புது வரவு - நம்பிக்கை

1/20/2010

Saw I - VI [18+] Part 3



மார்க் ஹாஃப்மேன் & டேனியல் ரிக் (Rigg)-கின்,  [பெண்] பார்ட்னர் ஆலிஸன் கெல்லி-யை, மார்க் ஹாஃப்மேனும், அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள். பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை உருவாக்கியிருப்பாள். ஆலிஸன் பூட்டைத் திறந்தும், அவளின் உடல் பிய்த்தெறியப் படுகிறது.



ஆஃபீஸர் ரிக் (Rigg), எதிலும் கொஞ்சம் அவசரக் குடுக்கை. ஜிக்ஸாவின் விளையாட்டுக்கள் எங்கிருந்து எப்படித் தாக்கும் என்று தெரியாவிட்டாலும்... சில சமயம் எந்த பாதுகாப்பும் இல்லாமல்... சில கதவுகளை திறந்து கொண்டு உள்ளே போய்விடுவார். தன்னால் முடிந்த வரைக்கும்... அத்தனை உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்.

முதல் பாகத்தில் இறந்த ராப்பிச்சை, ச்சைனீஸ், ஆறு மாதங்களாக காணாமல் போன எரிக் மேத்திவ்ஸ், இப்பொழுது  ஆலிஸன் என ஒவ்வொருவராக.. அவரைச் சுற்றியிருப்பவர்கள் இறக்க.., யாரையும் காப்பாற்ற முடியாத வருத்தத்தில் இருக்கும் போது, அவருக்கான டெஸ்ட் ஆரம்பிக்கிறது.


உருகிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஐஸ் பாரில், இத்தனை நாட்களாக காணாமல் போன எரிக் மேத்தீவ்ஸ் ஒரு புறமும், மார்க் ஹாஃப்மேன் இன்னொரு புறமும் கட்டி வைக்கப் பட்டுள்ளனர். Saw II -ல் நடக்கும் கேமில் அமேண்டா பங்கெடுப்பது போல, இந்த டெஸ்டில் மார்க் ஹாஃப்மேன்

இந்த டெஸ்டின் பகடைக் காய்கள்..... 01. ஒரு பிம்ப் 02. பெண்களை கட்டி வைத்து போர்னோ எடுக்கும் ஒருவன் 03. தன் மனைவி, குழந்தையை துன்புறுத்தும் ஒருவன் (கீழிருக்கும் படத்தில்) 04. அதை தட்டிக் கேட்காத மனைவி 04. இவர்களுக்காகவும், ஜிக்ஸாவின் மனைவி ஜில் டக்-கிறாகவும் வாதாடும் ஒரு வக்கீல் ஆர்ட் பேங்க் (இவருடைய வாய்தான் தைக்கப் பட்டிருக்கும். இன்னொரு கண்ணிமை தைக்கப் பட்ட ஒருவனோடு சண்டையிட்டு அவனை கொல்வார்).

இந்த வக்கீல் மட்டும், எரிக் மேத்திவ்ஸ் & மார்க் கட்டிப் போடப் பட்டிருக்கும் இடத்திற்கு வருகிறார். அவரின் டெஸ்ட், 90 நிமிடம் கழிந்தால் மட்டும்...., மார்க்கையும், எரிக்கையும் விடுதலை செய்யலாம். இல்லையெனில் அவரின் பின் கழுத்து ஓட்டை போடப் படும். 90 நிமிடத்திற்குள் கதவு திறக்கப் பட்டால், எரிக்கின் தலை சுக்கு நூறாகும்.

ரிக்கிற்கு மொத்தம் 90 நிமிடம் கொடுக்கப் படுகிறது. அதற்குள்.. எரிக் மேத்திவ்ஸை காப்பாற்ற வேண்டும். நடுவில் முடிந்தால் இவர்களை காப்பாற்றப் பார் என்பது மாதிரியான ஒரு கட்டளை.

ஆனால் டெஸ்டின் முக்கிய நோக்கம்... இவர்களை காப்பாற்றுவது அல்ல. வேடிக்கை பார்ப்பதும் அல்ல.   இவர்கள் அனைவரும்... தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் முடிவு அவர்கள் கையில். ஆனால் ரிக்.. எல்லோரையும் காப்பாற்ற முயன்றும் முடியாமல் (அந்த போர்னோ பார்ட்டியை தவிர்த்து) வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை.

இதே நேரம்... இன்னும் இரண்டு FBI அதிகாரிகள் கேஸினுள் வருகிறார்கள். ஸ்டார்ம் & பெரஸ். ஜிக்ஸாவிற்கு இவர்கள் மீதும் குறி. ஒரு கட்டத்தில் பெரஸ் படுகாயமடைய, ஸ்டார்ம் மட்டும்... ரிக்கை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.

இப்பொழுது இருவரும் (ரிக் & ஸ்ட்ராம்) ஒரே கட்டிடத்திற்குள்!! ஸ்ட்ராம் வேறு எதுவோ சத்தம் கேட்டு இன்னொரு அறை பக்கமாக செல்ல...., அந்த சத்தம் போட்டது.... போனப் பதிவில், தன் மகனின் மரணத்துக்காக பழி வாங்கத் துடித்த ஜெஃப்.

அந்த நேரத்தில் ஜெஃப், அமேண்டாவையும், ஜானையும் கொன்றிருக்க, ஜானின் இதயத் துடிப்பு நின்றதால் டாக்டர் லின்னும் மரணமடைய, சரியா உள்ளே வரும் ஸ்ட்ராமை, ஜெஃப் சுட முயற்ச்சிக்கும் போது, ஸ்ட்ராம் ஜெஃபை கொல்கிறார்.


கட்டிடத்தின் இன்னொரு பகுதியில்... எந்த யோசனையும் இன்றி... கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரப் பார்க்கும் ரிக்-கை எரிக் மேத்திவ்ஸ் சுட (90 நிமிடத்திற்குள் கதவு திறந்தால், இவர் தலை காலி), அப்படியும் உள்ளே வரும் ரிக், வக்கீலை சுட....,

எரிக்கின் தலை காலி + வக்கீலும் மீண்டும் ரிக்-கால் சுடப் படுகிறார். அதற்குப் பின்தான், டெஸ்டின் உண்மையான நோக்கம் புரிகிறது (இவரின் டெஸ்ட் சும்மாயிருப்பது. விளையாடுவது அல்ல). மார்க் ஹாஃப்மேன் மட்டும்... ரிக்-கை அங்கேயே விட்டுவிட்டு....

கட்டிடத்தின் இன்னொரு பகுதிக்குப் போய்..., FBI ஏஜெண்ட் ஸ்ட்ராம் இருக்கும் கதவை தாழிட்டுவிட்டு சென்று விடுகிறார். (இத்தோடு Saw IV ஓவர்). அங்கிருந்து ஏஜெண்ட் ஸ்ட்ராம்மின் கேம் ஆரம்பிக்கிறது.

அந்த அறையில் உள்ள ஒரு ரகசிய கதவின் மூலமாக இன்னொரு பகுதிக்குச் செல்லும் போது, மார்க் ஹாஃப்மேனால் (?) தாக்கப்பட்டு, தண்ணீர் நிரம்பும் ஒரு கண்ணாடிக் பெட்டிக்குள் மாட்ட வைக்கப் படுகிறார்.

ஆனாலும்.. தன் தொண்டையையில் ஓட்டை போட்டு தப்பிக்க, மார்க் ஹாஃப்மேனுக்கு இப்பொழுது, இவரால்/இதனால் பிரச்சனை!! ஆனாலும்... ஜிக்ஸா இறப்பதற்கு முன், தன்னிடம் கடைசியாக கொடுத்த ஒரு லிஸ்டில் உள்ள சிலரை கடத்துகிறார்.

அதிலுள்ள எல்லோரும்... ஒரு கட்டிடம் எரிக்கப் பட்டு, அதனால்.. எட்டு பேர் பலியான ஒரு சம்பவத்தில் தொடர்புடையவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்கள்.

இவர்களுக்கான டெஸ்டின் முக்கிய குறிக்கோள், இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து.. அத்தனை ட்ராப்பையும் உடைக்க வேண்டும். ஆனால்.. ஒவ்வொரு ட்ராப்பிலும், ஒவ்வொருவராக கொல்லப் பட, கடைசியா இரண்டு பேர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர் (இதை இன்னும் சொல்லலை. ஒரு யூகம்).

இந்த டெஸ்ட் நடக்கும் போது....., மார்க் ஹாஃப்மேன் மீது சந்தேகம் கொள்ளும் ஏஜண்ட் ஸ்ட்ராம்... மார்க்கின் பழைய ரெக்கார்டுகளை சோதிக்கும் போது, மார்க்கின் சகோதரி மரணம், அதற்கான பழிவாங்கல் கொலை (முதல் பதிவு) எல்லாம் தெரிய வருகிறது.

ஆனால் இதே சமயம்.. அவருக்கே தெரியாமல்... அவர்தான் குற்றவாளி என்பது போல, ஸ்ட்ராமின் உயர் அதிகாரி நம்ப வைக்கப் படுகிறார். அதற்கு போலி சாட்சியாக, ஸ்ட்ராமின் செல்ஃபோன் பயன்படுகிறது.

மார்க்கைத் தேடி ஸ்ட்ராம் அந்த கட்டிடத்திற்கு வரும்போது... ஸ்ட்ராம் கொல்லப் பட, மார்க் வெளியே வருகிறார். ஆனால் ஜிக்ஸா அவரையும் விட்டு வைப்பதாக இல்லை.


நாளை கடைசி பாகம்



68 தியேட்டர் கமெண்ட்ஸ்:

pappu said... January 20, 2010 1:14 AM

மீ த பர்ஸ்டா? இன்னைக்காவது?

pappu said... January 20, 2010 1:15 AM

யேய்.... போய் படிச்சிட்டு வர்றேன்.

pappu said... January 20, 2010 1:20 AM

நல்லா சிதறாம எழுதிருக்கீங்களே!

Minnix said... January 20, 2010 1:27 AM

தல, லவ்லி போன்ஸ் பதிவு எழுதுங்க! ;)

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 1:31 AM

@பப்பு : நீங்க இந்த சீரீஸ் பார்த்தீங்களா?? இதுவரைக்கும் சொன்ன மாதிரி நினைவில்லையே (முதல் 1-2 பார்த்ததா சொன்ன நியாபகம் இருக்கு).

@மின்னிக்ஸ் : எழுதிட்டேங்க. ஒரேடியா போஸ்ட் பண்ண வேணாம்னு பார்க்கிறேன்.

நாளைக்கு காலைல பப்ளிஷ் பண்ணிடுறேன்.

கருந்தேள் கண்ணாயிரம் said... January 20, 2010 1:33 AM

அது ஏன் இந்த மாதிரி 'பாகிஸ்தான்' (கட்டிங், அறுப்பு, ரத்தம்) வேலைகள பார்த்தா மனுஷனுக்கு ஒருவித புளகாங்கித உணர்ச்சி வருது... ? ஒருவேளை, நாமெல்லாம் ஆதிகாலத்துல காட்டுவாசியா இருந்ததுனாலேயோ? எனக்கு இந்த மாதிரி படங்கள்னா உசிரு . . ஹீஹீ

pappu said... January 20, 2010 1:40 AM

5 வரைக்கும் பாத்தாச்சு! 6 அடுத்த மாசம் பாக்க போறேன்.

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 1:44 AM

@கருந்தேள் : விளங்கிடும்!!! :) அப்ப போனப் பதிவில் கைலாஷுக்கு சொன்ன மாதிரி, ஒரு ரெண்டு படம் இருக்கு. சீக்கிரம் எழுதிடுவோம்.

@பப்பு : அடுத்த பதிவு ஆறாவது பாகம். வேணும்னா ஸ்கிப் பண்ணிடுங்க.

pappu said... January 20, 2010 1:45 AM

எதுவும் சஸ்பென்ஸ் வச்சிருக்காங்களா?

கருந்தேள் கண்ணாயிரம் said... January 20, 2010 1:51 AM

ஹைய்யா ஜாலி . . !! சீக்கிரம் போடுங்க . . slurp slurp . . . :-) பாஸு .. நீங்க என்ன இரவுப்பறவையா . . போய் தூங்குங்க. . காலைல ஆபீசுக்குப் போயி, ப்ரெஷ்ஷா ப்ளாக் எழுத வேணாமா. . :-) உங்கள் சேவை எங்களுக்குத் தேவை . . அதுனால, தூங்குங்க . .

அண்ணாமலையான் said... January 20, 2010 3:10 AM

எல்லா படமும் (6 வரைக்கும் இருக்கு).. ஆனா பாக்க பயமாவும், அறுவெறுப்பாவும் இருக்கறதால இன்னிய வரைக்கும் முதல் 3 நிமிஷத்துக்கு மேல எந்த படத்தையும் பாத்ததில்ல..

கோபிநாத் said... January 20, 2010 3:27 AM

தல ஓட்டு போட்டாச்சி...பதிவு பிறகு...;))

பின்னோக்கி said... January 20, 2010 3:47 AM

ஏங்க இந்த காலு படத்த கொஞ்சம் உட்ற கூடாதா ?. இப்பத்தான் லன்ச் சாப்டுட்டு வந்தேன் :)

பேநா மூடி said... January 20, 2010 5:37 AM

நல்லா இருக்கு தல..., ஏன் இப்டி ஏகப்பட்ட widgetta போட்டு கந்தரகோலம் பண்ணி வைச்சு இருக்கீங்க....

ஆதவா said... January 20, 2010 5:57 AM

உங்களின் எல்லா பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்திருக்கிறேன். ஆனால் எந்த பின்னூட்டமும் எழுதியதில்லை.

குறிப்பாக, பிக்சர் ஸ்டோரி வெகுவாக விரும்பிப் படித்தேன். ஒரு நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து படிப்பது எவ்வளவு சுவாரஸியமாக இருக்கிறது பாருங்கள்.

அவதார் டெக்னாலஜி குறித்த உங்கள் பதிவு வியக்க வைக்கிறது.

ஸா, ஐந்து பாகங்களையும் பார்த்துவிட்டேன். ஆறாவது இன்னும் பார்க்கவில்லை. அதனால் உங்களது நாளைய பதிவு என்னைக் குழப்பக் கூடும்.

அன்புடன்
ஆதவா

Balavasakan said... January 20, 2010 9:06 AM

பாலா நான் இந்த saw எல்லாம் பாக்க போறதில்ல ஏன்னா அந்தளவுக்கு நேரமில்லிங்கோ.. ஆனாலும் கடமைக்கு உங்க பதிவு வாச்சே ஆகணும் ...இல்லையா
அதுசரி ஏன் இப்ப திடீரென்னு இதயும் பாரு அதயும் பாரு ன்னு இத வச்சியா இங்கபாரு உத பாத்தியா ன்னு மேல கீழ எல்லாம் போட்டு எலக்சன் சுவரொட்டி கணக்கா ஒட்டித்தள்ளிருக்கீங்க....;)
.
.
.
.
.

ஹேய் பாலண்ணே ...சும்மா சொன்னேன்.. எனக்கும் கலாய்க்க தெரியும் ன்னு உங்களுக்கு தெரியவேணாம் அதுதான்

சைவகொத்துப்பரோட்டா said... January 20, 2010 9:07 AM

படிக்கும்போதே கண்ண கட்டுதே, ரொம்ப நன்றி தல.

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 10:19 AM

@பப்பு : ஒரு சஸ்பன்ஸும் கிடையாது. ஒருவேளை அப்படி ஒன்னு இருந்தா... அது ஸ்பாய்ல் ஆக வேணாமேன்னு பார்த்தேன்.

@கருந்தேள் : அதுக்கப்புறம் இன்னொரு படம் பார்த்துட்டு, காலையில் 4.30-க்கு தூங்கப் போனேன்! :)

@அண்ணாமலையான் : அந்த 3 நிமிஷத்தை தாண்டிட்டீங்கன்னா.... எந்த பிரச்சனையும் இல்லாம பார்க்க முடியும். இன்னொரு முறை முயற்சி பண்ணிப்பாருங்க தல.

@கோபி : அண்டர்வே! :)

@பின்னோக்கி : ஹி.. ஹி.. ! எல்லாத்துக்கும் பொதுவா... இந்தப் படம் இருக்கே!! :) இன்னும் ஒரேமுறை. அப்புறம் விட்டுடலாம்.

@பேநா : தூக்கியாச்சி!! ஒரே நாளில் 2 பதிவு போஸ்ட் பண்ணினனால இது யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா எனக்கே.. பிடிக்கலை. கச.. கசன்னு தெரிஞ்சது.

ஹலோ.. அது சொந்தமா நான் கோட் எழுதினது. ரெடிமேட் விட்ஜெட்டெல்லாம் இல்லை! :)

@ஆதவா : ரொம்ப நன்றி ஆதவா!!! இந்த பின்னூட்டத்தில் பப்பு-வுக்கு சொன்ன பதில்தான். நீங்க ஸ்கிப் பண்ணிடுறது நல்லது. படம் பார்த்துட்டு வாங்க!!! :)

@பாலவாசகன் : இப்படித்தான் வேணும்னு சொன்னாங்க. போட்டாச்சி!!!

இப்ப கொஞ்சம் சுவரொட்டியை கிழிச்சாச்சி!! :) இனிமே யாராவது கேட்பாங்கன்னு நினைக்கறீங்க!!! :) :)

@சை.கொ.ப : யு வெல்கம்! :))

kailash,hyderabad said... January 20, 2010 11:09 AM

நாங்க ஒரு தடவ, அதிகமா போன ரெண்டு தடவ saw படங்கள பாத்தப்பவே அன்னைக்கி நைட்டு ஒரே கெட்ட கனவு வெட்டற மாதிரி,அறுக்கிற மாதிரி வருது .ஆனா நீங்க எங்களுக்காக இத்தன தடவ saw படங்கள வரிசையா பாத்து எழுதறது பாத்து கண்ணுல தண்ணி வருது. ( கெட்ட கனவு எது வரலையா தல.?)

இன்னொரு டவுட்டு. இந்த படங்கள பாத்து யாராவது inspiration வந்து கொலை ஏதும் பண்ணாங்களா ?( 100 வது நாள் -பாத்துட்டுதான் ஜெயப்ரகாஷ் 7 கொலை பண்ணதா சொன்னான்.).

இல்ல நெஜமா யாராவது இது மாதிரி மெக்கானிசம் வச்சு கொலை செஞ்சத காப்பியடிச்சி படமா எடுத்துட்டாங்கள ? .(silence of the lambs எடுத்த மாதிரி .)

வினோத்கெளதம் said... January 20, 2010 11:12 AM

இன்னும் இந்த SAWவை விடலையா நீங்க நடத்துங்க..:)

வினோத்கெளதம் said... January 20, 2010 11:13 AM

comment moderation எங்க போச்சு..!!

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 11:15 AM

மரத்துப் போச்சிங்க!! :) :) அந்த ‘பயக்கனவு’ வந்து வருசங்களாய்டுச்சி.

இல்லை. இதுவரைக்கும் மெகானிசக் கொலைகள் நடந்ததா தெரியலை. அதே மாதிரி டெக்னாலஜி கொலைகளும். எவங்க.. அதுக்கெல்லாம் யோசிக்கிறதுன்னு விட்டுட்டாங்க போல! :)

Natural Born Killers மாதிரி... ஜெய்ப்ரகாஷ் டைப் கொலைகள் நிறைய நடந்திருக்குன்னு சொல்லுறாங்க. அதெல்லாம் பட விளம்பரத்துக்கா கூட இருக்கலாம்.

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 11:16 AM

வினோத்.. ஏரியாவுலதான் இருக்கேன். அதான் லிபரேஷன்! :)

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 11:16 AM

நீங்க சண்டை போட மாட்டேன்னு சொல்லுங்க. மாட்ரேஷனையே தூக்கிடலாம். :)

வினோத்கெளதம் said... January 20, 2010 11:24 AM

அன்னிக்கு ஒரு நாள் நடந்த கூத்துக்கு தான் Moderationனா?!..
நான் ஏன் சண்டை போடப்போறேன்..எனக்கு Violence ஆகாது..:)

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 11:29 AM

அதுக்கப்புறம் அந்தப் பிரச்சனை பல ரூபத்தில் வந்துடுச்சி. அடுத்த முறை வரும் வரைக்கும் ரூலை தளர்த்துவோம்.

Lucky Limat லக்கி லிமட் said... January 20, 2010 11:42 AM

தலைவா இந்த படம் எனக்கு புடிக்கல...

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 12:01 PM

எனக்குங்தாங்க. முதல் இரண்டு பாகத்தோடு போச்சு. இது விஜய்க்கான ஸ்பெஷல் பதிவு.

VIJAY said... January 20, 2010 12:26 PM

நடுவில் விட்டால் ஒரேடியா இடைவெளி விழுது. இல்ல என்றால் இது போல கேப் விடாம போட்டு தாக்குறிங்க. சா6 இதுவரை இன்னும் பார்க்கல. டவுன்லோட் பண்ணி ரெடியாக இருக்கு. உங்க பதிவு படித்துட்டுதான் பார்க்கணும் என்று இருக்கேன். பழைய படங்களை வேறு பார்த்து டவுட் எல்லாம் கிளியர் பண்ணனும்.

VIJAY said... January 20, 2010 12:28 PM

///எனக்குங்தாங்க. முதல் இரண்டு பாகத்தோடு போச்சு. இது விஜய்க்கான ஸ்பெஷல் பதிவு.///

நம்ம கூட கருந்தேள் வேற செட் சேர்ந்திருக்கார். உங்களை இது போல படங்கள் பார்க்க வைத்து ஒரு வழி பண்ணிடுவோம்ல.

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 12:42 PM

இந்தப் பதிவை கரெக்ட் பண்ண, நேத்து திரும்பவும் 3-4-5-6 பார்த்தேன். :) :)

கேப் விழுந்தா திரும்பவும் வரிசையா பார்க்கணுங்க. அதுக்கு இப்படி தொடர்ந்து எழுதிடுறது பெட்டர். நினைவிருக்கும் வரைக்குமாவது வரிசையா எழுதிடலாம்.

சீக்கிரம் சைக்கோ மாதிரி அலையப் போறேன்னு நினைக்கிறேன்! :)

pappu said... January 20, 2010 12:55 PM

டொக்.. டொக்... கது திறந்திருதுங்களா?

pappu said... January 20, 2010 12:56 PM

ஐ, ஆமா? ஏய் வெடிய போடுங்கடா!!

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 12:56 PM

ஆமாங்க...! ஹு ஈஸ் இட்?

pappu said... January 20, 2010 1:00 PM

அய்யோ, இப்படி கேள்வி கேட்டா பதிலுக்கு யாருன்னு கேக்காதீங்க. Catch me if u can? பாத்தீங்கல்ல?
Knock.. .knock...
Who is at the door?
............

ஹி... ஹி...

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 1:10 PM

இதென்ன இங்கிலாந்தா.. who is at the door -ன்னு நீட்டி முழக்க? :)

--

அதில்லாம சத்தம் நாக் நாக்-ன்னு கேட்கலையே.. டொக் டொக் தானே! :)

==

கருமம்... ஆஃபீஸில் வேலையில்லைன்னா.. என்னென்ன பண்ணி.. ஒரு 8 மணி நேரத்தை ஓட்ட வேண்டியிருக்கு! :) :)

pappu said... January 20, 2010 2:08 PM

விடுங்க பாஸ்! அரசியல் வாழ்க்கையில் சகஜம் தானே!

கிஷோர் கமெண்ட் பிரச்சனை தீர்ந்ததா? என் கமெண்ட் அடுத்த பக்கத்தில் வைத்து கொஞ்ச நஞ்ச வாசகரையும் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறேன்!

Rafiq Raja said... January 20, 2010 4:07 PM

பாலா, பல நாட்கள் கழித்து உங்கள் தளத்திற்கு வர முடிந்தது... வந்து பார்த்தால் சா புராணம் இன்னும் ஓயவில்லை போலிருக்கே....

அப்பா போதும்பா, அந்த ரத்த களறிகள் மற்றும் எந்திர நூதனங்களை பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் நம்ம மனசும் அப்படி ஆயிடுமோனு பயமே வந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் இனி இந்த படத்தின் அடுத்த பாகத்தை பார்க்க கூடாதுனு நினைச்சுட்டே, வந்தவுடனே பார்த்து தொலைத்து விடுகிறேன்... அப்படி என்ன தான் இந்த முறை விடுகதைகள் போடுவார்களோ என்ற ஆர்வம் தான்.

The Curiosity killed the Cat... ன்னு சும்மாவா சொல்லுவாங்க ;)

Swadesi said... January 20, 2010 4:57 PM

ithu SAW III illai.. SAW IV

ஹாலிவுட் பாலா said... January 20, 2010 5:35 PM

@ரஃபீக் : இன்னும் ஒரேயொரு பார்ட் இருக்குங்க ரஃபீக். அப்பப்ப ஏரியா பக்கம் தலையை காட்டுங்க தல. கல்யாணம் ஆனவுடனே... பழைய நட்பையெல்லாம் மறந்துட கூடாது தெரியுமில்ல? :)

----

@பப்பு : இன்னும் அந்த ‘ஒரு முழக்கயிறு’ பார்சல் பண்ணலையா பப்பு. இங்க பாருங்க அடுத்ததா ஒருத்தர் கிளம்பியிருக்கார்! :) :) :)

---

@Swadesi : பப்பு கிட்ட சொல்லி நீங்கதான் அந்த முழக்கயிறை வாங்கித் தரணும்! :)

Balavasakan said... January 20, 2010 8:33 PM

##என்ன பாலாண்ணே சும்மா சொன்னேன் அதுக்காக உடனே தூக்கிடறதா...

இந்தப் பதிவை கரெக்ட் பண்ண, நேத்து திரும்பவும் 3-4-5-6 பார்த்தேன். :) :)

கேப் விழுந்தா திரும்பவும் வரிசையா பார்க்கணுங்க. அதுக்கு இப்படி தொடர்ந்து எழுதிடுறது பெட்டர். நினைவிருக்கும் வரைக்குமாவது வரிசையா எழுதிடலாம்.

#### எப்பூடி சார் இப்புடி சின்சியரா வோர்க் பண்ணுறீங்க முடியல ஐயோ கடவுளே.... ##

சீக்கிரம் சைக்கோ மாதிரி அலையப் போறேன்னு நினைக்கிறேன்! :

##எதுக்கும் பியூட்டிபுல் மைன்ட் ஒருதடவை பாத்து வைங்க..ஹி...ஹி...

pappu said... January 20, 2010 10:51 PM

செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர் தற்கொலை.

அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள*** என்னும் ஊரில் வசித்து வந்தவர் பாலமுருகன்(ரைட்டுதானே?). இவ்ர் அங்கு பொட்டி தட்டும் வேலையில் இருந்தார். அப்பொழுது இவர் ப்ளாக் என இணையத்தில் படங்களைப் பற்றி எழுதும் பழக்கம் இருந்தது. அதனால் அவருக்கு பெரிய நட்பு வட்டாரம் இருந்தது. ஆனால் வேலை நேரத்தில் வேலை செய்யாமல் வெட்டி அரட்டை அடித்த அவர் குற்ற உணர்வு இருந்து வந்தது. தொடர்ந்த இந்த உணர்வினால் நேற்றிரவு கூகுள் அக்கவுண்ட்டை லாக் அவுட் செய்யாமலே தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பதிவுலக நண்பர்கள் யாரும் கயிறு வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பினார்களா என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது./
------------------------------------------------
செய்தி எப்புடி? டிவிலயும் வாசிக்கலாம். பேப்பருக்கும் அனுப்பலாம். :)

pappu said... January 20, 2010 10:56 PM

யேய், ஒருத்தர் பிரியாம பேசிட்டாருன்னா அதுக்கு சூசைடா பண்ணிப்பாங்க

மிஸ்டர் ஸ்வதேசி, இவர் சா1-6 கலந்து எழுதுறாரு. அதுல இது மூணாவது எபிசொட்.... படத்துல 3,4,5 எல்லாம் கலந்து வருது. முடியல...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... January 21, 2010 1:44 AM

எப்படிங்கண்ணே.. இந்த மாதிரி படத்தையெல்லாம் விடாம பாக்குறீங்க..?

இதுக்கு மேட்டர் படங்களே பரவாயில்லைன்னு தோணுது..!

எதுக்கும் இந்தியாவுக்கு வரும்போது ஒருவாட்டியாவது தர்ஹாவுக்கு போய் மந்திரிச்சிருங்க..

seethapathisrinivas said... January 21, 2010 2:10 AM

hi mr.bala.my self seethasrinivas.i've resigned job from infosys and doing my own business in trichy.really enjoyed ur blog man.sofar i couldnt see others blog.even i dnt hv time.bcoz myself huge fan of hollywood.u dnt belive man.wn i studying in my engg(nandha engg college,erode)i've seen 2 hollywood movies per day.i couldnt miss any movie.my fav directors ridly scott and tony scott(i think brothers).nw a days i dnt hv time.but ur blog really i've been enjoy man.all de best.

Murshid Ahmed said... January 21, 2010 2:50 AM

பாலா சார், பாலா சார், எனக்காக கொஞ்சம் "த தின் ரெட் லைன்" பத்தி ஒரு விமர்சனம் போடுங்களேன், ப்ளீஸ்...

கருந்தேள் கண்ணாயிரம் said... January 21, 2010 3:29 AM

//அதுக்கப்புறம் இன்னொரு படம் பார்த்துட்டு, காலையில் 4.30-க்கு தூங்கப் போனேன்! :)//

அடப்பாவி . .இப்புடி கன்னாபின்னான்னு கண்ணூமுழிச்சா, நெசம்மாவே ஒடம்புக்கு ஆவாது . . அட்லீஸ்ட் 7 மணிநேரமாவது தூங்கணும்.. அதுனால, இனிமே இந்த அர்த்த ராத்திரில படம் பாக்குறத நிப்பாட்டுங்க . . இல்லேன்னா .... (யோசிச்சி சொல்ரேன்) . . :-)

துடப்பக்கட்டை said... January 21, 2010 6:14 AM

ஏன் சார்
மனசாட்க்கு பயந்து வேலையே செய்யமாட்டிங்களா?
நான் எல்லாம் ஆபீஸ்ல 13மணி நேரம் வேலை செஞ்சாத்தான் 18000 ரூபா வரும்,இல்லன்னா கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு தான் போகனும்.
நீ பாக்கும் படம் எண்ணிக்கை வச்சே நீ மாசம்
ரூ 25000துக்கு மேல செலவு செய்வீங்கோன்னு தெரியுது.
அதை உதவும் கரங்களுக்கு குடுங்களேன்.எவ்வளவோ அனாதை ஆசிரமம் இருக்கு,யுவகிருஷ்னா கிட்ட கேட்டா அட்ரெஸ் நிறைய தருவார். டிடி யா எடுத்து கூட அனுப்பலாம் இல்லையா?
போறப்போ என்ன கொண்டு போகப்போறோம் தம்பி?
அந்த அழுகின காலை பார்க்க நீங்க ஆபீஸ் நேரத்தையும் 15டாலர் பணத்தையும் வீணாக்கவேண்டாம்.
அரசு தொழுநோய் மருத்துவமனை வாங்க ,காட்டுறேன்.அப்போ தன்னால உதவும் குணம் வரும்.
இப்போ கிளம்பறேன் சார்.

கருந்தேள் கண்ணாயிரம் said... January 21, 2010 7:28 AM

துடப்பக்கட்டை .. வணக்கண்ணா . .இப்பொதான் உங்க கமெண்டப் படிச்சேன். பாலா ஏன் கமெண்ட் மாடரேஷன் பண்ணாருன்னு இப்பத்தான் பிரியிது . . ஏங்க . .நீங்க 28 மணிநேரம் கூட வேல செய்யுங்க . .வேணான்னு சொல்லல.. ஆனா, நீங்க அப்புடி இருக்கீங்கன்ற ஒரே காரணத்துக்காக ஏங்க அல்லாருமே அப்புடி இருக்கணும்னு எதிர்பாக்குறீங்க? இதுல, இலவச அட்வைஸ் வேற . . .போறப்ப ஒண்ணும் கொண்டுபோகப்போறதில்லண்ணா . . சரிதான். . அதுனால, வாழ்க்கைய நல்லா எஞ்சாய் பண்ணலாமுல்ல?

மக்களுக்கு உதவி பண்ணனும்ற நோக்கம் உயர்வானதுதான். .இப்ப பாலாகிட்டே ஏதோ அவரு பொறந்ததுலேருந்து இன்னிக்கி வரை நீங்க கூடவே இருந்து அவரப் பார்த்த மேரியும், அவரு அல்லாக் காசையும் ஜாலியா செலவு பண்ணியே தீக்குற மேரியும்ல நீங்க அறீக்க உடுறீங்க? நீ படம் பாக்குறத நிறுத்து; செலவு பண்ணுறத நிறுத்து; ஹா ஹூன்னு அறிக்க உடுறதால ஒரு பயனும் இல்லண்ணா.. ஒருத்தரால செலவு பண்ண முடியுது.. பண்ணராரு.. அதப்பாத்து நாம ஏண்ணா பொறாமப்படணும்? தான் செய்யுறதையே அடுத்தவனும் செஞ்சி தான் ஆகணும்னு நெனைக்கிறாயிங்களே இந்த கலாச்சார தாலிபான்கள்.. அவனுங்கதான் இப்புடி பண்ணுவானுங்க . . நான் தான் கரெக்டு.. நீ தப்பு ங்கற மனப்பான்மைல இருந்து தான் படிப்படியா எல்லா பிரச்னையும் வருது..

அதுனால, நீங்க போய் உங்க மனசாட்சிய மதிச்சி, ஒரு நாளைக்கி முப்பது மணிநேரம் வேல செய்யுங்க . . ஒத்துக்குறோம்.. விளுந்து கும்புடறோம் (நன்றி: அலைபாயுதே) . இந்த அழுகிப்போன காலப்பாக்க இந்தப்பக்கம் வராதீங்க . . இங்க வந்து, கஷ்டப்பட்டு எல்லாத்தையும் படிச்சி, அதுக்கு ஒரு பின்னூட்டம் வேற யாருமே கண்டுபுடிக்க முடியாதபடி ப்ரொஃஃபைல டிசேபிள் பண்ணிட்டு போடுற நேரத்துல, நீங்க போயி உங்க வேலைய செஞ்சி, உங்க மனசாட்சிய குஷிப்படுத்திக்கலாம் இல்லையா? எங்கள எங்க போக்குல உட்டுருங்க. . ரைட்டா..

பி.கு - இந்த இலவச அட்வைஸ் மற்றும் இலவசத் தீர்ப்பு குடுக்குறத என்னிக்கித் தமிழன் நிறுத்துறானோ அன்னிக்கித் தான்யா அவன் உருப்படுவான் . . .

ஹாலிவுட் பாலா said... January 21, 2010 8:47 AM

@பாலவாசகன் : இல்லைங்க. எனக்கும் பிடிக்கலை. ரொம்ப டஞ்ஜனா தெரிஞ்சது. அதுதான் எடுத்தேன்.

ப்யூட்டிஃபுல் மைண்டை இன்னொரு முறை பார்க்கணுமா??? :)

--

@பப்பு : Part 1-ல் நீங்க கமெண்ட் போட்டதை மறந்துட்டீங்களா??? :) ச்சை.., இதுக்குத் தனியா ஒரு முழம் வேணும் போல இருக்கே! :)

--

@உ.த : நட்புன்னு வந்திட்டா.... உங்களை கொலை கூட செய்ய தயங்க மாட்டான்.... இந்த பாலா! :) படமா தல பெரிசு?! :)

---

@சீதாபதி : ரொம்ப நன்றிங்க தல! :) இப்பல்லாம் நானும் ரெண்டு படமா குறைச்சிகிட்டேன். :( :(

---

@முர்ஷிர் : ஏற்கனவே ஒருத்தர் எழுதிட்டாருங்க தல. இப்ப ட்ராஃப்டில் போட்டாலும்.. எழுதறதுக்கு எவ்ளோ நாள் ஆகும்னு தெரியலீங்க. முயற்சி பண்ணுறேன். :)

---

@கருந்தேள் : நாலு மணி நேரத்துக்கு மேல தூங்கறது இல்லை. இப்ப கொஞ்சம் அதிகப் படுத்தலாம்னு இருக்கேன்.

அப்புறம் கமெண்ட் மாட்ரேட் பண்ணினது..., இந்த துடப்பகட்டைகளுக்கு பயந்து இல்லை. அவங்களுக்கு நீங்க பதில் சொல்லப் போய், அதை அட்வாண்டேஜ் எடுத்துகிட்டு உங்களை பர்சனலா இவங்க எழுத ஆரம்பிச்சிடுவாங்க. போன முறை அதுதான் நடந்தது. நேத்துதான் வினோத் கிட்ட... சண்டை போடலைன்னா.. மாட்ரேஷனை எடுத்துவிடுறேன்னு சொன்னேன். இன்னைக்கு ஆரம்பிச்சிட்டீங்க. :) :)

இவங்களுக்கு பொழப்பே... இப்படி பத்து ஐடியை க்ரியேட் பண்ணிகிட்டு கமெண்ட் போடுறது மட்டும்தானே! :) :) :) டீல்ல விடுங்க.

--

@துடப்பகட்டை : அடுத்த மாசம்... அனாதைகளுக்கு காசு அனுப்பறதை கொஞ்சம் கம்மி பண்ணுங்க தல. அந்த காசுல ஒரு ஒட்டடை குச்சி வாங்கி, உங்க மூளையை கொஞ்சம் சுத்தம் பண்ணினா, இன்னும் கொஞ்சம் சம்பளம் எக்ஸ்ட்ராவா கிடைக்கலாம். சீக்கிரமா 100-200 இன்க்ரிமெண்ட் கிடைக்க என் வாழ்த்துகள்! ஆல் த பெஸ்ட் :) :) :)

வினோத்கெளதம் said... January 21, 2010 9:52 AM

கிழிஞ்சது கிருஷ்ணகிரி..நேத்து தான் வாயை திறந்தேன்..!!

வினோத்கெளதம் said... January 21, 2010 10:04 AM

//நீ பாக்கும் படம் எண்ணிக்கை வச்சே நீ மாசம்
ரூ 25000துக்கு மேல செலவு செய்வீங்கோன்னு தெரியுது.//

யோவ் துடப்பகட்டை என்னத்தா கணக்கு போடுற..அவரு ஒருத்தர போனா தான் 25000ருபாய் கூட தோழி வேற போனங்கனா 50000ருபாய்..
அந்த காசுல ரெண்டு ஆஷ்ராமத்துக்கு பணம் அனுப்பலாம்..:)

ஹாலிவுட் பாலா said... January 21, 2010 10:20 AM

எல்லோரும் நல்லா கவனிச்சிக்கங்க.

துடப்பகட்டை... தூக்கி மாட்டிகிட்டா.. அதுக்கு வினோத்தான் பொறுப்பு!!! :)

ஒரே.. கல்லுல.......

கருந்தேள் கண்ணாயிரம் said... January 21, 2010 10:46 AM

ஓ அப்புடிப்போகுதா மேட்டரு . .. அப்ப சரி . .இனிமே இந்த லூசுப்பயலுக கமென்ட் போடட்டும் . .பிரிச்சிரலாம் . .:-)

நானு சீரியஸா சொல்றேன் . .அட்லீஸ்ட் ஏழு மணிநேரமாவது தூங்கலேன்னா, ஹெல்த்து போயிரும் பாலா . . கொஞ்சம் அத கவனிங்க . . இது ஒரு வேண்டுகோள் . .

pappu said... January 21, 2010 10:46 AM

பார்த்தேன். அதுலயே எனக்கு நம்ப முடியாத அளவு மறதி உண்டுன்னு சொல்ல? மறந்துட்டேன்! :)

இன்னுமா எவனும் கயிறு அனுப்பல?

pappu said... January 21, 2010 10:51 AM

திரும்பவும் கதவ அடைச்சுடாங்க! ஏன்யா மூடிகிட்டு இருக்க மாட்டீங்களா? கும்மி அடிக்கிற ஃபோரம்ம ஏன் கெடுக்குறீங்க! துடைப்பகட்ட வேக்குவம் க்ளீனர்னு யாராவது வந்துடறாங்கப்பா!

ஹாலிவுட் பாலா said... January 21, 2010 12:21 PM

எனக்கு அனுப்புற கயிறை.., துடப்பக்கட்டைக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படியே கருந்தேளையும்.. காரணத்தில் சேர்த்துடலாம்.

--

//அதுலயே எனக்கு நம்ப முடியாத அளவு மறதி உண்டுன்னு சொல்ல? மறந்துட்டேன்! ///

பப்பு... இதுதான் கொடுமை. ஏற்கனவே மறதி இருக்குன்னு சொன்னதை மறந்துட்டு, ’சொல்ல மறந்துட்டேன்’னு, மறந்தாப்புல சொல்லுறீங்க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 21, 2010 12:49 PM

தல இதே பேமானி எனக்கும் வந்து “என்னவோ படம் நீயே எடுத்தாமாதிரி எழுதுற” நீ என்ன டைரடக்கரான்னான்.

இன்னோரு நாதாரி பேரு காவாய்மூடியாம்
அதுவும் கிளம்பி இதே பாட்டை பாடுது.

பல்லிருக்கறவன் பட்டாணி திங்கறான்.இவனுங்களுக்கு அட்வைஸ் பண்றாமாதிரி வயித்தெரிச்சலை காட்ட நம்ம இடமா கிடைக்குது?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 21, 2010 12:51 PM

வெல்டன் கருந்தேள்,
கலக்கலான நோஸ்கட்,என் சார்பாவும் ஒரு பாட்டில் பூச்சி மருந்து பார்சல்.
தல நீங்க மட்டும் ஊம் சொன்னீங்கன்னா அன்பார்லிமெண்டரி வார்த்தைகளை யூஸ் பண்ணலாம்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 21, 2010 12:53 PM

போன வாரம் இதே போல பொட்டிக்கடை வந்து உனக்கு வேலை போகலையான்னு கேட்டார்.
அப்புறம் மீசைக்காரன்.
இவனுங்க வக்கிர புத்தி புடிச்ச கோழைங்க, திருப்பி திட்ட ஒரு நிமிஷமாகுமா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 21, 2010 12:55 PM

தல கமெண்ட் மாடரேஷனை எடுக்கவே எடுக்காதீங்க
இந்த விளக்கமாறு டாபர் இன்னிக்கு மெதுவா மரியாதையா ஆரம்பிச்சிருக்கு,நாளைக்கு அசிங்கமாய் போட்டாலும் போடும்.அதிதான் நானும் கமெண்ட் மாடரேஷன் வச்சிருக்கேன்

கருந்தேள் கண்ணாயிரம் said... January 22, 2010 12:54 AM

கார்த்திகேயன் . . இந்தமாதிரி ஒளிஞ்சிக்கினு ஏதாவது லூசுத்தனமா எழுதி, அதுல (சுய) இன்பம் காண்ற வெண்ணைக இந்தமாதிரி பயந்துக்கினு பம்பிக்கினு கமென்ட் போட்டுகினே இருக்கட்டும் . .நாம இவனுங்கள கண்டுக்கவே வேணாம் .. போய்க்கினே இருப்போம். . இவனுங்கள மதிச்சி ஒரு பதில் போடுரதாலதானே இவனுங்க லூசுத்தனமா கமென்ட் போடுறானுங்க.. விட்ருங்க நண்பா . . அன்பார்லிமெண்டரி வார்த்தைகள் இப்போ வேணாம் . .அப்பறம் இந்தக் கக்கூஸ் பயலுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? பாலாவும் இத தன சொல்வாருன்னு நெனைக்குறேன்.. எனிவே . . இந்த வெளையாட்டு எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு . .ஹீ ஹீ

pappu said... January 22, 2010 5:23 AM

அய்யோ, ஆண்டவா! சொல்லன்னு சொன்னது கேள்வி இல்ல, செய்தி.

ம்றந்துட்டேன்னு சொன்னது. நான் மறதின்னு சொன்னேனே, முழக் கயிற மறந்துட்டேன் பாத்தீங்களான்னு. முடியல ’(

பவண்டோ ஒண்ணு சொல்லுப்பா!

kailash,hyderabad said... January 22, 2010 12:06 PM

இந்த தொடப்பக்கட்டை யார்னு பாக்கலாம்னு profile போய பாத்தா profile ஏ இல்லை.இதுலேயே இவனுங்க
பேரைக்கூட வெளிய சொல்ல தைரியம் இல்லாத பன்னாடைங்கன்னு தெரியுது.
அய்யா ,பொட்டிகடை,தொடப்பக்கட்டை,கக்குஸ் வாளி மற்றும் பினாயில் குவளைங்களா ?
mail id கூட வெளிய சொல்லமுடியாத உங்களுக்கு பதில் சொல்றதே வேஸ்ட். இருந்தாலும் duty ,response
பத்தி பேசிட்டிங்க.அதனால சொல்ல வேண்டியதா இருக்கு.
நாங்களாவது வேலை செஞ்ச டயர்டு போக ,டென்சன போக்கி கொஞ்சம் fresh up ஆக படம் பாக்குறோம் ,அதப்பத்தி பேசுறோம். எந்த நிர்வாகமும் சம்பளம் சும்மா கொடுத்துட மாட்டாங்க. நாலு நாள் ப்ரீ யாக இருந்தாலும் வொர்க் வந்துச்சுன்னா நைட்டு பகல் சேந்து ஆபிசில உட்காந்து முடிச்சி கொடுக்கணும் ,கொடுக்கிறோம்.
அது உங்களுக்கு தெரியுமா?
உண்மையிலேயே வாங்குற சம்பளத்துக்கு உழைக்காதவங்க மேலே உங்களுக்கு கோபமாக இருந்தால், பொதுமக்கள் கிட்டே ஒட்டு வாங்கிட்டு அதே பொதுமக்கள் வரிப்பணத்தில சம்பளம் வாங்கிட்டு அந்த போதுமக்கள்ள ஒருத்தன் நடுரோட்டில உயிரை காப்பாத்த சொல்லி கெஞ்னசிப்ப பாத்தும் பாக்காதங்க மாதிரி இருந்த மந்திரிங்ககிட்டல்ல உங்களுக்கு நியாயமா கோபம் வரணும்.
நம்ம தமிழ்நாடு அரசு வெப்சைட் ல் மந்திரிங்க ஈமெயில் அட்ரஸ் இருக்கும். இங்க போட்ட கமெண்டை மாதிரியே அவங்களுக்கு மெயில் பண்ணவும். செய்விங்களா ?
(மாட்டிங்க ஏன்னா அப்படி பண்ணா நீங்க துபாயில(கரெக்டா?) இருந்தாலும், ip address ஐ வச்சு கண்டுபுடிச்சி முதுகெலும்பா மட்டும் உருவிட்டு விட்டுடுவாங்க என்கிற பயம்தானே ,இல்லியா ?
கவலைபடாதீங்க ,உங்களுக்குதான் முதுகெலும்பு இல்லியே. )

பலா பட்டறை said... January 22, 2010 12:07 PM

உண்மைத் தமிழன்(15270788164745573644) said... January 21, 2010 1:44 AM
எப்படிங்கண்ணே.. இந்த மாதிரி படத்தையெல்லாம் விடாம பாக்குறீங்க..?

இதுக்கு மேட்டர் படங்களே பரவாயில்லைன்னு தோணுது..!
//

உண்மைதமிழன்னு ஒரு நல்லவர் இருந்தாரு அவரையும் மாத்தியாச்சா? சந்தோஷமா??

அந்த படம் டீகம்போஸ் ஆகி என் ஸ்கிரீனுக்கு எதாவது ஆச்சுன்னா, ஒரு ஸூப்பர் கம்ப்யூட்டர் பார்சல் பண்ணிடனும் ஆமா..:)

ஸைலண்டா வந்து ஓட்டு மட்டும் போட்டுட்டு கடமதவறாத மகராசனா போயிட்ரீங்க போல:)
எதுக்கும் பதிவ மெயில்ல அனுப்பி வைக்கரேன்.

ஹாலிவுட் பாலா said... January 22, 2010 4:37 PM

ஹலோ... மைக் டெஸ்டிங்..!!

ஏங்க... இந்த மேட்டரை விடவே மாட்டீங்களா?? :) :) நான் ஜாலியா கலாய்க்கலாம்னு நினைச்ச மேட்டரை இப்படியாக்கிட்டீங்களே! :) :)

---

@பலா : நாந்தான்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க ஏரியாவில் சைலண்டா இருக்கப் போறதா சொன்னேனே! :)

அது இல்லாம.. சாமியார் பத்தியெல்லாம் எழுதியிருந்தீங்க. சரி.. இரும்படிக்கிற இடத்துல நமக்கென்ன வேலைன்னு.. கடமையை பண்ணிட்டு எஸ்ஸாய்ட்டேன். :)

கிரி said... January 30, 2010 11:41 AM

//அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள்//

செமையாக இருக்கும் :-)

// பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை உருவாக்கியிருப்பாள்//

ஓ! அப்படியா!

/இவருடைய வாய்தான் தைக்கப் பட்டிருக்கும். இன்னொரு கண்ணிமை தைக்கப் பட்ட ஒருவனோடு சண்டையிட்டு அவனை கொல்வார்)//

இது செம டெக்னிக்! படம் பார்த்து ..அடங்கொக்கமக்கா! எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று அரண்டு விட்டேன்

ஹாலிவுட் பாலா said... January 31, 2010 7:30 AM

// பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை உருவாக்கியிருப்பாள்//

இதை... நாலாவது பார்ட்டில் 2-3 முறை வசனத்திலேயே சொல்லுவாங்க கிரி.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil