நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரியே..., எத்தனை மானநட்ட வழக்கு போட்டாலும்..., இவங்க ஜெயிப்பதில்லை. ஆனாலும்.. இன்னைக்கு வரைக்கும், தங்களைப் பத்தி.. யாராவது கொஞ்சம் தப்பா பேசிட்டாலோ, அல்லது அவங்க ப்ராடக்டை சாப்பிடாதீங்கன்னு சொல்லிட்டாலோ முடிஞ்சது கதை.
அது தெருப் பிச்சைக்காரனா இருந்தா கூட, அவன் மீது ஒரு கேஸ் போட்டு... கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுதான் இவங்க வேலை. நம்மை மாதிரி சாதாரண மக்கள் கிட்ட இருந்து.. ஒரு பைசா கிடைக்காதுன்னு தெரிஞ்சாலும்... இவங்களின் குறி.. நம்ம கிட்ட இருந்து.. நஷ்ட ஈடு வாங்கறது இல்லை. அதை விட முக்கியமான ஒரு விஷயம்!!
பயம்!! எங்களைப் பத்தி தப்பா பேசினா.. என்ன நடக்கும்னு.. மத்த லூசுங்களுக்கும் தெரிய வேணாமா? அதுக்குத்தான் இந்த கேஸ் -ன்னு, பயமுறுத்திகிட்டே இருக்காங்க. யாருன்னு.. உங்களுக்கு புரிஞ்சிருக்கும். நடுத்தர & மேல் தட்டு மக்களின் ஆதர்ஷ உணவு விடுதிகள் McDonalds, Burger King மாதிரியான... Fast Food கம்பெனிகள்.
இந்த நாட்டின் மத்த ஏரியாக்கள் எப்படின்னு தெரியலை. ஆனா... நான் சவுத் ஃப்ளோரிடாவில் இருந்த வரைக்கும்..., நாய் கூட மதிக்காத ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை எதுன்னு கேட்டீங்கன்னா....., அது நம்மூரில் கொடி கட்டிப் பறப்பதா நான் கேள்விப்பட்ட KFC. அந்தக் கடைகளுக்குள்ளே போகும் ஆட்களைப் பார்த்தாலே... அதன் தரம் தெரிஞ்சிடும். அதுக்காக.. ரொம்ப டீஸண்டா தெரியும் மத்தக் கடைகள் எல்லாம்... நம்ம உணவை ISI முத்திரையோடவா தயாரிக்கறாங்கன்னு நினைக்கறீங்க?
அமெரிக்காவில் இருந்து ஒரு கம்பெனி நம்மூரில் வந்து, பர்கர் மாமா, பர்கர் மச்சான், மஹாராஜா பேரன் -னு பெயரை மாத்திகிட்டு கடையை விரிச்சி கல்லா கட்டிகிட்டு இருக்காங்க. ஆனா... அந்தக் கருமங்களை இங்கிருந்து ஏன் துரத்த முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு அடுத்த முறை.. அந்த சுத்த பத்தமான வெஜ்/நான் வெஜ் பர்கர் கடிக்கும் போது கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.
சிங்கப்பூர் பதிவர் கிரி, போன நவம்பர் மாசம்.. தனக்கு McDonald’s சாப்பாடு ரொம்ப பிடிக்கும்னு, எழுதினப்ப..., பின்னூட்டத்தில் ஒரு படத்தைப் பத்தி எழுதப் போறதா சொன்னேன். அப்ப 18+ பிஸி டைம். அதுக்கப்புறம்.. இவ்ளோ நாள் எடுத்துடுச்சி. அதே பதிவின் பின்னூட்டத்தில்.. இன்னும் சிலர்... அவங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு சொல்லியிருக்காங்க.
உங்களுக்கு ஜோசியமே பார்க்காமல் ஒன்னு சொல்லிக்கிறேன். கூடிய சீக்கிரம்..., இந்தப் பதிவில் சொல்லப் போறது எதாவது உங்களுக்கு நடக்கும். வாழ்த்துகள்!!
ஆனாலும்.. எந்த மனிதனும்.. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு.. McDonald’s-ல் சாப்பிட மாட்டான் என்பதால்.... இது அத்தனை பாதிப்பை எனக்கு தரலை. ஒரு வருடம் முன்னாடி வரைக்கும், நானும்.. தினசரி ஒருதரம்-ன்னு மெக்டொனாட்ஸில் சாப்பிட்டுக்கிட்டுதான் இருந்தேன். அதுக்கே உடம்பில் ஏகப்பட்ட மாற்றங்கள். அப்புறம் எப்பவாவது ஒரு தரம்னு குறைஞ்சது. இப்ப நாலு மாசமா... எத்தனைப் பசின்னாலும்... அந்த ஏரியா பக்கமே போறதில்லை.
The Cove டாகுமெண்ட்ரி.. என்னை ஒரு போன் மட்டும்தான் செய்ய விட்டது. Food, Inc டாகுமெண்ட்ரி... கொஞ்ச நாளா என் உணவு முறையையே மாற்றியிருக்கு. அல்லது வாழ்க்கையையே........
மிடில் ஈஸ்ட் ராஜப் பரம்பரையில் ஆரம்பிச்சி... என் மூணு வயசு குழந்தை வரைக்கும்.... இந்த டேஸ்டிற்கு அடிமையாதான் இருக்கோம். ஆனா... சாப்பிட்டது மூளையை மந்தமாக்க.... ஒன்னேயொன்னை மட்டும் மறந்துட்டோம்!!!!!!
இந்தியாவில் எந்த மூலையில் போய்.. McDonald's / Burger King பர்கரை கடிச்சாலும்.. ஒரே டேஸ்ட்தான். நம் நாட்டை விட மூணு மடங்கு பெரிய நாடு... மூலைக்கு மூலை.. இந்த புற்றீசல்கள் இருக்கும் அமெரிக்காவிலும்.. இதே போல.. ‘ஒரே தேசம்... ஒரே டேஸ்ட்’ -தான்.
01. இந்த ஒரே டேஸ்ட் எப்படி... ஒட்டு மொத்த நாட்டிற்கும் கிடைக்குது?
02. ஒரு பாட்டில் தண்ணியை விட, அதை விட பெரிய பாட்டில் சோடா எப்படி கம்மியான விலைக்கு கிடைக்குது?
03. முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி... உங்களால் McDonald's மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கே சாப்பாட்டை வாங்க முடியுது?
04. நாம மாடு சாப்புடுறோம், கோழி சாப்பிடுறோம்! சரி..!!! அந்த மாடும், கோழியும் என்ன சாப்பிடுது?
05. ஒவ்வொரு முறையும் என் மகளும், கிரியும், நீங்களும், நானும் கடிக்கும் ஒவ்வொரு பர்கர் பைட்’டிலும் எத்தனை ஆயிரம் கிருமிகள் நம் வயிற்றுக்கும், எத்தனை நூறு விவசாயக் குடும்பங்கள் தெருவுக்கும் வர்றாங்க???
06. மூணு பர்கர் சாப்பிட்ட மூணு வயசு சிறுவனுக்கு, தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர முடியாத அவன் அம்மா..., இரண்டே வாரத்தில்.. அவனுக்கு பாலூத்தின கதை தெரியுமா????
இந்த சீப் ஃபுட்-டின் சோர்ஸ் என்ன???????????????????
இதையெல்லாம் தெரிஞ்சிக்க.... நாம இன்னொரு விஷயத்தை தேடிப் போகணும். 1970-களில் அமெரிக்காவில் நடந்த விவசாயப் புரட்சி. நம்மூரில் வெகு சாதாரண விசயமாகக் கருதும் ஒரு மேட்டர். ஆனால்... அது ஒவ்வொரு அமெரிக்கனின் தலைமுடி வரைக்கும் பரவியிருக்குன்னா நம்புவீங்களா???
அது......... நாளை!
நாளை-ன்னு சொல்லிட்டேன். ஆனா வின்ஃப்ரே ஓப்ரா மாதிரி பெர்ர்ர்ர்ரிய ஆளுங்களையே கோர்ட்டுக்கு இழுத்து.. ஒரு மில்லியன் டாலர் செலவு வச்ச கம்பெனிகள் இவங்க எல்லாம். நானெல்லாம் இவங்களுக்கு ஒரு செல் உயிரிதான். இருந்தாலும்... என் மேலயும், மயில்ராவணன் மேலயும் மான நஷ்ட வழக்கு எதையும் போடலைன்னா... நாளைக்கு மீட் பண்ணலாம்! (ஹையா.. கூட்டு சேர்த்துகிட்டாச்சி) :)
ரவுடி ஆகறதுன்னு முடிவு பண்ணியாச்சி. இனிமே பெரிய இடமா பார்த்து மோதுவோம்! :)

53 தியேட்டர் கமெண்ட்ஸ்:
மயில் கிட்ட படிச்சப்பயே ஒரு மாதிரிதான் இருந்தது.
நுகர்வோர் பயன் படுத்தும் பொருள் தரம், அதிக நஷ்டஈடு தொகைகள்னு, பாதுகாப்பான சட்டதிட்டம் இருக்கற அங்கயே இப்படின்னா? இங்க? 50 பைசா மிட்டாய்ல கூட சீன எழுத்துக்கள், தரம் பத்தி யாருக்கும் கவலையில்லை, அட இந்த பின்னூட்டமும், உங்க பதிவையும் படிச்சிட்டு, போய்யா போய் புள்ள குட்ட்ங்கள படிக்க வை.. 100 ரூபா பர்கருக்கு இவ்ளோ பெரிய பதிவான்னு யாராவது கேக்க போறாங்க..
ஹைய்யா கோத்து விட்டாச்சு..:)))
அட.. அது பரவாயில்லீங்க...!!
எங்களுக்கெல்லாம்.. கஞ்சிக்கே வழியில்லை. வந்துட்டான்.. பிஸ்ஸா.. பர்கர்-ன்னு. பணத்திமிர்-ன்னு... யாராவது பின்னூட்டம் போடுவாங்க பாருங்க! :)
ஒரு ஆங்கில நாவல்ல ecoli ன்னு படிச்ச ஞாபகம்.. ஒரு குழந்தை ஹாட்டாக் சாப்பிட்டு இறந்துபோய், தாயும் தகப்பனும் ரிஷிமூலம், நதிமூலம் கண்டுபிடிக்கற கதை.. அது தான் நினைவுக்கு வருது..ஓகே வெய்ட்டிங்..
இதில்.. நிஜத்தில்.. ஒரு அம்மா... கோர்ட்டுக்கு வருசக் கணக்கா நடந்துகிட்டு இருக்காங்க.
அரலூசு அர்னால்டால... அந்த நீதியும் கிடைக்காம போய்டுச்சி.
தூங்கிட்டு காலைல வர்றேன். மணி 1.47. குட் நைட்!
நல்ல பதிவு, நன்றி தல.
உண்மையை உரக்க சொல்லும் பதிவு ..... வாழ்த்துக்கள் ...
//அரலூசு அர்னால்டால... அந்த நீதியும் கிடைக்காம போய்டுச்சி//
இது என்ன கதை???கொஞ்சம் எழுதுங்க.
kFC சாப்பிட்டு 2,3 மாசமாச்சு.ரொம்ப பயமுறுத்திறிங்க!!!
எங்களுக்கெல்லாம்.. கஞ்சிக்கே வழியில்லை. வந்துட்டான்.. பிஸ்ஸா.. பர்கர்-ன்னு. பணத்திமிர்
பாலா . .என்னோட தோழி மூலமா "Supersize me " படத்த பத்தி நேத்து தான் கேள்விப்பட்டேன் . . அதுவும், அதே McDonalds ல சாப்புடும்போது . . அதுல இருந்தே ஒரு மாதிரி தின்க் பண்ணிகினே இருந்தேன் . . நீங்க முழுசா எழுதுங்க . .படிச்சிட்டு ஒரு முடிவெடுக்குறேன் . . அந்தப் பக்கமே போவாம . .:-)
நான் இருக்கிற இடத்தை சுத்தி இந்த அயிட்டங்கள(McDonald & KFC ) நிறையா இருந்தாலும்..இது வரைக்கும் அங்க போயி சாப்பிட பிடிக்கல..(ஒரெயொரு தடவை ரம்ஜான் அப்ப வேற வழியே இல்லாமல் போய் சாப்பிட்டேன்)..இங்க ஆபிஸ் பார்ட்டினா கூட எல்லோரும் உடனே சொல்லுறது KFC தான்..அங்க சாப்பிடறது ஒரு Prestige factor..நம்ம ஊர்லயும் இப்ப அந்த கதை தான்..
இங்க அமீரகம் வந்த புதுசுல..என் மாமா குடும்பதினருடன் என்னை அழைத்துகொண்டு McDonalds சென்றிருந்தார்..எதயோ வாங்கி கொடுத்துவிட்டு இதே மாதிரி தரத்தில் நம்ம ஊரில் எதாவது சாப்பிட கிடைக்குமா என்று நக்கலாய் கேட்டார்..(இந்தியா ஏன்றாலே அந்தாளுக்கு எகத்தாளம் தான் ..கிட்டதட்ட உங்களைப்போல் :) )..
அந்த ஆளை அங்கயே Left & Right வாங்கனம்னு நினைதேன்..அப்ப நான் 'ஏரியாவுக்கு' புதுசு அதனால அப்ப விட்டுடேன்..ஏறத்தழ அந்த Matter மறந்தே போயி இருந்தேன்..Thanks for recalling tat thing..
திரும்ப ஒரு நாள் மாட்டுவான் அப்ப இருக்கு அந்த ஆளுக்கு..:)
இவ்வளவு இருக்கா? நல்ல வேள இது வரைக்கும் ஒரு துண்டு கூட நான் சாப்டதில்ல... (ஆமா திருப்பதில ஏற்றுமதி பண்ற தல முடிய வச்சி எதோ சாக்லேட்டுக்கு தேவையான கெமிக்கல் தயாரிக்கறாங்களாமெ?)
நல்ல பதிவு.. பாலா..
//முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி... உங்களால் McDonald's மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கே சாப்பாட்டை வாங்க முடியுது?//
அங்க அப்படியா? இங்க தான் யானை விலை குதிரை விலையா?
மோதி ஜெயிக்க வாழ்த்துக்கள்... நல்லா மோதுங்க... நாங்க கூட இருக்கோம்... பாலா..
எங்களுக்கெல்லாம்.. கஞ்சிக்கே வழியில்லை. வந்துட்டான்.. பிஸ்ஸா.. பர்கர்-ன்னு. பணத்திமிர்
போட்டாச்சி...போட்டாச்சி....
நிறைய கேள்வி கேட்டிருக்கீங்க. எதுக்கும் விடை தெரியலை. இந்த மாதிரி பாஸ்ட் புட், எப்பயாவது சாப்பிடலாம். அவ்வளவே.
ஆகா...ஆகா...;))) தல..சீக்கிரம் அரசியலுக்கு வா தல..;))
நேரமில்லை பிறகு வருகிறேன்.. இன்னும் பழைய பதிவுகளே படிக்காம இருக்கிறேன்!
மயில் பதிவுல படிச்சிட்டு டவுன்லோடு செஞ்சுட்டேன் இன்னிக்கு நைட்டு பாக்கலாம்னு இருந்தா இன்னிக்கு உங்க பதிவுல Food Inc .ஓகே. விழிப்புணர்ச்சிய ஏற்படுத்துங்க தல.
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பெப்சி, கோகோ கோலா, மெக்டோனல்ட்ஸ்,KFC இதெல்லாம் பிடிக்காது.
ஒரு இளநிய வாங்கி குடிச்சா ஒரு விவசாயியாவது பிழைப்பார் என்ற எண்ணம்தான் காரணம். மற்றும் அவங்க taste நமக்கு சுத்தமா பிடிக்கிறதில்லை. நமக்கு பிடிச்சது வீட்டு சமையல்தான்.
நல்லவேளை ,தப்பிச்சோம் போலிருக்கே!
அதிக விலையுள்ள பொருளே அதிக தரமானது என்று ஏமாறுகிற மக்கள் இருக்கிற வரைக்கும் இந்த கம்பெனிகள் நம்ம
தலையில் மிளகாய் அரைப்பது தொடரும்.
போங்க பாஸ் இங்க பூச்சி மருந்து போட்டு விவசாயம் பண்ணி கிட்டத்தட்ட விஷத்தையே தினமும் சாப்பிட்டு கிட்டு இருக்கோம். பர்கர், பிசா சாப்பிட வக்கத்தவனுக்கும் அதே கதி, வக்குள்ளவனுக்கும் அதே கதிதான்.அங்க ஒரு டாக்குமெண்ட்ரியோ, படமோ எடுக்கமுடியும், இங்க எதுவும் புடுங்க முடியாது, அப்படியே யாராவது கழட்டிட்டாலும், நல்லா மக்கள் கிட்ட போய் சேர்ந்துடும்.
ஜங்க் ஃபுட் பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன். சிக்கன் பிரிப்பேர் பண்ணும் முறைகள் எல்லாம் விதவிதமான கதைகள் சொல்ல கேட்டதுண்டு. உங்கள் ஊரில் எல்லோரும் அதைதானே சாப்பிடுவார்கள்? இப்ப திருந்திட்டாங்களா? அப்படினா இப்ப என்ன சாப்பிடறாங்க? எது நல்லது இல்லையோ அதைதானே எல்லோரும் விரும்புவோம். அனுபவித்தால்தான் தெரியும்.
என்னா விதம் விதமா எல்லாம் படம் எடுக்கிறாய்ங்க அதையெல்லாம் கடமையோட பாக்கிறீங்களே சார் எனக்கு இப்ப உண்மையாவே ஒரு டவுட்டு வருதுசார் எப்புடி சார இத்தினி படமும் பாக்க முடியுது ....முடியல .
பாஸ்,
இப்ப தன் பர்கர் taste புடிச்சு போய் சாப்பிட ஆரம்பிச்சேன். அதுக்குள்ள இப்படி ஒரு குண்ட போடுறீங்க.....
அன்புடன்,
லக்கி லிமட்
நல்ல பகிர்வு பாலா.
நல்ல பகிர்வு தல.
ஆர்கானிக் ஐட்டம் வாங்குறது பர்ஸ்ல ஒரு பெரிய ஓட்டை போட்டாலும், பின்னாடி கொடல்ல ஓட்ட விழுகுறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்க வேண்டியதுதான்.
இந்தியாவுல இப்ப KFC ஒரு பெரிய பிரஸ்டிஜ் ஃபேக்டர் ஆகிட்டு வருது.. உண்மைல இங்க ஒரு நாய் கூட சீந்தாது.. அவனுகளும் என்னவோ பேக்ட் சிக்கன்னு புதுசா கொண்டு வரானுங்க.. மக்களா திருந்துனாத்தான் உண்டு. நான் ஃபாஸ்ட் புட் பக்கமே போறதுல்ல. அப்பிடியே போனாலும் மெக்டொனாட்ல்ஸ், பர்கர் கிங்க் எல்லாம் போறதே இல்லை. சப்வேயோட நின்னுக்கிறேன்.
you r doing good job
தல ஒரு முடிவு எடுத்திட்டிங்க போல.
பிரிச்சி மேய்ஞ்சிட்டீங்க போங்க. நானு அமேரிக்கா ஜுருடிக்சன்ல இல்லயே..இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?.அப்பிடியே ஏதாச்சும் பிரச்சனைனாலும் ‘நானும் எங்க c.e.o(முன்னாள்) மாதிரியே திவால் ஆயிட்டேன்னு சொல்லிருவேனே!’
'what business demands'... :)
அடுத்து ‘Good Hair' தானே போடப்போறீங்க!:)
///..(இந்தியா ஏன்றாலே அந்தாளுக்கு எகத்தாளம் தான் ..கிட்டதட்ட உங்களைப்போல் :) )..///
இது என்ன புதுசா இருக்கு? சந்துல சிந்து பாடுவது என்பது இதுதானா?
///திரும்ப ஒரு நாள் மாட்டுவான் அப்ப இருக்கு அந்த ஆளுக்கு..:)///
யாரு? உங்க மாமாவா இல்ல பாலாவா?
@சை.கொ.ப : யூ........வெல்கம்! :)
--
@மகா : உரக்க சொன்னா.. கேஸ் போட்டுடுவாங்க தல. சைலண்டாதான்! :)
--
@கல்ஃப் : ரொம்ப பெரிய மேட்டரெல்லாம் இல்லை. இன்னைக்கு சொல்லுறேன்.
--
@கண்ணா : அது!!!!! :) :)
--
@கருந்தேள் : நான் போறதில்லை. இன்னைக்கு இன்னொரு படத்தையும் சேர்த்து!! அதுக்கப்புறமு தைரியமிருந்தா.. தாராளமா.. போங்க! :)
என்ன.. உடனேவா.. சாகப் போறீங்க??!! :) :)
--
@வினோத் : அந்த ப்ரெஸ்டீஜ் ஃபேக்டரை இங்கே வேற மாதிரி.. ரேஸிசத்தில் கிண்டல் பண்ணுவாங்க வினோத். அங்க போகாம இருக்கறதுதான்.. இங்க ப்ரஸ்டீஜ்.
இன்னா.. கொயிப்பு..?? நான் எங்கவே... நம்மூரை கிண்டல் பண்ணியிருக்கேன்?! :) :)
--
@அண்ணாமலையான் : நல்ல காரியம் பண்ணுனீங்க தல!!! தயவு செஞ்சி.. அந்த ‘குப்பை’யை மட்டும் வாய்ல வச்சிடாதீங்க. சனியன் புடிச்சது. விடவே விடாது.
அந்த சாக்லேட் மேட்டர் உண்மைதான். ரொம்ப சுத்தம் பண்ணினப் பின்னாடி.. கிடைக்கும் எஸ்ஸன்ஸை கொஞ்சம் சேர்க்கறாங்கன்னு... நம்ம குமுதம்/ஆ.வியில் படிச்ச நியாபகம் இருக்கு.
--
@கேபிள் : நன்றி சங்கர்
--
@சங்கர் : அது சரியான அர்த்தத்தில் வரலையோ??? இங்கயும் அதே விலைதாங்க. அந்த காசில்..., 5-6 பிக் மேக் வாங்கிட முடியும்.
--
@ஜாக்கி : நம்ம மேல கேஸ் போட்டா... இந்த வெப்சைட்டை வித்துடலாம்னு இருக்கேன்! ஜாக்கி:) அது ஒன்னுதான்.. இப்போதைய சொத்து.
--
@பாஸ்கி : சூப்பர்..!! நானும் ரவுடி.. ரவுடி..!!
--
@பின்னோக்கி : விடை இருக்குங்க தல. அந்தப் படத்தைப் பாருங்க. அதில் சொல்லாத 1-2 மேட்டர் இன்னைக்கு. நான்... ‘எப்பாவாவது’ கூட இப்பல்லாம் சாப்பிடுறது இல்லை.
‘நானும் எங்க c.e.o(முன்னாள்) மாதிரியே திவால் ஆயிட்டேன்னு சொல்லிருவேனே!//
டக் குனு படிக்கசொல்லொ திவாரின்னு படிச்சிட்டேன்..ச்சீ போன பதிவு வாசன இன்னும் போல..ஆமா கோத்துவிட்டும் இன்னும் ஒருத்தர் கூட பாஸிச கமெண்டோ ஓட்டோ போடல :)
தல Mr.வெட்டி..பேரு சூப்பராகீது, எனக்கும் துணை வெட்டி வேல எதுனா இருந்தா ரெகமெண்ட் ப்ளீஸ்..:))
ஆகா இவ்வளவு மேட்டர் இருக்கா தல இது தெரியாமா இந்த வீணா போன kfcக்கு ஒரு 5 6 தடவ போய்ட்டேனே!!!!!!
ஏங்க தல எல்லாம் பாஸ்ட் புட் கடையும் பாக்கறதுக்கு பளபளனு இருக்கே அதனால தான் மக்கள் கூட்டம் கூட்டமா போறங்கனு நினைக்கிறேன்.
அதே மாதிரி கேள்வி 1,2,3,5 நிச்சயமா யோசிக்க வேண்டிய விசயம். நம்ப விவசாயம் படுக்கறதுக்கு இது ஒரு காரணம்னா இத ரொம்ப அதிகமா அறியபடுத்தனம். சீக்கரம் அதுக்கெல்லாம் என்ன சோர்ஸ்னு எழுதுங்க.
அதே மாதிரி மயில்ராவணன் அவரு பாட்டுக்கு செவனேனு பதிவு போடறார் அவரையும் கோத்து உட்டீங்க சூப்பரு.
நீங்க கண்டிப்பா 11th hour பாத்து இருப்பீங்க அதுவும் நாம கவனமா பாக்க வேண்டிய படம்னு தோணுது அத பத்தி நீங்க ஒரு பதிவு போட்ட சந்தோசம் தல:).
pizza கூட இதே மாதிரிங்களா தல???????????????
@கோபி : வந்து ரொம்ப நாள் ஆச்சி!! இன்னும் அரசியல்வாதியா யாரும் ஏத்துக்க மாட்டேங்கறாங்க கோபி! :( :(
---
@கிரி : உங்களுக்கா எழுதினது. எப்போ வேணும்னாலும் வாங்கோவ்!! :)
---
@கைலாஷ் : ஆச்சரியம் என்னன்னா.. கைலாஷ்......., இந்த மெக்டொனால்ட்ஸ் வகையறாக்கள் தான்.. இங்க ‘சீப்’. ஆனா இதேதான் நம்மூரில் ப்ரெஸ்டீஜ் இஸ்யூவா இருக்கு!
அது ஓரளவுக்கு தெரிய ஆரம்பிக்கும் போது..., நம்மூரிலும்.. குண்டு பூசணிக்காக்கள்.. ரோடு பூரா அலையப் போறாங்க பாருங்க.
---
@சுப : உண்மைதான் சுப. அட்லீஸ்ட் இங்க எடுக்கற படத்தையாவது... முடிஞ்ச வரைக்கும் மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கப் பார்ப்போம்.
இந்தப் படம் எடுக்கற பட்ஜெட்டில்.. பெரும் பகுதி.., கேஸ்ல இருந்து தப்பிக்கவே.. யூஸ் பண்ணினாங்களாம். இந்த ஊருக்கே இந்த கதின்னா... இந்த பண்ணாடைங்க.. நம்ம ஊரை ஒரு வழியாக்காம விட மாட்டாங்க பாருங்க.
---
@விஜய் : திரும்பவும் ‘உங்க ஊரா’? :)
திருந்த முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க விஜய். இது... 30-40 வருஷப் பழக்கம். இப்பதான் அவேர்னஸ் வந்துகிட்டு இருக்கு. நம்மூரில் இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க. திருந்தலைன்னா... நான் ‘எங்க ஊர்ல’யே இருந்துக்கலாம்னு இருக்கேன். :)
---
@பாலவாசகன் : இதென்னங்க... பதிவின் செகண்ட் பார்ட்டில்.. இன்னொரு வித்தியாசத்தைப் பார்க்கப் போறீங்க.
@லக்கி : நெஜமாவே நீங்க லக்கிதான். தயவு செஞ்சி.. இந்த பதிவுகளில் சொன்ன/சொல்லப் போகும் படங்களை பார்த்துடுங்க.
ஜென்மத்துக்கும்.. அந்தப் பக்கம் போறதைப் பத்தி யோசிப்பீங்க.
--
@சரவணக்குமார் : நன்றிங்க தல! :)
--
@முகிலன் : இந்த கருமம் குடல்ல ஓட்டை போட்டாலும் பரவாயில்லை. அதுக்கு பதிலா.. மொத்த உடம்பையும் டேமேஜ் பண்ணுது.
நானும் இப்ப சப்வே மட்டும்தான் சாப்பிடுறேன் முகிலன். ஃப்ரெஸ்னு நம்பறோம். ஆனா அதில் என்னென்ன.. தில்லு முல்லுகள் இருக்கோ தெரியலை.
இருந்தாலும்.. ’பர்கர்’ குப்பைகளுக்கு... சப்வே 100% தேவலாம்.
--
@டெனிம் : நன்றிங்க!
--
@இராமசாமி : ஆமாங்க.!! ரவுடி.. ரவுடிதான்!! :)
--
@மயில்ராவணன் : இதென்ன புதுக்கதை. இங்கயாவது.. கேஸ் போட்டா... நியாயம் கிடைக்க எனக்கு கொஞ்ச வாய்ப்பாவது இருக்கு. நம்ம ஊரில் இருக்கும் ப்ராஞ்ச் உங்க மேல கேஸ் போட்டா என்ன ஆகும்னு உங்களுக்கே தெரியுமே!??? :) :)
நம்ம கிட்ட இருந்து வர்ற.. பிச்சைக் காசை வைச்சி.. இவங்க என்ன பண்ண முடியும்??!! இவங்க எய்ம் எல்லாம்.. மறுபடி யாரும்.. இந்தப் பிரச்சனையை கையில் எடுக்கக் கூடாதுன்னுதான்.
‘Good Hair' பத்தி சொல்ல வரலைங்க. இது வேற மேட்டர்!!!! :)
Good Hair டிவிடி அடுத்த மாசம்தான் இங்க ரிலீஸ். :(
--
@விஜய் : நீங்க ஆரம்பிச்சி விட்டீங்க. வினோத்... கண்டினியூ பண்ணுறாரு! :) :)
நல்ல கேள்வி..!! வினோத்.... யாரை சொன்னீங்க?????
---
@பலா : நீங்களும்.. இந்தப் படத்தை பத்தி எழுதினீங்கன்னா.. கேஸ் போடும் போது.. அந்த துணை வெட்டி உபயோகப் படலாம்.!!! எதுக்கும் ரெடியா இருந்துக்கங்க..!!
ஏற்கனவே.. உ.த-வுக்கு அப்புறம்.. ‘படியேறி’ நீதி கேட்கறது நீங்க மட்டும்தான்!! இதையும் லிஸ்டில் சேர்த்துடுவோம்! :)
---
@டுபாக்கூர் : 5-6? இல்ல.. 56?????
கேள்வி 04 இன்னும் ரொம்ப விவகாரமான விசயங்க தல!! அதுதான்.. மூலக் காரணம்!! இன்னைக்கு விரிவா பார்ப்போம்.
11th Hour மேட்டர் இன்னும் குழப்புதுங்க. நான் கன்ஸர்வேடிவ் கிடையாது. இருந்தாலும். இந்த க்ளோபல் வார்மிங் பத்தி.. இன்னும் கொஞ்சம் படிச்சி தெரிஞ்சிகிட்டு எழுதினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். நீங்களே முயற்சி செஞ்சா என்னங்க தல?? ஆதரவு கரம் எப்பவும் உண்டே!!! :)
தல 5-6 தடவ தான் 56லா இல்ல நீங்க வேற அதுவும் இல்லாம அந்த அளவுக்கு நாம வசதியும் இல்ல :)))))
4 ஆவது கேள்வி விவகாரம் ஆகா அதுவா எனக்கு லைட்டா புரியுது இருந்தாலும் நீங்க டீடைலா சொல்லுங்க.
11th hour பாத்த ஆர்வத்தல நானும் எழுதுனேன் http://dubakoorkanthasamy.blogspot.com/2009/12/11th-hour.html ஆனா அவ்வளவு ரீச் இல்ல நீங்க எழுதனா நல்ல ரீச் இருக்கும் நிறைய விசயமும் சொல்லுவீங்க தல அதான் சொன்னேன் இன்னைய பதிவுக்கு காத்திருக்கோம்.
ஔச்...! தல.. ஏற்கனவே நான் அதை படிச்சிட்டேன். பின்னூட்டதில் கூட.. ‘யாரோ’ இதை சமீபத்தில் எழுதினாங்க’ன்னு சொல்லலாம்னு நினைச்சி மறந்துட்டேன்.
நல்லவேளை சொல்லலை! :) :)
--
லிங்க் கொடுத்திட்டேன். நிச்சயம்... இதைப் பத்தி எழுத முயற்சிக்கிறேன். ஆனா.. நீங்க தமிழிஷ், மணத்தில்.. லிஸ்ட் பண்ணின மாதிரித் தெரியலையே.!! அது இல்லாம எப்படி ரீச் ஆகும் தல?
சூப்பர் பாலா! நான், கிட்டத்தட்ட 10-12 வருடங்களுக்கு முன்னால, பெங்களூரில் இருந்த போது இந்த burger/pizza மோகம் தலைதூக்க ஆரம்பித்தது. Pizza hut ஒரு கடை திறந்து (Cunningham ரோடு என்று நினைக்கிறன்) 150-200 ரூபாய்க்கு pizza+coke குடுத்த காலம் அது. சனி மற்றும் ஞாயிறு அன்று உள்ள நுழைய முடியாது, கடைக்கு வெளியே வரை கூட்டம் காத்துக்கொண்டு இருக்கும்!!! கிரிக்கெட் மற்றும் சினிமா ஆட்களால் coke/pepsi மோகமும் வர ஆரம்பித்திருந்தது. தற்சமயம் (கோடை காலத்தில்) இந்தியா சென்றிருந்த போது இந்த coke/pepsi போன்றவற்றைத் தவிர வேற எதையும் கிராமங்களில் கூட பார்க்க முடியவில்லை!
நானும் உங்க ஊருல (ப்ளோரிடா) குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும்போது இதே கதை தான்..KFC, pizza hut, burger king போன்ற இடங்கள் ஆளே இல்லாமல் தான் இருக்கும்...இருந்தாலும் $1-$2 ku உட்கார வச்சு சோறு (burger!) போடுவானுங்க! ப்ளோரிடாவில் என் பாஸ் ஒரு அசைவ உணவுப் பிரியர். 3 வேளையும் அசைவ உணவு குடுத்தாலும் சளைக்காமல் சாப்பிடுவார். ஆனால் வெளிய எங்க போனாலும் சிக்கன் மட்டும் சாப்பிட மாட்டாரு. ஏன்னு கேட்டா, ப்ளோரிடால மீன்பிடி தொழில் அதிகம்..அதுல மிச்சம் ஆகுற, செத்துப் போன மீன்கள் எல்லாம் தான் farm ல கோழி உணவா போகுது..ப்ளோரிடா ல எங்க சிக்கன் சாபிட்டாலும் அது மீன் வாசனையுடன் இருக்கும்னு சொல்லுவாரு! (அவர் connecticut காரரு..அவருக்கு ப்ளோரிடா காரங்களைக் கண்டாலே ஆகாதுங்க்றது வேற விஷயம்!)
அப்படியே.. followers கேட்ஜட்டையும் இணைங்க தல!! :)
போச்சுடா.....!! நான் மீன் சாப்பிட மாட்டேன். இப்ப.. நான் சாப்பிடுற கோழிக்கும் உங்க பாஸ் ஆப்பு வச்சிட்டாரு!! :( :(
நார்த்ல இருந்து வர்றவங்களுக்கு.. சவுத் மக்களை பிடிக்கறதில்லை. எல்லா ஊர்லயும் அதே கதைதான்! :)
Excellent post! Must watch Food Inc.,
தல .. இந்த படத்தை பத்தி முதல்லையே கேள்வி பட்டிருக்கேன் ஆனா பாத்ததில்ல ... Super Size Me பாத்ததில இருந்து பாஸ்ட் புட் சாப்பிடறதில்ல .... இந்த படம் trailer'ல சொல்றத பாத்தா இப்ப சாப்டுட்டு இருக்குற item'ங்களுக்கும் ஆப்பு வெச்சிடுவாங்க போலருக்கு .... சீக்கிரம் முழுசா எழுதுங்க ....
//இந்தப் படம் எடுக்கற பட்ஜெட்டில்.. பெரும் பகுதி.., கேஸ்ல இருந்து தப்பிக்கவே.. யூஸ் பண்ணினாங்களாம். //
இதுக்கும் சேர்ந்த்து பட்ஜெட்டா?
கொடுமை
enna boss neenga epo post podringa epo ivlo comment varudhu onnume puriya matengudhu.. :-| konjam enakum secreta sollungalen?
//Good Hair டிவிடி அடுத்த மாசம்தான் இங்க ரிலீஸ். :(//
ஓகே. மயிலு இன்னும் ஏன் சும்மா இருக்க? சீக்கிரம் ஒருக்கா பாத்துட்டு பதிவ போட்டீன்னா, அதுக்கப்புறம் பாலான்னே டீடெய்லா போடுவாரு,அப்பிடியே ஆட்டத்துலயும் சேத்துக்குவாரு :)
உங்க உழைப்பு அரமாலுமே பாராட்டுக்குறியது பாஸ்.
@ரவி : நன்றிங்க தல!! :)
@சம்பத் : இனிமே.. உழவர் சந்தைதான்.. ஒரே வழி!!
இவனுங்களை நம்பி... எதையும் வாங்க் முடியாது. இந்த ஊர்லயே இந்த கதின்னா.. நம்மூரை நினைச்சிப் பாருங்க.
@சுப : இவங்க.. இன்னும் எதெதுக்கெல்லாம் பட்ஜெட் போடுவாங்கன்னு கணக்கே கிடையாது. King Corn படத்தில்.. ஒரு ஏக்கர் நிலத்து சோளத்துக்கு மொத்த செலவுன்னு $400 டாலர் வரும்.
அந்த 400-க்கு.. இவங்க ரெண்டு வருசமா படம் எடுத்தாங்க!! :) :) :)
@பொற்கொடி : ஏங்க கண்ணு வைக்கறீங்க? ரொம்ப நாளுக்கப்புறம்.. இன்னைக்குத்தான் நிறைய கமெண்ட் வந்திருக்கு. அது பொறுக்கலையா? :) :)
@மயில் : கர்ர்ர்ர்ர்!!! இதுக்குத்தான்... லிஸ்டை லீக் பண்ணக் கூடாதுங்கறது. ஒரு பதிவில் எழுதி முடிச்சிருக்க வேண்டிய மேட்டரை 2 பதிவாக்கிட்டேன்.
Good Hair-யுமா? ஆனா... அந்தப் படம்... கருப்பமெரிக்கர்களின் முடியின் தரத்தைத்தான் ஆராயுது. நம்ம மக்களுக்கு அதில் என்ன நியூஸ் இருக்கப் போகுது?
நான் சொன்னது எங்க மாமாவை தான் ..:)
யப்பா.. தெளிஞ்சிட்டீங்களா?? :) :)
//அது நம்மூரில் கொடி கட்டிப் பறப்பதா நான் கேள்விப்பட்ட KFC. //
சிங்கப்பூரில் கூட கொடி கட்டி பறக்கிறது!
//இந்தப் பதிவில் சொல்லப் போறது எதாவது உங்களுக்கு நடக்கும். வாழ்த்துகள்!! //
பிடிக்கும் என்று தான் கூறினேன்.. தினமும் சாப்பிடுவேன் என்று கூறவில்லை :-) மனைவி இல்லை என்றால் வேறு வழி இல்லை
//ஒரு வருடம் முன்னாடி வரைக்கும், நானும்.. தினசரி ஒருதரம்-ன்னு மெக்டொனாட்ஸில் சாப்பிட்டுக்கிட்டுதான் இருந்தேன். அதுக்கே உடம்பில் ஏகப்பட்ட மாற்றங்கள். //
அப்படி என்னங்க மாற்றம்! ;-)
//ஒவ்வொரு முறையும் என் மகளும், கிரியும், நீங்களும், நானும் கடிக்கும் ஒவ்வொரு பர்கர் பைட்’டிலும் எத்தனை ஆயிரம் கிருமிகள் நம் வயிற்றுக்கும், எத்தனை நூறு விவசாயக் குடும்பங்கள் தெருவுக்கும் வர்றாங்க???//
நான் பர்கர் சாப்பிட மாட்டேன்.. பிடிக்கலை..மற்ற ஐட்டங்கள் குறிப்பிட்டவை மட்டும். விவசாய குடும்பங்கள் ..நீங்கள் சொல்வது சரி தான்.. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் நாம எதையுமே நிம்மதியா சாப்பிட முடியாது.
ஹய்யோ.. ‘எதாவது நடக்கும்’ன்னு சொன்னது உங்களுக்குக்கில்லை!! பின்னூட்டத்தில்.. சொன்னவருக்கு. அதே பெயரில்.. இன்னொரு ப்லாகிலும்.. அதே மாதிரியான கமெண்ட் இருந்துச்சி. அதான் அவருக்குச் சொன்னேன்.
உடம்பில் மாற்றம்னு பார்த்தா.. என் தலையின் வடிவம் நீளமா இருக்கும். ஆனா.. இதை சாப்பிட ஆரம்பிச்சதும்.... மொத்த உடம்பின் ஷேப்பும் மாறி.. பிரேம்ஜி சொன்ன மாதிரி.. தலையெல்லாம் வட்டமாகிடுச்சி.
அதை ஊளைச்சதைன்னு கூட சொல்ல முடியாது. கிட்டத்தட்ட... காத்தடிச்சி விட்ட பலூன்னு சொல்லலாம். அப்புறம் ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவேன்.
இப்ப.. இந்தப் பிரச்சனை எதுவும் இல்லை!! :)
நிம்மதியா சாப்பிட முடியாதுதான். ஆனா.. சாப்பிட்ட பின்னாடி.. என்னைக்கோ மொத்தமா போற நிம்மதிக்கு.. இது பரவாயில்லை.
//முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு எல்லாத்தையும் ஒரு கிலோ வாங்குற காசை விட, கம்மியான காசில்.. எப்படி... உங்களால் McDonald's மாதிரியான கடைகளில், குடும்பத்துக்கே சாப்பாட்டை வாங்க முடியுது?/////
cheap?
ayyo... india la costly. THATS Y IT HAS BEEN SEEN AS SoCIAL STATUS...
wHY THEREI IS AN hatred towards south by north everywhere?
நல்ல பதிவு பாலா! இந்த பட்டியலில் "Fast food Nation " யும் சேர்த்துக் கொள்ளலாம். அமெரிக்கர்கள் பெரும்பாலும் இத்தகைய துரித உணவகங்களில் தான் சாப்பிடுகிறார்கள். இது மட்டும் இல்லை துரித உணவகம் அல்லாமல் சாதாரண உணவு விடுதியில் சாப்பிட போனால் கூட ஒருவருக்கு கொடுக்கும் உணவின் அளவில் நம்ம ஊரில் இரண்டு பேர் சாப்பிடலாம். உப்பும் அதிகமாக போட்டிருப்பார்கள். இதெல்லாம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் வழி அனால் இதன் விளைவு நாடே "Obesity " வியாதியில் தவித்துக் கொண்டிருக்கிறது. McDonalds தான் அமெரிக்காவில் கோழி, மாட்டிறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு வாங்கி உபயோகப் படுத்துவதில் நாட்டிலேயே முதன்மையான நிறுவனம். அரசியல்வாதிகள் மக்கள் உணவு பழக்கங்களை சரி செய்யாமல் நோய் வந்த பின் காப்பதற்கு மருத்துவத் துறைக்கு தண்ணியாய் செலவழிக்கிறார்கள்.
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!