புது வரவு - நம்பிக்கை

1/29/2010

Food, Inc [Best of 2009 - 06.2]


அந்த ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது.  முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு.  அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம்.


இந்த ரிசல்ட்டைப் பார்த்து ஆச்சரியப் படும் ரெண்டு பேரும்..., அமெரிக்காவின் மத்தியில் இருக்கும் Iowa மாநிலத்தில் பயிரிடப் படும்... சோளம்.., எப்படி... நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த தங்கள் முடியில்.. கிடைக்க வாய்ப்பு யோசிக்க ஆரம்பிச்சி....,

.... ஒரேயொரு ஏக்கர் நிலத்தை.. அதே Iowa மாநிலத்தில் குத்தகைக்கு எடுத்து... அதில் சோளம் பயிரிட்டு... அந்த சோளம்... எங்கிருந்து விதையாக வருதுன்னு தொடங்கி, அது எங்கெல்லாம்... போகுது... எப்படியெல்லாம் மாறுதுன்னு ஒரு வருடமாக.. அந்த சோளத்தின் பின்னாடியே சுத்துவாங்க. டாகுமெண்ட்ரியின் பெயர் King Corn. வாய்ப்பு கிடைச்சா.. இதையும் பாருங்க.


1970-களில் விவசாயப் புரட்சிங்கற பெயரில்... அரசாங்கம்.. விவசாயிகளை சோளம் பயிரிட சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அதற்காக.. உங்களுக்கு தேவையோ.. இல்லையோ... ஒவ்வொரு ஏக்கருக்கும்... இத்தனை டாலர்ன்னு மானியம் கிடைக்க ஆரம்பிக்குது.

மானியம் கிடைக்குதேன்னு (இதிலேயே நேரடி,மறைமுகம்னு.. ஏகப்பட்டது) அத்தனை விவசாயிகளும்... தேவைக்கு அதிகமான அளவில் சோளத்தைப் பயிரிட ஆரம்பிக்க, அந்த சோளம்... பலப் பல வழிகளில்.. நம் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கு.

சோளம் ரொம்ப சீப்-ன்னு தெரியும். அது எத்தனால் தயாரிக்கவும், கொஞ்சமா பெட்ரோலில் கலக்கறாங்கன்னும் தெரியும். அது இல்லாமல்... அந்த சோளம்.. எத்தனை இடத்தில் பரவியிருக்குன்னு நினைக்கறீங்க? கண்டிப்பா கணக்கெடுக்க முடியாது. இதெல்லாம் இல்லாமல்... சோளத்தின்.. இன்னொரு சிறப்பு.......

......அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை!!! கரும்பை விட.. மிக.. மிக.. மிக.. மலிவான சர்க்கரை. நாம குடிக்கும் கோக், பெப்ஸி, க்ரேப் சோடா.. போடா... வாடா.... அத்தனையிலும் இருப்பது... சோளம் மட்டும்தான்!!!

மெக்டொனாட்ஸில் ஒரு மீல் வாங்கிட்டு உட்காருறீங்கன்னா...., பர்கர், சோடா... அவ்வளவு ஏன்.... உருளைக் கிழங்கில் செஞ்ச ஃப்ரென்ச் ஃப்ரைஸில் கூட சோளம் கலந்திருக்கு. மிகக் குறைவான விலையில், நமக்கு சர்க்கரை வியாதியை தந்துகிட்டு இருக்கு. இது சோளத்தோட குறையில்லை. கம்மி காசில் அதிகம் சம்பாதிக்க.. இந்த உணவுக் கம்பெனிகள் கண்டுபிடித்த பொருள்.

இவர்களோட இந்த ‘சீப்’ தேவைக்காக... இவர்கள் அரசாங்கத்தை தூண்ட..., அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆசை காட்ட, எல்லோரும்.. இந்த சோளத்தை பயிரிட ஆரம்பித்து... இப்ப தேவைக்கு அதிகம்னு சொல்லி.. இதே கம்பெனிகள்.. மலிவான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து.. அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்வது. அது அரசாங்கத்துக்கு விற்கப்பட்டாலும்.. இவங்களுக்குத்தான் திரும்ப விற்கப் போறாங்க. நட்டத்தில் விற்ற விவசாயிக்கு... அரசாங்கம் தரும் மானியம் மட்டும்தான் அந்த மொத்த வருட உழைப்புக்கு கூலி. அந்த மானியம்... வரி கட்டும் மக்களிடம் இருந்து!!! எல்லோருக்கும் நாமம்!!! உணவுக் கம்பெனிகளுக்கு மட்டும் சோளம்!!!

கடந்த முப்பது வருடங்களுக்குள்... அமெரிக்காவில் பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும்.. அவர்களின் ஜீனே மாறிப்போய்... உடம்பு முழுக்க ‘சோளம்’ மட்டுமே ஓடிக்கிட்டு இருக்கு. மாடுகளுக்கு புல் போட்டா...., நாம.. பர்கரை $1 டாலருக்கு கடிக்க முடியாது. அதேதான்.. கோழி.. மீன் -ன்னு.. அத்தனை ‘உணவு’ விலங்குகளுக்கும்... கிடைக்கும் ஒரே சாப்பாடு.. ‘சோளம்.. சோளம்.. சோளம்’. மீனெல்லாம் சோளம் சாப்பிடுமா???

ஒரு சேர்ல.... ஒத்தைக் காலில்... ஒரு யானையையே நிற்க வைக்க பழக்கும் மனுசனுக்கு.. இந்த மீனை.. சோளம் திங்க வைப்பதா பெரிசு?!  மாடு, கோழின்னு.. அத்தனையும்.. சோளம் சாப்பிட்டு.. சாப்பிட்டு.... கொஞ்ச நாட்களுக்குள்ளயே உடம்பு பெருக்க (நாமக்கல்லுக்கு வாங்க... அங்க கோழி வளர்க்கறதைப் பார்த்தா... சைவமாகிடுவீங்க), அந்த மாடு-கோழிகள்தான்... நமக்கு... லஞ்ச்!! அப்ப நாம சாப்பிடுறது கோழியை இல்லை. சோளத்தை!! நீங்க வெஜிடேரியந்தான்!!


King Corn & Food, Inc இரண்டுப் படங்களிலும்.. ஒரே காட்சி காட்டப் படும். ஆனால் வெவ்வேறு வருடங்களில்!! எதுன்னா.. இந்த ‘சோளத்தை’ மட்டுமே தின்று வளரும் மாட்டின் வயிற்றுப் பகுதி. சாப்பிடும் போது.. இந்தக் காட்சியை பார்த்துடாதீங்க!!! அதிலும் குறிப்பா... மெக்டொனாட்ஸ் சாப்பாடு சாப்பிடும் போது!!!!  பார்த்தால்... வாந்திக்கு நீங்களே கேரண்டி!!! எத்தனை வருட இடைவெளியில்.. இந்தக் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டாலும்... சோளம் சாப்பிடும் மாடுகளின் உடல்நிலை ஒன்னேயொன்னு மட்டும்தான்!!! உவ்வ்வே!!!!!!!!

அந்த நாடு முழுக்க... ஒரே மாதிரியான ருசி கிடைப்பதற்காக..., இது மாதிரியான கம்பெனிகளின் டேஸ்டிற்கு ஏற்ப.. ஜீன்கள் மாற்றப் பட்ட.. கோழி-மாடு-பன்றிகளை மட்டுமே 99% எல்லோரும் வளர்க்கிறாங்க. மொத்த கொள்ளளவும்... இவர்களை நம்பியிருப்பதால்.. இந்த கம்பெனிகள் சொல்வது மட்டுமே சட்டம். எதிர்த்தால்.. காண்ட்ராக்ட் கட்!! அடுத்த வருடம்.. அந்த விவசாயிக் குடும்பம்.. நடுத்தெருவில்!!! இது எதுவும் தெரியாமல்.. நாமும் நம் குழந்தைகளும்... மெக்டொனாட்ஸில்.. kids zone -ல் சந்தோசமா பெப்ஸி குடிச்சி, பர்கர் கடிச்சிகிட்டு இருக்கோம்.

அமெரிக்க உணவின் தரக் கட்டுப்பாட்டை... கண்காணிக்கும் FDA (Food and Drug Administration) எல்லாம் எப்பவோ கண்ணை மூடியாச்சி. ஏன்னா... எந்த அரசாங்கம்.. ஆட்சிக்கு வந்தாலும்.. அந்தக் கட்சியை சார்ந்த..., இந்த உணவுக் கம்பெனிகளின்.. நெருங்கிய ஆட்கள் FDA -ஐ கண்ட்ரோல் செய்யுறாங்க. ஸோ... சாப்பிடும்.. உணவில்.. என்ன கலந்திருக்கு..., எத்தனை கலோரி சாப்பிடுறோம், இந்த உணவு எங்கே.. எப்படி தயாரிக்கப் பட்டது-ன்னு எந்த விவரமும் இல்லாமல்... இந்த ‘குப்பை உணவை’ மென்னுகிட்டு இருக்கோம்.


நீ என்ன சொல்லுறது??!! நான் சாப்பிடத்தான் போறேன் -ன்னு நினைக்கிறவங்க.. இதைத் தாண்டி படிக்க வேண்டாம்.

2006 வருஷம், இன்னொரு 9/11 நடந்த மாதிரியும், அந்த்ராக்ஸ் கிருமிகள் பரவின ரேஞ்சிற்கும் அமெரிக்கா முழுக்க ஒரே பீதி!!! 50 ஏக்கர் நிலத்தில்... கலிஃபோர்னியா மாநிலத்தின் ஏதோவொரு மூலையில் வளர்ந்திருந்த.........., நம்ம பாப்பாய்ஸ் தாத்தா சாப்பிடுவாரே.. அந்த ஸ்பினச் கீரையில்.., எதோ ஒரு கிருமி இருக்க, இருப்பத்தாறு மாநிலத்தில் இப்ப இந்த கிருமி பரவிடுச்சி.  மூணு பேர் அல்ரெடி காலி. சிறுநீரகப் பிரச்சனை.. அது.. இதுன்னு.. அல்லோகலம். இதுக்கெல்லாம் காரணம்...?

Escherichia Coli அல்லது சுருக்கமா E Coli.  உணவை விஷமாக மாற்றும் ஒரு வகையான பாக்டீரியா. பெரும்பாலும்... ‘கழுவாமல்’ சாப்பிடும் எந்த உணவுப் பொருள் மேலயும் இது இருக்குமாம். சைவம்... அசைவம்னு எல்லாம் எந்த பாகுபாடும் கிடையாது.

ஒழுங்கான.. இடத்தில்.. வளரும் ஆடு-மாடு-கோழிகளே... சீக்கு பிடிச்சித் திரியும் போது... நகரக் கூட வழியில்லாமல் கூட்டம் கூட்டமாக சாக ரெடியாக இருக்கும்.. இந்த மெக்டொனாட்ஸ் கோழிகள் மட்டும் என்ன பணக்கார களையோட சுத்தப் போகுது??

ஒரு ஹிடன் கேமராவில்..., இப்படி... நோயில் இறந்தக் கோழிகளைக் கூட... இந்த சுகாதார உணவுக் கம்பெனிகள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக, ஏற்கனவே.. ஒரு மாட்டின் வயிற்றில் ஓட்டை போட்டு... அதிலிருந்து... இவர்கள் வெளியே எடுத்துக் காட்டும்.. அழுக்குகள் எல்லாம் பார்த்து.. குமட்டிக் கொண்டு வரும்போது..., இந்த E-coli மட்டும் என்ன சும்மாயிருக்குமா?? அதுவும்..  ஜம்முன்னு... இந்த அத்தனை உணவுகள் மேலேயும்.. ஜம்முன்னு வளர்ந்துகிட்டுதான் இருக்கு.

இப்படி E-coli பாக்டீரியா இருந்த பர்கர்களை சாப்பிட்ட, ஒரு மூணு வயசுப் பையன் இரண்டே வாரத்தில்.. சிறுநீரகப் பிரச்சனையில் இறக்க, பையனை பறிகொடுத்த அம்மாவால்... இந்த பண்ணாடைகளை ஒன்னும் புடுங்க முடியலை. இது மாதிரி குழந்தைகளை இழந்த நிறைய பேர் இன்னும் போராடிகிட்டே இருக்காங்க. ஆனாலும்.. அர்னால்ட் மாதிரியான அரை மெண்டல் அரசியல்வாதிகள் எல்லோரும்...

... இந்த கார்ப்பொரேஷன்களை காப்பாற்றுவதற்கு மட்டும்தான்.. தங்களோட.. ‘வீட்டோ’ பவரை உபயோகிக்கிறாங்க.  Food, Inc படம் ஆறு வருடமாக எடுக்கப் பட்ட, வெறும் ஒன்னரை மணி நேர டாகுமெண்ட்ரி. இதன் இயக்குனர்/தயாரிப்பாளர் ராபர்ட் கென்னர் மாதிரி.. ஆர்வலர்கள் எல்லாம்.......

..... குறைந்த பட்சம்.. நாம் சாப்பிடும் உணவில்.. நாம் என்ன சாப்பிட்டுகிட்டு இருக்கோம்னு ஒரு லேபிள் அடிச்சி ஒட்டுங்கடா-ன்னு கோர்ட்டில் வாதாடி... வெற்றி பெற்றால்... அந்த அர்னால்ட் கூமுட்டை.. அதையும்.. தன்னோட வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி.. கேன்ஸல் பண்ணிடுச்சாம்.

மைக்ரோஸாஃப்ட் கம்பெனி எப்பவும்... தன்னோட சாஃப்ட்வேர்களின்... பிரச்சனைகளை.. ‘ஆணிவேரில்’ இருந்து பார்க்காது. ஒரு bug-ஆ?? ஓகே.. இந்தா patch!! நூறு bugs-ஆ? இந்தா சர்வீஸ் பேக்-ன்னு... ‘ஒட்டு போட்டே’ உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அதே விசயத்தைத்தான்.. இந்த Food கம்பெனிகளும் பண்ணுறாங்க.

இறைச்சிக்காக வளர்க்கும் ஆடு, மாடுகளை Ecoli மாதிரி பாக்ட்ரீயாக்கள் வரவிடாமல் ஆரோக்கியமா வளர்க்கறதை விட்டுட்டு..., அந்த Ecoli பாக்டீரியாக்களை கொல்ல..., அந்த இறைச்சி மேல்.. இன்னொரு பூச்சி மருந்தை தெளிச்சி... சூப்பர் மார்க்கெட்களுக்கும், நம்ம பர்கருக்கும் அனுப்பறாங்க.

நெசமா.. சொல்லுங்க.... நீங்க பர்கரா சாப்பிடுறீங்க??????????


இது பேசி முடியற கதையில்லை. சொல்லி திருந்தப் போறதுமில்லை. முடிஞ்சா படம் பாருங்க. அதுக்கப்புறமும்.. அந்த கருமத்தை சாப்பிடத்தான் போறீங்கன்னா... தாராளமா குழி வெட்டிக்கங்க.

அமெரிக்காவில்... இந்த KFC, McDonald's, Burger King -ன்னு அத்தனை ரெஸ்டாரண்ட்களையும்.. JUNK FOOD RESTAURANT -ன்னுதான் கூப்பிடுவாங்க. டைனோசர் குட்டி போட்ட சைஸில்.. இருக்கும் ஆட்கள்தான்... இந்த உணவுகளை சாப்பிடுறவங்க. இங்கே.. கொஞ்சம் கொஞ்சமா.. அவேர்னஸ் வந்து... மக்கள் இதை ஒதுக்கிட்டு... ‘உழவர் சந்தை’களில் போய், காசு அதிகமானாலும்.. அங்க வாங்கி சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க.

இந்தப் பதிவையோ, படத்தையோ பார்த்துட்டு... ஒரு பத்து பேர் சாப்பிடுவதை நிறுத்தினா கூடப் போதும். இதை நிறுத்திட்டு... கொஞ்ச நாள் கழிச்சிப் பாருங்க. உங்களுக்கே... உங்க உடம்பிலும், மனசிலும் மாற்றம் தெரியும். அப்படி தெரியுதுன்னு நீங்க நினைச்சாலே.. போதும்!! இந்த கம்பெனிகள்.. போடும் எத்தனை கேஸை வேணும்னாலும்... சந்தோஷமா எதிர் நோக்கலாம்!!!

இங்கிருந்து துரத்தும் போது.... புகலிடம் வேணுமில்லையா??? அதுதான்.. வந்தாரை வாழ வைக்கும்... நம் நாடுகளில்.. இவங்க கடையை விரிச்சிட்டாங்க. வேற மாதிரி நாகரிகமா சொல்லணும்னா....

அமெரிக்கா காரன்... ‘க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்தூ’-ன்னு துப்பினதைத்தான்..., இப்ப நம்மூர் மக்கள் ப்ரெஸ்டீஜா நினைச்சி... ருசிச்சி... சாப்பிடுறாங்க.... என்னோட எச்சிலையும் சேர்த்து!!!

அடுத்த முறை அங்கே சாப்பிடும் போது... டேஸ்ட் எப்படி இருந்ததுன்னு மறக்காமல் சொல்லுங்க!!


Food, Inc = அறிவுக் கண்




72 தியேட்டர் கமெண்ட்ஸ்:

சுப.தமிழினியன் said... January 29, 2010 1:07 AM

இந்த பதிவில் சாட்டையடி செமையா இருக்கு, இனிமேலும் உங்களை யாரும் காமெடி பீஸ்னு சொல்ல முடியாது சீரியஸான ஆளுன்னு காமிச்சிட்டீங்க.

அதுலயும் அந்தக் கடைசி டச் “..என் எச்சிலையும் சேர்த்து” சே...

யாராவது, அமெரிக்காவில உட்கார்ந்துகிட்டு திமிரா பேசுறதைப் பாருன்னு கமெண்ட் போடப்போராங்க

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 1:10 AM

அடுத்த முறை... அந்தக் கடையில் சாப்பிடும் போது..., இது நிச்சயம் நினைப்பு வருமில்ல?? :) :)

தண்டோரா ...... said... January 29, 2010 1:29 AM

சினிமா பார்க்கும் நேரம் போக, சாஃப்ட்வேர் பண்றீங்கன்னு நினைக்கிறேன்..கீப் இட் அப்..

பிரேம்ஜி said... January 29, 2010 1:39 AM

//அமெரிக்கா காரன்... ‘க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்தூ’-ன்னு துப்பினதைத்தான்..., இப்ப நம்மூர் மக்கள் ப்ரெஸ்டீஜா நினைச்சி... ருசிச்சி... சாப்பிடுறாங்க.... என்னோட எச்சிலையும் சேர்த்து!!!//

அதேதான் சொல்ல வந்தேன்.

அமெரிக்கா காரன் வாந்தி எடுத்தாலும் ம்ம்ம்ம்... டேஸ்டா இருக்குன்னு சாப்பிடற கும்பல் நம்ம ஊர்ல உண்டு.இந்த பீட்சா,பர்கர் மேட்டுக்குடியை எல்லாம் விட்டு நடுத்தர வகுப்பு குடும்பங்களிலும் முக்கிய உணவா ஆகிருச்சி.நேத்து பீட்சா ஹட்ல சாப்பிட்டோம் அப்படின்னு சொல்லிக்கறது பெருமையா நினைக்கறாங்க.இந்த ஊர்லையே பக்கத்து வீட்டு இந்திய குழந்தை அரிசி சாதமோ,இட்லியோ பள்ளிக்கு கொண்டுபோனா சக அமெரிக்க குழந்தைகள் கேலி பேசறாங்கன்னு சொல்லிட்டு தினமும் பள்ளியில் கொடுக்கிற பீட்சாவோ,பர்கரோ சாப்பிட்டு உடம்பு பெருத்து முகம்,கை,கால்,வயிறு எல்லாம் ரவுண்டாக மாறி (அவனுக்கு ஆல் ரவுண்டர் ன்னு பேர் வெச்சிருக்கேன் :-) )
இருக்கிறான்.

போன வருஷம் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை நீக்கம் செய்யறது உச்சத்தில இருந்தப்ப வேலை போன ஒரு ஐடி பணியாளர் சொல்றார். சம்பாதிச்சப்ப சேத்து வைக்காம நல்லா செலவழிச்சுட்டோம்.இப்ப வேலை போய் கையில காசில்லாம,டெய்லி பீட்சா,பர்கர்ன்னு சாப்பிட்ட என் குழந்தை இன்னைக்கு ரசம் சாதம் சாப்பிடுதுன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு சொல்றார். இவங்களை என்ன சொல்றது?

VIJAY said... January 29, 2010 2:17 AM

சரியான காரம் + சூடு. இத்தனை சூடான பதிவு இது வரை பாலாவிடம் இருந்து வந்தது இல்லை. இது தரவிறக்கம் செய்ய லிங்க் கொடுங்க தல.

affable joe said... January 29, 2010 2:24 AM

நீங்க சொல்றத எத்தன பேர் கேக்கபோறாங்க தெரியல ஆனா நூத்துக்கு நூறு உண்மை பாலா .ப்ரோயளீர் கோழி அதிகமா சதை வைக்கவேண்டும் என்று அதற்கு வைக்கப்படும் உணவு முதல் போடப்படும் ஊசி வரை அத்தனையிலும் ஹார்மோன்கள் தான் அந்த ஹார்மோன் பாதிப்பு அதிகமாக ஆகியதால் தான் பெண் பிள்ளைகள் சிறு ௦ வயதிலேயே பருவம் அடைந்துவிடுகின்றன .ஆண்களுக்கு மலடு தன்மையும் பெண்களுக்கு ஆண் தன்மையும் அதிகரிப்பது பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளால் தான் என்று மிகவும் தாமதமாக கண்டுபிடித்துள்ளனர் நம் நாட்டினர் .இதெல்லாம் தெரிந்தபிறகு நான் கே.எப் .சி பக்கம் தலைவைக்கிறதே இல்லை .முடிந்த அளவுக்கு வீட்டிலும் நாட்டு கோழி தான் .இந்த காபிடளிச கலாச்சாரத்தை இந்தியாவிற்கு கொண்டுவர அணைத்த நாதாரிகளும் துடிக்கின்றன .மயில்சாமி அண்ணாதுரை,அப்துல் களம் முதற்கொண்டு அதனை பெரும் மரபணு மாற்றப்பட்ட விவசாயத்தை கொண்டுவர துடிக்கின்றனர் ஏனெனில் அந்த நிறுவனங்கள் தரும் பணம் அப்படி .தமிழ் நாட்டில் பி.டி கத்திரிக்காய் வருவதை தடுக்க என்னால் முடிந்தவற்றை செய்கிறேன் நீங்களும் அதை பற்றி ஒரு வார்த்தை எழுதிவிடுங்களேன் .உங்களது இந்த பதிவை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களிடம் சேர்க்கிறேன்.

அன்புடன் ,
ஜோ

அண்ணாமலையான் said... January 29, 2010 3:43 AM

பிரமாதம்... வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said... January 29, 2010 3:44 AM

//இந்த ‘குப்பை உணவை’ மென்னுகிட்டு இருக்கோம்.//

அழுத்தமா சொல்லி இருக்கீங்க, நன்றி பாலா.

Baski.. said... January 29, 2010 3:50 AM

அர்னால்டு இவ்ளோ மோசமானவனா??? நடிப்பு மாதிரியே தான் அரசியலும் பண்றான் போல இருக்கு...

டுபாக்கூர்கந்தசாமி said... January 29, 2010 3:56 AM

தல எனக்கு என்ன டவுட்டுனா இப்ப இங்க துபாய்ல இருக்கிற kfcனு வச்சிக்குவோம் இவன் யூஸ் பண்ற கோழி கறிலாம் நல்லா இருந்தா தானே அரபி காரன் அத தயாரிக்க அனுமதிப்பான். ஒரு உதாரணதுக்கு சொல்ரேன் ஒரு வேல அமெரிக்க கவர்மண்ட் ஒழுங்கா இல்லாததால இந்த மாதிரி e coli விதைக்கப்பட்ட உணவுகள் வெளிவரலாம்ல

இல்ல உலகம் முழுக்க இந்த நிலம தானா??????????

நீங்க சொல்ரத பாத்த ”நாமக்கல் வாங்க” இந்தியாவிலும் இதே நிலம தானா. ரொம்ப கஸ்டம் தல, அப்ப என்னத்த தான் சாப்பிடறதோ தெரியல காய்கறிலயும் இந்த மாதிரி ஏதாவது தில்லு முல்லு இருக்களாம்.

அப்புறம் தல என்ன பின்பற்றி ஆனந்த கண்ணீர் வரவச்சிட்டீங்க, மிக்க நன்றிங்க தல:-)

சங்கர் said... January 29, 2010 6:06 AM

கம்ப்யூட்டரே கொதிக்குது இந்தப் பதிவப் படிக்கும் போது

நல்ல வேளை, நான் இந்த ஜங் புட் ஜந்துக்கள் பக்கமே போறதில்லை

ராசா said... January 29, 2010 6:21 AM

நல்லா துப்பினீங்க பாலா.
அருமையான பதிவு.
இது மாதிரி நிறைய படங்களை அறிமுகம் செய்யுங்க..

Vidhoosh said... January 29, 2010 6:29 AM

:)) I thought it is again just a movie review.
thank god i hv never tasted chicken lollipop or those burgers. btw, did you spit on those pizzas too...

Vidhoosh said... January 29, 2010 6:30 AM

///அமெரிக்காவில உட்கார்ந்துகிட்டு திமிரா பேசுறதைப் பாரு///

Vidhoosh said... January 29, 2010 6:34 AM

5/5 - its me!

ஜோதிஜி said... January 29, 2010 6:44 AM

ராசா கொஞ்சம் கைய குடுங்க. இதத்தான் எதிர்பார்த்தேன். இங்க இருந்துக்கிட்டு சொன்னா வயித்தெரிச்சல். அங்கிருந்தபடியே சொன்னா ?

எடுக்காதவுங்கள விட்டுருங்க. கொழுப்பு தளும்பும்போது (?) புரியம்ல.

Sridhar said... January 29, 2010 7:16 AM

I had seen in palladam (Tamilnadu) that chickens are eating corn and dried fish mixture! I thought this is what chickens are supposed to eat. Good article! Thanks.

jothi said... January 29, 2010 7:20 AM

பாலா, அமர்க்களமான பதிவு. என்ன சொல்றதுனு தெர்ல

மகா said... January 29, 2010 7:25 AM

என்ன சொல்றதுனே தெரியல ..... நாம எவ்ளவு தான் விளக்கி சொன்னாலும் மக்கள் புரிஞ்சுக மாட்டாங்க .. எப்படி எவ்வளவு தடவை ஏமாத்தினாலும் finance கம்பனியை நம்பி ஏமாந்து போறாங்களோ அதுபோல படுச்சுட்டு அதே தாள கைய தொடச்சுட்டு போயிருவாங்க ...

பலா பட்டறை said... January 29, 2010 7:28 AM

பாலா, இப்படி ஒரு பதிவு உங்களால் மட்டுமே எழுதமுடியும், 10 பேர் நிறுத்தறத விடுங்க 10 பேர் புதுசா போகாம இருந்தாலே போதும் அதுவே இந்த பதிவின் வெற்றிதான்.:)

அப்பப்ப இப்படி ஒரு ரெஃப்ரெஷ் பதிவு போடுங்க தல..
--------

காசு சம்பாத்யம் என்பது எந்த அளவுக்கு போய்விட்டது:(, அங்க்யே இந்த விளையாட்டுன்னா இங்க எல்லாரும் டெஸ்ட் சப்ஜெக்ட்தான்..:(
( நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்)
-----

இந்த மக்காசோளத்த பத்தி கொஞ்சம் டிடைலா எழுதுவீங்களா? அல்லது (சினிமா சினிமா மட்டும் என்பதால்) எதாவது லிங்க்காவது தட்டி வுடுங்க..
அமெரிக்கன் கார்ன்-னு இங்க சக்க போடு போடுது..

----
அமெரிக்கா காரன்... ‘க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்தூ’-ன்னு துப்பினதைத்தான்..., இப்ப நம்மூர் மக்கள் ப்ரெஸ்டீஜா நினைச்சி... ருசிச்சி... சாப்பிடுறாங்க.... என்னோட எச்சிலையும் சேர்த்து!!!

உங்கூருன்னு சொன்னப்ப காதுல பொகை வந்தா மாதிரி இருந்துச்சு:)) (இந்தியன்ல-சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் கேஸ்தானா..:)))ஹா ஹா

Oviyaツ said... January 29, 2010 7:48 AM

உறைக்கும்படியா சொல்லியிருக்கீங்க.

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 8:00 AM

குட் மார்னிங்!! :))

மிடிஸ் ஈஸ்டில் இருந்து ஹலோ.. ரெண்டு மிஸ்ட் கால். போன் புக் இல்லாதனால.. யாருன்னு கண்டுபிடிக்க முடியலை.

அந்த நாட்டு ராஜாவா இருந்தா.. சாரிங்க சார்..!! உங்களுக்கு இந்த ஃபுட் பிடிக்கும்னு தெரியாம எழுதிட்ட்டேன். ;)

சதீஷ் குமார் said... January 29, 2010 8:02 AM

http://wwvv.niceboard.net/Food-inc-2009-h68.htm

Link for The Movie.

Indian Friends try mediafire Link for BSNL user

Very fast download

பலா பட்டறை said... January 29, 2010 8:04 AM

குட் மார்னிங்!! :))
//

அப்பாடி கோத்துவிட்டது வேலை செய்யிது..கமான் கமான்..:))

சதீஷ் குமார் said... January 29, 2010 8:07 AM

I Always Bala refer Movies in Mediafire site. its so fast and easy to find in Google.

downloading 300Kbs fast compare with another torent site. its so fast.

I'm Using Bsnl 500c Plan. every day i downlad 4 to 5 Movies for 2a.m to 8 a.m in my availabe free times.

சந்துரு Chanthru said... January 29, 2010 8:32 AM

வாழ்த்துக்கள். அருமையான கட்டுரை

Balavasakan said... January 29, 2010 9:21 AM

அமெரிக்கா காரன்... ‘க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்தூ’-ன்னு துப்பினதைத்தான்..., இப்ப நம்மூர் மக்கள் ப்ரெஸ்டீஜா நினைச்சி... ருசிச்சி... சாப்பிடுறாங்க.... என்னோட எச்சிலையும் சேர்த்து!!!

சார் சூப்பர் சார்.... அது சரி நீங்க எப்ப சார் ஆகினீங்க... சாரி... பாலாண்ணே சூப்பர்ண்ணே தாங்ஸ்ண்ணே நானெல்லாம் ரொம்ப கவலைப்பட்டுக்குவேன் விதம விதமான சாப்பாட்டு ஐட்டங்கள் இந்த விளம்பரங்களில பாத்து மக்கா நீ எப்படா இதெல்லாம் சாப்பிடப்போறாயன்னு.... து உண்மையிலயே அறிவுக்கண்ண திறந்துட்டீங்க ...இனி எங்க ஆத்தான்ட குரக்கன்மா புட்டும் பச்சையரிசி சோறுந்தான் ... சாப்பாடு ... அதுசரி அப்புடீன்னா நீங்க என்னாத்த சாப்பிடுறீங்க... ?????

RoadRunner said... January 29, 2010 9:49 AM

Once again Hats off Bala! அருமையான பதிவு.
இது மாதிரி நிறைய படங்களை அறிமுகம் செய்யுங்க.

-Pandian

BALA said... January 29, 2010 9:57 AM

பாலா,
பதிவு தாறு மாறு தக்காளி சோறு.

பட் நீங்க துப்புனா எங்களுகென்ன நாங்க பாட்டுக்கு வெண்ண ரொட்டியையும் (பர்கர்), தக்காளி ஊத்தாப்பத்தையும் (பிசா) முழுங்கிட்டு தான் இருப்போம், அந்த கரித்தண்ணிய (கோக்) குடிச்சுட்டு ஏப்பம் விட்டுகிட்டு தான் இருப்போம். எப்படியோ நீங்க துப்புனது இந்தியா வாரதுக்குள்ள காஞ்சிரும்ல ;) துப்புனதுகெல்லாம் நாம திருந்தியிருந்தா...சரி இப்ப எதுக்கு அந்த ஃபிக்சன் ஸ்டோரி எல்லாம். :)

ஆனா எப்படி எழுத்து, அலுவலகம், குடும்பம் (முதல்ல உங்க துணைவியாருக்கு நன்றி) எல்லாத்தையும் பாலன்ஸ் பண்ண முடியுது. எனக்கு இந்த வித்தைய மட்டும் கத்துகுடுங்க.

கருந்தேள் கண்ணாயிரம் said... January 29, 2010 9:59 AM

பாலா . .ரைட்டு . . இந்தப் பதிவ படிச்சி மாறப்போற அந்த பத்து பேர்ல நானும் ஒருத்தன் . . இனிமே நோ mcdonalds . . ஒன்லி ஹெல்தி food . . :-) . . . ஏய் எடுங்கடா அந்த இளனிய . . நானு மாறிட்டேன் . .மாறிட்டேன் . . மாறிட்டேன் . . (எப்பூடி . . ) . .

க.இராமசாமி said... January 29, 2010 10:27 AM

தல அற்புதமான பதிவு/பகிர்வு. இங்க ஆணி புடுங்க வர நம்ம ஆளூங்க நெரைய பேரு இந்த உயிர் கொல்லி ரெஸ்டாரண்ஸ் புட்ஸ்கு அடிமை ஆய்டாங்க. இத படிச்சுட்டு திருந்துவாங்களான்னு பார்க்கலாம்.

ajay said... January 29, 2010 10:43 AM

hmmm i thought of going to mcdonalds on sunday with pappu at bangalore... yosikanum...

ஷாகுல் said... January 29, 2010 10:47 AM

எப்போவாது சாப்டுட்டு இருந்தேன்,அதுக்கும் ஆப்பா?

அம்பேரிக்கவே முதலாளிகளால் தான் ஓடிகிட்டு இருக்கு. முதலாளிகளுக்கு லாபம் வருவதால் தான் இன்னும் அமெரிக்காவில் பொது ஜனங்கள் இருக்கிறார்கள். இல்லையென்றால் எப்பவோ மேல அனுப்பிருப்பானுங்க.

//அமெரிக்கா காரன்... ‘க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்தூ’-ன்னு துப்பினதைத்தான்..., இப்ப நம்மூர் மக்கள் ப்ரெஸ்டீஜா நினைச்சி//

இது கூட பரவாயில்ல பாஸ் டாய்லட்ல பேப்பர் மட்டுந்தான் வக்கிறாங்க. கேட்டா வெஸ்டர்ன் ஸ்டைலாம்.

யாருகிட்டயும் கை கொடுகுறதுக்கு கூட யேசிக்க வேண்டியதா இருக்கு.

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 11:34 AM

@தண்டோரா : இப்ப ரெண்டு வாரமா.... சினிமா மட்டும்தான்!! என்னைக்கு ஆப்பு வைக்கப் போறாங்களோ? :)

--

@பிரேம்ஜி: அந்த கடைசி பாரா மேட்டரை நானும்... எதிலோ படிச்சேன். சிரிச்சேன்!!! நெஜமா.. அதை பாதிக்கப் பட்டவங்க சொன்னாங்களா.. இல்லை எடிட்டோரியலில்.. ஃபினிஷிங் டச்-க்கு எழுதினாங்களான்னு தெரியலை.

இதுவே.. இந்த ஊர்னா.. எப்படி சொல்லியிருப்பாங்கன்னு யோசிச்சிப் பாருங்க??? :)

“எப்பவும்.. உழவர் சந்தையில் போய்.. ஃப்ரெஷா வாங்கி சாப்பிட்டே பழகிட்டோம். இப்ப... மெக்டொனால்ட்ஸில் போய்.. அந்தக் குப்பையை என் பையன் சாப்பிட்டுகிட்டு இருக்கான்.”.

இப்படி போலி ஆடம்பரம் காட்டுறவங்களை பார்த்தாலே பத்திகிட்டு வருது.

---

@விஜய் : இதை ட்ரை பண்ணிப் பாருங்க விஜய்.

http://thepiratebay.org/torrent/5137537/Food_Inc_LIMITED_DVDrip_XviD_-_ZOOM_-_GCJM

ரேபிட் ஷேர் ஓகேன்னா... கீழே.. சதீஷ் குமார் லிங்கை முயற்சி பண்ணிப் பாருங்க. டிவிடி ஏற்கனவே ரிலீஸ் ஆகிடுச்சி. அங்கே லைப்ரரியில் கிடைக்காதா?

----

@ஜோ : ரொம்ப நன்றிங்க ஜோ. இதெல்லாம்.. தெரியாம இருக்காது!!! அத்தனையும் தெரிஞ்சி கூட.. நானும் சில சமயம் அங்கே சாப்பிட்டு இருக்கேன். ஆனா... மொத்தமா.. நிறுத்தினது இந்தப் படத்தை பார்த்தப் பின்னாடிதான்.

நாமக்கல் பண்ணைகளில் வளர்க்கப் படும் கோழிகளில் நிறைய... வெயிலையே பார்த்திருக்காது. 80 நாளில் வளர வேண்டிய கோழியை, 40 நாளில்.. நாலு மடங்கு வெய்ட்டில் வளர்த்துடுவாங்க.

அப்புறம்.. அந்த கத்தரிக்காய் மேட்டருக்கு... ஸ்ட்ராட்டிங் லிங்க் எதாவது கிடைக்குமா? அப்புறம் நான் தோண்டிக்கிறேன்.

----

@அண்ணாமலையான் : இது உங்க சப்ஜக்ட் தல!! நீங்க எழுதியிருந்தா.. கலக்கலா இருந்திருக்கும்!!! :)

----

@சை.கொ.ப : புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி! :( :( :(

----

@பாஸ்கி : அர்னால்ட் மட்டுங்களா?? அத்தனை அரசியல்வாதிகளும்தான்!!

King Corn படத்தில் பார்த்தால்..., விவசாயப் புரட்சியை உருவாக்கின.. அதே அரசியல்வாதியிடம்..., 30 வருடம் கழிச்சி.. பேட்டி கேட்கும் போது.., ‘ஏன்டா அதை உருவாக்கினோம்’-ன்னு போன 10-15 வருசமா கவலைப் பட்டுகிட்டு இருக்காராம்.

இனி ஒன்னும் பண்ணுறதுக்கில்லை.

----

@டுபாக்கூர் : எனக்கு.. சவுதி.. துபாய் எல்லாம் ஒரே நாடுதான்!! :) :)

சவுதியில்.. அத்தனை மெக்டொனாட்ஸும்... அந்த நாட்டு இளவரசர்களால் நடத்தப் படுதுன்னு, மெக்டொனாட்ஸ் வெப் சைட் சொல்லுது.

மன்னருக்கு அந்த டேஸ்ட் பிடிச்சனால... இருந்த பூங்காக்களை எல்லாம் ராத்திரியோட ராத்திரியா தூக்கிட்டு... மெக்டொனாட்ஸை வச்சாங்களாமே??? இது உண்மையா????

இந்த நாட்டில் இருக்கும் சுதந்திரம்.. இதையெல்லாம் வெளியே கொண்டு வருது. மிடில் ஈஸ்ட், இந்தியாவில் எல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காது.

kailash,hyderabad said... January 29, 2010 11:40 AM

தல.பதிவு அனல் பறக்குது. இப்படி சூடு வச்சு சொல்லாவிட்டாலும் நம்ம மக்களுக்கு உறைக்காது.
அப்புறம் இங்கே ஒரு ஏரியாவில கார்பரேஷன் குடிதண்ணீர்ல பாதாள சாக்கடை கலந்து நிறைய குழந்தைகள் செத்து போச்சி. பல பேரு சீரியசாகி ஆஸ்பத்திரியிலஅட்மிட் ஆனாங்க. அந்த தண்ணிய டெஸ்ட் பண்ணினவங்க கொடுத்த ரிப்போர்ட் "தண்ணிர்ல e coli அதிகமா இருப்பதால் மலம் கலந்தது கன்பார்ம்'. அப்போலிருந்து இந்த e coli ஆயி-லதான் இருக்கும்னு நினச்சுகிட்டு இருந்தேன். இந்த வகை உணவு பொருள்கள்ல இருக்குன்னா அது ஆயிக்கு சமம்.
கருமம். உவ்வே.
அது சம்மந்தப்பட்ட லிங்க்.

http://www.andhravilas.com/Newsdetail.asp?id=284337&curPage=3

அதுல கடைசி பாரா.

"The city-based Institute of Preventive Medicine (IPM) has found the presence of E.Coli in water samples collected from Bholakpur, a lower middle class locality. The bacteria is found in human faeces.

faeces ன்னா மலம்.

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 11:52 AM

@சங்கர் : ஃபேன் சரியா ஓடுதான்னு டெஸ்ட் பண்ணுங்க தல!! :)

உங்க முன்னோர்கள் செஞ்ச புண்ணியங்க அது!!! தயவு செஞ்சி அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணுங்க.

----

@ராசா : நன்றி ராசா! மேல பட்டிருந்தா மன்னிச்சிக்கங்க. :(

சில நேரம்.. இது மாதிரி ‘ஹார்ஸ்’ வார்த்தைகளை உபயோகிக்க வேண்டி வந்துடுது. :(

----

@விதூஷ் : And I hope its not just another movie! :)

5/5 -யேய்ய்ய்!! :) :) :)

ஆமா.. ஓட்டு சொன்னீங்களா... இல்லை.. நீங்க கொடுத்த மார்க்கா?? :)

----

@ஜோதிஜி : விடுங்க தல!! வயித்தெரிச்சல்னு நினைச்சாங்கன்னா.. சாவட்டும். நமக்கென்ன? ஊதற சங்கை ஊதிடுவோம். :)

----

@ஸ்ரீதர் : இப்ப அல்மோஸ்ட் எல்லா உயிரும் சோளத்தை மட்டும்தான் சாப்பிடுது. கொஞ்சம் கொஞ்சமா.. இது டயபிடிஸ்ல கொண்டு போய் விடும்!!

----

@ஜோதி : நன்றிங்க தல! :)

----

@மகா : பலா சொன்ன மாதிரி..., ஏற்கனவே சாப்பிடுறவங்க திருந்தாட்டி கூட, சாப்பிடாதவங்க ஒதுங்கிப் போனா கூட போதுங்க.

----

@பலா : இந்த கம்பெனிகளில் ஒரே குறிக்கோள் ‘நமக்கு நல்ல உணவை... கம்மியான விலைக்குத் தருவது மட்டும்’--தானாம்!! :) :) செல்வராகவன் ஸ்டேட்மெண்ட் மாதிரி தெரியல? :)

இந்த சோளத்தை எளிமையா புரிஞ்சிக்க... King Corn டாகுமெண்ட்ரியை பாருங்க பலா.

http://isohunt.com/torrent_details/135046145/king+corn?tab=comments

பிரிச்சி மேஞ்சிருப்பாங்க. அதே மாதிரி.. மிச்சத்தை.. Food, Inc -ல் பார்க்கலாம். தனிப்பதிவு தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஆனா.. நீங்க சொல்லுற இந்த அமெரிக்கன் கார்ன்... அனேகமா.... ஓவர் ப்ரொடக்‌ஷனை... 'american' பேரை சேர்த்து.. நம்மூரில் விற்கும் வியாபாரமா இருக்கலாம்.

நீங்க சொல்லுறதைப் பார்த்தா.. Iowa சோளம்..., நம்மூரு 'சோழன் தலைமுடி’ வரைக்கும் வந்திடும் போல இருக்கே??? :(

ஹலோ......., நான் என்னை ‘அமெரிக்காகாரன்’ன்னா சொன்னேன்??? அடப்பாவிகளா??!

ஒரு ‘இந்தியனின் எச்சிலை’யும் சேர்த்துன்னு சொன்னா... எஃபெக்ட் இருக்காதேன்னு.. என் பேரைப் போட்டேன். அப்ப.. இமேஜின் பண்ண வசதியா இருக்குமில்ல?!! :) :)

----

@ஓவியா : நன்றிங்க ஓவியா! :)

விஜய் said... January 29, 2010 11:59 AM

பசுமை புரட்சியும் வெண்மை புரட்சியும் ஏற்கனவே நமது நாட்டின் வளங்களை சீரழித்து விட்டது. இயற்கை விவசாயம் ஒன்றே அதன் தீர்வு.

வாழ்த்துக்கள்

விஜய்

VIJAY said... January 29, 2010 12:00 PM

நான் முன்பே கண்டுபிடிச்சுட்டேன் தல. தரவிறக்கம் செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

நல்ல அருமையான விழிப்புணர்வு உண்டாக்கும் பதிவு. இதுபோல நல்ல டாக்குமெண்ட்ரி படங்களாகவும் அறிமுகப்படுத்துங்கள்.

இதை படித்து ஒருவர் திருந்தினால் கூட அது உங்களுக்கு கிடைத்த வெற்றிதான் பாலா.

எல்லோரும் மறக்காம ஓட்டு போடுங்க. அதிக ஓட்டுகள் மூலம் பிரபலமானால் இன்னும் அதிக நபர்களை சென்று அடையும்.

kailash,hyderabad said... January 29, 2010 12:05 PM

இந்த torrent - தான் நான் டவுன்லோடு பண்ணினது. ரொம்ப ஸ்பீடா இறங்கிருச்சு.

http://btjunkie.org/torrent/Food-Inc-LIMITED-DVDRip-XviD-ZOOM-avi/43583a8693ee6d56921a33908591b3e0ef621a4ff70e

அமெரிக்காவிலிருந்து கலர் கம்பெனிகளும்,கோழி கறி கம்பனிக்களுமதான் உள்ளே வருகிறன. ராக்கெட் தொழில்நுட்பம் வருவதில்லை .கவனித்தீர்களா ?

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 12:14 PM

@சதீஷ் : லிங்கிற்கு ரொம்ப நன்றிங்க தல

----

@சந்துரு : மிக்க நன்றி!! :)

----

@பாலவாசகன் : பலா... இப்ப சந்தோஷமா??? இங்க பாருங்க.. நம்மாளு வேற கேட்கறாரு? :)

///இனி எங்க ஆத்தான்ட குரக்கன்மா புட்டும் பச்சையரிசி சோறுந்தான் ... சாப்பாடு ... //

நம்பினா நம்புங்க.... இதை படிக்கும்போதே.. எச்சி ஊறுது. திரும்ப ஒரு தபா.. இந்த பர்கரை பார்த்து துப்பிட்டு வர்றேன்...!!!

அதை விட ஆரோக்கியமான சாப்பாடு.. உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் கிடைக்காதுங்க. கோவில் கட்டி கும்பிட்டுட்டு... அப்புறமா சாப்பிடுங்க!


///அப்புடீன்னா நீங்க என்னாத்த சாப்பிடுறீங்க... ????? //////

விதூஷ்-க்கு பதில் சொல்லாம விட்டுட்டேன். இப்போதைக்கு சப்வே சாண்ட்விச்சும், ‘தரம்’ன்னு அவங்க சொல்லிக் கொடுக்கும் பிஸ்ஸாவும்தான்.. உணவு.

மனைவி ஊரில் இருந்து வர்ற வரைக்கும் தினமும் ஒரே நேரம்தான் சாப்பாடு! :( :(

---

@RoadRunner : நன்றி பாண்டியன்!! வரவேற்பு இருக்கு!! நிச்சயம்.. இது மாதிரி நிறைய எழுதறேன்! :)

---

@பாலா : ரொம்ப நன்றிங்க பாலா!! :)

இதையெல்லாம் செஞ்சி, இப்ப திருந்திட்டுதான்.. துப்பியிருக்கேன். சீக்கிரம்.. நிறைய பேர் துப்பினால்.. ரொம்ப நல்லாயிருக்கும்.

இப்போதைக்கு பேச்சலர். ஆஃபீஸில் வேலையில்லை. வேற என்னப் பண்ணச் சொல்லுறீங்க?! :)

----

@கருந்தேள் : ரொம்ப சந்தோஷம் கருந்தேள்! :) மீதி.. ஒன்பது பேர் கிடைச்சா போதும்!! நிம்மதியா மண்டையை போட்டுடுவேன்! :)

அப்படியே.. உங்க நண்பர்கள் எல்லாம் இருக்கும் போது, இந்த படத்தை ஓட விடுங்க.

நான் இதை பார்க்கச் சொல்லி... என் ஆஃபீஸில்.. இப்ப ஒரு அமெரிக்கர்... மெக்டொனாட்ஸை.. நிறுத்திட்டார்.

---

@இராமசாமி : படிச்சி திருந்த வாய்ப்பு கம்மிங்க!! ஆனா படத்தைப் பார்த்தா..... 100% திருந்துவாங்க. அத்தனை எஃபெக்டிவ்.


---

@ஷாகுல் : கருமமே..!! எனக்கு சைனா காரனை பிடிக்காததுக்கு காரணமே.. இந்த ‘பேப்பரை’ கண்டு பிடிச்சான்னுதான். இது இந்தியாவிலுமா??? வெளங்கும்!!

///யாருகிட்டயும் கை கொடுகுறதுக்கு கூட யேசிக்க வேண்டியதா இருக்கு.///

இந்த ஊருக்கு வந்தப்ப நான் பட்ட கஷ்டமிருக்கே!!! :) :) :)

---

@கைலாஷ் : தகவலுக்கு நன்றி கைலாஷ்!!! ஆனா... உண்மையில்.. அந்த E coli எல்லாயிடத்திலும் பரவியிருக்காம். நிறைய வகைகள் ஹார்ம்லெஸ். சிலது மட்டும் டேஞ்சர்.

அவேர்னஸ் இல்லாத நம் நாட்டில்.. அந்த ‘சேம்பிள்’ கூட வேற இடத்தில் இருந்து வந்திருக்கலாம். சாக்கடை தண்ணி.. ஒரு கண் துடைப்பா இருக்கக் கூட வாய்ப்பிருக்கு.

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 12:20 PM

ஒரே சமயத்தில் ஒரு தமிழ் விஜய்.. ஒரு ஆங்கில Vijay! :)

@விஜய் : எல்லா நாடுகளிலும் தான்னு நினைக்கிறேங்க தல! :(

--

@Vijay : அட ஏங்க விஜய்??! Chasing Amy படம் எழுதி.. 2-3 மணி நேரத்தில்.. 15 தமிழ்மண ஓட்டு (இப்ப ரீசெட் ஆகிடுச்சி). 36 தமிழிஷ் ஓட்டுகள்.

இந்தப் பதிவையும் 18+ -ன்னு போட்டு எழுதியிருந்தா.... ஓட்டுகள் கிடைச்சிருக்க வாய்ப்பிருக்கு!! :) :)

--

@கைலாஷ் : முதலாவது பிஸினஸ்!!! ரெண்டாவது அரசியல்!!! :) :)

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 12:24 PM

@அஜய் : ஸாரி! விட்டுப் போச்சி!! :(

‘யோசிக்கறீங்களா?’. பரவாயில்லை போய்ட்டு வாங்க!!!

ஆனா... என் எச்சிலின் டேஸ்ட் எப்படியிருந்துச்சின்னு கண்டிப்பா சொல்லணும்.. சரியா? :)

எழுதறதுக்கே... ‘டிஸ்கஸ்டிங்’கா இருக்கு. இதை படிச்சிட்டு.. எப்படி பர்கர் சாப்பிடுவீங்க? :)

Ravi said... January 29, 2010 12:29 PM

One of the very very good post from you. Just a Gem!

Thanks for an eye-opening introduction to these documentaries.

காரணம் ஆயிரம்™ said... January 29, 2010 12:35 PM

கோழிங்கிறீங்க,Coliங்கிறீங்க .. இனிமே ரெண்டையும் பார்த்தாலும் எஸ்கேப்..

எங்க கம்பெனி(மைக்ரோஷாப்ட்) ரகசியங்களை வெளியிடுவதற்காக வன்மையாக கண்டிக்கிறோம் :)

அன்புடன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 12:50 PM

@ரவி : ரொம்ப சந்தோஷம் ரவி! :)

--

@காரணம் : மைக்ரோசாஃப்ட்.. வாழ்க வாழ்க!! :)

ஆஹா.. இதை முன்னாடியே எங்கயாவது கோடு காட்டியிருந்தா.. அடக்கி வாசிச்சிருப்பேன்! :) :)

Sabarinathan Arthanari said... January 29, 2010 1:08 PM

பயனுள்ள நல்ல பதிவு வாழ்த்துக்கள்

mayilravanan said... January 29, 2010 1:25 PM

அடடடடடா..காலையில வந்துட்டு புதுசா ஒண்ணும் போடலையேன்னு நெனைச்சுப் போயிட்டேன்.இப்பப் பாத்தா பார்ட் 2 போய்க்கிட்டிருக்கு. அருமை தல. அருமை. ரொம்ப காரமா சொல்லியிருக்கிறீங்க. நான்கூட இன்னைக்கு இந்தப் படத்த பிரிண்ட் போட்டு ‘தமிழ்ஸ்டுடியோ.காம்’ அருணுக்கு அனுப்புனேன். அவிங்க ஒரு 50 பேருக்காச்சும் ஒட்டுக்காப் போட்டுக் காட்டுவாங்கெ.எங்க பாட்டி :) அடிக்கடி சொல்லும் ‘Helping Hands are better then praying lips'னு. நன்றி தல. வாழ்த்துக்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 29, 2010 2:24 PM

தல சான்சே இல்லை,சூப்பர்.
இந்த ஜன்க் ஃபுட்டினால் ஏற்படும் ஆபத்தை உணரணும்,சிகரெட்,மதுவிற்கு ஈடாய் இதயமும்,மூளையும்,பாதிக்கப்படும் அபாயம் இருக்கு.செம சவுக்கடி.பேசினதில் மிக்க மகிழ்ச்சி தல.

இதை உடனே டவுன்லோடு போடுடறேன்.
ய சீரியஸ் மேனும் ரெடி,பார்க்கணும்.
கோவா பார்த்தோம் தல.
தோஸ்தானா,சில கே மூவிஸ்,டஷன்,ரேஸ்,மற்றும் சில ஹிந்தி படங்கள் கலவை.
நிறைய ஆர்டிஸ்ட். ஒன்னும் சொல்றத்துக்கிலை.:(

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 2:33 PM

@சபரிநாதன் : நன்றிங்க! :)

--

@மயில் : இது நெட்ஃப்ளிக்ஸில் instant play-வில் இருக்குங்க. ஆனா.. இதை youtube-ல் 4 டாலருக்கு விற்கப் பாத்தாங்க. 300 டாலர் கூட தேறியிருக்காது. அதைப் பத்தி அட்வர்டைஸ்மெண்ட் பண்ணாம விட்டுட்டாங்க.

இவங்க.. free ஸ்க்ரீனிங் பண்ண விட்டாங்கன்னா... இன்னும் கொஞ்சம் ரீச் ஆகும். நீங்க ஆரம்பிங்க! :) :)

--

@கார்த்திக்கேயன் : நான் கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணினேன். உங்க சைட் எதோ வைரஸில் அஃபெக்ட் ஆகியிருக்கு.

கொஞ்சம் பாருங்க தல. படமெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 2:34 PM

ஜெட்லியின் பதிவும் இப்படி ஆகியிருந்துச்சி. இப்ப சரி பண்ணிட்டார்.

உங்களுக்கு ஹெல்ப் வேணும்னா.. அவரை தொடர்பு கொள்ள முயற்சி பண்ணுங்க.. கார்த்திக்கேயன்.

http://nee-kelen.blogspot.com/2010/01/blog-post_233.html

எப்பூடி..... said... January 29, 2010 2:43 PM

//Food, Inc = அறிவுக் கண்//
100% உண்மை

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 3:55 PM

101%

Porkodi (பொற்கொடி) said... January 29, 2010 4:25 PM

//எங்க கம்பெனி(மைக்ரோஷாப்ட்) ரகசியங்களை வெளியிடுவதற்காக வன்மையாக கண்டிக்கிறோம் :)//

adhane! vazhimozhigiren.

padhivu supero super, i dont like mcdonalds, but is anything crazy about subway too? adhuvum illana romba thindattam agidum!

nethiku naan inga 2 comment pottapula irukke.. pottena illiya?

ஹாலிவுட் பாலா said... January 29, 2010 4:33 PM

கமெண்ட் போட்டது இந்தப் பதிவில் இல்லீங்கோவ். போனப் பதிவில்.

நான் இப்ப சாப்பிடுறது சப்வேவில் மட்டும்தான். அதுக்கும் யாராவது படமெடுத்தா.. காலி!!! :)

Manian said... January 30, 2010 12:22 AM

FOOD,Inc. கசப்பான உண்மை -மயில்ராவணன்
உங்கள் link முலமாக படித்து, உடன் download செய்து பார்த்தேன்
மறுநாள் என் மனைவியின் வற்புறுத்தல் காரணமாக McDonald's போய்,
mc wings வாங்கி என் மனைவி சாப்பிடும் பொழது,
சிங்கப்பூர்ரில் இருக்கும் வரை KFC, McDonald's மட்டும் இல்லாமல் ஆடு கோழி
போன்ற எந்த ஒரு பண்ணை வளர்ப்பு அசைவ உணவு சாப்பிடுவது இல்லை என்ற என் முடிவை கேட்டு
என் மனைவி அதிர்த்துவிட்டாள்..!
என்னுடைய இந்த முடிவுக்கு நீங்களும் ஒரு காரணம். வளர்க உங்கள் சேவை.....!
உங்கள் இந்த இரண்டு பதிவையும் என் மனைவி மற்றும் என் நண்பர்களயும் படிக்கச் செய்து அவர்களுக்கும் உண்மையை உணரசெயயபோகிறேன்,
ok தல இது எல்லாம் சாப்பிடகூடாது சரி.. நம்ம மாதிரி பரதேசி(nri) எங்க என்ன சாப்புடுறது...?

ஸ்ரீநி said... January 30, 2010 12:30 AM

naalaya america janathipathi Bala
Vazhga

கோபிநாத் said... January 30, 2010 3:43 AM

தல...உங்களை வாழ்த்த வார்த்தையில்லை...உங்கள் சேவை எங்களுக்கு தேவை ;))

ஜாக்கி சேகர் said... January 30, 2010 6:22 AM

வெரி வெரி இண்டிரஸ்ட்டிங் டாபிக்.. பாலாஉங்கள் தளம் சினிமா என்ற குறிகிய வட்டத்துக்குள் அடங்காமல்... வெளியே வந்து விட்டது... இந்த பொது நல பதிவுக்கு என் வந்தனங்களும் நன்றியும்...

வினோத்கெளதம் said... January 30, 2010 9:09 AM

தல நான் ஒரு கம்மென்ட் போட்டேன் எங்கே காணோம் ..!!

ஹாலிவுட் பாலா said... January 30, 2010 10:03 AM

@மணியன் : செம போல்டான முடிவு!! :) நீங்க அடிக்கடி ஊருக்கு போவீங்கன்னு நினைக்கிறேன். :)

என்னால் அதை பண்ண முடியலைன்னாலும், நான்-வெஜ் ஐட்டங்களை நானும் ரொம்ப தொடுறது இல்லை. சப்வேன்னா... வெஜ்ஜி பிஸ்ஸாவும், இழை தழையெல்லாம் போட்டு சாண்ட்விச் மட்டும்தான் இப்போதைக்கு சாப்பாடு. ஆனா ஸ்ரிக்ட்லி.. நோ ஜங்க் ஃபுட்.

--

@கோபி : பாவிகளா...? நீங்கதானா அது???!!!!!!! வச்சிக்கிறேன் இருங்க ஒரு நாளைக்கு!! :)

--

@ஜாக்கி : நன்றி ஜாக்கி. இப்படி எதுனா.. ஸ்டண்ட் போட்டாதான்.. என்னையும் ரவுடின்னு ஒத்துக்குவாங்க போல இருக்கு!! :)

---

@வினோத் : அது போன பதிவில் வினோத்!! :) என்ன இன்னும்.. நேத்து ‘கோவா’ போன எஃபெக்ட் போகலையா?? :) :)

malarvizhi said... January 30, 2010 12:01 PM

அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

கிரி said... January 30, 2010 12:36 PM

:-))) பாலா நான் ஒன்னு சொல்றேன் .. யாரும் இதை படித்து திருந்த மாட்டாங்க..சும்மா சொல்லலாம் எதுவுமே அனுபவ பட்டால் மட்டுமே அதன் வீச்சு அதிகம்.

அமெரிக்காகாரங்க குண்டா இருக்க காரணம் இது தான்.. ஐரோப்பியர்கள் ஃபிட் ஆக இருப்பார்கள் எப்படி! அவர்கள் இதைப்போல சாப்பிடுவதில்லையா! எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.

அப்புறம் நீங்க ஹைடெக்கா மெக் டொனால்ட் கோழி விஷயம் பற்றி கூறினாலும் அது நம்ம ஊர்ல ஐந்து ருபாய் காக்காய் பிரியாணி கதை தான். நம்ம ஊர்ல மெக் டொனால்ட் இல்லைனாலும் வேற மாதிரி நடக்குது. நம்ம ஊர் பல ஹோட்டல்கள் சுத்தமாக இருந்தாலும் அவர்கள் சமையல் அறை சென்று பார்த்தால் அப்புறம் அங்கே சாப்பிடுவதை நிறுத்தி விடுவோம், இது மாதிரி அனைத்து இடங்களிலும் நடக்கிறது.

கோக் பெப்சி குடித்தால் நடக்கும் கொடுமை பற்றி ஏதாவது படமுள்ளதா! ஹி ஹி நான் இதை குடிப்பதில்லை.. உடல் நலம் காரணமாக அல்ல ஏனோ பிடிக்கவில்லை! இவை இருப்பதால் நம்ம ஊர் விவசாயம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா!

நான் எதையும் பழக்கமாக வைத்து கொள்வதில்லை எதற்கும் அடிமை இல்லை.. எனவே மெக் டொனால்ட் சாப்பிடத்தான் போகிறேன் எப்பவாவது வேற வழி இல்லை என்றால்! சும்மா டகால்ட்டிக்கு சத்தியமாக நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் என்றெல்லாம் சொல்ல பிடிக்கலை ..:-)

ஏதாகினும் நல்ல பதிவு.. என்னை எல்லாம் திருத்தவே முடியாதுன்னு நினைக்காதீங்க! ஏனென்றால் திருத்த வேண்டிய அளவிற்கு மெக் டொனால்டில் சாப்பிடுவதில்லை :-)

நாஸியா said... January 30, 2010 11:06 PM

ரொம்ப நன்றி சகோதரரே, பகிர்ந்துக்கொண்டமைக்கு..

உங்க பதிவ படிச்சுட்டு உடனே இந்த படத்தை நானும் எங்க வீட்டுக்காரவங்களும் பார்த்தோம்.. இப்போ பெருசா வாங்கி வெச்சுருக்குற கார்ன் ஃப்லேக்ஸ் டப்பாவை பாத்தாலே ஒரு மாதிரி இருக்கு,..

Saravana Kumar MSK said... January 31, 2010 4:35 AM

பாஸ், நீங்க இவ்ளோ சீரியஸா எழுதுவீங்களா.. நானும் இனிமேல் முடிந்தவரை அந்த உணவுகளை குறைக்கிறேன்.. :)

ஹாலிவுட் பாலா said... January 31, 2010 8:33 AM

@மலர்விழி : நன்றிங்க.

---

@கிரி : உண்மை கிரி. யாரும் திருந்தப் போறதில்லை. சப்போஸ் அடுத்த முறை சாப்பிடும் போது உறுத்தினா.. அதுவே போதுமே!!! :)

கோக் குடித்தால் வரும் மாற்றத்தை.. Super Size Me படத்திலேயே பார்க்கலாம். அப்புறம்.. King Corn படத்தில்.. அதனால்.. சர்க்கரை வியாதி வந்து.. உடம்பை பார்ட் பார்ட்டா.. இன்ஸ்டால்மெண்டில் டாக்டர்கள் வெட்ட ஆரம்பிக்க,

... பேசாம செத்துப்போயிடுறேன்னு ஒருத்தர் சொல்லிட்டு.. அப்படியே செய்துடுவார் (இதை.. ஒரு டாக்ஸி ட்ரைவர்.. அவர் அப்பாவின் கதையா சொல்லுவாரு. கூடவே.. அவர் முன்னாடி எப்படியிருந்தார். இப்ப எப்படி இருக்கார்ன்னு ஒரு போட்டோ).

சிங்கப்பூரை விட, அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகம். அதனாலதான்.. என்னால் உடனே முடிவெடுக்க முடிஞ்சது. நானும் எப்பவாவது சாப்பிட்டு.. அப்புறம் முழுசா நிறுத்தியிருக்கேன். உங்களுக்கும்... அந்த moment வரலாம். :)

ecoli - பிரச்சனையில் இறந்த குழந்தைகள் எல்லோரும்.. இப்படி ஹைடெக் கம்பெனிகளின் ப்ராடக்டை வாங்கி, சமைத்து சாப்பிட்டவங்கதான். அது மெக்டொனாட்ஸ் சாப்பாடா இருக்கனும்னு அவசியம் இல்லை.

சூப்பர் மார்க்கெட்டில்.. நீங்க ‘தரம்’ன்னோ.. எப்பவாவதுதானே=ன்னு நினைக்கும் ஒரு பொருளோ கூட.. இந்த e-coli யை வச்சிருக்கலாம்.

ஒரே வழி... ‘உழவர் சந்தை’ மாதிரி இடங்களில்.. விவசாயிகளிடம் இருந்தே நேரடியா விலைக்கு வாங்கி சாப்பிடுறதுதான்.

கண்டிப்பா விலை அதிகமாதான் இருக்கும். அரசாங்கங்கள் கண் விழிக்கும் வரை.. வேற வழியில்லை.

குண்டா இருக்கும் மக்களில்.. அமெரிக்கா முதலிடம், இங்கிலாந்து இரண்டு (நம்பரில்).

இந்த லிங்க் பாருங்க.
http://www.epidemiologic.org/2007/02/most-overweight-countries-in-world.html

இதில்.. மக்கள் தொகை பர்சண்டேஜில்.. நம்பர்ஸ் இருக்கு. இருந்தாலும்.. அதிலேயே.. எத்தனை ஐரோப்பிய நாடுகள் இருக்கு பாருங்க.

=---

@நாஸியா : கஷ்டம்தாங்க. இதையெல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கனு தெரிஞ்சா.. சாப்பிட முடியாது. இருந்தாலும்.. நம்ம உயிர் பிரச்சனை. ஈஸியா எடுத்துக்கவும் முடியலை! :( :(

---

@சரவணக்குமார் : ரொம்ப நன்றிங்க சரவணன். :) :)

pappu said... January 31, 2010 1:07 PM

arivu kanna? sarithaan...k, gud nite.... thoookam varudu...

microthambi said... February 1, 2010 4:06 AM

பாலா,
தங்களுடைய இந்த பதிவு சமூகப் பிறழ்தலுக்கு எதிரானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பாக்டேரியாக்களைப் பார்த்து மனிதன் இப்போது நீங்கள் சொல்ல வரும் அளவுக்கு பயப்பட தேவையில்லை என்பது என் கருத்து.அதிலும் E.coli நம் எல்லோர் குடலிலும் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு bacteria. Do not underestimate the power of microbes என்று நாங்கள் சொல்லிக்கொண்டாலும் இப்போதைக்கு man is on top. நம் உடலின் immunity குறைந்து விட்டாலோ அல்லது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கோ E.coli நிச்சய பாதிப்பை ஏற்படுத்தும்.மற்றபடி அதிகம் பயப்பட தேவையில்லை.இது ஒரு புறம் இருக்க food ஐ நீங்கள் சொல்லும் KFC,McD வகையறாக்கள் marketing செய்யும் விதம், அந்த சூழல் இளைஞர்களை கவர்கிறது. முதன்மை பாதிப்பு அதன் கலோரி மதிப்பாலும் கொழுப்பு அளவாலும் தானே தவிர மற்றவற்றால் அல்ல (அவை மனிதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்டு போர் கிருமிகளாக மாற்றப்பட்டால் ஒழிய) என்று சொல்லலாம். Please correct me if I am wrong.

ஹாலிவுட் பாலா said... February 2, 2010 12:32 AM

தல.. உடனே பதில் போடமுடியலை சாரி!.

நம்ம உடம்பில் இல்லாத நோய்க்கிருமியே கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். e-coli எல்லாயிடத்திலும் இருப்பது உண்மைதான். ஆனா.. அதிலுள்ள வேரியேஷன் தானே பிரச்சனை. எல்லா e-coli-யும் ஹார்ம்லஸ் கிடையாதே??

வருஷத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1700 பேர் இறக்கறாங்களாம். அப்படின்னா.. இது இந்தியாவில் எத்தனையா இருக்கும்? எத்தனை மறைக்கப் பட்டிருக்கும்?

1-3 வயது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னா... அதை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதுன்னு.. ஏன் யாரும் சொல்லலை? immunity குறைவா இருக்கும் ஒரு 5 வயது குழந்தை இறந்தால் பிரச்சனை இல்லையா?? சத்தியமா.. இந்தப் படம் பார்க்கும் முன்னாடி வரைக்கும்.. இத்தனை விசயம் தெரியாம.. என் குழந்தைக்கும் இதையே வாங்கி கொடுத்திருக்கேன்.

நீங்க சொல்வது மாதிரி... இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதுன்னா.. அட்லீஸ்ட் குழந்தைகளையாவது காப்பாத்தலாமே? அப்படி காப்பாத்த முடியாத வரைக்கும்.. man is on top-ன்னு ஒப்புக் கொள்ள முடியுமா??

படத்திலும் பதிவிலும் e-coli ஒரேயொரு மேட்டர் தானுங்களே தல. படம் நம்மோட உணவு (McDonalds, KFC மட்டுமில்லாம) எப்படி தயாரிக்கப் பட்டு.. நம்மை வந்து சேருதுன்னுதான் சொல்லுது. e-coli... ஃபினிஷிங் கார்ட்.

எதுவும் தப்பிருக்குங்களா???

ரங்கன் said... February 19, 2010 7:38 AM

KFC பத்தி எனக்கு ஒரு வருஷம் முன்னாடியே உங்க நாட்டு நண்பர் உஷார் பண்ணிட்டார்..எங்க சொந்தகார பயலுக கிட்டயும் போட்டு வெச்சிருக்கேன்..சீக்கிரம் சாகணுமா? உடனே அங்க போய் தின்னுனு..

இந்த படமும் நான் பார்த்தாச்சே..வாந்தி மிஸ்ஸிங்..!!

நல்ல டாக்குமெண்டரி.. !! கலக்குங்க..!!

வஜ்ரா said... March 3, 2010 8:16 AM

The informant!(2009) படத்தைப் பார்க்கவும்.

கார்பரேட் கிரைம் பற்றிய படம். டாகுமெண்டரி இல்லை. உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட படம்.

பிரசன்னா இராசன் said... March 15, 2010 4:17 AM

ரொம்பவே லேட்டான ரெஸ்பான்ஸ். ஆனாலும் பதில் போட வேண்டிய கட்டாயம். 'சூப்பர் சைஸ் மீ' டாகுவை என் சில நண்பர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன் காட்ட, அன்றிலிருந்து அவர்கள் மெக்.டி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. அமேரிக்கா வந்த புதிதில் என் நண்பர்கள் K.F.க சென்று வயிறு பேதியாகி போனதில் அந்த பக்கமும் போவதில்லை. நீங்கள் வெறும் பாஸ்ட் புட்டை பற்றி மட்டுமே சொல்லி இருக்கீர்கள். அதையும் தாண்டி இந்த 'வால்மார்ட்'னு ஒன்னு இருக்கே, அது விக்கிற பொருளை எல்லாம் என்னனு சொல்றது. எது எப்படியோ வேதாத்திரி மகரிஷி அவர்கள் பக்கம் போனதில் இருந்து
நான் சைவ பட்சினி ஆகி ஒரு 10 வருடங்கள் ஓடி விட்டன...

tpvijay said... June 24, 2010 11:24 AM

Hi,

It is nice to hear your feelings...It is well to create awareness....It is great to blame some companies....Excellent to write punch dialogs...

But...

what is your contribution to stop such things do no happen?
Are you not eating/drinking these? (including coke/pepsi)
Did you produce quality food for you and others?

If the answers are blank....think....think... think,,,,

What was your father/grand parents or great grand parents....I am sure they might have been producing quality food for them and others.

Then think again....and see what you are doing at there(USA)?.

With Regards,

TPV

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil