புது வரவு - நம்பிக்கை

12/19/2009

Avatar - டெக்னாலஜி 01



நீங்ங்ங்கள் பார்க்கப் போகும், அந்த கதை நாயகனின்... முக அரிதாரத்தின் அடிநாதம்....., முகப் பூச்சுகளாளாளாளாலும்...... வர்ணக் கலவைகளாளாளாலும், ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்று எம் சக கலைஞர்களால் அழைக்கப்படும் வஸ்துவினால் வந்ததென்று, தாங்கள் நினைத்தால்.........., ஒரு கலைஞனின் உழைப்பை அவமதிக்கும் பார்வையின் விளிம்பாய் நோக்கும் போது...... .......அதைக்க்க்க்க்க் கடுமையாக எதிர்க்கும் நிலைக்கு நான் உந்தப்ப்ப்ப்ப்படலாம் என்ற சித்தாந்ததின் கோட்பாடுகளில் ஊறித் திளைத்தே வளர்ந்த அடிப்படையிலும்ம்ம்ம்ம்...., அரிதாரத்தை பூசவும்... கலைக்கவுமே ஒவ்வொரு தினமும்... ஆதவன் கண் விழிக்கும் கணத்திற்கு,  4 மணித்லாயங்கள் முன்பும், அவன் த்யாயான நிலையை எட்டிய பின்பும்.... 5 மணித்லாயங்கள் எடுக்குமென்று சொன்னாலும் அது மிகையாகது என்பததுதான், இந்த பகுத்தறிவு பாசறையில் பயின்ற மாணவனின் கருத்தாக இருக்குமென்பதில் ஐயமிருப்பதாக எனக்குப் படவில்லை என்று கூற விழைந்தாலும்”- னு இனிமேல், கமல்ஹசன் (வழக்கம்போல் புரியாத) ஸ்டேட்மெண்ட் கொடுத்தால்.....

ப்லாகர்ஸை விட.. நீங்க பெரிய வெட்டி’ங்க சார்”-ன்னுதான் சொல்லப் போறோம். அவதாரின் டெக்னாலஜி, அதைத்தான் சாத்தியப் படுத்தியிருக்கு. போனப் பதிவில் எல்லாத்தையும் சேர்த்து ஒரு குத்து மதிப்பாய் சொன்னதை.. இங்கு தனித்தனியா சொல்ல முயற்சிக்கிறேன்.

ஒரு குட்டி டிஸ்க் வேணும்னா: பிக்ஸார் பதிவுகளைப் போல, இதுவும் என் ஏட்டுச் சுரக்காய்தான். ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி வாங்கின, வீடியோ கேமராவைக் கூட.. நான் வருசத்துக்கு ஒருமுறை மட்டும்தான் தொடுற ஆள். சினிமா கேமராவையோ, அதன் ‘செட்’களையோ, அட.. ஒரு சினிமா ஷூட்டிங்கை கூட... நேரில் பார்த்ததில்லை. ஸோ.. எனக்கு புரிஞ்ச வரைக்கும், உங்களை குழப்புவதே என் நோக்கம்! ரெடி??


150 காண்ட்ராக்டர்கள் சேர்ந்து உருவாக்கிய 2,40,000 சதுர அடி பரப்பு செட்தான்: ஜேம்ஸ் கேமரனின் (அல்லது செல்லமாக ‘ஜிம்’) Hell's Gate ( RDA) & Pandora என்ற இரு வர்சுவல் உலகங்கள்! கதை காலை வாறினாலும், இதன் தொழில்நுட்பத்தை தோண்டத் தோண்ட.......

புதுசு புதுசா வார்த்தைகள் கிடைச்சிகிட்டே இருக்கு. அதைத் தோண்டினால்.. இன்னும் பத்து புது வார்த்தைகள் கிடைக்குது. ஒரு கட்டத்தில் ‘போதும்டா சாமி’ன்னு நிறுத்த வேண்டியதா போய்டுச்சி. அந்த அளவிற்கு... அவதார் அட்டகாசம் பண்ணியிருக்கு.

குறிப்பிட்டு சொல்லனும்னா... மொத்தம் ஐந்து தொழில் நுட்பங்களை இதில் உருவாக்கியோ அல்லது உபயோகப் படுத்தியோயிருக்காங்க. இதெல்லாம் ஒன்னுக்கொன்னு தொடர்புடையது. அதனால் வரிசையா சொல்ல முடியாது. மொத்தத்தையும் படிச்சிட்டு, என்னை மாதிரியே நீங்களும் கற்பனையில் ‘இப்படி’த்தான் இருந்திருக்கும்னு ஒரு குத்து மதிப்பா, படத்தை ஓட்டிப் பார்த்துக்க வேண்டியதுதான்.


அவதார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் + க்ராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த நிறுவனங்களில் ரெண்டு கம்பெனிகள் ரொம்ப முக்கியமானவை. 1. ஜார்ஜ் லூகஸின் ILM (Industrial Light & Magic). இரண்டாவது, பீட்டர் ஜாக்ஸனின் WETA Digital (District 9, Lord of the Rings, King Kong).

Prime Focus (Journey to the Center of the Earth) மாதிரி.. சில கம்பெனிகள் (படத்தில் வரும், அந்த ஹோலோக்ராஃபிக் டேபிளும், 180o மானிட்டர் வ்யூக்களையும் உருவாக்கியது, Prime Focus. இந்தியாவிலேயே பெரிய க்ராஃபிக் நிறுவனமாமே? அப்பிடியா?) கம்பெனிகளும் இதில் அடக்கம். இதில் WETA Ditital தான் பெரும்பாலான க்ராஃபிக்ஸை செஞ்சிருக்காங்க.

Digital Asset Management -ங்கற வார்த்தை அத்தனை டிஸைன் சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் உபயோகிக்கறாங்கன்னு நினைக்கிறேன் (என்னுடைய அஸட் மேனேஜ்மெண்டை, நான் கூப்பிடுவது டூல் செட்! ஆனா பாருங்க.. அந்த டூல் செட் எம்ப்டி-யாவே இருக்கு. எதையாவது உருப்படியா பண்ணினாதானே). இந்த DAS-ல் தான், இதுவரை அவர்கள் உருவாக்கிய புல், பூண்டு, புளி என அத்தனை CG கேரக்டர்களையும் (டூல் செட்), க்ராஃபிக் செய்த-ரெண்டரிங் முடிந்த எல்லா காட்சிகளையும் ஸ்டோர் பண்ணியிருப்பாங்க. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அவதாருக்காக ஸ்பெஷலாக ஒரு DAS எழுதிக் கொடுக்க, அதை உபயோகப் படுத்தியது WETA Digital.

உங்க கிட்ட ஒரு, 1 டெராபைட் (1 TB) ஹார்ட் டிஸ்க் இருக்குன்னு வச்சிக்கங்க. அவதார் படத்தின், வீடியோ டேட்டாவை மட்டும் சேர்த்து வைக்க, அது மாதிரி குறைஞ்சது, 1000 ஹார்ட் டிஸ்க் வேணும் (Petabyte). இதுவே... டைட்டானிக் படத்திற்கு எத்தனை ஹார்ட் டிஸ்க் தேவைப் பட்டதுன்னு நினைக்கிறீங்க ஜெண்டில்மென்??? வெறும் 2!


Fusion 3D Camera / Vince-Cameron System : போனப் பதிவில் பார்த்ததுதான். வேற வார்த்தைகளைப் போட்டு எதாவது சமாளிக்க முடியுமான்னு பார்க்கறேன். நம் கண்களுக்கு இடைப்பட்ட தூரம் 60-65 mm-ன்னு பார்த்தோமில்லையா. அந்த தூரத்திற்கு Interocular -ன்னு பெயர்(ராம்).

நம் நிஜ உலகம் முப்பரிமானமாய் தெரியக் காரணம், இப்படி ரெண்டு கண்களும்.. பக்கத்தில் இருந்து, ஒரு பொருளை, ஒரே நேரத்தில் பார்ப்பதால் கிடைப்பது (சுஜாதா சார் கூட... ‘ஒரு கண்ணை மூடிப் பார்த்தால்.. அது 2டி’-ன்னு, எளிமையா சொல்லியிருப்பார்).

இப்ப பத்தடி தூரத்தில், ஒரு கம்ப்யூட்டரை பார்க்கிறோம்-னா, இரண்டு கண்களின் பார்வையும் ஒரேயிடத்தில் குவியும் இல்லையா? அதுக்குப் பேரு ‘Convergence'. அல்லது அந்த பத்தாவதடி தூரத்தை... Convergence -ன்னு சொல்லலாம்(மாம்).

என் வரையும் திறமையைப் பார்த்து, டிஸ்னி-பிக்ஸாரில் கூப்பிட்டாங்க. நாந்தான் போகலை. அப்படியே கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணி அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்கங்க. ‘ஓப்பன் ஸோர்ஸ் ஒன்லி’ முடிவுக்கு அப்புறம், Gimp இன்னைக்குதான் உபயோகப் படுத்த ஆரம்பிக்கிறேன். ரெண்டு கோடு போடுறதுக்குள்ள, கண்ணுல தண்ணி வந்துடுச்சி (அதுதான் படத்துலயும்).

ஆச்சா... இப்ப இந்த Convergence -ன் தூரம் குறைஞ்சிகிட்டே வரும்போதுதான்... நம்ம ‘ரம்பா’ எஃபெக்ட் நமக்கு கிடைக்குது(தாம்). ஆனா நம்மோட கண் பாப்பா, ஆட்டோமேட்டிக்கா அட்ஜட் பண்ணுற மாறி, முந்தா நேத்துக்கு முன்னாடி வரைக்கும், வந்த எந்த 3டி படத்தோட கேமராவும்... ப்ளேஸ்மெண்ட் மாறாது.

அப்ப... ரொம்ப க்ளோஷப்ல  நம்ம விசயகாந்து கண்ணை உருட்டுறாருன்னு வச்சிக்கங்க, நாம டர்ஜ் ஆகறது ஒரு பக்கம் இருந்தாலும்.... அந்த டைம்ல, அவர் படத்தில்.. எந்த ஜென்மத்துக்கும் நடக்காத ஒரு விஷயம் நடக்கும்.

ஐ மீன்... அந்த டெரர் சீனை.., நம் கண்கள்... அப்படியே நம்ம மூளைக்கு, லேப் ப்ராஸஸிங் பண்ண அனுப்பும் போது, நம்ம மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும், ஹோஹோஹோ..... யா!! . அந்த காட்சியை.. அட்ஜஸ்ட் பண்ணி நமக்கு புரிய வைக்க, அட் லீஸ்ட் முயற்சியாவது பண்ணும்.



இந்த சிரமத்தையும் குறைச்சி, விசயகாந்து படம் பார்க்கும் போது, நம் மூளையே எந்தவொரு நொடியும், வேலை செய்யவே கூடாதுன்னு, ஜிம்மும் - வின்ஸ் பேஸும் முடிவு பண்ணி.... கேமராக்களுக்கு இடைப்பட்ட தூரத்தை... பொருளின் ஃபோகஸுக்கு ஏற்ற மாதிரி சுருக்கி-விரிக்கற மாதிரி அந்த கேமரா சிஸ்டத்தை மாத்திட்டாங்க.

எடிட்டிங் டேபிள்ல உட்கார்ந்திருக்கறவர் தப்பிச்சார். ஏன்னா அவருதான்.. இந்த க்ளோஸப்பை முதன் முதலா பார்க்கப் போறவர்.

இது நிச்சயமாக ஒரு ரெவல்யூஸ்னரி இன்வென்ஷன். இனிமே யாரும், நான் டிவிடியில் படம் பார்க்கறேன்னு சொல்லிட்டு வீட்டுலயோ, இல்ல... திருட்டு விசிடியோவெல்லாம் பார்க்க முடியாது. தியேட்டரில் மட்டுமே கிடைக்கக் கூடிய அனுபவம் (அட் லீஸ்ட்.. இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு) மக்களை இது போன்ற கண்டுபிடிப்புகள் இழுத்துக் கொண்டு வரும். கண்ணுக்கு முன் வந்து, ‘டப்பா’வை ஆட்டிக் காட்டுவதுதான் ‘3டி’-ன்னு இன்னும் நினைச்சிகிட்டு இருந்தோம்னா..., அதெல்லாம் ஓல்ட் ஃபேஷனாமே?!

கேமரனின் இன்னொரு ரெவல்யூஸ்னரி ஐடியா என்னவென்றால்..., மொத்த இண்டஸ்ட்ரியையும், 48 ஃப்ரேம்களுக்கு படத்தை எடுக்க-ஓட்ட வைப்பது. நாமெல்லாம் 720p, 1080p, 2K, 4K என்றெல்லாம் ரெஷல்யூஷனை மட்டும் பேசிக் கொண்டிருந்தால், ஜிம்.... ஃப்ரேம் ரேட்டைப் (Frame Rate) பற்றி பேசுகிறார்.

புதிய ப்ரொஜெக்டர்கள் 144 ஃப்ரேம்கள் வரை, ஒரு நொடிக்குக் காட்டக் கூடியதாம் (பழைய ப்ரொஜக்டர்களில் லைட்டா மாடிஃபை செய்யனும்). ஒரு 4K ரெசல்யூஷன் படம், 24 ஃப்ரேமில் ஓடுவதை விட, ஒரு 2K ரெசல்யூஷன் படம், 48 ஃப்ரேமில் ஓடும் போது.. இன்னும் ஸ்மூத்தாக, ஆர்டிஃபெக்ட் குறைவாக இருக்க்கும்.

3டி படங்களுக்கு இந்த ‘jitter’ எஃபெக்ட் அதிகமாகத் தெரியும் (திருட்டு விசிடிலயும், லோ ரெசல்யூசன் காப்பிகளையுமே கண்ணை சுருக்கிப் பார்த்துடுவோம். ஜிட்டராம், ஃப்ரேம் ரேட்டாம், ரெஷல்யூஷனாம்). அதனால்... ஃப்ரேம் ரேட்டை உயர்த்தும் அடுத்தக் கொடியை இவர் வெகு விரைவாக பிடிப்பார் பாருங்கள் (ஏற்கனவே.. மைக்ரோசாஃப்டின் OS-ஐ 3டியில் கொண்டு வரணும்னு அவங்களை நச்சரிச்சிக்கிட்டு இருக்கார்).

எதிர்காலத்தில் தியேட்டரில் 48 ஃப்ரேமில்.. ஒரு படம் ஓட ஆரம்பித்தால்... அதற்கு, இந்த கனடாகாரர்தான் காரணமாக இருப்பார். Avatar - 2 Can't wait to see!


என்னிக்கு, ப்ளான் பண்ணி ஒன்னை செஞ்சிருக்கேன். ஒரே பதிவில் எழுதலாம்னு ஆரம்பிச்சது. ஜவ்வு மாதிரி இழுத்துடுச்சி. இன்னொரு பதிவோடு முடிக்க பார்க்கிறேன். சத்தியமா பிக்ஸார் தொடர் மாதிரி ஆகாது. எதுக்கும் அவங்கவங்க சாமிகிட்ட வேண்டிக்கங்க. ஸோ.......

அவதாரின் அட்டகாசம்.. தொடரும்! (அதெல்லாம் ஒரு தொடரும் வேணாம்னு நினைச்சீங்கன்னா ஓட்டு போட வேணாம். மீ அண்டர்வேர்!! :-) )



116 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ஷண்முகப்ரியன் said... December 19, 2009 10:15 PM

அடேங்கப்பா! ஜேம்ஸ் கேம்ரான் ஆஸ்கார் வாங்கும் போது கூட்டத்திலிருந்து உங்களைக் கண்டிப்பாக மேடைக்குக் கூப்பிடுவார் பாலா.

அவதாரின் கதை பழசு என்ற உங்கள் கொள்கையைப் பற்றி மட்டும் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு.

அது கதை டெகனாலஜி.பிறந்த குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் எடுத்துக் கையாளுவதற்கான டெகனாலஜி!

ஹாலிவுட் பாலா said... December 19, 2009 10:24 PM

சார்... வணக்கம்! :) :)

கதையை டெக்னாலஜி-ன்னு என்னால் இன்னும் ஒப்புக்கொள்ள முடியலைங்க சார். படத்தில் பார்த்தீங்கன்னா... இவங்க எப்படி நாவி மொழியை கத்துக்கிட்டாங்க. அவங்க எப்படி ஆங்கிலம் பேசறாங்க-ன்னு எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டா.. போய்கிட்டே இருக்கும்.

கதையை ஃபேன்டஸி வகையில் சேர்த்தால், (Star Trek, Star Wars) இதையெல்லாம் கேட்க முடியாதுதான். இதெல்லாம் வெளிய வந்துதான் யோசிக்க முடிஞ்சதே தவிர... தியேட்டரில்.. பிளந்த வாயை நான் மூடவேயில்லை.

கடைசியில் எழுந்து கை தட்டி நிறுத்தியதில் நான்தான் கடைசி ஆள்.
திரும்ப திங்கள் கிழமை போறேன். ஆனாலும் கதைக்காக அல்ல.

அறிவு GV said... December 19, 2009 10:57 PM

ஐயையோ... எங்க தலைக்கு என்னென்னமோ ஆய்டுச்சே... ஏதேதோ சொல்றாரே...!
எப்படி பாலா உங்களுக்கு மட்டும் இப்டில்லாம் விஷயம் கெடைக்குது..? ஒட்டு போட்டாச்சு..! நீங்க கண்டின்யு பண்ணுங்க..!
Avatar படத்துலயும் கதை தேடுறீங்க, வேட்டைக்காரன் படத்துலயும் கதை தேடுறீங்க, நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவரா இருப்பீங்க போலிருக்கே...!!!

Kabi said... December 19, 2009 10:57 PM

தல முதல் பேரால என்ன எழுதிரிக்கிங்க...சாமி தல சுத்துடா...
ஏன் இந்த கொல வெறி...

அப்புறம் ஜப்பான்ல ஜக்கி சான் கூப்டாங்க, அமெரிக்கால டிஸ்னி பிக்ஸாரில கூப்டாங்க, கேளம்பிடதிங்க...ஒழுங்கா பதிவு போடுற வேலைய மட்டும் பாருங்க...உங்கள வச்சு நெறைய காமெடி பண்ண வேண்டியதிருக்கு....

தயவு செஞ்சு இந்த அவதார் மேட்டர தொடருங்க....

KISHORE said... December 19, 2009 11:00 PM

வாவ்.. எப்படிங்க இவ்ளோ விஷயம் சேகரிகிறிங்க .. சான்சே இல்ல.. நிச்சயமா நீங்க மனிதர்களை விட பலமடங்கு புத்திசாலியான..ஆனா நல்ல உள்ளம் கொண்ட "நாவி " கள் கூடத்துல ஒருத்தரா தான் இருக்கனும் தான் இருக்கனும்..


என்னது திரும்பவும் ஒரு "மிக்ஸ்சர்"ஆ? நன் வேணும்னா அதுவரைக்கும் மெடிக்கல் லீவ் எடுத்துகிட்டுமா ?

Kabi said... December 19, 2009 11:05 PM

அவதார் படத்தின் கதை பழசுதான்...ஆனா நம்ம ஊர்ல கதையே இல்லாம படம்(வேட்டைக்காரன்) எடுகுறான்களே அத என்ன சொல்லுவிங்க...

உங்கள வேட்டைகாரன் படத்துக்கு விமர்சனம் போட சொல்லணும்...

Kabi said... December 19, 2009 11:10 PM

அப்புறம் எதுக்கு விஜய்காந்து படத்தை போட்டிங்க...
நீங்க டர்ர்ர்ர்... ஆனது இல்லாம, எங்கள வேற டர்ர்ர்ர்...அக்குறதுக...

சென்ஷி said... December 19, 2009 11:12 PM

தலைவரே.. அடுத்த அதகளத்துக்கு தயாராகிட்டீங்க.. நாங்களும் ரெடி..

வெளிச்சத்தில் said... December 19, 2009 11:27 PM

ஹாலிவுட் பாலா, தாங்கள் எழுதியது சுத்தமா புரியவில்லை. புரியும்படியாக எழுதுங்கள்.

KISHORE said... December 19, 2009 11:32 PM

கோபப்படாதிங்க கபி.. என்ன தான் ஹாலிவுட் டெக்னாலஜி உபயோகிச்சி டினோசர், ஏலியன் , நாவி, பாவின்னு உருவாக்குனாலும் நம்ம ஊரு ஒரிஜினல் பீஸ்அ அடிச்சிக்க ஆள் கிடையாதுன்னு சொல்லி இருக்கார் பாலா..

கண்ணா.. said... December 19, 2009 11:33 PM

//கண்ணுக்கு முன் வந்து, ‘டப்பா’வை ஆட்டிக் காட்டுவதுதான் ‘3டி’-ன்னு இன்னும் நினைச்சிகிட்டு இருந்தோம்னா..., அதெல்லாம் ஓல்ட் ஃபேஷனாமே?! //

நச்ன்னு சொல்லிட்ட பாலா..


ஆனா இங்க இருக்கறது ரொம்ப டெக்னாலஜியா இருக்கறதுனால me the escape

இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?

கண்ணா.. said... December 19, 2009 11:33 PM

மேல சொன்னது சும்மா..

well done bala.. keep it up

:))

Nataraj said... December 19, 2009 11:34 PM

எனக்கு புரியலங்க. Since when did people want to watch a movie just for technology? Give me my good ol' Notting Hill, Godfather kinda movies with a good script. அவன் 1000 mega,giga,tera,peta,kada muda byte-ல படம் எடுத்தான்னு பார்க்க முடியுமா?
T2, Titanic எல்லாம் டெக்னாலஜிக்காக மட்டும் யாரும் பாக்கலன்னு நெனைக்கிறேன்.

Kabi said... December 19, 2009 11:46 PM

கிஷோர் நல்லவேள, கிங் காங் (டி.ராஜேந்தர்) படத்த போடம் இருந்தாரே...தப்பிச்சோம்

Senthil Kannan said... December 19, 2009 11:47 PM

Hi bala,

Just now I saw the movie (IMax).. Amazing film.. I luv it. படம் மிக மிக மிக அருமை. உங்களுடைய டெக்னிகல் ஆராய்ச்சி கட்டுரைக்காக வெய்ட்டிங். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 19, 2009 11:57 PM

தல இப்படியெல்லாம் விரிவா எழுத உங்களவிட்டா யாரிருக்கா?முடிஞ்சா என் தலைவனை தொட்டு பாருங்கையா?....
ஃபார்மாலிட்டியாச்சி

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:01 AM

@அறிவு & கபி : அதை நானெங்கே சொன்னேன். கமல் கிட்ட மைக்கை கொடுத்துப் பாருங்க! :)

@அறிவு: கேமரன் படங்களிலோ, பெரிய பட்ஜெட் படங்களிலோ அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாதுதான். :) ஒரு ஆர்வக் கோளாறு!

@கபி : வாங்க வாங்க..! என்னை வச்சி காமெடி பண்ண... மிடிஸ் ஈஸ்டிலும், இந்தியாவிலும்.. ஒரு டீமே இருக்கு. இங்க யாருமே இல்லையேன்னு நினைச்சேன். தேங்ஸுபா! :)

வேட்டைக்காரன் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லீங்க. டிவிடி வந்தாதான் உண்டு! :( :(

அட.. ஆமாங்க..!! எப்பிடி.. டிஆரை மறந்தேன்!!! அடுத்து வேற படம் வரைய வேண்டியிருந்தா.. கிங் காங்தான்!!! :)


@கிஷோர் : லீவெல்லாம் தேவைப் படாது. அப்பப்ப 18+ எழுதிகிட்டே இருக்கலாம்னு இருக்கேன்! :)

அது கரீகட்டு...!! நம்ம ஒரிஜினலை அடிச்சிக்க முடியுமா சொல்லுங்க....?!


@சென்ஷி : அதகளமா???? :) :) கபி..... காமெடி பண்ணனும்னு கேட்டீங்களே...!!! தோ..... இங்கன ஒருத்தர் இருக்காரு பாருங்க! :)


@வெளிச்சத்தில் : நான் தான் தெளிவா ‘குழம்புங்க’-ன்னு சொல்லிட்டேனே தல. எது புரியலைன்னு குறீப்பிட்டு சொன்னீங்கன்னா.. திருத்திக்க வசதியா இருக்கும். இப்படி குத்து மதிப்பா ‘மொத்தமா’ சொன்னா.... எதை விளக்குவதுன்னு நான் குழம்பிடுவேன். ப்ளீஸ்.... தயவு செய்து.. எந்த ஏரியா புரியலைன்னு ஒரு பின்னூட்டம் போடுங்க தல. நிச்சயம் என்னால் முடிஞ்ச வரைக்கும்... அடுத்தப் பதிவில்.. அதை சரி பண்ணப் பார்க்கிறேன்.

நீங்க முதல் பாராவை சொல்லுறீங்கன்னா.... அதை கமல் கிட்டத்தான் கேட்கனும்! :)

ஸ்ரீநி said... December 20, 2009 12:02 AM

தல
நானும் என்னால முடிஞ்சா அளவுக்கு .. அவதார் பத்தி நீங்க சொல்லாதா சொல்லி கொலபீருக்கேன்
கொஞ்சும் உங்க கருத்துகளை சொல்லுங்க
http://sangadhi.blogspot.com/2009/12/avatar.html

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:06 AM

@கண்ணா : மிக்க நன்றி கண்ணா! :)

ஆனா.. மேட்டரைப் பொறுத்த வரைக்கும்.. நானே ஈ’தான். ஒன்னுமே தெரியாம எழுதிகிட்டு இருக்கேனுல்ல!


@நட்ராஜ் : உங்கள் கேள்விக்கு தனியா ஒரு பதில் எழுதறேன். வெய்ட்ட மினிட் ஃபார் டூ நிமிட்.


@செந்தில் : மிக்க நன்றி செந்தில்!!! நான் மறுபடி பார்க்கப் போறேன்...!!! :)


@கார்த்திக்கேயன் ; ஹா.. ஹா. ஹா.... இந்த பார்மாலிடியை... மாத்தி மாத்தி யூஸ் பண்ணுறதில்.... நீங்க டாக்டர் பட்டமே வாங்கிடுவீங்க போல இருக்கே! :)

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:07 AM

@ஸ்ரீநிதி : வந்துகிட்டே இருக்கேங்க..! :)

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:07 AM

சாரி... ஸ்ரீநி.!! ஸ்பெல்லிங் தப்பா அடிச்சிட்டேன்.

KISHORE said... December 20, 2009 12:20 AM

//லீவெல்லாம் தேவைப் படாது. அப்பப்ப 18+ எழுதிகிட்டே இருக்கலாம்னு இருக்கேன்! :)//

எங்க அடிச்சா நான் அடங்குவேன்னு சரியாய் தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.. :(

Kabi said... December 20, 2009 12:22 AM

வேட்டைக்காரன் டிவிடி கெடச்சா பாபிங்கள?, கேபில்ஜி பதிவ படிச்சும் உங்களுக்கு எப்படி வந்தது இந்த தைரியம்.

ஆளாளுக்கு, ஸ்ரீநி, அவதார் பத்தி எழுதுறத பாத்தா...ஜேம்ஸ் கேமரருன் ஆராய்ச்சி பண்ணாத விட இது பெருசா போகும் போல்லிருக்கு...ஹைய்யா...ஜாலி...ஜாலி...

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:38 AM

@நட்ராஜ் : உங்க முதல் கேள்விக்குப் பதில்!!

2012 - படம் பார்த்திருப்பீங்கன்னு நம்பறேன். இன்னைக்கு வரைக்கும் அதோட கலெக்‌ஷன் 712 மில்லியன்.

இத்தனைக்கும் படம் வர்றதுக்கு முன்னாடியே... அதை.. குத்திக் கிழிச்சி தொங்கப் போட்டுட்டாங்க.. அத்தனை விமர்சகர்களும்.

முதல் மூன்று நாளில் செய்த வசூல் மட்டுமே... படத்தின் 200 மில்லியன் பட்ஜெட்டை விட அதிகம். ஏன் எல்லோரும் பார்த்தோம்னு நினைக்கறீங்க?

கதையை... காணாம்னு.... இன்னும் 2-3 பேருதான் கூவிக்கிட்டு இருக்கோம். இத்தனை... லாஜிக் பேசற நான்.. அவதார் பார்த்து வெளிய வந்த பின்னாடிதான் மூச்சு விட்டிருப்பேன்னு நினைக்கிறேன்.

இப்ப டெக்னாலஜியே இல்லாம..... ஒரு படகுல.. ஹீரோவும் ஹீரோயினும்.. போய் கமுந்துடுறாங்கன்னு ‘டைட்டானிக்கை’ லோ பட்ஜெட்டில் எடுத்திருந்தாங்கன்னு வச்சிக்குவோம். அந்தப் படத்தின் பெயராவது நமக்கு தெரிஞ்சிருக்குமா சொல்லுங்க!!!

ஒரு படத்தின் மொத்த ஓட்டைகளையும் மறைக்க மட்டுமில்லாம...... நம்மை அந்த உலகத்துக்குள் கொண்டு போகப் பயன்படுத்துவதுதான் இந்த நுட்பமெல்லாம்-ங்கறது என் கருத்து!!! ஆனா.. கதைக்காகத்தான் படத்தை பார்க்கறாங்கன்னு நீங்க இன்னும் நினைச்சிகிட்டு இருந்தா... இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்கீங்கன்னு தான் அர்த்தம்னு நினைக்கிறேன்.

இண்டிபெண்டண்ட் இயக்குனர்கள்னு ஒரு க்ரூப்பே, ஹாலிவுட்டில் இருக்கு. இவங்க எல்லாம் வருடத்துக்கு 300-400 படங்கள் எடுத்து வெளிய விட்டுகிட்டே இருக்காங்க. எத்தனை அருமையானப் படங்கள். இதெல்லாம்.. வெளிய வர்றதே அபூர்வம். வந்தாலும் யாரும் பார்க்க மாட்டாங்க. அப்படியே தப்பித் தவறி வெற்றி பெற்றிருந்தால்.. அதை எண்ண விரல் கூட விட வேண்டியிருக்காது.

தியேட்டரில் போய்..... மூக்கை சிந்தி.. மூளையை கசக்கற நாட்களெல்லாம் கடந்து போய் வருடங்கள் ஆகிடுச்சிங்க தல.

மெஹாபைட்டில் எடுத்ததற்காக நிச்சயம் படம் பார்க்க மாட்டோம். அந்த மெஹா பைட் எப்படி உபயோகப் பட்டிருக்குங்கறதுதான் முக்கியம்.

என்னைப் பொருத்தவரை.... அவதாரில்.. ஒவ்வொரு பைட்டும்... ஒரு PETABYTE.

Nataraj said... December 20, 2009 12:39 AM

//@நட்ராஜ் : உங்கள் கேள்விக்கு தனியா ஒரு பதில் எழுதறேன். வெய்ட்ட மினிட் ஃபார் டூ நிமிட்//

Will wait, Thanks Bala.
This is what I tweeted and what's my point is:

Admiring a movie for CG/3D infused nano,laser alpha beta technology is like admiring a book by its paper quality. #Avatar

சினிமா விசுவல் மீடியா என்று ஜல்லியடித்தலை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:42 AM

@கிஷோர் : ஹி.. ஹி.. ஹி... ஏற்கனவே.. 3-4 படம் ரெடியா இருக்கு! :)


@கபி : அவரு... வில்லுவை.... ‘ஒரு தடவை பார்க்கலாங்க’ன்னு சொல்லி என்னைப் பார்க்க வச்சவர்! :) :) :)

ஃபிப்ரவரி மாசம், த க்ரானிகல்ஸ் ஆஃப் த பௌ-ன்னு ஒரு பதிவு இருக்கும் பாருங்க! :)

---

இதெல்லாம்.. சிரிக்கறதுக்குங்க தல..!! நான் ஸ்டாப்பா.. 2-3 மணி நேரம் சிரிக்க.. ஒன்னு டி.ஆர் படமெடுக்கனும். இல்லைன்னா விஜய் படம் தான் பார்க்கனும்

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:46 AM

நட்ராஜ்...

பதில் போட்டுட்டேன். மறுபடிக்கா....,

படத்தின் என் பார்வையை நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க. ஆனா... கண்ணுக்கு முன்னாடி.. ஒரு அதிசயம் நடக்கும் போது... அதை பாராட்டாமல் இருக்க முடியலை.

இந்தப் படத்தின்.. மற்ற விசயங்களை விட்டுத் தள்ளுங்க.

ஆனா.... கேமரனின்.. இந்த டெக்னாலஜி இன்வென்ஷன்... வருங்காலத்தில்... நாம் படம் பார்க்கும் முறையை... அப்படியே மாற்றப் போகுது. அது தியேட்டரிலாகட்டும் அல்லது டிவியிலாகட்டும்.

நீங்க இதை.... அடுத்த 1-2 வருடங்களிலேயே பார்க்கப் போறீங்க தல!!!

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:53 AM

I'm sure not admiring this movie, but the creator.

ஒரு படத்தை எடுக்க..., 15 வருடம் காத்திருந்து, அந்தப் படத்துக்காக... புதிதாக டெக்னாலஜியை கண்டுபிடிக்கும் ஒரு இயக்குனரை நாம் எங்காவது பார்க்க முடியுமா சொல்லுங்க.

True Lies பார்த்திருப்பீங்க. கேமரனின் மட்டமானப் படம்னு சொன்னா இதைச் சொல்லலாம். ஆனா... அதில் அவர் உபயோகித்த டெக்னாலஜி...

T2-வில் நாம் பார்த்ததை விட அதிகம்னு சொன்னா நம்புவீங்களா.

Nataraj said... December 20, 2009 12:57 AM

I think our comments crossed each other, Bala. Also my points are not necessarily against your post. Infact I concur with your movie review by and large :)
16000 டாலர்ல எடுத்த paranormal activity மாதிரி படமும் ஓடிக்கிட்டு தான் இருக்கு. செலவே இல்லாம எடுத்த juno இப்போவும் cinemax ல எப்போ போட்டாலும் பார்க்க வைக்குது. script boss script...Leave Godfather, To kill a mocking bird type classics..Even American Pie genre needs good scripts. Not all American Pie movies were a success. Even today, if Roadtrip or Knocked Up comes up in TV, I just couldn't flip the channel. Any time, script, smart dialogues/narration is what attracts people, whatever the genre is..2012 கூட ஓரளவுக்கு decent ஸ்கிரிப்ட் இருந்ததுனால தான் தப்பிச்சுது.
I don't hate technology. What I hate is ppl raving abt a movie like a cult, just based on technical excellence. To me, a movie should be smart whatever the genre is.
Bluray, RedOne camera, This James cameron technology whatever it is, they all augment a good script...Ashte matter..

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 1:03 AM

இது சூப்பர்..!! :) :)

நீங்க என்னை விட அதிகம் பார்ப்பீங்க போல இருக்கே! :)

ஆனா..., ஸ்க்ரிப்ட் உள்ள படங்களின் வெற்றியை விட..., டெக்னாலஜி உபயோகித்தப் படங்களின் வெற்றி... எழுதி ‘முன்னாடியே நிர்னயிக்கப் பட்டது’னு நினைக்கிறேன்.

இல்லைன்னா.. ட்ரேன்ஸ்ஃபார்மர் -2 எல்லாம் மூணு நாளில் 330 மில்லியன் எடுத்திருக்க மாட்டாங்க இல்லையா?!!

அவங்களுக்கு ஹைப் வேணும். And the buzz is been set for long. போட்ட காசை எடுப்பதுதான் வெற்றி. 100 நாள் ஓடுவதில் இனிமேல் இல்லை!

உங்களுக்கு தெரிஞ்ச மேட்டரை.... திரும்ப சொல்லியிருந்தா.. மன்னிக்கனும்.

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 1:06 AM

ஹோ.. நான் எதுவும் அஃபென்ஸா எடுத்துக்கலீங்க தல!! ரொம்ப நாளுக்கு அப்புறம்.. கமெண்டில்.. டிஸ்கஸ் பண்ணுற மாதிரி... ஒரு மேட்டர் கிடைச்சிருக்கேன்னு ஒரு ஆர்வத்தில்.. தட்டித் தீர்த்துட்டேன்.. அம்புட்டுதான்..!!

நல்ல ஆளைப் பார்த்து அஃபென்ஸ்-ன்னு சொன்னீங்க போங்க! :) :)

அனானி கமெண்டை தூக்கினதே... எந்த அனானி கிட்ட பேசுறேன்னு தெரியலையேன்னு தான். நன் டேக்கன்... நெவர்.. எவர்

Nataraj said... December 20, 2009 1:20 AM

I accept. What we call as "opening" for Vijay/Ajit movies is definitely there for Transformer type movies.

எல்லாரும் அவதார் எக்ஸ்பெக்ட் பண்றச்சே நான் "Did you hear about the Morgans" "Sherlock Holmes" எக்ஸ்பெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். மே பி, இது என் ரசனை சம்பந்தப்பட்ட விஷயமா கூட இருக்கலாம். LOTR, Potter படங்கள்ல கவுந்தடிச்சு தூங்கினவன் நான்.
Jude Apatow movies பத்தி ஒரு பதிவு போடுங்களேன். Superbad, Knocked Up, Forgetting Sarah Marshall , 40 yr old virgin அப்படின்னு சொல்லி சொல்லி ஹிட் குடுக்கற கேங். ஹாலிவுட் வெங்கட் பிரபு கோஷ்டிequivalent (or VenkatPrabhu is Kollywood's Jude Apatow). அவங்க படம் எல்லாம் எதுவும் சூப்பர் budget இல்ல. They redefined what a hero should look like, all their heroes are non bodybuilder/hairy/fat heroes..but script நின்னு விளையாடும். விழுந்து விழுந்து சிரிக்கிற காமெடி (கொஞ்சம் ஓவரா இருந்தாலும்), undercurrent-ஆ ஒரு touching ஸ்டோரி அப்படின்னு புகுந்து விளையாடுவாங்க.

Nataraj said... December 20, 2009 1:23 AM

இந்த offence மேட்டர் எனக்கா சொல்றீங்க?

rajeepan said... December 20, 2009 1:28 AM

தலைவா... நீங்கள்ளாம் இங்கவந்து பதிவெழுதவேண்டிய ஆளே..இல்லை...நாசாவில்லை பைல் எழுதவேண்டியவர்...கொண்ணுட்டிங்தெய்வமே...கொண்னுட்டிங்க...

rajeepan said... December 20, 2009 1:47 AM

ஆனாலும் பாலா நீங்க ரொம்ப மோசம் அதாருக்கு இப்படி ரெண்டு மூன்று தொழில்நுட்பபதிவுபேட்டிருக்கீங்க..எங்க இளையதளபதியின் வேட்டைக்காரனுக்கும் ஒரு தொழில்நுட்ப பதிவாவது போட்டிங்களா?..இது கண்டிக்கத்தக்கதாகும்..உடனடியாக வேட்டைக்காரனுக்கு ஒரு தொழிர்நுட்டப்பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்... இப்படிக்கு விஜய்ரசிகர்கள்..

செ.சரவணக்குமார் said... December 20, 2009 1:55 AM

அருமையான பதிவு தல‌

காரணம் ஆயிரம்™ said... December 20, 2009 1:57 AM

டெக்னாலஜி விஷயங்கள் நிறைய சொல்லியிருக்கீங்க... இந்தப்படத்தில் மைக்ரோசாப்டின் தலையீடும், DAS பற்றிய தகவலும் ஆச்சிரியப்பட வைக்கின்றன.. விண்டோஸை யார் 3டியாக மாற்றக்கேட்டிருக்கார் என்றீர்கள்?!

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 1:57 AM

@நடராஜ் : தல.. நீங்களும்... ஜூடின்... ரசிகரா.. வாங்க.. வாங்க.. வாங்க.! உங்களை மாதிரி ஒரு ஆளைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்.

ஜூடின்.. படங்களைப் பத்தி... மொத்தமா.... நாலு இடத்தில்... இதுக்கு முந்தயப் பதிவுகளில் பேசியிருக்கேன். அவர் படங்களின்.. பரம விசிறி நான். 40 year old virgin ஏற்கனவே எழுதியாச்சி. அதில் கூட.. அவரின் எல்லாப் படங்களையும் எழுதனும்னு சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்.

நிச்சயம் எழுதறேங்க. அவர் டைரக்ட் பண்ணினா மட்டுமில்ல. அவர் படங்களை தயாரிச்சால் கூட.. அது என் ஃபேவரிட் படம்தான்!!! :)

Knocked Up எத்தனை முறை டிவியில் போட்டாலும் (கட் வெர்ஷனா இருந்தாலும்) பார்த்துடுவேன்!!

40 year old என் ஆல் டைம் ஃபேவரிட். அக்டோபரில் எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன். ஆர் செப்டம்பர்.

பலா பட்டறை said... December 20, 2009 1:59 AM

//கதையை ஃபேன்டஸி வகையில் சேர்த்தால், (Star Trek, Star Wars) இதையெல்லாம் கேட்க முடியாதுதான். இதெல்லாம் வெளிய வந்துதான் யோசிக்க முடிஞ்சதே தவிர... தியேட்டரில்.. பிளந்த வாயை நான் மூடவேயில்லை.//

ஹாலிவுட் இன் வெற்றி சூத்திரமே இதுதான்... எறும்பை லென்ஸ் வெச்சி வினோதமா காட்டி பயமுறுத்த அவங்கதான் லாயக்கு..
கலக்கல் பதிவு... நன்றி சார்.

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 2:02 AM

@ராஜீபன்: யாருப்பா அது.. சவுண்டு ஓவரா கொடுக்கறது?? :) :) :)

தல.... வேட்டைக்காரன் ரிலீஸ் இல்லீங்க இங்க..!!! இன்னொரு தடவை யாராவது இதைக்கேட்டா அழுதுடுவேன் சொல்லிப்புட்டேன்! :) :)

====

@செ.சரவணக்குமார் : நன்றிங்க தல! :)

----

@காரணம் ஆயிரம் : ஜேம்ஸ்தாங்க. அவர்.. இப்ப மைக்ரோசாஃப்ட் கிட்ட, விண்டோஸை 3டியில் வெளியிட சொல்லிகிட்டு இருக்கார்.

---

@நடராஜ் : எதோ கன்ஃப்யூசன்ல போய்கிட்டு இருக்கு. அந்த ’அஃபென்ஸ்’ மேட்டரை அப்பிடியே விட்டுடுவோம்.! :) :) :)

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 2:07 AM

@பலா பட்டறை : உண்மைங்க தல!! ஆனாலும்.. அந்த மாதிரிப் படங்களும் நமக்கு வேணும்னு நினைக்கிறேன். :)

கருந்தேள் கண்ணாயிரம் said... December 20, 2009 2:09 AM

அது !! அதிரடி ஆரம்பம் !! :) வரிசையா போட்டு தாக்குங்ண்ணா . . . ரொம்ப நல்ல விஷயங்கள். . .அடி பின்னுங்க . . . !!!

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 2:13 AM

வாங்க.. வாங்க..!! கபி.... தோ... இன்னொருத்தர்! :)

Sugumarje said... December 20, 2009 3:04 AM

வரவேற்புக்கு நன்றி... உங்களின் துறை சாஃப்ட்வேர், சரி, அதுல எது? உங்களின் அவதாரின் டெக்னாலஜி விளக்கங்களோடு இந்த எனது பதிவும் உதவும் என்று நம்புகிறேன்...

http://sugumarje.blogspot.com/2009/12/avatar-technical.html

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 3:16 AM

சுகுமார் சார்... படித்தேன்!! ரொம்ப நன்றி!! நீங்க எல்லாம் இப்ப என் ஏரியா வர ஆரம்பிச்சது.. பயத்தை கொடுத்துகிட்டே இருக்கு. நீங்க இந்தப் பதிவுகளை எழுதினா... நம் மக்கள் என் கிட்ட இருந்து தப்பின புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்!! :)
-----

சாஃப்ட்வேரில்.. அப்ளிகேஷன் டெவலப்பர் (அப்படித்தான்.. ஊரை நம்ம வச்சிருக்கேன். எந்த அப்ளிகேஷன் ரன் ஆகுதுன்னு கேட்டுடாதீங்க).

என் விருப்பம், VFX அல்லது கேம் டெவலப்மெண்ட். வாய்ப்பு கிடைக்காமலேயே போய்டுச்சி. இனி.. ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாதுங்கறனால... இப்படி... எதாவது எழுதிகிட்டு இருக்கேன்.

கலையரசன் said... December 20, 2009 3:43 AM

எனக்கு பதிவை படிச்சு.. தலைசுத்தலைங்ணா!!

பின்னூட்டத்துக்கு உக்காந்து பதில் சொல்றீங்க பாருங்க, பத்தி பத்தியா...
யப்பா சாமி! உங்க கால கொண்டாங்க பாலு...

இதை பத்தி போன வாரம் என் ரூம்ல நானு,வினோத்,சென்ஷி,சூர்யா எல்லாம் பேசுனோம்... (என்ன பண்ணிகிட்டே பேசுனோமுங்கறதை டிஜிட்டல் க்லோப் மூலமா ரீவைன்ட் பண்ணி கண்டுபுடிச்சுக்கோங்க!!)

கரைக்டா கண்டுபுடிச்சா... வினோத் ஆடிய "பரதநாட்டியம்", நான் ஆடிய "ரோபோ ஆட்டம்", சென்சி ஆடிய "கரகாட்டம்", ஆதவன் ஆடிய "எக்ஸர்சைஸ் ஆட்டம்" எல்லாம் மெயிலில் அனுப்பி வைக்கப்படும் என்று இங்கு மகிழ்ச்சியுடன் சொல்லிகொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்!!

ஷாகுல் said... December 20, 2009 3:53 AM

அடுத்த வெள்ளி போய் பாத்துரலாம்.

அவதார் - 2 வேற வருதா?

நீங்க தொடர்ந்து எழுதுங்க

Balavasakan said... December 20, 2009 6:20 AM

ஹேய் பாலாண்ணே கலக்கிட்டீக

##இது நிச்சயமாக ஒரு ரெவல்யூஸ்னரி இன்வென்ஷன். இனிமே யாரும், நான் டிவிடியில் படம் பார்க்கறேன்னு சொல்லிட்டு வீட்டுலயோ, இல்ல... திருட்டு விசிடியோவெல்லாம் பார்க்க முடியாது. தியேட்டரில் மட்டுமே கிடைக்கக் கூடிய அனுபவம் (அட் லீஸ்ட்.. இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு) மக்களை இது போன்ற கண்டுபிடிப்புகள் இழுத்துக் கொண்டு வரும். ##

இது ஓவர் அமெரிக்காவில இருந்து கொண்டு எங்களமாதிரி ஒரு ஆங்கிலப்படம் கூட தியேட்டர்ல பாக்காமல் டிவிடி லயும் divx லயும் வண்டிய ஓட்டிட்டு இருக்கிற பாவப்பட்டதுகள மறந்து பதிவுக்கு பமதிவு தியேட்டர்ல பாரு தியேட்டர்ல பாரு ஐமக்ஸ் ல (அப்பிடின்னா என்ன சார் )பாரு என்னு கடுப்ப கிளப்பாதீங்க ஆமா .... அப்பிடின்னா இங்க நீங்க வந்து ஒரு தியேட்டரோ ஐமக்ஸோ கட்டுங்க என்னைப்போல ஒரு ஐந்தாறு பேர் .... எல்லாப்படமும் வந்து பாப்பம் இது எப்படி ஐடியா...
அவதார் கூட எங்கயாவது டவுண்லோட் பண்ணிதான் பாக்கணும்

pappu said... December 20, 2009 6:40 AM

என் வரையும் திறமையைப் பார்த்து, டிஸ்னி-பிக்ஸாரில் கூப்பிட்டாங்க//

இருந்தாலும்,.. என் அளவுக்கும் உங்களால வரைய முடியுமாங்கிறதெல்லாம் சந்தேகம்.

கவுண்டர்- என் திறமைக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிக்ஸார் ல இருக்கவேண்டியவன்டா. ஏதோ என் நேரம் இங்க மாட்டிக்கிட்டேன்.

கிஷோர் மிக்ஸர் போட வச்சிருவேன்னு ஒரு வாரம் முன்ன தான் சொன்னாரு. இது திட்டமிட்ட சதிச் செயல். இது என் வளர்ச்சி பிடிக்காதோரின் சூழ்ச்சி!

கிரி said... December 20, 2009 7:49 AM

Bala you are giving lot of details.. I really appriciated ur interest on these technical things.

Today only I booked for Avatar in IMAX cinema. I will write my exp soon.

This is the first time Im going to watch it in Imax so ..double damaka! :-)

கிரி said... December 20, 2009 7:57 AM

Sorry its Max not Imax.. big theater in SG.

ஊர்சுற்றி said... December 20, 2009 8:15 AM

இத இத இதத்தான் தேடிட்டு இருந்தேன்.

அக்பர் said... December 20, 2009 9:19 AM

படிச்சா தலை சுத்துது பாஸ்.

இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்களா.

Subash said... December 20, 2009 9:35 AM

//இன்னொரு பதிவோடு முடிக்க பார்க்கிறேன். சத்தியமா பிக்ஸார் தொடர் மாதிரி ஆகாது. எதுக்கும் அவங்கவங்க சாமிகிட்ட வேண்டிக்கங்க. ஸோ.......//

kadavulee, intha pathivu atleast oru 50+ posts aha vendikareeeee

Subash said... December 20, 2009 9:41 AM

//ஒரு படத்தின் மொத்த ஓட்டைகளையும் மறைக்க மட்டுமில்லாம...... நம்மை அந்த உலகத்துக்குள் கொண்டு போகப் பயன்படுத்துவதுதான் இந்த நுட்பமெல்லாம்-ங்கறது என் கருத்து!!!//

Agreed anna,
unmaithan, story yarukku venu, story venumna detail aha novel vasikatum. padathila visual treat perfect aha iruntha sari, athu tha kati potu vaikanum nambala :)

padam paka pona namma ulagatha maranthu irukanum, screen maru pakathuku pogatium atleaST pakathilayavathu varanum. apadi iruntha athu eanaku super padam.

may be thats y i like transformers 2 and terminator 4!! hehe lol

Subash said... December 20, 2009 9:42 AM

ini tamiliz pin mun site ootangal varumenpathai ithaal arivipathil perumahilchi kolhireen, ;P

Kabi said... December 20, 2009 9:45 AM

என்னது வில்லு படத்த, கேபில்ஜி உங்கள பக்க வச்சாரா?...இதவிட டம்ளர் தண்ணில உங்கள குதிக்க சொல்லிர்கலம்...என்ன கொடுமை இது...ம்ம்ம் யாருக்கு தெரியும் அவருக்கு நீங்க என்ன டார்ச்சர் கொடுதிங்களோ...

நடராஜோட கமெண்ட பாத்த, எது உங்கள பப்பி செம் ஆக்கமா விமடமாடர் போலிருக்கு, ஆனா இதுக்குல நீங்க பயப்பட கூடாது, பயந்த எப்படி காமெடி பண்றது...

அப்புறம், அவதார் படம் பல பெற பதிவு போடவேச்சுருக்கு...ம்ம்ம் நானு ஒரு பதிவு போடலாம் போல...ஆனா பொது நன்மையா கருதி அத செய்ய வேண்டான்னு பாக்குறேன்...

தல அத தானே நானு சொல்லுறேன், நீங்க வரிசையா போட்டு தாக்குங்க, அப்ப தானே காமெடி பண்ண முடியும்.

Subash said... December 20, 2009 9:46 AM

3D Monitor
-----------

ipa 22" 3D LCD HD Monitor $350 kku buy.com la irukeeee hehe

http://www.buy.com/retail/usersearchresults.asp?querytype=home&qu=3d+monitor&qxt=home&display=col

ithu vanthu 6 months ahi irukumnu nenakaren.
Silver screenukku eapavum aapu readyaha irukkum :P lol

வினோத்கெளதம் said... December 20, 2009 9:48 AM

தல என்போல் பலப்பேரின் அறிவுகண்ணை அடிக்கடி திறந்து விடுறதுக்கு நன்றி..
அருமையான பதிவு..சான்சே இல்ல..இதேப்போல் பல பதிவு தங்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பார்கிறேன்..

//கரைக்டா கண்டுபுடிச்சா... வினோத் ஆடிய "பரதநாட்டியம்", நான் ஆடிய "ரோபோ ஆட்டம்", சென்சி ஆடிய "கரகாட்டம்", ஆதவன் ஆடிய "எக்ஸர்சைஸ் ஆட்டம்" எல்லாம் மெயிலில் அனுப்பி வைக்கப்படும் என்று இங்கு மகிழ்ச்சியுடன் சொல்லிகொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்!!//

அடப்பாவி கலையரசா..உக்கார்ந்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்த 'வடை சுட்ட ஆயாவை' விட்டுவிட்டாயே..

Kabi said... December 20, 2009 9:52 AM

அப்புறம் இந்த ஆராச்சி எல்லாம் முடிஞ்ச பின்னாடி எக்ஸாம் வச்சுடதிங்க, ஸ்கூல் படிக்கும் போதே சைன்ஸ் எக்ஸாம்னவே நம்மளுக்கு ஜுரம் வந்துடும்...

வினோத்கெளதம் said... December 20, 2009 9:52 AM

தல கால் பண்ணேன் எடுக்கவே இல்லை..பிஸியா..!!
இல்லை வேற எதாச்சும் நம்பர்க்கு கால் பண்ணேனா..?

VIJAY said... December 20, 2009 10:17 AM

அவ்வ்வ்வ்...ஒன்றுமே புரியலையே. தலய சுத்தி ஒரே பூச்சியா பறக்குது. நல்லாதான் எழுதி இருக்கிங்க. ஆனா கொஞ்சம் பெரிய லெவெல் ஆளுங்களுக்கு எழுதின மாதிரி தெரியுது. முயற்ச்சி பண்றேன் புரிந்து கொள்ள.

Siddharthan said... December 20, 2009 10:43 AM

my friend you did a very gud job.
you must have done lot of home work for even any small writing like this. teach me.
i feel you a real smart in cinemas.
i want to follow you.
i'm yazhinisiddharth.blogspot.com

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:19 PM

@கலை : நம்மை மதிச்சி.... மக்கள் பின்னூட்டம் போடுறதே பெரிசு. அதுக்கு பதிலா.. ஒரு நன்றி கூட சொல்லலீன்னா எப்படிங்க?! :)

நாம என்னப் பிரபல பதிவர்களா என்ன? அங்கதான்.. பதில் வராதுன்னு தெரிஞ்சும் பின்னூட்டம் போடுவோம். போன வாரம் நடந்த மேட்டர் எனக்குத் தெரியுமே!!!!!! :) :) :) ஒழுங்கா.... மேட்டரை மெயில் பண்ணுங்க...!


----

@ஷாகுல் : அவதார் 2 பத்தி... சும்மா ஒரேயொரு வார்த்தை சொல்லியிருக்கார். இன்னும் அஃபீஷியல் இன்ஃபோ வரலை. படம் வெற்றியடைஞ்சா... இதன் ட்ரையாலஜியை எடுப்பார்ன்னு சொல்லியிருக்காங்க.

வெற்றியடையனும்னு வாழ்த்துவோம்....!!!

------

@பாலவாசகன் : அந்த வரிகள் எல்லாம்... வாய்ப்பிருப்பர்வர்களுக்கு மட்டும்தான் நண்பா. :( :( :( ரியல்லி ஸாரி..! உங்க மனசு கஷ்டப்பட்டிருந்தால்!!

------

@பப்பு : பார்த்தேன் பார்த்தேன். ஆமா நீங்களும் பிரபலமாய்ட்டீங்களோ??? :) :)

-----

@கிரி : நன்றி கிரி. படம் ஐமேக்ஸிற்காக டிஜிடலா என்ஹேன்ஸ் பண்ணியிருக்காங்க. ரெகுலர் தியேட்டருக்காக ஸ்ட்ரெச் பண்ணியிருக்காங்க. தியேட்டரில் பார்க்கும் வரைக்கும்... பெட்டர்! என்ஜாய் பண்ணுங்க.

------

@ஊர்சுற்றி : ரைட்டு! :) :) இன்னும் எழுதிடுவோம்!! :)

------

@அக்பர் : கஷ்டப்பட்டது... WETA தாங்க. கேமரன் படம் எடுத்ததை பார்த்திருந்தீங்கன்னா.. சிரிச்சிடுவீங்க!! :)

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:30 PM

@சுபாஷ் : சர்தான்.. வர்ற.. ஒன்னு ரெண்டு பேரையும் துரத்திடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களாக்கும்! :)

கதை யாருக்கு வேணும்னு சொல்லீட்டீங்களே? :( :( ...!! சுமாராவாவது வேணாமா??? ஆனா எனக்கும் கூட அப்படிதான் தோணுது....! கதை யாருக்கு வேணும்.!!! :)))

ஆஹா... சூப்பர்.. கலக்குங்க..!!! உங்க டெக்னாலஜி பதிவுகளுக்கு வெய்ட்டிங்!! :) :)



3டி மானிடர் வந்து ரொம்ப நாள் ஆய்டுச்சிங்க சுபாஷ். அது வர்றதுக்கு முன்னாடியே.. 3டி கண்ணாடிகள், சாஃப்ட்வேரோட வந்திருந்துச்சி..!! அப்ப அதுக்கான.. கேம்ஸ் எல்லாம் வரலை. இப்ப அவதார் கேம் 3டி-ல்
வந்திருக்கு.

ஆனா.. Nvidia கார்ட்.. செம காஸ்ட்லி. $300-ன்னு நினைக்கிறேன்.
-----

@கபி : இத்தனைக்கும்.. ரொம்ப நாள் கழிச்சி... அவரை கண்டுபிடிச்சேன். சரியா 8 வருஷம் கழிச்சி!! அந்த நேரத்தில் பழியெடுத்துட்டார்! :) :)

நாம என்னிக்குங்க பயந்தோம். காமெடி பீஸ் ஆகி ரொம்ப நாள் ஆச்சி. எதையாவது கண்டுகிட்டேனா என்ன? ஹி.ஹி.ஹி..!!

மக்கள் நலனையெல்லாம் பார்த்தா.. வேலைக்காகாது. ஒழுங்கா பதிவை போடுங்க..! வெய்ட்டிங்
----

@வினோத் : நீங்களாவது.. அந்த ஆட்ட மேட்டரை... மெய்ல் பண்ணுங்க ப்ளீஸ்!!! உங்களைத் தான்.... அண்ணாச்சி படத்தில் பார்க்க முடியலை!!!!

இனிமே இன்னொன்னு எழுதினா.. கிஷோர் ஓடிடுவார் போல இருக்கே...!!

-----

@விஜய் : எந்த ஏரியா புரியலைன்னு.. குறிப்பிட்டு சொல்ல முடியுமா விஜய். நான் திரும்ப அதை க்ளியரா எழுத முயற்சி பண்ணுறேன்.

---

@சித்தார்த் : உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி. பதிவுக்காக மட்டுமில்லாம.... விருப்பமான ஏரியாங்கறனால.. இன்னும் கொஞ்சம் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுறேன். அவ்ளோதான்.

மத்தபடிக்கு ஸ்மார்ட் மேட்டரெல்லாம்.... ஓவர் ஹைஃப். மீ நத்திங்...

அஹோரி said... December 20, 2009 12:33 PM

நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டேன். நன்றிங்கோ .

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:35 PM

யு.. வெல்க்கமுங்கோ...!

Kabi said... December 20, 2009 12:43 PM

தல சும்மா ஒரு காமெடிக்கு சொன்னேன், ஸ்கூல் படிச்சப்ப தமிழ் வதியார் என்ன வச்சு பல தடவ காமெடி பண்ணிருகாறு. நம்மளுக்கு தமிழும் தகராறு இங்கிலீஷ் தகராறு...இதுல பதிவு எங்க போடுறது.

இதையும் மீறி, பதிவு போட்டேன்னா, பதிவு போடுற நண்பர்கள் (நிங்களும் தான்), சேது மாதிரி அலைய வேண்டியது தான்...

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 12:50 PM

அட.. இலக்கணமாவது.. இலக்கியமாவது. நம்ம ப்லாகுங்க. நாம எழுதுறதுதான் இலக்கியம்.

நான் சிலபேரை எல்லாம்... அவங்க எழுதுற ‘காமெடி’காவே ஃபாலோ பண்ணுறேன் (ப்ரைவேட்டா)!!

அதையெல்லாம் படிச்சிப் பார்த்தீங்கன்னா.. உடனே.. ஆரம்பிச்சிடுவீங்க! :) என்னையே பதிவுலக மக்கள் பார்த்துட்டாங்க. இன்னும் அசரலை. நீங்க ஜுஜுபி..!! வாங்க..வாங்க.. ஜோதியில ஐக்கியமாகுங்க!! :) அது எந்த ஜோதியா இருந்தாலும் சரி! :0

அண்ணாமலையான் said... December 20, 2009 12:57 PM

ரொம்ப கரெக்ட் சார்

Kabi said... December 20, 2009 1:01 PM

தல உங்களுக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க்கு சாப்புடுறது மாதிரி போல...
பின்னுடம் போடுறதுக்கே நாக்குல நோர தள்ளுது...இதுல பதிவு போடனுமா...யப்பா, எத்தன எழுத்து...எத்தன வர்த்த...எத்தன வரிகள்...எத்தன...எத்தன....நெனச்சாவே கண்ணா கட்டுது...நமகுல பின்னுடம் போடுறதே பதிவு போடுற மாதரிதான்...

pappu said... December 20, 2009 1:12 PM

நான் சிலபேரை எல்லாம்... அவங்க எழுதுற ‘காமெடி’காவே ஃபாலோ பண்ணுறேன் (ப்ரைவேட்டா)!!///

ஹி.. ஹி..

நான் யாருன்னாலும் பப்ளிக் தான். சில பேரெல்லாம் நீங்க சொல்லுற காமெடி இல்ல .. ‘கண்’ணு மண்ணு தெரியாத காமெடிகளுக்காக ஃபாலோ பண்ணுறென்.
ஹி.. ஹி.. அய்யோ அய்யோ..

pappu said... December 20, 2009 1:16 PM

நானே 50 பதிவு போட்டுட்டேன். பாலா ஓட்டுறீங்கல்ல? என் குவாலிட்டிக்கே இவ்வளவு தாங்குதே! நீங்களும் வாங்க.மார்கெடிங் செலவ பாலா ஏத்துக்குவாரு.

ஹாலிவுட் பாலா said... December 20, 2009 1:34 PM

@அண்ணாமலையான் : நான் என்னைக்கு எதைங்க சரியா சொல்லியிருக்கேன்??? இப்படியெல்லாம் நடுவாந்திரமா சொன்னா.. கன்ஃப்யூஸ் ஆய்டுவேன்.

@கபி : பரவாயில்லீங்க முயற்சி பண்ணிப் பாருங்க தல! பப்பு எல்லாம் 50 எழுதிட்டாரு.! :) :)

@பப்பு : பப்ளிக்கா ஃபாலோ பண்ணுறதில் பிரச்சனையில்லை. ஆனா.. அவங்களைப் பத்தி.. என்னிக்காவது பதிவில்... கிண்டல் அடிச்சோம்னு வச்சிக்கங்க. அவங்க கஷ்டப் படுவாங்க. அதான் :)

கிண்டல் பண்ணலை. அந்த பதிவில் யாருக்கும் பதில் சொல்லலையே.. அதான் கேட்டேன்.

Kabi said... December 20, 2009 2:36 PM

பதிவு போடா ஆச பட்டேன்னு சொன்னது ஒரு குத்தமாயா!, விட்ட கைல ஒரு பேப்பர் பேனா கொடுத்து, வானத்த பாத்து யோசிக்க விட்டுவிங்க போலிருக்கு...

செரிங்கையா, நான் பதிவு போடுறேன், ஆனா எப்ப போடுவேன், எத பத்தி போடுவேனு சொல்லமாட்டேன் (ஏன்ன எனக்கே தெரியாது)....யப்பா எஸ்கேப்பு...

பப்பு நீங்க 50 பதிவுகள் போட்டதுக்கு வாழ்த்துகள்...

அப்புறம் தல, நீங்க பப்ளிக்கவே நக்கல் அடிக்கலாம், நிச்சயம் வருதபடமாட்டேன், ஏநா நம்மளுக்கு இந்த மானம் மாரியாத்தா, சுடு சுலயுதம்னு ஒன்னும் கெடையாது, அதெல்லாம் ஸ்கூல், காலேஜ் படிக்கும் (ஸாரி போகும்) போதே, வேரோட புடிங்க ஏறுஞ்சிடாங்க...

gulf-tamilan said... December 20, 2009 2:40 PM

இங்கு(சவுதி)தியேட்டரே கிடையாது,:(((
எல்லாம் டிவிடி/நெட்தான்.கொஞ்சமா புரிகிற மாதிரி உள்ளது!!.அடுத்த பதிவும் போடுங்க!!!

கோபிநாத் said... December 20, 2009 3:46 PM

தல இப்போதைக்கு ஓட்டு போட்டாச்சி...பதிவு படிச்சாச்சி..பின்னூட்டத்தை நாளைக்கு படிக்கிறேன். ;))

இரவு கவி said... December 20, 2009 11:02 PM

sterday i wathced this movie in IMAX-3D. In simple words if i want to tell about this movie means i have never seen a movie like this before in my life. i'm planning to go one more time. Please watch the movie atleast one time that also in 3D.

guys do not miss this movie thats what i can say.

sorry to type in english

இரவு கவி said... December 20, 2009 11:25 PM

kalukkureenga balaaa.

இரவு கவி said... December 20, 2009 11:41 PM

Even i have seen Juno, 40 years old virgin, god father kind of movies. But there is big difference between this movie & other movies after watching avatar just my body came out from the theater.

normally i dont see stories in the movies :-0. i'm watching movies just to relax. that i got from this movie.

பேநா மூடி said... December 21, 2009 1:34 AM

// (சுஜாதா சார் கூட... ‘ஒரு கண்ணை மூடிப் பார்த்தால்.. அது 2டி’-ன்னு, எளிமையா சொல்லியிருப்பார்).//

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியல்லை அல்லது புரிந்து கொள்ள முடியவில்லை..., ஒரு கண்ணை மூடி கொண்டு பார்த்தாலும் அது நமக்கு 3 டியாக தானே தெரிகிறது...,

அண்ணாமலையான் said... December 21, 2009 1:47 AM

நன்பா டாப்பா எழுதனுதால டாப்ல வந்துட்டீங்க.. வாழ்த்துக்கள்.

ஸ்ரீமதி said... December 21, 2009 5:20 AM

இப்போதான் அவதார் பத்தின உங்க ரெண்டு பதிவையும் படிச்சேன்.. சூப்பர்... இவ்ளோ பெரிய பதிவும் போட்டு ஒவ்வொருத்தருக்கும் பதிலும் சொல்லி.. அருமை அண்ணா :)))

நாஞ்சில் பிரதாப் said... December 21, 2009 5:21 AM

அடேங்கப்பா...தலைவா சான்ஸே இல்ல. பின்னுறீங்கப்போங்க...

Mayooresan said... December 21, 2009 7:43 AM

கையை கொடுங்க சார்...! கடிக்க இல்லை... அன்பாக பற்றிக் கொள்ளத்தான். இப்படியான நுட்ப விடயங்களைப் படிக்க ஆங்கில டிக்சன்றி வைத்து புரட்டவேண்டிய காலம் போயி அருமை அண்ணன் ஹாலிவூட் கண்ட கணல் பேரரசு பாலாவின் கருணையால் எல்லாம் தாய் மொழியிலேயே.. அதுவும் கலக்கல் க்ராபிக்ஸ் படங்களுடன் ;)

பாகம் இரண்டு எப்போ எப்போ???

U.P.Tharsan said... December 21, 2009 9:46 AM

ஆஹா 3D என்னவோர் விளக்கம்..... நன்றி

VIJAY said... December 21, 2009 10:31 AM

பாலா...உங்கள் பதிவு புரியவில்லை எனில் அதற்க்கு காரணம் நீங்கள் மட்டும் இல்லை. முதலில் ஒரு கண்ணை மூடி பார்த்தால் 2டி என்பது கூட எப்படி என்று எனக்கு தெரியல. இரண்டு கண்ணால் பார்ப்பதைதானே ஒரு கண்ணாலும் பார்ப்போம்? அப்புறம் எப்படி 2டி, 3டி என்று சொல்றிங்க?
அடுத்து...இது வரை நான் 3டி படம் ஒன்றும் பார்த்தது இல்லை. (ரொம்ப பல்லை கடிக்காதிங்க. நொறுங்கிட போகுது. இன்னும் நிறைய கடிக்க வேண்டும்). Imax தியேட்டர் எல்லாம் போனது இல்லை. பார்க்கும் ஆங்கில படம் எல்லாம் சப் டைட்டில் உதவியுடன் சிஸ்டத்தில் மட்டும்தான். அப்புறம் எங்கிருந்து உனக்கு விளங்கும் நான் சொன்னது என்று நீங்கள் சொல்வது எனக்கு நல்லா கேட்குது. எனவே நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள நான் பயணிக்க வேண்டிய பாதை வெகு தூரம். நீங்கள் போய்ட்டே இருங்க. நான் தட்டு தடுமாறி எப்படியாவது வந்து சேர்ந்துடுவேன்.

கனவுகளின் காதலன் said... December 21, 2009 11:45 AM

நண்பரே,

தொழில்நுட்ப விபரங்கள் எனக்கு அவ்வளவாக உறைக்காவிடிலும், மிகுந்த அக்கறையுடன் அதனை எழுதும் உங்களை நான் பாராட்டுகிறேன். உற்சாகத்துடன் தொடருங்கள்.

Kabi said... December 21, 2009 11:59 AM

அட நம்ம மாதிரி நெறைய பேர் இருக்காங்க

எனக்கு மட்டும் தான் ஒனும் புரியலன்னு நெனச்சிட்டு இருதேன், தல நீங்க தொடருங்க...

butterfly Surya said... December 21, 2009 1:52 PM

இப்பவே கண்ணை கட்டுதே...

Cable Sankar said... December 21, 2009 1:55 PM

பாலா கலக்கிறியே..

வண்டிக்காரன் said... December 21, 2009 2:05 PM

ஒரு நிஜ கலைஞனை வம்பிற்கு இழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன் (புரட்சி கலைஞனை இல்லப்பா).
ஃப்ரேம் ரேட்டை வச்சு விளையாடாத சினிமாக்காரன் இந்தியாவிலேயே கம்மிதான் பாலா..

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 2:35 PM

@கபி : சொல்லிட்டீங்க இல்ல...?!!! பாருங்க வேடிக்கையை!! ஸ்டார்ட் மீஜிக்! :)

எப்ப தோணுதோ அப்ப எழுதுங்க போதும். அந்த முதல் கணம் ரொம்ப முக்கியம். ஜஸ்ட் வெயிட்!!

=======
@கல்ஃப்-தமிழன் : தல.. இது புது மேட்டரா இருக்கே?! நெஜமாவே சவுதியில் ஒரு தியேட்டர் கூட கிடையாதா? எப்படி எல்லாரும் படம் பார்க்கறீங்க? ஹைய்யோ.. சாமி... ஃப்ளைட் மாத்தக் கூட உங்க ஊருக்கு வரமாட்டேன்.

========

@கோபி : ரைட்டு..!! மக்கா... பின்னூட்டத்தைக் கூடவா படிக்கறீங்க?! எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது! :)

========

@இரவு கவி : தல.. நிச்சயம் ஸ்க்ரிப்ட்தான் முக்கியம். அப்புறம்.. இந்த டெக்னாலஜிங்கறது என் கருத்து. அதைவிட இப்ப முக்கியம் மார்க்கெட்டிங் & ஹைஃப். இது ரெண்டும் இல்லாம.. இந்த மாதிரிப் படமெல்லாம் தாக்குப் பிடிக்காது.

பாருங்க..!! படம்.. எதிர்பார்த்த அளவுக்கு... வசூல் ஆரம்பிக்கலை. ஆனாலும்.. போட்ட காசை... மொத மூணு நாளிலேயே எடுத்துட்டாங்க.

========

@பேநா மூடி : வெய்ட்ட நிமிட் ஃபார் 4-5 அவர்ஸ்! :)

========

@அண்ணாமலை : நீங்க என்னங்க தல. அப்பப்ப வந்து.. சம்பந்தமில்லாம பின்னூட்டறீங்க! :) :)

========

@ஸ்ரீமதி : பாராட்டிற்கு நன்றிங்க!!! பதில் சொல்லிகிட்டு இருக்கேன்னா... இன்னும் பிரபலமாகலைன்னு அர்த்தமாம். பிரபலம் ஆக வேண்டாம்னுதான்..... இந்த முடிவு. அப்புறம்.. கமெண்ட் போட்டவங்களுக்கு என்ன மரியாதை சொல்லுங்க! :)

========

@நாஞ்சில் : கபி.... இன்னொருத்தர்.. இங்கயிருக்காரு.!!!

========

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 2:44 PM

@மயூரேசன் : சர்த்தான்...!! என்னை “பதிவுலக காமெடி பீஸா மாத்திட்டாங்களோ”-ன்னு நினைச்சி கிட்டு இருந்தேன்.

பேரரசு-ன்னு சொல்லி.. அதை கன்ஃபார்ம் பண்ணிட்டீங்க! :) :)

பாராட்டிற்கு நன்றி மயூரேசன். ரொம்ப நாளுக்கு அப்புறம் ஏரியா பக்கம் வந்திருக்கீங்க

========

@விஜய் : பேநா மூடிக்கு சொன்ன பதில் விஜய்!!! :) :) :)

இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. ஏண்டா இந்தக் கேள்வியை கேட்டோம்னு நீங்க ஃபீல் பண்ணற அளவுக்கு ஒன்னு எழுதி வச்சிருக்கேன்!!! கேர் ஃபுல்! :)

========

@கனவுகளின் காதலன்: நோ.. ப்ராப்ளம்!! எனக்கும்தான் ஒன்னும் புரியலை!!! ஆனா.. எதாச்சும் வெளிய சொல்லுறனா? :) :)

========

@கபி: யு டூ.. வெய்ட்ட நிமிட்!

========

@பூச்சி : இன்னா தல.. நீங்களே இப்டி சொல்லலாமா? நாங்கெல்லாம் ஹாலிசட்டி! நீங்க உலக அண்டா! :)

========

@கேபிள் : வாங்க.. வாங்க..! நீங்க ஒன்னுதான் பாக்கி!! :) :)

========

@வண்டிக்காரன் : தல.. நீங்க மேட்டரை வேற மாதிரி எடுத்துக்கிட்டீங்க.

ஃப்ரேம் ரேட்டில் எல்லாரும் விளையாடுறாங்க!!! இல்லைன்னு சொல்லலை.

ஆனா.. அவங்க எத்தனை ஃப்ரேமில் எடுத்தாலும்.. தியேட்டரில்.. 24 ஃப்ரேமில்தானே காட்டியாகனும்.

அதை மாத்தி.... தியேட்டரிலேயே... 48 ஃப்ரேம் வேகத்துல ஓட விடுறதுதான் மேட்டர்.

அப்புறம்.. தேவையில்லாம.... நான் டெக்னீஷின்களை கிண்டல் பண்ணுறதில்லை. ஐ லவ் தர் வொர்க்!!! நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்!!

ஒரே இங்கிலி பீஜா வர்து!!!

வண்டிக்காரன் said... December 21, 2009 2:51 PM

ச்சும்மா ..நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்!!

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 2:53 PM

ஹி. ஹி.. ஆல் ரைட்!! இனிமே இதைச் சொல்லிகிட்டே கிண்டல் பண்ணிடலாம்! :)

gulf-tamilan said... December 21, 2009 3:05 PM

//எப்படி எல்லாரும் படம் பார்க்கறீங்க? ஹைய்யோ.. சாமி... ஃப்ளைட் மாத்தக் கூட உங்க ஊருக்கு வரமாட்டேன்//
:(((
எல்லாம் திருட்டு விசிடி,டிவிடில்தான்.இப்போது டொரண்ட்ஸ் மூலம்.வேற வழி இல்லை.

gulf-tamilan said... December 21, 2009 3:07 PM

Avatar - டெக்னாலஜி 02 எப்போது??

gulf-tamilan said... December 21, 2009 3:10 PM

வந்ததுக்கு 100 அடிக்கறேன்.

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 3:10 PM

டெக்னாலஜி 02-க்கு முன்னாடி.. இன்னொரு குட்டி டெக்னாலஜி எழுத வேண்டிய கட்டாயம்.

அது இன்னைக்கு... 02-ம் அல்மோஸ்ட் ரெடி!!! ஆஃபீஸ்லயும்.. அப்பப்ப வேலை செய்யறதால(!) பிஸி! :) :)

gulf-tamilan said... December 21, 2009 3:10 PM

நாந்தான் 100 !!! :)))

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 3:10 PM

ஹா.. ஹா.. ஹா.. 100 - நாந்தான்!!!

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 3:11 PM

நூப்..!! நான்!!! :) :)

gulf-tamilan said... December 21, 2009 3:12 PM

:((((((((((((((((((((((((

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 3:16 PM

மீ ஸோ ஸாரி! :(

எனக்கெல்லாம் 100 வர்றதெல்லாம் அதிசயங்க! அடுத்ததுக்கு ரொம்ப நாள் வெய்ட் பண்ண வேண்டியிருக்கும்! :(

Kabi said... December 21, 2009 3:32 PM

என்னது ஆபீஸ்ல வேல செயரிங்கள...என்னாச்சு தல நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்திங்க, இன்னிக்கி என்னாச்சு?, உடம்பு சரி இல்லையா என்ன?

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 3:35 PM

இனிமேலும் வேலை செய்யலைன்னா.. இனிமே.. வேலையே செய்யத் தேவையிருக்காது.

அதான்!!!! :)

jackiesekar said... December 21, 2009 4:27 PM

பாலா.. நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவை படித்து வருகின்றேன்...மிக விரிவாய் எழுதுகின்றீர்கள்.. வாழ்த்துக்கள்...

Sugumarje said... December 21, 2009 4:46 PM

நண்பரே...திரைப்படத்துறை - சினிமா தொழில் நுட்பம் என்ற தலைப்பிலான எனது பதிவைக்காண அன்புடன் அழைக்கிறேன்.
http://sugumarje.blogspot.com/2009/12/blog-post.html

ஹாலிவுட் பாலா said... December 21, 2009 5:34 PM

@ஜாக்கி : நீங்க பிஸின்னு தெரியும். மிக்க நன்றி! :)

@சுகுமார்ஜி: பார்த்து.. பின்னூட்டம் போட்டாச்சிங்க! :)

அஹோரி said... December 22, 2009 3:21 AM

படம் அட்டகாசம்.

அந்த படத்த 3D ல பாத்துட்டு வந்ததிலிருந்து ஒரே 'தலைவலி' .

என்னன்னு ... கூகிள் ல விசாரிச்சா ...

http://3dmoviedude.com/?p=234

விளக்கமா உங்க ஸ்டைல்ல இத பத்தியும் எழுதுங்க.

ராஜ நடராஜன் said... December 23, 2009 3:39 AM

அய்யோ!கடைசியா நீங்க போட்ட இடுகையிலிருந்து இங்க வர்றதுக்குள்ள சினிமா தியேட்டர் பக்கம் போகக்கூடாதுங்கிற என்னோட விரதம் கலைஞ்சிடும் போல இருக்குதே:(

K.S.Muthubalakrishnan said... December 26, 2009 12:56 AM

AWESOME details from your end. we need more more

ஹாலிவுட் பாலா said... December 26, 2009 5:18 PM

முத்துபாலகிருஷ்ணன் : ரொம்ப நன்றிங்க தல! :)

டுபாக்கூர்கந்தசாமி said... January 29, 2010 1:36 PM

தல இன்னைக்கு தாங்க தல 3Dல போய் படம் பாத்தேன் அட அட கண்ணுக்கு என்ன விருந்து கலக்கிட்டாங்க எப்படி தான் ஒரு உலகத்த புதுசா சிருஸ்டிச்சு செஞ்சி என்ன ஒரு கற்பனை திறன்.

கதை என்னவோ நம்ம ஊரு கத தான் ஆனா அத ட்ரீட் பண்ண விதம் மிரட்டிச்சி. சரி தல உங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு டெக்னிக்கல் மேட்டர் கிடைக்குது!!!!!!!!

உண்மைய சொல்லுங்க செட்டுக்குள்ள உளவாளி வச்சி இருந்தீங்கல்ல..........

இதே மாதிரி நம்ப ரோபா படத்துக்கும் ஏதோ டெக்னாலஜி யூஸ் பண்றாங்களாமே அதையும் என்னனு ஒரு தொடர் போடுங்க கலக்கல இருக்கும் அதுக்குனு நான் ஹாலிவுட் படம் மட்டும் தான் எழுதுவேன்னு அடம் பண்ண கூடாது ஆமா:))))

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 2:37 PM

கற்பனைத் திறன்னு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்! :)

--

டெக்னாலஜி மேட்டரை சேகரிக்கறது ரொம்ப சுலபம். ஆனா... அதோட முதல் வார்த்தை சிக்கணும். அதுதான் கஷ்டம். அது கிடைச்சா.. அப்புறம் நூல் பிடிச்சிடலாம்.

டைரக்டர் ஷங்கரோட வெப்சைட்டுக்கு அடிக்கடி போய் பார்க்கிறேன். அவர் பிஸி.. யாருக்கும் பதில் சொல்லுறதில்லை. அதனால நானும் கமெண்ட்/கேள்வி கேட்கலை. முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுறேங்க! :) :)

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil