கிட்டத்தட்ட 4 வருட வனவாசம் முடிந்து, கிங்காங் படத்துக்குப் பிறகு பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தை பார்க்கும் வாய்ப்பு. சத்தமேயில்லாம... கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடி (லிமிடட்), ஒரு வழியாக போன வாரம் வைட் ரிலீஸ் கிடைக்க.....
மார்க் வாபெர்கின், சந்தோஷமான குடும்பம். இரண்டு பெண் குழந்தைகளில்... ஒரு பெண்ணை, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவன் கொலை செய்து... அவள் பிணத்தை மறைத்து விட..., மொத்தக் குடும்பமும் அவளை தேடிக்கொண்டிருக்கும் போது..,
... பூமிக்கும் - சொர்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் இருந்து கொண்டு, தன் குடும்பத்தையும், கொலை செய்தவனையும்... இந்தப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மிச்சம் மீதியெல்லாம்.... படத்தில்!!!
“அடடே.... நாம படமெடுத்து ரொம்ப நாள் ஆய்டுச்சே. ஏற்கனவே போனப் படத்தை.. எல்லோரும் குத்திக் கிழிச்சிட்டாங்க. ‘லார்ட் ஆஃப் த ரிங் : ரிடர்ன் ஆஃப் த கிங்’ படத்துக்கப்புறம் ஒரு உருப்படியான படத்தைக் கூட எடுக்கலைன்னு கம்பெய்ண்ட். டைரக்ஷன் மறக்காம இருக்கான்னு செக் பண்ணலாம்...”-னு
..நினைச்சிகிட்டே...... பீட்டர் இந்தப் படத்தை எடுத்திருப்பார் போல. கொடுமைடா சாமி!!! இந்தக் கருமத்தை லிமிடடாவே வச்சித் தொலைஞ்சிருக்கலாம். ‘வைடில்’ போட்டு நம்ம உயிரை வாங்கிட்டாங்க.
போன வருட சிறந்த மொக்கையா நான் நினைச்சது, Mall Cop, A Christmas Carol, New Moon, Couples Retreat மாதிரி படங்களைத்தான். அதெல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடுச்சிங்க இந்தக் காவியம். இத்தனை மட்டமா ஒரு படத்தை, ஒரு உலகப் புகழ்கிட்ட இருந்து எதிர் பார்க்கலை.
WETA Digital, அவதார் படத்துக்கு க்ராஃபிக் பண்ணும் போது, எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் எல்லாம் அதில் வேலை பார்த்தப்ப, மிச்சம் மீதியை கவனிக்க.... கொஞ்சம் அப்ரண்டீஸ்களை வேலைக்கு எடுத்திருப்பாங்க போலயிருக்கு.
“வெட்டியாதானே உட்கார்ந்திருக்க... இந்த படத்துக்கு க்ராஃபிக் பண்ணு”-ன்னு நம்மாளு
இந்த லட்சணத்தில், இதுக்கு 65 மில்லியன் செலவாம். வெளங்கும். போங்கய்யா.. போய்... இந்த காசை.. எதுனா அனாதை ஆஸ்ரமத்துக்கு தானம் பண்ணுங்க. போகும் போது என்னத்தை கொண்டு போகப் போறீங்க?!
(நான் இப்படி எழுதினனாலதான்.. அமெரிக்காவில் முழுக்க இந்தப் படம் ஊத்திக்கப் போகுது..., புது முயற்சிகளை வரவேற்போம் -ன்னு யாராவது எதிர் பதிவு எழுதறீங்களா.. ப்ளீஸ்!!)
The Lovely Bones = Fractured Bones

40 தியேட்டர் கமெண்ட்ஸ்:
கிங்காங்கும் அடி சருக்கும் போல ?
ha ha ha ha ha (அவ்ளோதான்)
தல நீங்க சொன்னதுக்கு எதிரா பேச முடியுமா ?
இம்மாதிரியான புது முயற்சிகளை வரவேற்காவிட்டால்..ஒரு தமிழன் எப்படி ஒரு அமெரிக்கனை பாராட்டாமல் விட்டுவிட்டால்.. அவ்வளவுதான்.. எப்படி இம்மாதிரி முயற்சிகள் வருவது..:)
பாலா இம்மாதிரியான புது முயற்சிகளை இவர் செய்யாமல் யார் செய்வது.. புது சிஜி ஆட்களை எப்படி உருவாக்குவது..? ஒரு தமிழனே ஒரு அமெரிக்கனை பாராட்டாவிட்டால் எப்படி அமெரிக்க சினிமா உய்க்கும்..?:)
நேத்து தான் நான் Avatar(3D) பார்தேன்..நல்ல அனுபவம்..
ஆனா இண்டர்வல் விடாம 3 hours உக்கார வச்சி மொக்கை போட்டுட்டானுங்க..:)
(நான் இப்படி எழுதினனாலதான்.. அமெரிக்காவில் முழுக்க இந்தப் படம் ஊத்திக்கப் போகுது..., புது முயற்சிகளை வரவேற்போம் -ன்னு யாராவது எதிர் பதிவு எழுதறீங்களா.. ப்ளீஸ்!!)
:)))
கிண்டல் ரொம்பதான் ஆயிருச்சு!!!
போங்கய்யா.. போய்... இந்த காசை.. எதுனா அனாதை ஆஸ்ரமத்துக்கு தானம் பண்ணுங்க. போகும் போது என்னத்தை கொண்டு போகப் போறீங்க?!//
தல விளக்கமாத்து கட்டை சொன்னதுக்கெல்லாம் போய் நாம் திருந்தலாமா?அதே அட்வைஸ் ரிபீட் ஆவுதே?
===========
தல சீரியஸ் மேன் எழுதாம இப்புடி ஒரு உப்புமா படத்துக்கு போயி?டூமச்,இருந்தும் ஓட்டுக்கள் போட்டுட்டேன்.:)
வாழ்க உங்க தியாகம்
அடப்பாவி பீட்டர் ஜாக்ஸா . . உன்ன ரொம்ப நம்பிருந்தோமே . .இப்புடி கவுத்திட்டியே சாமி . . .
செரி உடுங்க பாலா . .இனிமே ஜாக்சன ரிஜெக்ட் பண்ணிபுட்டு, வேற யாரையாவது நம்ப ஆரம்பிப்போம் . .ஜாக்சன் மண்ட கொஞ்சம் மரத்துருச்சு போல .(அவரு ப்ரெயின் டெட் ஆயிட்டாரு போலயே) . . இது அவரோட பிரேக்கிங் பாய்ண்டா . ..ஒருவேளை WETA சீனியருங்க அவதார் முடிஞ்சவுடனே லாங் வெகேஷன்ல போயிட்டானுங்களோ. .
சரி இனி நோலன் தான் கதி . . :-) (யாரையாவது இப்புடி பாலோ பண்ணலேன்னா நமக்குத் தூக்கம் வராது பாஸு . . ஹீ ஹீ ) . ..
இந்த நாவலை படிச்சிருக்கேன். படமா எடுத்து மொக்க போட்டுட்டாங்க போலயே..
ஆனா இப்பிடி வர்ற படங்களை நீங்களே ஊக்குவிக்கலைன்னா, ஹாலிவுட்ல நல்ல படம் வர்றதுக்கு வாய்ப்பே இல்லாம போயிடுமே? நீங்க இப்பிடி சொல்லியிருக்கலாமா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க (சொல்லிட்டேன்)
//“அடடே.... நாம படமெடுத்து ரொம்ப நாள் ஆய்டுச்சே. ஏற்கனவே போனப் படத்தை.. எல்லோரும் குத்திக் கிழிச்சிட்டாங்க. ‘லார்ட் ஆஃப் த ரிங் : ரிடர்ன் ஆஃப் த கிங்’ படத்துக்கப்புறம் ஒரு உருப்படியான படத்தைக் கூட எடுக்கலைன்னு கம்பெய்ண்ட். டைரக்ஷன் மறக்காம இருக்கான்னு செக் பண்ணலாம்...”//
ஓவர் நக்கல் உங்களுக்கு.
//(நான் இப்படி எழுதினனாலதான்.. அமெரிக்காவில் முழுக்க இந்தப் படம் ஊத்திக்கப் போகுது..., புது முயற்சிகளை வரவேற்போம் -ன்னு யாராவது எதிர் பதிவு எழுதறீங்களா.. ப்ளீஸ்!!)//
யாராவது சிக்கிரம் இவரை ரவுடின்னு ஏத்துக்குங்கப்பா, இல்லைனா இன்னும் என்ன என்ன கேக்கப் போறாரோ மனுசன்.
//‘பொறுமையின் நரம்பு’ எதுன்னு தெரியனும்னா... இந்தப் படத்தைப் பார்க்கலாம்.//
ஹா..ஹா...
முதலில் நான் திரைவிமர்சன பாசிசத்தை எதிர்க்கிறேன். அதிலும் எனக்கு பிடித்த ஒரு தமிழனின் பாடலை ஆங்கிலத்தில் போட்டு தரணியெல்லாம் பேர் வாங்கி தந்த couples retreat மொக்கை என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இந்தியதமிழ்அமெரிக்க ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தை கண்டித்த அதே நேரத்தில், வடமொழியோடு பெயர் வைத்திருக்கும் பாலா அவர்கள்...
யார்ப்பா மைக்க புடுங்கினது...
(தலைவரே ஆட்சி புட்டுகிச்சாம்)
அன்பு அண்ணன் ஹாலிவுட் பாலா வாழ்க..:)
மீண்டும் ஒரு முறை எங்களுக்காக தியாகமா? தல...எங்களுக்கு ஒரே அழுவாச்சியா வருது. எவ்வளவு மொக்க படம்தான் எங்களுக்காக தாங்கிட்டு பார்ப்பீங்க?
இந்த லட்சணத்தில், இதுக்கு 65 மில்லியன் செலவாம். வெளங்கும். போங்கய்யா.. போய்... இந்த காசை.. எதுனா அனாதை ஆஸ்ரமத்துக்கு தானம் பண்ணுங்க. போகும் போது என்னத்தை கொண்டு போகப் போறீங்க?! // :D
@சரவணன் : இப்படியே இன்னும் ரெண்டு படமெடுத்தா.. குரங்கா கூட மதிக்க மாட்டாங்க.
--
@அண்ணாமலையான் : :) :)
--
@ராமசாமி : இங்க பாருப்பா...!!! இப்படி சொல்லியே.... என்னை ரவுடியா ஏத்துக்காம.. கைப்புள்ளயாவே வச்சிடுறீங்களே. :) :)
--
@கேபிள் : ஹைய்யோ... சங்கர். உங்க ‘ஆ.ஓ’ பதிவில்.. வந்த பின்னூட்ட ஜோக்கை எல்லாம் படிச்சப்பதான் இந்த கடுப்பு. இப்படியே.. எழுதி.. ஹாலிவுட்டை.. ‘உய்ய’ வைக்க வேணாம்னு பார்க்கிறேன்.! :)
--
@வினோத் : உங்களை.. லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் படத்தின் எக்ஸ்டண்டட் வெர்சனை பார்க்க விடணும். நான் மூணு படத்தையும்.. அந்த வெர்ஷனில்.. கேப் கொடுக்காமல் பார்த்தேன் (ஒவ்வொரு படமும்.. 3-4.30 மணி நேரம்).
---
@கல்ஃப் : ரவுடி... ரவுடி...!!! :)
---
@கார்த்திக்கேயன் : தல..!! அதில் இருக்கற ஜோக் புரியலையா?? :) :( அவங்க கமெண்டை எல்லாம் சீரியசாவே எடுத்துக்காதீங்க. அதெல்லாம். சரி.. நீங்க எனக்கு முதன்முதலா போட்ட கமெண்ட் எதுன்னு தெரியுமா???? :) :)
சீரியஸ் மேன் பார்த்தேங்க. எழுதறதுக்கு.. மூட் செட்டாகலை. திரும்ப ஒருமுறை பார்க்கலாம்னு இருக்கேன். ரொம்ப பேருக்கு படம் பிடிக்காதுன்னு நினைக்கிறேன்.
---
@கருந்தேள் : அடுத்து.. டின் டின். அது எப்படி இருக்கப் போகுதோ?! மஹா மட்டமான க்ராஃபிக்ஸ்ங்க.
நான் இப்படி ஃபாலோ பண்ணுறதெல்லாம் இல்லை. எல்லார் படத்தையும் பார்த்துடுறது.
--
@முகிலன் : தல... சிறுகதையெல்லாம் எழுதி கலக்குறீங்க. இப்படி பின்னூட்டம் போடுறதுக்குப் பதிலா.. ஒரு பதிவை எழுதுனீங்கன்னா... எனக்குப் பெருமையா இருக்கும்! :) :)
--
@சுப : நீங்களாவது எழுதுங்க சுப!! எம்புட்டு செலவானாலும் பரவாயில்லை! :) :)
--
@சை.கோ.ப : எம் துன்பத்தைக் கண்டு நகைப்பீரோ? :) :) :)
@பலா : ஹா.. ஹா!!!
பதிவா எழுதி.. என்னை பெருமை படுத்தி.. ரவுடியா ஏத்துக்கங்க பலா. இப்படி பின்னூட்டத்தில் எழுதி.. எழுதி என் மனசை புண்படுத்தாதீங்க! :)
--
@விஜய் : உங்களுக்காக எதையும் தாங்குவான் இந்த பாலா. இதெல்லாம் ஜுஜுபி. நாளைக்கு மெல் கிப்ஸன் படம் போலாமா ன்னு யோசனை. படம் விளங்காதுன்னு தெரிஞ்சும் இதை யோசிக்கிறேன்னா பாருங்க! :)
--
@மின்னிக்ஸ் : :A :B :C :D :) :) :)
தல சும்மா தான் கேட்டேன்,இதுங்களுக்கு எல்லாம் போய் ?
தல நான் உங்களுக்கு முதலில் போட்ட கமெண்ட் மெமெண்டோ வில் தான்னு நம்பறேன்.அது போட்டு 8மாசத்துக்கு மேல் இருக்குமே?அதுக்கு என்ன இப்போ தல?எதாவது விருது தரப்போறீஙளா?
தல அப்போ சீரியஸ் மேன் எல்லோருக்கு பிடிக்காதா?
சரி விடுங்க இங்க டோரண்டாவது ரிலீசாவட்டும் பாத்துடறேன்.
WETA Digital, அவதார் படத்துக்கு க்ராஃபிக் பண்ணும் போது, எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் எல்லாம் அதில் வேலை பார்த்தப்ப, மிச்சம் மீதியை கவனிக்க.... கொஞ்சம் அப்ரண்டீஸ்களை வேலைக்கு எடுத்திருப்பாங்க போலயிருக்கு.
ஹா.. ஹா.. ஹா..
http://www.hollywoodbala.com/2009/03/memento-2000.html
தல இதுதான் அந்த கமெண்ட் அதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவேயில்லை,அதை இப்போ தான் பார்த்தேன்.:)
@கார்த்திக்கேயன் : வாவ்...! இவ்வளவு நினைவு வச்சிருக்கீங்களா ??? :)
இல்லை.... எல்லா பதிவையும்... சரி பண்ணும்போது, போன வாரம்தான் உங்க கமெண்டை படிச்சேன்.
நீங்க ஜூலை 2, கமெண்ட் போட்டிருக்கீங்க. நான் புது வேலையில் சேர்ந்த இரண்டாவது நாள். அதுக்கப்புறம்... 45 நாள் தொடர்ந்து வேலை பார்த்தேன். அப்ப இதை கவனிக்காம விட்டுட்டேன்.
--
@திவ்யாஹரி : :) :)
கார்த்திக்கேயன்.. படம் டோரண்டில் அவைலபிள். ப்ளூரே வெர்ஷனே இருக்கு.
ஆங்கிலத்தில் வந்த ஆ... ஓ... ன்னு ஒரு வரி எழுதி இருந்தாலே போதுமே... நாங்க புரிஞ்சிபோம்...
:)
//பூமிக்கும் - சொர்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் இருந்து கொண்டு,//
//இதுக்கு 65 மில்லியன் செலவாம்//
தயாரிப்பாளர் இப்ப தெருவுக்கும் வீட்டுக்கும் நடுவுல நிப்பாறுன்னு நினைகிறேன்...
:)
நான் இன்னும் தமிழில் வந்த லவ்லி போன்ஸை பார்க்கலையே எறும்பு. அதனால அதை கம்பேர் பண்ண முடியாதே! :) :)
//தயாரிப்பாளர் இப்ப தெருவுக்கும் வீட்டுக்கும் நடுவுல நிப்பாறுன்னு நினைகிறேன்...//
ஹா.. ஹா.. ஹா சூப்பர்! :))
ஆனா.. ஹாலிவுட் மார்க்கெட்டில்... போட்ட காசையாவது.. குருவி சேர்க்கற மாதிரி சேர்த்துடுவாங்க பாருங்க.
no same blood.......
tamil la vittalachariya onnu ithe madiriyana kadhaiyil vanthu irukku nnu ninaikkiren.....
oru velai novel eluthinavar copy adichuttaraa???
தல கலக்கல்...
அய்யயோ..மீண்டும் ஆப்பு வாங்கியாச்சா....பாவம் தல நீங்க ;))
MEL GIBSON படமாவது நல்லாயிருக்குமா!! ;)
தல ,ரவுடியா form ஆயிட்டிங்க போலிருக்கே!
மீதி உள்ள கொஞ்ச பேரும் ஒத்துக்கற வரைக்கும் விட்டுடாதிங்க.
இன்னுமொரு மொக்கை படத்திலிருந்து எங்களை காப்பாற்றிய ஹாலிவுட் தியாக செம்மல் வாழ்க!
bala....ethaavatu parkura maathiri padam irunthaa eluthunga.....intha vaaram onnum download pannala.... :(
//இந்தக் கருமத்தை லிமிடடாவே வச்சித் தொலைஞ்சிருக்கலாம். ‘வைடில்’ போட்டு நம்ம உயிரை வாங்கிட்டாங்க.//
புரியல..தனியா மெயிலில் விளக்கவும்.வர வர நீங்களும் கேபிள் மாதிரி எல்லா படத்தையும் பாத்து, எழுதி......முடியல...இன்றிலிருந்து நீங்கள் ‘வெள்ளைக்கொடி வேந்தன்’ என்று அழைக்கப்படுவீர்கள்...:)
பல திரைப்பட ஜாம்பவான் சொன்னது தான் இங்க சொல்ல ஆசைப்டுகின்றேன்.
தோற்ற படம் என்பது எதுவுமே இல்லை. வணிகம் சார்ந்த விசயங்களின் அளவுகோல் வேண்டுமானால் டப்பாவா இல்லை பீப்பாவா?
தோற்ற படங்கள் அதிகம் பார்க்கின்றேன் அதனாலே?
தமிழில் புது முயற்சிகள் வந்தால்தான் நங்கள் திட்டுவோம் ,ஆங்கிலத்தில் வந்தால் அதிசயிப்போம் .
//தல நீங்க சொன்னதுக்கு எதிரா பேச முடியுமா ?//
ரிப்பீட்டே...
தல வசமா மாட்டிக்கிச்சிடோய்...
தலைவா... போனவாரம் தி பாக்ஸ் பார்த்து வாழ்க்கை வெறுத்துட்டேன்..ஒரு வார்த்தை ஏதாச்சும் மூலைல அது மொக்கைப்படம்னு சொல்லியிருந்தா நானும் தப்பிச்சுருந்துருப்பேன்... எனக்கு நல்லா வேணும்...
//நான் இப்படி எழுதினனாலதான்.. அமெரிக்காவில் முழுக்க இந்தப் படம் ஊத்திக்கப் போகுது..., புது முயற்சிகளை வரவேற்போம் -ன்னு யாராவது எதிர் பதிவு எழுதறீங்களா.. ப்ளீஸ்!!)//
சார் அருமை சார் எப்பிடி இப்பிடி எல்லாம் திங்கு பண்ணிறீங்கோ
//“அடடே.... நாம படமெடுத்து ரொம்ப நாள் ஆய்டுச்சே. ஏற்கனவே போனப் படத்தை.. எல்லோரும் குத்திக் கிழிச்சிட்டாங்க. ‘லார்ட் ஆஃப் த ரிங் : ரிடர்ன் ஆஃப் த கிங்’ படத்துக்கப்புறம் ஒரு உருப்படியான படத்தைக் கூட எடுக்கலைன்னு //
அதுசரி கிங்கொங் மொக்கையா...
//பூமிக்கும் - சொர்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் இருந்து கொண்டு, தன் குடும்பத்தையும், கொலை செய்தவனையும்... இந்தப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.//
சும்மா1 பாத்திகொண்டுதானிருக்கிறாளா பழிவாங்கியிருயந்தா படம் நல்லாருந்திருக்கும் இதுக்குத்தான் சொல்லுவது பீட்டர் என்னமாதிரி ஆளுகளை அஸிஸ்டன்டா வச்சுக்கணும்ன்னு...
present sir
கமெண்ட் போடுற மூடில்ல. போடாம போகக் கூடாதுல. மத்தபடி ரொம்ப கோபமா இருக்கேன். யாரு எதுவும் கேக்காதீங்க :)
@டம்பி : தல.. இது அப்படியே விட்டலாச்சாரியார்ன்னு சொல்லிட முடியாது. கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் வச்சிருக்காங்க. :) :)
--
@சங்கவி : நன்றிங்க :)
--
@கோபி : மெல் கிப்ஸன் படம் அடுத்த வாரம்தான் இங்க வருதாம் கோபி. இந்த வாரமே இங்க வரும்னு சொன்னாங்க. இல்லை! :( :(
---
@கைலாஷ் : அடப் போங்க தல! நாமளே சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான் போல. நான் கைப்புள்ள.. இல்ல.. இல்ல.. இல்ல.......!!!!
----
@மயில் : இது ஒரு மேட்டரும் இல்லீங்க. லிமிடட்-னா நியூயார்க்/கலிஃபோர்னியாவில் மட்டும்தான் ரிலீஸ் ஆகும். வைட் ரிலீஸ்ங்கறது.. அமெரிக்கா முழுக்க வெளி வர்றதுதான்.
வெள்ளைக் கொடி வேந்தனா.. . அதெல்லாம் வேணாம்.!! நானும் ரவுடின்னு எல்லாரும் சொன்னா போதும்! :) :)
--
@ ஜோதிஜி : உண்மைதாங்க. ஆனா சினிமாங்கறது.. வணிகம் சார்ந்த தொழில் மட்டும்தானே? இங்க இண்டிபெண்டண்ட் தயாரிப்பாளர்கள் மட்டும்தான்.. இதைத் தாண்டி யோசிப்பாங்க. ஆனா 90% கையை கடிச்சிடும். நானும் தோற்றப் படங்களை நிறைய பார்க்கிறேன்! :)
---
@மைதீன் : இப்படியெல்லாம் சொல்லி.. என் நினைப்பில் மண்ணை போடாதீங்க தல! :)
---
@நாஞ்சில் : நீங்க படிக்கலையா நாஞ்சில்..? அந்த படம் வந்தப்பவே.. நான் ஒரு பதிவில் சொல்லியிருந்தேனே...!!
உங்க ப்லாகில் அந்த கமெண்டை போஸ்ட் பண்ண நினைச்சப்ப.. ஓப்பன் ஆகலை. அப்புறம் திரும்ப கமெண்ட் போட மறந்துட்டேன்.
----
@பாலவாசகன் : கிங்காங் வசூல் ரீதியா பெரிய வெற்றிதான். ஆனா.. இங்கே யாருக்கும் பிடிக்கலைங்கறது மட்டும் உறுதி. க்ராஃபிக் எல்லாம் அருமையா பண்ணியிருந்தாலும், டைரக்டரா.. பீட்டர் சறுக்கினது அதில்தான். (லார்ட் ஆஃப் த ரிங்கை வைத்து கம்பேர் செய்வதால்).
அவங்க பழிவாங்கறதில்லை. அதுதான் படத்தின் வித்தியாசம் + போர்!!
---
@கிஷோர் ; நெக்ஸ்ட்.
@பப்பு : என்னாச்சி பப்பு??? கேட்கக் கூடாதுன்னு சொன்னாதானே.. அதை சரியா செய்வோம்! :)
அதை ஏன் கேக்குறீங்க? இருந்தாலும் சொல்லுறேன்... இந்த கேள்வி கேட்டதுக்கும் கோவமா இருக்கேங்க. நாட்டுல மனுஷனுக்கு மரியாதையே இல்ல...
Post a Comment / கிஷோர் கமெண்ட்
ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!