11/17/2009

A - Z : [18+ படங்கள்] பகுதி 2/4

இந்தத் தொடரில் வரும் படங்களை.. நண்பர் ஸ்டேன்லி.. அவர் வலைத்தளத்தில் இருந்தே பார்க்கும்படி.. செய்துள்ளார். எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க..!!


இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள படங்கள், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஏற்றதல்ல.

தியேட்டர் ஆப்பரேட்டர்கள், இந்த ப்லாகை படித்து, குறிப்பிட்டுள்ள படங்களின் சீனை 12.00 மணி ஷோவுக்கு உபயோகிக்கும் போது, மறக்காமல்.. என் ப்லாக் அட்ரஸிற்கு நன்றி சொல்லி டைட்டில் கார்ட் போடவும். எல்லாம் காப்பிரைட்டட் ஆமா! கிஷோர்.., கணேசு கிட்ட சொல்லிடுங்க!


Happiness (1999) : "இந்தா.. வேற யாருக்காவது கொடுக்க யூஸ்ஃபுல்லா இருக்கும்” என சொல்லி MPAA கொடுத்த NC-17-ஐ திருப்பி அனுப்பிட்டார்கள் தயாரிப்பாளர்களும்-இயக்குனரும். NC-17 -ன்னு ரேட்டிங் வாங்கினாலே.. தியேட்டர் கிடைக்க திண்டாட்டம். இதில் அன்ரேட்டட் என சொல்லி... தியேட்டரில் ரிலீஸ் செய்யப் பார்த்தால்? இந்தப் படத்தின் டிவிடி வரும் வரைக்கும்... யாருக்குமே.. தெரிந்திருக்காது.

Happiness கதை... மூன்று சகோதரிகளின் சொந்த + செக்ஸ் வாழ்க்கைகளைப் பற்றியது. ஒவ்வொரு சகோதரிக்கும், அமெரிக்கப் படங்களில் சொல்லத் தயங்கும்... டார்க் தீம் தான் கரு. அதில் ஒரு சகோதரியின் கணவன் சிறுவர்களை கற்பழிக்கும் ஒரு ரேப்பிஸ்ட். அதை தன் மகனிடமே... விலாவாரியாக விவரிக்க, “அப்ப(பா) என்னையும் கற்பழிப்பியா?” என மகன் கேட்க, அப்பா கொடுக்கும் பதிலெல்லாம்... பின்நவீனத்துவ ஹோல் ஸ்கொயர். மேட்டர் காட்சிகள் எல்லாம் தூள் பறக்கும்.
Cannibal Holocaust, American Swing படங்களெல்லாம்.. ஒரு அதிர்ச்சியே அல்ல என்பவர்கள்.. இதை முயற்சிக்கலாம். ஒப்புக்கொள்ள மறுக்கும் மன வக்கிரத்தை வைத்தே... நெளிய வைக்கும் படம்.

Not for easily offended.



Intimacy (2001) : இந்த எழுத்தில் எனக்கு நினைவு முதலில் வந்தது. பிரிட்டன் தயாரிப்பு. வாரம் ஒருமுறை, யாரென்றே தெரியாத ஒரு பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் ஒருவன், அவள் யாரென்று கண்டு பிடிக்க முயற்சிக்க, தொடரும் விளைவுகளை.. கட்டிலில் வைத்தே சொல்கிறார்கள். படத்தில் செக்ஸ் காட்சிகள் மட்டுமில்லாமல்..., அதை சைகலாஜிகலாகவும் ஹேண்டில் செய்திருப்பார்கள். ஹெ.. ஹே.. ஹே.. சைகாலஜியாம்!

கூகிளில் தேடிக் கொண்டிருந்த பொழுது கிடைத்த இன்னொரு அதிர்ச்சி I Spit on Your Grave (1978).  ஏன்டா பார்த்தோம்னு ஆய்டுச்சி!

நம் அந்தக் கால.. கற்பழிப்பு-பழிவாங்கும் கதைதான். மொத்தம் 1:30 மணி நேரப் படம். பழிவாங்கும் சீன்களை ஒரு 4 நிமிடம் என எடுத்துக் கொண்டால், 30-40 நிமிடம் நிறுத்தி நிதானமாக, டைரக்டர் கற்பழிப்பை காட்டுகிறார். அந்த கற்பழிப்புக் காட்சிகளுக்காகவே.. அந்த நாட்களில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது. கொடுமை!!

இந்த எழுத்தில்.. ஒரு எரோடிக் த்ரில்லர் வேண்டுமென்றால் In the Cut (2003) முயற்சித்துப் பாருங்கள். ஆஸ்கர் அவார்ட் டைப் படமெல்லாம் இல்லை. ஆனால்.. பதிவுக்கு தேவையான காட்சிகள் உண்டு. நிக்கோல் கிட்மேன் தயாரிப்பு.

Irreversible (2002) -உம் இந்த லிஸ்டில் உண்டு. நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அறிமுகத்திற்கு சரவண குமார் MSK எழுதிய இந்தப் பதிவை பார்க்கவும்.


Jackass (2002) : காமெடி சென்ட்ரல் ச்சேனல் பார்ப்பவர்களுக்கு, இந்த சீரீஸூம், படங்களும் தெரிந்திருக்கும். Where the Wild Things Are படத்தின் இயக்குனர் ஸ்பைக் ஜோன்ஸ் தயாரிப்பில் வெளிவந்தப் படம்.  இதை படமென்றே சொல்ல முடியாது.

ஒரு க்ரூப் ஆட்கள் சேர்ந்து.... மிக.. மிக... டேஞ்சரான... கொடுமையான.. அசிங்கமான... கேவலமான... ஜோக்கான... இன்னும்.. என்னென்ன ‘ஆன’ எல்லாம் போட முடியுமோ.. அத்தனை விளையாட்டுக்களையும், டூப் போடாமல் விளையாடுவார்கள்.

சில.. ஸ்ட்ண்ட்களை பார்க்க முடிந்தாலும்.... சிலது... SICK. சேம்பிளுக்கு ஒரு sick வேண்டுமென்றால்....

ஹோம் டிப்போ மாதிரி ஒரு கடைக்குச் சென்று..., விற்பதற்கு வைத்திருக்கும்... டாய்லட்டில்.... மற்றவர்கள் கண்முன்னேயே.... ஒன்று + இரண்டு = மூன்று என எண்ணி விட்டு போய்விடுவார்கள். கர்மம்.. அதுக்கு க்ளோஷப் ஷாட் எல்லாம் இருக்கும். நீங்க படம் பார்க்க ரெடியா?

இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகமும் வந்தது. டிவியில் வந்த சீரீஸ் பெற்ற வெற்றியை விட, தியேட்டரில்.. இரண்டு படங்களும் பெற்ற வெற்றிதான் ஆச்சரியம். ஒவ்வொரு படமும்.. தியேட்டரில் மட்டுமே 80 மில்லியன் வசூல். பட்ஜெட் வெறும் ஐந்து மில்லியன்.

ஹும்.. அடுத்தவன் டாய்லெட் போறதை கூட காசாக்க முடியுங்கறது எல்லாம்... ஏன் நமக்கு தோணலை? யூ ட்யூப்ல ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணிடலாமா?


Kinsey (2004) : - வேறு எந்தப் படத்தையும் யோசிக்கக் கூட முடியாது. செக்ஸைப் பற்றிப் பேசும்போது... அதில் புரட்சி செய்தவரைப் பற்றியப் படத்தை சொல்லாமல் விட்டால் அதுதான் முதல்-பாவம். நமக்கு மாத்ருபூதம் மாதிரி, அமெரிக்காவுக்கு Alfred Charles Kinsey. ‘அதப் பத்தி பேசுனின்னா.. சாமி நாக்கை குத்திடும்’ என பேசிக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு மத்தியில்.. 1940-களில் முதன் முதலாக கல்லூரி மாணவர்களுக்கு.. ‘அதை’ப் பற்றி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த.. பயாலஜிஸ்ட் + ப்ரொஃபஸர்.

நம்ம ஊர் அப்பாக்களைப் போலவே கெடுபிடியான பக்திப்பழ அப்பா. நாம் வளர்ந்ததைப் போலவே Kinsey-யும்... “பொண்ணுங்க கிட்ட பேசகூடாது. சர்ச்சுக்கு போ. சாமிய கும்பிடு”-ன்னு சொல்லியே வளர்க்கப் பட்டவர். அந்த பாதிப்பு தந்த உந்ததலோ என்னவோ... பின்னாளில், அதைப் பற்றிய ஆராய்ச்சியே செய்து... லட்சக்கணக்கான மக்களின் அந்தரங்க வாழ்க்கையை சரிசெய்தவர். செத்தும் சரி செய்து கொண்டிருப்பவர். வாலிப வயோதிக அன்பர்களுக்கு லேகியம் விற்ற ஆசாமிகளுக்கு டெரர் கொடுத்தவர். துறை சார்ந்தவர்கள் எழுத வேண்டிய பதிவு இது.

என்ன... 18+ -ன்னு போட்டு எழுதறதுக்குப் பதிலா.. 12+ -ன்னு எழுதனும். கூடிய சீக்கிரம் இது 10+ -ன்னு சுருங்கலாம். யாரு கண்டா? Kinsey ஒரு பயாக்ரஃபி படம். மற்ற விசயங்கள் இருந்தாலும்..., அதற்காக மட்டும் பார்க்க வேண்டியப் படம் அல்ல. டேக்கன் / ஷிண்டலர்ஸ் லிஸ்ட் நாயகன் நீசன் வாழ்ந்தப் படம்.

DON'T MISS IT.


Last Tango In Paris (1972) :  “நல்ல வேளை. அந்தக் காட்சிக்கு ஒரே டேக் மட்டுமே எடுத்தது. இப்பொழுதெல்லாம் வெண்ணை என்று சொன்னாலே... எனக்கு அலர்ஜியாகி விடுகிறது. அந்தக் காட்சியில் நடித்ததற்குப் பிறகு, சமயலுக்குக் கூட.. நான் வெண்ணையை உபயோகிப்பதில்லை. ஒன்லி இதயம் நல்லெண்ணை மட்டும்தான்”.

இதைச் சொன்னது, இந்தப் படத்தின் ஹீரோயின். இந்த வெண்ணை எதற்குப் பயன்பட்டிருக்கும் என்பது படம் பார்க்காதவர்களின் கற்பனைக்கு. ஒரு நடுத்தர வயது விடோயருக்கும் (மார்லன் ப்ரேண்டோ), வாடகைக்கு வீடு தேடிவரும் ஒரு இளம் பெண்ணிற்கும் இடையில் நடக்கும் கசமுசாக்கள்தான் படமுழுக்க.

The Last Emperor என்ற காவியத்தை படைத்த Bernardo Bertolucci இயக்கத்தில், மார்லன் ப்ராண்டோ நடிப்பில் வெளிவந்து... ஒரு படத்தில்... எந்த அளவிற்கு செக்ஸையும் புகுத்தி, அதை வெற்றி பெறவும் வைக்க முடியும் என நிரூபித்த முதல் படம். இந்தப் படத்தை எடுத்தற்காக.. இயக்குனர் செம்மலுக்கு இரண்டு மாதம் சிறை சென்று செக்கிழுக்கும் வாய்ப்பும், கூடவே.. ஐந்து வருடங்களுக்கு இத்தாலிய குடியுரிமையும் பறி போயிருக்கிறது.

இவரின் The Dreamers (2003) படத்தைத் தான் முதலில் D-க்கு தேர்ந்தெடுத்தேன். ஒரு ஃப்ரெஞ்ச் இரட்டையர்களுக்கும் (ஒரு பையன் - ஒரு பொண்ணு), ஒரு அமெரிக்கனுக்கும் இடையில் நடக்கும் த்ரிஸம் உறவுகளும், 1960-களில் நடந்த மாணவர் போராட்டமும் தான் படம். வேணும்னா அதையும் பார்த்துடுங்க. Last Tango In Paris -ஐ மறந்துட வேணாம். தமிழ் மசாலா பிரேம்ஜி ரெகமண்ட் செய்த படம் இது.

L -ல்தான்.. இன்னும் நிறைய படங்கள் நினைவுக்கு வருது. ரொம்ப குழப்ப வேணாம்னு பார்க்கறேன். அப்புறமா பார்த்துக்குவோம்.

 
Mulholland Dr (2001) : இந்தப் படத்தை விட, வேறு எந்தப் படத்திற்கும், விமர்சனம் எழுதும் போது தடுமாறியது இல்லை.  இன்னைக்கு வரைக்கும், அந்த பதிவை பப்ளிஷ் பண்ணவும் முடியலை. எத்தனை முறை.. எழுதி... அழித்து.. எழுதி.. அழித்து......., நீங்களே ஒரு முறை பார்த்துடுங்க. எழுதினா.. கண்டிப்பா.. இது Identity அல்லது Plup Fiction பதிவுகள் மாதிரி... ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் தேவை. இந்தப் படத்திற்கு முன் Identity எல்லாம் ஜுஜுபி. சுபாஷ் & Mukkodan (எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்?)இருவரும் மார்ச் மாதம் என்னைப் பார்க்கச் சொன்னப் படம். செப்டம்பரில் பார்க்க ஆரம்பித்து, இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

நான் பார்த்ததிலேயே மிக.. மிக காம்ப்லக்ஸான ஒரு படம் எதுன்னா... அது Mulholland Dr தான் (அதற்கு முன் Identity). பிரேம்ஜி குடும்பத்தோடு போன மாதம் டூர் போனப்ப, இந்த கதையை அவருக்கு சொல்ல ஆரம்பித்தேன். முக்கால்வாசி படம் சொல்லுறதுக்குள்ள ஒரு 30-40 மைல் போயிருப்போம். இந்த ஒன் லைனர்... ஒன் பாரா எல்லாம் இந்த படத்திற்கு வேலைக்காகாது.

18+ ற்கு தேவையான காட்சிகள் மூணு இருக்கு. ரெண்டு லெஸ்பியன் (கவித.. கவித). ஒரு மாஸ்டர்பேஸன் (ஸ்கேரி + பாவம்). இது நான் ட்ராஃப்டில் எழுதி வைத்திருக்கும் “பட அறிமுகம்”. கண்டிப்பா... பாருங்க. EXCELLENT THRILLER.
நேராகப் போகும் படங்கள், ரிவர்ஸில் போகும் படங்கள், பிச்சி பிச்சி போகும் படங்கள்... எத்தனையோ பார்த்தாயிற்று. ஆனால் டபுள் ஆக்‌ஷன் இல்லாத ஒரு படத்தில்... அதே நடிகர்கள், நடிகைகள் இரண்டு வெவ்வேறு பாத்திரப் பெயர்களிலோ, அல்லது பாத்திரங்களிலோ  நடித்துப் பார்த்திருக்கிறோமா?


Nine Songs (2004) :
உங்களுக்கு... ப்ரொக்ராமிங் கத்துக்கனுமா? கீழே சொல்லியிருக்கும் முறையில்... உங்களுக்கு ஒரு பேஸிக் ஐடியா கிடைக்கும்... பாருங்க.

01: செக்ஸ் = 0
02: அவனும் அவளும் ஒரு கான்ஸர்டில்
03: ஒரு ராக் பாடல்
04: வீட்டுக்கு வந்து.. ச்ச்சா..ச்ச்சா.. ச்ச்சா..
05: செக்ஸ் = செக்ஸ் + 1
06: செக்ஸ் <  9? கோ டு ஸ்டெப் 02!
07: கோ டு பாத்ரூம்

படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். இந்த ஒவ்வொரு கான்ஸர்டுக்கு போய் வந்த பின், ஒரு ஜோடிக்கு இடையில் நடக்கும்... ஒன்பது உடலுறவுகள் தான் கதை. வாட்? ஆமாங்க கதை. இதில் சொல்ல வேறு எதுவுமே கிடையாது. இதையே ஒரு படமா எடுத்து அதுக்கு சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கி... அதை ரிலீஸும் பண்ணியிருக்காரு ஒரு ஃபேமஸ் பிரிட்டன் டைரக்டர் (Michael Winterbottom). டைரக்டர் “ஸ்டார்ட் கேமரா” என்று சொல்வதே..., ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும், ‘டேக் ஆஃப் யுவ்ர் க்ளோத்ஸ்’ என்ற அர்த்தத்தில்.

அத்தனையும்... unsimulated. கலீக்குலாவில்... கன்றாவியாக எடுக்கப் பட்டிருக்கும் காட்சிகள் எல்லாம்... இதில் கலையுணர்வோடு.  பிரிட்டனில்.. இது மெய்ன்ஸ்ட்ரீம் ரிலீஸாம். நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டம்தான்.

ஒரு கொலை செய்தால்.. நீங்கள் பத்தோடு பதினொன்னு. ஆனால்.. அதுவே தொடர் கொலைகள் என்றால், ‘மீடியாவின் டார்லிங்’ என்பதை சொல்லும் Natural Born Killers (1994), எல்லோருக்கும்..., அட் லீஸ்ட் தலைப்பாவது தெரியும் என்பதால் லிஸ்டில் இல்லை.

(தொடரும்).......





[ஹலோ.. ரொம்ப.. ஆராய்ச்சி எல்லாம் பண்ணி... படம் கண்டு புடிச்சி... பார்த்து எழுதியிருக்கேன். ஒரு ரெண்டு படத்தையாவது... கேள்விப் பட்டதில்லன்னு சொல்லி, கொஞ்சம் ஆறுதல் படுத்துங்க]

53 தியேட்டர் கமெண்ட்ஸ்:

என் நடை பாதையில்(ராம்) said... November 17, 2009 9:24 PM

காலையில் எழுந்ததும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான்.... (அதுக்குன்னு 8 மணிக்கேவா....?)

ஹாலிவுட் பாலா said... November 17, 2009 9:28 PM

எனக்கு நைட்டுதாங்க! :)

சுப.தமிழினியன் said... November 17, 2009 9:40 PM

எனக்கு identity எல்லாம் அவ்ளோ கஷ்டமா இல்லை காரணம் உங்க விம்ர்சனம் தான்.

அப்புறம், mullholand dr, last tango in paris இரண்டுமே கேள்வி படாத படங்க, நீங்க கேட்டதுக்காக 2 படம் சொல்லியாச்சு, ஆனா நீங்க கேக்கமா இருந்திருந்தா ஹீ ஹீ ஹீ.... :-) :-) :-)

ஹாலிவுட் பாலா said... November 17, 2009 9:45 PM

ஹா.. ஹா.. ஹா..! :) :) கஷ்டமா இல்லைன்னு படிச்சவுடனே... அசந்துட்டேன்.. ஒரு கணம். அப்புறம் கூடவே எக்ஸ்ட்ரா வார்த்தைகள்! :) :)

அப்பாடி.. ஒருத்தரை கண்டு பிடிச்சிட்டேன்! :)

இன்னும் எத்தனை பேர்.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சப் போறாங்களோ? :)

சென்ஷி said... November 17, 2009 10:39 PM

Identity வச்சு பெரிய ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு விளக்கினதாலதான் அந்தப் படமே பார்த்தோம். இன்னமும் அதுல நீங்க கேட்ட ஒரு கேள்வி நம்ம ஆளுங்க மத்தியில பிரபலமா இருக்குது. நீங்கதான் பதில் சொல்லலை.

நான் எவ்வளவு நல்ல பிள்ளைன்னு இந்த மாதிரி படங்களை பத்தி எழுதும்போது தெரிஞ்சுக்க முடியுது. ஒரு படமும் நான் கேள்விக்கூட பட்டதில்லை. ஆனா ஜாக் ஆஸ் விளம்பரம் மாத்திரம் பார்த்ததுண்டு.

Mulholland Dr இதை இன்னிக்கு டவுன்லோடு செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.

சென்ஷி said... November 17, 2009 10:47 PM

//தியேட்டர் ஆப்பரேட்டர்கள், இந்த ப்லாகை படித்து, குறிப்பிட்டுள்ள படங்களின் சீனை 12.00 மணி ஷோவுக்கு உபயோகிக்கும் போது, மறக்காமல்.. என் ப்லாக் அட்ரஸிற்கு நன்றி சொல்லி டைட்டில் கார்ட் போடவும். எல்லாம் காப்பிரைட்டட் ஆமா! கிஷோர்.., கணேசு கிட்ட சொல்லிடுங்க!//

நல்ல விளம்பரம் தலைவரே.. அப்படியே உங்க போட்டோவும் பதிவுல போட்டீங்கன்னா உங்க கட் அவுட் வைக்கவும் வசதியா இருக்குமே.. :)

கலையரசன் said... November 17, 2009 11:25 PM

Tango & Jackass மட்டும் பார்த்துயிருக்கிறேன் பாலு... டெய்லி 2 படம் பார்க்கும், எனக்கே தெரியிலப்பா உங்க அறிமுக படங்கள்!! கண்டிப்பா உங்க உழைப்பு தெரியுதுங்க இதுல.. யாரும் கேள்வி படாத படங்கள் நிறைய அறிமுகப்படுத்தியிருக்கீங்க! ஹேட்ஸ் ஆஃப்...

ஓ வரிசையில கண்டிப்பா என்னுடைய வாழ்நாள் Favorite, much loved, desired படம் ஓல்ட் பாய் (Oldboy) பத்தி கண்டிப்பா எழுதனும்! இல்லன்னா... கிஷோரை போன் பண்ணி பாட சொல்லிடுவேன்!!

டம்பி மேவீ said... November 18, 2009 12:26 AM

mmmm..... intha pada CD ellam landmark la kidaikkumaa ???

பேநா மூடி said... November 18, 2009 12:43 AM

தல இதுல எந்த படம் பேரும் எனக்கு தெரியாது... ஹி ஹி..

இரவு கவி said... November 18, 2009 1:29 AM

ithula naan entha padamum parthathilla en kelvi pattathu kooda illa.

Indian said... November 18, 2009 2:28 AM

//Mulholland Dr //

Movie brings out the feel of the place it represents. Close to heart as I lived nearby and have taken the road few times. They provide stunning night views of LA.

//Jackass//

Though I've seen the TV episodes occasionally, I stopped half way through the movie.

And for the rest, thanks for the nice intro.

Indian said... November 18, 2009 2:44 AM

If you like Mulholland drive, check '2 Days in the Valley' movie.

பிரேம்ஜி said... November 18, 2009 3:12 AM

சீக்கிரம் Mulholland Dr விமர்சனம் குடுங்க.அப்புறம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரியும்,கலையரசன் இப்ப சொன்னது போலவும் Oldboy பார்த்துட்டு எழுதிருங்க.Oldboy நல்ல பிரிண்ட் நம்ம IP லேயே கிடைக்குது.

Clove said... November 18, 2009 4:34 AM

Thalai sonna mathiri Intha 4 part mudivula ungalukku nesamma Docterate pattam kudukkalam. Intha listla neenga sonna mathiri 2 padamthan theriyumnu sollalam meethi ellam romba puthusu.

Erkanave download listla neraya irukku. Unga muyarchikku ennoda vazthukkal . Keep rock thalaiva.

Ben said... November 18, 2009 4:56 AM

18 + என்றதும் வாயோரம் ஈரம் கசிய கணினித் திரையை பார்ப்பவகர்களுக்காக Original Sin போன்ற சிருங்கார ரசம் ததும்பும் படங்களைப் பற்றியும் எழுதுங்களேன் :)

Karthick Krishna CS said... November 18, 2009 5:22 AM

except mullhond and last tango, enakku vera endha padamum theriyadhu.. unga kalai sevai vaazhga.. enna maadhiri pasangalukku, sivaraj sittha vaidhyarku appuram ,neenga dhan udhavi pandreenga ;)

கோபிநாத் said... November 18, 2009 6:19 AM

\\\ஹலோ.. ரொம்ப.. ஆராய்ச்சி எல்லாம் பண்ணி... படம் கண்டு புடிச்சி... பார்த்து எழுதியிருக்கேன். ஒரு ரெண்டு படத்தையாவது... கேள்விப் பட்டதில்லன்னு சொல்லி, கொஞ்சம் ஆறுதல் படுத்துங்க] \\


;)))) அய்யோ..அய்யோ...நகைச்சுவை அரசன் அய்யா நீர் ;)))

தல ஒன்னே ஒன்னு சொல்றேன்

கடமையை செய்யுங்கள் ;)))

சென்ஷி சொன்னது போல போட்டோ போடுங்க கட்அவுட் வச்சி கலக்கிடுவோம் நீங்க வரும் போது.

வினோத்கெளதம் said... November 18, 2009 7:10 AM

தல இதுல The dreamers மட்டும் தான் பார்த்து இருக்கேன்..அதுவும் லிஸ்ட்ல நீங்க சொல்லல.

அப்புறம் நேத்து Caligula பார்தேன்..உவ்வே தான்..ஒன்னும் சொல்லிகிற மாதிரி இல்லை..அசல் Porno தான்..வேண்டும் என்றால் கொஞ்சம் "Vintage" ஃபீல் வேனும்கிறவங்க பார்க்கலாம்..:)

அப்புறம் நீங்களே உங்கள் சொந்த முயற்சியில் இந்த படங்களை எல்லாம் எதாவது ஒரு தளத்தில் Upload செய்து விட்டு எங்களுக்கு லின்க்கும் கொடுத்து விட்டிர்கள் என்றால் எங்களக்கு "பல விதத்தில்" வசதியா இருக்கும்..:)

ரோஸ்விக் said... November 18, 2009 8:28 AM

தல ஆங்கிலப் படம்னா நமக்கு ரொம்ப அலர்ஜி. இப்போ உங்க விவரிப்புகளைப் பாக்கும்போது தான் ஆர்வம் வருது. மொழி இதற்க்கு ஒரு தடை இல்லைன்னு தோணுது :-)))

இப்ப எல்லாம் என் நண்பர்களுக்கு ஆங்கிலப் படங்கள் குறித்து அறிவதற்கு உங்க பதிவு முகவரிய சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க கலக்குங்க. அருமையா போகுது. வாழ்த்துக்கள்.

kanagu said... November 18, 2009 9:46 AM

kalakkal padhivu anna... pona padhiva vida nalla irundhudu :)

neraya pudhu padangal arimugam aagi irukku..

/*ஹலோ.. ரொம்ப.. ஆராய்ச்சி எல்லாம் பண்ணி... படம் கண்டு புடிச்சி... பார்த்து எழுதியிருக்கேன். ஒரு ரெண்டு படத்தையாவது... கேள்விப் பட்டதில்லன்னு சொல்லி, கொஞ்சம் ஆறுதல் படுத்துங்க]*/

enaku last tango in Paris thavara eduvum theriyathu... athayum paathathu illa..

happy ah??/ :)

கிரி said... November 18, 2009 9:56 AM

இதுல ஒரு படம் கூட தெரியாது ..தரவிறக்கம் போட்டு விட்டேன் :-)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... November 18, 2009 10:00 AM

தல செம கலக்கலான படமா இருக்கும் போல.
படத்தில் உள்ள எந்த பட்மும் நான் பார்த்ததில்லை தல, நாளைக்கு ஊருக்கு போறேன், போய்டு வந்து
எல்லா படத்தையும் டவுன் லோடு பண்ணி பாட்திடுறேன். நீங்க வாழ்க, மேலும் படம் பார்த்து எங்களுக்கும் அறிமுகம் செய்க.ஓட்டுக்கள் காலையிலேயே போட்டுட்டேன். ஆபீசுல இந்த படங்களை விரிவாக்கி பார்க்க முடியலை.இப்போ தான் ஃபுல்லா பார்த்தேன், தல நீங்க மெய்யாலுமே தியாகச்செம்மல்தான்.:)))))அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Pradeep said... November 18, 2009 10:18 AM

really good...could u pls tell me In which site i can download or online?

செந்தழல் ரவி said... November 18, 2009 10:44 AM

கலக்குங்க.

ச்சின்னப் பையன் said... November 18, 2009 11:01 AM

போட்டுத் தாக்குங்க. ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணிட்டிருக்கேன். ஒண்ணொண்ணா பாத்திரவேண்டியதுதான்!!!!!!

VIJAY said... November 18, 2009 11:11 AM

காலைல ஓட்டு போட்டாச்சு. எந்த படமும் நான் கேள்விபட்டது இல்ல. எல்லா படமும் கிடைக்குமா என்று தெரியல. இனி விமர்சனம் போடும் படம் எல்லாம் டோரண்ட்ல இருக்கா என பார்த்து போடுங்க. இல்ல எனில் படம் கிடைக்காம நாங்க அல்லாட வேண்டியதாக இருக்கு.அப்புறம் வினோத் சொன்னது போல் நீங்கதான் அப்லோட் பண்ணவேண்டியதாக இருக்கும் ஆமா.

Sampath said... November 18, 2009 12:16 PM

தல இது வரைக்கும் வந்த லிஸ்ட்ல ஒரு சில படங்கள தவிர எல்லாமே எனக்கு புதுசு ...... ஸோ கவலைப்படாம உங்களுக்கு என்னென்ன தோணுதோ அதையெல்லாம் எழுதுங்க .... :)

//நேராகப் போகும் படங்கள், ரிவர்ஸில் போகும் படங்கள், பிச்சி பிச்சி போகும் படங்கள்... எத்தனையோ பார்த்தாயிற்று. ஆனால் டபுள் ஆக்‌ஷன் இல்லாத ஒரு படத்தில்... அதே நடிகர்கள், நடிகைகள் இரண்டு வெவ்வேறு பாத்திரப் பெயர்களிலோ, அல்லது பாத்திரங்களிலோ நடித்துப் பார்த்திருக்கிறோமா?//

இந்த மாதிரி "The Nines"ல பாத்திருக்கேன் .... இத பார்ஸ்ட் தடவ பாக்கும்போது ஒன்னும் புரியல ஆனா ரெண்டாவது தடவை பாக்கற அளவுக்கு பொறுமை இல்ல ...... ரொம்ப ஸ்லோ அதனால wikipedia'ல கதை மட்டும் படிச்சிகிட்டேன் :) ........ முடிஞ்சா பாருங்க :)

pappu said... November 18, 2009 12:58 PM

Last Tango In Paris (1972////
இது சுஜாதாவோட ப்ரியா கதைல சொல்லுவாங்க. படம் மாதிரி இல்லாமல் ஒரிஜினல் கதை லண்டன்ல. அங்க ப்ரியா ராத்திரி போய் இந்த படத்த பாத்துட்டு வந்திருப்பா! ஸோ அஜால் குஜால்னு அப்பவே தெரியும்.

ஜாக் ஆஸ் காலேஜ் Oberlin shansi க்ளப்ல வச்சு பாதி பாத்தேன்(க்ளப்ப மூடிட்டு சீனியர்ஸோட உக்காந்து). அந்த டிங்டாங் கம்பிய பழுக்க வச்சு பின்னடி குத்திட்டு அம்மாகிட்ட போய் காட்டுவானுங்களே அந்த பார்ட்.

மத்த படி எல்லம் புது படம். பல வருஷமா படம் பாத்துட்டிருக்கீங்களே. ஏதோ உலக படம் பாக்குறவருன்னு நினைச்சா, எல்ல எழுத்துலயும் பல படங்கள் அஜால் குஜாலா சொல்ல முடியுதுனா....... வேற ஒண்ணும் இல்ல. வளர்ப்பு சரியில்ல.
இதுக்கெல்லாம் டோரண்ட் கிடைக்குதா?

ஹாலிவுட் பாலா said... November 18, 2009 2:52 PM

@சென்ஷி: ஐடெண்டிடி ஆராய்ச்சி எல்லாம் இதுக்கு பலிக்க மாட்டேங்குதுங்க சென்ஷி. மண்டைய பிச்சிகிட்டு ஒவ்வொரு ஆன்ஸரா கண்டுபுடிச்சிகிட்டு இருக்கேன்.

ஐடெண்டிடி.. கேள்விக்கு... யாராவது ஆன்ஸர் சொல்லுறவரைக்கும்... அதை சொல்லுறதா இல்லை! சலவைக் காரி ஜோக் மாதிரி! :) :)

நீங்கதானே... நல்ல பிள்ளைதானே...??? நம்பிட்டோம்! :)

என் ஃபோட்டோ கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டமில்ல! :)

=========

@கலையரசன்: ஆஹா... அப்பவும் ரெண்டு போச்சா!!! ஆனா டேங்கோ & ஜேக்காஸ் எதிர்பார்த்தேன். அடுத்த முறை இன்னும் ட்ரை பண்ணுறேன்! :)

Oldboy -ஆ... தல??? அதை தெரியாத. தமிழ்நாட்டு மக்கள் இன்னும் யாராவது இருக்காங்களா கலை?

இருந்தாலும்.. நீங்க சொல்லிட்டீங்க. எழுதிடுவோம்! :)

==========

@டம்பி மேவீ: இதெல்லாம்.. திரை வரலாற்றில் லேண்ட்மார்க். ஆனா. அங்க கிடைக்குமா??? :) :)

=========

@பேநா மூடி & இரவு கவி: ஹைய்யா.. இன்னும் ரெண்டு பேரு! :) :) :) :)

=======

@இந்தியன்: 2 Days in the Valley இன்னும் பார்த்ததில்லைங்க தல. அடுத்த வாரத்துக்குள் பார்த்துடுறேன். லைப்ரரியில் இருக்கான்னு பார்க்கனும். முன்னாடி.. ரெகுலரா வந்து படங்கள் பார்க்க லிஸ்ட் கொடுப்பீங்க. இப்ப வர மாட்டேங்கறீங்களே தல? :) :)

======

@பிரேம்ஜி: Oldboy படத்தை.. நீங்க சொன்ன பின்னாடி நிறைய முறை பார்த்துட்டேன் பிரேம். Comcast ondemand-ல் ஒரு மாசம் இருந்துச்சி. அதை சரவணக்குமார் எழுதிட்டாரேன்னுதான் விட்டாச்சி.

ஆமா.. பிக்ஸார் எழுதினப்ப.. உங்களை இந்த ஏரியா பக்கமே பார்க்கலையே..., இப்ப.. 18+ -ன்னுவுடனே.. சஜஸன் எல்லாம் வருது??? வீட்டுக்கு ஒரு போன் அடிக்கனுமா????? :) :)

======

ஹாலிவுட் பாலா said... November 18, 2009 3:03 PM

@Clove: சூப்பர். சூப்பர்.. லிஸ்ட் ஏறிகிட்டே போகுது! :) :) முயற்சி பண்ணுறேங்க தல! :)

=====

@பென்: அருமையான... பட யோசனைங்க தல. மறந்து கூட போய்டுச்சி. நான் வேற படம் யோசிச்சி வச்சிருந்தேன். :) :)

=====

@கார்த்திக்: கொஞ்ச.. நஞ்ச.. மானத்தையும்.. நீங்க வாங்கிட்டீங்க! :) :) :) பேசாம நானும்.. லேகியம் விக்கற போர்டு ஒன்னு மாட்டிக்கலாமான்னு பார்க்கறேன். :)

======

@கோபி: ஹா. ஹா.. ஹா...! போட்டோ தானே??? போட மாட்டனே???! :) :)

======

@வினோத்: ஹலோ... இங்க யாராவது வந்து.. இவரை ரெண்டு போடு போடுங்க. அண்ணாத்த..., ஜெயில்ல போட்டா கூட பரவாயில்ல. இவனுங்க.. 10-20 ஆயிரம் டாலர் ஃபைன் போடுவானுங்க. நானெங்க போறது? :) :)

சொல்லியிருக்கும் படத்தில்..... எனக்குத் தெரிஞ்சி.. Kinsey/Happiness/Intimacy தவிர.. மத்ததெல்லாம். ஆன் லைனில் இருக்குங்க. இந்த மூணுப் படங்களையும்.. நான் லைப்ரரியில் எடுத்தேன்.

லிங்க் கிடைச்சா.. நிச்சயம் இங்க போடுறேன். ISOHUNT.COM - போனீங்கன்னா.. மத்த படங்கள் எல்லாம் கிடைக்கும். நான் முதல்ல.. லைப்ரரியில் அவைலபிலான்னு பார்த்துட்டுதான்.. லிங்க் தேடுவேன்.

=========

@ரோஸ்விக் : நன்றி ரோஸ்விக்! எதோ.. நம்மால முடிஞ்ச நாலு ‘நல்லப் படங்களை’ மக்களுக்கு சொல்லலாம்னுதான். பிரேம்ஜி-க்கு நிறைய படங்கள் தெரியும்.

========

@கனகு & கிரி : கலக்கல்..!!! இந்தப் பதிவில்... கேள்விப்படாத லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது! :) :) அடுத்தப் பதிவு எப்படி இருக்கப் போவுதோ? :( :)

கிரி..... நீங்க டவுன்லோட் பண்ணும்.. லிங்கை.. இங்கே.. வினோத்திற்கு ஷேர் பண்ண முடியுமா?? ப்ளீஸ்!

======

@கார்த்திக்கேயன்: போய்ட்டு வாங்க நண்பா!!! சந்தோசம்!! நமக்குத்தான் அந்த கொடுப்பினை கிடையாது! :( :(

நீங்க வர்றதுக்குள்ள.. இன்னும் ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கப் போகுது!!!

ஹேவ் எ ஸேஃப் ட்ரிப்! :)


=====

Mukkodan said... November 18, 2009 3:05 PM

Thnx 4 mentioning my name. Expecting ur deeeeetailed review on that movie.

I'ven't heard of most of other titles. I had the misfortune of watching jackass in a cinema. My friend puked in the middle and we left immediately.

ஹாலிவுட் பாலா said... November 18, 2009 3:14 PM

@ப்ரதீப் : isohunt.com mostly!

========

@செந்தழல் ரவி : :) :) நன்றிங்க ரவி! :)

=====

@ச்சின்னப் பையன் : தாக்கிடுவோம்..!! நம்மளை யாரும்.. தாக்கத வரைக்கும்!: ) :)

லிஸ்ட் பாதிதான் வந்திருக்கு. சீக்கிரம் பார்க்க ஆரம்பிங்க! :)

=======

@விஜய் : விஜய்... வினோத்திற்கு சொன்ன பதில்தான்! :) மூணு மட்டும்தான் நான் ட்ரோடண்டில் பார்க்கலை. ஆனா லிங்க் கிடைச்சா நிச்சயம் இங்க சொல்லுறேன். அதுவரை.. மத்தப் படங்கள் பார்த்து முடிங்க தல. :) :)

=====

@சம்பத்: யு.கே.. படங்கள் இங்க அதிகம் வராதனால.. இதை கேள்விப்பட்டது கூட இல்லை. லைப்ரரியில் கிடைச்சா பார்த்துட்டு... முடிஞ்சா ஒருநாள் எழுதிடுவோம். காசா பணமா? :)

=======

@பப்பு: என்கிட்ட புக் இருக்குங்க பப்பு. இன்னும் படிக்கலை.

///////
வளர்ப்பு சரியில்ல.
இதுக்கெல்லாம் டோரண்ட் கிடைக்குதா?
///////

ஹா. ஹா.. ஹா. கொழுப்புதானே?!! வினோத்திற்கு சொன்ன பதில்தான்! :) இருக்கு.. ஆனா இல்லை...!

ஹாலிவுட் பாலா said... November 18, 2009 3:18 PM

@Mukkodan: ஆஹா.. தல.. இத்தனை நாளா சைலண்டா படிச்சிகிட்டுதான் இருக்கீங்களா??? :) :)

வாங்க.. வாங்க. வாங்க! :) :)

====

சுபாஷைதான் கண்டுபிடிக்க முடியலை. திடீர்ன்னு ஒருநாள் ஆள் காணாம போய்ட்டார். ஜூன் முப்பது.

யாருக்காவது.. அவர் எங்க இருக்கார்ன்னு தெரியுமா?

வண்டிக்காரன் said... November 18, 2009 3:35 PM

jackass இந்த லிஸ்ட்ல சேர்த்தது சரியானு தெரியல ,அது ஒரு மாதிரி கலீஜ் மூவி.கேள்விப்படாத மூவி உங்க லிஸ்ட்ல நிறையவே இருக்கு.

ஹாலிவுட் பாலா said... November 18, 2009 3:41 PM

வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான் -ன்னு எல்லாம் பொய் சொல்ல வரலை.

வேற எதுவும் தெரியலை! அதான்! :) :)

stanlee said... November 18, 2009 4:13 PM

பாலா அண்ணா,
உங்களது இந்த படங்களின் தொகுப்பை, நான் எனது தளத்தில் ஒளிபரப்பு செய்துள்ளேன்.
இதுதான் எனது முதல் வலையுலக பதிப்புகள். எனக்கு அவ்வளவாக சொற்கள் அமைத்து விமர்சனம் எழுத வராது. ஆனால் எந்த படமாக இருந்தாலும் அதை தோண்டி துருவி பார்த்து விடுவேன் :)
அந்த பழக்கத்தை இங்கு உபயோகபடுத்தி இருக்கிறேன்..
எனது Blog எழுதும் எண்ணத்திற்கு உந்துகோலாக இருந்த நீங்களும், கேபிள் அண்ணனும், எனது தளத்திற்கு ஒரு முறை கண் பதிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

முகவரி : http://englishpadam.blogspot.com/
அன்புடன், ஸ்டான்லி.
பி.கு: Torrent தேடும் நண்பர்களுக்கு இந்த தளத்தை recommend செய்யவும்.

ஹாலிவுட் பாலா said... November 18, 2009 4:26 PM

holy cow! :) :)

கலக்கிட்டீங்க ஸ்டான்லி! :) :)

மிக்க நன்றி.. இப்பவே.. பதிவின் மேல் லிங்கை போட்டுடுறேன்.! :) :)

Karthick Krishna CS said... November 18, 2009 11:21 PM

@bala
விடுங்க பாஸ்... கலையுலகத்துக்கு வந்த அப்புறம் இதெல்லாம் சகஜம்...

maha said... November 19, 2009 6:24 AM

its good review i watch most of them here we go if you wanna watch free link and the best one tooo
http://www.watch-movies-online.tv/


kathir
canada

வால்பையன் said... November 19, 2009 7:44 AM

9 சாங்ஸ் மட்டும் பார்த்திருக்கேன்!

நீங்கள் கொடுத்த நண்பரின் லிங்கில் அனைத்தையும் பார்த்து விடலாம்!

ஹாலிவுட் பாலா said... November 19, 2009 10:47 AM

@கார்த்திக்: ஆகட்டுங்க!! :) :)

@கதிர்: லிங்கிற்கு நன்றிங்க தல. அடுத்தப் பதிவில் இதையும் ஏற்றிடுறேன். :)

@வால்பையன்: முல்ஹாலண்ட் ட்ரைவில் இருந்து ஆரம்பிங்க தல.

நாஞ்சில் பிரதாப் said... November 19, 2009 12:44 PM

ஸ்டேன்லி யோட வலைப்பூ டக்கரு. அதுலயே எல்ல படத்தையும் பார்த்துக்கறேன்... தேங்க்ஸ் பாலா...

குறை ஒன்றும் இல்லை !!! said... November 20, 2009 7:52 AM

:(((((((((((..

ஹும்ம்ம்ம் .. போங்க .. இதுல எந்த படமுமே நான் கேள்விபடலை !!!! நான் இன்னும் வளரனுமா?

வரதராஜலு .பூ said... November 20, 2009 9:33 AM

கேள்விப் பட்டதில்ல.

yenakku pudusu indha padamellam.

வரதராஜலு .பூ said... November 20, 2009 9:34 AM

கேள்விப் பட்டதில்ல.

yenakku pudusu indha padamellam.
(Second time, as per your request)

வரதராஜலு .பூ said... November 20, 2009 9:34 AM

:))
enough?

நாஞ்சில் பிரதாப் said... November 23, 2009 11:08 AM

தல நேத்துதான் படத்தைப்பார்த்தேன்... படமா அது சே... பாட்டு, ச்சா..பாட்டு ச்சா...
அதுலயும் அந்த கைகளைகட்டி ஒரு சீன் இருக்கே...

ஹாலிவுட் பாலா said... November 25, 2009 9:33 AM

@நாஞ்சில்: யு வெல்கம்! :)

@குறை ஒன்றும் இல்லை: ஆமாங்க தல..! உங்களுக்கு வயசு பத்தலை.

@வரதராஜலு: இந்தப் பதிவுதான் என் ஃபேவரிட் ஆய்டுச்சி. நிறய பேர் கேள்விப் பட்டதில்லைன்னு சொல்லியிருக்கீங்க! :)

ஹா.. ஹா.. ஹா.. எனஃப்

@நாஞ்சில்: குமரிக் கோட்டத்தின் குளிர்ச்சி தெரிஞ்சதுங்களா??? :) :) :)

நாஞ்சில் பிரதாப் said... November 25, 2009 12:51 PM

//ஹா.. ஹா.. ஹா.. எனஃப்
@நாஞ்சில்: குமரிக் கோட்டத்தின் குளிர்ச்சி தெரிஞ்சதுங்களா??? //

நான் 9 SONGS படத்தைப்பத்திதான் பேசறேன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா???
குமரிகோட்டம் என்ன சேப்பாக்கம் ஸ்டேடியத்தையே பார்த்தேன் ஹஹஹ

தல WRONG TURN படம் பார்த்தேன் அதைப்பத்தி விமர்சனம் நீங்க போடலியே... இதுக்கு முன்னாடி HOSTEL ஒண்ணுமே இல்ல. படுபயங்கரமா இருக்கு...

ஹாலிவுட் பாலா said... November 25, 2009 2:50 PM

W-க்கு அதுவும் பரிசீலனையில் இருக்குங்க நாஞ்சில். ஒரே கன்பீஜ்.

எட்வின் said... November 29, 2009 7:31 AM

ஆஹா பெர்ர்ரிய லிஸ்ட்டாத் தான் இருக்கு... பார்க்காத படங்கள் லிஸ்ட் வேற எகிறுதே.
---------------------------------------------
உங்கள் வலைப்பக்கம் அவ்வப்போது வருவதுண்டு. இப்போ என் வலைப்பூவோட சுட்டிய வேற போட்டு வெட்கப்பட வச்சிப்புட்டீங்க... நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்க :) தொடர்ந்து கலக்குங்க.

ஹாலிவுட் பாலா said... November 29, 2009 4:40 PM

அண்ணே..., நீங்க என்னை ‘பிரபலம்’-ன்னு தப்பா நினைச்சிகிட்டு இருக்கீங்க.. இல்லையா??? :) :)

====

ஆங்கிலப் படங்களை எழுதுவதே கொஞ்சம் பேருதான். அதைக் கூட மத்தவங்களுக்கு அறிமுகப் படுத்தாட்டா அப்புறம்... நானெல்லாம் எதுக்கு பதிவெழுதனும் சொல்லுங்க! :)

ஹாலிவுட் பாலா said... November 29, 2009 4:40 PM

ஆமா.. இதுக்கென்ன வெக்கம்! :) :)

Post a Comment / கிஷோர் கமெண்ட்

ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Green Zone Remember Me She is out of my league