புது வரவு - நம்பிக்கை

12/08/2009

Precious (2009)


ஒரு மாதம் முன்பே வெளியானப் படம். படத்தின் ஒரு தயாரிப்பாளர் Oprah Winfrey. தியேட்டருக்குப் போக பயந்த, முக்கியக் காரணம் இந்தப் பெயர்தான். அக்கா... அங்கேயும் ஒரு கர்ச்சிப்பை இலவசமாக கொடுத்துவிடுவாரோ என நினைத்தேன்.


எங்கே தியேட்டரில் அழுது, மானத்தை வாங்கிக்  கொள்வேனோ என பயந்து கொண்டே போகாமல் இருந்து, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டுப் பார்த்தால்..., இந்த ஆண்டுக்கான சிறந்த படத்தை இத்தனை நாள் தவற விட்டது தெரிந்தது.

ப்ரெஷ்யஸ் - கனவு தேசத்தின் கருப்புப் பக்கத்தை புடம் போட்ட Push நாவலைத் தழுவிய fresh mint. படு டார்க்கான ஒரு தீமை, செம ஜாலியாக சொல்லியிருக்கிறது. ஆனாலும் மசாலா பிரியர்களுக்கான படம் மல்ல. முதல் பார்வைக்கு... இது பெண்களுக்கான படம் போலத் தெரிந்தாலும்...., அல்லது அப்படியே இருந்தாலும்.... அதை முன்னிட்டு நீங்கள் பார்க்கவில்லையெனில், ஹாலிவுட்டில் எப்பவாவது நடக்கும் அதிசியத்தை நீங்கள் பார்க்க தவற விடுகிறீர்கள்.


ப்ரெஷ்யஸ் - ஹெவி வெய்ட்..... பதினாறு வயது, பள்ளிக்கூடம் சென்றும் படிப்பறியா பெண். ஏற்கனவே ஒரு டவுன் சின்ட்ரோம் குழந்தைக்குத் தாய். இன்னொன்று அவள் வயிற்றில். இரண்டு குழந்தைகளுக்கும் தந்தை? - அவளின் அப்பாவேதான்.

தன் மகளை, தன் கணவனே, தன் கண் முன் கற்பழிக்கும் போதும், கண்டுகொள்ளாமல், இந்த குழந்தைகள் மூலம் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும், செக்கில் மட்டுமே கவனமாய் இருக்கும் தாய்; பள்ளி முடிந்து  வீட்டிற்கு வந்தால் தன் தாய்க்கு சமைத்துப் போடுவதைத் தவிர, அ ஆ இ ஈ கூட தெரியாத ப்ரெஷ்யஸ்.  இது அவள் தினசரி வாழ்க்கை. அவளின் ஒரே சந்தோஷம்......, தன்னை எல்லோரும் ஒதுக்கும் போது, 'தானொரு மிகப் பெரிய மாடல் ஆர்டிஸ்ட்' என்ற கனவில் வாழ்வது மட்டும்.

தன் இரண்டாவது கர்பத்தைப் பற்றித் தெரிந்ததும், அவளை சீர்திருத்த , ஆல்டர்னேட்டிவ் பள்ளிக்கு அனுப்ப, அவளைப் போலவே இன்னும் சில பிஞ்சில் பழுத்தப் பெண்களும், ஒரு டீச்சர் ரெய்னும். ப்ரெஷ்யெஷின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கிறது. எழுதப் படிக்க ஆரம்பிக்கிறாள். தன் வாழ்க்கையை தினசரி புத்தகத்தில் பதிகிறாள். ரெய்ன் உண்மையாகவே, ப்ரெஷ்யஷின் வாழ்க்கையில் முதல் முதலாக மழை பொழிய வைக்கும் போது......

Welfare -ல் இருந்து செக் வருவது நிற்கிறது. இது அவள் அம்மாவுக்கு பெரிய பிரச்சனையாக, welfare இன்டர்வ்யூவில், ப்ரெஷ்யஷின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. நடுவில் அவளின் இரண்டாவது குழந்தை எந்தக் குறையின்றியும் பிறக்க.......,

நண்பிகளும், டீச்சரும் மட்டுமே உறுதுணை. குழந்தையை வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு வரும்பொழுது, அவள் அம்மாவின் இன்னொரு முகம் அறிமுகமாக..., ப்ரெஷ்யஷ் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். டீச்சரின் ஆதரவோடு காலம் தள்ள ஆரம்பிக்கும் போது..........

அவள் கேள்விப் படும் 'இடியில்'........... கடைசி அரைமணி நேரத்திற்கு.... பிழிந்து அனுப்புகிறார்கள். 


ரெய்ன் னாக வரும் 'Paula Patton'த் தவிர மற்றவர்களை எல்லாம் டிவியில் தேடினால்தான் கிடைப்பார்கள். ப்ரெஷ்யஸாக Gabourey Sidibe. முதல் படமாம்.  படத்தில் யாராவது நடித்திருக்கிறார்கள் என்று சொன்னாலே வாய் அழுகிவிடும். அத்தனை இயல்பு. இவர்தான் எனக் குறிப்பிட்டு யாரையும் கை காட்ட முடிய வில்லை. அதிலும் கடைசி காட்சிகளில் அம்மாவாக வரும் Mo'Nique-..... ப்ச்!!

கலாச்சாரத்தை எல்லாம்... மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டுத் தான்..... Push நாவலை Sapphire 1996-ல் எழுதியிருக்கிறார். அதை தைரியமாக திரைக்கதையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். மொத்த அதிர்ச்சியையும் உடனே தராமல்.. கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஊசி ஏற்றப் படுகிறது. அதை உணராமல் இருக்க......., விக்ரமன் படத்தின் வயலின்களும், ஒப்பாரிகளும் இல்லாமல்........ துள்ளாட்டம் போட வைக்கும் பின்ணணியிசையும்... பாடல் கோர்ப்புகளும். ஆனால்.. துள்ளாட்டத்தையும் மீறி.... அமெரிக்க கருப்பர்களின் வாழ்க்கை, அது கற்பனையாக இருந்தால் கூட..... காட்சிகளில் கனமாக. இயக்குனர் லீ டேனியலுக்கு ஒரு ராயல் சல்யூட்.

வழக்கமாக இது போன்ற சிறுபான்மையின மக்களின் படங்களை.. அவர்களே நடித்து... இயக்கி..... அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்தக் கதைதான் இங்கும். பார்த்த பத்து பேரில்  நான்தான்..  'வொய்ட்'.

ஸ்லம்டாக் கூட போன வருடம் இந்த நேரத்தில்தான் வெளியானது. ஆஸ்கர் நாமினஷன் எல்லாம் வந்தப் பின்தான் வைட் ரிலீஸ் ஆனது. ப்ரெஷ்யஸ்... ஸ்லம்டாகை விட... பல மடங்கு அருமையானப் படம். அதை விட டார்க். அதை விட என்ட்டர்டெய்னிங். ஆனால்..... கொஞ்சம் கொஞ்சமாக ரிலீஸ் செய்து... வைட் ரிலீஸ் ஆகும்போது...  மிக பரபரப்பாக பேசப்பட்டு..... முதல் இரண்டு வாரங்கள் நன்றாக இருந்தும்.... படுத்து விட்டது என நினைக்கிறேன்.

ஆஸ்கர் நாமினேஷனில் இந்தப் படம்... நிச்சயம் அடிபடும். வெற்றி பெற்றால் நிச்சயம் எனக்கு ஆச்சரியமாக இருக்காது. முதன் முறையாக.. பன்ச் லைனிற்கு எதையும் யோசிக்கத் தேவையில்ல.....!!



Precious = Precious





[இனி.. ஓப்பன் சோர்ஸ் மட்டும்தான் என முடிவு செய்து, லினக்ஸை போட்டுவிட்டு, இரண்டு மூன்று நாட்களாக தமிழில் அடிக்க தடவிக் கொண்டிருக்கிறேன். "ஷ" சரியாக வரவில்லையென தமிழ் மொழியையும் சேர்த்து இன்ஸ்டால் செய்தால்.. இப்பொழுது, ஷ - சரியாகி.. எல்லா வார்த்தைகளும் 'போல்ட்' ஆகி விட்டது. NHM-ல் இவ்வளவு நாள் பழகி...,  IBus-ல் அடிப்பதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. இன்னும் ஆய்த எழுத்தை எப்படி கொண்டு வருவது எனத் தெரிய வில்லை. யாருக்காவது தெரியுமா?]



73 தியேட்டர் கமெண்ட்ஸ்:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... December 8, 2009 10:08 PM

இந்த வருஷ பெஸ்ட்டிவலுக்கு நிச்சயம் வரும்னு எதிர்பார்க்கிறேன். பார்த்தர்றேன்..!

ஹாலிவுட் பாலா said... December 8, 2009 10:21 PM

தல... திரும்ப வந்துட்டீங்களா.....??!! வெல்கம்.. வெல்கம்!!!!!!! :) :) :)

பெஸ்டிவெல்லில் மேட்டர் படம்தானே போடுவாங்க? இதில் மேட்டர் இல்லையே????!!!!

pappu said... December 8, 2009 10:28 PM

அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்தக் கதைதான் இங்கும். பார்த்த பத்து பேரில் நான்தான்.. 'வொய்ட்'.
/////

சீரியஸ் பதிவுலயுமா? :)

ஓபன் சோர்ஸ்? ஐ லைக் திஸ் ஐடியா! பட் ஐ ஜஸ்டு வாண்ட் டு எக்ஸ்ப்ளாய்ட் பில் கேட்ஸ் அ லிட்டில் மோர். :) பைரஸி!

butterfly Surya said... December 8, 2009 10:28 PM

ரைட்டு . பார்க்க வேண்டியதுதான்.

ஹாலிவுட் பாலா said... December 8, 2009 10:41 PM

@பப்பு: நம்ம புத்தி... எனக்கே தெரியாம டைப் பண்ணியிருக்கேன்! :)

@பூச்சி: கண்டிப்பா.....!! இது உங்க படம்.

சென்ஷி said... December 8, 2009 10:43 PM

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மேல ஆய்த எழுத்து அடிச்சிருக்கேன் தலைவரே... எம்புட்டு வேணுமோ அம்புட்டும் யூஸ் பண்ணிக்கோங்க.

படத்தை பாத்திடறோம்.

ஹாலிவுட் பாலா said... December 8, 2009 10:47 PM

எல்லாம்.. கட்டம் கட்டமாதான் தெரியுதுங்க... சென்ஷி!! போராடிகிட்டு இருக்கேன்.

Cable Sankar said... December 8, 2009 11:02 PM

நல்ல அறிமுகத்துக்கு மிக்க நன்றி.. என்னாச்சு.. மீதி? :)

ஹாலிவுட் பாலா said... December 8, 2009 11:04 PM

ஏன்டா.. லினக்ஸ் போட்டேன்னு... தடுமாறிகிட்டு இருக்கேன் சங்கர்!..

இந்த வரியை அடிக்கறதுக்கே... பேக் ஸ்பேஸ்தான் நிறைய யூஸ் ஆச்சி. :( :( :(

T.V.Radhakrishnan said... December 8, 2009 11:17 PM

நல்ல அறிமுகத்துக்கு மிக்க நன்றி..

கலையரசன் said... December 8, 2009 11:29 PM

அப்பா! ஒரு நல்ல படத்தை பாத்துட்டீங்க...
அதுக்கு ஏதாவது பார்ட்டி...?

http://www.higopi.com/ucedit/Tamil.html
இந்த லிங்கை டிரை பண்ணி பாருங்க பாலு!
தமிழ் டைப்ரேட்டர்னு எழுதியிருக்கிற, ரேடியோ பட்டனை செலக்ட் பண்ணிட்டு டைப் பண்ணுங்க!!

இராம்/Raam said... December 8, 2009 11:29 PM

which Linux distro? version?

ஹாலிவுட் பாலா said... December 8, 2009 11:43 PM

@TVR : u welcome! :)

@கலையரசன்: நான் இன்னும் phonetic தான் யூஸ் பண்ணுறேன் தல. ஆனா.. அந்த லிங்க் என் flow-க்கு அருமையா வொர்க் ஆகுது. F12 தான் கொஞ்சம் பிரச்சனை. சமாளிச்சிடலாம். :) :)

@ராம்: உபுன்டு 9.10 இன்ஸ்டால் பண்ணியிருக்கேன் தல. தமிழ் font எல்லாம்.. இப்ப போல்ட் ஆகிடுச்சி. எதாவது நல்ல font ஒன்னு சொல்லுங்க தல.

கருந்தேள் கண்ணாயிரம் said... December 9, 2009 12:03 AM

பாலா.. இதப்பத்தி நம்ம நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டுருக்கேன் . .இந்த மனத் எண்டுல ஊருக்குப் போகும்போது இத அள்ளிகினு வந்து, பார்ப்பேன். .நீங்க சொன்னமாதிரி, இதுபோல நல்ல படங்கள அவனுங்க கண்டுக்கமாட்டானுங்க.. ஆஸ்கார் ல இது நாமினேட் ஆகுறதே அதிசயம்னு தோணுது . .ஏன்னா இத வேணும்னே இக்னோர் பன்னிருவானுங்கனு தோணுது..

சுப.தமிழினியன் said... December 9, 2009 12:04 AM

நானும் iBus தான் பயண்படுத்துறேன். ஆய்த எழுத்தடிக்க Q போதுமே.

lohit_tamil பயன்படுத்துங்க, நல்லா இருக்கும்.

//பார்த்த பத்து பேரில் நான்தான்.. 'வொய்ட்'.//
நெசமாத்தான் சொல்றீங்களா?

ஹாலிவுட் பாலா said... December 9, 2009 12:21 AM

@கருந்தேள்: இதை விட்டா.. வேற எந்தப் படம் நல்லதா வந்திருக்குன்னு தெரியலை. நிச்சயம் இடம் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

@சுப.தமிழினியன்: தல.. சூப்பர். வொர்க் ஆகுது. ஆனாலும்.. சில நேரம் சில எழுத்துக்கள் அடிச்சி ஒரு ஸ்பேஸ் விடும்போதுதான் வருது. அது குழப்பமா இருக்கு.

பழகனும்னு நினைக்கிறேன். இந்த 'ந' போடும் போது... ஹைஃபன் கொடுக்கறதும் பிரச்சனை.

பிரசன்னா said... December 9, 2009 12:41 AM

பாலா, நானும் இந்த படம் நல்ல இருக்கும்னு டவுன்லோட் பண்ணி பாக்க ஆரம்பிச்சேன்.. எனகென்னமோ அவ்வளவா பிடிக்கல.. ஓவர் ரியாலிட்டியா இருக்கு.. :(
நானும் என்னோட ப்ளாக்-ல (உங்கள பாத்த ஆர்வத்துலன்னுகூட வச்சுக்கலாம்), ரெண்டு மூணு ஆங்கில படங்கள பத்தி எழுதிருக்கேன்.. நேரமிருந்தா வந்து பாத்துட்டு போங்க..

கலையரசன் said... December 9, 2009 12:46 AM

யோவ்.. நான் போட்ட கமெண்டு டிஸ்பிளே ஆச்சு? இப்ப காணாம பூடுச்சு? என்னையா நடக்குது உன் பதிவுல....

Romeoboy said... December 9, 2009 12:47 AM

Precious தலைப்பை பார்த்தவுடன் Precious Diamondsன்னு எதாவது எழுதி இருப்பிங்கன்னு எட்டி பார்த்தேன். நல்லவேளை அந்த மாதிரி ஏதும் இல்லை.

ரசனையான தொகுப்பு, கண்டிப்பா பார்கிறேன் .

பூங்குன்றன்.வே said... December 9, 2009 1:06 AM

பார்க்கவேண்டியது தான்.

பேநா மூடி said... December 9, 2009 1:30 AM

// வழக்கமாக இது போன்ற சிறுபான்மையின மக்களின் படங்களை.. அவர்களே நடித்து... இயக்கி..... அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்தக் கதைதான் இங்கும். பார்த்த பத்து பேரில் நான்தான்.. 'வொய்ட்'.
//
ஆனா bad boys பெரிய ஹிட்டு தான..., ஒரு மெயில் அனுப்புனேனே பாத்தீங்களா....,

ஷாகுல் said... December 9, 2009 1:39 AM

ஆஹா என்கிட்டயும் உபுண்டு சிடி இருக்கு. நல்ல வேலை Install பன்னல.

படமா torrent ல பாத்துற வேண்டியதுதான்

செ.சரவணக்குமார் said... December 9, 2009 2:29 AM

Precious பார்த்துட்டேன். உங்க விமர்சனம் வழக்கம்போல கலக்கல் தல.

அறிவு GV said... December 9, 2009 2:34 AM

நல்ல விமர்சனம் தல.
///இரண்டு குழந்தைகளுக்கும் தந்தை? - அவளின் அப்பாவேதான்.///
என்ன கொடுமைங்க இது... நெஜமாவே இப்படில்லாம் பிரச்சனை இருக்கா அந்த நாட்டுல..?

KISHORE said... December 9, 2009 2:49 AM

நல்லா இருக்கு அண்ணா..

என் நடை பாதையில்(ராம்) said... December 9, 2009 3:05 AM

மூணு மணி நேரத்துல 15 ஓட்டு வாங்குற மொத ஆள் நீங்கதான் பாலா...

rajeepan said... December 9, 2009 4:32 AM

இப்படிப்பட்ட பல அருமையான படங்கள் எங்கள் பார்வைக்கு வராமலே போய்க்கொண்டு இருக்கின்றது...பிரபல்யம் குறைவான நல்லபடங்களையும் நீங்கள் எங்களை அறிமுகப்படுத்துவற்க்கு நன்றி பாலா...

kanagu said... December 9, 2009 4:34 AM

naan kooda kaelvi patten anna... nalla vimarsanam..

seekram paathudren :)

Yuva said... December 9, 2009 4:55 AM
This post has been removed by the author.
Yuva said... December 9, 2009 5:00 AM

ஹாய் ஹபா!

நல்ல விமர்சனம். ஆனாலும் அத மறக்காதீங்க!!

நன்றி,

சுப.தமிழினியன் said... December 9, 2009 5:59 AM

//தல.. சூப்பர். வொர்க் ஆகுது. ஆனாலும்.. சில நேரம் சில எழுத்துக்கள் அடிச்சி ஒரு ஸ்பேஸ் விடும்போதுதான் வருது. அது குழப்பமா இருக்கு.//

இந்த பிரச்சினை எனக்கும் இருக்கு, என்ன பன்றதுன்னு தெரியல, தமிழ்க்கு மட்டும் தான் இப்படி ஆகுதுன்னு பார்த்தா மலையாளத்துக்கும் இப்படித்தான் ஆகுது. ibus வேணாம் scim போடுவோம்னா அது கொடுமை, அதனால ஸ்பேஸே சரணம்.

சுப.தமிழினியன் said... December 9, 2009 6:02 AM

//இந்த 'ந' போடும் போது... ஹைஃபன் கொடுக்கறதும் பிரச்சனை.// இதுல என்ன பிரச்சனை? எனக்கு அப்படி எதுவுமில்லையே.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... December 9, 2009 7:30 AM

தல இந்த படம் பற்றி உங்களுக்கு சொல்ல எண்ணி இருந்தேன் தல, நீங்களே எழுதிட்டீங்க,அருமை,

கனவுகளின் காதலன் said... December 9, 2009 7:40 AM

நண்பரே, இவ்வகையான தரமான படங்கள் குறித்து நிறைய எழுதுங்கள். அருமையான விமர்சனம்.

Pradeep said... December 9, 2009 9:46 AM

Thanks for the good movie...download is going on....:)))

Balavasakan said... December 9, 2009 10:07 AM

.... இப்பதான் curious case of benjamin button பாரத்து நொந்து போயிருக்கன் இது அடுத்தது போலிருக்கே...ம்..ம்.. நெட்டில வந்துட்டுதா..அப்பிடின்னா இறக்கி பாத்துடலாம்..எப்பிடியும் பாக்கணும்

Mageshwaran S said... December 9, 2009 10:59 AM

ஓகே.பாத்துடறேன்

வினோத்கெளதம் said... December 9, 2009 11:07 AM

//இன்னும் ஆய்த எழுத்தை எப்படி கொண்டு வருவது எனத் தெரிய வில்லை. யாருக்காவது தெரியுமா?//

தல ஆயுத எழுத்து Torrent link கொடுத்து இருக்கேன் "USE" பண்ணிக்குங்க..

http://www.torrentportal.com/details/199864/Ayutha.Ezhuthu.DVD.Screener.XviD.MP3.TTT.html

சுப.தமிழினியன் said... December 9, 2009 11:15 AM

//

//இன்னும் ஆய்த எழுத்தை எப்படி கொண்டு வருவது எனத் தெரிய வில்லை. யாருக்காவது தெரியுமா?//

தல ஆயுத எழுத்து Torrent link கொடுத்து இருக்கேன் "USE" பண்ணிக்குங்க..

http://www.torrentportal.com/details/199864/Ayutha.Ezhuthu.DVD.Screener.XviD.MP3.TTT.html

//

ஹய்யோ ஹய்யோ இதெல்லாம் ரொம்ப ஓவரு...

;-( ;-( ;-(

வண்டிக்காரன் said... December 9, 2009 11:28 AM

"தயாரிப்பாளர் பேர் பார்த்து படம் பார்க்கிற மொத ஆள் [ ] Click நீதான்"

தெரிஞ்ச ஸ்டார்ஸ் இருந்தால்தான் அவுங்க படமெல்லாம் நான் பார்ப்பேன்.ஏன்னா நிறைய படங்கள் நம்ம கன்னட பட ரேஞ்சுக்கு கடியாகத்தான் இருக்கும்.
அதுலேயும் சில நல்ல படங்களும் உள்ளது உண்மைதான்."Boyz n the Hood" பர்ககலேன்னா கட்டாயம் பாருங்க. சூப்பர் படம்(இதுல நடிச்சவங்க நிறைய பேர் இப்ப பெரிய ஆளுங்க) ,இந்த படம் பார்த்திருந்தால் "American Histry X" -ம் பாருங்க (எட்வர்ட் நார்ட்டன் மூவி ,உங்களுக்கு பிடிச்ச நடிகர் என்று படிச்ச ஞாபகம்). பலதரப்பட்ட அமெரிக்க மக்களின் வாழ்க்கை புரியும்.

VIJAY said... December 9, 2009 11:29 AM

Present Sir :)

Kabi said... December 9, 2009 11:38 AM

இந்த படத்தை நான் கூட கேள்வி பட்டேன், ஆனா ஏனோ பாக்க தோனல, நீங்க சொல்லிடிங்கள அப்ப பார்க்க வேண்டியதுதான்.

ஹாலிவுட் பாலா said... December 9, 2009 2:01 PM

@பிரசன்னா : படம் வந்தாச்சா??? முடிஞ்சா.. முழுக்க பார்க்க முயற்சிப் பண்ணுங்க தல. உங்க டேஸ்ட் இல்லைன்னா.. விட்டுடலாம்.

உங்க ப்லாக் வந்து... கமெண்ட் போட்டாச்சி! :)
=========

@கலையரசன்: இன்னாபா.. சொல்றீங்கோ.. எல்லா கமெண்டும்தான் கீதே.. தலீவா?

=========

@ரோமியோபாய்: நிச்சயம் பாருங்க தல.

=========

@பூங்குன்றன்; கண்டிப்பா...

=========

@பேநா மூடி: பேட் பாய்ஸ் எல்லாம் பெரிய பட்ஜெட் படங்க தல. இந்த மாதிரிப் படங்கள் நிறைய வரும். ஆனா அதெல்லாம். ‘கம்யூனிடி’ மக்கள் மட்டும்தான் பார்ப்பாங்க.

மெய்லுக்கு பதில் போட்டாச்சி.

=========

@ஷாகுல்: தல.. அப்படியெல்லாம் விட்டுடாதீங்க. நான் படும் அவஸ்தையை.. இன்னொருத்தர் பட வேணாமா??? :) :)

=========

@செ. சரவணக்குமார்: சூப்பருங்க தல.. நீங்க எப்படி படத்தை ரசிச்சீங்க?

=========

@ராம்: எல்லாம்.. உங்களை மாதிரி.. நண்பர்கள் இருக்கறதுதான் தல. சில சமயம்.. யாருமே வோட்டுப் போடாம இருப்பாங்க. சில சமயம் இப்படியும் நடக்குது. மக்களை புரிஞ்சிக்கவே முடியலைங்க...!!!

=========

@ராஜீபன்: இது நல்ல பிரபலமான படம்தாங்க தல. ஒரிஜினல் நாவல்.. நிறைய வித்திருக்கு. ப்ரொட்யூஸர் வின்ஃப்ரா..!!

இந்தப் படமெல்லாம் நம்ம ஊரில் போட முடியாது.

=========

@கனகு: ஆகட்டும்! ஆனா.. மிஸ் பண்ணிடாதீங்க.

=========

ஹாலிவுட் பாலா said... December 9, 2009 2:08 PM

@யுவா: எதை மறக்க வேணாம்னு சொல்லுறீங்க் தல? “அதையா?” :)

=========

@சுப. தமிழினியன்: இல்லீங்க.. பிரசன்னைன்னு எப்படி சொல்லுறேன்னா.... NHM 'தந்த’-ன்னு அடிக்கும் போது... ‘ந்’ஐ ஆடோமேட்டிக்கா மாத்திடும். ஆனா.. IBus-ல் ஒவ்வொரு முறையும்..’-’ கொடுக்கறது பிரச்சனையா இருக்குன்னு சொன்னேன்.

=========

@கார்த்திக்கேயன்: பார்த்துட்டீங்களா கார்த்திக்கேயன்?????

=========

@கனவுகளின் காதலன்: வச்சிகிட்டா வஞ்சனை பண்ணுறாங்க தல.. ஹாலிவுட்டில்?? அவங்களும்.. வருசத்துக்கு ஒன்னுன்னுதான் நல்லப் படம் எடுப்போம்னு அடம் பிடிக்கறாங்க. நாம என்னங்க பண்ன முடியும்?

=========

@பிரதீப்: அட்ரா சக்கை. வெய்ட் பண்ணாம... பார்த்து முடிச்சிடுங்க.

=========

@பாலவாசகன்: பெஞ்சமினை பார்த்து நொந்துட்டீங்களா???? :(
அதுதான்.. என் இரண்டாவது விமர்சனம்.

=========

@மகேஸ்வரன்: ரைட்டு...! இம்மீடியட்டா..!!

=========

@வினோத்: இந்த நக்கல்தானே வேணாங்கறது? இன்னொரு சாபம் கொடுக்கனுமா?

=========

ஹாலிவுட் பாலா said... December 9, 2009 2:15 PM

@அறிவுஜீவி: படம் ஃபிக்ஸன் தாங்க. இப்படியெல்லாம் கதை நடக்குதான்னு யாருக்கு தெரியும் சொல்லுங்க. ஒருவேளை உண்மையாக் கூட இருக்கலாம்.

=========

@கிஷோர்: இன்னா.. நைனா.. பாச மலை பொழியறீங்க..? இன்னா. மேட்டரு?

=========

@சுப. தமிழினியன்: அதை சொல்லுங்க!:( :)

=========

@வண்டிக்காரன்: தல.. படத்தை யாரு எடுக்கறாங்கறது மட்டும் முக்கியமில்லை. அதை யாரு தயாரிக்கறாங்கனு தெரிஞ்சா.. படத்தின் போக்கு தெரிஞ்சிடும். அதனால் இதெல்லாம் ரொம்ப முக்கியம்.

இங்க அதெல்லாம்.. ஒரு மரியாதை. நீங்க சொன்ன ரெண்டு படங்களையும் எப்பவோ பார்த்திட்டேன் தல. அமெரிக்கன் ஹிஸ்ட்ரியை கூட 18+ ல் எழுதலாம்னு (சீரீஸில் இல்லை) வச்சி.. அப்புறம் அப்படியே விட்டுட்டேன்.

=========

@விஜய்: நெக்ஸ்ட்!!!

=========

@ கபி: மிஸ் பண்ணக் கூடாத படங்க!

கோபிநாத் said... December 9, 2009 3:01 PM

ரைட்டு பார்த்துட வேண்டியது தான்...;)

ஹாலிவுட் பாலா said... December 9, 2009 6:55 PM

ஊர்ல இருந்து வந்தாச்சிங்களா..?! :) :)

வெங்கிராஜா | Venkiraja said... December 10, 2009 9:11 AM

பொறுமையா பதிவுகளையும் பதில்களையும் வாசிச்சேன். ரொம்ப நல்ல விமர்சனம். படமும் அருமையா இருக்கும்னு நினைக்கிறேன். விடுமுறையிலதான் விட்ட இடத்திலிருந்து உக்காந்து பார்க்கணும். நன்றி!
பை தி வே, லினக்ஸ் மேக் எல்லாம் எனக்கு ஒத்துவரலை. உபுண்டு போட்டுட்டு ஒரு வாரம் கந்தலாயிட்டேன்! விண்டோஸ் இஸ் த திங்!

ஹாலிவுட் பாலா said... December 10, 2009 10:47 AM

வாங்க வெங்கி! :) :)

எக்ஸாமெல்லாம் முடிச்சிட்டு.. மெதுவா வந்தால் போதும்! :)

என்ன ஆனாலும்.. லினக்ஸை விடுறதா இல்லைன்னு.. முடிவு பண்ணிட்டேன் (ஆனா ஆஃபீஸில் ஸைசா பேசி.. ஒரு $900 லேப்டாப் வாங்கிட்டேன்... விண்டோஸ் ஓஎஸில்).

VIJAY said... December 10, 2009 10:59 AM

தல...என்னை பொறுத்தவரை படம் என்பது நல்லா ஜாலியா பார்க்கவேண்டிய ஒன்று. ஏற்கனவே நமக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். அதை மறக்க, ஜாலியா என்ஜாய் பண்ணதான் படம் பார்ப்பவர்கள் நிறைய. இது போல படங்கள் இன்னும் டென்ஷனைதான் கூட்டும். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

///இரண்டு குழந்தைகளுக்கும் தந்தை? - அவளின் அப்பாவேதான்.///
என்ன கொடுமைங்க இது... நெஜமாவே இப்படில்லாம் பிரச்சனை இருக்கா அந்த நாட்டுல..?///

இது அந்த நாட்டுல மட்டும் இல்லைங்க அறிவு. பொதுவா இது போன்ற மிருகங்கள் எல்லா இடத்திலும் உண்டு. ஏன் நீங்க தினதந்தி எல்லாம் படிப்பது இல்லையா?

///மூணு மணி நேரத்துல 15 ஓட்டு வாங்குற மொத ஆள் நீங்கதான் பாலா...///

ராம்...உண்மைய ஓப்பனா சொல்லிட்டீங்க. நிறைய இடத்துல புகை போகும் என நினைக்கிறேன். தல...என்ன திருஷ்டி பரிகாரம் பண்ணலாம்?

நாஞ்சில் பிரதாப் said... December 10, 2009 11:26 AM

என்னாச்சு தல அழுவாச்சி படம்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க...

சுப.தமிழினியன் said... December 10, 2009 11:58 AM

//என்ன ஆனாலும்.. லினக்ஸை விடுறதா இல்லைன்னு.. முடிவு பண்ணிட்டேன்//

நான் இந்த முடிவை எடுக்காம ஒரு வருஷம் சீரியல், க்ராக், கீஜென்னுனு அலைஞ்சேன்.

இப்பொ 2 மாசமாக இந்த முடிவை எடுத்துட்டு என் லேப்டாப்பில வந்த விஸ்டாவைத் தூக்கிட்டேன், அதுவும் கார்மி கோலா 9.10 பழைய வெர்ஷன்களை விட ரொம்ப யூஸர் ப்ரண்ட்லியா இருக்குறது என்னைப் போல உங்களைப்போல முடிவெடுத்தவங்களுக்கு ஆறுதலாப் போச்சு. எனக்கு இப்போ லினக்ஸ்'ல (உபுண்டு) இருக்க ஒரே பிரச்னை tar.bz2 ,tar.gz அப்ளிகேசன்ஸை இன்ஸ்டால் செய்றதுதான், அதுவும் இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடும். ஆமாம் என்ன இல்லை உப்ண்டுல?

pappu said... December 10, 2009 1:26 PM

south park பாத்திருக்கீங்களா? செம படம். அவனுங்க ஸ்டைலில் சொல்லனும்னா F***ing sweet. யப்பா காது புளிக்க திட்டுறானுங்க. பட், ஃபன். அதுவும் அவுங்க போற R rating படத்துல வர்ற பாட்டிருக்கே! ஹா. ஹா...

அதுல பில்கேட்ஸை கூப்பிட்டுடு, ‘டேய், விண்டோஸ் 98 இன்னும் ஃபாஸ்டா வேலை செய்யும், நெட்டெல்லாம் அமோகமா வேலை செய்யும்னு சொன்னேல்லடா?” கேட்டுட்டு அவன் “5 மில்லியன்னு என்னவோ உளற வரும் போது, ‘டுமீல்’னு சுட்டுக் கொன்னுட்டு அடுத்த வேலை பாக்க போயிருவானுங்க. செம காமெடி!

ஹாலிவுட் பாலா said... December 11, 2009 11:26 AM

@விஜய்: மன்னிக்கனும்...!! பயங்கர வேலை + ஆஃபீஸ் க்றிஸ்த்மஸ் பார்ட்டி..ன்னு.. ரொம்ப பிஸியா போய்ட்டு இருக்கு வாழ்க்கை. உடனே பதிலும்.. விமர்சனமும் எழுத முடியலை.

உங்க கேள்விக்குப் பதில்: என் எண்ணமும் அதுதான். படத்தில்... எக்ஸ்ட்ரா கருத்தெல்லாம்.. எதிர்பார்க்கறது இல்லை. இந்தப் படத்தில் உட்கார்ந்ததுக்கு ரீஸனும்.. இது அழுகாச்சிப் படமல்லங்கறனாலதான்.

ஆனா..., இது மாதிரிப் படங்களை பார்க்காம விட்டா... இப்படியெல்லாம். நடக்கும் நிகழ்வுகளை தெரியாமலேயே போய்விடும் வாய்ப்பிருக்கு இல்லையா??

இரண்டாம் உலகப் போர்ப் படங்களை பார்க்க ஆரம்பித்தப் பின்னாடிதான்.. வரலாறு மேல் விருப்பம் வந்து.. அதைப் பத்தி நிறைய படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். பதிவில்.. சொல்லும் நிறைய விஷயங்கள்... எல்லாம்.. படம் பார்த்தப் பின்.. அதில் உள்ள விஷயங்களை தேடும் போது கிடைத்ததுதான்.

அதனால்.. இதுமாதிரிப் படங்களும்... பார்ப்பது அவசியம்னுதான் நினைக்கிறேன். படத்தில் உள்ள விசயங்களை மட்டும் பார்க்காம.... டைரக்ட்ருக்கே தோணாத விசய்ங்களை எல்லாம். “மாற்று பார்வை” பார்க்கற... கேனத்தனம்தான் பிடிக்க மாட்டேங்குது.

ஹாலிவுட் பாலா said... December 11, 2009 11:30 AM

@சுப: உண்மைதாங்க தல. உள்ள இருக்கற.. சாஃப்ட்வேர் லிஸ்டைப் பார்த்தா தலை சுத்துது.

ஆனா.. நாமே ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணப் பார்த்தாதான் தலை சுத்துது.

என்ன இல்லை... லினக்ஸில்????????
-------

ஹாலிவுட் பாலா said... December 11, 2009 11:30 AM

@பப்பு: உங்க பின்னூட்டத்துக்கு.. உங்க ஏரியாவிலேயே பதில் சொல்லியாச்சி! :)

pappu said... December 11, 2009 11:59 AM

இந்த லினக்ஸ் விண்டோஸ் மேட்டருக்கு சம்பந்தமா இருக்கும்ங்கிறதுக்காக போட்ட கமெண்ட்ட இப்படியா அரசியல்வாதி மாதிரி தப்பா யூஸ் பண்ணுவீங்க?

ஹாலிவுட் பாலா said... December 11, 2009 12:50 PM

ஹா......!!!! :( :(

மை பேட்..! :( :( பார்த்திருக்கீங்களா-ன்னு கேட்டதும்... லினக்ஸை விட்டு.... படத்துக்கு புத்தி போய்டுச்சி....!!

மன்னிப்பு கேட்கறவன் மனுசன். மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுசன்.

நான் மனுசன். நீங்க பெரிய மனுசனா????? :) :)

pappu said... December 11, 2009 10:09 PM

இப்படியே வயச குறைக்க பாக்குறீங்களா? நீங்க தான் பெரிய மனுஷன். நான் சின்ன பையன்.:)

அறிவு GV said... December 12, 2009 12:30 AM

@ ஹாலிவுட் பாலா : தல புது லேப்டாப்புக்கு ட்ரீட்லாம் இல்லியா? 3 நாளா காணோம், ராப்ரி படம், என்ன ஆச்சு..?

@ விஜய் :
/// இது அந்த நாட்டுல மட்டும் இல்லைங்க அறிவு. பொதுவா இது போன்ற மிருகங்கள் எல்லா இடத்திலும் உண்டு. ஏன் நீங்க தினதந்தி எல்லாம் படிப்பது இல்லையா? ///
இல்லீங்க விஜய். ஆனா கேள்விப்பட்டதுண்டு. அதை படமா எடுக்கும் அளவிற்கு இன்னும் இங்கே யாருக்கும் தைரியம் வரவில்லை அல்லவா. அதனால் நம் மக்களில் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. அது தெரியாமல் இருப்பதே நல்லது தான். என்ன தல, கரெக்டு தான..!

ILLUMINATI said... December 12, 2009 2:43 AM

friend,i'm sort of new to the blogging world.do read my reviews and let me know of what you think.thank you.and vote it if you think it is any good.

http://www.tamilish.com/user/view/shaken/login/ramkvp

http://illuminati8.blogspot.com/2009/12/disclosure.html

VIJAY said... December 12, 2009 1:19 PM

தல...என்ன ரொம்ப சைலண்ட்டா இருக்கீங்க? பார்ட்டில பிசியா இல்ல பார்ட்டில கலந்துகொண்டு அதன் மயக்கம் போகலையா?

/// இது அந்த நாட்டுல மட்டும் இல்லைங்க அறிவு. பொதுவா இது போன்ற மிருகங்கள் எல்லா இடத்திலும் உண்டு. ஏன் நீங்க தினதந்தி எல்லாம் படிப்பது இல்லையா? ///
இல்லீங்க விஜய். ஆனா கேள்விப்பட்டதுண்டு. அதை படமா எடுக்கும் அளவிற்கு இன்னும் இங்கே யாருக்கும் தைரியம் வரவில்லை அல்லவா. அதனால் நம் மக்களில் பலருக்கு தெரியாமல் போய்விடுகிறது. அது தெரியாமல் இருப்பதே நல்லது தான். என்ன தல, கரெக்டு தான..!///

எல்லா தப்பும் நம்ம நாட்டுல நடக்குதுங்க அறிவு. வெளில தெரிவது இல்ல. காரணம் நம்ம கலாச்சாரம்(!!!)+கலாச்சார காவலர்கள். இந்த மேட்டரை நீங்க படமாக எடுக்கின்றீர்கள் என தெரிந்தால் போதும். அதை வெளியில் கொண்டு வருவதற்குள் ஏண்டா இந்த படத்த எடுத்தோம் என ஆகிவிடும். நம் மக்களுக்கு இது போல விஷயங்கள் தெரியாது என்றா நினைக்கின்றீர்கள்? எல்லாருக்கும் எல்லாம் தெரியும். வெளியில் பேசுபவன் கெட்டவனாகின்றான். அதனால் எல்லாரும் அழுக்குகளை உள்ளுக்குள் சுமந்து கெட்டு திரிகின்றார்கள். சந்தர்ப்பம் வரும்போது தவறுகளை செய்கின்றார்கள்.

ஹாலிவுட் பாலா said... December 12, 2009 11:19 PM

@பப்பு: அப்ப மன்னிப்பு இல்லையா? :( :( :)

@அறிவுஜீவி: தல.. புது லேப்டாப் வந்து எனக்கு உலை வைக்க வந்திருக்கு!! அதுக்குப் போய் ட்ரீட் கேக்கறீங்களே! :)

திங்கள் கிழமை ஆஃபீஸ் போனா.. லேப்டாப் வாங்கியாச்சில்ல... எங்க சாஃப்ட்வேர்-ன்ன்னு கேட்பாங்க.

@ILLUMINATI : நிச்சயம் வந்து பார்க்கிறேன் நண்பா! இப்போதைக்கு கடமை அழைப்பதால்... எந்த ஏரியாவுக்கும் போறதில்லைன்னு சபதம் போட்டிருக்கேன்.

@விஜய்: உங்க கருத்துதான் என்னுதும். தினத்தந்தில வர்ற மேட்டர்தான். ஆனா அதை படமா எடுத்தாதான்.. கலாச்சாரம் கெட்டுப் போய்டும்னு... அழிச்சாட்டியம் பண்ணுவானுங்க.

என்னமோ.. படத்தில் காட்டித்தான்... இவங்க எல்லாம் குழந்தை பெத்துக்கறது எப்படின்ன்னு கத்துகிட்ட மாதிரி.

ஆஃபீஸ் வேலை. கூடவே.. ஒரு நண்பருக்கு ஒரு உதவி பண்ணுறதா ரொம்ப நாளுக்கு முன்னாடி கொடுத்த வாக்கு. அதை காப்பாத்த... எக்ஸ்ட்ரா உழைப்பு தேவைப் படுது. அதுதான் தியேட்டர் பக்கமெல்லாம் போகவேயில்லை.

அடுத்த வாரம் சரியாகிடும்ன்னு நம்பறேன்.

rajeepan said... December 13, 2009 11:44 PM

இதையும் படிச்சுபாருங்க பாலா...
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html

சென்ஷி said... December 14, 2009 7:57 AM

என்ன தல.. புதுப்பதிவு ஏதும் இல்லையா..??

ஹாலிவுட் பாலா said... December 14, 2009 10:41 AM

@ராஜீபன்: படிச்சாச்சிங்க! :) :) :)

@சென்ஷி: போட்டாச்சி. வேறு ஒரு வேலையை முடிச்சிட்டுதான் இந்த ஏரியாவுக்கு வரனும்னு முடிவு பண்ணியிருந்தேன். இன்னைக்கு காலையில்தான் முடிஞ்சது.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said... December 19, 2009 1:26 AM

இந்த திரைப்படம் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன் - மிகவும் நன்றி. டி.வி.டி தேட வேண்டும்..

லினக்ஸ் செளகரியமாக இருக்கிறதா..!! நானும் மாறலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்..!!

ஹாலிவுட் பாலா said... December 19, 2009 11:16 AM

லினக்ஸ் பிசி-யை இப்ப.. ரொம்ப ரேராதான் தொடுறேன். லேப்டாப் வாங்கியாச்சி. வீட்டில் இருந்தால்.. அதில்தான் இப்ப டைப்பிங் எல்லாம்.

லினக்ஸில் ஃபாண்ட்டும், NHM அல்லது அது மாதிரி சிறப்பான ஒரு மென்பொருள் வரும்வரை.. ப்லாக் எழுத/படிக்க அது வேஸ்ட்தான்.

Pradeep said... January 4, 2010 10:38 AM

good movie bala.....appuram....nethu TAKEN padam paarthen.....neenga sonna maathiri really semma fast.....good one.....
Now a days, am waiting for ur article to see a good movie... :))))

ஹாலிவுட் பாலா said... January 4, 2010 10:54 AM

அந்த கடைசி வரிதான்.... கொஞ்சம் ட்ரபுள் கொடுக்குது! :) :) நன்றி ப்ரதீப்! :)

ஷிர்டி.சாய்தாசன் said... May 23, 2010 2:26 PM

புதிய லூசிட் லின்க்ஸில் iBus பயன்படுத்தி ஆயுத எழுத்து அடிக்க q பயன்படுத்துங்கள். ஃ

ஷிர்டி.சாய்தாசன் said... May 23, 2010 2:32 PM

//@சுப. தமிழினியன்: இல்லீங்க.. பிரசன்னைன்னு எப்படி சொல்லுறேன்னா.... NHM 'தந்த’-ன்னு அடிக்கும் போது... ‘ந்’ஐ ஆடோமேட்டிக்கா மாத்திடும். ஆனா.. IBus-ல் ஒவ்வொரு முறையும்..’-’ கொடுக்கறது பிரச்சனையா இருக்குன்னு சொன்னேன்//

iBus-ல் w பயன்படுத்தி 'ந' அடிக்கலாம்.

ஷிர்டி.சாய்தாசன் said... May 23, 2010 2:35 PM

//@சுப.தமிழினியன்: தல.. சூப்பர். வொர்க் ஆகுது. ஆனாலும்.. சில நேரம் சில எழுத்துக்கள் அடிச்சி ஒரு ஸ்பேஸ் விடும்போதுதான் வருது. அது குழப்பமா இருக்கு
//

எழுத்து அடித்தும் தெரியவில்லை என்றால் right arrow அடித்தால் தெரியும்.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil