புது வரவு - நம்பிக்கை

3/03/2010

Born into Brothels (2004)


ஸானா ஆண்டி, எங்களை இன்னைக்கு பீச் கூட்டிட்டுப் போனாங்க. இதுவரைக்கும் நான் கடலைப் பார்த்ததேயில்லை.

ஸானா ஆண்டி மாதிரி நல்லவங்களை பார்க்கவே முடியாது. எங்களை ஸூ-வுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனாங்க.


அப்படி என்ன இல்லாததையா காட்டிட்டாங்க? அந்தச் சேரியும், சேரிவாழ் மக்களும் நாம் உருவாக்கிய சமூகம்தானே? -ன்னு.. யாரோ, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வக்காலத்து வாங்கிய போது... எரிச்சல் வந்தது. அது இந்தியாவின் வறுமையை காட்டி, ஒரு கும்பலே மில்லியனரான கோபத்தில் மட்டுமில்லை. கூடவே தியேட்டரில் என்னைச் சுற்றி எழுந்த கிண்டல்களும்.

ஆங்கிலப் படங்களை பார்த்துப் பார்த்து... அமெரிக்கான்னாலே எல்லோரும் அவிழ்த்துக் கொண்டு அலைபவர்கள் போல, நமக்குள் ஒரு பிம்பம் உருவாகியிருக்குமே! அதே போல..., ஸ்லம்டாக் மில்லியனரைப் பார்த்த அமெரிக்கர்களுக்கும், இந்தியாவின் மீது ஒரு ‘பிம்பம்’ இருந்திருக்கலாம். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், ஒரு பரிதாப உணர்வு இருந்தது. ஆனால் அதெல்லாம்.. சராசரி பார்வையாளனுக்குத்தான். படமெடுத்தவன்?

இந்தப் வறுமைப் பரிதாபம்தான் காசு பார்க்க சரியான வழி-ங்கறதுக்கு.. 2004-லேயே ஒரு அம்மிணி அடி போட்டு கொடுத்திருக்காங்க. 2009 - ஸ்லம்டாக் இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த ‘ஆஸ்கரை’ விட, 2005-ல் Born Into Brothels வாங்கிய ஆஸ்கர்தான்..., நமக்குப் பெருமை.

உலகின் மிகப் பழமையானத் தொழிலில், ஆசியாவின் மிகப் பெரிய ப்ராத்தல் அமைப்புகளை வைத்திருக்கும் கலாச்சார இந்தியா. ஆப்ரிக்க வறுமையை காட்டினால், எந்த நாயும் சீண்டாது என்பதால்... இந்திய வறுமையை காட்டியே பிழைப்பை ஓட்டும் மேல்நாட்டவர்களின், இன்னொரு அரிப்பு.......
இந்தியாவில் விபச்சாரம் சட்டவிரோதமே இல்லையாம்(!). சட்ட விரோதமானது, காமாதிப்புரா, சோனாகாச்சி போன்ற இடங்களில் நடக்கும் ப்ராத்தல்கள்தானாம். இதுவே அமெரிக்காவில் இரண்டு மாஹாணங்களைத் தவிர்த்து (அதிலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும்) மற்ற அத்தனை இடத்திலும்... விபச்சாரம் என்பது மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது.


Born Into Brothels டாகுமெண்ட்ரியை பார்க்க ஆரம்பிக்கும் போது, பதிவின் முதல் இரண்டு வரிகளுக்கு, நான் எரிச்சல் பட்டது தப்போ’-ன்னு தோன்ற ஆரம்பித்தது. கொல்கத்தாவின் சோனாகாச்சில் கேமரா உருள ஆரம்பித்ததும், அந்த ப்ராத்தலில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொருவராக அறிமுகமாக ஆரம்பித்ததும்..., இதுவும் நாம் உருவாக்கிய சமூகம்தானே? இதை அட்லீஸ்ட் ஒரு வெளிநாட்டுக்காரியாவது எடுத்துத்திருக்கிறாரே - என நினைக்க ஆரம்பிக்க....

அது கொஞ்ச நேரத்திற்கு மட்டும்!!! குழந்தைகளின் அறிமுகமெல்லாம்... பக்காவாக, ‘டொய்ங்.. டொய்ங்’ என... நம்மூர் சோக ம்யூசிக்கோடு ஆரம்பித்து முடிய....., ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்த WTF எஃபெக்ட் இந்தப் படத்துக்கும் வர ஆரம்பித்தது. படம் முடிந்ததும் தோண்ட ஆரம்பித்த பொழுது கிளம்பிய நாற்றம் தான் நீங்கள் படிக்கப் போவது.

அதாவது..., இந்தியாவில்.. இது போல ப்ராத்தலில் பிறந்த குழந்தைகளுக்காகவே... தன் வாழ்நாளில் 2-3 வருடங்களைக் கழிக்கும்.. ஒரு அம்மிணி (பெயர் Zana Briski), இந்தக் குழந்தைகளுடனேயே கொஞ்ச நாட்கள் வாழ்ந்து.. அவர்களின் கஷ்டங்களை தெரிந்து கொள்கிறாராம்.

ஸானா ஒரு போட்டோக்ராஃபர். இவர், இப்படி ப்ராத்தலில் பிறந்த 8 சிறுவர்களுக்கு.. ஆளுக்கொரு $10 கேமராவை அன்பளிப்பாக பரிசளித்து (?) அவர்களுக்கு போட்டோக்ராஃபி சொல்லிக் கொடுக்கிறார். அப்படி அவர்கள் எடுத்தப் போட்டோக்களை, அவர்களின் பிறந்த பின்னணிகளோடு சேர்த்து ஒரு ‘சோகக் கதையை’ ரெடி செய்து... ஒரு கண்காட்சியை உருவாக்க... (இதிலிருந்து கிடைக்கும் அத்தனை காசும் இந்தப் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்குத்தான் பயன்படும். சத்தியம். சத்தியம்), சேல்ஸ் பிச்சிக்கொண்டு போயிருக்கும் போல.

$100,000 வரைக்கும், இதுவரை இந்த போட்டோக்கள் வருமானம் ஈட்டியுள்ளதாம். இதில் பங்கெடுத்த பல குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கே போகாத பொழுது, போட்டோக்களின் பணம் யார் கைக்குப் போனது?

1997 -ல் இந்தக் குழந்தைகளோடு நட்பு கொள்ள ஆரம்பித்த ஸானாவின் நோக்கம், இவர்களின் கையில் கேமராவைக் கொடுத்து K.V. ஆனந்த் ஆக்குவதல்ல. இவர்கள் மூலமாக, சோனாகாச்சிற்குள் நுழைந்து, உடல் வியாபாரம் செய்பவர்களைப் பற்றி ஒரு டாகுமெண்ட்ரி எடுத்து, பண வியாபாரம் செய்வது.

உள்ளே நுழைய முடிந்த ஸானாவுக்கு, படம் எடுக்க முடியவில்லை. அட்ரா அந்தர் பல்டி - என ஆட்டையை திருப்பிப் போட்ட ஸானா, உடனடியாக ஸ்ரிப்ப்டை மாற்ற, அந்தக் குழந்தைகள் கையில் கேமரா.

அங்கிருந்து.... ஸோனா ஆண்டி... என்னும் சோனாகாச்சியை காக்க வந்த தெய்வத்தின் தியாகங்களும், கஷ்டங்களும்தான் மீதிப் படம்.


ஸ்வாமி நித்யானந்தாவின் ப்ராத்தலில் எடுத்தப் படத்தைப் போல, அமெரிக்காவில் ஒரு ஹிடன் கேமராவில் படமெடுக்கும் பொழுது, காட்சிக்கு சம்பந்தமில்லாத அத்தனை பேரின் முகத்தையும்,  மறைத்துத்தான் வெளியிட முடியும். தப்பித்தவறி யார் முகமாவது தெரிந்தாலோ, அல்லது அந்த ஹிடன் கேமரா விஷயம் அவரிடம் தெரிவிக்காமல் போனாலோ, மொத்தக் குடும்பத்தையும் சந்திக்கு இழுத்துவிட முடியும்.

ஆனால்.. ஸானா.. இந்த டாகுமெண்ட்ரியின் பெரும்பாலான காட்சிகளை ஹிடன் கேமராக்கள் மூலம் எடுத்தது, சம்பந்தப் பட்ட சில குழந்தைகளுக்கே படம் வெளிவந்து, ஆஸ்கரின் கதவை தட்டும் வரையில் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளும், மற்றவர்கள் அனுமதியில்லாமல்... (சில சமயம் அவர்களின் விருப்பமில்லாமலும்) அவர்களை எடுக்கும் புகைப்படங்களும், பந்தாவாக டாகுமெண்ட்ரியில் வலம் வருகிறது.

பங்கு பெற்ற குழந்தைகளுக்கோ, மொழிபெயர்பாளருக்கோ கூட, இது ஒரு படமாக உலகம் முழுக்க வெளிவரப் போவதை சொல்லாத ஸானாவும், இணை இயக்குனரும், இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடக் கூடாது என.. இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு மதிப்புக் கொடுத்துத்தான்.. இந்தியாவில் வெளியிடவில்லையாம்.

இந்தியாவைத் தவிர.. மற்ற நாடுகளில் வெளியானப் படம் இதுவரை ஐம்பது விழாக்களில், நாற்பது விருதுகளை வாங்கி... இந்தப் படத்தில் அப்பாவியாய் வந்துப் போன சிறுவர்களை மட்டுமல்லாமல்... செலவில்லாத துணை நடிகர்களையும் உலகம் முழுக்க படம் காட்டியுள்ளது.

படமுழுக்க... இந்தக் குழந்தைகளுக்காக கஷ்டப்படுவதைப் போலவும், இவர்களை பள்ளியில் சேர்க்க படாதபாடு படுவதுபோலவும், பள்ளியில் சேர்க்க.. HIV டெஸ்ட்டுகளை எடுத்து, யாருக்கும் + இல்லாததால் சந்தோஷத்தில் துள்ளுவதாக காட்டப்படும் ஸானாவின் இன்னொரு முகம், ஆஸ்கர் விருதோடு, படம் அள்ளிய நான்கு மில்லியன் டாலர்களில் வெளிவந்திருக்கிறது.

படமெடுக்க ஆரம்பித்த 2002 -ஆம் ஆண்டில் ஸானா உருவாக்கிய Kids With Cameras என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலமாக இன்றும், அம்மணி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார். அதில் இதற்கு முன் அத்தனைக் குழந்தைகளின் போட்டோக்களையும் விற்றவர், 2008 -ஆம் ஆண்டு இந்த க்ரூப்பில் இருந்து நான்கு குழந்தைகள், தங்களின் வாழ்க்கை இந்தப் டாகுமெண்ட்ரி வெளிவந்தவுடன் எத்தனை மோசமாக மாறியது எனவும், புகைப்படங்கள் விற்ற காசெல்லாம்.. எப்பொழுதோ நின்று போனதையும்... வெளுக்க ஆரம்பித்ததும்...., அம்மணி... இப்பொழுது.. விவரமாக..., அவிஜித்தின் போட்டோக்களை மட்டும் விற்கிறார்.

டாகுமெண்ட்ரியிலும், மற்றவர்களை விட அதிக திறமையை காட்டிய அவிஜித் மட்டுமே, (போட்டோக்ராபிக்காக ஆம்ஸ்டர்டம் அழைத்துச் செல்லப்படுவான்) இப்பொழுது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாக Kids With Cameras நிறுவனத்தின் இணையத்தளம் சொல்கிறது.

மற்ற சிறுவர்களைப் பற்றி அந்த இணையத்தளம் சொல்வதற்கும், இந்த டாகுமெண்ட்ரியின் மொழிபெயர்பாளர் செபப்ராட்டா பானர்ஜி சொல்வதற்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. Born Into Brothels படத்தின் தகிடுதத்தங்களை முதலில்.. அதை ஆஸ்கருக்கு அனுப்பும் போதே... அவர்களுக்கு கடிதமெழுதி, இந்தக் கதையை வெளிக் கொண்டுவந்தவர், இந்த பானர்ஜி (பேரம் படியலையோ என்னவோ?).

படம் வெளியாகி, அவார்டுகளாக அள்ளிக் குவிக்க, நடித்த சிறுவர்களின் புகைப்படங்கள் கொல்கத்தா பத்திரிக்கைகளில் வெளியாக... பள்ளியில் படித்துக் கொண்டிருந்த (ஸானாவின் முயற்சியில்) இரண்டு சிறுவர்கள் வெளியேற்றப் பட்டது, ஸானாவுக்குத் தெரியாதா?

பூஜாவும், கோரும் இன்னும் ரெட் லைட் ஏரியாவில் இருப்பதாக “நம்பும்”, Kids With Cameras-ன் இணையதளத்திற்கு, பூஜா... அதே சோனாகாச்சியில்.. இப்பொழுது விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதும், கோர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதும் தெரியவில்லை போலும்.

இணையத்தளத்திற்கு தெரியாமல் போயிருந்தாலும், ஸானாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இன்று.. விபச்சாரத் தொழில் மூலம் ஏகப்பட்ட சொத்துக்களை சம்பாதித்திருக்கும் பூஜா, இன்றும்.. ஸானாவுடன் இமெயில் தொடர்பில் இருப்பதாக Times of India பத்திரிக்கைக்கு வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள், தன் சொத்துப் பட்டியலோடு..! விளங்கும். (புகைப்படத்தில் ப்ரீத்தி முகர்ஜி என்ற பூஜா)

Kids with Camera எந்தப் பணமும் அனுப்பாததில், சபேரா இல்லத்தில் இருந்து கொச்சி வெளியேற்றப் பட்டது ‘தெரியாத’ ஸானாவின் இணையத்தளம் இன்னும் ‘கொச்சி... சபேரா இல்லத்தில் நல்ல மதிப்பெண்களோடு படித்து வருவதாக’ கதை விட்டுக் கொண்டுள்ளது (http://www.kids-with-cameras.org/news/).

இதையெல்லாம் விட.. ஸானா அடித்த கடைசி இரு பல்டிகள் உலகத்தரம். இந்த டாகுமெண்ட்ரியின் இணை இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய ராஸ் காஃப்மேனையும்... (இந்த உத்தமனைப் பற்றி இன்னொருப் பதிவே எழுதலாம்) நடுவில் கத்தரித்துக் கொண்டவர், இந்த சிறுவர்கள் பிரச்சனையை வெளியே கொண்டு வந்ததும்....

“எனக்கும் Kids with Cameras நிறுவனத்திற்கும், தற்போது எந்தத் தொடர்பும் இல்லை. நான் இப்பொழுது இன்னொரு ப்ராஜக்டில் பிஸி” - என ILoveKolkata.in இணையத்தளத்திற்கு மெயில் அனுப்பி... தன் புனிதத்தை நிரூபிக்கப் பார்த்திருக்கிறார் (அடுத்தப் ப்ராஜக்ட் எவன் தலையில் மிளகாயோ).

ஆனால் பிரச்சனை ஸானா மேல் மட்டும்தானா? ஏ.ஆர். ரஹ்மான்க்கு முன்பே, ஆஸ்கர் மேடையில் ஏறிய இந்த சிறுவர்களுக்கு, அமெரிக்காவில் தங்கும் வாய்ப்பு கிடைத்தும், அவிஜித்தையும், கொச்சியையும் தவிர வேறு யாரும் பங்கெடுக்கவில்லை. அது நிச்சயம் அந்த சிறுவர்களின் தவறில்லை. சோனாகாச்சி பெற்றோர்களின் குற்றம். வியாழக்கிழமை எது செய்தாலும் விளங்காது என இந்த டாகுமெண்ட்ரியில் வரும் ஒரு பாட்டியின் அறியாமையாகவே இருக்கும்வரை...

திருத்த வந்த ஸானா-க்கள்.. திருடத்தான் செய்வார்கள். ஸ்லம்டாக் படத்தில் வந்தக் குழந்தைகளில் இன்னும் எத்தனையோ பேர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்க, ப்ரொடியூஸர்கள் தியேட்டரில் மட்டுமே $400 மில்லியன் சம்பாதிக்க....., திருடுவதை பார்த்துக் கொண்டே, இந்தியாவின் ஏழ்மையை இன்னொரு ஆஸ்கரோடு கொண்டாடுவோம்.


இதில் திரட்டியிருக்கும் அத்தனை செய்திகளும் பொய் என்றாலும், தவறானத் தகவலைத் திரட்டியதற்க்கு நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஸானா, டேனி பாய்ல் போன்றவர்களின் அரிப்பிற்கும், நித்யானந்தாவின் அரிப்பிற்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இவர்கள் அத்தனை பேரும், இந்திய மக்களின் அறியாமையில் விபச்சாரம் செய்பவர்கள்தான்.


Born Into Brothels = Zana Aunt *unt (*-ல் ‘C' போட்டுக் கொள்ளவும்)




59 தியேட்டர் கமெண்ட்ஸ்:

pappu said... March 3, 2010 1:50 AM

அலோ, மீ த ஃபர்ஸ்டா?

pappu said... March 3, 2010 1:50 AM

இப்ப படிக்கலாம்... :)

ROMEO said... March 3, 2010 1:56 AM

செம காட்ட பதிவு பண்ணி இருக்கீங்க பாஸ் .

ROMEO said... March 3, 2010 1:56 AM
This post has been removed by the author.
மைதீன் said... March 3, 2010 1:56 AM

வறுமையை காட்டி காசு பறிக்கும் செயல் கூட விபச்சாரம் என்பது மிகச்சரியே

சென்ஷி said... March 3, 2010 1:58 AM

:(

Born to Brothels பார்த்திருக்கிறேன். அந்தச் சிறுவயது முகங்களின் கேமரா ஆர்வமும் அந்தக் கண்களும் மறக்க முடியாதவை.

நீங்கள் தொகுக்கப்பட்ட விவரங்கள் மனதைப் பதற வைக்கின்றது. அவர் மேல் ஏதும் நஷ்ட ஈடு வழக்குக் கூட தொடர முடியாத அளவில்தான் ஜனநாயக சக்தி வலுவாய் உள்ளது.

இந்தக் கேவலமானவர்களின் முகமூடியை நீங்கள் இன்னும் கிழிக்க வேண்டும் பாலா..

உங்கள் ரசிகனாய் பெருமை கொள்கின்றேன்.

Vidhoosh said... March 3, 2010 2:02 AM

:( ennavo poda madhava...

pappu said... March 3, 2010 2:07 AM

ப்ளடி பாஸ்கர்ஸ்....

வோட்டு போட முடியல என் அக்கவுண்ட் கரப்டு..

சென்ஷி said... March 3, 2010 2:09 AM

தல,

தமிழிஷ்ல ஏதும் பிரச்சினை போல.. ஓட்டு போட முடியல.. வெளில தள்ளி கதவை சாத்துது :(

pappu said... March 3, 2010 2:10 AM

ஏன் இப்படி பண்றாய்ங்க... இளக்காரமாக மூன்றாம் உலக நாடுகள் என அவர்கள் சொல்வது தோன்றுகிறது..

venkat said... March 3, 2010 2:10 AM

ங்கள் தொகுக்கப்பட்ட விவரங்கள் மனதைப் பதற வைக்கின்றது. என்ன சொல்லுறதுனே தெரியல...மனசு வலிக்குது ...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 3, 2010 2:20 AM

எக்சலன்ட் பாலா.. இன்னும் எழுதுங்க..!

SHEN said... March 3, 2010 2:42 AM

தல, நட்சத்திரம் ஆகீட்டீங்களா?..சீக்கிரம் உச்ச நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள்..வேளையில் கொஞ்சம் பிரச்சினை..இணையத்திற்கு வர முடியவில்லை..
அன்புடன்
செங்கோவி

என் நடை பாதையில்(ராம்) said... March 3, 2010 3:49 AM

கொஞ்சம்.... (இல்ல ரொம்பவே) பிசி...! அதான் சரியா கமெண்ட் போட முடியல.... எழுதுங்க... மொத்தமா படிசிடறேன்!

அறிவு GV said... March 3, 2010 4:37 AM

இது முற்றிலும் ஒரு புதிய தகவல் எனக்கு. மேலும் Slumdog 'ஐ இப்படி ஒரு கோணத்தில் நான் பார்க்கவில்லை. உங்களின் மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. தங்களின் இன்னொரு முகத்தை நான் இப்பதிவில் பார்க்கிறேன் தல.
பதிவ பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல. இத கவனிக்க வேண்டிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே சப்போர்ட் பண்ணுறது தான் அதைவிட கொடுமை. All F**kers should be punished. (sorry thala).

King Viswa said... March 3, 2010 5:12 AM

Hats off to THALA Bala.


Nothing More, Nothing Less.

SureshDurairajan said... March 3, 2010 6:26 AM

இத இததான் பல காலமா பல தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்துகொண்டு இருக்கின்றன, சராசரி மனிதர்களின் பார்வையில் இவை பெரும்பாலும் படுவதில்லை, மற்றும் ஒரு அழகான போர்வைக்குள்ளே நடப்பதால் வெளியே தெரிவதில்லை.
இது இந்த மாதிரி கேவல பிறவிகளுக்கு பெரிய வருமானத்தையும் சமூகத்தில் பெரிய கவுரவத்தையும் கொடுப்பதால், கொஞ்சம் கூட வெட்க படாமல் செய்கிறார்கள்.

(இரு மாதங்களுக்கு முன் கூட சுனாமி நிதியை வைத்து கார் வீடு என சுகபோகமாய் வாழ்ந்து பங்கு பிரிப்பதில் தகறாரு ஏற்பட்டு ஒரு திருச்சபையே பேப்பரில் சிரித்தது, பிறகு ஊடகம் மட்டும் அல்ல உலகமே மறந்தது. யோசித்து பாருங்கள் செத்த வீட்டில் இழவுக்கு கொடுத்த பணத்தில் உல்லாசம், நினைக்க கேவலமாக இல்லை, ஆனால் சமூகம் சுலபத்தில் மறந்துவிட்டு அவர்களுக்கு ராஜ மரியாதையை கொடுக்கும், அவர்கள் மீண்டும் வேறு எப்படி சம்பாதிப்பது என்று யோசிப்பார்கள்)

ஊடகங்களுக்கும் அந்த நேர பரபரப்பை ஏற்றும் செய்திகள் தான் தேவையே தவிர, இதையெல்லாம் பொறுப்பாக ஆராய்ந்து சொல்லும் கடமையை மறந்து விட்டார்கள்.

கேள்வி கேட்க யாரும் இல்லை என்பதே இவர்களின் பலம்.
இவர்கள் விபச்சாரிகள் என்றால் ஊடகங்கள் யார் ?

மிக நல்ல அவசியமான பதிவு நன்றி பாலா

கருந்தேள் கண்ணாயிரம் said... March 3, 2010 6:48 AM

பாலா - நீங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டேன். இந்தியாவின் வறுமையைக் காட்டி, அதன்மூலம் தான் கல்லா கட்டி, அந்த மக்களுக்கு ஏதாவது செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி, ஊரை ஏமாற்றுபவர்களை நீங்கள் சாடுவது சரி. அதுதான் என் கருத்தும்.

ஆனால், இந்த வறுமையைக் காட்டவே கூடாது, அது தவறு என்பதில் நான் உடன்பட மாட்டேன். இந்த வறுமையைக் காட்டுவதே தவறு என்றால், இந்த வறுமையை உருவாக்கி, அதை மக்களின் மீது திணிப்பது மட்டும் சரியா? உண்மையைச் சொல்லப் போனால், இந்தியா போல் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத தேசங்கள் மிகக்குறைவு. இவற்றைப் பற்றி ஏற்கெனவே பின்னூட்டியிருக்கிறேன். அப்படி இருப்பதைத் திரையில் காட்டுவது தப்பே இல்லை என்பது எனது வாதம்.

ஒரு திரைப்படம், லாபம் சம்பாதிப்பதையே கருத்தாகக் கொண்டு தான் எடுக்கப்படுகிறது. அதுபோல், ஒரு திரைப்படத்தில் இவற்றைத் தான் காட்ட வேண்டும், இவற்றைக் காட்டக் கூடாது என்பதும் தவறு. டேனி பாயில், எப்பொழுதுமே, ஸ்லம்டாகின் மூலம் மக்களுக்கு அறிவை வழங்குகிறேன்; அவர்களைப் படிக்க வைக்கிறேன் என்று அறிக்கைகள் விடவில்லை(உடனே, இதோ அவரது அறிக்கை என்று நண்பர்கள் யாராவது இங்கு பின்னூட்டமிடுமுன், நான் சொல்ல வந்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்). அவர் வேலை, படமெடுத்தது. அவ்வளவே. இந்தியாவில் நிலவும் குரூரத்தைப் படத்தில் காட்டினார். தட்ஸ் ஆல். இந்திய மக்களின் அறியாமையில் விபசாரம், அது இது என்று இதைப்பற்றிச் சொல்வது கொஞ்சம் ஓவரோ என்று எனக்குத் தோன்றியது.

திறந்த மனத்தோடு இந்தக் கருத்துகளை வைத்திருக்கிறேன். ஒரு ஆரோக்கியமான விவாதமாக இது மாறும் என்ற நம்பிக்கையில். நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 3, 2010 6:49 AM

தல,
அவனுங்க மூஞ்சியில என் பீச்சாங்கைய வைக்க..
திருட்டுநாய்ங்க,இதுவும் ஒருவகையில் ஊடக திருட்டுதான்.நாம் காப்பிரைட் இல்லாமல் காப்பிஅடிச்சா கிழிக்கிறாமாதிரி அவனுங்க செய்ய்றப்பயும் கிழிக்கனும்.அதைத்தான் செஞ்சீங்க.வெல்டன்.
ஃபார்மாலிட்டி டன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 3, 2010 6:52 AM

தல தமிலிஷில் மொய் வைக்க முடியலை

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 3, 2010 7:13 AM

தல அந்த நித்யானந்தா வீடியோவாமே?லின்க் கிடைக்குமா?

ராஜ நடராஜன் said... March 3, 2010 7:17 AM

//இந்தப் வறுமைப் பரிதாபம்தான் காசு பார்க்க சரியான வழி-ங்கறதுக்கு.. 2004-லேயே ஒரு அம்மிணி அடி போட்டு கொடுத்திருக்காங்க. 2009 - ஸ்லம்டாக் இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த ‘ஆஸ்கரை’ விட, 2005-ல் Born Into Brothels வாங்கிய ஆஸ்கர்தான்..., நமக்குப் பெருமை.//

இன்னும் பின்னாடி போனா இந்திய வறுமையை உலகம் அறிய வைத்ததில் சத்யஜித்ரேக்குதான் முதல் பங்கு.

ஜோதிஜி said... March 3, 2010 7:38 AM

வணக்கம் பாலா. தாமதம் தான். வாழ்த்துகள். அக்கிரமாய் நல்லவராய் இருக்கிங்களே?

சுப.தமிழினியன் said... March 3, 2010 8:21 AM

//இந்தியா போல் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத தேசங்கள் மிகக்குறைவு.//
கருந்தேள் இது சரியான கருத்துதான்.
உங்கள் கருத்துகளோடு நானும் ஒத்துப்போகிறேன்.

வினோத்கெளதம் said... March 3, 2010 10:08 AM

@சுப.தமிழினியன் & கருந்தேள் கண்ணாயிரம்..
/இந்தியா போல் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத தேசங்கள் மிகக்குறைவு.//

சத்தியமான வார்தைக்கள்..
Then friends Y u r still living in India.Get the Citizenship or apply to PR of anyother peaceful and lovable country like u r telling and go their..

முரளிகண்ணன் said... March 3, 2010 10:15 AM

பாலா நீங்க நட்சத்திரம்னு கேள்விப்பட்ட உடனேயே அடிச்சிப் பிடிச்சு வந்தேன். அட்டகாசமான பதிவு. தக தகன்னு மின்ன வாழ்த்துக்கள்

Mageshwaran S said... March 3, 2010 10:31 AM

Bala...what about "Kite runnner" Producers?

--Magesh

Mageshwaran S said... March 3, 2010 10:32 AM

Btw..all the best..rock on!!!

வினோத்கெளதம் said... March 3, 2010 10:34 AM

Slumdog பார்க்கும்பொழுதே எனக்கு பற்றிக்கொண்டு வந்தது..Rehmaan ஒருவருக்காக ..!!

தல இந்தியவை வறுமையான நாடாக காட்டினாலும் பராவயில்லை..ஆனால் இந்திய மக்கள் அனைவரும் கொடுரப்புத்தி கொண்டவர்கள்ப்போல் சித்தரிப்பது தான் கொடுமை..

Zana is the Real brothel..

Heam said... March 3, 2010 11:13 AM

Bala anna , i got the same feel while i watched this doc a year ago but i didn't get in to the deep research coz the truth will hurt a lot . i repeat the last punch line by you ... These so called zana and boel who makes money in the name of service were real Hookers .

kanagu said... March 3, 2010 11:39 AM

nalla karuthukkal.. pagirvu anna... neraya therinjikitten..

aana itha yen kaata kooduthu-nu solreenga nu theriyala... oru director avar enna pannanum apdingrathula muzhu suthanthiram irukku... apdi irukkum podhu Slumdog millionare la illatha oru vishayatha kaatala.. atha namma +ve ah eduthu namma naata maathi kaatama avan yen apdi kaamichan apdi-nu kaekurathu thappunu thonuthu...

The bicycle thieves padam paathilla.. aana padichirukken... kittathita varumaya kondaduna padam... aana thalaisirantha padathula onnu...

padathula realism ethirpaakurom.. aana nammala solli kaamikum podhu athu thappunu paduthu :( :(

avangalukku thairiyam irundhudu eduthanga.. aana namma directors Australia-la poi anga nadukkura racism pathi eduka maatanga.. athe maathiri Indians kita America la irukkura konja people oru maathiri nadanthupaanga-nu kelvi pattu irukken.. athellam edukkama America-va azhaga kaata namma directors padatha paadu paduvaanga... avlo thooram poravanga athayum padam pudikanum.. yenna athu nijam...

VIJAY said... March 3, 2010 11:57 AM

அருமையான பதிவு பாலா. ஸ்லம் டாக் என்ன கோணத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியாமல் அதை சிலாகித்து பேசுபவர்களை கண்டால் செம டென்ஷனாகும் எனக்கு. யார் இங்கு (இந்தியா) வந்து என்ன செய்தாலும் கேட்க நாதி இல்லை. அவனவன் அவன் வேலய பார்த்துக்கொண்டு போய்ட்டே இருக்கான். செய்தி ஊடகங்கள் பண்ணுவதும் ஒரு வகையில் விபசாரம்தான். இன்றைய சூடான செய்தி நாளைய குப்பை. மும்பை தாக்குதலில் மாட்டினவனை உடனே போட்டுத்தள்ளாம பிரியாணி போட்டு உபசரித்துக்கொண்டு இருக்கோமே அந்த தைரியம்தான் பல பேரை வாழ தகுதி இல்லாத நாடு என்று சொல்லவைக்குது. நம்மிடையே ஒற்றுமை இல்லாதபோது 4 என்ன 40 நாய்கள் கூட வந்து எல்லா வழியிலும் நம்மை பயன்படுத்தி காசு சம்பாதிக்கும். காசு சம்பாதிக்கதான் படம் எடுக்கிறான் என்றால் அவன் வீட்டில் உள்ள அசிங்கத்த எடுக்க வேண்டியதுதானே? நல்லா காசு கிடைக்கும். செலவும் கம்மி. இவனுங்க இது போல எல்லாம் படம் எடுத்து அதுக்கு ஒரு கூட்டம் ஜால்ரா தட்டி தட்டி இங்க நல்ல விஷயம் எதுவுமே இல்ல என்று ஒரு பிரமைய உருவாக்கிட்டாங்க.

கருந்தேள் கண்ணாயிரம் said... March 3, 2010 12:20 PM

நண்பர் விஜய் - சற்று கூல் டௌன் ஆக வேண்டுகிறேன். ஸ்லம்டாக் என்ன ‘கோணத்தில்’ எடுக்கப்பட்டது என்பது உஙளுக்குத் தெரியும் என்றும், அதனை சிலாகித்துப் பேசுவது உங்களுக்கு ‘செம டென்ஷனாகும்’ என்றும் பதறுகிறீர்கள். ஆனால், இந்த ஏழ்மையையும், வறுமையையும், விபசாரத்தையும் படத்தில் காட்டுவதே தவறென்றால், நாடு முழுவதும் அது நடந்துகொண்டிருப்பது தவறில்லையா? இது தான் எனது கேள்வி. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று ஒரு மதவாதக் கட்சி பிரச்சாரம் செய்வதைப் போலவே உள்ளது. இப்படிச் சொல்வதுதான் அயோக்கியத்தனம். நடக்கும் எல்லாவற்றையும் மறைத்து, எதுவுமே நடவாதது போன்ற ஒரு மாயையை நிகழ்த்த முயலும் பொய். உங்கள் வீட்டிலிருந்து பத்து அடிகள் வைத்து வெளியே வந்து பாருங்கள். கட்டாயம் ஒரு குடிசையையாவது, ஒரு சேரியையாவது நீங்கள் பார்க்க நேரிடும். கண் முன்னர் நடக்கும் இந்த விஷயங்களை ஒருவர் திரைப்படத்தில் மட்டும் காண்பிக்கவே கூடாதென்பது எந்த வகை நியாயத்தில் சேரும் என்பதை உங்கள் ‘கோணத்தில்’ விளக்க வேண்டுகிறேன்.

மட்டுமல்லாது, எவனோ ஃபாரின்காரன் மட்டும் இதை எடுக்கவில்லை. சலாம் பாம்பே பார்த்திருக்கிறீர்களா . .ஸ்லம் டாக் எல்லாம் தூசு. சலாம் பாம்பே பாருங்கள். அதை எடுத்தது யார் என்றும் சற்று தேடிப் பாருங்கள். பின் உங்கள் கருத்தைக் கூறுங்கள் நண்பரே. பரபரப்பில்லாது, கூல் டௌன் ஆகுங்கள்.

Ravi said... March 3, 2010 12:25 PM

////இந்தியா போல் மக்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத தேசங்கள் மிகக்குறைவு.//
கருந்தேள் இது சரியான கருத்துதான்.
உங்கள் கருத்துகளோடு நானும் ஒத்துப்போகிறேன்.//
எல்லா நாடுகளிலும் குறைகள் உள்ளது. பல நாடுகளை பார்த்தால் இந்தியா எவ்வளவோ பரவாயில்லை

VIJAY said... March 3, 2010 12:33 PM

நண்பா...நான் இந்தியா ஓளிர்கிறது என்று சொல்லவில்லை. நடக்கும் அசிங்கங்களை, அநியாயத்தை திருத்த அல்லது தட்டி கேட்க முயலாமல் எல்லோரும் அவரவர் வேலைய பார்த்துக்கொண்டு போவதுதான் கேவலமாக இருக்கு. அதை அப்படியே ஒரு கூட்டம் படம் என்ற பெயரில் எடுத்து துட்டு சம்பாதிக்குது. அதை பார்த்தும் உணராமல் அதை புகழ்ந்து கொண்டாடுவது அதைவிட கேவலமாக இருக்கு.

கருந்தேள் கண்ணாயிரம் said... March 3, 2010 12:41 PM

உணர்ந்தாலும், இந்தியாவில் எதுவும் யாராலும் செய்ய இயலாது நண்பரே. மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல், மதவாதத்தையும், ஜாதிபேதத்தையும் மட்டுமே தூண்டி விடுவதாக மட்டுமே உள்ளது. தஙலது குடும்பத்துக்காகக் காசு சேர்ப்பதே அவர்களது முக்கியத் தொழில். யாராவது சீர்ப்படுத்தக் களத்தில் இறங்கினால், மரணம் உறுதி. ஆகவே தான் இப்படி. இது வேறு நாடாக இருந்தால், இந்த நிலை மாறிவிடும். ஆனால், இந்தியா இப்படியே தான் இருக்கும். இதுதான் வேதனையான உண்மை.

VIJAY said... March 3, 2010 12:47 PM

தவறுகளை தட்டி கேட்க வேண்டாம். அதற்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போகாமல் இருந்தாலே பாதிக்குமேல் வெற்றிதான். அதற்கும் யாரும் தயாராக இல்லை என்பதுதான் கஷ்டமாக இருக்கு.

<i><b>Bullet</b></i><b> மணி</b> said... March 3, 2010 1:02 PM

இந்த பசங்களோட வாழ்க்கையப் பத்தி யோசிக்கும் போது கொஞ்ச குற்ற உண்ர்ச்சியா இருக்கும்... நம்ம ஒண்ணும் பண்ண முடியலயேன்னு

மாமா பசங்க சிறுமிங்க உடல கற்பழிச்சா
வெளிநாட்டுக்காரனுங்க directorங்கற பேர்ல இவங்கள படம் பிடிச்சு காட்டி வாழ்க்கையவே கற்பழிக்கிறானுங்க...

slumdog கேள்வி பட்டேன் ஆனா இந்த Born into Brothels....நான் இன்னைக்கு தான் கேள்விப் படுறேன்.
ரொம்ப நன்றி ,.. இப்படி பட்டவனுனங்க இருக்கானுங்கன்னு அடையாளம் காட்டியதற்கு
...

<i><b>Bullet</b></i><b> மணி</b> said... March 3, 2010 1:03 PM
This post has been removed by the author.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 3, 2010 1:30 PM

@ராஜேஷ் (கருந்தேள்)
நண்பா உங்க கருத்து எனக்கு வியப்பும் வருத்தமும் அளிக்கிறது,தாய் மண்ணுக்கு 2மாசத்துக்கு அப்புறம் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் எனக்கே அவ்வளவு பரவசமும்,சுகானுபவமும் கிடைக்கிறது. தாய் மண்ணிலேயே இருந்து கொண்டு இப்படி சொல்லலாமா?
===========
இப்படி எண்ணம் தோன்றும் போதெல்லாம் ஐரோபியரும்,அமெரிக்கரும் பேக்பேக்கிங் சென்றுவிடுவர்.2முதல் மூன்று மாதம்,என்ன தான் சொர்க்கம் போல இடத்துக்கு போனாலும் கண்டிப்பாக வீடு திரும்பி விடுவர்.அநேகம் பேர் பார்க்க நினைக்கும் சுற்றுலா தலம் நம்ம புண்ணிய பூமி தான்.அதிலும் 124க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து
வெளியேறிய சுமார் 2000 பேர் பாண்டிச்சேரி அருகே ஆரோவில் என்னுமிடத்தில் யுனிவர்சல் சிட்டியில் வந்து தங்கி தங்கள் வாழ்க்கையை மிக எளிமையாகவும் ஆக்க பூர்வமாயும் ஆக்கிகொண்டுள்ளனர்.
அவர்கள் யாருமே நம் நாட்டை மக்கள் வாழத்தகுதியில்லாத நாடு என சொன்னதில்லை.
என்ன தான் நான் இங்கே அமீரகத்தில் பொருளீட்டினாலும் எல்லா முதலீடுமே தாய் மண்ணில் தான் செய்வேன்.40க்கு மேல் சொந்தமண் தான்.தல ஹாலிவுட் பாலா கிட்ட கேளுங்க ஆறு வருடமா அவர் அடக்கி வைத்திருக்கும் ஃபீலிங்ஸை.
உங்கள் இந்த எண்ணம் சீக்கிரமே மாறும் என நம்புகிறேன்.
http://www.auroville.org/
http://en.wikipedia.org/wiki/Auroville

shortfilmindia.com said... March 3, 2010 1:31 PM

பாலா.. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு பதிவு.. பாதி தொண்டு நிறுவனங்கள் இம்மாதிரி விஷயங்களை வைத்து கொள்ளை பணம் சம்பாதிக்கிறார்கள்.

கேபிள் சங்கர்

VIJAY said... March 3, 2010 1:53 PM

///தல அந்த நித்யானந்தா வீடியோவாமே?லின்க் கிடைக்குமா?///

இன்னும் எத்தனை நாய்ங்க இதுபோல சாமியார் என்ற போர்வைல இருக்கோ தெரியல. இந்த லிங்க் போய் பாருங்க. சன் டிவி ரிப்போர்ட் ஆக இருக்கு. SEARCH IN THIS PAGE.

http://www.picktorrent.com/torrents/42/ayngaran-5.1-tamil-movie-free-download/

<i><b>Bullet</b></i><b> மணி</b> said... March 3, 2010 2:16 PM

நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்றேன்.
இந்தியால வறுமை இருக்கிற மாதிரி காட்றது தப்புன்னு சொல்லல.வறுமையின் நிறம் சிவப்பு காட்டாததையயா காட்டிறப்ப போறாங்க.
இந்த கதையில் நடிக்க director (be it as indian or foreigner) அந்த பகுதியில் வாழும் அதே பாத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார். இதனால் அந்த குழந்ததைகளின் கல்வி பாதிக்கப்பட்டததாக நண்பர் எழுதியிருப்பதை நினைத்து வருந்துகிறேன்.

இந்த படம் வராமல் இருந்திருந்தால் அவர்கள் யார் என்று
யாருக்கும் தெரியாமலே போயிருக்கும்...

அவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது தவறில்லையா என்றால்... தவறுதான்...
அதே சமயம் இதுவும் தவறு தான்

butterfly Surya said... March 3, 2010 4:19 PM

இந்தியாவின் ஏழ்மையை இன்னொரு ஆஸ்கரோடு கொண்டாடுவோம்.////////

செருப்படி..

கோபிநாத் said... March 3, 2010 7:51 PM

\\ஆனால்.. ஸானா.. இந்த டாகுமெண்ட்ரியின் பெரும்பாலான காட்சிகளை ஹிடன் கேமராக்கள் மூலம் எடுத்தது, சம்பந்தப் பட்ட சில குழந்தைகளுக்கே படம் வெளிவந்து, ஆஸ்கரின் கதவை தட்டும் வரையில் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளும், மற்றவர்கள் அனுமதியில்லாமல்... (சில சமயம் அவர்களின் விருப்பமில்லாமலும்) அவர்களை எடுக்கும் புகைப்படங்களும், பந்தாவாக டாகுமெண்ட்ரியில் வலம் வருகிறது.
\\

அட கொடுமையே...இது இப்பதானே தெரியுது..படம் பார்க்கும் போது ஒன்னுமே தெரியலியே எனக்கு ;(

@சென்ஷிக்கு ஒரு ரீப்பிட்டே ;)

கருந்தேள் கண்ணாயிரம் said... March 4, 2010 4:34 AM

@ கார்த்திகேயன் - நண்பா . .நான் சொல்லவந்தது வேறு . . அதைப்பற்றித் தெளிவு படுத்திவிடுகிறேன்.

இந்தியாவை நான் ஏன் வாழத் தகுதியில்லாத நாடு என்று சொன்னேன்? பல காரணங்கள். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, கஸ்டமர் சேடிஸ்ஃபேக்‌ஷன் என்பது முற்றிலுமாக இல்லாத ஒரு தேசமாக இது இருக்கிறது. ’நான் அப்படித்தான் தருவேன். முடிந்தால் அனுபவி. நான் கொடுக்கும் பொருளில் தவறு அப்படித்தான் இருக்கும். அது என் இஷ்டம். நீ நாசமாய்ப் போ’ என்ற மனநிலையில் தான் இந்தியாவில் 90% நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அரசுத் துறையிலோ - கேட்கவே வேண்டாம். ஒரு மனிதனைப் புழுவைப் போல் நடத்தும் சகமனிதர்கள் இங்குதான் பார்க்க முடியும். மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத பல திட்டங்கள் இங்குதான் அமல்படுத்தப்படுகின்றன.

ஒரு மனிதனுக்கு அவசியத் தேவைகள் என்னென்ன? உணவு - இருப்பிடம் - போக்குவரத்து வசதி - வேலை- சட்டம் - சுகாதாரம்.

இவை எல்லாவற்றிலுமே இந்தியா ஒரு மிக மோசமான உதாரணமாகத் திகழ்கிறது. ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன் - சென்னையில் ஒரு பேருந்தில், நீங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் அடைபடாமல், நிம்மதியாக இதுவரை பயணித்ததுண்டா? எங்கு நோக்கினும் இதே ‘டேக்கன் ஃபார் க்ராண்டட்’ மனநிலை தான் நாடு முழுவதும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

அரசியலை எடுத்துக்கொள்வோம். எந்த அரசியல்வாதியாவது மஅளுக்கு நல்லது செய்கிறானா ? இல்லை. தங்களது குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதே இவன்களின் லட்சியம். மீறி எவனாவது நல்லது செய்ய முன்வந்தால், அவன் காலி.

இப்படி எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஊழலும் சுயநலமும் மலிந்திருக்கும் இந்த நாட்டில், ஒரு சராசரி மனிதன் சமரசம் செய்துகொள்ளாமல் எப்படி வாழ இயலும் என்பதே நான் சொல்ல வந்ததன் சாராம்சம்.

இந்தியாவில் ஒருவன் வாழ வேண்டுமென்றால், இந்த ‘டேக்கன் ஃபார் க்ராண்டட்’ மனநிலையை வளர்த்துக் கொள்வது அவசியம். சகிப்புத்தன்மை அளவுக்கதிகமாக வேறு இருக்க வேண்டும்.

பல முறை, இந்த சமரசங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் நண்பா. நான் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனும் அப்படித்தான் என்று நமக்கே தெரியும்.

இதுதான் நான் அப்படிச் சொல்லக் காரணம். எனகு எந்தப் ‘ப்ரெஜுடைஸும்’ கிடையாது. திறந்த மனத்தோடு தான் எனது கருத்தைச் சொல்கிறேன். நீங்கள் அமீரகத்தில் இருக்கிறீர்கள். தாய்னாட்டுக்குச் செல்லவேண்டும் என்ற தாகம் உங்களுக்கு இருப்பது இயற்கை. ஆனால், என் குழந்தைகளை இந்த இந்தியச் சமூகத்தில் வளர்த்து, அவர்களும் இந்த ஜாதி மத சழக்குகளில் அகப்பட்டுக் கொண்டு மாறி மாறி அடித்துக் கொண்டு சீரழிவதை நான் விரும்பவே இல்லை நண்பா. அதுதான் நான் அப்படிச் சொல்லக் காரணம்.

நான் தேசத்துரோகி அல்ல. மாறாக, என்னுடைய தேசம் இப்படி ஆகிவிட்டதே என்று கவலையில், அதனைத் திருத்த முடியாது என்பதைத் தெரிந்து கொண்டதனால், நானாவது தப்பிவிட முயன்று கொண்டிருப்பவன். நன்றி நண்பா.

Suresh said... March 4, 2010 6:26 AM

First Natchathira valthukal apprum ungaluu periya mailum nalla perisa pinnotum potten pathilae illaiya thaliva i read ur blogs continously for more than 2 weeks and saw most of the films in which still cove padam en manathai vittu neenga villai

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 4, 2010 9:27 AM

@ராஜேஷ்
விடுங்க,நானும் இப்படித்தான் வெறுத்து போய் இருந்தேன்.முடிவில்லாத ஒன்றுக்கு விடைதேடி ஆவதென்ன?

ஒன்னு மேலே சொன்ன விஷயத்துக்கு அடாப்ட் ஆகனும்,இல்லை மிடில் கிளாஸ் லேந்து அப்பர் கிளாஸ் ஆவதற்கு உழைக்கனும்.

நம்மால் உண்மையிலேயே நாட்டுக்கு ஏதாவது செய்யமுடியும்னா மக்கட் தொகையை கட்டுப்படுத்தறது தான்.

வளர்க்க முடியும்னாலும் மக்கள் தொகையை குறைக்க ஒண்ணோட நிறுத்தறதை தவிர வேறென்ன வழி? கணவன் மனைவி சும்மா இருந்தாலும்.
பாக்கறவங்க எல்லாம்
ஏன் ஒன்னோட நிறுத்திட்டீங்க?
வயசு தான் இருக்குல்ல
உங்க முத குழந்தைக்கு தான் அஞ்சு முடிஞ்சுடிச்சில்ல?
உங்க குழந்தை முரட்டுதனமா வளரும்.
பெரிசுக்கு விளையாட தம்பி பாப்பா வேணாமா?
என்னை மாதிரி அத்தை சித்தப்பா பெரியப்பான்னு இல்லாம போகனுமா?
இப்படியெல்லாம் கேட்டு உசுப்பிவிடுவாங்க.
==========
லோயர் மிடில் கிளாஸில்
மூனும் பொண்ணாயிடுச்சி,அதுதான் இந்தவாட்டியாவது பையம் பிறக்கும்னு

சாமி தர்ரதை போய் நாம தடுக்கமுடியுமா?
அடப்போப்பா நாளைக்கு ஒன்னுன்னா நம்மை தாங்க ஒரு புள்ளை வேணாமா?
என்னையா உடம்புல தெம்பிருக்குல்ல.
போய்யா அப்போதான் பொண்டாட்டி திமிர் அடங்கும்.
ஏம்பா என்னா செலவு இருக்கு
ஒரு ரூவாய்க்கி ரேஷன் அரிசி
இலவச கேஸ்
இலவச மசாலா சாமான்
இலவச டிவி அடுப்பு
மண்ணென்ணை
இலவச கல்வி
புள்ளைங்க வளர்ரதே தெரியாதுய்யா..
வூடு ஜேஜேன்னு இருக்க வேணாமா?
என் பங்காளிகிட்ட மோத காளை வேணாமா?
==========
இப்படி தான் பெருக்கியிருக்கோம்
இதுக்கு விடை கிடைக்குமா நண்பா?
------------------
என்ன ஊழல் இருந்தாலும்
தனக்குன்னு சொத்து சேத்தாலும்
எந்த நாட்டிலயும்
கட்டாய இலவச கல்வி தரலை
நல்ல மதிப்பெண்ணுக்கு குறைந்த விலைல கல்வி தரலை.
(வெளிநாட்டில் ஒரு ஆர்ட்ஸ் டிகிரி படிக்க ஆகும் கட்டணத்தை விட நம் நாட்டில் இங்ஜினிரிங் படிக்க கட்டணம் குறைவு)
இலவச மெடிகல் அல்லது இவ்வளவு குறைந்த கட்டணத்தில் பிரசவமோ அல்லது இதய அறுவை சிகிச்சையோ செய்யமுடியுமா?
முடியவே முடியாது.
நூற்றி பதினேழு கோடி பேர் வாழும் நாட்டில் மேலே நீங்கள் கேட்டவை நிறைவேற எத்தனை ஒளியாண்டு பிடிக்குமோ?நல்ல ஆரோக்யமான விவாதத்திற்கு வழி வகுத்தமைக்கு நன்றி நண்பா

affable joe said... March 4, 2010 10:24 AM

கருந்தேளின் கருத்தோடு ஒத்து போகிறேன் .வெள்ளக்காரன் படமெடுத்து சம்பாரிச்சான் அப்புடின்னு சொல்றீங்களே அவன் படம் எடுத்து காட்டி தான், பல நல்ல உள்ளங்கள் இந்தியாவிற்கு உதவ வைத்திருக்கின்றனர் .இப்படி எல்லாம் படம் edukkaadhanu சொல்றதுக்கு முன்னாடி உலக வங்கி,ஐரோப்பியா ,ஜப்பான்,அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து இந்திய வாங்கும் கடன்,உதவித்தொகை போன்றவற்றை தெரிந்துகொள்ளுங்கள் .முதலில் இப்படி பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு அப்புறம் வெள்ளைகாரர்களை திட்டுங்கள் .கொஞ்சம் ஏ.சி அறையைவிட்டு வெளியே வாருங்கள் அய்யா ,குடுசைகளும்,விபச்சார விடுதிகளும் ,அனாதை குழந்தைகளும் இருக்கிறார்கள் இன்னமும்.பில் கேட்ஸ் aids மற்றும் புகை இலையால் வரும் கேன்சர் ஆகியவற்றை தடுக்க எவ்வளவோ தருகிறார் கணக்கு வழக்கின்றி , அந்த பணத்தை கொடுக்க தூண்டியது இந்த மாதிரி யாரோ எடுத்த படம் உடனே கேட்ஸ் ஐ திட்ட ஒரு கூட்டம் வரும் என்னவோ இவர்கள் வீட்டில் அவர் திருடியது போல திட்டுவார்கள்.
நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இந்த மாதிரி படத்தை காட்டி தான் உலக வங்கியிடம் பிச்சை எடுகின்றனர் .

//(வெளிநாட்டில் ஒரு ஆர்ட்ஸ் டிகிரி படிக்க ஆகும் கட்டணத்தை விட நம் நாட்டில் இங்ஜினிரிங் படிக்க கட்டணம் குறைவு//
அப்படி படித்துவிட்டு வெளிநாட்டுக்கு போய் வேலை செய்து அவர்களுக்கு வரி கட்டுபவர்கள் இப்படி இந்திய ஒளிர்கிறது என்று சொல்வது தான் கோபத்தை வரவைகிறது .

//நூற்றி பதினேழு கோடி பேர் வாழும் நாட்டில் மேலே நீங்கள் கேட்டவை நிறைவேற எத்தனை ஒளியாண்டு பிடிக்குமோ?
லஞ்ச, ஊழல் பணங்களை திரும்பி கொண்டுவந்தால் ஒரு ஆண்டே போதும் .

//பாதி தொண்டு நிறுவனங்கள் இம்மாதிரி விஷயங்களை வைத்து கொள்ளை பணம் சம்பாதிக்கிறார்கள்.
உண்மைதான் வெளிநாட்டினர் நம்பி கொடுக்கும் பணத்தை நம்ம ஆட்கள் ஸ்வாக செய்து விடுகின்றனர் .

மற்றவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு அதை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என்று பாருங்க மக்கா.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 4, 2010 12:01 PM

@ஜோ
ஓ அப்படின்னா இந்தியால படிச்சிட்டு வெளிநாட்டுல போய் வேல பாக்க கூடாதா?வேல பாத்தாலும் வரி கட்ட கூடாதா?
இப்புடி நான் ஏன் வரி கட்டனும்னு நிறைய பேர் வரி ஏய்ப்பு செய்யுறதால தான் நிறைய நலத்திட்டத்துக்கு பணம் பத்தாம நீங்க சொன்னாமாதிரி இந்த மாதிரி படத்தை காட்டி தான் உலக வங்கியிடம் பிச்சை எடுகின்றனர் .
வெளிநாட்டுல வேலை செய்யிறப்போ கூட வேலை செய்யிறவன் இந்தமாதிரி படத்தை பாத்துட்டு ஓ இது தான் இந்தியாவான்னு கேக்குறது உங்கள போல ஆளுக்கு எப்படி தெரியும்?
//லஞ்ச, ஊழல் பணங்களை திரும்பி கொண்டுவந்தால் ஒரு ஆண்டே போதும் .//
அப்படியா?
அப்படியெல்லாம் கூட நடக்குமா?
இதெல்லாம் கந்தசாமி சிவாஜி போல படத்துல வந்தா தான் உண்டு,ரியல் லைஃப்ல சான்சே இல்லை.

சரி அப்படியே கொண்டுவந்து எல்லொருக்கும் டிவைட் பண்ணி குடுக்கலாமா?

பாலா என்ன குறை சொன்னார்.வெளிய வேலை பார்க்க வந்தாலும் தாய் நாட்டு பற்றினால் இந்த பதிவை போட்டார்,நான் நேரம் செலவிட்டு இந்த பின்னூட்டம் போடுறேன்.

எங்களால் முடிஞ்சதை செய்யாமல் போக மாட்டோம் எங்கயும்.அதை ஒவ்வொரு இடத்திலும் சொல்லிக்கொண்டிருக்க முடியாதுங்க.

என்ன அழகா காமிரா சப்ளை பண்ணி உள்ள வந்து வேவு பாத்து படம் எடுத்துட்டு போயிருக்காங்க,அதைப்பற்றி பதிவு போட்டா உங்கலுக்கு கோவம் வருமா?போங்க சார்.

Axleration said... March 5, 2010 12:52 AM

கொலை வெறியோடஎழுதி இருக்கீங்க போல

//Born Into Brothels = Zana Aunt *unt (*-ல் ‘C' போட்டுக் கொள்ளவும்)//

சிவன். said... March 5, 2010 6:12 AM

எப்படி தல..பிசியா இருந்துக்கிட்டே பதிவு போடுறீங்க...
(இதப்பத்தியே நீங்க தனியா ஒரு பதிவு போடணும்...)
நம்மளால ப்ளாக் பக்கமே வர முடியல...!!!

இப்பதான் இந்த பதிவ படிச்சேன்..நச்...
எனக்கும் ஸ்லம்டாக் படத்தில் நம்ம ஊரை ரொம்ப கேவலமா காட்டீட்டங்களோன்னு ஒரு கோவம் இருக்கு,
படத்தில் காட்டப்படும் அனைத்தும் இல்லைன்னு சொல்லிட முடியாது, என்ன கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கார் டேனி பாயில்.
அதுவும் ஆஸ்காரால ஸ்லம்டாக் இந்தியாவோட அடையாளத்தையே மாத்திடிச்சு...!!!
அதுதான் வருத்தம்... நீங்கள் அந்த புத்தகம் (Q&A - VIAKS SWAROOP) படித்தீர்களா, அதில் எந்த அளவுக்கு எழுத பட்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்...(நான் இன்னும் படிக்கவில்லை...)

------------------
" சாடுதல் பதிவர்க்கு இன்பம் அதற்கின்பம்
சாடியபின் கூடி விவாதிப்பது " : )

அறிவிலி said... March 5, 2010 9:55 AM

ஸ்லம்டாக் மில்லியனர் பாத்துட்டு என்னையும் இங்கு ஒரு சீனர் இப்படி கேட்டார்."உங்க ஊர்ல கக்கூஸெல்லாம் இப்படித்தான் இருக்குமா, அலம்பிக்கறதெல்லாம் உண்டா கிடையாதா"

affable joe said... March 5, 2010 10:30 AM

கார்த்திகேயன் நீங்கள் கூறிய "வெளிநாட்டில் ஒரு ஆர்ட்ஸ் டிகிரி படிக்க ஆகும் கட்டணத்தை விட நம் நாட்டில் இங்ஜினிரிங் படிக்க கட்டணம் குறைவு " இதே தான் நானும் சொல்கிறேன் இப்படி அரசு எவ்வளவோ செய்யும் பொது எல்லாத்தையும் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகிவிடுகிறார்கள் அப்புறம் அங்க ஒன்னும் இல்லன்னு ஆனப்புறம் இந்தியாவில் சொத்துவாங்கி ஏ.சி அறையை விட்டு வெளியே வர்றாதவர்கள் சொல்லுவது தான் இந்திய வல்லரசு,இங்கே யாரும் கஷ்டப்படவில்லை என்பதெல்லாம். அதுதான் எனக்கு கோபம் .பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் இது தான் இந்தியாவானு கேட்கும் போது ஆம் இப்படி தான் இருந்தது இப்போது முன்னேறிவருகிறது என்று சொல்லலாமே அதைவிடுத்து முற்றிலும் இல்லை என்று சொல்லுவது எப்படி சரியாகும் .அல்லது இது மட்டுமே இந்திய இல்லை என்று நல்லவிசயங்களை படமாக அல்லது புத்தகமாக காட்டலாம் .
//அப்படியெல்லாம் கூட நடக்குமா?
இதெல்லாம் கந்தசாமி சிவாஜி போல படத்துல வந்தா தான் உண்டு,ரியல் லைஃப்ல சான்சே இல்லை.

ஒரு நாளில் அரசு அழுவலகங்களில் பரிமாற்றம் செய்யப்படும் லங்கா பணத்தை பற்றிய விபரங்களை பாருங்கள் அப்புறம் தெரியும் .

இந்தியாவின் நிலைமையை முன்னேற்ற ஒரு முயற்சியும் செய்யாமல் சும்மா அவன் இல்லாததையும் பொல்லாததையும் படம் எடுக்கிறான் என்று புலம்புவது எந்த வகையில் நியாயம் நீங்கள் வேண்டுமென்றால் அமெரிக்காவிலோ அமீரகதிலோ உள்ள குடிசையை படம் எடுங்கள் நாங்கள் பார்க்கிறோம் :-)
ஒரே ஒரு கதை சொல்கிறேன் அதனோடு ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்
ஒரு நாள் வெளிநாட்டு பயணி ஒருவர் ஜப்பான் தொடர் வண்டியில் இந்த நாட்ல ஆரஞ்சு பலம் நல்லாவே இல்ல என்ன நாடோ என்று சொன்னாராம் ஒடனே எதிரில் இருந்த ஜப்பானியர் ஓடி போய் ஒரு கூடை நெறைய நல்ல ஆரஞ்சு பலன்களை வாங்கி வந்து அய்யா இந்த ஆரஞ்சு பழங்கள் சுவையாக இருக்கும் இல்லை என்றல் சொல்லுங்கள் நான் வேறு எங்காவது நல்ல பலன்களை வாங்கி தருகிறேன் தயவு செய்து என் தாய்நாட்டை தவறாக பேச வேண்டாம் என்று சொன்னாராம் .

தேச பற்று கிரிக்கெட் வெலயாட்டில் கூச்சல் போடுவதிலும் உண்மையை உரக்க சொல்பவனின் சங்கை மிதிப்பதிலும் அல்ல .முடங்கி கிடக்கும் தேசத்தை முன்னேற்றுவதில் தான் இருக்கிறது .

நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் தான் என்று நீங்கள் சொன்னால் என்ன பெயரையும் தேச துரோஹி பட்டியலில் சேர்த்துவிடுங்கள்
(i dont give a damn )

ஹாலிவுட் பாலா said... March 5, 2010 1:40 PM

இங்கே பின்னூட்டங்களுக்கு பொதுவா என் கருத்தை வைக்கிறேன்.

----

கருந்தேள்......., எந்த நாட்டவர் வேண்டும்னாலும்.. எந்த நாட்டைப் பற்றி வேணும்னாலும் படமெடுக்கட்டும். ஆனா.. நமக்குத் தெரியாத ஒரு நாட்டைப் பற்றி, திரையில் பார்க்கும் போது.. பார்ப்பது ஃபேண்டஸியா இருந்தாலும்.... அதுதான் உண்மையோன்னு தோணுமில்லையா?????

ஸ்லம்டாக்... நம்மூரின் ரியாலிடியின் ஃபேண்டஸி. சலாம் பாம்பே-வில் இதை விட மோசமாகத்தான் காட்டியிருக்காங்க. இல்லைன்னு சொல்லலை. ஆனா.. அது ஃபேண்டஸியா?? கிடையாதே!! அதிலென்ன.. அத்தனை விசயத்தையும்.. எக்ஸ்ட்ராவா காட்டி.. கடைசியில்.. குத்தாட்டம் போட்டா நம்மை வீட்டுக்கு அனுப்பினாங்க?

ஸ்லம்டாகை.... இந்தியாவில் பார்ப்பது ஒரு அனுபவம்னா.. அதுவே.. வெளிநாடுகளில் பார்ப்பது இன்னொரு அனுபவம். எந்த NRI-க்கும் இந்தப் படம் பிடித்திருக்குமான்னு தெரியலை.

NRI-யாக இருப்பதால் எல்லாம்.. எங்களுக்கு, இந்தியா மீது பாசம் இல்லைன்னோ, ஒவரா பாசம் காட்டுறோம்னோ எல்லாம்... பேசுவதும்.. ரொம்ப டிபிகல். எனக்கு இதை கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சி. இப்பல்லாம் தொடச்சிட்டு போய்டுறேன். NRIபாடு.. மத்தளம் மாதிரிதான்!!

இந்திய மக்களின் அறியாமைன்னு நான் சொன்னது..., படத்தில் காட்டிய விசயங்களை அல்ல. காப்பிரைட் உரிமைகளை. நமக்கு இன்னும் கன்ஸ்யூமரின் பவர் என்னன்னே தெரியாத போது, இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்த ஊரில்.. ஆஃபீஸில் நான் வழுக்கி விழுந்தால் கூட.. அதுக்காக.. என் பாஸை நான் sue பண்ண முடியும். அது நம்மூரில் சாத்தியமா? அப்படி சாத்தியப் பட்டாலும்.. பணம் வருமா?

இந்த சூழ்நிலையில்.. ஸ்லம்டாக் / born into brothels படங்களில்... ஏகப்பட்ட உரிமை மீறல் பிரச்சனைகளோடு படத்தை எடுத்து, அவர்கள் காசு பார்த்துவிட... இன்னும்.. வந்தாரை வாழ வைப்போம்னு கூவிகிட்டே இருக்கப் போறோமா?

இந்த லிங்கை பாருங்க.
http://en.wikipedia.org/wiki/Controversial_issues_surrounding_Slumdog_Millionaire

இது ஒரு வகையில்.. என் பிள்ளையை நான் அடிப்பேன். ஆனா பக்கத்து வீட்டுக்காரனுக்கு உரிமை கிடையாதுன்னு நினைக்கறதுதான்.


கருந்தேள்.. சொன்ன பதில்களிலேயே.. அவருக்கான பதிலும் இருக்குங்கறதுதான் உண்மை. இந்தியாவில் எதை செய்தாலும்.. எவனும் கேட்பதில்லைன்னுதான்... இப்ப கொஞ்சம் கொஞ்சமா இவங்க எல்லாம் உள்ளே வந்துகிட்டு இருக்காங்க. மாட்டிகிட்டாலும்.. வெகு எளிதாக வெளியே வந்துட முடியும்.

==========

டாகுமெண்ட்ரிங்கறது...... நடுநிலையாய் இருந்து எடுக்க வேண்டியது. BIB-ல்.. அல்லது ஒரு சார்பாய் இருந்தாலும்... குறைந்த பட்சம்... உண்மையை மட்டுமாவது காட்டலாம். அது கொஞ்சம் கூட இல்லை. இந்தப் பண்ணாடையைத் தவிர.. இந்தியாவில் யாருமே அந்த ஏரியாவை கண்டுகொள்ளாத மாதிரி.. சீன் போட்டதுதான் கடுப்பு. வெய்ட் பண்ணுங்க...., இந்த KAVI படத்துக்கும் ஆஸ்கர் கிடைக்கலாம். அதுக்கும் சேர்த்து வச்சி கொண்டாடிடலாம்.


========

ஹாலிவுட் பாலா said... March 5, 2010 1:54 PM

தொண்டு நிறுவனங்கள் அல்லது நான் ஃப்ராஃபிட் ட்ரஸ்ட் எல்லாமே யோக்கியம்னு ஒப்புக் கொள்ள முடியாது. என்னோட பழைய பாஸுக்கு.. இந்தியாவில் 4-5 ‘தொண்டு’ நிறுவனங்கள் இருக்கு. எல்லாமே டாக்ஸுக்காக நடக்கும் போலிகள்தான்.

கிறித்துவ மிஷனரிகள்... வலுக்கட்டாயமாக மதத்தை திணிக்கலைன்னாலும், அவர்களுக்கு வேறு வழிகள் இருக்கு. இதைப் பத்தி.. நான் சொல்லவே தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.

உலக வங்கியில்.. இந்தியா பிச்சை எடுக்குதா???? அப்ப.. அமெரிக்கா உலக வங்கியிடம் இருந்து ‘தர்மம்’ வாங்குதா என்ன??

ஜோ......, அமெரிக்கப் பொருளாதாரங்கறது.. ‘கடன்’ மட்டுமே!!!!! இந்த அரசாங்கம்.. ஒவ்வொரு நாளைக்கும் ‘இத்தனை மில்லியன்’னு கடன் வாங்கலைன்னா..., இந்த ஊரில்.. ஒரு பயலும் சாப்பாடு சாப்பிட மாட்டான். அந்த விசயத்துக்கு.. நம்மூரின் ‘சேமிப்பு’ பொருளாதாரம் எத்தனையோ பரவாயில்லை.

எந்த ஊரில்.. சேரியும், ஏழைகளும் இல்லைன்னு நினைக்கறீங்க? எழவு... என்னப் பிரச்சனைன்னா... வெளிநாட்டுக்காரன் படமெடுத்தா... அது இந்திய சேரியைப் பத்தியாதான் இருக்கும். இதுவே நம்மூருக் காரன், வெளிநாட்டுப் படமெடுத்தால்.. அது ‘down town'-ல் மட்டுமே இருக்கும்..... 10-15 உயரமானக் கட்டிடங்களை காட்டுவதாதான் இருக்கும். இல்லைன்னா..... நல்ல சுத்தமான பேக்ரவுண்டில்.. ஜங்கு. ஜங்குன்னு குதிக்கும்.. பாடல் காட்சிகள்.

பில் கேட்ஸ் செய்யும் உதவியெல்லாம் ‘ஜோக்’ லிஸ்டில் சேருங்க. அந்த ஆளை.. சோமாலியாவுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லுங்க பார்க்கலாம். ஒரு பைசா பேறாது.. அந்த நாட்டில் இருந்து. இதுவே இந்தியான்னா.... அவங்களுக்கு.. ஒரு ‘பெரிய கன்ஸ்யூமர்’ பெட்டகம். கேட்ஸ் மட்டுமல்ல. அத்தனை கார்ப்பொரேட்களும்.. மக்களுக்கு செய்யும் உதவிகள் எல்லாம்... பின்னாடி.. வேறொரு காரணத்தை வைத்துக் கொண்டுதான்.

இதெல்லாம். படமெடுத்துத்தான்.. கேட்ஸ் தெரிஞ்சிகிட்டார்னு நினைக்கிறதெல்லாம்.....!!!!!!!!!!!!!!!!!! மொதல்ல... அந்தாளுக்கு... aids-க்கு பணம் கொடுப்பதெல்லாம் தெரிஞ்சிருக்குமான்னு கூடத் தெரியாது. இதுக்குப் பின்னாடி.. பெரிய அரசியல் இருக்குங்க ஜோ. வெளிப்படையா பார்த்தீங்கன்னா.... எதோ.. இவரு கொடை வள்ளல்.... நமக்கு தர்மம் பண்ணுறாருன்னு மட்டும்தான் தெரியும்.

சுஜாதா சொன்னது நினைவுக்கு வருது......... “எதுவும் இலவசம் கிடையாது.”.

ஹாலிவுட் பாலா said... March 5, 2010 2:14 PM

முடங்கிக் கிடக்கும் தேசத்தை முன்னேற்ற... இந்தியாவில் மட்டும்தான் இருக்கணுமா??? அப்ப NRI-க்கள் அனுப்பும் பணம், தங்கம் எல்லாம்... நம் அன்னிய செலாவணியை தீர்மானிப்பதில்லையா?

மற்றவர்களை குறை கூறுவதை விட்டுட்டு... நம்மால் என்ன செய்ய முடியும்னு பார்க்கணும்னு சொல்லியிருக்கீங்க.

இந்தப் பதிவை வெளிநாட்டு NRI-க்கள் எல்லாம்.. வெளிநாட்டுக் காரனையும், இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியர்களையும்.. இங்கே குறை சொல்லிகிட்டு இருக்கோம். அதுக்கும் எங்களைத் திட்டுறீங்க.

இதுவே ஒரு NRI இந்தியாவைப் பத்தி எதுனா சொல்லிட்டா.. உடனே... ‘நீதான் இந்தியாவிலேயே இல்லையே. உனக்கு என்னத் தகுதி இருக்கு’ன்னு கேட்கறீங்க.

ஆனா... டேனி, ஸானாவை விட.. அதிகமா.. இந்தியாவைப் பற்றி தப்பா பேசுவது, நீங்கதான்னு நினைக்கிறேன்.

நம்ம நாட்டை விட்டு வெளியே இருப்பதால்தான்... அதன் மீது இயல்பாவே எங்களுக்கு அதிக பாசம் இருக்கு. தூர இருந்து பார்ப்பது. சுகுணா திவாருக்கு பதிலாக நான் எழுதிய பாரத மாதா பதிவு கூட, அப்படி இயல்பா வந்த கோபம்தான்.

ஆனா.. திரும்ப அதை படிச்சிப் பார்த்தப்ப, அவரை விட.. நான் தான் இந்தியாவை கேவலாமா பேசினேனோன்னு தோணுச்சி. இப்ப அந்தப் பதிவு இல்லை. அப்பவே அழிச்சிட்டேன்.

=========

எந்த நாட்டில் பிரச்சனையில்லைங்க?????? அமெரிக்காவில் எல்லாம் கிடைக்குதுன்னு நான் நினைக்கும் போது, இங்கயும்..... ‘ஒன்னுமே கிடைக்கறதில்லை’-ன்னு அமெரிக்கன் புலம்பிகிட்டு இருக்கான். ஆனா.. குறைந்த பட்சம்... அவன்.. அவனோட நாட்டை மட்டும், மற்றவர்கள் கிட்ட விட்டுக் கொடுத்து பேசுவதில்லை.

இந்த ஊரில் ஒரு கன்சர்வேட்டிவிடம்... ‘உங்க நாடு மோசம்’யான்னு சொன்னா.. துப்பாக்கி எடுத்து சுட்டாலும் சுடுவான். ஆனா.. நம்மூர் கன்சர்வேட்டிவ் ‘சரியா சொன்னீங்க. உங்க ஊருக்கு ஒரு விசா எடுத்துத் தர முடியுமா’ன்னு கேட்பான்.
===

இன்னும் நிறைய எழுதனும்னுதான் நினைக்கிறேன். முடிந்தால்....!!!!!!!!!

மீனாட்சி சுந்தரம் said... March 7, 2010 11:51 PM

திரு. பாலா அவர்களுக்கு,

முதலில் ஒரு சிறு பிழை, ஆம்ஸ்டர்டாம் தவறாக ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியருக்கிறது.
//(போட்டோக்ராபிக்காக ஆர்ம்ஸ்ட்ராங் அழைத்துச் செல்லப்படுவான்)//
உங்கள் பதிவை பார்த்து தான் இந்த படத்தை எங்கள் ஊர் நூலகத்தில் எடுத்துப் பார்த்தேன். முழுப் படத்தையும் பார்த்த பின் என்னுள் எழுந்த கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

படத்தின் டைரக்டர் மீதுள்ள உங்கள் ஆதங்கம் புரிகிறது, அனால் படத்தில் உள்ள சில நல்ல விசயங்களை சொல்லியிருக்கலாமே. மகாநதியில் தான் இந்த மாதிரி சிவப்பு விளக்கு பகுதியை நான் திரைப்படத்தில் பார்த்தது. இந்த படத்தில் காட்சிகளைப் பார்க்கும் போதும் அங்கே மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளை பார்க்கும் போதும் மனம் பதை பதைக்கிறது. இந்தியர்களே எத்தனை பேர் இந்த மாதிரி சேரிகளை உள்ளே சென்று பார்த்திருப்பார்கள்?

அவிஜித் இயற்கையாகவே ஓவியம் வரையும் அசாத்திய திறமை பெற்ற சிறுவன். படத்தில் அவன் வரைந்து வாங்கிய பரிசுகளையும் மற்றும் அவன் வரைந்த சில ஓவியங்களையும் பார்த்த போது எனக்கு இந்த படம் இல்லை என்றால் இந்த திறமையை எந்த அறிவுஜீவி பெங்காலி உலகுக்கு கட்டியிருப்பார் என்று தோன்றியது. அதே போல் அவிஜித் எடுத்த புகைப்படங்களும் மிக அருமை, அவன் உண்மையிலேயே பிறவி கலைஞன் தான். அவிஜித் இப்போது NYU இல் திரைப்படம் பயில்கிறார். படம் எடுத்தவர் நோக்கம் எதுவாகவும் இருக்கட்டும் அனால் அவிஜித் என்னும் கலைஞனை உலகிற்கு காட்டித் தந்த பெருமையாவது அவருக்கு சேரும் அல்லவா?

எத்தனையோ அமெரிக்கர்கள் என்னிடம் இந்தியாவை பற்றி உயர்வாக பேசியிருக்கிறார்கள். அமெரிக்கர்கள் இந்தியாவை வெறும் ஊடகங்களின் வாயிலாக மட்டும் தெரிந்துகொள்பவர்கள் அல்ல. நாம் இன்னும் ஏன் வெள்ளைக்காரன் என்ன நினைப்பான் என்று கவலைப் படவேண்டும்? என்னைப் பொறுத்தவரை இந்த படம் இந்தியர்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வையே உண்டாக்கும் என்று நெனைக்கிறேன். இங்கே பின்னூட்டம் இட்ட நண்பர்கள் பெரும்பாலும் படம் பார்காமலேயே உணர்ச்சிவசப் படுவதாக தெரிகிறது. நீங்கள் தான் கூகிள் லிங்க் முழுப் படத்திற்கும் தந்திருக்கிறீர்களே, அன்பர்கள் அனைவரும் படம் பார்த்து அவர்களது கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

உங்கள் கட்டுரையின் கடைசி வரி இயக்குனர் மீது கடுமையான விமர்சனமாக (ஆபாசம்) உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியதிற்கு நன்றி

ஹாலிவுட் பாலா said... March 9, 2010 8:35 AM

இப்ப தனக்கும் அந்த அமைப்புக்குமே சம்பந்தமில்லைன்னு சொன்னாலும் (இன்னும் வெப்சைட்டில் பேர் இருக்கு) நாலு மில்லியன் டாலர் சம்பாதித்த டாகுமெண்ட்ரியிலிருந்து ஒரேயொரு சிறுவனுக்கு படிப்புக்கு காசு கொடுக்காம.. இன்னும் அந்தப் பையனின் படத்தை வெப்சைட்டில் போட்டு காசு வசூல் பண்ணிகிட்டு இருக்கும் ஸானாவை விட.. நான் சொன்னது ஆபாசம் இல்லைன்னு நினைக்கிறேன்.

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil