புது வரவு - நம்பிக்கை

12/14/2009

Bad Lieutenant: Port of Call - New Orleans (2009)




பல்ப் ஃபிக்ஸனின் ப்ராப்ளம் சால்வர், ஹார்வி கெய்டல், 1992-ல் நடித்தப் படத்தின் ரீமேக்கில், விளக்கெண்ணை மன்னன் 'நிக்கலஸ் கேஜ்' நடித்து, கடந்த ஒரு வருடமாக வெளிவர துடித்துக் கொண்டிருக்கும் படம். 1992- படத்தைப் பார்த்தவர்களுக்கு இது எந்த அளவுக்கு பாதிப்பைத் தரும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தப் பதிவு... 2009-ஐ மட்டும்தான் பார்க்க போகிறோம்.



ஹரிகேன் கட்ரீனா அடித்து ஓய்ந்தப் பின், அதன் ஆஃப்டர் மேத்-தாக படம் தொடங்குகிறது. நிக்கலஸ் கேஜ், விஜயகாந்த் போலவே ஒரு சின்ஸியர் போலீஸ்!!! ஊகும்.. அப்படி நினைத்தால்... நீங்க டிசம்பர் ஃபூல் . இவரும் வால்  கில்மெரும், மற்ற உயிர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாத போலீஸ்காரர்கள். தண்ணிக்குள் மாட்டியிருக்கும் ஒருத்தனை, தன் காஸ்ட்லி அன்டர்வேர் கறையாகிவிடும் என்பதால் கூட காப்பாற்ற யோசிக்கும் க்ரூக்.

ஆனாலும் அவனை காப்பாற்றப் போய், அதற்கு பதவி உயர்வும், கூடவே நிரந்தர முதுகு வலியும் கிடைத்து, அதன் மூலம் போதைக்கு அடிமையாகிறார். அவரின் காதலி இவா மென்டெஸுக்கு, உலகின் பழமையான தொழில்.  இருவரும் எப்பொழுதும் போதையிலேயே திளைக்க, ஒரு இல்லீகல் இமிக்ரன்ட் வீட்டில் 'எக்ஸிக்யூஸன் ஸ்டைலில்' மொத்தக் குடும்பமும் கொல்லப் படுகிறது.

நிக்கலஸ் கேஜிற்கு அதை கவனிக்கும் பொறுப்பு. கொல்லப் பட்டவன் போதைப் பொருட்களை சில்லரை சப்ளை செய்பவன்.  கொலையை ஒரு இளைஞன் நேரில் பார்த்திருக்க... அவன் கொலையாளி யாரென சொல்கிறான். கேஸை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டுடிருக்கும் போது, தலைமறைவான கொலையாளி, கண் முன் வந்தும், சாட்சி சொல்ல வேண்டியவன் ஊரை விட்டு ஓடிவிட.... கொலையாளி தப்பிக்கிறான். அவன் ஏரியாவின் தாதா.

போதை கடத்தல் காரர்களிடம் இருந்து கண்டுபிடிக்கும் வஸ்துகளை வைக்கும் அரசாங்க கூடத்திலிருந்தே, சரக்கை அவ்வப்போது தன் மூக்கில் அனுப்பிக் கொள்ளும் நிக்கலஸ்கு..., இன்டர்னல் ஆடிட்டிங் பிரச்சனைகளால் 'மருந்து' கிடைக்காமல் போக..... வழியில் போகும் இளசுகளை மிரட்டி வாழ்க்கையை தள்ள வேண்டிய கட்டாயாம். கூடவே சூதாட்டத்தில் ஏகப்பட்ட நஷ்டம்.

ஒரு கட்டத்தில்...... போதை மருந்து கொலையாளியும், போதைக்காக அவனுடனேயே கூட்டு சேரும் நிக்கலஸும் கை குலுக்க...... மிச்சமெல்லாம் வெண்திரையில்... ஸாரி.... டிவி திரையில்.


ஒரிஜினலுக்கும் இந்தப் படத்திற்கும் சுமார் 5%-10% ஒற்றுமை இருக்கலாம். ஒரிஜினலில்... ஒரு கன்னிகாஸ்த்ரி கற்பழிக்கப் பட்டிருக்க... அதை கண்டுபிடிக்கும் கதையாக போகும். இரண்டின் முடிவுகளும் மொத்தமாக மாற்றப் பட்டுள்ளது.

இரண்டுப் படங்களுக்கும் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை, வித விதமான போதை பொருட்களை.. உபயோகிப்பதை விலாவாரியாக காட்டுவதுதான். கூடவே... ரோட்டோர இளசுகளை மிரட்டுவதும் அவர்களை செக்ஸுவலாக துன்புறுத்துவதும்.

கதை.. இயக்கத்தை ஒப்பிட்டால்... இரண்டு படங்களிலும் எதோ ஒன்று நன்றாகவோ, மோசமாகவோ இருக்கின்றன. பழைய வெர்ஷனுக்கு... ஒரு ஒன்னரை மணிநேர பொறுமை வேண்டும். புதிய வெர்ஷனில்.. நிச்சயம்.. நிறைய சினிமாத்தனமான காட்சிகள் (குறிப்பாக க்ளைமேக்ஸ்).

நடிப்பை ஒப்பிட்டால்.... ஹார்வி 1% மேல். பதிவு 2009-ஐப் பற்றி மட்டும் என்பதால்...., Lord of War & World Trade Center-க்குப் பிறகு, ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நிக்கலஸ், Knowing போன்ற குப்பையில் இருந்து, மீண்டும் தன் பழைய ஃபார்மிர்க்கு வந்திருக்கிறார்.

நிக்கலஸின் கேரக்டர் மிக காம்ப்ளக்ஸானது. எப்பொழுது நல்லவன், எப்பொழுது கெட்டவன் என யாராலும் தீர்மானிக்க முடியாத பாத்திரம். கொலையை கண்டுபிடிக்க எடுக்கும் முறய்சிகளில் தெரியும் போலீஸின் மனம், தனக்குத் தேவையான விஷயங்களுக்காக அப்படியே மாற்றி... அந்த நேரத்திற்கு தேவையான சுயநலத்தைக் காட்டும்.

ஒன்று... மொத்தமாக நல்லவனாகவோ.. அல்லது... கெட்டவனாகவோ பார்த்தே பழக்கப் பட்டுவிட்ட நமக்குத்தான் மண்டையைப் பிய்த்துக் கொள்ளத் தோண்றும். ஆனால் யோசித்தால்....., நாமும் கூட Bad Lieutenant தான். சர்வைவலுக்காகவும், சுயநலத்திற்காகவும் எதையும் செய்யும் மனம்தான் எல்லோருக்கும் இருக்கும். அதை.. ஒரு ஹீரோ.. சினிமாவில் செய்வதைத் தான் பார்க்க முடியவில்லை.

பெயரைப் பார்த்துவிட்டு... பெரிய அதிரடிப் படமென நினைக்க வேண்டாம். இது... ஒருவித ஆர்ட் பட, ரியாலிடி டைப் படம். "கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின்".... இன்னும் மேம்பட்ட ஒரிஜினல் போலீஸ் வாழ்க்கையின் எபிஸோட். படத்தின் இயக்குனர் Werner Herzog ஆர்ட் பட ஏரியாவில் மிகப் பிரபலமானவர். நமக்கு மிகவும் பழக்கமான ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அது... நானே எழுதி.. நானே படித்துக் கொண்ட, என் முதல் பதிவு : Rescue Dawn.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் முன்பே முடிக்கப் பட்டும்... ‘வைட் ரிலீஸ்’ கிடைக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறது. படம் நியூயார்க்கிலும், கலிஃபோர்னியாவிலும் மட்டுமே வெளியாகியுள்ளது. பொறுத்து பொறுத்துப் பார்த்து.. கடைசியில்.. என்ன... பண்ணியிருப்பேன்னு உங்களுக்கே தெரியும்.

Precious போலவே இதுவும் டார்க் தீம்தான். ஆனால்... Precious-க்கு கிடைத்த வைட் ரிலீஸ் இதற்கு கிடைக்காதது இதன் துரதிர்ஷடம்.  ஒரு நல்லப் படத்தையும் மிஸ் பண்ணக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு..... 1992 & 2009 - இரண்டையும் பார்த்து விடுங்கள்.


Bad Lieutenant = கடமை? கண்ணியம்?? கட்டுப்பாடு???





47 தியேட்டர் கமெண்ட்ஸ்:

sriram said... December 14, 2009 10:51 AM

ஜாம்பவானே...
இன்னிக்கு ஆபிஸ்ல டெமோ வெச்சிக்கிட்டு பார்ட்டிக்கு போறது, படம் பாக்கறது, போஸ்ட் போடறதுன்னு எல்லா வேலையும் செய்யுறாப்ல இருக்கு, ஆபிஸ் வேல அவ்வளவுதானா??
நானும் நெறய போன்ல தொந்தரவு பண்ணிட்டேன், அனைத்து உதவிகளுக்கும் நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

pappu said... December 14, 2009 10:55 AM

அப்ப படம் ஓ.கே? நல்லது... இவா மெண்டிஸ் என்னவோ எனக்கு கொஞ்ஞ்ஞ்சம் பிடிக்கும்.. BTW, me the first?

pappu said... December 14, 2009 10:55 AM

Damn, உஷாரா இருக்காங்கப்பா!

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 10:56 AM

இதை எழுதி.. ஒரு வாரத்துக்கும் மேல ஆய்டுச்சிங்க ஸ்ரீராம். அந்த வேலையை முடிக்காம... இந்த ஏரியா பக்கம் வரக்கூடாதுன்னே... இதை பப்ளிஷ் பண்ணலை.

Hope you having a great time. எப்ப வேணும்னாலும் கால் பண்ணுங்க. இதில் என்ன தொந்தரவு.

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 10:57 AM

இவாவை பிடிக்கிற முதல் ஆள் நீங்களாதான் இருக்கும். ஹிட்ச் தவிர.. மத்த எதிலும்.. எனக்கு இவாவை பிடிச்சதில்லை.

சுப.தமிழினியன் said... December 14, 2009 10:58 AM

ரொம்ப கேப்பிற்கு அடுத்த பதிவு...

அடுத்ததுக்கும் இவ்ளோ டைம் எடுத்துப்பீங்களா???????

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 14, 2009 10:59 AM

தல,
ஷார்ஜா வந்தாச்சு, இதன் 1992 பார்த்திருக்கேன், 2009 பார்க்கணும், நல்ல விமர்சனம் தல, ஃபார்மாலிட்டி பண்ணியாச்சி

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 11:00 AM

இல்லைங்க தல..! ஆஃபீஸ் டெமோ ஒன்னும்.. இன்னொரு பர்சனல் வொர்க்கும் இருந்துச்சி. ரெண்டும் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சி.

இனிமே தினமொரு பதிவு போட்டுடுவோம்.

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 11:01 AM

/////ஃபார்மாலிட்டி பண்ணியாச்சி/////

ஹா.. ஹா.. ஹா.. !! இதென்ன.... கலையரசன் கலாய்ச்சவுடனே... வார்த்தைகளை மாத்திட்டீங்களா? :) :)

மிக்க நன்றி கார்த்திக்கேயன்.

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 11:02 AM

நீங்க ஷார்ஜா வந்தப் பதிவை காலையில் படிச்சேன். ஷண்முகப்ரியன் சாரிடம் அவர் போட்டோவை ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தேன். உங்க புண்ணியத்தில்தான் அது நடந்திருக்கு! :) :)

pappu said... December 14, 2009 11:03 AM

நான் ஹிட்ச்ல மட்டும் தான் பாத்திருக்கேன்! ஹி.. ஹி..

pappu said... December 14, 2009 11:04 AM

அப்புறம் நாங்கல்லாம் சின்ன வயசு எல்லாத்தையும் பிடிக்கும். கள்ளம் கபடமே கிடையாது...

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 11:11 AM

என்ன இப்படி சொல்லிட்டீங்க? 2 Fast 2 Furious, Ghost Rider... இதெல்லாம் பயங்கர ஃபேமஸ் படமாச்சே.

ஆமாங்க.... கபடமில்லா மனசுதான்! கேள்விப் பட்டோம்! :) :)

pappu said... December 14, 2009 11:14 AM

யா... ஆமா பிகினில வருவாங்களே! எப்படி மறந்தேன். ஆங்... கள்ளம்கபடமில்ல மனசு!


நீங்க கேள்விபட்டோம்னு சொல்லுற டோனே சரியில்லயே!

செ.சரவணக்குமார் said... December 14, 2009 11:16 AM

வழக்கம்போல கலக்கல் விமர்சனம் தல. இனிமேல் தலைமறைவாகும்போது முறைப்படி அறிவிக்கவும். டெய்லி வந்து வந்து பாத்துட்டு ஏமாந்துட்டேன். நம்ம செல்லம் கார்த்திகேயன் பாணியில பார்மாலிட்டி பண்ணியாச்சு.

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 11:27 AM

@பப்பு: மதுரையில.. அண்ணனுக்கு அப்புறம்.. உங்களுக்குதான் அப்படிப்பட்ட மனசுன்னு ஊரே சொல்லுதே!


@சரவணக்குமார்: தலைமறைவு எல்லாம் இல்லீங்க. அங்கங்கே பின்னூட்டத்தில் சொல்லிகிட்டுதான் இருந்தேன். ஒரு வாரம் வர மாட்டேன்னு எல்லாம் சொல்லி.. ஒரு பதிவு போட்டேன்னு வச்சிக்கங்க... பசங்க ‘ஹையா ஜாலி’-ன்னு கும்மி அடிச்சிடுவாங்க. அதான் சைலண்ட்! :)

pappu said... December 14, 2009 11:44 AM

கம்பேரிஸனே சரியில்லையே!

நான் நீங்க போன கேப்புல படத்த பத்தி இன்னொரு பதிவப் போட்டு பெரிய ஆள் ஆகிட்டேன். :)

சென்ஷி said... December 14, 2009 11:46 AM

வரலைன்னாலும் கும்மி அடிச்சி வச்சிடுவோம். சாக்கிரத..

வழக்கம்போல ஃபார்மாலிட்டி செஞ்சாச்சு ;)

வினோத்கெளதம் said... December 14, 2009 12:23 PM

சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..
என்னடா ஆளையே காணோமே எங்கயோ வசமா "மாட்டிகிட்டிங்கனு" நினைத்தேன்..
ஊருக்கு போனாலும் போனாங்க..ஒரே பார்ட்டி "அது" "இது"ன்னு தினமும் அமர்க்களப்படுது பிறகு..என்ஜாய் பண்ணுங்க..

pappu said... December 14, 2009 12:27 PM

ஆமா வினோத் ஆளு சரியில்ல... பீர் பாங், ஸ்ட்ரிப், ஸ்ட்ரீக்கிங்னு வீக் எண்ட் ஜமா போல.... மேலிடத்துல பத்த வைக்க வேண்டியதான்...

அண்ணாமலையான் said... December 14, 2009 12:39 PM

ஏன் தலைவா போன்ல பேசிக்கறீங்க ஆனா பினூட்டத்துல பின்றீங்களே? என்ன விஷயம்?

ஆதிமூலகிருஷ்ணன் said... December 14, 2009 12:55 PM

டிவிடி கைவசம் இருக்கு, உடனே பாத்துடவேண்டியதுதான்.!

ஆதிமூலகிருஷ்ணன் said... December 14, 2009 12:56 PM

பை தி வே, எனக்கு நிக்கோலஸை ரொம்ப பிடிக்கும்.

VIJAY said... December 14, 2009 12:56 PM

வெல்கம் பேக். மற்றவர்கள் போட்டோவை நீங்க கேட்கலாம்...நாங்க மட்டும் உங்க போட்டோவை கேட்க இல்ல பார்க்க கூடாதா? என்ன ஒரு அடாவடித்தனம். மரியாதையாக உங்க போட்டோவை பப்ளிஷ் பண்ணவும்.

rajeepan said... December 14, 2009 1:09 PM

இந்தபடத்தை பார்க்கலாமா வேணாமா என்று சில நாட்களாகவே தடுமாறிட்டு இருந்தன்...இப்ப முடிவு கிடைச்சிட்டது..எதாவது நல்ல Feel Good படங்களை அறிமுகப்படுத்துங்கள்;..

rajeepan said... December 14, 2009 1:12 PM

டிசம்பர் 18 வரைக்கும் காத்துக்கொண்டு இருக்கின்றேன்..அவதார் படத்தை பார்ப்பதற்க்கு இல்லை நீங்க எழுதப்போற அதன் விமர்சனத்தை படிப்பதற்க்கு...

கருந்தேள் கண்ணாயிரம் said... December 14, 2009 1:23 PM

தல.. நம்ம வெர்னர் ஹெர்சாக்குக்காகவே இந்தப்படத்த பாக்க போறேன் . . இன்னொரு மேட்டர் என்னன்னா, நமக்கும் இவா மென்டஸ் மேல ஒரு பிரியமுங்கண்ணா . . ஹீ ஹீ . . . :)

சுப.தமிழினியன் said... December 14, 2009 1:36 PM

//எதாவது நல்ல Feel Good படங்களை அறிமுகப்படுத்துங்கள்;..//

ரிப்பீட்டே

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 1:39 PM

@பப்பு: பார்த்தேன். ஆளு இல்லைன்னா.. சந்துல சிந்து பாடிடுறீங்க! :)

@சென்ஷி: இப்படி துரத்தினா... நான் எங்கே போவேன்! :) :) பார்மாலிடிக்கு, ஃபார்மாலிடியா நன்றி! :) :)

ஸ்பூஃப் படங்களைத் தான் இந்த மாசத்து தீமா வச்சிருந்தேன். பிஸியில் ஒன்னும் வேலைக்காகலை.! :(

@வினோத்: அண்ணே... ரெண்டே பார்ட்டி. ஒன்னு ஆஃபீஸ் க்றித்மஸ் பார்ட்டி. இன்னொன்னு... யுனிவர்சிடி ப்ரொஃபசர்களோடு. இந்தக் கதையை தனியே ஒரு பதிவா எழுதலாம். அவ்ளோ சுவாரசியம்.

நான் என்னமோ. ஸ்ட்ரிப் க்ளப்ல போய் டிஸ்கோ ஆடின ரேஞ்சுக்கு இல்ல.. நீங்க ரெண்டு பேரும்... இதை ஏத்தி விடுறீங்க? :)

@பப்பு: பத்த வச்சீங்கன்னு வச்சிக்கங்க. ‘அண்ணன்’ கிட்ட சொல்லி.. ‘பத்த’ வச்சிடுவோம். அவருக்கு.. அதில் ஏகப்பட்ட அனுபவம் தெரியுமில்ல?

@அண்ணாமலையான்: ஸ்ரீராம் பின்னூட்டத்தை சொல்லுறீங்களா? :)

போனில் பேசும்போது.... இதையெல்லாம் சொல்லலையே..!! அதான்1 ;0

அண்ணாமலையான் said... December 14, 2009 1:57 PM

நம்பிட்டேன். சீக்கிரம் அடுத்த படத்தோட வாங்க...

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 2:15 PM

@ஆதி : முடிஞ்சா.. 1992-ஐயும் பாருங்க தல. ஆர்ட் படங்கள் பிடிக்கும்னா... I prefer the original.

@விஜய்: காதை.. கொண்டாங்க. ரகசியமா.. போட்டோ காட்டுறேன்! :) :)

நம்ம போட்டோவைப் பார்த்து என்ன பண்ணப் போறீங்க தல. பயந்து போய்.. 2 நாளுக்கு தூக்கம் வராம போய்டும்.

@ராஜீபன்: 18+ படங்களா பார்த்து பார்த்து.. எனக்கும் அப்படி ஒரு படம் பார்க்கனும் ஆசை வந்துடுச்சி. அவ்வளவு கவிச்சை. ஆனாலும்... பாருங்க.. இன்னும் 5 படம் 18+ -ல் மிச்சம் இருக்கு. அதையும் போட்டுட்டு.. தலைய முழுகிட்டு.. ஒரு ஃபீல் குட் படத்தை போட்டுடுவோம்.

படத்துக்கு, 17 நைட்டு, ஐமேக்ஸ் தியேட்டரில், டிக்கட் புக் பண்ணிட்டேன். 2.45 மணி நேரப் படம். விளம்பரம் அது இதுன்னு.. படம் முடிய ஒரு 3 ஆய்டும். வீட்டுக்கு வந்து பதிவு எழுதிட்டு படுக்க 5 ஆகலாம். அந்த நேரத்தில் இந்தியாவில் வெளியாகி நீங்க எல்லாம் பார்த்து முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

முயற்சி பண்ணுறேங்க தலை!

@கருந்தேள்: இங்க பாருப்பா.. இன்னொரு இவா ரசிகர். எப்படிங்க... அந்த அம்மாவைப் போய்.. ரசிக்கறீங்க??

@சுப.த: இன்னும் அஞ்சு 18+. அப்புறம் ஃபீல் குட்

@அண்ணாமலையான்: நாளைக்கே போட்டுடுவோம்.

அண்ணாமலையான் said... December 14, 2009 2:56 PM

தல ரிலீஸ் டேட் தள்ளி போச்சாமே? அப்படியா?

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 2:59 PM

வேட்டைக்காரன் வர்றனால... கேம்ரூன் பயந்துகிட்டாருன்னு படிச்சேன்! :) :) :)

சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம்.. நம்ம பசங்களுக்கு விஜய்தான் கிளுகிளுப்பை! :): )

போட்டுத்தாக்கறாங்க! :) :)

Kabi said... December 14, 2009 4:09 PM

செ.சரவணக்குமார் கமெண்ட் அப்படியே ரிபீட்டு
//வழக்கம்போல கலக்கல் விமர்சனம் தல. இனிமேல் தலைமறைவாகும்போது முறைப்படி அறிவிக்கவும். டெய்லி வந்து வந்து பாத்துட்டு ஏமாந்துட்டேன். நம்ம செல்லம் கார்த்திகேயன் பாணியில பார்மாலிட்டி பண்ணியாச்சு.//

இன்னிக்கு பதிவு போடாம இருதிருந்த மெயில் அனுபலம்னு இருந்தேன்...

Saravana Kumar MSK said... December 14, 2009 4:19 PM

பார்த்துட்டு சொல்றேன்.. :)

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 4:20 PM

இனி.. இதுக்கு அவசியமே இல்லாம.. தினம் ஒரு பதிவு போட்டுடுவோம்.. கபி! என்ன சொல்லுறீங்க?

பின்னூட்டம் போடுறதுக்கு கூட... இனிமே.. யாருக்கும் சரக்கு இல்லாம பண்ணிடலாம்.

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 4:21 PM

சரவணக்குமார்: நீங்க என்னை விட.. அடிக்கடி.. காணாம போய்டுறீங்களே..? :( :(

டம்பி மேவீ said... December 14, 2009 7:51 PM

raittu..... intha weekend dvd kidaicha parthura vendiyathu thaan ......


vettaikaran vs avatar.....20-20 match madiri irukkum.....

vijay ulaga nadippukku vanthu romba naal agiruchu...ithu theriyama pesuranga

என் நடை பாதையில்(ராம்) said... December 14, 2009 7:55 PM

/*நிக்கலஸ் கேஜ், விஜயகாந்த் போலவே ஒரு சின்ஸியர் போலீஸ்!!! */ ஹா ஹா!

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 8:10 PM

@டம்பி மேவீ: உண்மையை சொன்னீங்க தல. இதை வெளிய சொன்னா.. நம்மை பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. அதான் சைலண்டா இருக்கேன். :)

@ராம்: :) :) பின்ன இல்லீங்களா?

Balavasakan said... December 14, 2009 8:32 PM

நிக்கலஸ் கேஜக்கு எத்தனை வயசு மனுசன் கிழண்டி போனாலும் நடிக்கிறதை விடமாட்டேங்குது ..

ஷண்முகப்ரியன் said... December 14, 2009 10:19 PM

I saw this without subtitles.Nothing interesting,Bala.

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 11:07 PM

@பாலவாசகன்: ஏங்க... நம்ம ஊர்ல அமிதாப் நடிக்கலீங்களா? நிக்கலஸ்கு வயசு 45 தாங்க. அவரும் யூத்துதான்.

@ஷண்முகப்ரியன் சார்: இப்படி நீங்க சொன்னதுதான் எனக்கு இண்ட்ரஸ்டிங்கா இருங்குங்க சார்! :) :)

கலையரசன் said... December 15, 2009 2:36 AM

ஈவா மென்டிசை பிடிக்காத உங்களுக்கு அடுத்த இரண்டு பதிவுக்கும் பின்னூட்டம் வராமல் போக...

இப்படிக்கு,
பத்தினன்

butterfly Surya said... December 15, 2009 4:25 AM

பாலா, வேலைல இருக்கியா..??

கோபிநாத் said... December 15, 2009 2:18 PM

வர வர நல்லா படங்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டிங்க தல ;))

ஹாலிவுட் பாலா said... December 15, 2009 3:06 PM

@கலை: இவாவை பிடிச்சவங்களுக்கு.. ரெண்டு வாரம், ஒட்டகப் பால் கிடைக்காம போகக் கடவ! :) :)

@பூச்சி : இப்ப கொஞ்சம் ஃப்ரீ ஆய்ட்டேன் பூச்சி. எதுவும் இம்ப்?

@கோபி : கொய்ப்பு தானே!! :) உங்களுக்காக... மாடா உழைச்சு ஒரு மாசம் 18+ பார்த்தா... உடனே.. கலீஜ் படம் பார்க்கறவன்னே முடிவு கட்டிடீங்களா? :) :) :)

ஹாலிவுட் மட்டும் வச்சிகிட்டா வஞ்சனை பண்ணுறாங்க தல. :) :)

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil