4.

ஆனா இது... 4-டியில் வராதாம்.

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 3:40 PM

/// லேப்டாப்ல பார்க்க முடியுமா..!! ///

ஒரு கண்ணாடியை மாட்டிகிட்டு... லேப்டாப்பை.. அப்பிடி இப்பிடி ஆட்டுங்க. தண்ணி ஸ்ப்ரே ஆகனும். அதனால.. லேப்டாப்பை.. ஒரு பைப்புக்கு கீழ வச்சிகிட்டீங்கன்னா.. கண்டிப்பா.. 4D - 5D எல்லாம் பார்க்கலாம்.

VIJAY said... November 9, 2009 9:03 PM

///ஒரு கண்ணாடியை மாட்டிகிட்டு... லேப்டாப்பை.. அப்பிடி இப்பிடி ஆட்டுங்க. தண்ணி ஸ்ப்ரே ஆகனும். அதனால.. லேப்டாப்பை.. ஒரு பைப்புக்கு கீழ வச்சிகிட்டீங்கன்னா.. கண்டிப்பா.. 4D - 5D எல்லாம் பார்க்கலாம்.///

இந்த குசும்புதானே வேண்டாம் என்கிறது. படம் பார்க்க வழி கேட்டா மெண்ட்டல் ஹாஸ்பிட்டலுக்கு வழி சொல்லாம சொல்றிங்களே. ஆனா நாங்க யாருருரு???நாங்க விஞ்ஞானி என்று காமிச்சு எஸ்கேப் ஆய்டுவோம்ல. எப்ப்புபுடிடிடிடிடி????

ஹாலிவுட் பாலா said... November 9, 2009 10:28 PM

நீங்க பெரிய ஆளுங்க! :) :)

4D படத்தை.. இப்போதைக்கு லேப்டாப்பில் பார்க்க முடியாது விஜய். அதற்கான ஸ்பெஷல் சேர் எல்லாம் இப்போதைக்கு எட்டாக் கனிதான்.

வைப்ரேட் ஆகிற D-Box சேரே.. இப்ப 16,000 டாலர் சொல்லுறாங்களாம். மேலே கீழே ஆடுற சேருக்கு நாம எங்க போறது. ஒரு காலை பிடிங்கி விட்டுகிட்டாதான் ஆச்சி!

pappu said... November 10, 2009 1:26 AM

எச்சூஸ்மீ, 4டி என்னமோ சொல்லுறீங்களே. தண்ணீர் தெளிக்கும்னு. பொசைடன் ஓடுனா தண்ணில முக்கி எடுப்பாங்களா? அப்போ 18+ கட்சிகள் வந்தா என்ன செய்வாங்க?
- அப்பாவி குழந்தை பப்பு

pappu said... November 10, 2009 1:27 AM

இந்த படத்த ல்இஸ்டுல வச்சு பல காலமா டவுண் பண்ண யோசிச்ச்சுட்டே இருக்கேன். விமர்சனம் கொஞ்சம் மார்க்கமா இருந்ததா.. அதான்.

pappu said... November 10, 2009 1:30 AM

டிங் டாங் லின்க் கார்த்திகேயன் கொடுத்திருக்காரே, அந்த மாத்ரி ஒரு காட்சி பைட் க்ளப்ல கவனிச்சிருக்கீங்களா? க்ளைமாக்ஸ் முடிஞ்சதும்

பேநா மூடி said... November 10, 2009 3:15 AM
This post has been removed by the author.
பேநா மூடி said... November 10, 2009 3:17 AM

ஹலோ சார்.., சுமார் ஒரு வர்ஷம் முன்னால வரைக்கும் ஹாலிவுட் படம் அப்டினலே சிலந்தி மனிதன்,சூரன்,சுராச்சிக் பார்க், அனகோண்டா,,,,,,,, இப்டி தான் ஞாபகம் வரும்..ஏன்னா அது மட்டும் தான் தெரியும்...ஆனால் ஒரு சனி,ஞாயிறு லீவ்-ல் நாலு படம் பார்த்த போது தான் மாறியது.. அது godfather-1,2,3(3-ம் பாகம் சுமாராக தான் இருந்தது) & the prestige. நீங்கள் prestige படத்தை விமர்சனம் செய்து விட்டிர்கள் . godfather 1&2 படங்களையும் விமர்சனம் செய்யுங்கள் (நிச்சயம் பார்த்து இருபேர்கள் என்று நம்புகிறேன்).

பேநா மூடி said... November 10, 2009 3:35 AM

அப்புறம் prestige பட விமர்சனத்தில் சில கேள்விகள் கேட்டீர்கள் ... அதில் ஒரு கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை கூறுகிறேன்..சாராவை போர்டன் திருமணம் செய்து கொள்கிறார் .. ஒலிவியாவை பெல்லன் காதலிக்கிறார்.. இது climax-ல் போர்டன் angier-டம் கூறுவார்.அது ஒரு பிளாஷ் பாக்கில் காட்டப்படும்.மற்ற கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை படத்தை ஒரு முறை மட்டுமே பார்த்து இருப்பதால். இப்போதும் dvd கடைக்கு சென்றால் prestige இருக்கிறதா என்று கேட்கிறேன் எங்கள் ஊரில் இன்னும் கிடைக்க வில்லை .

வினோத்கெளதம் said... November 10, 2009 9:29 AM

//ஒரு கண்ணாடியை மாட்டிகிட்டு... லேப்டாப்பை.. அப்பிடி இப்பிடி ஆட்டுங்க. தண்ணி ஸ்ப்ரே ஆகனும். அதனால.. லேப்டாப்பை.. ஒரு பைப்புக்கு கீழ வச்சிகிட்டீங்கன்னா.. கண்டிப்பா.. 4D - 5D எல்லாம் பார்க்கலாம்.//

ஓஹோ...அப்படி சொல்லுறிங்களா..பண்ணிடுவோம்..

KISHORE said... November 10, 2009 10:48 AM

பாலா..ஆளு தெரியாம சொல்றிங்க.. வினோத் அப்படி செய்யுற ஆளுதான்..

ஹாலிவுட் பாலா said... November 10, 2009 11:25 AM

@வினோத்: இந்த பப்புவை ஏரியாவை விட்டு அனுப்புங்க. படிக்கறதை விட்டுட்டு.. ‘டெக்னிகலா’ கேள்வி கேட்டுகிட்டு இருக்காரு பாருங்க!

ஆனாலும் யோசிக்க வேண்டிய கேள்வி! :)

@பேனா மூடி: தல..! Godfather படத்தையெல்லாம்.. ஆராய்ச்சி பண்ணுற அளவுக்கெல்லாமா.. நான் வளர்ந்துட்டேன். இன்னும் 1-2 வருசம் கழிச்சி கேட்க வேண்டிய கேள்வி அது! :) முயற்சி பண்ணுறேன் தல! :)
=====

ப்ரெஸ்டீஜில்.. யார் ஃபெல்லன்/போர்டன்னு சொல்லியிருக்கவே மாட்டாங்க தல. க்ளைமேக்ஸில் நாம் பார்ப்பது போர்டன்னே தெரியாது. நான் - அவன் - இவன்னுதான் பேசிக்குவாங்க. பேரை சொல்லாமல். நான் நிறைய முறை பார்த்துட்டேன். ஆனாலும்.. சமயம் கிடைக்கும்போது.. நிச்சயம் ஒருமுறை இதை சரி பார்த்துக்கறேன்.

@கிஷோர்: :) :)

வினோத்கெளதம் said... November 10, 2009 2:57 PM

தல பப்பு கேட்ட அதே Technical doubt எனக்கும் ஆரம்பத்துல தோணுச்சு ஆமாம் அதே மாதிரி படத்துக்கு 4D effect கொடுக்கறதுக்கு என்ன பண்ணுவாங்க..(கடைசி ரெண்டு வார்த்தை வேற மாதிரி எழுதுனேன்..ஆனா வேணாம்):)

soombo mani said... November 10, 2009 5:18 PM

Dear Bala,
Do you have the URL for "பூச்சி"
"இதுக்குதான் பூச்சி இருக்காரேன்னு விட்டுட்டேன் (பூச்சியின் உலக சினிமா ப்ளாகை படிச்சிட்டு, இயக்குனர் சேரன்.. அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கார். வாழ்த்து கிடைத்தற்கு வாழ்த்துகள் பூச்சி!)."

thanks in advance,
Anbu.Bala

ஹாலிவுட் பாலா said... November 10, 2009 6:03 PM

@வினோத்: :) உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி ஆய்டுச்சி! அந்த கடைசி ரெண்டு வார்த்தை என்னவா இருக்கும்னு கண்டுபிடிச்சிட்டேன்! :)


@அன்பு.பாலா: butterflysurya.blogspot.com. :)

Anbu.Bala said... November 11, 2009 1:40 PM

Nandri bala...

ஹாலிவுட் பாலா said... November 11, 2009 8:15 PM

யு வெல்கம்! :) :)

கிரி said... November 18, 2009 9:38 AM

எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா! :-) சிங்கம்ல

டுபாக்கூர்கந்தசாமி said... January 22, 2010 11:03 AM

தல படம் பாத்துட்டு இயக்குனர் என்ன சொல்ல வரார்னு புரியல நமக்கு ஒரு விசயத்த நேரா சொன்னாலே புரியாது இது இப்படி எடுத்தா எப்படி புரியும்???? தன் கொழந்த தன்னோட கவனகுறைவால் இறந்தது அப்படிங்கற விசயம் குற்ற உணர்வ தர கூடியது உண்மை தான் ஆனா இந்த அளவு குற்ற உணர்வு இருக்குமாங்கறது சந்தேகம் தான். அதே மாதிரி ultra slow motion scene எல்லாம் சூப்பர் தான் எப்படி தான் இப்படில்லாம் யோசிக்கிராங்களோ

மொத்தத்துல இந்த படத்தோட மைய கரு என்னங்கறத தயவு செய்து பின்னூட்டத்தல போடுங்க

இந்த படம் ரொம்ப மிரட்டலா இல்லனாலும் மனச ஏதோ பண்ணுது....

ஹாலிவுட் பாலா said... January 22, 2010 4:40 PM

தல... நானும் அதே கேள்வியைத்தானே.. பதிவில் கேட்டிருக்கேன். சத்தியமா.. டைரக்டர் என்ன சொல்ல வந்தார்ன்னு ஒரு மண்ணும் புரியலீங்க.

இந்த லார்ஸ் படமெல்லாமே இப்படித்தான் இருக்கும் போல. இவரை தலையில தூக்கி வச்சிகிட்டு கொண்டாடுறாங்க. கொடுமை.

Post a Comment / கிஷோர் கமெண்ட்

ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Green Zone Remember Me She is out of my league