1/25/2010

The Blind Side [Best of 2009 - 04]


கதையை படிச்சிட்டு, எதோ கண்ணைக் கசக்கற படம்னோ, அமெரிக்கன் ஃபுட்ஃபால் தெரியாம எப்படிப் படம் பார்க்கறதுன்னோ நினைச்சிடாதீங்க. இது 100% FEEL GOOD படம்.

பெரும்பாலான நேரம், பந்தை கையில் வைத்துக் கொண்டேயிருக்கும் இந்த விளையாட்டை ஏன் ஃபுட்பால்-ன்னு கூப்பிடுறீங்க”-ன்னு, சுத்தியிருக்கும் அத்தனை அமெரிக்கரிடமும் கேட்டு சலிச்சாச்சி. யாருக்கும் பதில் தெரியலை. ஆனால் இவர்களிடம்... நம் ‘ஃபுட்பாலை’ப் பத்தி பேசினால்.. ‘ஹோ... சாக்கர்’ -ன்னு நம்மை திருத்துவாங்க.

கொஞ்ச நாளாகவே இந்த படத்தைப் பத்தி எழுதலாமா வேணாமான்னு தடுமாறி கிட்டு இருக்கேன். க்ரிக்கட்டைத் தவிர மற்ற விளையாட்டுக்களில் நமக்கு ஈடுபாடு இல்லாதது ஒரு காரணம். புது முயற்சிகளை நிறைய பேர் வரவேற்க ரெடியா இருக்கறனால.. இந்த படத்தைப் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். :)

அடுத்ததா எழுதப் போறப் படமும், விளையாட்டு சம்பந்தப் பட்டதுதான் (Invictus). இரண்டு படங்களின் விளையாட்டுக்களும் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. The Blind Side - படம், பார்க்க ரக்பி போலவே இருக்கும், அமெரிக்கன் ஃபுட்பால் பற்றியது.

இந்த விளையாட்டில் Blind Side -ங்கறது, ஒவ்வொரு முறையும் பந்து நிறுத்தப் பட்டு, திரும்ப ஆட்டம் ஆரம்பிக்கும் போது, அந்த விளையாட்டின் வெகு முக்கியமான, Quarter Back எனப்படும் ப்ளேயருக்கு பந்து பாஸ் செய்யப் படும். அப்பொழுது இருந்து ஆட்டம் ஆரம்பம். அந்த Quarter Back கொஞ்சம் நிதானித்து, யாருக்கு பந்தை பாஸ் பண்ணலாம் என முடிவெடுத்து....,

.....பந்தை எறியும் போது, அவன் வலது கை பழக்கம் உள்ளவன் என்றால்... இடது பக்கமிருந்து யாராவது தாக்க வந்தால், அவனால் முழுமையாக பார்க்க முடியாது. அது Quarter Back-ன் Blind Side. அந்த ஏரியாவை கவர் செய்ய, ஆஜானுபாகு ஆட்கள் வேண்டும். ஏனெனில், Quarter Back-ஐ மோத வருவதும், அதே சைஸ் ஆட்களாகத்தான் இருக்கும்.


இது கொஞ்ச வருடங்களுக்கு முன் நடந்த உண்மைக் கதை. அப்பா யாரென்பது அம்மாவுக்கே குழப்பமான ஒரு கருப்பரின குடும்பத்தில், ஒரு டஜன் குழந்தைகளில் ஒருவனாகப் பிறந்து, அம்மாவின் போதை பழக்கத்தால்.., அரசாங்கம் அவளிடமிருந்து குழந்தைகளை பறித்துக் கொள்ள...

... இது போன்ற மைனர் குழந்தைகளை வளர்க்கும் foster care விடுதிகளில் மைக்கெல் வளருகிறான். ஆக்சுவலி... கொஞ்சம் ஓவராக வளர்ந்து விடுகிறான். பதினேழு வயதில், ஆறரை அடி உயரத்தில், 140 கிலோ.

படிப்பில் ஆர்வமில்லை. பரிட்ச்சைப் பேப்பர்களில், அவன் பெயரை எழுதினாலே பெரிய விஷயம். பாசம் காட்ட யாருமில்லாமல், மற்றவர்களுடன் பேசுவதே கிடையாது. ஏற்கனவே ஏகப்பட்ட foster care விடுதிகளில் இருந்து மாறி மாறி, இப்பொழுது டென்னஸஸி மாநிலத்தில் தஞ்சம். அத்தனை சப்ஜக்டிலும் ஃபெய்ல் என்றாலும், ஒரு சப்ஜெக்டில் மைக்கெலை அடிக்க யாருமில்லை.

Protective Instinct!! தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ, எதாவது பாதுகாப்பு தேவை என்னும் பொழுது, மைக்கெலின் ரியாக்‌ஷன் மற்றவர்களை விட மிக மிக அதிகம்.

ஒரு குளிர் நாளில் படுக்க இடமில்லாமல் அலையும் அவனுக்கு, சாண்ட்ரா புல்லக்கின் குடும்பம் அவனுக்கு தங்க இடம் கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக... அந்த வீட்டின் இன்னொரு குழந்தையாக தத்தெடுக்கும் அளவுக்கு, மாறுவதும் இல்லாமல், கூடவே அமெரிக்க ஃபுட்பாலில், இணையற்ற Blind Side ப்ளேயராக மாறுவது உபகதை.

தெருவில் சுற்றிக் கொண்டிருந்த, Michael Oher -ன் இன்றைய வருமானம் ஆண்டுக்கு பதினான்கு மில்லியன். அதைவிட முக்கியம், இந்த 23 வயது இளைஞனுக்கு, 17 வயதில் கிடைத்த அன்பான குடும்பம். பதினேழு வயதில் 300 பவுண்ட் எடையில் ஒரு பையனை, அதுவும் ஏழ்மையான கருப்பின சிறுவனை, ஒரு பணக்கார வெள்ளையின குடும்பம், தன் சுற்றத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தத்தெடுத்து, அவனுக்கு கொடுத்த மறு வாழ்க்கை, மைக்கெலை மட்டுமல்லாமல், இன்று எத்தனையோ பேரின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

மைக்கெலின் ‘கோச்’ ஆரம்பித்து, அவரது டீச்சர், படித்த பள்ளி, கல்லூரி என அத்தனையும் இன்று பிரபலம். இது வரை வந்த புட்பால் பற்றியப் படங்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இந்தப் படம் சம்பாதித்திருப்பது $240 மில்லியன்.


சாண்ட்ராவுக்கு 45 வயசு-ன்னு யாராவது ப்ரூஃவ் பண்ணிட்டீங்கன்னா, செல்வராகவன் படமெடுக்கறதை நிறுத்திடுவாராம். ஒரு பக்கம் All About Steve, The Proposal -ன்னு கொட்டம் அடிச்சிகிட்டு இருந்தா...

..இன்னொரு பக்கம், இந்த வருட கோல்டன் க்லோபை தட்டிக் கொண்டு போன பர்ஃபார்மென்ஸ். நம்ம ஹீரோயின்களுக்கு 17 வயசு பையனுக்கு அம்மாவா நடிக்கும் தைரியம் வருமா?? தைரியம் வந்தாலும் நடிப்பு வருமா?? (The Proposal படத்திற்கும் சாண்ட்ராவுக்கு இன்னொரு நாமினேஷன் கிடைச்சது. ஆனா மெரில் ஸ்ட்ரிப் விடுவாங்களா?!!! ரெக்கார்ட் நம்பரில் இன்னொன்னு ஆட் ஆகிடுச்சி).

க்யுண்டன் ஆரன் (Quinton Aaron) நிஜ மைக்கெலை விட, ஐந்து இன்ச் உயரம், இரண்டு வயது அதிகம். 23 கிலோ எடை அதிகம். படத்துக்காக எடையை குறைத்தாராம். சாண்ட்ராவுக்கு அப்புறம், நம் கண் முழுக்க ‘நிறைந்திருப்பவர்’.

இவங்க ரெண்டு பேருமே மொத்த ஸ்க்ரீனையும் எடுத்துக் கொண்டாலும்..., படத்த்தில் வரும்.. அப்பா/குழந்தைகள் கேரக்டர்களும்.., மொழி, நிறத்தை எல்லாம் தாண்டி உங்களையும் அந்த குடும்பத்திற்குள் இழுத்துக் கொள்ளும்.

I Bet!



The Blind Side = The Bright Side




45 தியேட்டர் கமெண்ட்ஸ்:

டுபாக்கூர்கந்தசாமி said... January 25, 2010 12:55 PM

தல பதிவ படிக்கும் போது படம் நிறைய செண்டிமெண்டா இருக்கும் போல.....

உண்மைலியே இந்த விளையாட்டுக்கு பேரு ரக்பி தானே தல அப்புறம் ஏன் புட்பால்னு சொல்றாங்க? கொஞ்சம் விளக்கவும்.

அப்புறம் சாண்ட்ரா புல்லக் பத்தி புகழ்ந்து தள்றீங்க ரொம்ப புடிக்குமோ.

தப்ப நினைக்க கூடாது படத்தோட கதைய மட்டும் சொல்லி நிறுத்திட்டிங்க நிறைய எதிர்பார்த்தேன்:(

நானும் ரக்பி படங்கள விரும்பி பாக்ற ஆள் தான் :)

ஆனா இது தான் டாப்புங்கிறீங்க கண்டிப்பா பாக்றேன்.

ஹாலிவுட் பாலா said... January 25, 2010 1:06 PM

செண்டிமெண்டெல்லாம் கிடையாதுங்க. ரொம்ப இயல்பா கொண்டு போயிருப்பாங்க. நானும் அதுக்கு பயந்துகிட்டுதான் படம் பார்க்காம இருந்தேன். ரொம்ப அருமையானப் படம்.

மத்த விஷயம் எழுதாததுக்கு ரீஸன் ஏற்கனவே பதிவு பெரிசா போய்டுச்சிங்கறனாலதான்.

அப்புறம். இது ‘ரக்பி’ இல்லை. ‘அமெரிக்கன் ஃபுட்பால்’.

ரக்பியில் ஹெல்மெட் இருக்காது. ரொம்ப டேஞ்சரான விளையாட்டு. அமெரிக்கன் ஃபுட்பால் அந்தளவுக்கு மோசம் கிடையாது.

அண்ணாமலையான் said... January 25, 2010 1:51 PM

குத்துனேன் பாருங்க ஓட்டு.. (செக் பண்னுங்க அழுத்தி குத்திட்டேனோ என்னமோ?)

VIJAY said... January 25, 2010 2:04 PM

ஃபீல் குட் படம் என்றால் கருப்பினத்தவர் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது உங்கள் ஊரில் எழுதப்படாத சட்டமா பாஸ்?

ஹாலிவுட் பாலா said... January 25, 2010 2:14 PM

@அண்ணாமலையான் : சரியாதாங்க விழுந்திருக்கு! :)

--

@விஜய் : Feel Good-ங்கற வார்த்தையை எப்படி எடுத்துக்கிட்டீங்கன்னு தெரியலை. இதுக்கு முன்னாடி எழுதின Feel Good படம், Mamma Mia தான். அதுக்கும், நிறத்துக்கும் என்ன சம்பந்தம் விஜய்?

அது சரி.. திரும்பவும் ‘உங்க ஊர்’-ங்கறீங்களே! :)

சங்கர் said... January 25, 2010 3:09 PM

Best of 2010-ல முதல் படமே இன்னும் பாக்கல, பாத்துட்டு சொல்றேன்

சங்கர் said... January 25, 2010 3:11 PM

//சாண்ட்ராவுக்கு 45 வயசு-ன்னு யாராவது ப்ரூஃவ் பண்ணிட்டீங்கன்னா, செல்வராகவன் படமெடுக்கறதை நிறுத்திடுவாராம்//

இந்தப் பதிவுக்கான வடையா? :))

சங்கர் said... January 25, 2010 3:12 PM

//நம்ம ஹீரோயின்களுக்கு 17 வயசு பையனுக்கு அம்மாவா நடிக்கும் தைரியம் வருமா??//

இப்பத்தான் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாடுறாங்க, அவுங்களைப் போய் :)))

சங்கர் said... January 25, 2010 3:14 PM

//VIJAY said...
உங்கள் ஊரில் எழுதப்படாத சட்டமா பாஸ்?//


அய்யோ, பாலாவை நாடு கடத்திட்டாங்களே :))))

ஹாலிவுட் பாலா said... January 25, 2010 3:24 PM

சங்கர்..., பெஸ்ட் ஆஃப் 2009-தானே எழுதிகிட்டு இருக்கேன். இது எங்கே? :)

ரவுடியாக வேணாமா? அதான்! :)

ஆமாங்க.. அவரு எப்பப் பார்த்தாலும் என்னை நாடு கடத்திடுறாரு.

க.இராமசாமி said... January 25, 2010 3:30 PM

தல கண்டிப்பா பாக்கறேன்.

ஹாலிவுட் பாலா said... January 25, 2010 3:46 PM

நீங்க ஃபுட்பால் பார்ப்பீங்களா தல? பார்க்கலைன்னாலும் இந்தப் படம் பிடிக்கும்.

இரவு கவி said... January 25, 2010 5:53 PM

it is very nice movie. i love it.

க.இராமசாமி said... January 25, 2010 7:24 PM

ஃபுட்பால்னு இல்ல தல . ஸ்போட்ஸ்னா நம்மளுக்கு பிடிக்கும். தீ லாங்கஸ்ட் யாடு, அப்புரம் இன்னொரு படம் பேரு ஞாபகம் வரல, ட்வைன் ஜான்சன் நடிச்ச இன்னொரு படம்லாம் பார்த்திருக்கேன்.

சுப.தமிழினியன் said... January 25, 2010 8:10 PM

முன்னோட்டம், நடுவோட்டம், பின்னோட்டம்னு போட்டு செம ஃபார்மெட்ல கலக்குறீங்களே தல.

VIJAY said... January 25, 2010 9:06 PM

இதுக்கு முன்னாடி நீங்க எழுதின ஃபீல் குட் படம் PRECIOUS. அதான் அப்படி சொன்னேன். அப்புறம் முதல்ல நம்ம ஊர் பக்கம் வாங்க. அப்புறம் யோசிக்கலாம் நீங்க எந்த ஊர் என்று.

Balavasakan said... January 25, 2010 10:06 PM

I Bet!...

எவளோன்னு சொல்லுங்க சார்...

||| Romeo ||| said... January 25, 2010 10:24 PM

நேத்து தான் தல The Proposal படம் பார்த்தேன். அம்மிணி ஜம்ன்னு இருக்கா. 45 வயசு நம்பவே முடியல.

mayilravanan said... January 25, 2010 10:41 PM

ம்க்கும்...எழுதலாம்னு நெனச்சு 2 நாள்தான் ஆச்சு. முடிச்சிட்டீங்க..நடத்துங்க.நல்ல படம்.ரொம்ப நல்லாவே எழுதியிருக்குறிங்க..

கண்ணா.. said... January 25, 2010 11:21 PM

//சாண்ட்ராவுக்கு 45 வயசு-ன்னு யாராவது ப்ரூஃவ் பண்ணிட்டீங்கன்னா, செல்வராகவன் படமெடுக்கறதை நிறுத்திடுவாராம்//

யோவ்...ஹாலி பாலி...

45 வயசு பொம்பளையை பார்த்து வழிஞ்சதும் இல்லாம...தேவையே இல்லாம எங்க யூத்து செல்வராகவனை வேற ஆண்ட்ரியாகிட்ட இருந்து பிரிக்க பாக்குற...

விமர்சனம் அருமை..

:)

Cable Sankar said... January 25, 2010 11:35 PM

உங்கூர்ல தான் 50 வயசுல் எலலாம் நின்னு விளையாடுவாங்களே.. ம்ஹும். எனக்கும் சாண்ட்ரா மிகவும் பிடித்தவர்.. அவருக்காகவே படு மொக்கை படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன்

இரவு கவி said... January 26, 2010 12:07 AM

i also go with ramasamy comments. i like sports movies like the longest yard. thala, could you please suggest me some movies like this ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 26, 2010 12:19 AM

தல அப்போ கண்டிப்பாக பாத்துடறேன்.
எனக்கு சாக்கரை மையமாய் வைத்து வந்த படங்கள் மிகவும் பிடிக்கும்.செண்டிமெண்டை கையிலெடுத்து ரொம்ப நல்லா எழுதினீங்க தல.செம மேட்டராயிருக்கே தல.
//சாண்ட்ராவுக்கு 45 வயசு-ன்னு யாராவது ப்ரூஃவ் பண்ணிட்டீங்கன்னா, செல்வராகவன் படமெடுக்கறதை நிறுத்திடுவாராம்//
இப்போது டெம்ப்ளெட்டில் வேண்டிய ஜெனரை அழுத்தி படிக்க முடிவதால் மிகவும் உபயோகமாய் உள்ளது,குடோஸ்,கூடிய விரைவில் அமேசான் உங்களை,உங்க தளத்தை விலைக்கு வாங்கட்டும்
வாக்குகள் சேர்க்கப்பட்டன.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 26, 2010 12:26 AM

இந்த சாண்ட்ராஅம்மணியின் ப்ரொபோசல்னு ஒரு மொக்கை படம் இருக்கு, யாரும் பார்க்கவேண்டாம் .

சங்கர் said... January 26, 2010 12:56 AM

//Cable Sankar said...
உங்கூர்ல தான் 50 வயசுல் எலலாம் நின்னு விளையாடுவாங்களே.. ம்ஹும். எனக்கும் சாண்ட்ரா மிகவும் பிடித்தவர்.. அவருக்காகவே படு மொக்கை படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன்//

ஒரு யூத்துக்கு, இன்னொரு யூத்த பிடிக்கிறது ஒண்ணும் ஆச்சரியம் இல்லையே :))

சங்கர் said... January 26, 2010 12:57 AM

//ஹாலிவுட் பாலா said...
சங்கர்..., பெஸ்ட் ஆஃப் 2009-தானே எழுதிகிட்டு இருக்கேன். இது எங்கே? :)//

நான் எதிர்காலத்தை சொன்னேன் :))

ஜோதிஜி said... January 26, 2010 1:01 AM

பார்த்தீர்களா? எழுதும் போது கூட நீளம் அகலம் என்று இந்த இடுகையில் எத்தனை அவஸ்த்தை. உங்களுக்கே இந்த திருப்தி ஒவ்வொன்றும் எழுதி முடித்தவுடன் வருமா? என்று தெரியவில்லை.

ஒவ்வொன்றும் நேர்த்தியான நெசவாளர் பின்னும் பட்டுவஸ்திரம் போல் இருக்கிறது. இன்னும் பல விசயங்களை சினிமா சினிமா மட்டும் தான் தாண்டியும் நீங்கள் எழுதலாமே?

KISHORE said... January 26, 2010 2:23 AM

என்ன தான் சொல்லுங்க ஹாலி பாலி.. நம்ம கேப்டன் விட்ட பம்பரத்துக்கு ஈடாகுமா ?

கருந்தேள் கண்ணாயிரம் said... January 26, 2010 2:30 AM

சான்ட்ரா புல்லாக் என்னோட மோஸ்ட் favorite நடிகை. அவங்களோட மூக்கைப் பார்த்துகினே இருக்கலாம் . .குறிப்பா, தி லேக் ஹவுஸ் படமும், ஹோப் ப்ளோட்ஸ் படமும், மிஸ் கன்ஜீநியாலிட்டி (முதல் பாகம்) யும் என்னோட ஆல் டைம் favorites . . என்ன ஒரு அழகு . .என்ன ஒரு charm . . ஆஹா . . இந்தப்படத்த ரிலீசான புதுசுல நெட்ல பார்த்தப்போ, இதோட வசூலைப் பார்த்து ஆச்சரியமானேன் . . ஆனா இப்ப தான் பிரியுது . .அது மக்களோட உணர்வுகளோட சம்மந்தப்பட்டிருக்குற விஷயம் . .விமரிசனம் அருமையா இருந்தது . . நிச்சயம் பார்ப்பேன் . .

பலா பட்டறை said... January 26, 2010 2:42 AM

Cable Sankar said... January 25, 2010 11:35 PM
உங்கூர்ல தான் 50 வயசுல் எலலாம் நின்னு விளையாடுவாங்களே.. ம்ஹும். எனக்கும் சாண்ட்ரா மிகவும் பிடித்தவர்.. அவருக்காகவே படு மொக்கை படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன்//
ரிப்பீட்டிகிறேன்..:))
----------
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 26, 2010 12:26 AM
இந்த சாண்ட்ராஅம்மணியின் ப்ரொபோசல்னு ஒரு மொக்கை படம் இருக்கு, யாரும் பார்க்கவேண்டாம் //
கழகத்தின் சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.
(குடியரசு தினம் - கொடி ஏத்திட்டு வர்ரதுக்கு லேட்..:)

எறும்பு said... January 26, 2010 4:40 AM

//The Blind Side//

அதான் கண்ணை மூடிட்டு பாராட்டிருகீங்க...
:)

செ.சரவணக்குமார் said... January 26, 2010 5:57 AM

ஏற்கனவே டி.வி.டி வாங்கி வச்சுருக்கேன் தல, பார்க்கத்தான் நேரமில்லை. உங்க விமர்சனம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. பார்த்துடுவோம். ஃபார்மாலிட்டி டன்.

கோபிநாத் said... January 26, 2010 7:40 AM

என்ன தல வலி வலின்னு கூப்பிடுறாங்க!! ?? ;)))

ரைட்டு...இந்த மாதிரி விளையாட்டு படம் என்றால் எக்கு ரொம்ப பிதிக்கும்..;))

கார்த்திக் அண்ணே..கார்த்திக் அண்ணே சீக்கிரம் டவுன் லோட் பண்ணிடு ;)

ஹாலிவுட் பாலா said... January 26, 2010 11:12 AM

@இரவு கவி : மீ டூஊஊஊ.!! :)

--

@இராமசாமி : அந்தப் படம் கேம் ப்ளான். ஆஹா. அதையெல்லாம் பார்த்திருக்கீங்களா? :) :) நான் ரொம்ப சமீபமாதான் அந்தப் படத்தை பார்த்தேன். ஸ்டார்ஸில் ஓடிகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்.

--

@சுப : எந்த ஃபார்மேட்டை சொல்லுறீங்க சுப? கீழே ‘இந்த வாரம்’-ன்னு இருக்கே.. அதுவா? அது மூணு வாரமா இருக்கே. இன்னைக்குத்தான் பார்க்கறீங்களா?

--

@விஜய் : இல்லைங்க விஜய். Precious படம் Feel Good படமில்லை. எண்டர்டெய்னிங்கா சொல்லியிருக்காங்கன்னு சொன்னதை அப்படி எடுத்துகிட்டீங்களா.. இல்லை நான் எங்காவது அப்படி சொல்லிட்டனான்னு தெரியலை. ஆனா இது மேட்டரில்லை விடுங்க!!! :) ஊருக்கு.. இந்த வருஷக் கடைசி அல்லது அடுத்த வருஷ ஆரம்பத்தில். நீங்க அப்ப ஊர்ல இருப்பீங்களா???

வர்ற வழியில்.. மிடில் ஈஸ்டில் கால்-கை எல்லாம் வச்சிட்டு போலாம்னு இருக்கேன்! :)

--

@பாலவாசகன் : ஒரு டாலர்..!! இப்போதைக்கு அவ்ளோதான் முடியும்! :)

----

@ரோமியோ : எனக்கு அந்தப் படம் பிடிக்கலைங்க. ஆனா.. சாண்ட்ரா... ஹி.. ஹி.. சான்சே இல்லை! :))

--

@மயில்ராவணன் : ஏற்கனவே Food, Inc எடுத்துகிட்டீங்க. இதையுமா?? :)

--

@கண்ணா : ஆண்ட்ரியாவுக்குத்தான் 45 வயசு மாதிரி இருக்கு. தண்டோரா கேட்ட கேள்விதான் என்னோடதும்!

--

@கேபிள் : நீங்களுமா ‘உங்க ஊர்’-ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க??! :)

--

@இரவு கவி: இதெல்லாம்... கொஞ்சம் நினைவிருக்கு. இதெல்லாம் முன்னாடியே பார்த்திருந்தா.. வேற லிஸ்ட் தேடலாம்.

Gridiron Gang
Fever Pitch
Coach Carter
Remember the Titans
Friday Night Lights
Happy Gilmore
The Replacements

ஹாலிவுட் பாலா said... January 26, 2010 11:28 AM

@கார்த்திக்கேயன் : ஹா.. ஹா.. ஹா..!! சூப்பர்..! எவ்வளவுக்கு விற்கலாம்னு சொல்லுங்க கார்த்திக்கேயன்??! :)

ப்ரொபோஸல் மொக்கைன்னு சொல்ல முடியலை. ஆனாலும் எனக்குப் பிடிக்கலை.

--

@சங்கர் : அதானே...!!! :) ஒரு சங்கருக்கு இன்னொரு சங்கர் பதில் தர்றார். இன்னொரு சங்கர் எதிர்க்கிறார். சரியான சங்கராபரணம் இங்கே! :)

--

@ஜோதிஜி : குட்டியா எழுதினாலே படிப்பாங்களான்னு தெரியாதுங்க. பெரிசா எழுதினா.. அது இண்ட்ரஸ்டிங் சப்ஜக்டா இருந்தாலொழிய வாய்ப்பில்லை. அமெரிக்கன் ஃபுட்பால் நமக்கு ரொம்ப புதிது. அதான் ரொம்ப டீடெய்லா போகலை.

சினிமா தாண்டி.. நிறைய எழுதியாச்சிங்க. அதிகமானப் பதிவுகள்... மார்ச் மாதம் ஆர்கைவில் இருக்கு. நடுநடுவில்... ஹரிகேன், டெக்னாலஜி மாதிரிப் பதிவுகள் எழுதியிருக்கேன். வெளியே தெரியறது இது மட்டும்தான்! :)

---

@கிஷோர் : ஹா.. ஹா.. ஹா..!! சூப்பர் விளையாட்டு ஆன்ஸர் இது!! :)

----

@கருந்தேள் : லிஸ்டில்.. Speed விட்டு போச்சே கருந்தேள். பார்த்தவுடன் பிடிச்சது அதில்தான். அப்புறம் கன்ஜீனியாலிடி. அப்புறம்.. படம் பார்த்தால் என்ன பார்க்காட்டி என்னன்னு ஆகி.... நிரந்தர கனவுக் கன்னியாகிட்டாங்க! :) :)

---

@பலா : அதுக்காக எல்லாம்... அந்தப் படத்தை கொண்டாட முடியாது.

முட்டாய் எங்கே??

---

@எறும்பு : படம் பாருங்க தல!! எந்தளவுக்கு நீங்க பாராட்டுவீங்கன்னு தெரியும்! :)

---

@கோபி : தலைவலின்னு கூப்பிடுறாங்களா??? யாரு யாரைக் கூப்பிடுறாங்க? நீங்கல்லாம் பக்கத்தில் இருக்கும்போதே இதெல்லாம் நடக்குதா??? ஷேம்.. ஷேம்.!

வினோத்கெளதம் said... January 26, 2010 1:43 PM

பார்க்கணும்..பார்க்கணும்..பார்க்கணும்..
Sandra bullockக்க பார்க்கணும்..:)

வினோத்கெளதம் said... January 26, 2010 1:44 PM

கிழே Edge of darkness poster பட்டய கிளப்புதே எப்ப ரிலீஸ்..!!

ஹாலிவுட் பாலா said... January 26, 2010 2:42 PM

தெளிவா ‘இந்த வாரம்’-ன்னு போட்டே வச்சிருக்கேன். அப்பவும் இந்தக் கேள்வியா? :)

சுப.தமிழினியன் said... January 26, 2010 7:57 PM

//@சுப : எந்த ஃபார்மேட்டை சொல்லுறீங்க சுப? கீழே ‘இந்த வாரம்’-ன்னு இருக்கே.. அதுவா? அது மூணு வாரமா இருக்கே. இன்னைக்குத்தான் பார்க்கறீங்களா?
//

நான் அதை சொல்லல தல, அதைப்பத்தி அப்பவே டிசைனிங் நல்லா இருக்குனு சொன்னேனே.


நான் சொன்னது இந்த விமர்சனம் பத்தி, முதல்ல இஸ்கேல் வச்சி ஒரு கோடு போட்டு அதுக்கு மேல, லைட்டா இன்ட்ரடக்ஸன் குடுத்துட்டு, அடுத்து இன்னொரு கோடு போட்டு, கதையையும் நிஜத்தையும் எழுதிட்டு, கடசியா முடிவுரை எழுதியிருக்கீங்களே, அதை சொன்னேன்.

இதுக்கு முன்னாடி அதிக முறை இப்படி எழுதியிருந்தாலும், இந்த பதிவுல தான் அந்த பார்மெட் செம பர்பெக்ஸன்.

ஹாலிவுட் பாலா said... January 26, 2010 9:04 PM

அட.. இதெல்லாம் வேற கவனிக்கணுமா..?? :)

பார்த்து எழுதிடுறேன்! இனிமே!! :)

Pradeep said... January 28, 2010 4:30 AM

correctthaan bala....padam super.....athulayum sandra bullock...mmmmmmmmm....mudiyala...

ஹாலிவுட் பாலா said... January 28, 2010 12:42 PM

உங்களுக்கும் பிடிச்சதா??!!!! :) சந்தோஷங்க தல!! பார்த்துட்டு வந்து.. பின்னூட்டம் போடுறவங்க ரொம்ப கம்மி!! அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)

ராஜ நடராஜன் said... February 2, 2010 5:03 AM

அமெரிக்கன் புட்பால் பட அட்டையப் பார்த்து எஸ்கேப் ஆயிட்டேன்.கூடவே சாண்ட்ரா புல்லக் பேரும் எஸ்கேப்பாயிடுச்சு.நீங்க சொல்றதால ஒரு தடவை பார்த்தா போச்சு.

ஆமா!எல்லா விளையாட்டுலயும் கலக்குற அமெரிக்கா புட்பாலோட பாட்டன் கால் பந்துல மட்டும் சோடை போவது ஏன்?மரடோனாவெல்லாம் வேலையில்லாம ஊர் சுத்திகிட்டுத்தானே இருக்காரு.கோச்சிங்க் கூப்பிடலாமில்ல?

ஹாலிவுட் பாலா said... February 2, 2010 11:19 AM

படத்துக்கு இப்ப ரெண்டு ஆஸ்கர் நாமினேஷன்!! :) :)

--

இவங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. அதே மாதிரிதான் க்ரிக்கட்டும். ஏன்னு கேட்டா... அதோட ரூல்ஸ் ரொம்ப ‘கஸ்டமா’ இருக்காம்! :) :)

ராஜ நடராஜன் said... February 8, 2010 5:22 AM

Big mike ஐ விட notorious B.I.G எனக்கு பிடிச்சிருந்தது.காரணம் ராப் இசை அல்லது அவ்வளவு பெரிய உடம்போடு நடிப்பும் இயல்பா வந்ததான்னு தெரியல.

Post a Comment / கிஷோர் கமெண்ட்

ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Green Zone Remember Me She is out of my league