புது வரவு - நம்பிக்கை

11/22/2009

Saw I - VI [18+] Part 1




முதல் ஐந்து பாகத்தையும் முழுதாக பார்க்காதவர்கள், இந்தப் பதிவை படிக்க வேண்டாம். 100% புரியாது!!! ஆறாவது பாகத்தில் எந்த சஸ்பென்ஸும் இல்லை என்பதால்... அதற்கு விதிவிலக்கு.


Saw-வின் ஆறாம் பாகம் போன மாதம் வெளி வந்ததும், பதிவை போடுவதற்குள், விஜய் மத்த ஐந்து பாகங்களையும் ‘சுருக்கமாக’வாவது எழுதிட்டு... ஆறை எழுதச் சொன்னார். ’சுருக்கமா’ என்னை எழுதச் சொல்லுறாரே-ன்னு ரொம்ப.. நாளா யோசிச்சி.. எப்படி எழுதறதுன்னு குழம்பிக்கிட்டே இருந்தேன்.

ஐந்து பாகங்களையும் சுருக்கமா ஒரே பதிவில் சொல்ல முடியுமான்னு தெரியலை. அதனால் ஆறு படங்களையும் சேர்த்து.. ஒரே கதையாக சொல்ல முடியுமா எனப் பார்க்கிறேன். நிறைய கேரக்டர்கள் பெயர் வரலாம். முடிந்த வரைக்கும் நினைவு வைத்துக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இதில் எந்த பாகத்தையாவது நீங்கள் பார்க்கவில்லை என்றால், படிக்க வேண்டாம். அது ஆறாவது பாகத்தையும் சேர்த்துதான். ஆனால்.. ஆறாவது பாகம் பெரிய ரேஞ்சில் எந்த சஸ்பென்ஸையும் வைத்திருக்க வில்லை. முதல் ஐந்து பாகங்களில் விடை தெரியாத சில கேள்விகளுக்கு, ‘சப்பை கட்டு’ கட்டவே இந்த பாகம் எடுக்கப் பட்டிருக்கிறது.

அதனால்.. படித்தாலும்.. ஒன்றும் பிரச்சனையில்லை-ன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும்.. உங்க இஷ்டம்!!!


ஜேம்ஸ் வான் என்ற ஒரு ஆஸ்த்ரேலிய இயக்குனரால், ஒரு குறும் படமாக ஆரம்பித்த Saw, இன்று ஹாரர் சரித்திரம். Saw படமில்லாமல், இன்று ஹாலோவீன் இல்லை. Saw -வின் முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றி (21 நாளில் எடுக்கப்பட்டது), லயன்கேட்ஸ் நிறுவனத்திற்கு பணங்காய்ச்சி மரமாய் தெரிய, எங்கெல்லாம்.. கதையை நுழைக்க முடியுமோ.. அதையெல்லாம் செய்து... குழப்பிக் கொண்டிருப்பதால்... முதல் பாகத்தில் இருந்து ஆறாம் பாகம் வரை கதை... முன் பின் நகரும்.

அதனால் பட வரிசையில் கதையை பார்க்க முடியாது. முடிந்த வரைக்கும் க்ரொனலாஜிகலாக சொல்ல முயற்சிக்கிறேன். தப்பிருந்தால்... திருத்தவும்.


ஜான் க்ரேமர் ஒரு என்ஜினியர். அவர் மனைவி ஜில் டக்நர்ஸ் (சரி பார்த்து இதை திருத்தி விடுகிறேன்). போதைப் பழக்கத்தில் இருந்து திருத்தும் க்ளினிக் ஒன்றை நடத்தி வருகிறாள். சிசில் என்ற ஒரு போதைப் பழக்க நோயாளியால், ஜில்-லின் கர்பம் கலைந்து விடுகிறது. சிசில் தப்பி விடுகிறான். (ஜில்-லின் கருக் கலைப்பு கசமுசாவில் ‘அமேண்டா’ என்பவளுக்கு தெரிந்தோ-தெரியாமலோ தொடர்பிருக்கிறது). இந்த கருக் கலைப்பு விவகாரத்தால், விரக்தியில் மனைவி ஜில்லை விட்டு..., ஜான் பிரிந்து விடுகிறார்.

ஜானுக்கு, கேன்ஸர் இருப்பது, டாக்டர் கார்டன் என்பவரால் கண்டு பிடிக்கப் படுகிறது. தன் கேன்ஸரை குணப் படுத்துவதற்க்காக தானே ஒரு டாக்டரை ஜான் கண்டு பிடிக்கிறார். ஆனால் அவரின் இன்ஸூரன்ஸ் கம்பெனியின் CEO, வில்லியம், தாங்கள் சொல்லும் டாக்டர்தான் இவரின் ஆப்ரேஷனை செய்ய முடியுமே தவிர... இவரால் எந்த டாக்டரையும் தேர்ந்தெடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். கூடவே.. இன்னும் ஒருவரது இன்ஸூரன்ஸ க்ளெய்மையும் நிராகரித்து விடுகிறார்.

(இடது புகைப் படத்தில் ஜில்) உயிர் வாழ விரும்பாத ஜான், தானே காரை விபத்துக்குள்ளாக்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். எமனுக்குப் பதிலாக ஞான உதயம் வருகிறது. அன்றிலிருந்து மற்றவர்களின் வாழ்க்கையை உற்று கவனிக்க ஆரம்பிக்கிறான்.

தவறு செய்பவன், தானே திருந்தினால் ஒழிய, வேறு யாராலும் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வருகிறான். உயிரின் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை எனவும் அதை புரிய வைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கிறான். யாரையும் கொல்லும் நோக்கம் ஜானுக்கு கிடையாது. பதிலாக, தான் வைக்கும் டெஸ்டில்.. பங்கேற்பவர்களே, தங்களை துன்புறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். தப்பித்தால், செய்த தவறுகளை நினைத்து, இனி திருந்தி வாழ ஒரு கடைசி வாய்ப்பு.

ஜான், தன் பிறக்காத குழந்தையின் மரணத்திற்கு காரணமான சிசிலை, தன் முதல் டெஸ்ட் சப்ஜக்டாக தேர்ந்தெடுக்க, சிசிலின் கைகள் ஒரு நாற்காலியில் பிளேடோடு கோர்க்கப் பட்டு, முகத்திற்கு நேராக உள்ள கூரிய பிளேடுகளை, முகத்தாலே அழுத்தி, கைகளின் லாக்கை திறக்க வேண்டிய கட்டாயம். டெஸ்டில் பாஸாகியும், தானாகவே ஒரு முள் கம்பியில் விழுந்து சிசில் இறக்கிறான். (ஜான் இங்கிருந்து தன் டெஸ்ட்களை தொடர ஆரம்பிக்கிறான்).

மாட்டுபவர்களுக்கு, புதிர் வடிவில் தனது டெஸ்ட் டூல்களை வடிமைப்பதாலும்,  இறந்தவர்களின் உடலிலிருந்து, தோலை ஜிக்ஸா வடிவத்தில் வெட்டி எடுப்பதால், ஜானுக்கு, ஜிக்ஸா கில்லர் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது.

அமேண்டா போதைப் பழக்கத்திற்கு அடிமையானவள்.  அவளை ஜான் கடத்த..., அவளின் டெஸ்ட்... உயிரோடு இருக்கும் ஒருவனின் வயிற்றை கிழித்து, உள்ளிருக்கும் சாவியை எடுத்தால், அவள் வாய்(?) தப்பிக்கும்.

ஜானின் டெஸ்டில் எல்லோரும் உயிர் விட, முதல் ஆளாய் அமேண்டா உயிர் பிழைக்கிறாள்.

ஜானின் இந்த ‘திருத்தும் முயற்சி’ பிடித்துப் போக, அமேண்டா, ஜானிடம் சிஷ்யையாகிறாள்.



கிட்டத்தட்ட இதே நேரத்தில்..................................

தன் சகோதரியை, கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, வெறும் ஐந்து வருட சிறை தண்டனையோடு வெளியே வந்துவிடும் ஒருவனை (ஸெத் பேக்ஸ்டர்- இடது படத்தில்) , மார்க் ஹாஃப்மேன் (அடுத்தப் படத்தில்) என்னும் போலீஸ் டிடக்டிவ், ஜிக்ஸா -வின் டெஸ்ட் போல ஒன்றை உருவாக்கி, சகோதரியின் கொலைக்கு பழி வாங்குகிறான். அப்பொழுதிலிருந்து “I know who you are” என்று எழுதப் பட்ட கார்ட் அவன் அறையில் கிடைக்க ஆரம்பிக்கிறது.



ஒரு கட்டத்தில் அதை எழுதி வைப்பது ஜான் என நமக்குத் தெரிய வரும்போது, அவன் ஜானால் கடத்தப் படுகிறான். ஜான்.., மார்க்கிடம் - தனக்கு உதவியாளனாய் சேருமாறு ப்ளாக் மெய்ல் செய்ய, மார்க் ஒப்புக் கொள்கிறான்.

மார்க்கும் - ஜானும் சேர்ந்து, ‘தன் கையை தானே அறுத்துக் கொண்டு மற்றவர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்ப முயற்சிக்கும் ஒருவனை கடத்துகிறார்கள்.

ஒரு கூண்டுக்குள், முள்கம்பிகளை அமைத்து, ஒரு பக்கத்தில் இருந்து... கதவு இருக்கும் இன்னொரு பக்கத்திற்கு போவதாக டெஸ்ட் டூல் அமைக்கிறார்கள். கிட்டத்தட்ட கூண்டின் கதவை அடைந்துவிட்டாலும்... அவன் உயிர் விடுகிறான். அந்த இடத்தில் ஜான், தன் டாக்டர் கார்டனின் பேனா டார்ச்லைட்டை தடயமாக வைத்துவிட்டுப் போகிறார்.

2012 - படத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வருவாரே ஒரு ராப்பிச்சை: அவரும், இன்னொரு சைனீஷ் பார்ட்னரும்... இந்த கூண்டில் இறந்தவனின் கேஸை கவனிக்க வருகிறார்கள். அப்பொழுது டாக்டர் கார்டனின் டார்ச்லைட் கிடைக்கிறது. இதை வைத்து டாக்டர்தான் ஜிக்ஸாவோ என்ற எண்ணம்... ராப்பிச்சைக்கு வருகிறது. டாக்டர் விசாரணைக்கு அழைக்கப் படுகிறார்.

அதற்கு அடுத்த அறையில் அமேண்டா... தான் எவ்வாறு ‘டெஸ்ட்’ செய்யப்பட்டாள் என போலீஸிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ராப்பிச்சையும், சைனீஸும்... வீடியோவில் கேட்கும் ஃபயர் அலாரத்தை வைத்து, ஜிக்ஸாவின் இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். பிடிக்கப் போகும் நேரத்தில், ராப்பிச்சையின் கழுத்து அறுபட, சைனீஸ் புத்தரை மீட் பண்ண.. மேலோகம் போகிறார்.

அன்றிலிருந்து ராப்பிச்சைக்கு.. ஜிக்ஸா மேல் அலாதி பிரியம் வந்து..., துரத்த ஆரம்பிக்கிறார். ஆனால்.. தவறுதலாக... அந்த ஜிக்ஸா டாக்டர் கார்டன் என நினைத்து, அவரைப் பின் தொடர ஒரு போட்டோக்ராஃபரை ஏற்பாடு செய்கிறார்.

டாக்டர் கார்டனையும், போட்டோக்ராஃபரையும், அமேண்டா கடத்துகிறாள். அவர்கள் இருவரும், தனித்தனி சங்கிலிகளால் கட்டப்பட..., இந்த டெஸ்டில், நடுவில் பிணமாக ஜான் பங்கெடுக்கிறார்.

அதே நேரத்தில் ஸெப் என்பவனுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுக்கப்பட்டு, அதன் முறிவு மருந்திற்காக டாக்டர் கார்டனின் மனைவி-குழந்தையை அவர்கள் வீட்டிலேயே சிறை வைக்க பணிக்கப் படுகிறான்.

டெஸ்டின் முடிவில் டாக்டர் தன் காலை அறுத்துக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேற, ஸெப்பால்... சுடப்பட்ட போட்டோகிராஃபர் குற்றுயிராக அந்த அறைக்குள்ளேயே அடைக்கப் படுகிறான். சண்டையில் ஸெப் காலி.
தன் காலை அறுத்துக் கொண்டு வெளியேறிய டாக்டரின் நிலைமையும் இதுவரை வெளிப்படையாக எந்தப் படத்திலும் சொல்லப் படவில்லை (ஒரு இண்டர்வ்யூவில்..., இனிமேல் வரும் பாகங்களில் தெரியலாம் என சொல்லியிருக்கிறார்கள்).
அமேண்டாவால், போட்டோகிராஃபர் ஆடம் (இந்த ஒல்லிபிச்சான் தான்... முதல் மூன்று பாகங்களின் கதை-திரைக்கதை ஆசிரியர், எல்லா பாகங்களுக்கும் எக்ஸாக்யுட்டீவ் ப்ரொடியூஸர்) (கருணைக்) கொலை செய்யப் படுகிறான். இதில் அமேண்டா ரொம்ப உணர்ச்சி வசப்படுபவள் எனத் தெரிகிறது.

ஜானின் நோக்கம், டெஸ்டில் வெற்றியடைபவர்களுக்கு, உயிர் வாழ வாய்ப்பளிப்பது. ஆனால் அமேண்டாவின் நோக்கம் அதுவல்ல.

(தொடரும்)



ஒரிஜினல் Saw குறும்படத்தை பார்க்கதவர்களுக்கு, யுட்யூப் லிங்க்.






111 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 10:27 PM

பதிவு போட்டு.. ஒருமணி நேரமாச்சி..! ஒரு பய புள்ளயும் காணாமே????

எலே... எங்கலே இருக்கீய???

முரளிகுமார் பத்மநாபன் said... November 22, 2009 10:28 PM

பாலா எனக்கு இந்த படத்துல ஒரு பிடிப்பே ஏற்படலை, இதுவரை. நிங்க ரொம்பவே பாவம், ரொம்ப மெனகெட்டு எழுதியிருக்கிங்க. உங்க உழைப்பு இவ்ளோ தேவைப்படுமளவிற்கு தகுதியானதில்லை இந்தபடம் என்பது என் கருத்து.

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 10:34 PM

முதல் இரண்டு பாகத்தோடு.. படத்தின் சுவாரசியம் போய்டுச்சிங்க முரளி.

ஆனாலும்... ‘கடமை... கடமை.. கடமை’-னே.. என் ஆக்ஸிஜன் - கார்பன் -டை- ஆக்ஸைட் எல்லாம்... சொல்லுறதால்....

நம்ம.. விஜய்-க்காக இந்தத் தொடர். உழைப்பாவது ஒன்னாவது! வெட்டி ஆபீஸருக்கு இது ஒன்னுதான் கேடு! :) :)

முரளிகுமார் பத்மநாபன் said... November 22, 2009 10:46 PM

ஆனா இந்த படத்தோட தீம் மியூசிக் பிச்சி உதரியிருப்பாங்க, குறும்படத்தை பார்த்ததும் நியாபகம் வருது. :-)

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 11:28 PM

எனக்கும்!! பதிவெழுத.. ஐந்து படங்களையும்.. வரிசையா.. இரண்டு முறை பார்த்ததில்.. காதெல்லாம் அடைச்சி.. இப்ப தீம் ம்யூசிக் மட்டும்தான் கேட்டுகிட்டு இருக்கு.

பிரபாகர் said... November 22, 2009 11:40 PM

நல்லா எழுதியிருக்கீங்க பாலா... இதுமாதிரி படங்கள பாத்துட்டு.... நினைச்சாலே கொஞ்சம் இல்லையில்ல நிறைய பயமாயிருக்கு.

நீங்க எழுதும் படங்கள எல்லாம் பாத்துடுவேன், இது மாதிரி எல்லாம் விட்டுட்டு....

பிரபாகர்.

ஹாலிவுட் பாலா said... November 22, 2009 11:55 PM

தல....

என்னை மாதிரி பயந்தாங்கொள்ளியெல்லாம்.. இதைப் பார்க்கும்போது... வீரன்.. உங்களுக்கு என்ன?? :)

முதல் பாகம்.. அத்தனை பிரச்சனை இல்லாதது. முடிந்தால் 1&2 பாருங்க.

சுப.தமிழினியன் said... November 23, 2009 12:01 AM

identity, pulp fiction மாதிரியான படங்களுக்கு உங்க விமர்சனம் எவ்ளோ அருமையோ அந்தளவுக்கு இந்த படத்துக்கும் பண்ணியிருக்கீங்க...
ஆனா,
//பாலா எனக்கு இந்த படத்துல ஒரு பிடிப்பே ஏற்படலை, இதுவரை. நிங்க ரொம்பவே பாவம், ரொம்ப மெனகெட்டு எழுதியிருக்கிங்க. உங்க உழைப்பு இவ்ளோ தேவைப்படுமளவிற்கு தகுதியானதில்லை இந்தபடம் என்பது என் கருத்து.//
நன்றி முரளிகுமார் பத்மநாபன்

இதுதான் என் கருத்தும் கூட.

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 12:05 AM

நம்ம விஜய்-க்காக இதைக் கூட செய்யலைன்னா.. ப்லாக் எழுதி என்ன பிரயோஜனம் சொல்லுங்க! :) :)
---

அது இல்லாம... நாளைக்கு.. வரலாறு சொல்லுமில்ல! :) :)

pappu said... November 23, 2009 12:15 AM

(ஒரு இண்டர்வ்யூவில்..., இனிமேல் வரும் பாகங்களில் தெரியலாம் என சொல்லியிருக்கிறார்கள்).////

இன்னுமா? வெளங்குனாப்ல தான்.

பர்ஸ்ட் பார்ட்ல அவன் பொணமா இருந்து, செம ம்யூஸிக்குடன், எந்திருக்கும் போது ஜிவ்வுன்னு இருக்கும் பாருங்க அது மாதிரியான தருணங்கள் அடுத்து ஏற்படவே இல்லை.

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 12:18 AM

இன்னும்.. அந்த ஃபீலிங் நினைவிருக்கு. எனக்கென்னமோ.. அந்த ஒரேயொரு காட்சியில்.. மக்களுக்கு கிடைச்ச... உணர்வுதான்....

ஆறு பார்ட்டா... படம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
=====

மோசமான வசூல்னா.. அது ஆறாவது மட்டும்தான். மத்ததெல்லாம். 100 மில்லியனுக்கும் மேலதான்.

அதனால.. எப்படியும் இன்னும் 2-3 வந்திடும்.

பேநா மூடி said... November 23, 2009 12:26 AM

நான் 1,2 & 4 பாத்ருக்கேன்...அந்த கொலைகாரன் தான் செத்துடானே மறுபடியும் உயிரோட வந்தாச்சா...

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 12:32 AM

அவுருதான்.. மூணுலயே செத்துட்டாரே. நீங்க நாலை பார்த்துட்டு.. இம்புட்டு மெதுவா கேட்கறீங்களே! :) :)

ஜிக்ஸா இல்லாமல்.. SAW படம் விற்காது. அவரை.. ஆறாவது பாகத்தில்.. எப்பவும் போல்.. ஃப்ளாஷ்பேக்கில் கொண்டு வந்துடுறாங்க.

பேரு ஸ்டான்லீ ங்க.. said... November 23, 2009 1:11 AM

எங்க எல்லாருக்கும் சேர்த்து உங்க மூளை இயங்குது தல...
நல்ல விளக்கம்...
முடிந்தால் இன்றே இப்படங்களை பதிவு செய்கிறேன்...

pappu said... November 23, 2009 1:16 AM

தல அமெரிக்கன் சைக்கோவில் பல முடிவுகள் மாதிரி இருக்கே. எல்லாம் இல்லூஷன்னு வச்சுக்கலாம். இல்ல எல்லாத்தையும் லாயர் க்ளியர் பண்ணிட்டு அது தெரியாத மாதிரி நடிக்கலாம்னு நெட்ல ஒரு ஐடியா.

பட் கொஞ்சம் நெட்ல நோண்டுனப்போ அது பணக்கார நடுத்த நிலையில் இருக்கிறவங்க நடுல இருக்குற கான்செப்ட்னு சொல்றாங்க.அதாவது பக்கத்துல இருக்குறவன் யாருன்னு கூட கவனிக்கிறது இல்ல. எல்லாம் தாந்தான் என்ற நினைப்பு. ஹீரோவ பல பேரு தப்பா யாரோன்னு நெனச்சுகிட்டு பேசுவாங்க பாத்தீங்களா? பால் ஆலன், டேவிஸ்னு கூப்பிட்டுகிட்டு இருப்பானுங்க. There is an idea of patrick bateman. But there is no real me னு சொல்வான்.

இப்ப என்ன சொல்ல வரேன்னு கேட்டீங்கன்னா ஒண்ணுமே புரியல சாமீ!

யாசவி said... November 23, 2009 1:25 AM

bala,

I like SAW 1 - Especially that last minute twist. Consider that as one movie only then it looks nice.

Rest of the part either cannot understand fully or not exposed fully.

Also avoid spoilers. People like me cannot read.

கலையரசன் said... November 23, 2009 2:02 AM

யோவ் பாலு! கொஞ்ச நஞ்சம் புரிஞ்சதும் புரியாம போச்சுய்யா! ஆனாலும், மண்டையை பிச்சிகிட்டு எழுதியிருக்கீங்க... பாரையை உட்டு ஆட்டாமல் (பாராட்டாமல்) இருக்க முடியல...

உங்க உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்!!

ஷாகுல் said... November 23, 2009 2:19 AM

முதல் 4 பார்ட்டு பார்த்தேன். அதே கொலை அதே முறை என கொட்டாவிதான் வருது, அதனால 5ம் 6ம் பாக்கல. செத்து போனவங்கல்லாம் திரும்பி வந்து ஹிம். ஆறு நல்லாருக்கா?

Clove said... November 23, 2009 2:42 AM

Good evening boss. Namba G mailla problem athan commentskku late aiduchi. Officela Net vera problem. Nalla vimarsanam ana unga cronalagical pragaram nanga 6 dvdum pottu vaichi mathi mathi partha puriyumnu ninaikkiren. ( Nalla Sapdingala mathiam)

Rafiq Raja said... November 23, 2009 3:56 AM

அசக்கு புசக்கு.... 6 வது படத்தத பார்க்கரவரை இந்த பதிவ படிக்க வர மாட்டேன்... :)

டிவிடி பிரதிக்காக வெயிட்டிங், பாலா.

அறிவு GV said... November 23, 2009 4:01 AM

இது என்னுடைய முதல் வருகை பாலா சார். ஆரம்பம் முதலே உங்கள் ப்ளாக் படித்துக்கொண்டிருந்தாலும் இப்போதான் பின்னூட்டம் இடுகிறேன். ஆனா படங்கள் அனைத்தையும் உடனே பார்த்துருவேன்.
வேற வேலை இல்லாததுனால நானும் புதுசா கடை ஆரம்பிச்சிருக்கேன். டைம் கிடச்சா நம்ம கடை பக்கம் வாங்க தல...!

http://arivugv.blogspot.com

Cable Sankar said... November 23, 2009 4:20 AM

பாலா.. எனக்கும் முதல் இரண்டுக்கு அப்புறம் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஒரு ஆர்டராய் எழுதியிருக்கலாம்.. சாவின் திரைக்கதை போலில்லாமல்.:)

அறிவு GV said... November 23, 2009 4:27 AM

பின்னூட்ட நண்பர்களையும் நம்ம கடைக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 5:10 AM

@ஸ்டான்லீ : இன்னும் எழுதியே முடிக்கலை. அதுக்குள்ளயா? கலக்குங்க! :)

@பப்பு : பாவி மனுசா. படம் பார்க்கனும் நினைக்கறவங்க உங்க பின்னூட்டத்தை படிச்சா.. அம்புட்டுதான். ஈரம் படத்துக்கு, உ.த எழுதினதை மட்டும்.. கேபிள் கிட்ட குறை சொல்லத் தெரியுது இல்ல?! :) :)
படத்தைப் பத்தி எழுதும்போது.. இதைப் பத்தி விலாவாரியா பேசுவோம். அதுவரைக்கும்.. நானும் தலையை பிச்சிகிட்டு தான் இருக்கனும்.

@யாசவி : அல்ரெடி ஸ்பாய்லர் ஆரம்பிச்சாச்சிங்க. :( :(
வேணும்னா.. தனித்தனி பதிவா.. ஸ்பாய்லர் இல்லாமல் ஒன்னு எழுதிடலாமா?? :) :)
உங்கள் விருப்பமே... :)

@கலையரசன்: விஜய்-க்குன்னு எழுதினேன். ஆளையே காணாமே? :(
புரியாம போச்சா?? ராமா!! இதுக்கா.. 2 நாள் கஷ்டப் பட்டேன்! :(

@ஷாகுல்: ஆறு.. வேஸ்ட்டுங்க தல! ஆனா.. அஞ்சு பார்த்துட்டு... இதை பார்க்காம இருக்க முடியாது. வேறு வழியில்லை பார்த்துத்தான் ஆகனும்.

@Clove: உண்மைதாங்க. பதிவும்.. குறைஞ்சது ஐந்தை பார்த்தவங்களுக்குத்தான். (அன்னைக்கு பஃபே க்ளோஸ் பண்ணிட்டாங்க. :( )

@ரஃபீக்: புது மாப்பிள்ளை! :) இன்னும் கொஞ்ச நாள் ஆகும். கேமராதான் வந்திருக்கு.

@அறிவுஜீவி: எப்படி எல்லாம் யோசிக்கறீங்க பேரு வைக்க?! :)
அட்டண்டன்ஸ் போட்டுட்டதை பார்த்திருப்பீங்க! வாழ்த்துகள்.

@கேபிள் : இதுக்கு..., ரெண்டு முழம் கயிறு வாங்கி கொடுத்திருக்கலாம். :) :) :)

க்ரொனலாஜிகலாதான் எழுதினதா நினைச்சிகிட்டு இருக்கேன். அப்படி தெரியலையா? :) :)

கிரி said... November 23, 2009 5:37 AM

தனித்தனியாக எழுதி இருக்கலாம் குழப்பமாக உள்ளது.. ஒன்றும் புரியவில்லை... நிஜமாகவே. டெம்ப்ளேட் பின்னூட்டம் போடக்கூடாது என்று உண்மையை கூறி விட்டேன் :-) ஆனா இதை புரிய மாதிரி கூறுவதும் சிரமம் என்பதும் எனக்கு புரியும் ;-)

எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் SAW முக்கியமான இடம்..அதில் வரும் வித்யாசமான யோசனைகள் என்னை பிரம்மிக்க வைத்து இருக்கிறது..

எடுத்துக்காட்டாக ஒரு கருப்பரை இயந்திரத்தில் வைத்து தலைக்கும் காலுக்கும் உள்ள பகுதி வேறு திசையில் சுற்றும் படி செய்வது, ஒருத்தருக்கு வாயை தைத்து ஒருத்தருக்கு கண்ணை தைத்து இருவரையும் அடிக்க விடுவது. அமிலம் உள்ள கப்பில் சாவியை போட்டு விட்டு அதில் கையை விட்டு எடுத்து தப்பிக்க கூறுவது. முதல் முறை பார்த்து கதி கலங்கி விட்டேன்.. யோசனை கூட எப்படியோ செய்தார்கள் என்றாலும் இந்த இயந்திரம் எல்லாம் எப்படி அட்டகாசமாக செய்தார்கள் என்று எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.

பல முறை இந்த படங்களை பார்த்து இருக்கிறேன்..ஒரு சில பாகங்கள் போர் அடித்தாலும் அதில் உள்ள தண்டனைகளை மட்டும் விருப்பமாக பார்ப்பேன்...

ஜான் தாத்தா :-) பலருக்கு ஹீரோ தான்..அவர் இல்லை என்றால் படமே சப்பையா இருக்குமோ என்று தோன்றுகிறது.

Hostel, Saw என்னுடைய விருப்ப படங்கள். இதில் Hostel மூன்றாவது பாகத்தை எடுக்க மாட்டேன் என்று இயக்குனர் Eli Roth கூறியது எனக்கு பெருத்த ஏமாற்றம்.. இந்த படத்தை காறி துப்பியவர்கள் ஏராளம் :-) ஆனால் எனக்கு மிக மிக மிக பிடித்த படம்.. இதன் திரைக்கதையும் படத்தின் பின்னணி இசையும் என்னால் மறக்கவே முடியாது. தற்போதும் என்னோட Ipod ல் உள்ளது

SAW எவ்வளோ மொக்கையாக வந்தாலும் அதை பார்க்க ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் (என்னைப்போல)

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 5:46 AM

வாவ்..!

கிரி.. இதை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்! :)
====

இப்ப... படங்களின் ரெஃபரன்ஸை எடுத்து விட்டுட்டேன். இப்பவும்.. குழப்பமா தெரியுதான்னு பார்த்துட்டு சொல்லுறீங்களா?

ஹாஸ்டல் படத்தை... மாய்ஞ்சி.. மாய்ஞ்சி எழுதியிருந்தீங்க. எனக்கும் ஹாஸ்டல் 1 பிடிச்சிருந்தது. ரெண்டு வேஸ்ட்.

மூணாவதை எடுக்கப் போறதில்லைன்னு... ரோத் சொன்னப்ப ரொம்ப சந்தோஷப் பட்டது நான் தான்.

முதல் பாகத்தின் மரியாதையை.. இரண்டாம் பாகம் கெடுத்ததும் ஒரு காரணம்.

kanagu said... November 23, 2009 5:47 AM

இந்த படத்த பாக்குற ஆர்வம் எனக்கு சுத்தமா போச்சு அண்ணா... முதல் பாகம் பாத்தேன்.. செம சூப்பர்... ஆனா ரெண்டாவதும் அப்படியே இருக்கும் அப்டினு சொன்னதுனால பி.சி-ல இருந்தும் இன்னும் பாக்கல... நீங்க ஆறாயுமே பாத்த பிறகு ரெண்டாவதயாவது நான் பாக்கணும் அண்ணா.... :)

kanagu said... November 23, 2009 5:49 AM

ஆனா நீங்க இங்க போட்டு இருக்குற கொரோனாலாஜிக்கல் ஆர்டர் பல்ப் பிக்‌ஷ்ன விட குழப்பமா இருக்கு அண்ணா...

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 5:49 AM

நீங்க ஐந்து பாகங்களையாவது பார்க்கலைன்னா.. பதிவை படிச்சிருக்கக் கூடாது கனகு! :(

அப்புறம்.. இரண்டாவது பாகம் பார்த்தீங்கன்னா... மீதி நாலயும் பார்த்தாகனும்.

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 5:53 AM

ஐந்து பாகங்களையும் பார்க்காதவர்களுக்கு நிச்சயம் இந்த ஆர்டர் புரியாதுங்க கனகு.

இதைவிட... வரிசையா சொல்லவும் முடியலை (முடியாது).

ஸாரி! :)

Clove said... November 23, 2009 7:23 AM

Thala romba sorry athan annikki mathiamum sappada vudulai. Neenga arambathula sonna mathiri " இதில் எந்த பாகத்தையாவது நீங்கள் பார்க்கவில்லை என்றால், படிக்க வேண்டாம். அது ஆறாவது பாகத்தையும் சேர்த்துதான். " oru arva kolarula padichi patthan.

Sari unga regular velaya( athan18+) arambinga. periya gap ayiduchi. Solla marunthuttan romba kannu mulichi odambai ketuthukka vendam enna oru 4 Hour kooda thoongula pola

சென்ஷி said... November 23, 2009 7:50 AM

முதல் மூணு பாகம் பார்த்திருக்கேன் தல. நாலு அஞ்சு வாங்கியும் பார்க்கத் தோணல. காரணம் அந்த வில்லன் தாத்தா செத்ததா இருக்கலாம்.

நீங்க எழுதியிருக்கற முழு திரைக்கதை அமைப்பு உள்ள சிறு பகுதிய படம் பார்க்காதவங்க இதைப் படிச்சுட்டு எந்த பாகம் பார்த்தாலும் தலையைப் பிச்சுக்குவாங்கன்னுதான் தோணுது ;)

ஆனால் எனக்கு கொஞ்சம் புரிஞ்சது.

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 7:51 AM

18+ க்கு ஒரேயொரு எழுத்து பாக்கி. இன்னைக்கு போஸ்ட் ஆய்டும்! :) :)

இன்னைக்கு ரெண்டு மணி நேரம் கூட தூங்கலை! ஆஃபீஸ்லதான் கொஞ்ச நேரம் அதுக்குன்னு ஒதுக்கணும்! :)

பிரேம்ஜி said... November 23, 2009 7:53 AM

வழக்கம் போல நீங்க கலக்கிட்டதால லட்சம் ஹிட்ஸ் அடிச்சதுக்கு வாழ்த்து சொல்லிட்டு அப்பீட் ஆகிக்கிறேன்.

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 7:56 AM

சென்ஷி,

ஜிக்ஸா 3-ல் இறந்துட்டாலும்... ஃப்ளாஷ்பேக்கில், மற்ற கதைகளை சொறுகி வந்துகிட்டேதான் இருக்கார்.

படம் பாருங்க. ஆனா.. முதல் பாகத்தோடு கம்பேர் பண்ண வேணாம்! :) :)
=====

////ங்க எழுதியிருக்கற முழு திரைக்கதை அமைப்பு உள்ள சிறு பகுதிய படம் பார்க்காதவங்க இதைப் படிச்சுட்டு எந்த பாகம் பார்த்தாலும் தலையைப் பிச்சுக்குவாங்கன்னுதான் தோணுது////

அல்ரெடி எச்சரிக்கை கொடுத்தாச்சி. இனி மக்கள் பாடு! :)

4-5 பார்க்கலைன்னா... நீங்களும் படிக்க வேணாம். நோ... இட்ஸ் அல் ரெடி லேட். :)

4-ஆம் பாகத்தின் சஸ்பென்ஸ் அல்ரெடி இங்கே சொல்லியாச்சி.

Subash said... November 23, 2009 8:09 AM

pirahu param paka ipave advanca padichu vaikclama???
haha

nan nenachen saw pei pisasu padamnu ( ring mathiri ) ithu verayaaaa. hummm sithiravathai camp karangalukku nala reference irukum pola :P

puthiya thodarukku vazthukal ana

Karthick Krishna CS said... November 23, 2009 8:22 AM

எனக்கு முதல் பாகம் தவிர வேற எதுவும் பிடிக்கலை.. அந்த த்ரில் வேற எந்த படத்துலயும் வரலை..
இரண்டாவது பாகம் ஏதோ பரவாயில்லை.. மத்தபடி, படம் ஒரே cliche and வழக்கம் போல, உங்க சமூக சேவை சூப்பர்.. :)

ஹாலிவுட் பாலா said... November 23, 2009 9:16 AM

@சுபாஷ்: ஆச்சரியமா இருக்கு. நீங்க சா படத்தை விட்டுவச்சிருக்கீங்களா? :) :)

@கார்த்திக்: எனக்கும்..!! எல்லோருக்கும்! :)

KISHORE said... November 23, 2009 9:21 AM

present sir

வினோத்கெளதம் said... November 23, 2009 10:11 AM

SAW ஆமாம் இது படத்தோட பெயரா இல்லை பதிவுக்கு வச்ச பெயரா..:)

வினோத்கெளதம் said... November 23, 2009 10:18 AM

//பர்ஸ்ட் பார்ட்ல அவன் பொணமா இருந்து, செம ம்யூஸிக்குடன், எந்திருக்கும் போது ஜிவ்வுன்னு இருக்கும் பாருங்க அது மாதிரியான தருணங்கள் அடுத்து ஏற்படவே இல்லை.//

ஆமாம் அதுக்கு அப்புறம் அதே மாதிரி ஒரு பார்ட் வரவில்லை..தல இதில் ரெண்டு மூனு பார்ட் பார்க்கவில்லை அதனால கொஞ்சம் குழப்பமா இருக்கு..

சிவன். said... November 23, 2009 10:23 AM

முதல் பாகத்த பார்க்கும்போது ரொம்ப ஆர்வத்தோட பார்த்தேன்...முதல் படம் ரொம்ப பிரம்மிக்க வச்சுது...ஒவ்வொரு கொலையும் ஒரு CLASS ACT....அதே ஆர்வத்துல ரெண்டாவது படம், ஆனா கொலைகள் மட்டும்தான் கவர்ந்திச்சு....அப்புறம் போக போக, இந்த படத்துல வெறும் கொலைகள மட்டும் தான் பார்த்திட்டு இருக்கேன்.... அந்த ஒரு விஷயத்த பாராட்டலாம்... (எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ ?) - எப்பண்ணே ஏழாவது பார்ட்டு வருது?

VIJAY said... November 23, 2009 11:39 AM

வந்துட்டேன் தல...சாரி..சாரி...காலைல பார்த்துட்டு ஓட்டு மட்டும் போட முடிந்தது. படிக்ககூட முடியல. இப்ப வந்து பார்த்தால் இத்தனை பின்னூட்டம். மவனே...நீ மாட்ன தலகிட்ட என்று மனசு சொல்லுது.

VIJAY said... November 23, 2009 11:43 AM

எனக்கே எனக்கா? இந்த பதிவு எனக்கே எனக்கா...? கண்டிப்பாக வரலாற்றில் உங்கள் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். சாதனனை படைத்த சரித்திர நாயகன் பாலா வாழ்க..வாழ்க.

ஷண்முகப்ரியன் said... November 23, 2009 11:47 AM

saw 1 ஐ அதனுடைய விறு விறுப்பான திரைக்க்கதையமைப்புப்புக்காக ரசித்துப் பார்த்தேன்.
மீதிப் படங்களை முழுக்கப் பார்க்கும் தெம்பும் பொறுமையும் எனக்கில்லை.

ஆனால் நீங்கள் எழுதியதை இப்போது படித்து முடித்தவுடன் நிறைய தியானம் தேவைப் படுகிறது.

ஓம் சாந்தி ஓம்,பாலா.

VIJAY said... November 23, 2009 11:53 AM

எல்லோரும் சொல்வது போல அந்த முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் உண்டாக்கின எதிர்பார்ப்பில் அடுத்த எல்லா பாகத்தையும் பார்த்தாகிவிட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு 2,3,4,5,6 வரை நிறைவேறவே இல்லை.

பாலா...ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் கேள்விகளுடன் இருந்தேன். நீங்கள் சொன்னது எல்லாம் புரியுது. ஆனால் இன்னும் சில இடம் புரியல. அதுக்கு வழி உங்கள் பதிவை நோட்ஸ் எடுத்துக்கொண்டு மீண்டும் எல்லா பாகத்தையும் பார்க்க வேண்டும். ரைட்டு..தல நமக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து இருக்கும்போது நாம் அதுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் இல்லையா?

VIJAY said... November 23, 2009 12:03 PM

///உங்க உழைப்பு இவ்ளோ தேவைப்படுமளவிற்கு தகுதியானதில்லை இந்தபடம் என்பது என் கருத்து///

எப்படி டெக்னிகலாக சித்ரவதை பண்ணலாம் என உட்கார்ந்து யோசித்து படம் எடுத்து இருக்காங்க. இதுக்கு கொஞ்சம் கூட உழைக்கல என்றால் எப்படி முரளி?

VIJAY said... November 23, 2009 12:09 PM

///நல்லா எழுதியிருக்கீங்க பாலா... இதுமாதிரி படங்கள பாத்துட்டு.... நினைச்சாலே கொஞ்சம் இல்லையில்ல நிறைய பயமாயிருக்கு///

உண்மைதான் பிரபாகர்...நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் பாருங்க. கலகலத்து போகும். அந்த தீம் மியூசிக்..No way.

VIJAY said... November 23, 2009 12:14 PM

///identity, pulp fiction மாதிரியான படங்களுக்கு உங்க விமர்சனம் எவ்ளோ அருமையோ அந்தளவுக்கு இந்த படத்துக்கும் பண்ணியிருக்கீங்க...///

தலைவரின் விமர்சனங்கள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கே தவிர என்றும் குறையவில்லை. அதுசரி தமிழினியன்..5பாகம் வரை விளக்கம் கொடுக்க வேண்டும் 6வது எழுதும் முன்பு என்று நான் சொன்னப்ப சப்போர்ட் பண்ணீங்களே?

VIJAY said... November 23, 2009 12:30 PM

///இன்னுமா? வெளங்குனாப்ல தான்.///

இனிமே விளங்க அங்க ஒன்றும் கிடையாது பப்பு.

VIJAY said... November 23, 2009 12:34 PM

///நான் 1,2 & 4 பாத்ருக்கேன்...அந்த கொலைகாரன் தான் செத்துடானே மறுபடியும் உயிரோட வந்தாச்சா...///

வரிசையா எல்லா பாகத்தையும் பார்த்தே எனக்கு விளங்கல. நீங்க நடுவில் வேற விட்டுட்டீங்க. அப்புறம் எப்படிங்க புரியும் பேநா மூடி?

VIJAY said... November 23, 2009 12:37 PM

///முடிந்தால் இன்றே இப்படங்களை பதிவு செய்கிறேன்...///

எல்லா பாகமும் சேர்த்து மொத்தமாக டோரண்ட்ல கிடைக்குதுங்க ஸ்டான்லீ.

VIJAY said... November 23, 2009 12:39 PM

///இப்ப என்ன சொல்ல வரேன்னு கேட்டீங்கன்னா ஒண்ணுமே புரியல சாமீ!///

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் தானை தலைவர் பப்பு வாழ்க..வாழ்க.

VIJAY said... November 23, 2009 12:44 PM

///I like SAW 1 - Especially that last minute twist. Consider that as one movie only then it looks nice.

Rest of the part either cannot understand fully or not exposed fully.///

உங்கள் எதிர்பார்ப்பை மற்ற பாகங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதே காரணம்.

VIJAY said... November 23, 2009 12:45 PM

///யோவ் பாலு! கொஞ்ச நஞ்சம் புரிஞ்சதும் புரியாம போச்சுய்யா!///

கலை..நான் சொன்ன நோட்ஸ் வழிய பின்பற்றுங்க.

VIJAY said... November 23, 2009 12:49 PM

///முதல் 4 பார்ட்டு பார்த்தேன். அதே கொலை அதே முறை என கொட்டாவிதான் வருது, அதனால 5ம் 6ம் பாக்கல. செத்து போனவங்கல்லாம் திரும்பி வந்து ஹிம். ஆறு நல்லாருக்கா?///

கண்டிப்பா உஙகளுக்கு பிடிக்காது என நினைக்கிறேன். பொதுவா நல்லா இல்லைங்க ஷாகுல்.

ஊர்சுற்றி said... November 23, 2009 12:50 PM

என்ன ஹாலிபாலா, ஒண்ணுமே புரியல!

VIJAY said... November 23, 2009 1:01 PM

///டிவிடி பிரதிக்காக வெயிட்டிங், பாலா.///

டிவிடி பிரதி பார்க்கும் அளவு ஒன்றும் இல்லைங்க ராஜா படத்தில்.

VIJAY said... November 23, 2009 1:04 PM

///இது என்னுடைய முதல் வருகை பாலா சார்///

வாங்க அறிவு வந்து ஜோதில கலந்துக்குங்க.

VIJAY said... November 23, 2009 1:07 PM

///பாலா.. எனக்கும் முதல் இரண்டுக்கு அப்புறம் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஒரு ஆர்டராய் எழுதியிருக்கலாம்///

ஒவ்வொரு படமா எழுதி இருந்தாலும் மற்ற பாகத்தை இழுத்து விளக்க வேண்டியிருக்கும் கேபிள் சார்.

VIJAY said... November 23, 2009 1:08 PM

///SAW எவ்வளோ மொக்கையாக வந்தாலும் அதை பார்க்க ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் ///

எப்படிங்க கிரி உங்களால் முடியுது?

VIJAY said... November 23, 2009 1:10 PM

///நீங்க ஆறாயுமே பாத்த பிறகு ரெண்டாவதயாவது நான் பாக்கணும் அண்ணா///

பாருங்க கனகு. நாங்க அனுபவிச்சத நீங்க அனுபவிக்கல எனில் எப்படி?

VIJAY said... November 23, 2009 1:12 PM

///ஆனால் எனக்கு கொஞ்சம் புரிஞ்சது.///

என்னங்க சென்ஷி இப்படி சொல்லிட்டீங்க?

VIJAY said... November 23, 2009 1:14 PM

///வழக்கம் போல நீங்க கலக்கிட்டதால லட்சம் ஹிட்ஸ் அடிச்சதுக்கு வாழ்த்து சொல்லிட்டு அப்பீட் ஆகிக்கிறேன்.///

அப்பீட்டா? படம் எல்லாம் பார்த்தாச்சுங்களா பிரேம்ஜி?

VIJAY said... November 23, 2009 1:17 PM

///pirahu param paka ipave advanca padichu vaikclama???///

கதை படித்து படம் பாருங்க கிஷோர். அப்புறம் உங்களை பற்றி தவறாக நினைத்துவிட்டேன் உங்க சூழ்நிலை பற்றி தெரியாமல். மன்னிக்கவும்.

VIJAY said... November 23, 2009 1:18 PM

///அந்த த்ரில் வேற எந்த படத்துலயும் வரலை..///

உண்மைதாங்க கிருஷ்ணா.

VIJAY said... November 23, 2009 1:19 PM

///present sir///

கிஷோர்...இப்படி ஒன்றும் சொல்லாம போனா எப்படிங்க?

VIJAY said... November 23, 2009 1:22 PM

///SAW ஆமாம் இது படத்தோட பெயரா இல்லை பதிவுக்கு வச்ச பெயரா///

என்ன வினோத் இப்படி கேட்டால் எப்படி?

VIJAY said... November 23, 2009 1:23 PM

///(எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ ?) - எப்பண்ணே ஏழாவது பார்ட்டு வருது?///

சிவன்..உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

VIJAY said... November 23, 2009 1:26 PM

///saw 1 ஐ அதனுடைய விறு விறுப்பான திரைக்க்கதையமைப்புப்புக்காக ரசித்துப் பார்த்தேன்.
மீதிப் படங்களை முழுக்கப் பார்க்கும் தெம்பும் பொறுமையும் எனக்கில்லை.///

உண்மைதான் சார். சில காட்சிகள் அப்படிதான் நினைக்க வைக்கும்.

VIJAY said... November 23, 2009 1:28 PM

///என்ன ஹாலிபாலா, ஒண்ணுமே புரியல!///

ஊர்சுற்றி...பாலா பார்க்கும்போது அவரும் ஒண்ணுமே புரியாம முழிக்கபோறார்.

VIJAY said... November 23, 2009 1:35 PM

பாலா...கோவிச்சுக்காதீங்க. சும்மா வித்தியாசமா பின்னூட்டம் போடலாம் என நினைத்தேன். தப்பா எடுத்துக்காதீங்க.

இவ்வளவு பின்னூட்டம் கஷ்டப்பட்டு போட்டுள்ளேன். யாராவது எனக்கும் அவார்டு கொடுங்கப்பா ப்ளீஸ் :) :)

பாலா...இவ்வளவு நேரம் நான் மெயிலில் சொன்ன பிரச்சனைய சமாளித்து பின்னூட்டம் போடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அது சரி...நேற்று நான் அனுப்பிய மெயில் கிடைத்ததா?

pappu said... November 23, 2009 1:56 PM

அம்புட்டுதான். ஈரம் படத்துக்கு, உ.த எழுதினதை மட்டும்.. கேபிள் கிட்ட குறை சொல்லத் தெரியுது இல்ல?////

ஹேய், இன்னுமா ஞாபகம் வச்சுருக்கீங்க? ஆகா, உங்கட்ட நிறைய டேஞ்சர் இருக்கே! என்னோட மிக்ப்பெரிய வியாதி மறதி.

@விஜய்
என்ன பாஸ். பாலாவுக்கும் கொஞ்சம் வேலை வேணாமா?

வண்டிக்காரன் said... November 23, 2009 2:04 PM

SAW,Hostel டைப் படங்கள் பார்கிறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன் (நீங்க என்னதான் எழுதினாலும்).
அப்படியிருந்தும் OnDemand-ல "Untraceable" -ன்னு ஒருபடம் பார்த்து நொந்துட்டேன் ..ஒருத்தன் ஆன்லைன்ல
வெப்காம் வச்சு கொலை செய்றான். ஹிட்ஸ் கவுண்டுக்கு ஏத்த மாதிரி கொடூரமா கொன்னுகிட்டே போவான்.
ஒரு மில்லியனுக்கு கைய ஒடிச்சு,ரெண்டு மில்லியனுக்கு கண்ணை ...அப்பிடியே கொடூரமா..

வண்டிக்காரன் said... November 23, 2009 2:15 PM

பாலா, "ஹாலிவுட் பின்னூட்ட நாயகன் " அவார்டை விஜய்க்கு அப்பிடியே பார்சல் பண்ணிடுங்க

VIJAY said... November 23, 2009 2:42 PM

///என்ன பாஸ். பாலாவுக்கும் கொஞ்சம் வேலை வேணாமா?///

அப்படி இல்லீங்க பப்பு...நமக்காக ரொம்ப மண்டை குழம்பி பதிவு எழுதி இருக்கார் பாலா. சரி கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே என்றுதான்.

VIJAY said... November 23, 2009 2:45 PM

"ஹாலிவுட் பின்னூட்ட நாயகன் "

அய்...இதுவும் நல்லாதான் இருக்கு. என்ன சார்..பார்சல்தான் பண்ணுவிங்களா? விழா ஒன்றும் கிடையாதா?

VIJAY said... November 23, 2009 2:51 PM

பாலா...ஒரு விஷயம் மறந்துட்டேன். நேற்று குப்ரிக்கின் "2001: A space odessey" படம் பார்த்தேன். காட்சிகள் படு அற்புதம். ஆனா கதை என் மண்டைல ஏறல. இந்த லட்சணத்தில சப் டைட்டிலுடன் பார்த்தேன். அதுக்கு நான் ஜாஸ்தி புரிந்துகொள்ள முயற்சி பண்ணல. எல்லாம் பாலா இருக்கிற தைரியம்தான். நீங்க குப்ரிக்கின் படம் எல்லாம் பார்த்துட்டதாக சொல்லிருக்கிங்க. கொஞ்சம் எழுத முடியுமா?

pappu said... November 23, 2009 3:21 PM

பாலா...ஒரு விஷயம் மறந்துட்டேன். நேற்று குப்ரிக்கின் "2001: A space odessey" படம் பார்த்தேன்.///
இதோட கதை கேள்வி பட்டிருக்கேன்.
இந்தக் கதையும் சுஜாதாவின் ஆகாயம் உம் ஓவரா ஒத்து போகுதே.

பேரு ஸ்டான்லீ ங்க.. said... November 23, 2009 3:32 PM

படங்களை ஏத்தியாச்சு தல.. SAW VI, பக்கா DVD Quality.
SAW 1 to 5 வரை மட்டும் direct post போட்ருக்கேன். SAW 6 Link மட்டும் கொடுத்திருக்கேன்.
மக்களை அனுப்புங்க தல.

Subash said... November 23, 2009 3:54 PM

@pappu,
sujathavin antha naavaluku munadiye Auther C Clark intha kathaya navala ealuthitaru.

nenga sona antha sujatha naaval pdf la kedaikuma?

கோபிநாத் said... November 23, 2009 4:12 PM

\\எச்சரிக்கை: இதில் எந்த பாகத்தையாவது......|\\

தல இப்படி எச்சரிக்கை எல்லாம் எதுக்கு எங்களுக்கு...நீங்க எதை எழுதினாலும் படிப்போம்..பார்ப்போம். 3 வரைக்கும் வந்தாச்சி மீதியையும் பார்த்துடுறேன்...பாலாவே துணை..ஓம் சாந்தி ;)

Saravana Kumar MSK said... November 23, 2009 6:30 PM

SAW series படங்களின் தீவிர ரசிகனின் அட்டெண்டென்ஸ். கலக்கலா எழுதுங்க.. :)

VIJAY said... November 23, 2009 8:44 PM

///இந்தக் கதையும் சுஜாதாவின் ஆகாயம் உம் ஓவரா ஒத்து போகுதே.///

அப்படியா? இந்த புத்தகம் Net ல கிடைக்குங்களா பப்பு?

..:: Mãstän ::.. said... November 23, 2009 9:00 PM

சே... :( இவ்வளவு நாளா இங்க வரமபோய்டேனே :((

எனக்கு ரெம்ப ரெம்ப புடுச்ச படம் SAW, 6 பார்ட் சென்னையில் கிடைக்குது.

நீங்க இன்னும் ஜிக்ஸாவுடைய இன்ஜினியரிங்கை பற்றியும், ஒரு பார்ட்டில் வரும் கதாபாத்திரம் வேறு ஒரு பார்ட்டில் தொடர்வதை பற்றியும் எழுதலாம்.

பலவிசயங்கள் நன்றாய் சொல்லீருக்கீர்கள்.

தயவுசெய்து 1-5 பார்டையும் பற்றி எழுதவும்.

நன்றி பாலா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 23, 2009 11:32 PM

தல,
123 ரொம்ப அருமையா எழுதினீங்க, படம் சீரீஸா பாக்காதவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.
நெக்ஸ்ட் அந்த மூளை ஆபரேஷன் போஸ்ட்மார்டம் சீன்,எல்லாம் விளக்கி கலக்கவும்,

என்ன படம் துருபிடிச்ச காயலாங்கடை இரும்பு , இருட்டு அறை,ரத்த படையல். கொலைக்கவிதையான சா நல்ல விவரிப்பு தல, நேற்று பூரா வேலை , ஓட்டுக்கள் போட்டாச்சு.

pappu said... November 23, 2009 11:33 PM

தயவுசெய்து 1-5 பார்டையும் பற்றி எழுதவும்.
///

பாலாக்கு ஒரு முழக் கயிறு ஒண்ணு பார்சல்ல்ல்ல்!

அறிவு GV said... November 24, 2009 12:12 AM

/// @அறிவுஜீவி: எப்படி எல்லாம் யோசிக்கறீங்க பேரு வைக்க?! :)
அட்டண்டன்ஸ் போட்டுட்டதை பார்த்திருப்பீங்க! வாழ்த்துகள். ///

நன்றி தல... நீங்க சொன்ன மாதிரி வோர்ட் வெரிபிகேஷனை தூக்கிட்டேன். அப்பப்போ வந்துபோங்க..!

வால்பையன் said... November 24, 2009 6:20 AM

படத்தில் புரியாத பல விசயங்களை உங்கள் பதிவு சொல்லிவிட்டது!

ரொம்ப நன்றீ தல!

கிரி said... November 24, 2009 6:25 AM

//இப்ப... படங்களின் ரெஃபரன்ஸை எடுத்து விட்டுட்டேன். இப்பவும்.. குழப்பமா தெரியுதான்னு பார்த்துட்டு சொல்லுறீங்களா?//

இப்ப ஓகே..

//ஹாஸ்டல் படத்தை... மாய்ஞ்சி.. மாய்ஞ்சி எழுதியிருந்தீங்க. எனக்கும் ஹாஸ்டல் 1 பிடிச்சிருந்தது. ரெண்டு வேஸ்ட்.//

தெரியலைங்க இந்த பாகம் என் பலருக்கு பிடிக்கலைன்னு! எனக்கு இந்த பாகமும் பிடித்தது அதுவும் contract security என்று ஹைடெக்கா இருக்கும்

//மூணாவதை எடுக்கப் போறதில்லைன்னு... ரோத் சொன்னப்ப ரொம்ப சந்தோஷப் பட்டது நான் தான்.//

கிர்ர்ர்ர்

//முதல் பாகத்தின் மரியாதையை.. இரண்டாம் பாகம் கெடுத்ததும் ஒரு காரணம்.//

அப்படியா! எனக்கு ரொம்ப பிடித்தது

சரி! இந்த பதிவு saw படம் பற்றியது என்பதால் இதோட நிப்பாட்டிக்குறேன் ;-)

saw படம் பார்த்தது ஒரு சுவாராசியமான விஷயம்.. starmovies ல படம் பார்த்துட்டு இருந்த போது (அப்போது) இந்த படம் (saw 1) பெயர் கதை நடிகர் என்று எதுவும் தெரியாமல் பார்த்தேன், படத்துல ஒண்ணுமே இல்லை ஆனா என்னை ரொம்ப கவர்ந்தது ..பின்னர் அலுவலகம் வந்து இணையத்தில் தேடி விவரங்கள் தேர்ந்து கொண்டேன்.

அதிகபட்ச டெக்னிக்கல் ஹாரர் என்றால் இந்த இரு படங்கள் தான் நினைவிற்கு வருகிறது (Untraceable மாதிரி சில படங்கள் தவிர்த்து), உங்களுக்கு இவை தவிர வேறு "நல்ல" படங்கள் ஐடியா இருந்தால் கூறவும்.

ஹாலிவுட் பாலா said... November 24, 2009 6:56 AM

@கிஷோர்: ஓகே..! :)

@வினோத்: கொழுப்புதானே?! :) முழுக்க பார்க்காமல் வேலைக்காகாது.

@சிவன்: அடுத்த அக்டோபரில் ஏழாவது பார்ட் ரிலீஸ் ஆகுதுங்க.

@விஜய்: இட்ஜ் ஓகே! :) சாமி.. எல்லாத்துக்கும் நீங்களே ஆன்ஸர் பண்ணிட்டீங்களா! :) மிக்க நன்றி.

நேத்து பூரா... மெய்ல் படிக்க முடிஞ்சதே தவிர பதில் போட முடியலை. வேலையை ஈஸி ஆக்கிட்டீங்க! :)

உங்களுக்கே.. உங்களுக்குத்தான்! :) வச்சிக்கங்க! :)

@ஷண்முகப்ரியன் சார்: சா 2- சுமாரா இருக்கும். அதை முயற்சிப் பண்ணிப்பாருங்க சார்.

@விஜய்: உண்மை. எனக்கு புரிய பிரச்சனையாயில்லை. ஆனா வரிசையா எழுத இரண்டு முறை பார்க்க வேண்டியிருந்தது.

@ஊர்சுற்றி: இது ஆறு பாகங்களையும் பார்த்தவர்களுக்கு மட்டும்தாங்க. கதையை.. ஆறையும் சேர்த்து ஒன்றாக சொல்லும் முயற்சி.

@விஜய்: உங்க மெய்ல் கிடைச்சது. ஆனா... காலிங் கார்ட் வேணும். என் நம்பரில் இருந்து போகலை. இந்த வார இறுதியில் திரும்ப முயற்சி செய்யுறேன். :(

@பப்பு: பொழச்சிப் போங்க! :) ஒருத்தர் ஹெல்ப் பண்ண வர்றாரு. அதையுமா??

@வண்டிக்காரன்: அவார்ட்.. சிலை எல்லாம் வச்சிடுவோம். :)

@விஜய்: அந்தப் படத்தை இந்த மாதம் முடிஞ்சி பார்த்துடுவோம்.

@ஸ்டான்லி: கொடுத்தாச்சிங்க தல.

ஹாலிவுட் பாலா said... November 24, 2009 6:58 AM

@சுபாஷ்: நானும் படிச்சதில்லை. என்கிட்ட இருக்கும் கலெக்‌ஷனில் அந்தப் புத்தகம் இருக்கான்னு பார்க்கனும்.

@சரவணக்குமார்: நிறைய பேர் புரியலைன்னு எழுதிட்டாங்க தல! ஒரே ஃபீலிங்ஸா இருக்கு! :(

@மஸ்தான்: பப்பு சொன்னதுதாங்க தல! :) :) இது.. 1-6 படங்களை வரிசையா எழுதியிருக்கேன். முன்னாடி அது எந்தெந்த பார்ட்ட்னு குறிச்சிருந்தேன். அது ரொம்ப கன்ஃப்யூஸ்ன்னு சொல்லிட்டாங்க. அதான் எடுத்து விட்டாச்சி.

@பப்பு: ஹா.. ஹா. ஹா..! வெய்ட்டிங்!

@அறிவுஜீவி: வந்தாச்சிங்க! :)

@வால்பையன்: அப்பாடா ரெண்டாவது ஆள் புரியுதுன்னு சொல்லியிருக்கீங்க! :)

@கிரி: ஹாஸ்டல் 2 பிடிக்கலைங்கறது நீங்க சொன்ன மாதிரி.. என்னோட தனிப்பட்ட விருப்பம்தான். அதோட ஆரம்பக் காட்சியே வெறுப்பேத்திடுச்சி. இதோட அன்ரேட்டட் வெர்ஷன் பார்த்திருக்கீங்களா? ரொம்ப வித்தியாசம் இல்லைன்னாலும்.... he is a sick guy! :(

kanagu said... November 24, 2009 7:23 AM

aiyayo... ithuku poi yen na sorry ellam solreenga.. paakathathu en thappu..

epdi naalum sorrykellam avasiyame illa..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... November 24, 2009 9:48 AM

ஐயையோ.. இவ்ளோ கொடூரமா..?

போங்கப்பா..! ராத்திரிக்கு சாப்பிடணும்.. இதுக்கு மேல முடியாது..!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 24, 2009 12:30 PM

தல,
123 ரொம்ப அருமையா எழுதினீங்க, படம் சீரீஸா பாக்காதவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.
நெக்ஸ்ட் அந்த மூளை ஆபரேஷன் போஸ்ட்மார்டம் சீன்,எல்லாம் விளக்கி கலக்கவும்,

என்ன படம் துருபிடிச்ச காயலாங்கடை இரும்பு , இருட்டு அறை,ரத்த படையல். கொலைக்கவிதையான சா நல்ல விவரிப்பு தல, நேற்று பூரா வேலை , ஓட்டுக்கள் போட்டாச்சு.

கோபிநாத் said... November 24, 2009 2:15 PM

எச்சரிக்கை :-

தல கார்த்திக் அண்ணே பின்னூட்டத்துக்கு பதில் போடுங்க இல்லைன்னா மீண்டும் மீண்டும் பின்னூட்டம் வரும்.

அப்படியே எனக்கும் ;))))

KVR said... November 25, 2009 6:48 AM

ஒண்ணு, ரெண்டு, மூணு தனித்தனியாகவும், ஒண்ணுலேர்ந்து அஞ்சு பாகம் ஒரே நாளிலேயும் பார்த்திருக்கேன். ஆறு மொக்கையா? இருந்தாலும் பரவாயில்லை, பார்த்திடுவேன். எனக்கு பொதுவா ஹாரர் மூவிஸ் பிடிப்பதில்லை, ஆனால் ஸா பிடிச்சிருக்கு.

Mageshwaran S said... November 25, 2009 8:30 AM

super na...thaaru maaru

ஹாலிவுட் பாலா said... November 25, 2009 9:25 AM

@கனகு: ரைட்டு! :) ஆனா ஸாரி கேட்பது என் பிறப்புரிமை! :)

@உ.த: ஆறு வருஷமா... அறுத்து காக்காவுக்கு போட்டுகிட்டு இருக்காங்க. இம்புட்டு மெதுவா வந்து அவ்ளோ கொடூரமான்னு கேட்கறீங்களே?? உங்களை ஜிக்ஸா கிட்ட புடிச்சி கொடுத்தா என்ன???

@கார்த்திக்கேயன்: மேல ஒருத்தர் சாப்பிடப் போகனும்னு ஓடுறார். நீங்க.. விளக்கி எழுதச் சொல்லுறீங்களே நண்பா?! :) எழுதிடுவோம்...!! :)

@கோபி: உங்களுக்கு இல்லாமலா??? :) :) ஹா.. ஹா.. ஹா... ஆனா அண்ணாத்த இன்னொரு விளக்கம் கொடுத்திருக்காரே...? எது உண்மை.???

@KVR: அஞ்சு பார்த்துட்டு.. ஆறை பார்க்காம இருக்க முடியாதுங்க தல. பார்த்துடுங்க. வேற வழியில்லை.

@மகேஸ்வரன்: நன்றி :) :)

கிரி said... November 25, 2009 10:51 AM

//இதோட அன்ரேட்டட் வெர்ஷன் பார்த்திருக்கீங்களா? ரொம்ப வித்தியாசம் இல்லைன்னாலும்.... he is a sick guy! //

எங்காவது கிடைக்குமா! Im ready to watch :-)

ஹாலிவுட் பாலா said... November 25, 2009 2:49 PM

டவுன்லோட் பண்ணலாம்னு நினைக்கிறேன். நிச்சயம் கிடைக்கும் அன்ரேட்டட்னு தேடிப் பாருங்க.

ஒரிஜினலுக்கும் இதுக்கும்... கொஞ்சம் க்ளோஷப் ஷாட்தான் வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறேன்.

ரொம்ப வித்தியாசமெல்லாம் இல்லை (மே பி எனக்கு ஒரிஜினல் வெர்ஷன் மறந்திருக்கலாம்).

கோபிநாத் said... November 25, 2009 5:54 PM

\\@கோபி: உங்களுக்கு இல்லாமலா??? ஹா.. ஹா.. ஹா... ஆனா அண்ணாத்த இன்னொரு விளக்கம் கொடுத்திருக்காரே...? எது உண்மை.???\\

ரொம்ப சிம்பிள் தல...இந்த பதிவுக்கு இது உண்மை அந்த பதிவுக்கு அது உண்மை..;))

Mohamed Bismillah said... November 28, 2009 9:53 PM

நண்பரே நான் அனைத்து பாகங்களையும் படம் ரிலிசான ஒரு வாரத்துலே பார்த்துட்டேன். ஒவ்வொரு பாகத்தையும் நான் ஏழு முறை பார்த்துள்ளேன். அனைத்து பாகங்களும் மிக மிக அருமை.

நீங்கள் சொல்வது போல் JILL TUCKER ஒரு டாக்டர் கிடையாது. அவர் வந்து அந்த ஹஸ்பிட்டலில் வேலை பார்க்கும் ஒரு நர்ஸ். மேலும் சில இடங்களில் கதையையும் கதாபத்திரத்தையும் தவறாக புரிந்து உள்ளீர்கள். மற்றபடி உங்களின் விமர்சனம் அருமை.

மேலும் நாம் கதையை பார்க்காமல் கதையில் நடக்கும் கொடுரக் கொலையை தான் ரசிக்க வேண்டும். உதாரணமாக ஆறாவது பாகத்தில் அந்த insurance company owner எப்படி HCL acidஆல் inject செய்யப்பட்டு அற்புதமாக கொல்லபடுவான். அதே போல் முதல் காட்சியில் எப்படி மற்றவர்களின் உயிரை கிள்ளுக் கீரையாக நினைத்த அந்த பெண்ணும் அந்த தடியனும் தாங்கள் உயிர் வாழ்வதற்காக தங்கள் உடல் பாகங்களை வெட்டி போடுவார்கள் மிக அற்புதம்.

உலகில் உள்ள அனைத்து மக்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம். நிச்சயம் கெட்டவர்கள் திருந்த வாய்ப்புண்டு. நல்வர்கள் தங்கள் வழியில் இருந்து பிறழாமல் இருப்பார்கள். நன்றி.

ஹாலிவுட் பாலா said... November 28, 2009 10:23 PM

@முகமத்: விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. :)

////நீங்கள் சொல்வது போல் JILL TUCKER ஒரு டாக்டர் கிடையாது. அவர் வந்து அந்த ஹஸ்பிட்டலில் வேலை பார்க்கும் ஒரு நர்ஸ்///

டாக்டர் - இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த க்ளினிக் அவளுக்கு சொந்தமானது. நேரடியாய் எங்காவது நர்ஸ்-ன்னு குறிப்பிட்டிருக்காங்களானு ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறேன். தவறை திருத்தியதற்கு நன்றி.

//////
மேலும் சில இடங்களில் கதையையும் கதாபத்திரத்தையும் தவறாக புரிந்து உள்ளீர்கள்.
/////

இது எந்தெந்த இடம் - பாத்திரம்னு சொன்னா... பதிவை திருத்த வசதியாய் இருக்கும். ப்ளீஸ்...! என்கிட்ட ஐந்து பாகமும் ப்ளூரே டிஸ்காக இருக்கு.

ஒவ்வொன்னையும் மாத்தி மாத்தி போட்டு பார்த்து வரிசையா நினைவுக்கு கொண்டு வரத்துக்குள்ள தாவு தீந்துடுது.

/////மற்றபடி உங்களின் விமர்சனம் அருமை.////

இதை நீங்கதான் திருத்திக்கனும்! :) :) :)

.
.
.
.

அதுக்கப்புறம்.. நீங்க சொல்லியிருக்கற மேட்டர் அதுவும் கடைசி பாரா......................

மீ.... மூச்ச்ச்ச்!!!!

ஹாலிவுட் பாலா said... November 28, 2009 10:26 PM

@கோபி: ஏன் எனக்கு பதில் சொல்லலைன்னு.. நாளைக்கு கம்ப்ளெய்ண்ட் பண்ணுவீங்க. அதனால... ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன்! :) :) :) :) :)

ஹாலிவுட் பாலா said... November 28, 2009 10:35 PM

//////மற்றவர்களின் உயிரை கிள்ளுக் கீரையாக நினைத்த அந்த பெண்ணும் அந்த தடியனும் /////

அவங்க லோன் ஃப்ராடு பண்ணியிருப்பாங்கன்னு தானே சொல்லுவாங்க!!

மத்தவங்களை ஸ்க்ர்யூ பண்ணினதால்... அவங்களுக்கு சிம்பாலிக்கா அந்த தண்டனைன்னுதான் வசனம் வரும்.

Rafiq Raja said... November 29, 2009 3:00 AM

பாலா, இரண்டு நாள் முன்னாடி தான் படத்த பார்த்தேன். R5 உபயம். ஆகோ ஓகோ என்று சொல்ல முடியாவிட்டாலும், சா படத்துக்கே உண்டான பாணி அலாதி.

முக்கியமாக, வழக்கம் போல வித்தியாச வித்தியாசமான கொலை கருக்கள், மற்றும் உபகரணங்களை எப்படி தான் யோசிக்கிறார்களோ என்று ஆச்சர்ய பட வைக்கிறது. ஆனால், முதல் மூன்று பாகங்களில் இருந்த அளவிற்கு இப்போதைக்கு மேட்டர் இல்லை என்பது சரியாக தெரிகிறது.

அதுவும் 4, 5 ம் பாகத்தில் சா வில்லனை போஸ்ட் மார்ட்டம் பண்ணும் காட்சிய பார்த்து அய்யா சாமி இந்த பட தொடர இனி பார்க்க கூடாதுனு நினைச்சேன். ஆனால், அப்படி என்னதான் இன்னொரு படத்துக்கும் யோசிப்பாங்க என்ற ஆர்வம் தொடரை தொடர்ந்து பார்க்க தோன்றுகிறது.

ஆனால், ஒவ்வொரு புதிய படத்திலும் சா லிகஸி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது தெளிவாக தெரிகிறது. They are the victims of their own Success :)

நாஞ்சில் பிரதாப் said... November 29, 2009 11:36 AM

அப்பாடா... 4 முடிச்சிட்டேன்.. 5,6 ந்தான் பாக்கி... எப்படித்தல படத்தை பார்க்கவே தனி தைரியம் வேணும் அதுல இப்படி விமர்சனமும் எப்படிங்க போட முடியுது...
எங்க உங்க காலை கொஞசம் காட்டுங்க... விமர்சனத்தை படிச்சப்புறம்தான் ஏதோ நம்ம மண்டைக்கு உரைச்சா மாதிரி இருக்கு... எப்படித்தல நன்றி சொல்லப்போறேன்..அழுவாச்சியா வர்து...

ஹாலிவுட் பாலா said... November 29, 2009 4:37 PM

@ரஃபீக்: எனக்கு போஸ்ட்மர்டத்தை விட, மூன்றாம் பாக மூளை ஆப்ரேஷன் தான் டெரர். கொடுமைங்க.

மூன்றாவது பாகத்திலேயே மேட்டர் இல்லை. அதே நேரத்தில் நடப்பதாக வரும் நாலு-அஞ்சு சுத்தம்.

மூன்றாம் பாகத்து தீமேதான் ஆறிலும் உபயோகிச்சிருக்காங்க கவனிச்சீங்களா? ஜிக்ஸா கொல்லாமல், இன்னொருவனை வேடிக்கை பார்க்க விடுவது. சரக்கு சுத்தமா காலின்னு தெரிஞ்சிடுச்சி!

ஆறாம் பாகம் வசூலில் செம அடி (பட்ஜெட்டை விட நிறைய சம்பாதித்துள்ளது). இன்னும் எத்தனை பாகம் வரப் போகுதோ....

======

@நாஞ்சில் : கடமை.. கடமை.. கடமை...!! விஜய் கேட்ட பின்னாடி இல்லைன்னு சொல்ல முடியுமா?? ஏற்கனவே காமெடிப் படங்கள் லிஸ்ட் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டேன். அது இல்லாம... இரண்டாம் பாகத்தில் இருந்தே..... முதல் நாள் தியேட்டர் விசிட் அடிக்கும் ஆள் (ஆறுக்கு மட்டும் போக முடியலை).

இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப் பட்டா எப்படிங்க! :)

ViNo said... November 30, 2009 3:30 PM

hmmm.... seems the site has got a new & good web designer.. :D

well., Saw first is the best among all the 5 parts(will see the sixth part this week). after the first part it becomes more concentrated on murder and gore.

PS: tamil la type pannanumna nhm writer open pannanum, but feelin lazy :D english la adikalam la??? solla ponaa english kooda illai., ipdi comment podalam la??? or is there any rules & regulations?

ஹாலிவுட் பாலா said... December 1, 2009 6:24 PM

@ViNo: நம்ம ஏரியாவைப் பார்த்து ரூல்ஸ் & ரெகுலேஷன்னு எல்லாம் சொல்லி பசங்களை பயமுறுத்தாதிங்க தல! :) நாம என்ன ஃபாரமா நடத்திகிட்டு இருக்கோம்! :) :)

அப்புறம்.. நல்ல டிசைனர் எல்லாம் ஒன்னும் கிடையாது. கிடைச்ச டெம்ப்ளேட்டை.. ரொம்ப ரொம்ப லைட்டா மாத்தியிருக்கேன். அவ்ளோதான்! :)

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil