1/22/2010

Saw I - VI [18+] Part 4




Saw VI
கிட்டத்தட்ட இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இதில் வரும் சில காட்சிகள்.. முதல் பதிவில் உள்ளது. மறந்திருப்பவர்கள் திரும்ப படித்துக் கொள்ளவும். அதற்கு முன் நடந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால்...


01. ஜிக்ஸாவின் உடல் பிரேத பரிசோதனையின் போது, அவர் வயிற்றில் இருந்து கிடைக்கும் ஒரு டேப்.  அந்த டேப், மார்க் ஹாஃப்மேனுக்கானது. அமேண்டா உட்பட அத்தனை பேரையும், டெஸ்டிற்கு உட்படுத்திய ஜான், மார்க்கையும்... விடப் போவதில்லை என்று டேப் சொல்ல (Saw IV-ல் இந்த காட்சி வரும்),

02. ஜிக்ஸா இறந்த பின் அவரின் வக்கீல் மூலமாக, அவர் மனைவி ஜில் டக்-கிற்கு கிடைக்கும் ஒரு பெட்டி. அந்த பெட்டிக்குள், மொத்தம் ஆறு கவர்கள். அதில் எப்பொழுதும் போல, கடத்த வேண்டிய ஆட்களின் விவரங்கள்.

இப்பொழுது ஜில் டக்-கும்... இந்த கடத்தல் வேலைகளுக்கு உடந்தை என தெரிய வரும்போது, மார்க் ஹாஃப்மேன்.. ஜில்-லிடம், ‘இந்த ஜிக்ஸா விளையாட்டில் தானே முழு கண்ட்ரோலையும் எடுத்துக் கொள்ளப் போவதாகவும், ஜிக்ஸாவின் பெட்டியில் கிடைத்த அந்த கவர்களை அவரிடன் கொடுத்து விடுமாறும்’.. சொல்ல... ஜில் அதிலிருந்து ஐந்து கவர்களை மட்டும் கொடுக்கிறார். அந்த ஐந்து கவர்களிலும் உள்ள ஆட்களை மார்க் கடத்துகிறார்.


இதுநாள் வரை, சிசிலை தவிர வேறு யாரையும், தன் பர்சனல் காரணங்களுக்காக கடத்தாத ஜிக்ஸா, தன்னுடைய இன்ஸூரன்ஸ் கம்பெனியின் CEO வில்லியம்-மையும், அவருக்குத் துணை போகும் அவரின் ஊழியர்களையும் டெஸ்ட் விக்டிமாக்குகிறார்.

இத்தனை நாட்களாக, யாருக்கு யார் ஆப்ரேஷன் செய்ய வேண்டும், இன்ஸூரன்ஸை அப்ரூவ்/ரிஜக்ட் செய்வதால்... யார் உயிரோடு இருக்கலாம்/வேண்டாம் என்பதை தீர்மானித்துக் கொண்டிருந்த வில்லியம், இப்பொழுது இந்த விளையாட்டில்.., தன் ஊழியர்களில்.. யார் உயிரோடு இருக்கலாம்/வேண்டாம் என்று தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு டெஸ்டாக நடந்து கொண்டிருக்க, 1-2 உயிர் பிழைக்கிறார்கள். ஆனால் கடைசி டெஸ்ட், இவருக்கானது. முதல் பதிவில்...

“இன்ஸூரன்ஸ் கம்பெனியின் CEO, வில்லியம், தாங்கள் சொல்லும் டாக்டர்தான் இவரின் ஆப்ரேஷனை செய்ய முடியுமே தவிர... இவரால் எந்த டாக்டரையும் தேர்ந்தெடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். கூடவே.. இன்னும் ஒருவரது இன்ஸூரன்ஸ க்ளெய்மையும் நிராகரித்து விடுகிறார். “

என வரும் பாராவின் கடைசி வரிகளில் இன்ஸூரன்ஸ் நிராகரிக்கப் பட்டவர் ஒரு வக்கீல். அதனால் மருத்துவச் சிகிச்சை மறுக்கப்பட்டு உயிரழந்த அவருடைய மனைவியும், மகனும் ஒரு ரூமிலும், வில்லியமின் தங்கை இன்னொரு ரூமிலும் அடைக்கப் பட்டுள்ளனர்.

இறுதி டெஸ்டில்... வக்கீலின் மனைவி-மகனுக்கு.... வில்லியம் உயிரோ இருப்பதா/வேண்டாமா எனத் தீர்மானிக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. வக்கீலின் மகன்... வில்லியத்தின் சாவை தீர்மானிக்க.........


இதே நேரத்தில்...,  ஏஜெண்ட் ஸ்ட்ராமின் பழைய பார்ட்னர், படுகாயமடைந்த ஏஜெண்ட் பெரஸ்...,  இன்னும் உயிரோடு இருப்பது, மார்க்-கிற்கு தெரிய வருகிறது. ஸ்ட்ராமின் கைரேகை அத்தனை இடங்களிலும் இருப்பதால்... எல்லோரும் அவரை சந்தேகித்திருக்க...,

... இந்த ரேகையில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், புதிதாக கிடைக்கும்.. ஜிக்ஸா கேசட்களில்.. கேட்கும் குரல்கள்.. பழைய ஜிக்ஸாவின் குரலோடு ஒத்துப் போகவில்லை எனவும்.. பெரஸ் புதிதாக குட்டையை குழப்புகிறார்.

ஒரு வழியாக.... அந்த கேசட் குரலை, தொழில்நுட்பங்களை உபயோகித்து..., அந்த குரலுக்குச் சொந்தக் காரர்.. மார்க் என.. இவர்கள் கண்டுபிடிக்கும் போது..., அவர்கள் எல்லோரயும்.. மார்க் மேலே அனுப்புகிறார்.

இதை முடித்துவிட்டு...CEO வில்லியம்-மின் விளையாட்டு நடக்கும் இடத்திற்கு வரும்போது... ‘தான் அமேண்டாவிற்கு எழுதிய மிரட்டல் கடிதம் அங்கேயிருப்பதை பார்க்கும் போது’, ஜில் டக்-கால்.. தாக்கப் படுகிறார். ஜிக்ஸாவின்.. ஆறாவது கவரில் இருந்தது மார்க் ஹாஃப்மேன்.

மார்க் ஹாஃப்மேனுக்கு, நாற்ப்பத்தைந்து செகண்டில் அவரது தாடையை கிழிப்பது போன்ற டூல் செட் செய்யப் பட..., ஜில்... அங்கிருந்து வெளியேறுகிறார். ஆனால்.. 45 செகண்டிற்குள் அந்த டெஸ்ட் முடியும் முன்பே, பாதி வாய் கிழிந்த நிலையில்... மார்க் ஹாஃப்மேன் தப்பிக்கிறார்.

மீதி.......... Saw VII - வரும்போது பார்த்துக்கங்க.


Saw VI - பழைய Saw படங்களில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க செய்யப் பட்ட முயற்சி. கூடவே அந்த நேரத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஹெல்த் கேர் இன்ஸூரன்ஸையும், மார்கேஜ் தில்லு முல்லுகளையும் இணைத்திருப்பர். உருப்படியாக ஒரு காட்சியும் கிடையாது. ஏகப்பட்ட காட்சிகள் ஃப்ளாஷ்பேக் போலவும், கனவுக் காட்சிகள் போலவும் உருவாக்கப் பட்டிருக்கும்.

இதுவரை Saw வரிசைப் படங்களுக்கு, பதினோரு மில்லியனுக்கு மேல் பட்ஜெட் இல்லை. Saw I, வெறும் ஒரு மில்லியனில் எடுக்கப் பட்ட படம். ஆனால்.. முதல் ஐந்துப் படங்களும், குறைந்தது 100 மில்லியனில் இருந்து, 150 மில்லியன் வரை சம்பாதித்திருக்க, மோசமான வசூலை சந்தித்தப் படம் இது மட்டும்தான் (57 மில்லியன்).  இதே நேரத்தில் வைட் ரிலீஸ் ஆன, Paranormal Activity..., Saw VI -ஐ மிதித்துக் கொண்டு முன்னேற, ஐந்து வருட லெகஸி.. இதில் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.

“ஜான் க்ரேமர் கேரக்டர் இல்லாமல் Saw இல்லை” என்றாகிவிட்டதால்... இனிவரும் பாகங்களிலும்... IV-ல் இருந்து நடந்து கொண்டிருக்கும்.. அதே அபத்தங்கள் தவிர்க்க முடியாதது போலதான்...., போட்டதை விட பத்து மடங்கிற்கும் மேல் லாபம் தருவதால்..., இன்னும் சில வருடங்களுக்கு.., ஒவ்வொரு ஹாலோவீனிற்கும்... Saw-வின் வெளியீடும்........!!


முற்றும்!!!



22 தியேட்டர் கமெண்ட்ஸ்:

Balavasakan said... January 22, 2010 8:14 PM

வந்தேன் ஐயா..!

அண்ணாமலையான் said... January 22, 2010 9:02 PM

அப்பாடா முடிஞ்சுடுச்சா? அடுத்தது என்ன?

VIJAY said... January 22, 2010 9:09 PM

ஹையா!!!!!!!!நாந்தான் முதல்.

VIJAY said... January 22, 2010 9:09 PM

Again comment moderation? :(

பலா பட்டறை said... January 22, 2010 11:17 PM

அண்ணாமலையான் said... January 22, 2010 9:02 PM
அப்பாடா முடிஞ்சுடுச்சா? அடுத்தது என்ன?//

ஆன்மீக தொடர்தான்...வேரென்ன..:)

கருந்தேள் கண்ணாயிரம் said... January 23, 2010 12:07 AM

அடடே முடிஞ்சிருச்சே . . மறுபடி இதே மேரி இன்னொரு படத்த பத்தி நீண்ட விமரிசனம் எழுதுங்க தல . . :-) நீங்க ஏன் cannibal Holocust பத்தி இப்படி ஒரு நீண்ட விமரிசனம் எழுதக்கூடாது? (நீங்க ஆல்ரெடி குட்டியா எழுதிருக்கீங்க . . பெருசா எழுதுங்க) . . :-)

pappu said... January 23, 2010 12:29 AM

முடிஞ்சதா?

விஜய், நேத்து ஒருத்தரு துடப்பகட்டைய தூக்கிட்டு வந்து கார்த்திகேயனும், கருந்தேளும் அதை வாங்கி அவரையே விளாசி ஒரே ரசாபாசமாகி விட்டது. அதான் இப்படி!

கோபிநாத் said... January 23, 2010 12:43 AM

யப்பாடா..;))

Balavasakan said... January 23, 2010 1:08 AM

அய் நான்தான் நானேதானா...? நம்பமுடியலயே....

முதல் முதலா சீமையில முதலாவதா பின்னூட்டி இருக்கிறேன்...

@விஜய் //ஹையா!!!!!!!!நாந்தான் முதல்// தொப்பி...தொப்பி...

gulf-tamilan said... January 23, 2010 1:19 AM

அப்பாடா!!!.முதலில் இதிலிருந்து வெளியில் வந்து வேறு பதிவு போடுங்க!!

பின்னோக்கி said... January 23, 2010 1:25 AM

அப்பாடி முற்றும். இனிமே பயப்படாம உங்கப் பதிவுக்கு வரலாம்

ஷாகுல் said... January 23, 2010 3:03 AM

இவங்க படத்த முடிக்க மாட்டாங்களா? நம்ம ஊரு மெகா சீரியல் மாதிரி போய்கிட்டே இருக்கு.

kailash,hyderabad said... January 23, 2010 10:18 AM

வந்தாச்சு,ஓட்டு போட்டாச்சு.

அண்ணாமலையான் said... January 23, 2010 10:26 AM

மெஜாரிட்டிய பாத்தீங்கள்ல? அது.....!

KISHORE said... January 23, 2010 10:53 AM

present sir

Balavasakan said... January 23, 2010 10:53 AM

என்னாது இது இன்னிக்கு பாலான்ட பஜார்ல கூட்டம் கம்மியா இருக்கு...

ஹாலிவுட் பாலா said... January 23, 2010 11:21 AM

@பாலவாசகன் : ஒரு வேளை, அழுகின காலை ஆஸ்பித்திரியில் பாத்துக்கறேன்னு போய்ட்டாங்களோ என்னமோ ? :) :)

--

@அண்ணாமலையான் : ரெஸ்ட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

---

@விஜய் : பப்பு சொன்னதுதாங்க விஜய். யாராவது பதிவுக்கு சம்பந்தமில்லாம கமெண்ட் போடப் போய், அதுக்கு பதில், எதிர் பதில்னு போய்டுது. இனிமே பர்மனண்டா மாட்ரேஷன் வச்சிடலாம்னு இருக்கேன்.

--

@பலா : ‘அந்த’ ஆன்மீகம்தானே!! :) விடுங்க நாமளும் ஒரு வீடியோ ரிலீஸ் பண்ணிட்டா போச்சி!: )

--

@கருந்தேள் : குசும்பு தானே..!! :) நிறைய பேர் எஸ்ஸாய்ட்டாங்க பாருங்க! : )

---

@பாலவாசகன் : பதிவை பப்ளிஷ் பண்ணி.. கிட்டத்தட்ட ஒரு 4 மணிநேரத்துக்கு ஒரு பின்னூட்டமும் இல்லை. இதுல... me that first, second-ன்னு ஏங்க காமெடி பண்ணுறீங்க! :)

---

@கல்ஃப் : போட்டுடுவோம் தல! கொஞ்சம் ரெஸ்ட்.

---

@பின்னோக்கி : இப்படியா பயந்துக்கறது?? :)

---

@ஷாகுல் : அந்த வாத்து முட்டை போடுற வரைக்கும்.. வேற வழியே இல்லைங்க. அது வந்துகிட்டே இருக்கும். நாம பார்த்தாகணும்.

---

@கைலாஷ் : தேங்ஜுபா! :)

--

@கிஷோர் : நெக்ஸ்ட்

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said... January 23, 2010 12:50 PM

இப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க . பகிர்வுக்கு நன்றி !!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... January 23, 2010 2:27 PM

தல சா பயணம் முடிந்ததா?
அருமையாய் முடித்தமைக்கு நன்றிகள், ஜிக்சாவாவின் விசிறியாகிய நானும் இதில் ரசித்து படித்து மகிழ்ந்தேன்,மீண்டும் சா அத்தனை படமும் பார்க்க தூண்டுகிறது.

ஹாலிவுட் பாலா said... January 23, 2010 10:12 PM

@வா.ஒ.க.சங்கர் : எப்பா உங்க பேரை.. இன்ஷியலா எழுதவே.. ஒரு பாரா வேணுங்க நண்பா! :) :)

--

@கார்த்திக்கேயன் : சர்தான். இனிமே.. படத்தில் எந்த பார்ட்டில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன். அத்தனை முறை பார்த்தாச்சி! :)

கிரி said... January 30, 2010 11:47 AM

யப்பா! கண்ணை கட்டுது!

எனக்கு ஒரு பகுதியில் ஒருத்தனை (கறுப்பர்) ஒரு இயந்திரத்தில் வைத்து கால் ஒரு பக்கமும் தலை ஒரு பக்கமும் திரும்பும் படி செய்வார்களே! கதி கலங்கிட்டேன்.

எத்தனை பாகம் வந்தாலும் பார்க்க தயார்! :-) ஆனா ஒன்னும் கூட உருப்படியா புரியல (சாரி உங்க பதிவை படித்தும் :-D)

ஹாலிவுட் பாலா said... January 31, 2010 7:31 AM

ஹி.. ஹி.. ஸாரி..!! முயற்சி பண்ணினேன். :) :)

Post a Comment / கிஷோர் கமெண்ட்

ஓட்டுதான் போட முடியாதே... கமெண்டாவது போடுங்களேன்!

Related Posts with Thumbnails
 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Green Zone Remember Me She is out of my league