புது வரவு - நம்பிக்கை

12/27/2009

Avatar - டெக்னாலஜி 03

இப்ப எல்லோரும் ஒரு மாதிரி ரெடியாகிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இல்லைன்னு சொன்னீங்கன்னா.. பஸ் இந்த ஏரியாவை விட்டு நகராது. மீதி டெக்னாலஜிகளையும் பார்த்து முடிச்சிடுவோம்.



Facial Performance Replacement (FPR) :  தெலுங்கு டப்பிங் மாதிரி, தமிழ் டயலாக் பேசி முடிச்ச பின்னாடியும், கொஞ்ச நேரத்துக்கு நாகார்ஜூன் ‘ஊஊ’-ன்னு வாயை வச்சிகிட்டு இருப்பாரே, அந்த பிரச்சனைக்கு ADR-ன்னு சொல்லுவாங்களாம் (Automated Dialogue Replacement). பம்மல் K. சம்பந்தம் படத்துல... “நீ ஞ்ம்..ஞ்ம்-ன்னு பப்பிள் கம்’மை மெல்லு.. டப்பிங்-ல சமாளிச்சிக்க்றேன்”-ன்னு புலாசுலாகி சொல்லுற மேட்டர். அதையே.. கொஞ்சம் உல்டா பண்ணி..., அந்த வாயையே..., டப்பிங் போது... டயலாகிற்கு ஏற்ற மாதிரி அசைய வைப்பது, FDR.

ஆனால் இந்த FDR, நிஜ மனிதர்களுக்கு இல்லை. CGI கேரக்டர்களுக்கு!! படத்தின் டயலாக் மாற்ற வேண்டியிருந்தால்..., வெறும் டயலாகை மட்டும், அந்த நடிகர் பேசினால் போதும். திரும்ப அந்தக் காட்சியை அவர் நடிக்கவே தேவையில்லை. அவர் சம்பளப் பிரச்சனையில் கால்சீட் கொடுக்க மாட்டேன்னு சொன்னால்... யாரைவது வைத்து மிமிக்ரி செய்துகொண்டாலும் ஓகே. CG கேரக்டர்... ’ஊஊ’-வை ஒழுங்காக செய்துவிடும்.

இதற்கு மேல் படிக்கும் முன்... இந்த வீடியோக்களை ஒருமுறை பார்த்துடுங்க. பின்னால் சொல்லப் போகும் விஷயங்களுக்கு, இது உபயோகப் படும்.








Facial Capture Head Rig : மோஷன் கேப்சர் ஸ்டுடியோவை (ஒரேயொரு சதுர ரூம்), வால்யூம்-ன்னு கூப்பிடுறாங்க (அதிஷா பதிவில் இதை டெக்னாலஜி-ன்னு சொல்லியிருக்கார். தப்பு!! :-[). அல்லது சவுண்ட் ஸ்டேஜ். இதுக்கு குறிப்பிட்ட அளவெல்லாம் கிடையாது. கற்பனைக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ற மாதிரி யோசிச்சிக்க வேண்டியதுதான். ஒரு 50x50-ன்னு வச்சிப்போம். அந்த ரூமை சுற்றிலும்.., நூற்றுக் கணக்கில் மோஷன் கேப்சர் கேமராக்கள் இருக்கும் (செவ்வக வடிவத்தில்).

அதில், 90%-க்கும் மேலான கேமராக்கள், உடல் அசைவுகளை பல கோணங்களில் இருந்தும், மீதி கேமராக்கள் (ரெஃபரன்ஸ் கேமரா) முக அசைவையும் படம் பிடிக்கும். இந்த மோஷன் கேப்சர்... எப்படின்னா.. உடம்பு முழுக்க, சுமாராக ஒரு 60-70 ஸ்டிக்கர் பொட்டு மாதிரி டாட்ஸ் ஒட்டியிருப்பாங்க (Markers/Jewels). முகத்திற்கு தனியாக 100-150. இது தன் மேல் படும் ஒளியை ரிஃப்ளெக்ட் செய்வதோடு, அதன் இருப்பிடத்தையும், கேப்ச்சர் ஸிஸ்டத்துக்கு அனுப்பிட்டே இருக்கும். ரேடியம் மாதிரி.

இந்த முறையில் கை கால்களின் அசைவை ரொம்ப எளிமையா படம் பிடிக்க முடியும். ஆனால் முக அசைவுகளை பிடிப்பது, ரொம்ப கடினம். காரணம், எத்தனை மார்க்கர்ஸ் ஒட்டியிருந்தாலும்..., உணர்ச்சிகளை முழுமையா பிடிக்கறது கஷ்டம். இதை சரியா படம் பிடிக்க முடியாமல்தான், முக அசைவுகளை மட்டும், கம்யூட்டரில் திரும்ப உருவாக்குறாங்க.

ஜிம்-க்கு இது ரெண்டும் பிடிக்கலை. அவருக்கு தன் படம் அனிமேஷனாகத் தெரியக் கூடாதுங்கறதுதான் முதல் கவனம். நடிகர்களின் அத்தனை அசைவையும், கணிப் பொறியில் கொண்டு வரணும்னு முடிவு பண்ணும் போதுதான்..., வால்யூமை.. இன்னும் பெரிசு பண்ணலாமேன்னு முடிவு செஞ்சாங்க. இப்ப அந்த வால்யூம் சாதாரண ரூமை விட, ஆறு மடங்கு பெரிதாக்கப் பட்டது. இப்ப யானையை கொண்டு வந்துகூட டேன்ஸ் ஆட வைக்கலாம்.

அடுத்து இவர் உருவாக்கினதுதான் இந்த ஃபேஷியல் பர்ஃபார்மென்ஸ் ஹெட் ரிக். 1995-லேயே இந்த ஐடியாவை வச்சிருந்திருக்கார் மனுசன். எப்படின்னா, ஒரு சின்ன வைட் ஆங்கிள் கேமராவை, நடிகர்கள் முகத்துக்கு நேரா வைச்சிடனும் (வீடியோவில்..., ஹெட் ஃபோன் மைக் மாதிரி, பெரிய செவ்வகமா இருக்கும் பாருங்க. அல்லது மேலுள்ள படத்தில் ஸோ-வின் முகத்துக்கு நேராக இருப்பது). இப்ப அந்த கேமரா... நடிகர்கள் எந்தப் பக்கம் தலையை திருப்பினாலும்... கவலைப் படாம.. அவர்களின் முக/கண் அசைவுகளை மட்டுமே, படம் பிடிச்சிகிட்டு இருக்கும் (இதற்கு முன்னிருந்த கேப்ச்சர் ஸிஸ்டங்கள், கண்ணசைவை படம் பிடிக்காது).

இப்ப.. இந்த முக அசைவை அனலைஸ் பண்ண போதுமான டேட்டா, கம்யூட்டருக்கு கிடைச்சிடும். துணைக்கு, ரெஃபரன்ஸ் கேமராக்கள். இதனால்தான்.. படம் முடிஞ்சி வெளிய வர்ற வரைக்கும், நாம் கம்யூட்டர் ஜெனரேட்டர் கேரக்டர்கள் நடிச்சதைக் கூட உணர முடியாமல் போனது. வீடியோவில்.. ஹீரோயினின் ஒவ்வொரு அசைவையும், கண் இமைகள் மூடித் திறப்பது வரைக்கும், அந்த CG கேரக்டர் அப்படியே காப்பியடித்தது, இந்த ஹெட் ரிக்-னாலதான். எதோ கண்ணுக்கு முன் ஒரு கேமராவை தொங்கவிடுவது போலத் தெரிந்தாலும், இதை தயாரிக்க மட்டும் 12 மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்ங்ங்கள் பார்க்கப் போகும், அந்த கதை நாயகனின்... முக அரிதாரத்தின் அடிநாதம்....., முகப் பூச்சுகளாளாளாளாலும்...... வர்ணக் கலவைகளாளாளாலும்,.....

-ன்னு கமல்ஹசன் ஸ்டேமெண்ட் கொடுக்கத் தேவையில்லை. இனிமேல்..., 5-6 மணிநேர மேக்கப் எல்லாம் தேவையே கிடையாது. ஆழ்கடலில் குதிக்கிறவங்க மாதிரி... ரப்பர் ட்ரெஸை மட்டும் போட்டுகிட்டு, ஸ்டுடியோவில் வந்து... ஆடி ஓடினால் போதும். என்ன அங்கே கமலுக்குப் பதிலா, ஒரு கம்யூட்டர் ஜெனரேட்டட் கேரக்டர் நடிச்சிகிட்டு இருக்கும்.

இது அனிமேஷனையும் தாண்டி, மோஷன் கேப்சரையும், நடிகர்களையும் இணைத்து, அனிமேஷன் படம் போல கொடுப்பது. எனக்கு அவங்க மேக்கப் போட்டிருந்தாங்களா, அனிமேஷனான்னு எல்லாம் யோசிக்கவே முடியலை. மைண்ட் ப்ளோயிங்!!!


வர்ச்சுவல் கேமரா: நாம கம்ப்யூட்டர் கேம் விளையாடும் போது, நிறைய விளையாட்டுகளில், 1st Person View, 3rd Person View -ன்னு எல்லாம் ஆப்ஷன் கொடுப்பாங்க. Need For Speed கேமில், இன்னும் நிறைய வைட் ஆங்கிள் பார்வைகள் சாத்தியம். இதெல்லாம் வர்ச்சுவல் கேமரா உதாரணங்கள்.

அல்லது 2டி-யில் எடுத்த Toy Story படங்கள், சமீபத்தில் 3டி-யில் வெளியானது, சினிமாவிற்கான உதாரணங்கள். இல்லாத ஒரு கேமராவை கேமராவை, கணிப்பொறியில் உருவாக்கி, எடுத்த அதே காட்சியை இன்னொரு கோணத்தில் காட்டுவது.

ஆனால் நிஜ சினிமாவிற்கான வர்ச்சுவல் கேமரா, ஆக்சுவலி.. ஒரு கேமராவே அல்ல. மார்க்கர்கள் ஒட்டிய ஒரு மானிட்டர். சாஃப்ட்வேர் மூலமாகவும், மோஷன் கேப்சர் மூலமாகவும், தான் இருக்கும் இடத்தை வைத்து, வர்ச்சுவல் உலகில் எந்த மூலையில் இருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஆப்ஜக்ட்.

இதை இன்னும் கொஞ்சம் விளக்கி கழுவலாம்னா......, ராபர்ட் ஸெம்மிக்ஸின் போலார் எக்ஸ்ப்ரஸ் படத்தை எடுத்துக்கலாம். இந்தப் படமும், மோஷன் கேப்ச்சரை கொண்டு உருவாக்கப் பட்டதுதான். ஆனால் முன் சொன்ன குறைபாடுகள் எல்லாம் இதிலும் உண்டு. நடிகர்களின் முக அசைவுகள் அத்தனையும், கம்யூட்டர் ஜெனரேட்டட். நீங்க போலார் எக்ஸ்ப்ரஸ் படத்தை பார்க்கலைன்னாலும், லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஸ்பைடர்மேன் மாதிரி படங்களை நினைத்துக் கொண்டாலும் ஓகே.

ஸ்டிக்கரை உடம்பு-முகம் முழுக்க ஒட்டிக் கொண்டு, வால்யூமில் இவர்கள் கொடுக்கும் பர்ஃபார்மென்ஸை, கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்து, அதுக்கப்புறம், இவர்களின் சிஜி கேரக்டர்களோடு பொருத்தி, இருவரின் ஆக்‌ஷனையும், சிஜி என்வயரான்மெண்டில் சேர்த்தப் பின்தான், டைரக்டர் அந்த காட்சியை, திரும்பவும், தன் பாணியில் டைரக்ட் செய்ய வர்றார்.

அதாவது இனிமேல் இவர் டைரக்ட் செய்யப் போவது, டாம் ஹேங்க்ஸை அல்ல. டாம் அல்ரெடி கம்ப்யூட்டருக்குள், டிக்கட் செக் செய்து கொண்டிப்பார். அந்த சிஜி கேரக்டரைத் தான் ராபர்ட் டைரக்ட் செய்யப் போகிறார்.

ஒட்டு மொத்த சினிமா செட்டும், நடிகர்களும் (சிஜி கேரக்டர்கள்) அவரவர் அந்தந்த பொஸிசனில், ஏற்கனவே நடித்த காட்சிகளை திரும்ப நடிக்க ரெடியாக இருப்பார்கள். 360 டிகிரியில் இருந்தும் அந்த வர்ச்சுவல் உலகத்தை டைரக்டர் பார்க்க முடியும். அதை தனக்கு வேண்டும் என்பது மாதிரியான கோணத்தில், நமக்கு காட்ட முடியும். எப்படி வேண்டுமென்றாலும், கேமராவை நகர்த்த முடியும் (அந்த காட்சிக்குள்). இப்படி கேமராவை நகர்த்த ‘வீல்ஸ்’ (Wheels) என இன்னொரு நுட்பம். கேமராவை ட்ராலியில் வைத்தாலோ, க்ரேனில் வைத்தாலோ கிடைக்கும் அந்த எஃபெக்ட்டை சிமுலேட் செய்வது. கேமராவே இல்லாமல் ஒரு கேமரா.

இரண்டு மானிட்டர்கள் இருந்தால், அதில் ஒன்றில், வர்ச்சுவல் கேமரா அந்தக் காட்சியை எப்படி காட்டுதுன்னும், இன்னொன்றில் செட்டின் மேல் பொருத்தப் பட்டுள்ள ஒரு ரெகுலர் கேமராவில், அந்த வர்சுவல் கேமரா எப்படி நகருதுன்னும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.

வேணும்னா... மேலிருக்கும் படத்தை க்ளிக் பண்ணி பெருசா பாருங்க. அதில்... நடிகர்கள் ஒரு ப்ளாஸ்டிக் டப்பா மேல ஏறிகிட்டு இருக்கும் போது, அவர்களின் 10 அடி உயர நா’விக்கள் மரத்து மேல ஏறிகிட்டு இருப்பாங்க. என்னை மாதிரியே நீங்களும், கற்பனை வளத்தோடு ‘ஆஹா.. சூப்பர்’-ன்னு நினைச்சிக்க வேண்டியதுதான்.

இந்தக் கேமராவின் இன்னொரு வடிவத்தை, ஏற்கனவே ஸ்பீகல் பர்கின் ட்ரீம்வொர்க்ஸும், ஜார்ஜ் லூகஸின் ILM-மும் (Industrial Light & Magic) வச்சிருக்காங்க (‘பசை’யான நட்பு பாருங்க). அதை ILM-ல் பார்த்த பொழுதுதான், கேமரனுக்கு, இந்த வர்ச்சுவல் கேமராவை உபயோக்கிக்கனும் ஐடியா வந்தது.

ஆனால்... இதில் கேமரன் செய்த மாற்றம்தான்..., அடுத்த தலைமுறை டெக்னாலஜியை உருவாக்கியது. அது............


நாளையோடு அவதாரின் அட்டகாசம் முடியும்




(போட்டோக்கள் WIRED MAGAZINE -ல் இருந்து சுட்டது)

53 தியேட்டர் கமெண்ட்ஸ்:

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:18 AM

என்னாங்க இது...? ஆன்லைன்ல ஒருத்தர்-ன்னு சொல்லுது (அது நானு). ஆனா.. ஓட்டு பாட்டுக்கு வுழுந்துகிட்டே இருக்கு???

கலையரசன்.. said... December 27, 2009 4:22 AM

மீ த 2ன்டு...

கலையரசன்.. said... December 27, 2009 4:23 AM

இருங்க படிச்சிட்டு அப்பாலிக்கா...
அடுத்த பதிவுக்கா வர்றேன்!!

(நா மட்டுதான் உண்மையை சொல்லிட்டு போறேன்!!)

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:28 AM

ஹாஹா...ஹா.. உண்மை! படிச்சிட்டு வர்றேன்னு சொன்னவங்க... எல்லாம்.. அப்படியே எஸ்ஸாய்டுறாங்க! :) :)

ஒரு ஐ.டி. டெக் இப்படி ஓடலாமா தல??

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:32 AM

ஹா... ஹிட் கவுண்ட் வொர்க் ஆகலை. அதான் மேட்டரு..! :( :(

கலையரசன்.. said... December 27, 2009 4:33 AM

// 10 அடி உயர நா’விக்கள்//

இப்டி அப்பார்ஸ்டஃப்பியை கூட விடாம மொழியாக்கம் பண்ண உங்க டெடிக்கேஷனை நினைச்சா.. எனக்கு வயித்துல டிக்காஷன் கலக்குதுங்க...

கண்ணா.. said... December 27, 2009 4:34 AM

தல இது உண்மையிலேயே அவதார் பத்தினதுதான....இல்ல நாசர் நடிச்ச ‘அவதாரம்’ படத்தை பத்தியா....

சரி எதா இருந்தா என்ன நான் வழக்கம்போல சொல்லீட்டு போய்யிறேன்.


அசத்தீட்டீங்க பாலா...

கலக்கீட்டீங்க....

(கிராஸ் கொஸ்டீன்லாம் கேக்க புடாது)

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:34 AM

உங்க நக்கல் இருக்கே...!!! அதுக்கே... என் சொத்து அத்தனையையும் எழுதித் தரலாம்.

ஆனா.. 10,000 கடன் தான் இருக்கு. பரவாயில்லையா?

கலையரசன்.. said... December 27, 2009 4:35 AM

தமிழ்மணத்துல மட்டும்தான் ஓட்டுபோட முடியுது?? தமிழிஷ்ல ஓட்டு போட முடியலை... அடப்பாவிகளா! அதுக்கும் சோத்துல விஷம் வச்சிட்டடீங்களா???

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:36 AM

@கண்ணா : மணி 4.36 AM. தூங்காம கொள்ளாம.. ரெஃபர் பண்ணி எழுதினா... இப்படி ரத்தம் வர்ற் மாதிரி அடிக்கறீங்களே! :( :(

க்ராஸ் கொஸ்டின் உங்களுக்கு இல்லை. சென்ஷிக்கும், கார்த்திக்கேயனுக்கும் மட்டும்தான். :)

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:38 AM

@கலை : உடனே அதுக்கு.. தமிழிஷ்-03 -ன்னு பதிவு எழுதிடுவோமா? அந்தத் தொடர் வேற அப்படியே நிக்குது! :) :)

கலையரசன்.. said... December 27, 2009 4:41 AM

டேய் நாதாரி கண்ணா... எங்கடா ஓட்டு போடாம போற???
அண்ணனுக்கு ஒழுங்கு மரியாதையா ஓட்டை குத்திட்டு போடா...

(எப்புடி கண்டுபுடிச்சேன் பாத்தீங்கல்ல???... பாலாண்ணா.. இன்னைக்கு நான்தான் உங்களுக்கு சேவேட்டைக்காரன்.. யாரு யாரு ஓட்டு போடம போறங்கன்னு பாத்துட்டு, உங்களுக்கு லிஸ்ட் அனுப்புறேன்! யாரு போடலையோ அவங்களுக்கு சோத்துல "விஷம்" வச்சிடலாம்!!)

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 4:44 AM

அப்பிடியே சந்தடி சாக்குல ‘அண்ணன்’ ஆக்கிட்டு போறீங்க. பொழச்சிப் போங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said... December 27, 2009 4:45 AM

கிரேட்.. அவரகளின் டெடிகேஷனுக்கு இன்னுமொரு உதாரணம்தான் அவதார்.

கண்ணா.. said... December 27, 2009 4:45 AM

டேய் கல...

போய் செக் பண்ணுடா என் வென்று..

ஓட்டு போடாம பேச்சை பாரு பேச்ச...

mkvenki ங்குறது என்னோட ஓட்டுடா...

கலையரசன்.. said... December 27, 2009 4:46 AM

//ஆனா.. 10,000 கடன் தான் இருக்கு. பரவாயில்லையா?//

கடனா இருந்தாலும் பரவாயில்ல குடுங்க...
நான் வசூல் பண்ணிக்கிறேன் தலைவாஆஆஆஆஆஆ!!

கலையரசன்.. said... December 27, 2009 4:48 AM

//mkvenki ங்குறது என்னோட ஓட்டுடா//

மிஸ்டர் எம் கே சொங்கி.. சீ.. வெங்கி!
நான் கேட்டது தமிழ்மணத்தில் அல்லவோ???

கண்ணா.. said... December 27, 2009 4:50 AM

அட்டு கலை ( நன்றி சென்ஷி)

தமிழிஷ்ல 7 ஓட்டுல உன்னோட rkarasan ஐ காணோம்..

அது போக உன்னோட கள்ள வோட்டும் காணோம்...


நம்ம ஹாலி பாலி 4.30 மணி வரைக்கு முழிச்சு உக்காந்து பதிவு போடுறார். நீ ஓட்டா போடாம போற நாதாரி....

கண்ணா.. said... December 27, 2009 4:50 AM

தமிழ்மணத்துல எனக்கு இன்னும் ஓட்டு போட வயசு வரலைன்னு சொல்லுது

கலையரசன்.. said... December 27, 2009 4:52 AM

//rkarasan ஐ காணோம்..//

யப்பா.. மச்சி.. அதையெல்லாம் கரைக்டா ஞாபகம் வச்சிக்க...
ஆனா, எங்கிட்ட வாங்குன கடனை மட்டும் மறந்துடு!!

கண்ணா.. said... December 27, 2009 4:55 AM

ங்கொய்யால....

உண்ட எப்படா வாங்குனேன்..

அப்டி ஓரு நிலம வந்தாலும் சோத்துல விஷம் வச்சு சாப்டாலும் சாப்பிடுவனே தவிர உங்கிட்ட வாங்க மாட்டேண்டா

கண்ணா.. said... December 27, 2009 4:56 AM

சரி rkarasan ஓட்டைதான் போடலை... மத்த கள்ள ஓட்டையாவது போட்டுறு ப்ளீஸ்

ராஜ நடராஜன் said... December 27, 2009 5:19 AM

நேற்று மைக்கேல் மூரின் sicko (உங்க ஊருக்கு தேவையான படமா இருக்கே!) மற்றும் HT எப்படி சவுண்டு விடுதுன்னு பார்க்கறதுக்காக மீண்டும் ஒரு முறை Titanic பார்த்து முடியறதுக்குள்ள நாள் ஓடிப் போச்சு.எப்படித்தான் இந்த வேகத்துல இடுகை,படம் பார்க்கறது,தொழில்ன்னு அசத்துறீங்களோ!

(அப்புறம் நான் கோயம்புத்தூர்ங்கறதால யாரைப் பார்த்தாலும் அண்ணா சொல்லிப் பழக்கமாயிடுச்சு.ஃபுரபைல் முன்னாடி நல்லாத்தான் இருந்தது.எங்கேயோ எப்பவோ ஆங்கில வலைத் தேவைக்காக ஃபுரபைல் எடுக்க வேண்டியதாகிடுச்சு:))

ராஜ நடராஜன் said... December 27, 2009 5:23 AM

யாரது ஓட்டு போடலேண்ணா விஷம் வைக்கிறது?ஓட்டுப் பெட்டியவே காணோம்!அப்புறம் ஓட்டு எங்க போடறது?

ராஜ நடராஜன் said... December 27, 2009 5:29 AM

சினிமாவுக்கு பரிட்சை வச்சா சென்டம்தான் நீங்க!

ராஜ நடராஜன் said... December 27, 2009 5:47 AM

மாங்கு மாங்குன்னு தொழில் நுட்ப வார்த்தைகளை நீங்க சொல்வதை விஷுவலா பார்த்து எழுத்தை படிக்கும் போதுதான் கொஞ்சம் புரிகிறது.James cameron's ideas are not worth it(rather it would be an one sided said story) without your writing of Avatar!Keep going.....

jackiesekar said... December 27, 2009 7:39 AM

சச்சின் போல அடிச்சி ஆடு தலைவா....பல விஷயங்களை தெரிஞ்சிக்க முடியுது.. எங்கையோ தேடிபுடிச்சி படிச்சி எழுதறதுன்னாலும் அதை சுவாரஸ்யமா சொல்ல ஒரு இது வேனும் ... அது உங்ககிட்ட இருக்கு...

ஷாட்டை பத்தி நான் எழுதுகின்ற பதிவை ரசிச்சி சொல்லி இருந்திங்க... மிக்க நன்றி...டைம் இல்லை அதான் இந்த டிலே...

அன்புடன்
ஜாக்கிசேகர்

pappu said... December 27, 2009 8:06 AM

சப்பையா சொல்லனும்னா, இந்த மாதிரி ஒரு சரக்க சங்கரின் ஜீன்ஸ் படத்தில் காண்பிச்சிருப்பாங்க. கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் மோஷன் காப்சர் ஐசை வைத்து செய்து பின், அதை தன்னும்டை மோஷன் மூலம் ஆக்ட் செய்வாரு. Crude depiction, but definitely suitable for example!

pappu said... December 27, 2009 8:08 AM

தன்னும்டை மோஷன் மூலம் ///

ராஜு சுந்தரம் தன் மோஷன் மூலம் ஆக்ட் செய்யுமாரு வைத்திருப்பார்... பாத்தீங்களா? ஃபோர் ரன்னர்... ஹி.. ஹி... கண்ணு நேரா இருந்தாலும் பல வித்தியாசமான விஷயங்கள் சிக்கு.

pappu said... December 27, 2009 8:09 AM

இன்னைக்கும் கும்மி? குட்.... நடாத்துங்கோ. மீ டூ ஜாய்னிங்...

பாலா, ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பாத்தீங்கள். டெக்னிக்கலி நல்லா இருக்கும் போல இருக்கு!

பினாத்தல் சுரேஷ் said... December 27, 2009 8:52 AM

ஒரு போஸ்டர் ஒட்டிக்கறேன்; இங்க நல்லா பிஸினஸ் ஆகும் போல தெரியுது.

நீயும் நாவி நானும் நாவி, நினைச்சுப்பாத்தா எல்லாம் நாவி

KISHORE said... December 27, 2009 9:02 AM

ரொம்ப நல்லா இருக்கு பாலா.. எதுக்காக இல்லைனாலும்.. உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட் ..

பின்னோக்கி said... December 27, 2009 9:32 AM

அனிமேஷன் படத்துக்கும் அவதாருக்கும் உள்ள வித்தியாசம் எனக்கு இப்பதான் புரிஞ்சுது. விவரிக்கவே கடினமாக விஷயத்தை அவர் பண்ணியிருக்காரு பாருங்க. சூப்பர்.

வினோத்கெளதம் said... December 27, 2009 9:46 AM

தல உங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சலுய்ட்..

//நாளையோடு அவதாரின் அட்டகாசம் முடியும்//

அட்டகாசம் அருமை பின்னிடிங்க..

rajeepan said... December 27, 2009 9:56 AM

அருமையான தகவல்கள்..வீடியோக்களும் நன்றாக இருக்கின்றது..அவதாரின் பாகம் 2 ஆரம்பித்துவிட்டார்களா?..போடுறபோக்கை பார்த்தா பலபாகங்கள் வரக்கூடியசாந்தர்ப்பம் இருக்கின்றது எனநினைக்கின்றேன்..

VIJAY said... December 27, 2009 10:06 AM

///(அதிஷா பதிவில் இதை டெக்னாலஜி-ன்னு சொல்லியிருக்கார். தப்பு!! :-[).///

ரவுடி என்று பேர் வாங்க பலமா அஸ்திவாரம் போட்டுட்ட மாதிரி இருக்கு. ரவுடிதான் நீங்க என்று சொல்லும்வரை விடமாட்டீங்க போலிருக்கு.

RAJESH said... December 27, 2009 10:10 AM

உங்களுக்கு பின்னுடம் போடுர அளவுக்கு நான் பெரிய ஆளு இல்ல எசமா இருந்தாலும் உங்க அளவுகடந்த அற்வுக்கும் கடமை உணர்ச்சிக்கும் என்னோட வணக்கம் பாஸ்.... அப்படியே நம்ம ஏரியாவுக்கும் வந்து போறது www.mannairajesh.blogspot.com

gulf-tamilan said... December 27, 2009 11:18 AM

அவதார் 02 நிறைய புரியவில்லை :)))03 புரிந்துகொள்ள ஈசியாக உள்ளது.இன்று கடைசியா??சீக்கிரம் போடுங்க!!!

Balavasakan said... December 27, 2009 11:46 AM

அண்ணே என்னக்கு ஒரு டவுட்டு பிரம்மாட ஒரு தல ஜேம்ஸ் கமருன் கிட்டதான் இருக்கோ...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 27, 2009 11:53 AM

அடாடா,தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்தை நேத்து யாரோ நோண்டிவிட இன்னிக்கு அவதார்-3 அவதரிச்சிருக்கு,
தல நல்ல வாக்குகள் அளிக்கப்பட்டன, இதுக்கு விமர்சனம் எழுதாட்டி தப்பு போல இருக்கே தல?
தல நல்ல ஐமெக்ஸ் தியேடர்ல சென்ஷியும் நானும் பாத்துட்டோம், என்ன படம்? என்ன படம்?
:)))))

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 12:51 PM

@கண்ணா & கலை : கொஞ்சம் அசந்துட்டேன். அதுக்குள்ள நாஸ்தி பண்ணிபுட்டியளே! :) :)

சரி வோட்டு போட்டீங்களா இல்லையா??? கலை... ரிப்போர்ட் எங்கே?????
---

@ராஜ நடராஜன் : தல.. Sicko எடுத்ததே எங்க ஊருக்குத்தான்!!! வேற யாருக்கும் இல்லை.

அது சரி..!!! எதுக்கும் என்னை தம்பின்னு கூப்பிட்டு பழகுங்க. ஏற்கனவே.. என்னை யூத் லிஸ்ட்ல சேர்க்க மாட்டேங்கறாங்க! :( :(

அட ஏங்க நீங்க வேற. எங்கயோ படிச்சி ட்ரேன்ஸ்லேட் செஞ்சிகிட்டு இருக்கேன். அத போயி......! :)

-----

@ஜாக்கி : ரொம்ப நன்றி ஜாக்கி! :) டைம் கிடைக்கும் போது எழுதுங்க. நீங்க பிஸின்னு தெரியும். ஆனா ‘ஷாட்’ எழுதி ரொம்ப நாள் ஆய்டுச்சி. ப்ளீஸ்! :) :)

-----

@பப்பு : ஆனா அதை ஹோலோக்ராம் மாதிரியில்ல ட்ரை பண்ணியிருப்பாங்க? என் இனிய இயந்திரா, ஜூனோ-வில் வர்ற மாதிரி? இருந்தாலும்.. எக்ஸாம்பிள் ஓகே..!!

நீங்க ‘அவரோட மோஷன்’-ன்னு எழுதினாலும்.. அர்த்தம் வேறயாதான் போகுது! ;) ;) :) :)

சும்மாயிருக்கும் பசங்களை தூண்டி விடாதீங்க. பதில் நீங்க எழுதறீங்களா??? :(
----

@பினாத்தல் சுரேஷ் : படிச்சிட்டேன். நம்ம ஏரியாவில் பிஸினஸ் ஆகும்னு நினைச்ச மொத ஆள் நீங்கதான்! :)

-----

@கிஷோர் : எதுவும் படிக்கலைன்னு சிம்பாலிக்கா சொல்லுறீங்க! :)

-----

@பின்னோக்கி : ஏற்கனவே இருந்த டெக்னாலஜிதாங்க. இவர் செய்த சில மாடிஃபிகேஷந்தான்... இத்தனை விஸ்வரூபம் எடுத்திருக்கு. :)

------

@விஜய் : தொழில் ரகசியத்தை வெளியே சொல்லாதீங்க. ஆனாலும் பாருங்க. யாராவது நம்மளை கண்டுக்கறாங்களான்னு!!!! :( :( :( :( :( :(

------

ராஜேஷ் : யு மீன் சின்ன ஆளூ???

அளவு கடந்த அறிவா??? நீங்க சினிமா ஏரியாவுல வொர்க் பண்ணுறீங்களா?? டோனே சரியில்லையே? :) :)

------

கல்ஃப்-தமிழன் : எழுதிகிட்டு இருக்கேங்க. ஓகே-ன்னு தோணினா போட்டுடுடலாம்.

------

@பாலவாசகன் : இருக்கலாம். அதான்.. மனுசங்களையே காப்பியடிச்சி... நா’வின்னு சொல்லிட்டார்! :)
------

@கார்த்திக்கேயன் : நீங்க விமர்சனம் போட்டு கொஞ்ச நாள் ஆச்சே. இதை எழுதலீன்னா.. உங்க தகுதி பறிக்கப்படும். ஜாக்கிரதை.!

செ.சரவணக்குமார் said... December 27, 2009 12:58 PM

பிரம்மிக்க வைக்கும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி பாலா.

செ.சரவணக்குமார் said... December 27, 2009 1:01 PM

டெக்னாலஜி பற்றி எழுதும்போது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் நேர்த்தியுடன் எழுத நிச்சயம் பாலாவால் மட்டும்தான் முடியும். தொடருங்கள் பாலா.

நாஞ்சில் பிரதாப் said... December 27, 2009 1:16 PM

சான்ஸே இல்ல... இவ்வளோ டெக்னாலஜீ வச்சு கமல் ஒருபடம் எடுக்க இனி ஒரு 25 வருஷம் ஆகுமா??? அப்போ கமலுக்கு எத்தனை வயசாகும்னு கேட்கப்படாது.
வழக்கத்தை விட வீடியோ கிளிப்பிங்லாம் போட்டு பின்னிட்டீங்கப்பு... ஒரு ரூம்ல வச்சுத்தான் இவ்வளோ தில்லாங்கடி பண்ணிக்கிறாங்களா? அப்ப ரூம்போட்டு யோசிக்கிறதுன்னு சொல்றது இதுதானோ?

Porkodi (பொற்கொடி) said... December 27, 2009 1:23 PM

Plain amazing! Both - the technology as well as your write up. :) Ungluku oru Ph.D tharalam polarke!

சென்ஷி said... December 27, 2009 1:34 PM

தல படிச்சுட்டேன். விரிவா இன்னொருக்கா காலைல வந்து கமெண்ட் போடறேன்.. :)

வினோத்கெளதம் said... December 27, 2009 2:03 PM

தல..இப்ப தான் இந்த வீடியோ பார்த்தேன்..பிரமிப்பு அடங்கவே இல்லை..இவ்வளவு வேலை இருக்கா..மிகபெரிய டீம் வொர்க்..நாங்க எல்லாம் சர்வ சாதாரணமா கிராபிக்ஸ் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறோம்..ஆனா இத்தனை வருஷங்கள் அதே ஒரு தவம்போல் செய்து சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்..

இந்தியாவில் இவ்வளவு மென்பொருள் துறைகள் இருந்தும் ஏன் ஒரு படத்தில் கூட கிரபிக்ஸ் காட்சிகள் சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை..(சில படங்கள் தவிர்த்து..பெரிதும் எதிர்ப்பார்த்த தசவாதாரம் பார்த்தப்பொழுது பற்றிக்கொண்டு எரிந்தது..அவ்வளவு கேவலமா இருந்துச்சு) கமலால் கூட சிறந்ததை தேர்ந்தெடுக்க முடியவில்லையே..அல்லது செலவு அதிகமாகுமா. ஏன் அவர் கூட வெளிநாட்டில் இருந்து ஆட்களை கூப்பிட்டுக்கொண்டு வந்து வேலை வாங்கனுமா..இங்கே நம் ஆட்கள் இல்லையா..(எதனால் கேக்கிறேன் என்றால் இந்தியா மென்பொருளில் எங்கயோ போய்டுச்சுன்னு சொல்லுறாங்க..ஆனா ஏன் இதே மாதிரி காட்சிகளை உருவாக முடிவதில்லை..நம் ஆட்களால்.)

ரொம்ப நாள் கழித்து நீண்ட பின்னுட்டம்..வீட்டுல தானே இருக்கீங்க..டைப் பண்ணுங்க..:)

Heam said... December 27, 2009 2:43 PM

// தமிழிஷ்-03 -ன்னு பதிவு எழுதிடுவோமா? அந்தத் தொடர் வேற அப்படியே நிக்குது! :) :) // ஐயோ இன்னொரு தொடர் ஆ வேணாம் ணா நாடு தாங்காது ..
///(அதிஷா பதிவில் இதை டெக்னாலஜி-ன்னு சொல்லியிருக்கார். தப்பு!! :-[)./// எல்லாரும் நல்ல பார்த்துகோங்க நம்ம அண்ணனும் ரவுடி தான் ..
பாலா,
//ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பாத்தீங்கள். டெக்னிக்கலி நல்லா இருக்கும் போல இருக்கு!// பப்பு .. அந்த கொடுமைய கேட்காதிங்க ,, ட்ரைலர் லையே CG and lighting mismatch பல்லை காட்டுது .. ஆனா நம்ம பாலா அண்ணன் லிஸ்ட்ல ஒரு 18+ பதிவுக்கு சீட் போட்டு வைக்கலாம் .. ட்ரைலர் ஆரம்பமே அருமையான வசனங்கள் .. எதுக்கு படம் வர வரைக்கும் வெயிட் பண்ணனும் , பாலா அண்ணா ட்ரைலர் கே ஒரு பதிவு போடுவார் பாருங்க ..
But this post is very informative அண்ணா .. kudos to u , keep rocking

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 3:18 PM

@செ. சரவணக்குமார் : அடிச்சி விடுங்க தல..!! காசா பணமா!! :) :) :) :)

@நாஞ்சில் : ஆமாங்க தல..!! ஒரேயொரு ரூம்தான். அந்த காடுகளுக்கு மட்டும் நியூசிலாந்து போனாங்க.

ஆனா.. மொத்தக் காடும்........, கம்ப்யூட்டர் க்ராஃபிக்...!!!

@பொற்கொடி : நீங்களுமா...???! :) வாங்க வாங்க..! விஜய்க்கு அப்புறம்.. அதிகமா ஓட்டப் படுறது நாந்தான்!!! :)

@சென்ஷி : எனக்கு நம்பிக்கை இல்ல! :) :) ஹி. ஹி..

@வினோத் : இன்னா.. கொயிப்பு? நான் கடமையே கண்ணா. இன்னொரு பதிவையும் எழுதி ‘முற்றும்’ போட்டிருக்கேன். வூட்டுல இருக்கேன்னு பொறுப்புணர்ச்சி இல்லாம?? :)

உங்க கேள்விக்கான பதில்.. 04 -வது பதிவில் இருக்குன்னு நினைக்கிறேன் வினோத். புரியலைன்னா சொல்லுங்க!!! இன்னொரு தொடர் போட்டுடுவோம்! :)

இப்படியெல்லாம் மிரட்டுனாதான் கம்முனு கேள்வி கேட்காம இருக்கீங்க. இல்லைன்னா. அது என்னா இது என்னான்னு எனக்குத் தெரியாத கேள்வியை கேட்டு.. டார்ச்சர்! :)


@Heam : நாமளே ரவுடின்னு சொல்லிக்க வேண்டியதுதான் போல. கவனிக்க வேண்டியவங்க பார்க்க மாட்டேங்கறாங்களே! :) :)

நீங்க ஆயிரத்தில் ஒருவனை எழுதியிருக்கும் போது... அதே மேட்டரை நானும் 04-ல் எழுதியிருந்தேன். ஹா. ஹா. ஹா..!! பதிவில்லை ரெண்டு பாராதான்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 27, 2009 3:26 PM

இந்தியாவில் இவ்வளவு மென்பொருள் துறைகள் இருந்தும் ஏன் ஒரு படத்தில் கூட கிரபிக்ஸ் காட்சிகள் சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை.//
ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் இல்ல? அழகிய தமிழ்மகன் படத்தில ஒரு எறும்பு வருமே, அப்புறம் கந்தைசாமி படத்தில சேவல் வருமே, அப்புறம் அப்புறம் ஆஆஆ வில்லு படத்தில ஒரு மாடு வந்து வடிவேலுவ முட்டுமே,என்னையா படம் பாக்குற குரு?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 27, 2009 3:29 PM

உங்க நக்கல் இருக்கே...!!! அதுக்கே... என் சொத்து அத்தனையையும் எழுதித் தரலாம்.

ஆனா.. 10,000 கடன் தான் இருக்கு. பரவாயில்லையா?//
தல அவன் சொத்தை எல்லாம் கேட்க மாட்டான்
ஒரு ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் பாலிசி போட சொல்லுவான், நாங்க அத்தனை பேரும் எடுத்துட்டோம்.ஹிஹிஹி
===================
தல வெறும் 10000டாலரெல்லாம் ஒரு கடனா?
எனக்கு 40000இருக்கு தல , கட்டலேன்னா கோவிந்தா

ஹாலிவுட் பாலா said... December 27, 2009 6:47 PM

ஹா.. ஹா.. ஹா.. ! கந்தைசாமியா???

கொடுமையே..! அதை டவுன்லோட் பண்ணி... அந்த மன்சூரலிகான் சண்டை வரைக்கும்தான் பார்க்க முடிஞ்சது. ஹண்டர் கூட பார்த்துட்டேன். இதை முடியல..!! :)

ஆஹா. என்னையும் மாட்டிவிடத்தான் அங்க வரசொல்லிகிட்டு இருக்கீங்களா??

40,000-மா?? தினார்? ஆர் ருபீ? எனக்கு ஒரு ரூபா கடன் இருந்தாலே தூக்கம் வராது. அதே மாதிரி ஒரு டாலர் சேவிங்ஸ்ல இருந்தாலும்!!

நோ கடன்.. நோ சேமிப்பு!! இப்போதைய வாழ்க்கை இது.

Sugumarje said... December 28, 2009 7:01 PM

பாலா--- முடியல... என்னால பேசமுடியல... :-(
நடத்துங்க...ம்,ம்,ம்... நாங்கள் எல்லாம் பின்னாடிதான் வரணும் போல..முதல்ல வீட்டுல சொல்லி திருஷ்டி கழிக்க சொல்லிடுங்க...கிரேட்பா...!

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil