பிக்ஸார் தொடரின் இறுதி அத்யாயத்தில் எழுதிய மேட்டர்தான் இது. அனிமேஷனில் 3டி கேரக்டர்களை புகுத்தியதில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போன 2டி அனிமேஷனை... அந்த 3டி-யை அறிமுகப் படுத்தி அழித்த ஜானும், எட்வினும்.... 2004-ல் டிஸ்னி மூடிய 2டி அனிமேஷன் பிரிவை மீண்டும் திறந்து... அதிலிருந்து வெளிவந்திருக்கும் முதல் 2டி படம் The Princes and the Frog.
படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களுக்கு ஏற்கனவே கதை தெரிந்திருக்கும் (இப்பொழுதெல்லாம்... ட்ரெய்லரிலேயே மொத்த கதையையும் சொல்லி விடுகிறார்கள்). கீழ்கண்ட பாரா.. ட்ரெய்லர் பார்க்காதவர்களுக்கு மட்டும்.
பாட்டி சொன்ன கதையாக..., நாம் எப்பொழுதோ கேட்ட.... “ஒரு இளவரசி, தவளையை முத்தம் கொடுத்ததும்... அது ஒரு இளவரசனாக மாறும் கதையை” லைட்டாக உல்டா செய்து.. ஒருவேளை... இளவரசிக்குப் பதிலாக ஒரு சாதாரணப் பெண் அந்த தவளை இளவரசனை முத்தமிட்டால் என்னவாகியிருக்கும் என்று மாற்றுப் பார்வை பார்த்த, 2002-ல் வெளியாகிய.. The Frog Princess என்ற ஒரு நாவலின் தீம்-மை மட்டும் அடிப்படையாக வைத்து குழந்தைகளுக்கு கதை செய்துள்ளார்கள். ”இக்குளூண்டு கதையை வைத்துக் கொண்டு என்ன சார் பண்ண முடியும்”-னு கேட்டால்...
ஒரு பணக்கார வெள்ளைப் பெண்ணும் (ச்சார்லோட்) , இன்னொரு ஏழை கருப்புப் பெண்ணும் (டியானா) சிறு வயதிலிருந்தே தோழிகள். ச்சார்லோட்டிற்கு, தவளை இளவரசன் கதை கேட்டதில் இருந்தே.. அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. இருவரும் ஹார்லிக்ஸ் குடித்து, வளர்ந்து பெரியவர்கள் ஆனப் பின்... இன்னும் ச்சார்லோட்டிற்கு அந்த ஆசை போகவில்லை. டியானாவிற்கு.. சொந்தமாக ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை. அதற்காக, பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறாள்.
ஒரு நாள்... இன்னொரு நாட்டு இளவரசன்.. இந்த ஊருக்கு வருகிறான் என்றதும்... ச்சார்லோட்டிற்கு கொண்டாட்டம். ஆனால் ஒரு மந்திரவாதி, இளவரசனை தவளையாக மாற்றி.. அவன் உதவியாளனை... வூடு மந்திரத்தை பயன்படுத்தி.. இளவரசனாக்குகின்றான். ஆனால் அந்த வூடு மந்திரக் கயிறு.... அடிக்கடி சார்ஜ் ஆக வேண்டும். அதற்கு அந்த தவளை பக்கத்தில் இருக்க வேண்டும்.
ஆனால் தவளை தப்பித்து இளவரசி அறைக்குள் போனால் அங்கு.. டியானா.. இளவரசி உடையில் இருக்கிறாள். அவளை முத்தம் கொடுக்கச் சொன்னால்... டியானாவும் தவளையாகிவிட...., தவளையை தின்ன வேண்டிய ஒரு முதலையும், தவளைகளின் உணவான ஒரு மின்மினிப் பூச்சியும் நண்பர்களாகி............
மீதியெல்லாம்....... சொன்னாத்தான் தெரியுமா என்ன???
படத்தின் முதல் ஆச்சரியம்..., இது போன்ற ஃபேர்ரி கதைகளில்... எப்பொழுதும்... வெள்ளையர்கள்தான் ஹீரோயின்களாக இருப்பார்கள். இதில்.. முதல் முறையாக.. ஒரு கருப்பினப் பெண் ஹீரோயின். அந்த சந்தோஷம் கொஞ்ச நேரத்திற்குத்தான். அவளும்.. தவளையாகிவிட... கடைசி காட்சியில் மீண்டும் பெண்ணாகிறாள் (நான் எதோ ரேஸிஸ்ட் மாதிரி இதையெல்லாம் நோட் பண்ணிகிட்டு இருக்கேன்).
ஆல்ரைட்! படம் 2டி என்பது ஓகே. ஆனால் இது எந்த மாதிரி 2டி? கணிப்பொறியில்
இப்படி ஒரு வீக்கான கதையை எடுத்துக் கொண்டு, அத்தனை பேரும் 3டி-க்கு மாறிவிட்டப் பின்னும்... மிக தைரியமாக ஒரு படத்தை எடுத்து வெளியிட்டதற்கே... முதலில் டிஸ்னிக்கும், ஜானுக்கும், எட்வினுக்கும் ஒரு சல்யூட் வைக்க வேண்டும்.
இவர்கள் எதை நம்பி இறங்கினார்களோ இல்லையோ..., நிச்சயம்.. படத்தை மூன்று பேர் கையில் கொடுத்து விட்டார்கள். அது... டிஸ்னியின் மறுமலர்ச்சிக் காலத்தில் (1990கள்) வெளிவந்து சக்கை போடு போட்ட... The Little Mermaid, Aladdin, Hercules போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் - ஜான் மஸ்கர் & ரான் க்ளெமெண்ட்.
2டி.. மொத்தமாகவே வழக்கொழிந்து விட்டதாலும்.., இதற்கு முன் உபயோகித்த சாஃப்ட்வேர்களை.., அதை உருவாக்கிய கம்பெனியே மறந்து விட்டதாலும், பிக்ஸாரின் குல வழக்கமான.. எல்.கே.ஜியில்.. இந்த இரட்டை இயக்குனர்களும் சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே... ட்ரடீஷனலாக பலப் படங்களை அனிமேட் செய்திருந்தாலும்.. இப்பொழுது வேறு கதை. இதையெல்லாம் எல்லோருமே மறந்து விட்டனர். எனவே.. முதலில் பேப்பர் கடை எங்கிருக்கிறது என்று ஆரம்பித்து.. கூடவே.. பென்சில், ரப்பர் எல்லாம் மொத்த விலைக்கு வாங்கித்தான் படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தில் உபயோகித்த டெக்னாலஜியைப் பற்றி எழுத.. இன்னொரு பிக்ஸார் பதிவு வேண்டும். ஏற்கனவே.. விட்டால் போதும்-னு, நீங்கள் ஓடி வந்திருப்பதால்... அதையெல்லாம் விட்டுவிடலாம். படத்தில் கேரக்டர்கள் மட்டுமே பென்சிலில் வரையப் பட்டவை. பேக்ரவுண்ட் எல்லாம்.. கணிப்பொறியில். இதற்காகவே.. நியூ ஆர்லின்ஸ் நகருக்கு சென்று.. 50,000 போட்டோக்களும் மேல் எடுத்துள்ளனர். கதை 1920-களில் நடைபெறுவதால்.. அதற்கு ஏற்ற மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்து.. கலரடித்து..........
பிக்ஸாரின் மூன்று ஆஸ்தான இசையமைப்பாளர்களில் முதன்மையானவர். மொத்தம் பதினேழு முறை.. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டு, ஒரு முறை வெற்றி பெற்றவர் (Monsters, Inc). ஆனாலும் கிடைத்தது இசைக்காக இல்லை. அவர் எழுதிய பாடலுக்கு. இவரின் கஸின் தாமஸ் ந்யூமேன், பிக்ஸாரின் இன்னொரு ரெகுலர் கம்போஸர்.
படம் 1920-களில் நியூ ஆர்லின்ஸ் நகரில் நடைபெறுவதாகவும், ம்யூசிகல் க்ளாஸிக்காகவும் இருப்பதால்... படத்தில் உபயோகப் படுத்திய காஸ்பல், ஜாஸ், ப்ளூஸ் என, அந்த காலத் தீம்களை மனுசன் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பெரும்பாலும் ஜாஸ் இசை. திரையின் எதாவது ஒரு மூலையில், ரேண்டி என எழுதி வைத்து விடலாம் போல. படமுழுக்க இவர்தான். இந்த முறையும் ஆஸ்கருக்கு, வழக்கம் போல ‘பரிந்துரைக்கப் படுவார்’ என எதிர்பார்க்கலாம்.
நோட்-பென்சிலை கொடுத்து.. ரெண்டு முட்டை வரையச் சொன்னால் கூட, அதுக்கும் 100 மில்லியனுக்கு டிஸ்னி கணக்கு காட்டும். அந்தக் கதைதான் இங்கும். மார்க்கெட்டிங் செலவெல்லாம் சேர்த்து.. 100 மில்லியனுக்கு மொய் எழுதிவிட்டார்கள். இந்த வாரம் முதலிடத்தில் இருந்தாலும், டிஸ்னிக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும் (நிச்சயம் போட்ட காசை விட அதிகமாக எடுத்துவிடும்). கையை கடித்துக் கொண்டால் இதுவே..... கடைசி 2டி படமாகக் கூட இருக்கும் அபாயம் இருக்கிறது.
விஸ்டாவில் வேலை செய்து கொண்டிருப்பவரை..., டாஸில் வேலை பார்க்க விடுவது போலதான்... இந்த முயற்சி. ஆனாலும்... நிச்சயம் வரவேற்கப் படவேண்டியது. நம் பழைய நாட்களை அசை போட... இந்தப் படம் நிச்சயம் உதவும். அந்த வகையில்.. எப்பொழுதும் இன்னொவேட்டிவாகவே யோசிக்கும், ஜானிற்கு ஒரு ஜே!!!
The Princess and the Frog = Future Classic

76 தியேட்டர் கமெண்ட்ஸ்:
மீ த ஃபஷ்டு.. படிச்சுட்டு வர்றேன் ;)
//இது போன்ற ஃபேர்ரி கதைகளில்... எப்பொழுதும்... வெள்ளையர்கள்தான் ஹீரோயின்களாக இருப்பார்கள். இதில்.. முதல் முறையாக.. ஒரு கருப்பினப் பெண் ஹீரோயின். அந்த சந்தோஷம் கொஞ்ச நேரத்திற்குத்தான். அவளும்.. தவளையாகிவிட... கடைசி காட்சியில் மீண்டும் பெண்ணாகிறாள் (நான் எதோ ரேஸிஸ்ட் மாதிரி இதையெல்லாம் நோட் பண்ணிகிட்டு இருக்கேன்).//
முழுசா படிக்கல.. இந்த வரி வரைக்கும் படிச்சதும் சிரிச்சுட்டேன். அதான் இன்னொரு கமெண்ட்.. இருங்க மொத்தமும் படிச்சுட்டு வர்றேன் ;)
//
The Princess and the Frog = Future Classic//
அசத்தல் டச்சிங்க் தலைவரே.. படம் வெற்றியடைய வேண்டுவோம்..
தல காலையில எழுந்ததும் (இல்லன்னா படுக்குமுன்னே) பதிவு போட்டிருக்குது.. இன்னும் பாசக்கார பயப்புள்ளைகள காணோமே.. நாம தான் கடமையில கண்ணாவே இருக்கோம் போலருக்குது ;)
ஆஹா... சென்ஷி.. பின்னூட்டமா போட்டுத் தாக்கறீங்க???
பதிவு போட்டு.. 2-3 நிமிஷம்தான் ஆகியிருக்கும். நீங்கதான் முதல் போணி! :)
கடமையைச் செய்ய நாங்க என்னிக்கும் தயங்குனதில்லை. நெட் ஆன் செஞ்சதும் முதல்ல உங்க பதிவுதான் கண்ணுல படுது. என்ன செய்ய.. இதுக்கு மேல படிக்காம போனா வேலை செய்ய முடியாது.அதான் படிச்சுட்டு கார்த்திக் ஷ்டைல்ல ஃபார்மாலிட்டி செஞ்சாச்சு... :)
உள்ளேன் அய்யா...இப்பதான் தல உங்க பதிவ பார்த்தேன், நைட்டு மணி 11.40 காலைல படிச்சுட்டு பின்னுடம் போடுறேன்...
//நோட்-பென்சிலை கொடுத்து.. ரெண்டு முட்டை வரையச் சொன்னால் கூட, அதுக்கும் 100 மில்லியனுக்கு டிஸ்னி கணக்கு காட்டும். அந்தக் கதைதான் இங்கும்//
ஹா..ஹா
அசத்தல் பாலா
@சென்ஷி : கடமை செய்யறதெல்லாம் இருக்கட்டும். நீங்க பதிவு போட்டு எவ்வளவு நாள் ஆச்சி தெரியுமா?
சீக்கிரம்.. வழக்கம்போல.. யாரையாவது தற்கொலை பண்ண விடுங்க சென்ஷி!!! வி மிஸ் யு!!!
@கபி: அட.. நீங்களும் EST-யா?? ஓகே.. ஓகே..!! நான் ராக்கோழி. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். குட் நைட்! :)
@கண்ணா: நன்றிங்க தல! :) :)
//ரெண்டு முட்டை வரையச் சொன்னால் கூட, அதுக்கும் 100 மில்லியனுக்கு டிஸ்னி கணக்கு காட்டும். அந்தக் கதைதான் இங்கும். மார்க்கெட்டிங் செலவெல்லாம் சேர்த்து.. 100 மில்லியனுக்கு மொய் எழுதிவிட்டார்கள்.//
வணக்கம் தல.., இதுக்கும் இவ்ளோ பட்ஜெட்டா..., ஹிட் தான அப்புறம் என்ன..,
ஹிட்டுன்னு சொல்ல முடியலைங்க. 27 மில்லியன் தான் எடுத்திருக்கு. அவதார்... வேட்டைக்காரன் எல்லாம் வர்றனால.. நிச்சயமா... அடுத்த வாரம் படுத்துடும்.
//வேட்டைக்காரன் எல்லாம் வர்றனால.. நிச்சயமா... அடுத்த வாரம் படுத்துடும்//
நக்கல் தான..,
பாத்தீங்களா..! இதனாலதான்... நான் வேட்டைக்காரன் பத்தின உண்மைகளை வெளிய சொல்லுறது இல்லை.
யாரு நம்பறா..! :( :(
//அவதார்... வேட்டைக்காரன் எல்லாம் வர்றனால.. நிச்சயமா... அடுத்த வாரம் படுத்துடும்.//
அவதார் பத்தியெல்லாம் கவலைப் படவே தேவையில்லீங்க, வேட்டைக்காரன் தான் சரியான போட்டியா இருக்கும், அதுலயும் கூட வேற சேட்டைக்காரனுங்க இருக்கானுங்க 15 நிமிஷத்துக்கு ஒரு விளம்பரம். (15 நிமிஷம் தோராய கணக்குதான்) ஆறு சேனல், ஆக 2.5 நிமிஷத்துக்கு ஒரு விளம்பரம், ஒரு மணிநேரத்துல 24 முறை வேட்டைக்காரன் விளம்பரம் ஒளிபரப்பாகிடும். ஒரு விளம்பரம் சராசரியா 1.5 நிமிஷம்னாலும் ஒரு மணி நேரத்துல 36 நிமிஷம் விளம்பரம் ஓடிகிட்டு இருக்கும். ஒரு நாளைக்கு 6 சேனல்லயும் சேர்த்து 10.2 மணி நேரம் விளம்பரம் மட்டுமே ஓடிடும் அப்ப் யோசிச்சு பார்த்தா வேட்டைக்காரன் தான உண்மையான போட்டி.
வேட்டைக்காரனுக்கு இப்படியாவது யார்னா விருது குடுத்துடுங்கய்யா...
நோட்-பென்சிலை கொடுத்து.. ரெண்டு முட்டை வரையச் சொன்னால் கூட, அதுக்கும் 100 மில்லியனுக்கு டிஸ்னி கணக்கு காட்டும். ////////// hahahahaa..
எப்போதும் சிரித்து கொண்டு சந்தோஷமா இருக்கியாடா என்று சொல்லி... இன்று பிளாக் பாடாய் படுத்திவிட்டது//////// ALL DRAFTS GONE SUDDENLY... அவ்வ்வ்வ்வ்வ்..
எனக்கு பழைய அனிமேஷன் ரொம்ப பிடிக்கும். கார்டூன் சேனல விட்டதுக்கு காரணமே எல்லாம் புதுசா போடுறானுங்கன்றதுதான். அலாதீன் பேவரைட்- ராபின் வில்லியம்ஸ்தான? ரெண்டு மூணு மாசம் போகட்டும், rip வந்து மாட்டும் டோரண்ட்ல. நான் எப்பவும்வெயிட் பண்ணி நல்ல பிரிண்ட் தான் பாப்பேன். ஹி.. ஹி..
ரெஸ்க்யூவர்ஸ், லயன் கி்ங், ப்யூட்டி அன்ட் ப்பீஸ்ட் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்.. அந்த லிஸ்ட்டுல இதையும் சேர்க்க முடியுமா பாலு? அந்த அளவுக்கு நல்லாயிருக்குமா தள?
///படத்தில் உபயோகித்த டெக்னாலஜியைப் பற்றி எழுத.. இன்னொரு பிக்ஸார் பதிவு வேண்டும்.///
திரும்பவும் மோதல்லேர்ந்தா? அவ்வ்வ்வ்...! நீங்க எழுதுங்க தல, 4 விஷயம் புதுசா கத்துகுறோம்.
///நான் வேட்டைக்காரன் பத்தின உண்மைகளை வெளிய சொல்லுறது இல்லை.///
நீங்களுமா தல... அவர் அப்படி என்ன பாவம் பண்ணிட்டார். எல்லாரும் இப்புடி போட்டு தாக்குறீங்க. எதோ 3-4 படம் மொக்கை ஆய்டுச்சு. அவர தவிர மத்த எல்லாரும் உலக சினிமாவா நடிச்சி 100 -150 நாள் ஓடுதா நம்ம தமிழ் திரை உலகத்துல.
அவரும் குதிரை தான். சீக்கிரமே எழுந்திடுவார். :))
தல, அவதார் டிக்கெட் புக் பண்ணிட்டேனே....! :))
உங்க ப்ளாக்ல என் விமர்சனத்துக்கு லிங்கா..? நன்றி தல. இனிமே கொஞ்சம் நல்லா எழுத ட்ரை பண்ணுறேன். :)
உங்க மூலமா தான் பப்பு, கருந்தேள் எல்லாம் என் ஏரியா பக்கம் நம்பி வந்திருக்காங்க. இனிமே அவங்கள அடிக்கடி வரவைக்கணும். முயற்சி பண்றேன். நன்றி பப்பு, கருந்தேள்...!
ஹாலிவுட்டே நடுங்குதுல்ல தளபதிய பாத்து.(பாக்காமலேயே)
november முடுஞ்சுருச்சே :( ....
வழக்கம் போல் நல் விமர்சனம்
இந்தபடத்தினை பார்க்கும் போது லயன்கிங் அளவுக்கு சிறந்ததாக தோன்றவில்லை..2Dல புதியஉத்திகளை பயன்படுத்து அசத்தியிருப்பாங்க என எதிர்பார்த்தேன்..டிஸ்னி இந்த ரீஎன்ரிக்கு இன்னும் சிறப்பான ஒரு கதைக்களத்தோடு இறங்கியிருக்கலாம் என தோன்றுகின்றது
முதல் பின்னோட்டத்தில் எழுத்துபிழையுடன் எழுதியிருப்பதால் நீக்கிவிட்டேன்..
eagle eye பாத்தாச்சா? (என் friend எல்லாம் நல்லா இருக்குன்னாங்க. அவங்க அழற மாதிரி அதுக்கு ஒரு விமர்சனம் எனக்கு வேணும் தல....)
நல்லவேளை.. எனக்கு சண்டிவி கனெக்ஷன் இல்லை. இதையெல்லாம் பார்த்தே ஆயுள் குறைஞ்சிடும் போல இருக்கே...!
முதல்ல உங்களுக்குத்தான் விருது கொடுக்கனும்! :)
======
@பூச்சி: ஆஹா. பூச்சி.! வயித்தை கலக்கறீங்களே... நான் நிறைய படங்களை அரைகுறையா.. ட்ரஃப்ஃப்டில் எழுதி வச்சிருக்கேன். எல்லாம் போச்சின்னா... காலி... முதல்ல இதுக்கும் ஒரு பேக்கப் எடுக்கனும்.
உங்க ட்ராஃப்ட் போனது??!!!!! இதுக்குத்தான் எங்களை மாதிரி.. பிரபலமில்லாம இருக்கனும். :(
இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு இதுவரை தெரியலை.
======
@பப்பு: எனக்கும் கூட பப்பு. முன்னாடி டிஸ்னி க்ளாஸிக்கின் அத்தனை டிவிடியும் இருந்துச்சி. ஒரு நெருங்கிய நண்பரின் பையனுக்கு எல்லாத்தையும் கிஃப்டா கொடுத்துட்டேன். முடிஞ்சா இன்னொரு முறை பார்க்கனும்.
======
@கலையரசன்: நிச்சயம் முடியாதுங்க கலை. அந்தப் படங்கள் எல்லாம்.. ரொம்ப புதிய கதை. அந்த கால கட்டம் வேறு. இப்ப இந்தப் படம்.. தியேட்டரில் கூட ஃப்ட் ஆக மாட்டேங்குதுன்னு நினைக்கிறேன். குழந்தைகள் ஒரு ஜெனரேஷனே.. 2டி என்னன்னு தெரியாம வளர்ந்துட்டாங்க. கூடவே 3டி க்லாஸ் வேற மாட்டி பழகிட்டாங்க.
தரம்னு பார்த்தா.. மற்ற படங்களை விட அருமைன்னு சொல்லுவேன். கதையில்தான் வீக்.
======
@அறிவுஜீவி: பாவங்க.. பொழச்சி போகட்டும்! :) :) விட்டுடுடலாம்.
ட்ரெய்லரைப் பார்த்தா... அதெல்லாம் திருந்தற ஜென்மம் மாதிரியா இருக்கு? குதிரையா??? என்னைக் கேட்டா....... _______
இந்த லிங்க் மேட்டர் எல்லாம் பெரிசு படுத்தாதீங்க. அது என்னமோ... என்னையும்... ‘பிரபலமா’ காட்டுது. :( :(
======
@அண்ணாமலையான்: உண்மையை சொன்னீங்க தல. கேமரூனுக்கு தூக்கமே வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.
======
@மகா: லொல்லுதானே! :) :) :)
======
@சுப.த: தல.... என்ன இப்படியெல்லாம் கணக்கு போட்டு கலக்கறீங்க?? :) :)
வேட்டைக்காரன் ட்ரெய்லருக்கே.. இவ்வளவு கஷ்டப்பட்ட ஒரே ஆள் நீங்களாதான் இருப்பீங்க! :) :)
நல்லவேளை.. எனக்கு சண்டிவி கனெக்ஷன் இல்லை. இதையெல்லாம் பார்த்தே ஆயுள் குறைஞ்சிடும் போல இருக்கே...!
முதல்ல உங்களுக்குத்தான் விருது கொடுக்கனும்! :)
@ராஜீபன்: உண்மைதாங்க. கலையரனின் பதிலில் சொல்லியக் காரணம்.. ஒரு காரணியா இருக்கலாம். படத்தை ட்ரெடீஷனலாதான் அனிமேட் பண்ணியிருக்காங்க. புது டெக்னாலஜி எல்லாம் உபயோகிக்கலை.
ஆனா எனக்கு அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இந்தப் படம் பிடிச்சது. இப்படி ஒரு படத்தை.. இன்னைக்கு ரிலீஸ் பண்ண.. பயங்கர தைரியம் வேணும்.
====
@ராம்: போன மார்ச் மாசமே எழுதியாச்சி. படிச்சிட்டு அழுதாங்களான்னு சொல்லுங்க. :)
http://www.hollywoodbala.com/2009/03/eagle-eye-2008.html
நல்லா இருக்கு ..நல்லா இருக்கு..
நண்பரே,
2D அனிமேஷன் ரசிகன் நான். அவற்றைப் பார்த்துதானே சிறுவயது கழிந்தது. இத்திரைப்படத்தை இங்கு ஜனவரி இறுதியிலேயே வெளியிடுகிறார்கள். பார்த்து விடுகிறேன். நல்லதொரு விமர்சனம். நியூ மூன் பார்த்த உணர்ச்சிகள் இன்னமும் நீடிக்கின்றனவா :))
மீ த 34!!! பஷ்டு போணி பண்ணி ரொம்ப நாளாச்சா. அதான் இப்படி. தல...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்களா சொல்ல போறிங்களா இல்லையா? நானும் கேட்க கூடாது என்று இருக்கின்றேன்.
பாலா உங்கள் பிக்ஸர் கதை நான் ஒரு வரிவிடாமல் படித்தேன் தெரியுமா ரொம்ப பிடித்திருந்தது ....
விடதேங்க பாஸ் எழுதுங்க
தல வழமையான கலக்கல், மினினோவாவை கவுத்திட்டாங்களே தல, நீங்க பாத்தீங்களா? அந்த மாதிரி சிறப்பான தளம் வேறு இல்லை தறவிறக்க,
ஃபார்மாலிட்டி பண்ணியாச்சுங்கோவ்.
நான் அமெரிக்கா மேல கோபமா இருக்கேன். இதை எல்லா இடத்துலயும் சொல்லப் போறேன்... அமெரிக்கால இருக்குறவங்க மேல இல்ல... அமெரிக்காகாரனுங்க மேல தான்... ப்ளடி பாஸ்கர்.... :D
//@சுப.த: தல.... என்ன இப்படியெல்லாம் கணக்கு போட்டு கலக்கறீங்க?? :) :)
வேட்டைக்காரன் ட்ரெய்லருக்கே.. இவ்வளவு கஷ்டப்பட்ட ஒரே ஆள் நீங்களாதான் இருப்பீங்க! :) :)
நல்லவேளை.. எனக்கு சண்டிவி கனெக்ஷன் இல்லை. இதையெல்லாம் பார்த்தே ஆயுள் குறைஞ்சிடும் போல இருக்கே...!
முதல்ல உங்களுக்குத்தான் விருது கொடுக்கனும்! :)//
எங்க விருது ? எங்க விருது?
ட்ரைலரைப் பார்த்தே கலங்கிட்டதாலதான் கலங்கிப் போய் இப்படி ஆய்ட்டேன்.
என்னது சண்டி.வி கனெக்ஷன் இல்லையா? நீங்க வேட்டைக்காரன் ட்ரைலரை ரொம்ப மிஸ் பன்றீங்க... :-)
@வினோத் : ஒரு நல்லப் படத்தையும் எழுத விட மாட்டேங்கறாங்கப்பா.
@க. காதலன் : அந்தப் படத்தை... டாப் டென்னில் பார்க்கும் போதெல்லாம் பத்திகிட்டு வருதுங்க தல.
நீங்க கண்டிப்பா டிஸ்னி க்லாசிக் ரசிகராதான் இருப்பீங்க. ஸோ.. டோம் மிஸ் திஸ்.
@பாலவாசகன் : ஆனா.. நிறைய பேருக்கு.. அன்னைல இருந்து அலர்ஜி ஆய்டுச்சிங்க தல! :) :)
@கார்த்திக்கேயன் : நான் மினிநோவா யூஸ் பண்ணுறது இல்லீங்க. டோரண்டின் உபயோகம் எனக்கு ரொம்ப குறைவுதான். அப்படி யூஸ் பண்ணினாலும் 99% ப்ரைவேட் டோரண்ட்தான். இல்லைன்னா isohunt.
ஹாஹா.. ஹா. ஃபார்மாலிடிக்கு நன்றிங்கோவ்..!!
@பப்பு: பாஸ்கர் அமெரிக்கா காரரா பப்பு? :)
சுப.த : அதை ஒரே ஒரு முறை பார்த்தேன். அப்ப பிடிச்ச கிலிதான். இன்னும் விடலை.
நீங்க பாவம். ஒரு நாளைக்கு 10 மணி நேரம். :(
ஆமா தல... நியூ ஜெர்சி...சரி அது என்ன //ஹார்லிக்ஸ் குடித்து, வளர்ந்து பெரியவர்கள் ஆனப் பின்...// அப்ப காம்ப்ளான் இல்லையா?
படத்தோட டெக்னிகல் விசயங்களெல்லாம் கலகுரிங்க...சூப்பர்
பாஸ்கர் அமெரிக்கா காரரா பப்பு? :)///
எப்படி ஒரு ஸ்பாண்டேனிஸா? சான்ஸே இல்லைங்க,, ஹி.. ஹி..
சென்சார் கட் இல்லாம அப்படி திட்ட லொள்ளு சபாவில கத்து கொடுத்தாங்க!
எவங்க அவன் Glen Beck fox channelல? சிக்குனா செத்தான்.
பப்பு சாந்தம் சாந்தம்..
///// தல...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்களா சொல்ல போறிங்களா இல்லையா? நானும் கேட்க கூடாது என்று இருக்கின்றேன்.//////
@விஜய் : என்ன உண்மைங்க தல? இப்படியே எல்லாரும் போட்டு வாங்கறாங்க. நானும் லூசு மாதிரி உளறிடுறேன். Saw-வின் இரண்டா பாகமா?
நிறைய புதுப்படங்கள் இருக்கறனால அதை விட்டு வச்சிருக்கேன். மறக்கலை! (வேற எதாவதா? :) )
====
@கபி: அட.. காம்ப்ளான் பேரு கூட மறந்து போச்சிங்க தல!!! பார்த்தீங்களா. இதுக்குத்தான் 2டி படங்கள் எல்லாம் திரும்ப வரணுங்கறது. கொஞ்சம் விட்டா எல்லாம் மறந்துடுது.
===
பப்பு: க்ளென் பெக் ஒரு லூசு!! அந்த ஆளை விட்டுத் தள்ளுங்க. ஓவரா சீன் போட மட்டும்தான் அந்த ஆளுக்குத் தெரியும்.
ஜேம்ஸ் கேமரூன் அவதார் படம், இந்த வாரம் ரிலிஸ் ஆகுது,.. ம்ம்ம்ம்....சூரியனுக்கு டார்ச் அடிகேறேன்...
ஒரு விரிவான விமர்சனம் எதிபர்கிறேன்...
பின்னூட்டங்களில் பேசித் தள்ளியிருக்கோம் தல இதைப் பத்தி. டிக்கட் எல்லாம்.. 2-3 வாரம் முன்னாடியே ஐமேக்ஸில் புக் பண்ணிட்டேன். வெள்ளிக்கிழமை தூங்கி எழுந்து நேரா நம்ம ப்லாக் வந்துடுங்க.
பதிவு போட்டு முடிக்க.. எப்படியும் காலைல ஒரு 5-6 ஆகலாம். அப்புறம்தான் பல் விளக்கி குளிச்சி ஆஃபீஸ் போகனும்.
வந்துட்டோம்ல.. நன்றி பாலா...
ஆகா.. மீண்டும் "மிச்சர் " ஆ ..?
கிஷோர்... உங்களுக்காக.. ஒரு லிங்க் தமிழிஷ்-க்கு மேல இருக்கு பாருங்க.
அதில் க்ளிக் பண்ணினா.. தனிப் பேஜ் ஓப்பன் ஆகும்.
இந்த லிங்கை... இனி எல்லா பதிவுலயும் இணைச்சிடுறேன். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். :)
அறிமுகத்திற்கு நன்றி பாலா.. நான் தாமஸ் நியுமேனின் தீவிர ரசிகன் :)
-Toto
www.pixmonk.com
பாலா அந்த பொத்தான் எப்படி வைக்கிறது. பாமரனுக்கு புரியுற மாதிரி சொல்லனும். ப்ளாட்ஃபார்ம், மாடுயூல் போட்டிதட்டுறவங்கள ஏமாத்துற மாதிரி செய்யக் கூடாது. கிஷோருக்காக இதை செய்யுவோம்! :) சிதம்பரம் போனா நல்லா கவனிப்பாப்புல!
ஏம் பாஸ் பதிவு போடறீங்க, அதுக்கு பதிலும் போடறீங்க, அப்புறமா சினிமா பாத்து விமர்சனமும் எழுதறீங்க, ஆனா என் சந்தேகம் என்னன்னா எப்பதான் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறீங்க?
வாழ்க..வாழ்க ;)
@Toto: நான் மூணு பேருக்கும் தல. விஜய் ஆண்டனி, சிற்பி, எஸ்.ஏ. ராஜ்குமாரை தவிர.. மத்த எல்லாரையும் சுமாராவாவது பிடிக்கும்.
@அண்னாமலயான்: கோபி, பப்பு, கிஷோர், வினோத்.... எல்லாரும் எங்க போய்ட்டீங்க. இங்க ஒருத்தர் என்னை நாக்கை பிடுங்கற மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கார். வந்து என்னான்னு கவனிங்க. :)
@கோபி: அண்ணாமலையான்.. ப்ளீஸ்.!
@பப்பு: லிங்க் கொடுக்கறது ரொம்ப சுலபம்.
முதல்ல... உங்க டேஷ் போர்டில், கமெண்டில் ‘New Page' ஆப்ஷனை செலக்ட் பண்ணி, ஸேவ் பண்ணி, இப்ப ப்லாக் ஓப்பன் பண்ணுங்க.
கீழ ‘Post A Comment'-ன்னு இருக்கும் லிங்கை க்ளிக் பண்ணுங்க.
புதுசா ஓப்பன் ஆகும் கமெண்ட் பேஜின் URL-ஐ அப்படியே காப்பி பண்ணிக்கங்க. அதில்தான் உங்க ப்லாக் ஐடி & போஸ்ட் ஐடி நம்பர் இருக்கும்.
இப்ப..., ஒரு நோட் பேடில்...
< a href="காப்பி செய்த URL இங்க பேஸ்ட்" target="_blank">For Kishore, we need TREAT< /a>
ன்னு அடிச்சிட்டு, ஸேவ் பண்ணிடுங்க.
< a -ரெண்டுக்கும் நடுவில் ஸ்பேஸ் இருக்கக் கூடாது. அதே மாதிரி < /a> - இங்கயும் ஸ்பேஸை எடுத்துடுங்க.
இந்த கோடை... ஒவ்வொரு புது.. போஸ்ட் எழுதும் போதும்... கடைசி லைனில் சேர்த்துட்டா.. முடிஞ்சது மேட்டர்... ரொம்ப சிம்பிள்.
(அப்புறம் திரும்ப உங்க கமெண்டை எம்பட் ஆப்ஷனுக்கு மாத்திக்கலாம்.)
=====
இந்த கோடை... டெம்ப்ளேட்டில் போட முடியாது. XML எர்ரர் வரும். அதனால் இதுதான் இப்போதைக்கு நான் கண்டுபிடித்த வழி.
டெம்ப்ளேட்டில் ஆட் பண்ண முடிஞ்சா அப்டேட் பண்ணுறேன்.
சொல்ல மறந்திட்டேன். இதில் போஸ்ட் ஐடி மாறிகிட்டே இருக்கும். புது போஸ்ட் பண்ணும்போது.. அந்த ஐடி என்னன்னு கண்டு பிடிக்கனும். இதே வழியை யூஸ் பண்ணலாம்.
அண்னாமலயான் சொன்னத கண்டுகாதிங்க,..உங்க சேவை தொடரட்டும்...
தல டேவிட் ஒ ரஸ்ஸல்ளோட 'த்ரீ கிங்ஸ்' படம் பர்திருகிங்கள (பழைய படம்), நிச்சையம் பர்திருபிங்க, முடிஞ்ச அந்த படத பத்தி உங்க விமர்சனம் போடணும்.
பார்த்திருக்கேன் தல! தங்கப் புதையலை எடுக்கற கதைதானே? ரொம்ப நாளுக்கு முன்னாடி சப்டைட்டில் தேவைப் பட்ட காலத்தில் பார்த்திருக்கேன்.
திரும்ப ஒருமுறை பார்த்திடுறேங்க. என் ட்ராஃப்டை பார்த்தா.. உங்களுக்கு மயக்கம் வந்திடும். இதெல்லாம் என்னைக்கு எழுதி முடிக்கப் போறேன்னு தெரியலை. :)
பப்பு: இது நியூ வெர்ஷன். இதை.. உங்க டெம்ளேட்டில் கூட போட்டுக்கலாம்.
Edit HTML -ல் எக்ஸ்பேண்ட் க்ளிக் பண்ணி இப்படி தேடிப்பாருங்க.
< data:postCommentMsg/> (ஸ்பேஸை எடுத்துடுங்க).
அதுக்குக் கீழ் இந்த கமெண்டை பேஸ்ட் பண்ணுங்க. Blog ID மட்டும், முன்னாடி சொன்ன முறையில் கண்டு பிடிச்சிக்கங்க. அதை XXXXXX-ல் ரீப்ளேஸ் பண்ணிட்டா முடிஞ்சது.
< a expr:href='"https://www.blogger.com/comment.g?blogID=XXXXXXXXXXXXXXXXXX&postID=" + data:post.id + ""'> / கிஷோர் கமெண்ட் < /a>
(முன்னாடியே சொன்ன < a அப்புறம் < /a> ஸ்பேஸை எடுத்துட்டு)
======
BlogID -ஐ ப்லாகர், பப்ளிக்கா எடுக்க எந்த வேரியபிளும் தரலை. அதனால்.. இதுதான் இப்போதைக்கு பெஸ்ட்.
ஒவ்வொரு போஸ்டுக்கும்... நீங்க எதுவும் பண்ணத் தேவையில்லை. இந்த கோடை.. நீங்க எங்க வேணும்னாலும் பேஸ்ட் பண்ணிக்கலாம்.
தமிழிஷ்-க்கு கீழ வேணும்னா... tamilish-னு சர்ச் பண்ணி.. அதுக்கு கீழ போட்டாலும் வொர்க் ஆகும்.
thanks தல
கோச்சுக்காதீங்க பாஸ் எனக்கும் அந்த டெக்னிக் தெரிஞ்சா நாமளும் நெறயா எழுதலாம்மேன்னுதான் (நாங்கள்ளாம் கொஞ்ச சம்பளத்துக்கு நிறய வேலை பாக்குறோம்)
யாரப் பார்த்து என்ன கேட்டுட்டீங்க? நமக்கு என்னைக்குங்க தல கோவம் வந்திருக்கு? :) :)
----
நான் அதிக பட்சமா தூங்கறது 4-5 மணி நேரம்தாங்க. மீதி நேரமெல்லாம் சினிமா பார்க்கறது.. இல்லைன்னா.. இப்ப ப்லாக். வேற எந்த எண்டர்டென்மெண்டும் கிடையாது. அப்புறம் ஆஃபீஸ்லயும்... எப்பவாவது வரிசையா வேலை வரும் இல்லைன்னா சும்மா இருக்க வேண்டியதுதான்.
அதான்.. போட்டுத் தாக்கறேன்! :)
பிரமாதம். . நல்ல அனிமேஷன் படங்களுக்கு நான் ஒரு ரசிகன். . இத இன்னும் பாக்கல. கண்டிப்பா பார்த்துரலாம். . . :)
thankyou bala
///@விஜய் : என்ன உண்மைங்க தல? இப்படியே எல்லாரும் போட்டு வாங்கறாங்க. நானும் லூசு மாதிரி உளறிடுறேன். Saw-வின் இரண்டா பாகமா?///
சும்மா நச் என்று அடிக்கிறீங்களே. உங்களிடமா போட்டு வாங்க முடியும்?
ஃப்ரெஞ்ச்காரர்கள் சேர்ந்து ஆங்கிலத்தில் எடுத்திருக்கும் ஒரு இந்தியத்தனமான மசலா ஆக்சன் படம் ‘டேக்கன்’. ஃப்ரான்சில் ஒரு வருடம் முன்பே ரிலீஸ் ஆகிவிட்டதாம். இங்கு இப்பொழுதுதான் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் நம்மூரிலும் வந்துவிடும்... அக்ஷய்குமாரோ... விஜயகாந்தோ யாரவது நடித்து.
Vanakkam Thalai tirumba vanthuttam. Konja naal veliur suthi romba gap vilunthidichi. Ini vazakkam pola post poda arambikkalam. Intha Taken padathai pathi march 09laye solli irukkinga almost ippo Puratchi kalaingar edukkara Virudhagiri kittathatta ithuthannu industry pechi. Eppidi thalai ivvalavu ivvalavu gnanam. Kalukkunga
@கருந்தேள்: ஒரு நாள் விட்டா இன்னொரு நாள்.. ஆபீஸில் துரத்துறாங்க. உடனே பதில் போட முடியலை. :(
இந்தியாவுக்கு வருமா இந்தப் படமெல்லாம்? :( வந்தால் நிச்சயம் பாருங்க.
@விஜய்: :) :) :) இந்த வாரத்தில் முயற்சி பண்ணுறேன் விஜய்.
@Clove: ஹையா.. அப்ப.. நானும்... ‘இங்கே குறி சொல்லப் படும்’னு ஒரு போர்ட் மாட்டிக்கப் போறேன். :) :)
பேரே டெரரா இருக்கு. நிச்சயமா டேக்கனுக்கு.... சரி போட்டியா வருவாரு.. நம்மாளு.
Bala, Waiting for Avtar review..
நேற்று வேட்டைக்காரன் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது. அதில் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நம்முடைய ஆல் டைம் பேவரிட் காமெடியர் (ஒரு மரியாதை தான்) கவுண்டமணியும் அடக்கம். அந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய விமர்சனம்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்
பூச்சி, பதிவு போட்டாச்சி. நீங்க எங்க போய்ட்டீங்க? க்ரிக்கட் பார்க்கவா?
நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் - பொதுவாக இப்படிபட்ட படங்களை நான் தனியாகதான் பார்த்து கொண்டிருந்தேன் - இப்போ துணை வந்து விட்டது..!! நல்ல விமர்ச்சனம்.. திரைப்படத்தின் இசை பற்றிதான் முதலில் கவனித்தேன் - அத்தனை இனிமை அது. 2டி திரைப்படங்கள் அனைத்தையும் தொகுத்து கொண்டிருக்கிறேன் - பார்க்கலாம் எத்தனை தேறுகிறது என்று..
மிக்க நன்றி முத்துக்குமார். நான் இன்னும் தனியாதான் பார்த்துக்கிட்டு இருக்கேன். :( :(
என்கிட்ட.. .2டி-3டி பெரிய கலெக்ஷன் இருக்கு.
//ஆல்ரைட்! படம் 2டி என்பது ஓகே. ஆனால் இது எந்த மாதிரி 2டி? கணிப்பொறியில் வரைந்ததா.. என்றால் இல்லை. இது ட்ரடீஷனல் அனிமேஷன் என்று சொல்லப் படும் ‘கையால் வரைந்து’ அனிமேட் செய்வது. //
கணினியில் என்னதான் வரைந்தாலும் வால்ட் டிஸ்னியின் புகழ் பெற்ற கேரக்டர்களை கையால் வரைந்த நேர்த்தி (பேரு என்னா?உங்க ஊரு ஆளுக பேரு யாருக்கு மனசுக்குள்ள நிக்குது)சும்மா சொல்லக்கூடாது!
டானல்ட் டக்-கா?? ஹோ.. தமிழ்ல ‘டொனால்ட்! :)
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!