புது வரவு - நம்பிக்கை

11/20/2009

New Moon (2009)




ஹும்..! இனிமே அவரசத்தில்.. பதிவு எழுதிட்டு போகக் கூடாதுன்னு.. சத்தியம் பண்ணிகிட்டேன். ரெண்டு தப்பு... பண்ணிட்டு.. திரும்ப படிக்காமலே.. போய்ட்டேன். எழுத்து போட்டவுடனே.. முதல் தப்பு.. நினைவு வந்தது.

படத்தின் பெயர் New Moon. நான் Full Moon-ன்னு அடிச்சிட்டு போயிருக்கேன். நல்லவேளை இது யார் கண்ணிலும் படலை.  ஹைய்யோ.... அடுத்த பிரச்சனை.. வந்தப்ப.. அதுக்கப்புறம்.. என்னால் படத்தில் ஒன்றவே முடியலைங்க. அது வேம்பயரையும் - வேர்வுல்ஃபையும்... மாத்தி எழுதிட்டது.

வந்துப் பார்த்தா.. Maniy ரெடியா.. நிக்கறார். ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!! வயசாகிட்டே போகுதுங்கறதுக்கு இதெல்லாம்.. சாட்சி. தமிழ் படுத்தாம, வேம்பயர்னே எழுதியிருக்கலாம். விதி!!!

சரி படத்துக்கு போவோம்.


ஓநாயை எல்லாம் வௌவால்-ன்னு மாத்திக்கங்க. இல்ல வேணாம்! வேம்பயர்ன்னே சொல்லுறேன். ஃபீலிங் பெட்டர்! போனப் படத்திலிருந்தே... ஹீரோயினுக்கும்.. வேம்பயராகனும்னு ஆசை.  ஹீரோவோ.. அவர் அப்பாவோ.. ஒரு கடி கடித்தால்.. தானும் வேம்ப்யராகி... அவனோடு குடும்பம் குடித்தனமுமாக இருக்கலாம் என பெல்லா நினைக்க.....

... எட்வர்ட் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறான். பின் ஒரு கட்டத்தில்.. அவளை பிரிந்து வேறிடத்திற்கு.. அவனும் அவன் குடும்பமும்.. பறந்துவிட........, இங்கேதான்.. ஓநாய்... எண்ட்ரி..! சரி.. வேணாம்... வேர்வுல்ஃப்-ன்னே சொல்லுறேன்.

போனப் படத்தில்... சிரித்த வில்லி வேம்ப்யர் (விக்டோரியா), இவர்களை பழிவாங்க துடிக்க... இப்பொழுது பெல்லாவை பாதுகாக்கும் பொறுப்பை, ஜேக்கப் என்ற ஒரு வேர்வுல்ஃப் ஏற்றுக் கொள்கிறான்.

இந்தக் கதையில்... ஒரிஜினல்.. ஹீரோ.. அல்மோஸ்ட் காணாமல் போய்விட.., ஜேக்கப்பும் - பெல்லாவும்.. கிட்டத்தட்ட லவ்வு.. லவ்வு..ன்னு லவ்வுகிறார்கள்.

சொன்னா.. கேளுங்க...........


அடப் போங்க...., அது ஓநாயா இருந்தா.. என்ன... வௌவாளா இருந்தா என்ன...! ரெண்டும் சேர்ந்து.. நம்மை குதறி எடுத்து... ரத்தத்தை.. உறிஞ்சிட்டாங்க. டைரக்டருக்கு.. அவ்வளவு வெறி.. நம் மேல்.

கொடுமைடா சாமி!! முதல் பாகமே... மரண கடின்னா..., இது.....!! யப்பா.. யாராவது.. எனக்கு ‘வேட்டைக்காரன்’ டிக்கட்டை எடுத்துக் கொடுங்க! பத்து தடவை பார்க்கறேன். ஒன்னு மட்டும் தெரியுதுங்க. இதோட.. நாவல்.. நல்லா இருந்திருக்கலாம் (Mainy சொன்னது போல).

ஆனா.. படமா எடுக்கும் போது... யார் கையில் போனாலும்.. இது விளங்காது. போன படத்தில்.. + என நான் நினைத்த... BGM, ஹீரோ.. ஹீரோயின்.. எல்லோரும் ----------.

சமீபத்தில்.. இப்படி.. ஒரு டம்ப் பிக்சரை பார்த்ததில்லை. ஆனா.. இதற்கு வந்த கூட்டம் இருக்கு பாருங்க..!!! ஹோலி கௌ!!!

2012 - எல்லாம் ஒரு ஓப்பனிங்கே இல்லை. அவ்வளவு பெரிய பார்க்கிங் லாட்டில் இடமே இல்லை. எங்கோ ஒரு மூலையில் நிறுத்தி... கால் மைல் நடக்க வேண்டியதா போச்சி (அவ்வளவு தூரம் நடந்து ரொம்ப நாள் ஆச்சி!). பாப்கார்ன் விற்ற காசிலேயே.. ஒரு படம் எடுத்திடலாம்னு நினைக்கிறேன். நாலு ஸ்க்ரீனும்.. ஃபுல்.

இதில் வேற.... படத்தில் வரும் மொக்கை ஜோக்குக்கெல்லாம்.. ஒரே சிரிப்பு. புது ஹீரோ சட்டையை கழற்றினால்... ஹோ...ன்னு சத்தம் (பொண்ணுங்கதான்). பழைய ஹீரோ சட்டையை கழற்றும் போது... பயங்கர சிரிப்பு. இந்த லட்ணத்தில்.. மூன்றாவது பாகம் வேற வருதாம் (Eclipse).

சரி விடுங்க..., எவ்வளவு நேரம் தான்.. துக்கக் கதையை பேசறது. நாவல் சூப்பர்.. படம் சூப்பர்ன்னு மட்டும்.. யாராவது.. இங்க சொல்லிக்கிட்டு வந்தீங்க......, நடக்கறதே வேற சொல்லிபுட்டேன்! :) :)

நானும் மனுசன் தானே! என்னைப் பார்த்தா பாவமா தெரியலையா? :(


New Moon = அமாவாசை



43 தியேட்டர் கமெண்ட்ஸ்:

Sangkavi said... November 20, 2009 4:08 AM

அப்ப வேட்டைக்காரன் சூப்பர் ஹிட்டு என சொல்றீங்க...............

venkat said... November 20, 2009 4:20 AM

படம் உங்களுக்கு கடி-ன்ன ஏன் பாஸ்-சு விஜய் - யா வம்புக்கு இழுகிரிங்க....

உங்க விமர்சனம் நல்ல இருக்கு ...

வாழ்த்துக்கள்

kanagu said... November 20, 2009 4:43 AM

appa padam mokka...

enaku indha vampire stories ellam piddikave maatenguthu...

Yasin said... November 20, 2009 5:38 AM

Kapathitinga thalaiva. Night polam-nu irunthen.

KISHORE said... November 20, 2009 6:17 AM

ஓ.........!!! அவ்வளவு நடந்துச்சா பாலா?

viccy said... November 20, 2009 6:17 AM

nalla velai sonninga.. naan kooda intha padathuku polam nu irunthain...

KISHORE said... November 20, 2009 6:20 AM

//ஹும்..! இனிமே அவரசத்தில்.. பதிவு எழுதிட்டு போகக் கூடாதுன்னு.. சத்தியம் பண்ணிகிட்டேன்.//

இதுக்கு தான் எதுவா இருந்தாலும் பல வேலைகளுக்கு மத்தியில வீட்ல எழுதாதிங்க ப்ரீயா ஆபீஸ் போய் எழுதுங்கன்னு அடிச்சிகிறது.. எங்க கேக்குறிங்க?

வினோத்கெளதம் said... November 20, 2009 6:37 AM

//இதுக்கு தான் எதுவா இருந்தாலும் பல வேலைகளுக்கு மத்தியில வீட்ல எழுதாதிங்க ப்ரீயா ஆபீஸ் போய் எழுதுங்கன்னு அடிச்சிகிறது.. எங்க கேக்குறிங்க?//

ஹா ஹா.ஹா..

வினோத்கெளதம் said... November 20, 2009 6:44 AM

இதே மாதிரி vampire மற்றும் werewolf படங்கள் எனக்கு எப்பொழுதும் பயங்கர மொக்கையா இருக்குற மாதிரி தான் தெரியும்..இத வேற கால் மைல் கால் கடுக்க நடந்து போய்..என்னமோ போங்க..படத்துக்கு கூட வந்த "ஸ்பானிஷ் தோழி" ஒன்னும் சொல்லலையா..:))

இந்த டைப்ல என்னக்கு ரொம்ப பிடிச்ச படம் van helsing..தியேட்டர்ல மட்டும் மூன்று தடவை பார்த்து உள்ளேன்..

’டொன்’ லீ said... November 20, 2009 6:47 AM

கிரிஸ்டர்ன் ஸ்டுவர்ட்டின் உதட்டுச்சுழிப்புக்காகவே இந்தப்படத்தையும் பார்க்க தயார்...:-))

Clove said... November 20, 2009 7:07 AM

Ennavo ponga thala vara vara neenga romba avasara paduringa. Poi mokkaiya kadia vangureenga. Itha vera 1/4 Kilomtr nadanthu poiyi athuvum artharathiriyila. Unga kadamai unarva nenaicha pullarikkuthu. Engalukkaga ella valiyayum thangaringa. Neeenga rommmbbba Nallavuru. Thappichamuda sami

Balavasakan said... November 20, 2009 7:51 AM

எப்ப சார் ஒரு நல்ல படத்திற்கு விமர்சனம் எழுதப்போறியள் ஹோலிவுட்டும் நம்ம ஊர்மாதிரி ஒரே டுபாக்கூர் படமா எடுத்திட்டிருக்காங்களா....2012...வந்து போச்சு அடுத்து என்ன மெகா படம் வருது....

ஷண்முகப்ரியன் said... November 20, 2009 8:04 AM

Stephenie Meyer எழுதிய 'Twilight' ஐ மாய்ந்து,மாய்ந்து படித்தும் நாவலை முடிக்க முடியாமல் விட்டு விட்டேன்.
ரத்தத்தை மெது,மெதுவாக உறிஞ்சும் அந்த ‘வேம்ப்பைர்களின்’ நிதானம் எனது ஸ்பீடுக்கு ஒத்து வரவில்லை.
ஆனால் நிறையப் பேருக்கு ஸ்ட்ரா போட்டு ரத்தம் குடிக்கும் இந்த மந்தமான பேய்களைப் பிடித்திருக்கும் போலிருக்கிற்து.புத்தகமும்,ஹிட்.படமும்.

இப்போது இரண்டாம் பாகமும் இதே ரகம் போலிருக்கிறது,பாலா.

ஹாலிவுட் பாலா said... November 20, 2009 9:39 AM

@சங்கவி: இதை பார்க்கறதுக்கு வேற எதை வேணும்னாலும் பார்க்கலாம். சூப்பர் ஹிட்டுன்னா.... சத்த்ம் கேக்குது? :)

@வெங்கட்: நான்.. எம்.ஜி.ஆர் நடிச்ச படத்து டிக்கட்டை தாங்க கேட்டேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

@கனகு: முதல் பாகத்தை கொஞ்சம் பொறுமை இருந்தா பார்க்கலாம். இது மரண கடி

@யாசின்: அப்ப டிக்கட் காசை மணியார்டர் பண்ணிடலாமே? :)

@கிஷோர்: துக்கம் விசாரிக்கற நேரமாங்க இது? :((

@viccy: மணியார்டர்.. மணியார்டர்.!!!

@கிஷோர்: எப்பவும் அதுதாங்க பண்ணுறது. ஆனா... படம் போறதுக்கு 1 மணி நேரம் முன்னாடி.. வீட்டில் இருந்து எழுதினேன். :( :( :(

@வினோத்: எனக்கும் ஆகாதுங்க வினோத். ஆனா... நமக்கு கடமைன்னு ஒன்னு இருக்கில்லீங்களா?? அதிலிருந்து என்னைக்கு தள்ளியிருக்கேன் சொல்லுங்க? :(

சரிதான்.. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!!! கராத்தே மாஸ்டருக்கு உங்க துபாய் அட்ரஸை கொடுத்துவிடுறேன். :) :)


@’டொன்’லீ: மத்தவங்க சொல்லும்போது நம்பிக்கை வரலீங்க. இப்ப என் கண்ணாலயே படிக்கறேன். ‘விதி வலியதாமே’... நெசமாங்களா???? :) :) :)

@லவ்: ஆனந்தக் கண்ணீரா வருதுங்க தல. கட்டவுட்.. சிலை மாதிரி எதாச்சும் வைக்கிற ஐடியா இருக்குங்களா? :) :)

@பாலவாசகன்: இன்னும் ஷெர்லக் ஹோல்ம்ஸ், அவதார், மாதிர் ஒன்னு ரெண்டு இருக்கு. கடமை கடமை!!!

@ஷண்முகப்ரியன்: மந்தமா பேய்கள் -ங்கற வார்த்தைகள் எல்லாம்... இந்தப் பேய்களுக்கு... ரேஸ் கார்-ங்கற மாதிரிங்க சார். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே.. மொத்தமா போய்கிட்டு இருக்கு. கொஞ்ச நாளுக்கு.. ப்லாகை தள்ளி வைக்கனும்னு இருக்கேன். Feel really bad abt this.

முதல் பாகத்தை எல்லாம்.. கோவில்’ல வச்சே கும்பிடலாம். :) :)

வண்டிக்காரன் said... November 20, 2009 10:34 AM

டீன்ஸ் பார்க்கவேண்டிய மூவியை கஷ்டப்பட்டு (நடந்து,உட்கார்ந்து ) பார்த்திட்டு ஏன் இந்த புலம்பல் மாமா..

KISHORE said... November 20, 2009 12:06 PM

//டீன்ஸ் பார்க்கவேண்டிய மூவியை கஷ்டப்பட்டு (நடந்து,உட்கார்ந்து ) பார்த்திட்டு ஏன் இந்த புலம்பல் மாமா..//

பாரபட்சம் இல்லாம ரிப்பீட்டு .. ( உடனே 18+ கிடையாதுன்னு மிரட்டி.. வயசானவங்கன்னு கன்பார்ம் பண்ணாதிங்க.)

pappu said... November 20, 2009 12:38 PM

van helsing இங்க ஓடுனனாளவு அங்க இல்லையாமே? அப்படியா?

இந்தப் படம் முதல் பாகம் காதலாகி கசிந்து உருகின்னு சொன்னானுங்க. அதுல வேம்பயர். இதுல இவனக் கடி கடின்னு கூவுறாளா?

2012 கெட்ட ஓட்டமுங்க!

pappu said... November 20, 2009 12:40 PM

//டீன்ஸ் பார்க்கவேண்டிய மூவியை கஷ்டப்பட்டு (நடந்து,உட்கார்ந்து ) பார்த்திட்டு ஏன் இந்த புலம்பல் மாமா..//

அடறா சக்கை இதை கவனிக்கல. யப்பா, இதெல்லாம் என்னைப் போன்ற யூத்தான, இளம் வாலிபர்கள் பார்க்க வேண்டிய படம். வீட்டுல யாரும் இல்லைன்னு போய் தியேட்டர்ல உக்காந்து காலேஜ் பொண்ணுங்கள் சைட் அடிச்சுட்டு வந்திருக்கீரு!

ஆதிமூலகிருஷ்ணன் said... November 20, 2009 12:43 PM

:-))

வண்டிக்காரன் said... November 20, 2009 1:37 PM

ஜார்ஜ் க்ளூனி படம் பார்க்கலையா .. எப்படி இருக்குனு சொன்னா பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணலாம்.

♠புதுவை சிவா♠ said... November 20, 2009 1:37 PM

நானும் மனுசன் தானே! என்னைப் பார்த்தா பாவமா தெரியலையா?

:-)))))))))))))))

cool man

stanlee said... November 20, 2009 4:22 PM

எங்களுக்கு சினிமா வடிகட்டியாக(வழிகாட்டி எழுத்து பிழை அல்ல) இருந்து, கோலிவுட்டிடம் இருந்து காப்பாற்றும் கேபிள்அண்ணனும், ஹாலிவுடிடம் இருந்து காப்பாற்றும் பாலாஅண்ணனும்,
ரொம்ப நல்ல இருக்கணும்.

ஹாலிவுட் பாலா said... November 20, 2009 7:14 PM

@வண்டிக்காரன் : இனிமே ப்ளாக் எழுதாம.. ட்விட் பண்ண போறேன். அங்கயாவது என்னை யூத்-துன்னு ஒத்துக்கறாங்களானு பார்க்கறேன். என்னா கொழுப்பு! :)

@கிஷோர்: அப்படி வேணாமா சரி..! இனிமே.. 18- மட்டும்தான்.

@பப்பு: 32 வயசெல்லாம்.. யூத்து தானேங்க!!! நேத்து வந்த கூட்டத்தில். யூத்தை விட.. ஃபேமிலியா நிறைய பேர் வந்திருந்தாங்களே....! அவங்க எல்லாம்?

கொஞ்சம் பேரல்லாம் எந்திரிச்சி போய்ட்டாங்க. ஒரு 250 பவுண்ட் லேடிங்க ரெண்டு பேர்.. என் சேரை மறிச்சி உட்கார்ந்திருக்க... என்னால்... பார்டர் தாண்ட முடியலை. இல்லைன்னா வாக் அவுட் பண்ணியிருப்பேன்.


@ஆதி: :) :) :)


@வண்டிக்காரன்: நாளை போய்ட்டு வந்துடுறேன்.


@புதுவை சிவா: ஆகட்டுங்க. இன்னைக்கு பூரா... ஒரே டென்ஷன். இப்பதான் சரியாச்சி! :)


@ஸ்டேன்லி: இருக்கட்டும் இருக்கட்டும்! :)

இன்னும் லிங்க் சரியாகலைங்க!! உங்களுக்கு வொர்க் ஆகுதா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 20, 2009 9:09 PM

//நானும் மனுசன் தானே! என்னைப் பார்த்தா பாவமா தெரியலையா? //

அவ்வளவு கொடுமையா? 2ஆம் பாகம்
டவுன்லோடு கூட போட மாட்டேன்

ஜெட்லி said... November 20, 2009 11:00 PM

//New Moon = அமாவாசை

//

:))மொக்கையா??

santhosh said... November 20, 2009 11:09 PM

yenappa alaluku vetaikaran padathai pathi kovapadureenga, ajith padamellam paakurathu illaya, ajith nadikkum pothu vijay hit padam yedutha yenna thappu?

பேநா மூடி said... November 21, 2009 12:09 AM

// நானும் மனுசன் தானே! என்னைப் பார்த்தா பாவமா தெரியலையா? //

கொஞ்சம் விட்ட அழுதுருவீங்க போல இருக்கே .... :-)

pappu said... November 21, 2009 12:18 AM

வாக் அவுட்டா? அதெல்லாம் பண்ணுவாங்க? நாங்கெல்லாம் எவ்வளவு மொன்னையான படம்னாலும் ரசிச்சு பாத்துருவோம். என்ன அவசரப்படாம நிதானமா போறதால அப்படிபட்ட நிலைமை ஏற்படுறதில்ல. முதல் ஷோ காரர்களுக்கே இந்த அவஸ்தை. எவனாவது ஒரு இளிச்சவாயன் முதல் ஷோ பாத்துட்டு வருவான். அவன் ஓகேனா படம் பாக்கலாம். அவன் அழுதான்னா அவ்வள்வுதான். :)

dominic said... November 21, 2009 3:11 AM

தற்போதைய தமிழ் படம் பார்ப்பவர்களை நினைத்து நான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
உலகமே முன்னுக்கு போய்கொண்டிருக்கும்பொழுது, நாம் மட்டும் நடிகர் நடிகையரை பணக்காரர்கள் ஆக்குவதற்காகவே, சுத்த டப்பாவான தமிழ் படங்களை ஏன் பார்க்கவேண்டும்? சமீபத்தில் 'ஆதவன்' படம் பார்த்தேன். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த படத்தை புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அந்த படத்தின் தயாரிப்பளரான உதயநிதி ஸ்டாலினை நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி அளவுக்கு புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.இந்த சிறிய வயதிலேயே,தன் சொந்தப் பணத்தை (?) வைத்து தாயாரிப்பளாராக உயர்ந்து வந்தது, மிகவும் ஆச்சரியமான விஷயமே! சூர்யாவைத்தவிர வேறு யாருமே இந்த வேடத்தில் நடிக்கமுடியாதெனவும் கதை விட்டிருந்தார்கள். இப்படி ஒருபடத்தை ரவிகுமார் தவிர வேறு எந்த இயக்குனராலும் இந்த நூற்றாண்டில் இயக்கியிருக்கமுடியுமா என திரைப்பட பிரபலங்களே ஆச்சரியப்பட்டு பேட்டி கொடுத்திருந்தார்கள்.
இவ்வளவு பீடிகையோடு இந்தப்படத்தை பார்க்கப்போனால்...............!
15 நிமிடத்தில் நான் வெளியே வந்துவிட்டேன்.
தயவுசெய்து தொலைக்காட்சி, பத்திரிகைகள் விடும் கதைகளை நம்பி பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்யவேண்டாம்!
dompower@gmail.com

Clove said... November 21, 2009 5:05 AM

SOllunga thalai enga ungalukku silai vakkalam venna Suthanthira Devi silai pakkathula oru 1/2 Ground solli vappama. Adikka vandhurathinga. Phonela enna problemnu theriyalla. Ungatimekku engatime othu varalainnu nenakkiren

ஹாலிவுட் பாலா said... November 21, 2009 11:36 AM

@கார்த்திக்கேயன்: தப்பிச்சீங்க! :) :)

@ஜெட்லி: இதுக்கு அப்புறமும்.. டவுட்டா? :) :)

@சந்தோஷ்: சரியா கேட்டீங்க! வினோத்.. இங்க வந்து பதில் சொல்லுங்க. அஜித் பத்தி கேக்கறோமில்ல? :)

@பப்பு : நான் இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் வாக் அவுட் செய்ததில்லை. இந்தப் படத்துக்குதான் அப்படி ஒரு எண்ணமே வந்தது.
ஆடியன்ஸின்... ரெஸ்பான்ஸும் ஒரு காரணமா இருக்கலாம்.

@டோமினிக்: இன்னாங்க இது? ஏரியா மாறி வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்களா? :)

@Clove : இப்ப.. வொர்க் ஆகுதா? நான் திரும்ப ட்ரை பண்ணிப் பார்க்கறேன்.

pappu said... November 21, 2009 11:58 AM

மொக்க படட்துக்கு இவனுங்க ஓவரா சந்தோஷப் பட்டானுங்களா? இல்ல BOo சொல்லிட்டாங்களா?

என்னவோ ஒரு அருமயான அனுபவம், இல்ல?

Heam said... November 21, 2009 2:13 PM

பாலா அண்ணா .. படம் அவ்ளோ மொக்கையா ? நல்ல வேலை இன்னைக்கு நைட் தான் பார்க்கலாம்னு இருந்தேன் , மீ தி எஸ்கேப் .. ஜூட்

கோபிநாத் said... November 21, 2009 6:26 PM

\கொடுமைடா சாமி!! முதல் பாகமே... மரண கடின்னா..., இது.....!! யப்பா.. யாராவது.. எனக்கு ‘வேட்டைக்காரன்’ டிக்கட்டை எடுத்துக் கொடுங்க! பத்து தடவை பார்க்கறேன். ஒன்னு மட்டும் தெரியுதுங்க. இதோட.. நாவல்.. நல்லா இருந்திருக்கலாம் (Mainy சொன்னது போல).
\\

கவலையை விடுங்க தல வினோத் எடுத்து அனுப்பவர் ;))

இராம்/Raam said... November 22, 2009 3:48 AM

கிர்ர்ர்ர்ர்.. ஒங்களுக்கு வயசாகிடுச்சுன்னு நினைக்கிறேன், :-x இந்த படம் அறுவை’ன்னு சொல்லிருக்கீங்க...? :(

புக் முதல் பாகத்தை விட இந்த பாகம் கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்.. 3 & 4 பாகம் இண்டரெஸ்ட்’ஆ இருக்குமாம்.. படிக்கதான் நேரமில்லை.. :)

கலையரசன் said... November 22, 2009 5:22 AM

முதல்ல வவ்வாலு.. அப்புறம் ஓனாயி... அப்புறம் என்ன கழுதைகுட்டியா? இவனுங்க தொல்லை தாங்கமுடியலைங்க பாலு!

இப்டியே அவனுங்க மொக்கை படமா எடுத்தா... உங்களுக்கு வேலையே இருக்காதுன்னு நினைக்கிறேன்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... November 22, 2009 5:31 AM

நீங்க மனுஷன்தான்றதை நானும் ஒத்துக்குறேன்..!

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 4:30 PM

@பப்பு: ரெண்டும் நடந்துச்சி. கொடுமை.. கொடுமை! வசூலைப் பார்த்தீங்களா. மூணு நாளில் 140 மில்லியன்!!

@Heam: தப்பிச்சீங்க தல. நீங்க பதிவு எழுதி... நான் படிச்சா நல்லாயிருக்கும்னு இந்த மாதிரி படங்களைப் பார்க்கும்போது நினைக்கறது உண்டு.! :)

@கோபி: ஹா.. ஹா.. ஹா! அப்ப.. அசலுக்கு யாரு டிக்கட் கொடுப்பாங்க?

@இராம்: இராமை.. நாடு கடத்துமாறு.. இந்த கோர்ட் உத்தரவு அளிக்கிறது! :)

நெசமா... சொல்லுங்க! இதைவிட மொக்கையா ஒரு படம் எடுக்க முடியுமா? 2:10 நிமிடம்... கொத்து பரோட்டா போட்டு அனுப்பிட்டாங்க. இதை நல்ல படம்னு சொல்லுறீங்களே?!

@கலையரசன்: ஹா. ஹா. ஹா.! அப்பிடி எல்லாம் சொல்லக் கூடாது. இந்தப் படத்தை பத்தி தப்பா பேசினா... பாருங்க... இராம் நம்மளை ‘வயசாயிடுச்சி’ங்கறார்! மூணாவது பார்ட் என்ன கடியா இருந்தாலும் சூப்பர்ன்னு எழுதிடப் போறேன்.

@உ.த: அப்பாடா.. ஒருத்தராவது..!! :) :)

Anand said... November 22, 2009 6:49 PM
This post has been removed by the author.
Anand said... November 22, 2009 6:50 PM

பாலா, உங்க விமர்சனத்தை பாக்காம படத்துக்கு போனது தப்புதான் (போயிட்டு வந்துதான் உங்க விமர்சனம் பார்த்தேன்

இது மாதிரி ஒரு மொக்கை/திராபை படத்துக்கு இவ்ளோ கும்பல் பார்த்தது இல்லை.

//ஒரே சிரிப்பு. புது ஹீரோ சட்டையை கழற்றினால்... ஹோ...ன்னு சத்தம் (பொண்ணுங்கதான்).// ரொம்ப சரி.
Theater'இல் இருந்த நூற்றி சொச்சம் பேரில் நானும் என் நண்பனும் மட்டுமே பசங்க

இந்த கொடுமை போதாதுன்னு, ஸ்க்ரீனுக்கு வெளியே ரஜினி படத்துக்கு லைன் கட்டி நிற்கிற மாதிரி ஒரு கும்பல்.

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 7:06 PM

பாருங்க ஆனந்த்..! படம் நல்லாயில்லைன்னு சொன்னா.... நம்மளை கிழவன்னு சொல்லுறாங்க! :)

நீங்களாவது.. நம்ம சைடில் இருக்கீங்களே! :) :)

G.Ragavan said... November 22, 2009 11:29 PM

புத்தகத்திலும் இரண்டாம்பாகம் சுமாரானது என்று பொதுவான கருத்து. ஆனாலும் படத்தைப் பார்த்தேயாக வேண்டும். படித்ததெல்லாம் எப்படி வந்திருக்கிறது.. எதையெதை மாற்றியிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டுமே. வேம்ப்பயர்களைக் குறைவாகக் காட்டியதால் இரண்டாம் புத்தகம் சுமார் என்று கூட ஒரு கருத்துண்டு.

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 11:57 PM

படம் சுமாரா இருந்தால் கூடப் பரவாயில்லை. முதல் பாகத்தை விட.. கொடுமையான வேகம்.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil