A Clockwork Orange : இயந்திரத்தனமான மனிதன் //// தோற்றத்தில் மனிதன் - தோலுக்குள் மிருகம்இயக்குனர் ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களை எழுத எனக்குத் தைரியம் வேண்டும். அவர், வெங்கிராஜா மாதிரியான சினிமா காதலர்களின், குரு. The Shining, Full Metal Jacket படங்களை அடுத்து நான் எழுத நினைத்து, பின் வெங்கி பயத்திலேயே பல மாதங்களாக, கை விட்ட பதிவு (அவர் சொல்லி பார்த்தப் படம்). திரும்ப தூசு தட்டியிருக்கேன்.
டிஸ்க்?: இதையெல்லாம் போட்டா மட்டும் படிக்காம இருக்கப் போறாங்களா என்ன?!
தனிமனித ஒழுக்கம்
இளமையில் க
ஃப்ரீ செக்ஸிற்கு பெயர் போன மேற்கு நாகரிகத்தில், அலெக்ஸிற்கும் அவன் நண்பர்களுக்கும் அதில் பிரச்சனையில்லை. ஆனால்.. இளமையின்.. இன்னொரு பிரச்சனை: வன்முறை! ரத்தத்தின் சூட்டில், கலவியை வன்முறையாக அணுகவும், வன்முறையை கலவி போல நேசிக்கவும்... அலெக்ஸும் அவன் நண்பர்களும் பழக்கப் படுகிறார்கள்.
அது எல்லை மீறும் பொழுது, பல இடங்களில் வன்புணர்வும், இன்னொரு இடத்தில் ஒரு கொலையும் நடந்து முடிய..., ஏற்கனவே நண்பர்களுக்குள் உண்டான ‘கேங் லீடர்’ பகையில், அலெக்ஸ் மட்டும்.. கொலை குற்றத்தில் மாட்ட வைக்கப் படுகிறான்.
ஜெயிலில் அவன் வாழ்க்கையின் இன்னொரு கதவு திறக்கப் படுகிறது. கைதிகளை சைகலாஜிகலாக பரிசோதித்து அவர்களை திருத்தும் முறைகளை, இங்கிலாந்து அரசாங்கம் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறது. அதற்கு ஒரு டெஸ்ட் லேப் எலிபோல தன்னை உபயோகப் படுத்திக் கொள்ள அலெக்ஸ் உடன்படுகிறான்.
Ludovico என்னும்... முறை அவன் மீது பயன்படுத்தப் படுகிறது. போதை மருந்து செலுத்தப்
வன்புணர்விற்கும், வன்முறைக்கும் அடுத்து, அலெக்ஸிற்கு பிடித்தது பீத்தோவனின் சிம்பொனி. யாராவது தவறாக வாசித்தால் கூட, அலெக்ஸிற்கு ஆகாது. இந்த நாஜி-பீத்தோவன் காம்பினேஷன் வீடியோ.. அவனுக்குள் பெரிய மாறுதலை கொண்டு வர, பீத்தோவனின் இசையை கேட்டாலே..., அவனால் செயல்பட முடியாமல் போகிறது. இதையே.. ஆராய்ச்சியின் வெற்றியாக கருதி.. அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப் படுகிறான்.
முற்பகல் செய்த வினைகள் எல்லாம்.., ஜெயிலில் இருந்து வெளிவந்த பிற்பகலிலேயே.. அலெக்ஸிற்கு ரிவிட் அடிக்கத் துவங்குகின்றன. ஓட ஓட விரட்டப் படுகிறான். தப்பிக்க ஒரு இடத்தில் நுழைந்தால்...................!
எத்தனையோ.. போபியாக்களை பார்த்துவிட்டோம். குப்ரிக் காட்டும் இந்த போபியாவை பார்த்திருக்கிறார்களா?
அமெரிக்காவிற்கு மார்டின் ஸ்கொர்ஸஸி மாதிரி, இங்கிலாந்திற்கு (அமெரிக்கரான) ஸ்டேன்லி குப்ரிக் . மாஸ்டர்பீஸ்களின் சுரங்கம். எடுத்தது வெறும் பதிமூன்று படங்களே என்றாலும், எடுத்ததெல்லாம் சுரங்கத்தில். ஏற்கனவே இதில் மூன்றை பார்த்து விட்டோம். மீதமுள்ள ஒன்பதும் வெகு விரைவில்!!
பீத்தோவனின் இசையும், ஒரு கேன் பாலும் கூட.. ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்பதெல்லாம்..., நமக்குப் புதிது. ஒரிஜினல் கதை, ஒரு நாவலாக இருந்தாலும்...., அதை குப்ரிக் ‘தழுவியதில்’ தான்... படம் 18+ ற்கு தகுதி பெற்றது.
Eyes Wide Shut படத்திற்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல.... A Clockwork Orange, அல்லது அதை விட இதில் அதிகம். அதிலாவது.. அவிழ்க்க ஒரு முடிச்சாவது எஞ்சியிருக்கும். இதில் அந்த நேரத்தை சேமித்தே ஒரு ஐந்து நிமிடத்தை மிச்சப் படுத்தியிருப்பார் மனுசன். அதில் முத்தம் கொடுக்கவே மூன்று நிமிடம் எடுத்துக் கொண்டால், இதில்.. ஃபோர்ப்ளே எல்லாம் குப்ரிக்கால் சென்சார் செய்யப் பட்டுவிட்டது (அதையெல்லாம் எவன்யா பார்த்துகிட்டு).
ஆனால்.. Eyes Wide Shut-ல் வேறு எதுவும் பார்க்க இல்லாத காரணத்தால்.. நிர்வாணத்தின் மீது மட்டுமே நம் கவனம் இருக்க, இதில்.. செக்ஸ் என்பது கடைசி பட்சம்தான். அதை விட போதை தரும் விஷயங்கள் தான் படம் முழுக்க.
Visually Stunning என்ற பதம், குப்ரிக் படங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலதான் A Clockwork Orange படம் பிடிக்கப் பட்டிருக்கும். குப்ரிக்கின் போட்டோக்ராபி மீதான காதல், அதன் ஒவ்வொரு ஃப்ரேமிலும்! அது ஸ்லோ மோஷனாகட்டும், ஃபாஸ்ட் மோஷனாகட்டும்.... 1971-ல் எல்லாம்... இவரளவுக்கு யாராவது ஷாட் யோசித்திருப்பார்களா என்று சந்தேகம்தான். படம் முழுக்க வசனங்களில்.. அவர் மொழி ஆளுமையோடு, இதன் அழகை மெருகூட்ட வருவது....
பின்னணியிசை: இதில்... குப்ரிக், க்வெண்டினுக்கெல்லாம் தாத்தா. அவர் தேர்ந்தெடுக்கும் இசை ஆல்பங்களும், கோர்ப்புகளும், அமைப்பாளர்களும் (இதில் வெண்டி கார்லோஸ்) எந்தப் படத்திலும் சோடை போனதில்லை. என்னைக் கேட்டால்.. Clockwork அதி... ஸ்பெஷல்.
அதே பீத்தோவனின் பின்ணனியில், “I was Cured, all right" என படம் முடியும் பொழுது, ‘திருடனாய் பார்த்து....’ வரிதான் நினைவிற்கு வரும். தெரிந்தே தவறு செய்பவனை... இரண்டு வருடங்கள் சிறையில் போடுவதால், வெளிவந்தவுடன்... புண்ணியாத்மா ஆகிவிடுவானா? அல்லது... குடிப்பவனுக்கு, வாரம் இருமுறை வகுப்பெடுப்பதால் மட்டுமே..., டாஸ்மாக் நட்டத்தில் ஓட ஆரம்பிக்குமா... என்பதுதான், சமுதாயத்தின் மீதான குப்ரிக்கின் கேள்வி (நாவலின் முடிவு வேறு). அதை கிண்டலாக முடித்திருப்பது.... மாஸ்டரின் பன்ச்.
மால்கம் மெக்டொவ்ல், படத்தின் ஒரே மேஜர் கேரக்டர். நாவலின் 15 வயது கேரக்டருக்கு, ஒட்டாத தோற்றமென்றாலும், “மால்கம்மின் திறமைக்கு முன், எனக்கு கேரக்டரின் வயது முக்கியமாய் படவில்லை” என ஸ்டேன்லியே சொன்ன பிறகு நாமென்ன சொல்ல் இருக்கிறது. படமுழுக்க, இவரின் மெஸ்மரைஸ் செய்யும் குரலில்...,பார்வையில்! திரையில் தெரியும், ஸ்டேன்லி குப்ரிக்!!! பல விதங்களில் ‘கொடுத்து வைத்தை மனிதன்’! ஹும்ம்ம்ம்ம்....!!!
வெறும் 40 செகண்ட்கள் காட்டப்படும் அந்த Threesome Orgy ஷாட், மொத்தம் 28 நிமிடங்கள் எடுக்கப் பட்டதாம்................ (ரெகுலர் வேகத்தில் இருந்து 12 மடங்கு குறைவான வேகத்தில், அதாவது ஒரு செகண்டுக்கு 2 ஃப்ரேம்கள் என்ற வேகத்தில் படமாக்கப் பட்டதாம்).
நாவலின் ஆசிரியர்: ஆண்டனி வில்ஸன், கம்யூனிசத்தின் ஒரு சித்தாந்தத்தை [நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானித்தல்] விமர்சித்தாராம். இதை கம்யூனிஸம் மட்டும்தான் செய்கிறதா? குப்ரிக், இந்தக் கதையை... கம்யூனிஸம், கேபிடலிஸம் என்றெல்லாம் பிரிக்காமல்... ஒரு யுனிவர்ஸல் தீமாகவே கையாண்டிருப்பார்.
அலெக்ஸின் பாத்திரம், நம் அனைவரின் ‘அன்கான்ஸியஸ் வெர்சன்’ என்றே நான் நினைக்கிறேன். நம் ஆழ்மனதில்... நாம் ஒவ்வொருவரும் அலெக்ஸ் பாத்திரம் செய்யும் அத்தனை தவறுகளையும் செய்யும் மன தைரியத்தை, பெற்றவர்கள்தான். ஆனால்... சில சமயங்களில் குறுக்கிடும் நம்முடைய நெறிமுறைகளும், சட்டங்களும், உள்ளுணர்வுமே, நம்மை அலெக்ஸாக மாறாமல் தடுக்கிறது.ஒரு க்ரூப்..., படத்தில் வரும்.. இளைஞர்களைப் போலவே... வன்முறைக் காட்சிகளை.. நிஜத்திலும் நடத்த ஆரம்பிக்க, அத்தனை பக்கங்களிலிருந்தும் படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப....., ‘கொலை மிரட்டல்கள்’ வர ஆரம்பித்ததும், குப்ரிக் இங்கிலாந்தில் மட்டும் இந்தப் படத்தை தடை செய்துவிட்டார் (அவரேதான்).
-ஸ்டேன்லி குப்ரிக்
ஆனால் 21 சேப்டர்கள் கொண்ட நாவலில்...., ‘நம்பியார் நல்லவனாகத் திருந்தி, கடைசி ஃப்ரேமில் க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்’ படியான கடைசி சேப்டரை, வேண்டாம் என அமெரிக்கப் பதிப்பகங்கள் ஒதுக்கிவிட, குப்ரிக்கும் அந்த சேப்டரை (அவர் படித்திருந்ததும் அமெரிக்க வெர்ஷனைத் தான்) திரைக்கதையில் இணைக்கவில்லை.
எழுதியவரே... ‘இது ஒரு குப்பை’ என சொல்லி தூக்கிப் போட்ட நாவல் தான் A Clockwork Orange. அந்த ‘குப்பையை’, 38 ஆண்டுகள் கழித்தும் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டேயிருக்கக் காரணம்.... ஷண்முகப்ரியன் சாரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டேன்லி குப்ரிக் என்னும் மஹாக் கலைஞன்!
குப்ரிக்கின் சமாதியை பார்த்து கும்பிடு போட்டுவிட்டு... அடுத்த படத்திற்கு ரெடியாவோம்!
A Clockwork Orange = “Civilized" Animals
Torrent Link : http://isohunt.com/torrent_details/92075297/a+clockwork+orange?tab=summary

52 தியேட்டர் கமெண்ட்ஸ்:
///குப்ரிக்கின் சமாதியை பார்த்து கும்பிடு போட்டுவிட்டு... அடுத்த படத்திற்கு ரெடியாவோம்!//
ஹ்ம்ம் அதைத் தன் நாங்களும் சொல்றோம்
//குடிப்பவனுக்கு, வாரம் இருமுறை வகுப்பெடுப்பதால் மட்டுமே..., டாஸ்மாக் நட்டத்தில் ஓட ஆரம்பிக்குமா...//
இது பாலாவின் பஞ்ச்
எலே ஷண்முகம்.. விட்ரா TORRENT க்கு வண்டிய..
@சுப.தமிழினியன்: ரைட்டு! :) பண்ணிடுவோம்! :)
@டி.வி.ஆர்: :) :) பன்ச் வேறயா? :) :) படம் பார்த்ததில்லீன்னா.. கண்டிப்பா பாருங்க தல! மிஸ் பண்ணக் கூடாத படம்.
@கிஷோர்: ஹா. ஹா. ஹா..! வண்டி ஓடுதுங்களா? சப் டைட்டில் இருக்கான்னு பார்த்துக்கங்க.
தெரியாத பல படங்களை, பல விஷயங்களை அறிமுக படுத்துகின்றிர்கள் பாலா. நன்றி. இதுக்கு டோரண்ட் லிங்க் கொடுத்தால் எல்லோருக்கும் வசதியா இருக்கும். சப் டைட்டில் இருக்கா?
லிங்க் கொடுத்திட்டேன் விஜய். இந்த ஃபைலில் சப்டைட்டிலும் இருக்கு. இனிமே.. படங்களோடு.. டோரண்ட் லிங்கையும் சேர்த்தே கொடுத்திடுறேன்.
தல ,
படம் வச்சிருக்கேன், பாக்க நேரம் இல்லாம இருந்ததது, நல்லா சொல்லியிருக்கீங்க, க்யூப்ரிக்கிற்கு தொடர்ந்து மரியாதை செய்கிறீர்கள்,மிக்க நன்றி,
ஓட்டுக்கள் போட்டாச்சு தல,
இதே போல் பெலினியின் படஙக்ளை பற்றியும் எழுதுங்கள்..
நான் இவரின் படங்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தால் உடனே நீ எழுதிவிடுகிறாய்:)
பாலா முடிந்தால் போன் செய்யவும்
ஆஹா.. கார்த்திக்கேயன்...! எப்ப ஒரு 2 மணிநேரம் கிடைச்சாலும்... விட்டுடாதீங்க.
சங்கர்.. உடனே.. காலிங்!
வழக்கமான உங்கள் எழுத்தாளுமையால் குப்ரிக்கிற்கு செலுத்தும் அஞ்சலிகளின் ஊடான விமர்சனமாக அமைகிறது குப்ரிக் பற்றிய தொடர்(?!)
விரைவில் இவரது அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டு சொல்லுகின்றேன்...
எழுதியவரே... ‘இது ஒரு குப்பை’ என சொல்லி தூக்கிப் போட்ட நாவல் தான் A Clockwork Orange. அந்த ‘குப்பையை’, 38 ஆண்டுகள் கழித்தும் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டேயிருக்கக் காரணம்.... ஷண்முகப்ரியன் சாரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டேன்லி குப்ரிக் என்னும் மஹாக் கலைஞன்!
குப்ரிக்கின் சமாதியை பார்த்து கும்பிடு போட்டுவிட்டு... அடுத்த படத்திற்கு ரெடியாவோம்!//
ஆனால் 21 சேப்டர்கள் கொண்ட நாவலில்...., ‘நம்பியார் நல்லவனாகத் திருந்தி, கடைசி ஃப்ரேமில் க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்’ படியான கடைசி சேப்டரை, வேண்டாம் என அமெரிக்கப் பதிப்பகங்கள் ஒதுக்கிவிட, குப்ரிக்கும் அந்த சேப்டரை (அவர் படித்திருந்ததும் அமெரிக்க வெர்ஷனைத் தான்) திரைக்கதையில் இணைக்கவில்லை.//
இது போல நடையெல்லாம் ரொம்ப நன்றாக படத்தை புரிய வைக்கும் தல
நல்ல விமர்சனம்,படம் பார்த்துவிட்டு மீண்டும் வரேன்
பாலா இந்த படம் இன்னும் பார்க்கலை...ஆனா தேடிக்கிட்டு இருக்கேன்...கியூப்பரிக் பத்தி நான் தனி பதிவே போட்டு அந்த கலைஞனை நேரம் கிடைக்கும் போது கவுரவ படுத்துகின்றேன்...
இந்த படத்துக்காக ஸ்பெஷல் லென்ஸ் தயாரிக்க பட்டது..
இந்த படத்தை பத்து வாரத்தில் முடி்த்துவிட நினைத்து ஆரம்பித்து கடைசியில் இந்த படம் முடிக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆனது....
இந்த படம் எக்ஸ் ரேட்டிங் மோஷன் பிலிம் ஆசோசியேஷனால் வழங்க பட்டது....
இங்கு 100 வது நாள் படம் வந்து பல கொலைகளை செய்ததாக தினத்தந்திக்கு எப்படி தீனி போட்டார்களோ.... அதே போல் அங்கே 1975களில் எந்த குற்றம் நடந்தாலும் இந்த படத்தினால்தான் என்று சொல்ல தனது படத்துக்கு தனே நிரந்தர தடை விதித்ததார் குயூப்ரிக்...
இன்னும் நிறைய இருக்கின்றது அதற்க்காகவே இந்த படத்தை பார்த்து விட்டு இன்னும் அதிக விவரங்களோடு எழுத உத்தேசித்து உள்ளேன்...
நன்றி பாலா கியூப்ரிக் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ஏதுவாய்... இந்த படங்களை அறிமுகபடுத்துவதற்க்கு என் நன்றிகள்...
சூப்பர்ப் பாலாண்ணே! எனக்கு பரீட்சை இருந்தாலும், இப்படி பின்னூட்டம் போட வைக்குறீங்களே. பல தகவல்கள் புதிது. 71லயே கேமிராவுக்கு இப்படி வியக்குறீங்களே, 68க்கு? பை தி வே, எந்த வர்ஷனில் பார்த்தீர்கள்? எச்.டி உனைட்டடில் 720பி தரத்தில் பார்க்கவும்.. மெய்மறத்தல். படம் பார்த்து முடித்தபின்.. திரையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். 18 வயதில் என்னுள் இனம் புரியாத வெறியை உண்டு செய்த படம். இதை கலை என்றெல்லாம் சிறுமைப்படுத்தக் கூடாது. வெரி வெல் ரிட்டன்.
//இது ஒரு குப்பை’ என சொல்லி தூக்கிப் போட்ட நாவல் தான் A Clockwork Orange. அந்த ‘குப்பையை’, 38 ஆண்டுகள் கழித்தும் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டேயிருக்கக் காரணம்.... ஷண்முகப்ரியன் சாரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டேன்லி குப்ரிக் என்னும் மஹாக் கலைஞன்///
சூப்பர் பாலாண்ணே..
//எழுதியவரே... ‘இது ஒரு குப்பை’ என சொல்லி தூக்கிப் போட்ட நாவல் தான் A Clockwork Orange. அந்த ‘குப்பையை’, 38 ஆண்டுகள் கழித்தும் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டேயிருக்கக் காரணம்.... ஷண்முகப்ரியன் சாரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டேன்லி குப்ரிக் என்னும் மஹாக் கலைஞன்!//
உங்களின் வார்த்தைகளின் கோர்வை சிறப்பாக உள்ளது உதாரணம் தான் மேலே குறிபிட்ட வரிகள்.
godfather தான் முடியாதுன்னு சொல்லிடிங்கோ. எனக்கு புடிச்ச the departed படத்தையாவது விமர்சனம் பன்னுவீங்கள ...
இவ்வளவு சமூக அழுத்தத்தோடவும் எழுத முடியும் என்று அருமையான சொல்லாற்றலால் நிரூபித்திருக்கிறீர்கள்,பாலா.
சின்ன வயதில் நீங்கள் சொன்ன நாவலைப் பல முறை வாசிக்க முயன்று தோற்றவன் நான்.ஏனெனில் நாவலின் ’அமெரிக்கன் ஸ்லாங்’,ஒரு துளி கூடப் புரியாத பரிதாப நிலை.
இப்போது படத்தை சப்-டைட்டிலோடு பார்த்தாலாவது புரியுமா என்று பார்க்கிறேன்.
Is it a futuristic movie,I mean,period forwarded at the time of the novel?
[[இளமையில் கல்லவி என்பதுதான்... நன் எல்லோருடைய எண்ணமாக (இருந்)திருக்கும்.]]
இந்தத் தில்லாலங்கடியெல்லாம் எங்ககிட்ட வேணாம்.. மருவாதையா சொல்லிருங்க.. நீங்கதான இந்த "நன்"..!
இந்த படம் நல்லா இருக்கும்னு டவுன்லோட் செஞ்சு வச்சிருக்கேன், ஆனா இன்னும் பார்க்கல...இந்த விமர்சனத்தை படித்ததும் உடனே பார்க்கும் போல இருக்கு.....பார்த்துட்டு வந்து திரும்ப கமண்ட் போடுறேன்....
இந்த படத்தின் நாயகன் தான், டிண்டோ பிராஸின் கலிகுலா நாயகன்!
\\குப்ரிக்கின் சமாதியை பார்த்து கும்பிடு போட்டுவிட்டு... அடுத்த படத்திற்கு ரெடியாவோம்!\\
ரைட்டு தல ;))
குப்ரிக்கின் 2001 a space odyssey எப்படி?
யப்பா..இதுல தான் "அந்த" வார்த்தைகள் கம்மியா இருக்கு..!!
வெங்கியுடன் பேசும் போது அசந்து விட்டேன். இப்படி ஒரு சினிமா ரசிகரா என்று.
என் நண்பர்கள் பலரும் உங்கள் பிளாக்கின் அதி தீவிர விசிறிகள். என்னால் நீங்கள் குறிப்பிடும் படங்களைப் பார்க்க முடியவில்லை.
ஆனால் அவர்கள் தேடிப் பிடித்துப் பார்க்கிறார்கள்.
தொடர்க உங்கள் அரும் பணி
//எலே ஷண்முகம்.. விட்ரா TORRENT க்கு வண்டிய..//
நானும் வர்றேன் எனக்கொரு டிக்கெட்......
//படமுழுக்க, இவரின் மெஸ்மரைஸ் செய்யும் குரலில்...,பார்வையில்! திரையில் தெரியும், ஸ்டேன்லி குப்ரிக்!!! பல விதங்களில் ‘கொடுத்து வைத்தை மனிதன்’! ஹும்ம்ம்ம்ம்....!!!//
தல இந்த ஆளு நடிப்புகாகவே படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும்..
சிறையில் இருந்து வெளியே வந்தப்பின் பல இடங்களில் அட்டகசாமாக "தெரியாமல் தவறு செய்த ஒரு சிறுவனை" போல் நடித்து இருப்பார்..அதுவும் பல நேரங்களில் அவரை பார்பதற்கே பாவமாக இருக்கும்..
ஆனா இந்த படம் 71ல் வந்ததை தான் நம்ப முடியவில்லை..இன்னமோ போன வருஷம் எடுத்து இந்த வருஷம் ரிலீஸ் ஆனா மாதிரி இருக்கு..
தல,
படம் பார்தேன்,
மாஸ்டர் பீஸ்ங்க, ஜேவியர் பர்டம் மால்கமை தான் நோ கண்ட்ரீ ஃபார் ஓல்டு மென் ல இன்ஸ்பிரேஷன் ஆ எடுத்திருப்பார் போல, என்ன ஒரு நடிப்பு தல,
அதுவும் அந்த டுராங்கோ காரை கொண்டுபோய் செய்யும் சாகசம்? அந்த பாடி பில்டர் ஜூலி குப்ரிக்கிடம் கேட்டாராம் நீங்க ஒரு காட்சிய 30 டேக்கு கூட எடுப்பிங்கன்னு?இந்த வீல் சேர் மனிதரை
தூக்கும் காட்சியை சீக்கிரம் எடுப்பிங்களா?என வெகுளியா கேட்க. குப்ரிக் 3டேக்கில் முடித்தாராம்.
தல படத்தோட கதைய பர்கஸ் வெறும் 500டாலருக்கு வித்ததாக படித்தேன், ஆனல் குப்ரிக் பெரும் விலை கொடுத்தாராம்.
தல ஒரு குய்க் கொஸ்டியன்!
போலீஸ் கஸ்டடியில மாட்டினவன் முகத்தில் காறி துப்பும் அந்த ஆள் யாரு?நல்லவனா? அப்படின்னா அவன் ஏன் முன்னே செய்த குற்றங்களிலிருந்து இவனை காப்பாற்றினான்?அவனுக்கும் இவனுக்கும் ஏதேனும் தவறான தொடர்பு இருந்ததா?
இதை நீங்க விளக்கினால் மகிழ்வேன்.
படம் மோர் ஒர்த்திட். இது கலை இல்ல, அருங்கலை.
அந்த ஜெயில்ல பதிவு செய்யும் காட்சியெல்லாம் கலக்கல். அந்த ஜிம் லேடி மேல பரிதாபமே வராத மாதிரி குப்ரிக் காட்சியமைத்திருப்ப்பார்.
பாலா...18+ ஸ்பெஷல் என்றதும் நான் எதிர்பார்த்தது ஜாலியான படங்களான HOT SHOTS, AMERICAN PIE, HAROLD AND KUMAR......போன்ற படங்களைதான். ஆனால் நீங்கள் எதிர்பார்க்காத படங்களாக போட்டு தாக்கறிங்க. AMERICAN SWING பார்த்து அதிர்ச்சி அடைந்தால் அடுத்து EYES WIDE SHUT பார்த்து ஒரு இனம் புரியாத அனுபவம், அடுத்து ANTICHRIST பார்த்து சிறிது அதிர்ச்சி,அருவெறுப்பு,ஆயாசம் என கலவையான உண்ர்வுகள். இப்ப A CLOCKWORK ORANGE பார்த்து என்ன ஆக போகுதோ. ஒவ்வொரு படமும் ஸ்ட்ராங் டோசாக போய்ட்டு இருக்கு. 18+ என்ற டைட்டிலுடன் மன தைரியம் உள்ளவர்களுக்கு மட்டும் என ஒரு டைட்டிலும் கண்டிப்பாக சேர்த்துக்கலாம். 18+ என்று ஜொள்ளு விட்டு பார்க்க தொடங்கும் எவரும் முடிவில் பெறுவது வேறு விதமான உணர்வுகளே. மொத்ததில் எங்கள் எல்லோரையும் எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்து செல்கின்றீர்கள். அதிர்ச்சிகளுடன் பின் தொடர்கின்றோம்.
ஏற்கனவே எக்கச்செக்க ஆண்டி பைரசி சட்டங்கள் ஐரோப்பாவைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன, ரிசெஷன் வந்ததால் அமேரிக்காவிலும் ஆண்டி பைரசி லாபிக்கள் முடுக்கிகொண்டு திரிகின்றன. இந்த நேரத்தில் நீங்கள் டோரெண்ட் லிங்க் எல்லாம் வலைப்பதிவில் கொடுக்கிறீர்கள்.
மாட்டிக்காமல் இருந்தால் சரி.
சமீபத்தில் பார்த்த படம். Le chant des mariees.
http://sankarmanicka.blogspot.com/2009/11/le-chant-des-mariees.html
அதைப்பற்றி நீங்கள் எழுதுங்களேன்.
நல்ல திரைப்படங்களை (தமிழல்லாத)தேடிப்பிடிக்க வாய்ப்பில்லாது உங்கள் தெரிவுகள் மூலமாகவே சுலபமாக அறியத்தருவதற்காக நன்றி!
தல...நல்ல இயக்குநர் ஒருவரை உங்க பதிவுகள் மூலம் எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல... அடுத்த பதிவிற்கு வெய்டிங்...
உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.
இதல்லாம் நல்ல படம்தான் 18+ தான். பட், கொஞ்சம் அஜால் குஜாலா எதிர்பார்த்தேன். எல்லாம் ஊஊஊஊ எஃபெக்ட்லயே இருக்கே!
நல்ல பதிவு ஸார். இந்த படம் பார்த்திருக்கிறேன்.. நிறைய அதிர்ச்சியோடு ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் படம்.. குப்ரிக் என் குரு என்று க்வென்டின் கூறியிருக்கிறார்.. க்வென்டின் நான் லினியர்க்கு ஒரு முன்னோடி..THE KILLING. Masterpice in thrillers. பின்னணி இசை பற்றி நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்.
-Toto
www.pixmonk.com
thala... sakka vimarsanam.. arumaiya irundhudu.. niraya thagavalgal... seekram paakanum... :) :)
2001: A space odyssey evaroda padam thaana thala??
/*godfather தான் முடியாதுன்னு சொல்லிடிங்கோ. எனக்கு புடிச்ச the departed படத்தையாவது விமர்சனம் பன்னுவீங்கள ...*/
godfather ah yen thala vimarsanam panna maateenga... enoda all-time favourite athu than..
ஹாய் பாலா.
நான் உங்கள் விசிறி.
சமீபத்தில் Van Wilder: Freshman Year (2009) என்று ஒரு படம் பாத்தேன். (i think)18+ comedy.
உங்களுக்கு நேரம் இருப்பின், உங்கள் நடையில் இப்படத்தை விமர்சிப்பீரா.
ஒரு வேலை உங்களுக்கும் பிடித்திருந்தால் நம் நண்பர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக இருக்கும்.
நன்றி,
ஸ்டான்லீ.
@சென்ஷி: சென்ஷி மாதிரி... என்னைக்காவது... எழுத மாட்டேனான்னு... உங்க பதிவை படிக்கும்போதெல்லாம்... ஒரு காம்ப்ளெக்ஸையே கொண்டு வர வச்சிட்டீங்க! எழுத்தாளுமையா?! :) :)
மிக்க... நன்றி சென்ஷி! எல்லா படமும் உடனேவான்னு தெரியலை. தொடரா இல்லைன்னாலும்.. பதிமூனையும் பார்த்திட எழுதிடலாம்னு இருக்கேன் (அத்தனையும் பார்த்தாச்சி).
============
@கார்த்திக்கேயன்: கதை 500-க்கு வித்த மேட்டர் எனக்குப் புதுசுங்க தல! :)
ஸ்டேன்லியின் கருத்துப் படி, அந்த கேரக்டர்தான் ஸிம்பாலிக் “சமூகம்”. அது நல்லது கெட்டது ரெண்டும் கலந்தது.
////அவன் ஏன் முன்னே செய்த குற்றங்களிலிருந்து இவனை காப்பாற்றினான்?///
இது எனக்குப் புரியலீங்களே?! எதுவும் மிஸ் பண்ணிட்டேனா? நான் திரும்ப ஒருமுறை.. பார்த்துட்டு நிச்சயம்.. இதுக்குப் பதில் சொல்லுறேன் தல. ஸாரி! :( கூடிய விரைவில்!!
=============
@ஜாக்கி: மிக்க நன்றி ஜாக்கி...! சீக்கிரம்.. இவரைப் பத்தி எழுதுங்க தல! உங்களை மாதிரி.. ஃபீல்டில் இருக்கறவங்க.. இவரைப் பற்றி எழுதுவதற்கும்.. நான் எழுதறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு! நீங்க எழுதும்போது அதன் ரீச் வேறு.
படம் டோரண்டில் இருக்குங்க ஜாக்கி! நிறைய இடத்தில் கிடைக்குது. 18+ இருக்கும்போதே.. அவரோ இன்னும் சில படங்களையும் அறிமுகப் படுத்திடலாம்னு இருக்கேன்.
=============
@வெங்கி: வந்தானே.. வந்தானே.. மாவீரன் வந்தானே! :) :)
68- நீங்க சொன்னவுடனே பார்த்திட்டேன் வெங்கி. 68 மட்டும் இல்ல.. 56-ம்! வெறி பிடிச்ச மாதிரி.. அத்தனை படங்களையும்.. ஒரே... வாரத்தில் பார்த்து முடிச்சிட்டேன்.
இந்தப் படத்தை நான் பார்த்தது 1080p- யில்! குப்ரிக்கின் நிறைய படங்கள் இப்பல்லாம் $10-க்கு ப்ளூரேவில் கிடைக்குதுங்க வெங்கி! PS3 வாங்கிட்டீங்களா?
=============
@ஸ்ரீ.கிருஷ்ணா: நன்றி கிருஷ்ணா! :)
=============
@பேநா மூடி: பாராட்டிற்கு நன்றிங்க! The Departed நிச்சயமா எழுதறேன். Kubrik & Martin படங்கள் அத்தனையையும் எழுதிடனும்னு ஆசை. கூடிய சீக்கிரம்! :)
=============
@ஷண்முகப்ரியன் சார்: சொல்லாற்றலில்.. உங்களில் கால்வாசி இருந்தால் கூட போதும்னு நினைக்கிறேன் சார்! :) :)
படத்தின் வசனங்களில்... கடினமான வார்த்தைகள் உபயோகப் படுத்தியிருப்பாங்க சார். ஆனா.. எல்லாம் ப்ரிட்டிஷ் ஆங்கிலம் தான். நாவலில் ‘அமெரிக்கன் ஸ்லாங்’ உபயோகித்திருக்காங்களானு தெரியலை. ஆனா.. கதை... ‘இங்கிலாந்தில்... எதிர்காலத்தில்’-ன்னு தான் சொல்லியிருப்பாங்க.
படத்திலும், அதையேதான் காட்டியிருப்பாங்க (Near Future). உங்கள் சந்தேகம் சரிதான். இது futuristic கதைதான்.
===============
@உ.த: உங்களை.. இந்த ஏரியா பக்கமே.. ஒரு மாசம் தலை காட்டக் கூடாதுன்னு சொன்ன பின்னாடியும், சொன்னதை கேட்காம வந்துட்டு... ‘குத்தம் குறை’ வேற கண்டு பிடிக்கறீங்களா? :) :) :)
திருத்திட்டேங்க! :) :)
===============
@சிவன்: கண்டிப்பா சிவன். உடனே பாருங்க. இன்னேரம் பார்த்திருப்பீங்கன்னு நம்பறேன்.
===============
@வால்பையன்: ஆமாங்க தல! Caligula கூட லிஸ்டில் இருக்கு! போடலாங்களா?? யாராவது பிடனியில போட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு! :)
===============
@கோபி: சார்.. இந்தப் படத்தை பார்த்தீங்களா?? பார்க்கலைன்னா... உங்க ஐபி.. ப்ளாக் செய்யப் படும்! :)
================
@நாஞ்சில் பிரதாப்: :) :) :)
===============
@வினோத்: நீங்க சொன்னது 100% உண்மை வினோத். சிறையில் இருந்து வெளிவரும் போது, நீங்க சொன்னதையேதான்.. நானும் நினைச்சேன். அது.. ஏமாத்து வேலையோன்னுதான்.. முதல்முறை பார்க்கும் போது நினைச்சேன். ஆனா.. படம் எங்க யோசிக்க விட்டது? பிரம்மை பிடிச்ச மாதிரி உட்கார்ந்துகிட்டு இருந்தேன். :)
நீங்க 68-ஐ பார்க்கலையே...?! கூடிய சீக்கிரம்.. அதுவும்!
===============
@விஜய்: ஹி.. ஹி.. நானும் நினைக்கலீங்க விஜய். அமெரிக்கன் பை மாதிரி படங்களைத்தான் போடப் போறேன்னு நினைச்சேன். வேற ரூட்டுல போய்கிட்டு இருக்கு. அந்த மாதிரியும் எதாவது படங்களை எழுதறேன். ஆனா.. எழுத ஆரம்பிக்கிற வரைக்கும்.. எனக்கே என்ன படம் எழுதப் போறேன்னு தெரியாது. :) :) இந்தப் படத்தை.. ஏப்ரல் மாதம் எழுத ஆரம்பிச்சேன்.
மற்ற 18+ ஐ விட.. இது பலமடங்கு பவர்ஃபுல் படம் விஜய். பார்த்தால் நீங்களே சொல்லுவீங்க
==============
@வஜ்ரா: டோரண்ட் லின்க் கொடுப்பதால் எல்லாம்.. நம்மை ஒன்னும் பண்ண முடியாதுங்க வஜ்ரா. அந்த காண்டண்ட் என் ஹார்ட் ட்ரைவில் இருந்து, அதை.. யாருக்காவது ஸீட் பண்ணினா.. அக்யூஸ் பண்ணலாம்.
நீங்க சொன்னப் படத்தை கண்டிப்பா பார்க்கறேன் தல! எழுத வேண்டிய புதுப்படங்களே... என்னை மூச்சு முட்ட வைக்குது! நிச்சயம்.. கூடிய விரைவில்! :)
==============
@சுகுமார்: யு வெல்கம்! :) :)
==============
@பிரதீப்: இவரோட படங்களை விடாதீங்க பிரதீப். வாழ்க்கையில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள்!
==============
@ஆதிமூலகிருஷ்ணன்: ஈமெயிலில் பாராட்டிய போதே.., எனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலீங்க. இப்ப அதை உங்க பதிவிலேயே சுட்டிட்டீங்க. இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோன்னு தோணுது. உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி! கூடிய விரைவில்.. அதை ஒரு முழு கட்டுரையாக பார்க்கலாம். I hope so! :)
===============
@பப்பு: அதானே...பார்த்தேன்! :) :) விஜய்க்கு சொன்ன பதில்தான் பப்பு! 18+ ல் எழுதற அளவுக்கு ஒரு படம் நினைவு வந்தால்.. நிச்சயம் எழுதிடுவோம்! :)
===============
@Toto: எனக்கு அதிர்ச்சியா ஆரம்பிச்சி.. ரொம்ப அதிர்ச்சியா முடிஞ்சதுங்க தல! :) க்வெண்டின் குப்ரிக்கையா சொன்னார்? மார்ட்டினை சொன்னதாதான் நான் ஒரு இண்டர்வியூவில் படிச்சதா நியாபகம்.
The Killing எல்லாம்.. போன மாதம்.. த்ரில்லர் எழுதும் போது நியாபகத்துக்கு வரலீங்க தல. இந்தப் படம் எழுதும்போதுதான்.. அதை மிஸ் பண்ணினது நினைப்பு வந்தது! :(
===============
@கனகு: காட் ஃபாதர் எனக்கும் ஆல் டைம் ஃபேவரிட் தான் கனகு! அதனால்தான். அது பிழைச்சி போகட்டும்னு எழுத மாட்டேன்னு சொன்னேன்! :) :) :)
===============
@ஸ்டேன்லீ: என்னங்க தல இது..?! விசிறி.. கிசிறின்னு எல்லாம் சொல்லிகிட்டு! :) தொழில் முறை எழுத்தாளர்களுக்கு வேணும்னா.. இதெல்லாம் இருக்கலாம். நாமெல்லாம்.. டைம் பாஸுக்கு எழுதிகிட்டு இருக்கோம். நீங்க என்னை உங்க ஃப்ரெண்டா பார்த்தாலே எனக்கு சந்தோசம்! :)
எனக்கு National Lampoon சீரீஸ் படங்கள் ரொம்ப பிடிச்சது இல்லைங்க தல (நிறய படங்கள் பார்த்திருக்கேன்). இந்தப் படத்தின் முந்தைய பாகமான The Rise of Taj பார்த்து நொந்து போய்ட்டேன். படங்கள் நிச்சயம் டீன் காமெடிதான். 18+ எழுதற அளவுக்கு அதில் எதாவது இருக்கா?
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்க்கறேன் தல :) :) !!!
@ராமலிங்கம்: இன்னும் நீங்க பார்க்கலையா??? மிகப் பெரிய குற்றம்!! :) தல.. உடனே.... உடனே.. உடனே.... பாருங்க!
@ரங்கன்: ஹா.. ஹா.. ஹா.. அடுத்தப் பதிவில் சரி பண்ணிடலாங்க ரங்கன்! :) ஸாரி! :) :)
@முரளிக்கண்ணன்: எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்துப் பேசனுங்க தல! படிக்கும் உங்க நண்பர்களுக்கு என் நன்றியை சொல்லிடுங்க! :) மெயில் பார்த்தேன். திரும்பி மெயில் பண்ணுறதை விட... கால் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். நீங்க தூங்கி எழுந்திரிக்க வெய்ட்டிங்!
பாலா சார் நான் இப்பதான் உங்க பிளாக் படிக்க ஆரம்பித்திருக்கேன். பூராம் தெரியாத தகவலா இருக்கு. படிக்கறேன்... இத்தன படங்கள எப்ப பார்த்து... அய்யோ சாமி! நான் இன்னும் வளரனும்.
வாங்க.. ரவிகுமார்! :) :)
இப்பதானே வந்திருக்கீங்க?! :) :) கொஞ்ச நாள் ஆகும்! :) :) தலைய பிச்சிகிட்டு ‘அய்யோ சாமி ஆளை விடு’-ன்னு அழ! :) :)
உங்க முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! :) :)
============
@கார்த்திக்கேயன்: கதை 500-க்கு வித்த மேட்டர் எனக்குப் புதுசுங்க தல!
ஸ்டேன்லியின் கருத்துப் படி, அந்த கேரக்டர்தான் ஸிம்பாலிக் “சமூகம்”. அது நல்லது கெட்டது ரெண்டும் கலந்தது.
////அவன் ஏன் முன்னே செய்த குற்றங்களிலிருந்து இவனை காப்பாற்றினான்?///
இது எனக்குப் புரியலீங்களே?! எதுவும் மிஸ் பண்ணிட்டேனா? நான் திரும்ப ஒருமுறை.. பார்த்துட்டு நிச்சயம்.. இதுக்குப் பதில் சொல்லுறேன் தல. ஸாரி! கூடிய விரைவில்!!
தல விளக்கம் அருமையாக கொடுத்தீங்க.
நீங்க எதுவுமே மிஸ் பண்ணலை.
அந்த ப்ரதர் இவனிடம் சில்மிஷம் பண்ணிக்கொண்டே
நேற்று நீ செய்த கற்பழிப்பில் உன் பெயர் வராமல் செய்திருக்கிறேன், ஆனால் தொடர்ந்து இதை செய்யாதே என கண்டிக்கிறான்.
அந்த ஜிம் பெண்மணி இறந்துவிட்டாள் என உறுதியாக பார்த்துவிட்டு வருவதாக சொல்கிறார், அதை வைத்து தான் நான் அப்படிக்கேட்டேன்,
ஸ்டேன்லியின் கருத்துப் படி, அந்த கேரக்டர்தான் ஸிம்பாலிக் “சமூகம்”. அது நல்லது கெட்டது ரெண்டும் கலந்தது.= பெர்ஃபெக்ட்
தல அந்த டுராங்கோ கார் லிமிடெட் எடிஷனாம்
தயாரித்த மூன்றில் படத்தில் நடித்ததும் ஒன்றாம்.
ஆஹா.. நீங்க சொன்ன.. அந்த டயலாக் எனக்கு நினைவில்லை தல. யப்பா.. இப்படி கவனிப்பீங்களா.. ஒவ்வொரு காட்சியையும்! :) :)
இனிமே.. உங்க கிட்ட(யும்) ஜாக்கிரதையா இருக்கனும்! :) :)
===
ஆமா.. எங்க இருந்து.. மேட்டரை பிடிக்கறீங்க? நான் பிகைண்ட் த சீன்ஸ் எல்லாம் பார்த்தேனே.., அதில் ஒன்னையும் காணாம்! :)
கலக்கறீங்க போங்க! :)
தல.. இந்த படத்தோட பேரு மலாய் மொழி (ஆரஞ்ச் என்றால் மனிதன் என்று அர்த்தமாம்). படத்தில் வரும் வசனங்களில் பாதி ருஷ்ய மொழி. (க்ரூவி = ரத்தம்... குருதி மாதிரி இல்ல?, கரோவா = பால், இன்னும் எக்கச்சக்கம்.. டோவோட்ச்கா என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவார்).
பிரிட்டிஷ் என்பது சால்ஜாப்பு தான். ஸ்ட்ரேஞ் லவ் மிகப்பெரிய வெற்றி அடைந்ததும், அமெரிக்காவை கிண்டல் செய்தது போதும் என்று பிரிட்டன் பக்கம் போனார் என்று நினைக்கிறேன். LOL! அதுவரை எல்லா படமும் அமெரிக்காவில் தானே எடுத்தார்? அவர் கட்டுக்கோப்புகள் ஜாஸ்தியாக இருக்கும் பிரிட்டனில் இப்பேர்பட்ட படத்தை எடுத்த காரணம் தெரியவில்லை. என்ன தான் யூனிவர்ஸல் தீம் என்றாலும் கூட.
very interesting sir...
http://www.imdb.com/title/tt0066921/trivia
தல இதுல 40 க்கும் மேற்பட்ட ட்ரைவியாக்கள் , நீங்க முன்பே படித்திருப்பீர்கள் என் நினைத்தேன் தல, எந்த படத்துக்கும் இந்த எண்ணிக்கையில் ட்ரைவியா கொடுத்து நான் பார்த்ததில்லை, வொர்தி ரீட்
@வெங்கி: ஆரஞ்ச்ன்னா.. மனிதன்னு படிச்சேன்
(A Clockwork Orange : இயந்திரத்தனமான மனிதன் //// தோற்றத்தில் மனிதன் - தோலுக்குள் மிருகம்)
மலாய் மொழியா அது? இங்கிலாந்தின்... பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு வார்த்தைன்னு போட்டிருந்தது.
அதே மாதிரி அவர் ப்ரிட்டன் போனதுக்கு வேற காரணம் ஒன்னு படிச்சேன். நாவல் கம்யூனிஸத்தையும்.. படம்... அத்தனையையும் போட்டுத் தாக்கியிருக்கு! :) :)
எக்ஸாம் முடிச்சிட்டு வாங்க! இன்னும் டிஸ்கஸ் பண்ணுவோம்.
===
@மகா: :) :) நன்றி!
=====
@கார்த்திக்கேயன்: எல்லாத்தையும் படிக்க மாட்டேன் தல. நான் IMDB-யே அதிகமா உபயோகிக்க மாட்டேன். 99% ஒரிஜினல் டிவிடியில் தான் பார்ப்பேன். அதுலயே.., behind the scenes, director's comments, எல்லாம் பார்த்து முடிக்கும் போது.. ஒரே படத்தை..., 3-4 முறை பார்த்திருப்பேன். அப்புறம் எழுதறதுக்கு தனியே.. நெட்டில்.. இண்டர்வ்யூ.. அது இதுன்னு..! :) :)
அது என்னன்னே தெரியல.. IMDB யூஸ் பண்ணவே பிடிக்க மாட்டேங்குது. அடுத்த முறை நிச்சயம் பார்க்கறேன்.
nan ippadathai pala murai parthullen..ippadium oru padathai eduka mudiyuma endru yosika vaithar intha stanley kubrick..
hery : உண்மைதாங்க. நானும் பார்க்கும் போதெல்லாம் நினைக்கிறதுண்டு.
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!