புது வரவு - நம்பிக்கை

3/01/2010

Daybreakers (2010)


சினிமா கண்டுபிடித்ததில் இருந்து, இதுவரை... வெளிவந்துள்ள 1000 சொச்சம் வேம்பயர் படங்களிலும்... சொல்லாத ஒரு விசயம், Daybreakers -ல் உண்டு. இதற்கு முன், மூன்றுப் படங்களில், 99% மனித இனமும் அழிஞ்சது போல காட்டியிருப்பாங்க (28 Days After, I am Legend, Zombieland).

ஆனால் அந்தப் படங்களில் காட்டதது, மொத்த மனித இனமும் அழிந்தால், இந்த வேம்பயர்கள், ‘இரத்தத்திற்கு’ என்னப் பண்ணுவாங்க? தங்களின் எதிர்கால ‘இரத்தத் தேவை’க்கு, மீதியிருக்கும் அந்த 1% மனித இனத்தை காக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இல்லையா?

Daybreakers டீல் செய்வது அந்த ஏரியாவைத்தான்.


2019-20 களில், எதோ ஒரு நோயினால், பெரும்பாலான மனித இனம் ‘வேம்பயராக’ மாறிவிட, எஞ்சியவர்கள் பகல் வேளைகளில் மட்டும் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா) இப்பொழுது வேம்பயர்கள் கையில்.  அத்தனை வேலைகளும் இரவில் மட்டுமே நடக்கின்றன.

’இரத்தமே’ கிடைக்காமல்.. அத்தனை வேம்பய்ர்களும் பட்டினியால் அவதிப்பட, நாளாக கொஞ்சம் கொஞ்சமாக... வவ்வால் உருவத்தை அடைய ஆரம்பிக்கிறார்கள். கிடைக்கும் 1-2 மனிதர்களையும், அரசாங்கம்... தங்களின் ‘மாற்று இரத்த’ ஆராய்ச்சிக்காக, சிறை பிடிக்கிறது.

எட்வர்ட் (Ethan Hawke) இதுமாதிரியான ஒரு ஆராய்ச்சிச் சாலையில், ஒரு வேம்பயர் டாக்டர். மனிதர்கள் மேல் கொஞ்சம் கருணையுள்ளவன். மனித ரத்தத்தை குடிப்பதில்லை என முடிவு செய்து, மாற்று ரத்தத்திற்கான ஆராய்ச்சியை மட்டும் செய்து கொண்டிருப்பவன். ஆனால், எட்வர்டின் தம்பி, மனிதர்களை சிறை பிடிக்கும் படையில் ஒரு சோல்ஜர்.

ஒரு விபத்தில், சில மனிதர்களை சந்திக்கும் எட்வர்ட், அவர்கள் மூலம்..., ஏற்கனவே வேம்பயராக இருந்து... மனிதனாக உறுமாறிய எல்விஸை (William Dafoe) சந்திக்கிறான். தன்னையும் அதே ஆராய்சிக்கு உட்படுத்திக் கொண்டு மனிதனாக மாறும் முயற்சியில் எட்வர் இறங்க.., அரசாங்கம் இந்த மனித க்ரூப்பை வேட்டையாடத் தொடங்குகிறது.

அப்புறம் க்ளைமாக்ஸ்....!


கிட்டத்தட்ட வேம்பய்ர்களின் பார்வையில் இருந்து முதன் முதலாய் ஒரு படம்.  வேம்பயர்கள் மொத்த உலகையும் ஆண்டால், அப்பொழுது அவர்களின் வாழ்க்கை, உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், பிரச்சனைகள்-ன்னு பார்த்துப் பார்த்து யோசித்தவர்கள் க்ளைமேக்ஸில் மட்டும் கோட்டை விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இது மாதிரிப் படங்களுக்கு, எதாவது ஒரு பாஸிடிவ் முடிவை கொடுத்தேயாகணுமா? I am Legend படத்தின் ஆல்டர்னேடிவ் எண்டில் கூட, இப்படியொரு பாஸிடிவ் முடிவு வச்சிருப்பாங்க.

ஆனால், 28 Days Later படத்தை விட, இதில் வன்முறை அதிகம். ப்ளடி!!! இதற்கு ஸ்பெஷல் எஃபெக்ட் + விஷுவல் எஃபெக்ட் செய்தது.., LOTR, Avatar புகழ் ‘WETA Workshop' (Weta Digital-ன் தாய் நிறுவனம்). Weta Digital, The Lovely Bones சொதப்பிதை விட, இது எத்தனையோ பெட்டர். இப்படியே போனால்.. கொஞ்ச நாளில் ILM-ஐ அடிச்சிட்டு இவங்க முன்னாடி போய்டுவாங்க பாருங்க.

ஆஸ்த்ரேலியத் தயாரிப்புன்னாலும், ஊர்ப் பெயரையெல்லாம் சொல்லாமல், ஒரு யுனிவர்சல் சப்ஜக்ட் போல ஹேண்டில் செய்திருக்கும் நேர்த்தி, மிகத் திறமையான நடிகர்கள் (Ethan Hawke, William Dafoe, Sam Neil), முயற்சி செய்யாத கதைக் களம்னு நிறைய ப்ளஸ் இருந்தாலும், படத்தின் பின்பகுதி... மற்ற வேம்பயர் படங்களின் கார்பன் காப்பி மாதிரி போனதுதான் சொதப்பல்.

இருந்தாலும்... மற்ற வேம்பயர் படங்களில் இருந்து, இது ரொம்ப தூரம் விலகியிருப்பதுதான் ஃப்ரெஷ் பிக். விஜய், கிரி மாதிரி ஹாரர் ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு நல்ல எண்டர்டெய்னரா இருக்கும்.

(ஏற்கனவே Twilight விமர்சனத்தில் இந்த வேம்பயருக்கு தமிழ்ப் பெயர் கொடுத்த தொந்தரவால், இந்த முறை ஒழுங்கா.. தெரிஞ்சப் பெயரை மட்டும் யூஸ் பண்ணிகிட்டேன்! :) )



Daybreakers = Bloody Entertainers


41 தியேட்டர் கமெண்ட்ஸ்:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 1, 2010 11:28 AM

மீ பர்ஸ்ட்..??

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 1, 2010 11:29 AM

ஹை நானேதான்..

// மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா) //
இது ரொம்ப நாளா கொடாஞ்சிகினு இருந்துது தல.. கரீட்டுதான் போல..:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 1, 2010 11:31 AM

//வவ்வாள்// கோனார் நோட்ஸ் குடு தல..!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 1, 2010 11:34 AM

//Daybreakers டீல் செய்வது அந்த ஏரியாவைத்தான்.// ஒரு சின்ன விஷயத்த ஒரு பெரிய மேட்டரா சொல்றதுதான் இவனுங்கதான். பார்க்கறேன்..:)

ஹாலிவுட் பாலா said... March 1, 2010 11:36 AM

திருத்திட்டேன்.!!!!! :) :)

அதையெல்லாம்.. வெவரமா.. காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க. திருத்தினாலும்.. என்னத் தப்புன்னு எல்லாருக்கும் தெரியட்டும்!! :) :)

போனப் பதிவை பார்க்கலையா? ’அது’ -க்கு சண்டைக்கு வருவீங்களோன்னு நினைச்சேன். :) :)

கருந்தேள் கண்ணாயிரம் said... March 1, 2010 11:41 AM

வாம்ப்பையர் படங்களும் எனக்கு அல்வா தான் .. . ப்ளேடின் ரசிகர் மன்றத் தலைவரே நான் தான் . . :-) ஹீ ஹீ . .இந்தப் படம் நன்னா இருக்கும் போலயே . .ஆமா. . ஒரு சந்தேகம் . . வில்லியம் டஃபோ இருக்கும்போது, ஏதாவது ‘கில்மா’ இருக்கணுமே . . இருக்குதா . . :-)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 1, 2010 11:44 AM

பாலா வெரி சாரி... இத படிச்சிட்டுத்தான் அத படிச்சேன்..உண்மையில் கண்கள் பனித்தது, இதயம் இனித்தது..:)) I don't know i am really happy..:)

மீண்டும் வாழ்த்துகள்..:))

ஹாலிவுட் பாலா said... March 1, 2010 11:47 AM

கருந்தேள் : ப்ளேடை விட.. இது நல்லப் படம். ஆனா ஆக்‌ஷன் அவ்வளவு கிடையாது. பட் ப்ளடி!!

@ஷங்கர் : அட.. அது கிடக்கட்டும். அந்த ‘அது’வைத்தான் கேட்டேன்!! :)

ஹாலிவுட் பாலா said... March 1, 2010 11:47 AM

வில்லியம் இருக்காரு!! ஆனா.. மேட்டர் கிடையாது! :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 1, 2010 11:50 AM

இந்த வாரத்துல ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்.:) அது க்கு இது தான் விமோசனம்..:))

ஹாலிவுட் பாலா said... March 1, 2010 11:54 AM

வாரத்துக்கு ஒரு ‘ஹாரர்’ போதாதா?? :) பாவங்க.. படிக்கிறவங்க! :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 1, 2010 11:56 AM

தல ஃபார்மாலிட்டி டன்
பின்னே வந்து படிக்கும்

மயில்ராவணன் said... March 1, 2010 12:00 PM

”வேம்பையரா இருந்தாத்தான் அதோட வலி தெரியும்”- அப்பிடின்றீங்களா ஸ்டார் பாலா?

அண்ணாமலையான் said... March 1, 2010 12:07 PM

ரைட்டு

D.R.Ashok said... March 1, 2010 12:18 PM

first paraவே சூப்பர்.. நிறைய விஷயங்கள தெரிந்துக்கொண்டேன் H.Bala :)

King Viswa said... March 1, 2010 12:30 PM

தல,

அது என்னவோ தெரியல, எனக்கு சின்ன வயசு முதலே வேம்பையர் கதைன்ன ரொம்ப பிடிக்கும். அதனால இந்த படத்தை பற்றி ஆவலுடன் இருக்கையில் நீங்களே பதிவு இட்டு விட்டீங்க. நன்றி.

கதையை பத்தி விக்கியிலோ வேற எங்கேயோ படிக்கும்போதே வித்தியாசமான கதை என்பதை தெரிந்து கொண்டு விட்டேன்.

படம் ஓக்கேவா?

King Viswa said... March 1, 2010 12:30 PM

//மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா)//

வெகுவாய் ரசித்தேன். சூப்பர்.

King Viswa said... March 1, 2010 12:33 PM

//கருந்தேள் கண்ணாயிரம் said... March 1, 2010 11:41 AM
வாம்ப்பையர் படங்களும் எனக்கு அல்வா தான் .. . ப்ளேடின் ரசிகர் மன்றத் தலைவரே நான் தான் //

சான்ஸே இல்லை. பிளேட் படங்களின் வெகு தீவிர வெறியன் இங்கே இருக்கும்போது வேறொருவர் தலைவரா?

கருந்தேள், நான் அந்த படங்களை மட்டுமில்லாமல் டிவி தொடரையும் கரைத்து குடித்தவன் (அது ரொம்ப மொக்கை என்பது தெரிந்தும் கூட).

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 1, 2010 12:40 PM

தல வாம்பயர் என்றாலே எனக்கு ஆகாது

நல்லா எழுதினீங்க,ஃபார்மாலிட்டி டன் தல.

Busy said... March 1, 2010 12:44 PM

U put the review aftr getting the star Value only, I am waiting for tooth fair, legeon. last week released...............

வினோத்கெளதம் said... March 1, 2010 12:48 PM

எனக்கு Vampire படமே அவ்வளவா பிடிக்காது..ஆனா இந்த படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்ப்போல..

முகிலன் said... March 1, 2010 1:20 PM

உங்க பதிவைப் படிக்கிறதே படம் பாக்குற மாதிரி தான் இருக்கு.. அதுனால.. ஹி ஹி ஹி

VIJAY said... March 1, 2010 1:28 PM

வாழ்த்துகள் தலைவா. இது போன பதிவுக்கு.
என்ன திடீர் என்று ஹரர் படம் போட்டு தாக்கிட்டீங்க? ஹரர் படம் பார்க்கும்போது ஏற்படும் அதிர்ச்சியை விட இப்படி நீங்க அவ்வப்போது கொடுக்கும் ஷாக் பெருசாக இருக்கு.அப்புறம் அந்த ரா..???

Subash said... March 1, 2010 2:52 PM

வேம்பையர்னாவெ stylish ஆன வன்முறையை எதிர்பார்த்துதானே படம் பாக்கறது...
பாத்துடலாம்...
நன்றிகள் பாலாண்ணா

ர‌கு said... March 1, 2010 3:29 PM

//மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா)//

ஹாஹ்ஹா, ரொம்ப‌த்தான்....:))

gulf-tamilan said... March 1, 2010 3:58 PM

நல்லா எழுதினீங்க,ஃபார்மாலிட்டி டன்

gulf-tamilan said... March 1, 2010 4:04 PM

/மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா/
பாருங்க மக்கள் எல்லோரும் ரொம்ப கிண்டல் செய்றாங்க!!!

பா.ராஜாராம் said... March 1, 2010 4:21 PM

ஒஹ் பாலா,இந்த வாரம் நீங்களா?

உங்களை மிக சிலாகிப்பார்,சரவனா(செ.சரவணகுமார் பக்கங்கள்)

நட்சத்திர வாழ்த்துக்கள் மக்கா!

KISHORE said... March 1, 2010 8:27 PM

நல்லா இருந்தா பார்த்துட வேண்டியது தான்..

ROMEO said... March 1, 2010 9:31 PM

அப்படியே தமிழ்ல டப்பிங் பண்ணா என்ன டைட்டில் வைக்கலாம்ன்னு சொல்லுங்க பாஸ்.

டுபாக்கூர்கந்தசாமி said... March 1, 2010 9:42 PM

தல,

ரத்தக்காட்டேரி சாம்ராஜ்யம் இது தான் படத்தோட டைட்டில். நான் தயாரிக்கிறேன், சீக்கரம் ஸ்ரிக்ப்ட் ரெடி பண்ணுங்க. ஊருக்குள்ள எப்ப நாமலும் டெரர் ஆகறது

சென்ஷி said... March 1, 2010 11:22 PM

டன்.. எம்புட்டோ பாத்தாச்சு.. இதைப் பாத்துட மாட்டோமா.. :))

பாத்துடலாம் தல!

Clove said... March 1, 2010 11:37 PM

Vanakkam thala romba nalakki appuram unga areala vanthurukkiren. Nalla irukku valakkam pola. Etho konjam free ayittapulaya. Tamilmanam starukkum valthukkal

கண்ணா.. said... March 2, 2010 1:32 AM

தல என்ன எல்லாருமே வேம்பையர்னா அலர்றாங்க... ஆனா நான் கண்டிப்பா பாத்துடுவேன் தல..

ஆமா வழக்கத்த விட சின்ன விமர்சனமா இருக்கு. ஏன்?????

பிரசன்னா இராசன் said... March 2, 2010 1:39 AM

அது என்னமோ தெரியலை பாஸ். இந்த வேம்பயர் படங்கள்னாலே எனக்கு தூக்கம் தூக்கமா வருது. இந்த படம் பார்த்தப்ப நல்லா குறட்டை விட்டு தூங்கனது தான் மிச்சம்...

ஷாகுல் said... March 2, 2010 1:54 AM

//மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா) இப்பொழுது வேம்பயர்கள் கையில். //

ஜார்ஜ் புஷ் பத்தி சொல்றாங்க போல இருக்கு.

அப்படிதானே பாஸ் :))))))))))

அறிவு GV said... March 2, 2010 3:43 AM

நல்ல விமர்சனம் தல. நானும் ரொம்ப நாளா ஒரு ராபரி படத்துக்காக வெய்டிங். பாத்து பண்ணுங்க தல.

///அப்படியே தமிழ்ல டப்பிங் பண்ணா என்ன டைட்டில் வைக்கலாம்ன்னு சொல்லுங்க பாஸ்.///
- 'வேம்பையர் வேட்டைக்காரன்' / 'வேம்பையரில் ஒருவன்' எப்டி இருக்கு பாஸ்..? :)
நீங்க படத்த எடுத்தா மட்டும் போதும், அத எப்டி ஓடவைக்கிரதுன்னு எங்களுக்கு தெரியும். :))

சைவகொத்துப்பரோட்டா said... March 2, 2010 4:25 AM

ரைட்டு, அப்ப பார்க்கலாம் :))

ராஜ நடராஜன் said... March 2, 2010 6:03 AM

நட்சத்திரமா தல!வாழ்த்துக்கள்!

Porkodi (பொற்கொடி) said... March 2, 2010 8:16 AM

aha! pona week varai busya irundha neenga, tamilmana stara indha week?? theriyama poche! congrats bala, ellathaiyum viraivil padikiren!

நாஞ்சில் பிரதாப் said... March 2, 2010 11:00 AM

//மொத்த உலகமும் (அதாங்க...... அமேரிக்கா) //

ஆகா...உலக பொருளாதார தத்துவத்தை ஒரு வரில சொல்லிட்டீங்க....
வேம்பயர் படம் பார்த்து போரடிச்சுடச்சு தல... எல்லாப்படமும் ஒரேமாதிரிதான் இருக்கு... இதை பார்க்கலாமோ---???

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil