புது வரவு - நம்பிக்கை

3/02/2010

Heist (2001) - [Hollywood Robbeires 04]


Mamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம்.

01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி.

02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே.. முதல் பாத்திரம் சொல்ல வந்த வாக்கியத்தை குறிக்கிட்டவர் முடிப்பது. ஒருவர் பேசிய அதே டயலாகை அடுத்தக் கேரக்டரும் ரிபீட்டுவது.

03. ஒருவர் சொன்ன ஒரு வாக்கியத்தை, அதே வார்த்தைகளைக் கொண்டு, அடுத்தக் கேரக்டர்... தனக்குத் தேவையான அர்த்தத்தை அதில் பெற்றுக் கொள்வது. அல்லது அந்த அர்த்தம் வரும்வரை, அந்த வாக்கியத்தோடு விளையாடிக் கொண்டிருப்பது.

சரி எதுக்கு சம்பந்தமேயில்லாமல் Mamet Speak பத்திப் பேசணும், அல்லது இதுக்கு என்ன அர்த்தம்? பின்னாடி பார்ப்போம்!!


ஒரு கொள்ளையடிக்கும் படத்துக்கு, டிபிகலாக என்னென்ன தேவையோ, அத்தனையும் வைத்துக் கொண்டு, கொஞ்சம் வித்தியாசம் காட்டணும். அங்கதான் இந்த Mamet Speak -க்கும், கேரக்டர் டெவலப்மெண்டும். கதை?? சுருக்கமாக எழுதினால் கூட, உ.த பதிவு சைஸுக்கு வருமளவுக்கு, அத்தனை ட்விஸ்ட்.. அல்லது அத்தனை நீளமானக் கதை!

ஜோ -வின் தலைமையில் இன்னும் இரண்டு திருடர்கள் (பாபி & பிங்கி). மூன்று பேரும் ரிடயர்ட் ஆகும் வயதில். ஜோவிற்கு ஒரு இளம் மனைவி.  இதுவரை ஏகப்பட்ட கொள்ளைகளை ஏற்கனவே.. இந்த நாலு பேரும், போலீஸிடம் மாட்டாமல் செய்திருக்க, ஒரு கொள்ளையில், ஜோவின் முகம் செக்யூரிடி கேமராவில் பதிகிறது.

இனிமேல் கொள்ளைத் தொழிலை நடத்த முடியாது என்பதால், அந்தத் திருட்டோடு.. ‘தொழிலுக்கு’ மூட்டை கட்டப் பார்த்தால், இந்த அத்தனைக் கொள்ளைகளையும் திட்டமிடும்.. மிக்கி என்பவன், அந்தக் கொள்ளைக்கு அவர்கள் பங்காக கொடுக்க வேண்டியப் பணத்தை கடைசியாக ஒரு கொள்ளையை நடத்தினால் தருவாத சொல்கிறான். ஆனால் உப கண்டிஷன் அவனது உறவினன் ஒருவனையும், இவர்களின் ஆட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கொள்ளை அடிக்கப் போவது, ஒரு ஸ்விஸ் விமானத்தில் இருக்கும்.. தங்கக் கட்டிகளை!! திட்டம் ஆரம்பித்தவுடன்... அதன் பின், முழுக்க முழுக்க Gene Hackman ஆளுமையில், நடக்கும்.. டாம் & ஜெர்ரி விளையாட்டுத்தான்.. அடுத்த இரண்டு மணி நேரமும்.


வீடு படத்தில்.. ‘வீடு’ தாத்தா.. ரெண்டு கிலோமீட்டர் நடக்கணும்னா.. கூடவே.. பாலுமகேந்திராவும் கேமராவை எடுத்துக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவார். அது ஒரு ஸ்டைல்.

ரூபலாவிடம் பை சொன்ன விவேக்.... தன் யமஹாவின் கிக்கரை உதைத்து, வேகம் கொடுத்த அடுத்த ஐந்து நிமிடத்தில், கோகுல்நாத்தின் அலுவலகத்தில் இருந்தான்”. இப்படி ராஜேஷ்குமார் எழுதியிருந்தால், நம் மனதிலும், விவேக் பை சொல்லி, கிக்கர் உதைத்து, த்ராட்டில் முறுக்கி, அந்த ஐந்து நிமிடத்தை மனதிற்குள் ‘கட்’ செய்து, கோகுல்நாத் அலுவலகத்தை கற்பனையில் கொண்டு வருவோம்.

Heist படத்தின் இயக்குனர் David Mamet -ன் ஸ்டைல் இது போலத்தான் இருக்கும். ஆஹோ ஓஹோ டைரக்டரோ, மிகப் பெரிய ஹிட் கொடுத்த டைரக்டரோ எல்லாம் இல்லை. பெரும்பாலும் நாடங்களையும், டிவி சீரியல்களையும்தான் எழுதி இயக்கியிருக்கார். ஆனால் தன்னுடைய மிகத் திறமையான வசனங்களுக்காகவே “Mamet Speak" என்ற ஸ்டைலை உருவாக்கியவர். 

Cluster F-Bomb சொல்லாடல் உண்டு. ஒரு பாரா அல்லது ஒரு கட்டுரை எழுதினால், கமா, முற்றுப்புள்ளி கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் F*** வார்த்தைகள், ஒவ்வொரு 4-5 வார்த்தைகளுக்கு நடுவில் இருப்பது போல் எழுதுவது. நம்ம க்வெண்டின், கெவின் ஸ்மித் எல்லோரும் எழுதும் ஸ்டைல்தான். அதற்கும், Mamet தான் குரு.

மேலே சொன்ன அத்தனை விசயங்களையும், Heist படத்தில் பார்க்க முடியும். ஆற அமர.. ஒரு ஹாலிவுட் கொள்ளை.  இத்தனைப் பொறுமையா ஒரு கொள்ளையடிக்கும் படத்தைப் பார்த்திருக்க மாட்டோம்னு நினைக்கிறேன் (Flawless ஒரு எக்ஸப்ஷன்). ஆனாலும் ஒரு நிமிடம் கூட, திரையை விட்டு அகலாது. இத்தனைப் பொறுமையாக ஒரு இயக்குனரால்.. கேரக்டர் டெவலப்மெண்ட் செய்ய முடியுமான்னு ஒரு ஆச்சரியத்திலேயே படமுழுக்கப் பார்த்தேன். க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் நற நற.

உங்கள்ல எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்னு தெரியலை. வித்தியாசமான ஒரு கொள்ளைப் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு மட்டும்... இது ரெகமெண்டட்.



Heist = Mamet Speak




37 தியேட்டர் கமெண்ட்ஸ்:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 2, 2010 3:26 PM

வெயிட் எ நிமிட் படிச்சிட்டு வரேன்..:)

ஹாலிவுட் பாலா said... March 2, 2010 3:29 PM

ஹலோ.. மணி 2.00. இந்த நேரத்தில்.. என்ன பண்ணுறீங்க?? :)

க.இராமசாமி said... March 2, 2010 3:31 PM

தல . கண்டிப்பபா பாத்துடறேன்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 2, 2010 3:32 PM

//உங்கள்ல எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்னு தெரியலை. வித்தியாசமான ஒரு கொள்ளைப் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு மட்டும்... இது ரெகமெண்டட்.//

இந்த மாதிரி முடிக்கிற விமர்சனத்துக்கு பேர் என்ன தல cluster D..??:)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said... March 2, 2010 3:34 PM

இன்னிக்கு சாயந்திரம் ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்கு அது பற்றிய ஒர் ரிசர்ச்..:))

ஹாலிவுட் பாலா said... March 2, 2010 3:38 PM

@இராமசாமி : ரைட்டுங்க! எதிர் வீட்டில் இருந்தாக்கூட.. கமெண்டில்தான் பேச வேண்டியிருக்கு! :) :)

====

சங்கர்!

ஹா...ஹா. ஹா.. ஜஸ்ட் இப்பத்தான் பார்த்தேன்.

அதைப்பத்தி.. விரிவா ஒரு விமர்சனம் எழுதிடுவோம். சொன்னா.. நாத்திகன் -ன்னு என்னைத் திட்டுவாங்க.! :)

வில்லங்கம் விக்னேஷ் said... March 2, 2010 3:39 PM

தமிழிலே தலைப்பு இந்த வாரமாச்சும் போடுங்களேன். தமிழ்மணம் நட்சத்திரம் ஆங்கிலத்திலேயே தலைப்பு போடறதை பார்க்க ஆட்டா இருக்கு

ஹாலிவுட் பாலா said... March 2, 2010 3:51 PM

இந்தப் படத்துக்கெல்லாம்.. வரிவிலக்கு தரமாட்டாங்க்ளே தல?? நாம என்ன டப்பிங் படமா ரிலீஸ் பண்ணுறோம்?! :)

வேற வழியில்லீங்கோவ்.

வஜ்ரா said... March 2, 2010 4:08 PM

இது 2001 ல் வந்த படம்.
http://www.imdb.com/title/tt0252503/
தலைப்பில் 2004 என்று அடித்திருக்கிறீர்கள். திருத்துங்கள்.

க.இராமசாமி said... March 2, 2010 4:09 PM

ஸாரி தல. நீங்க ரொம்ப வேலை இருக்குன்னு சொன்னதால கால் பண்ணி டிஸ்ட்ப் பண்ண விரும்பல. இன்னிக்கு கால் பண்றேன்.

Porkodi (பொற்கொடி) said... March 2, 2010 4:33 PM

veedu thaathaavai gnabaga paduthinadhuku nandri! :)

VTV vida twist jasthiya irukka mudiyuma thala? :P

ஹாலிவுட் பாலா said... March 2, 2010 4:42 PM

@வஜ்ரா : ஸாரிங்க திருத்திட்டேன்.

@இராமசாமி : 9 மணி வரைக்கும் ஆஃபீஸில் தாங்க இருப்பேன். ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுங்க! :)


@பொற்கொடி : VTV -nna innango?

சுப.தமிழினியன் said... March 2, 2010 7:22 PM

VTVன்னா என்னன்னு தெரியாத பாஸீஸ்ட் பாலாவைக் கண்டித்து நாளை மன்றோ சிலை அருகே கண்டனகூட்டம் நடத்தப்படும். அவரவரும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், மிடிலீஸ்ட்டில் இருந்தாலும் சரி, யூஎஸ்ஸில் இருந்தாலும் சரி.

மண்றோ சிலை எங்கிருக்கிறது என்று கேட்காமல் சரியாக பாலா பதில் சொல்லிவிட்டால் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் பாசப் பாலாவுக்கு பாராட்டுவிழா நடத்தப்படும்.

என்னது அந்த படத்துக்கும் விமர்சனமா?

சுப.தமிழினியன் said... March 2, 2010 7:23 PM

என்னது அந்த படத்துக்கும் விமர்சனமா?

தமிழ்மனத்துல நட்சத்திரமானாலும் ஆனாரு இப்படி கிடைக்குற படத்துக்கெல்லாம் விமர்சனமா?

ஹாலிவுட் பாலா said... March 2, 2010 7:45 PM

VTV - ன்னா நெசமாவே தெரியலீங்கோவ்..!!

விண்ணைத்தாண்டி வருவாயா - படமா???? (கூகிள்ல போட்டா.. பக்கத்தில் கடைசியா வந்துச்சி).

---

ஏப்பா... பின்னூட்டத்தில்.. எத்தனை பேர் இந்த ராப்ரி சீரீஸை திரும்ப எழுதச் சொல்லி கேட்டாங்க? அதுக்காக ஒரு படம் எழுதினா..... :( :( :(

சுப.தமிழினியன் said... March 2, 2010 8:13 PM

//ஏப்பா... பின்னூட்டத்தில்.. எத்தனை பேர் இந்த ராப்ரி சீரீஸை திரும்ப எழுதச் சொல்லி கேட்டாங்க? அதுக்காக ஒரு படம் எழுதினா..... :( :( :(//

நான் சொன்னது இந்த படத்தை இல்லை.

//சங்கர்!

ஹா...ஹா. ஹா.. ஜஸ்ட் இப்பத்தான் பார்த்தேன்.

அதைப்பத்தி.. விரிவா ஒரு விமர்சனம் எழுதிடுவோம். சொன்னா.. நாத்திகன் -ன்னு என்னைத் திட்டுவாங்க.! :)//

நீங்க சொன்ன இந்த படத்தைப்பத்தி.
நான் சரியா குறிப்பிடாம விட்டுட்டேனோ

கோபிநாத் said... March 2, 2010 8:25 PM

தல பாலா அவர்களுக்கு...ஆணிகளில் தொல்லை அதிகமாக இருப்பதால் தயவு செய்து 2 நாட்கள் விடுப்பு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

ஆனால் தவறமால் ஓட்டு போட்டுவிட்டேன் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிற்றேன்ன ;))

முகிலன் said... March 2, 2010 8:46 PM

இந்தப் படம் எப்பிடி மிஸ் பண்ணேன்னு தெரியலை? ஒரு வேலை ஜீன் ஹாக்மன் நடிச்சதால சீண்டலையோ?

தல, CONfidence பத்தியும் எழுதுங்க

கோபிநாத் said... March 2, 2010 8:54 PM

தல இப்பதான் பார்த்தேன்..நட்சத்திரமால்ல..வாழ்த்துக்கள் தல ;))

VIJAY said... March 2, 2010 9:10 PM

நன்றி...மீண்டும் வந்து படித்துவிட்டு பின்னர் தரவிறக்கம் பண்ணவேண்டியதுதான்.

ROMEO said... March 2, 2010 9:16 PM

இன்னும் எத்தனை நாளுக்கு தான் கொள்ளை அடிகிறதா படமா எடுப்பாங்கன்னு தெரியல. DVD கிடைக்கட்டும் பார்கிறேன். விமர்சனம் அருமை,

\\“ரூபலாவிடம் பை சொன்ன விவேக்.... தன் யமஹாவின் கிக்கரை உதைத்து, வேகம் கொடுத்த அடுத்த ஐந்து நிமிடத்தில், கோகுல்நாத்தின் அலுவலகத்தில் இருந்தான்”. இப்படி ராஜேஷ்குமார் எழுதியிருந்தால், நம் மனதிலும், விவேக் பை சொல்லி, கிக்கர் உதைத்து, த்ராட்டில் முறுக்கி, அந்த ஐந்து நிமிடத்தை மனதிற்குள் ‘கட்’ செய்து, கோகுல்நாத் அலுவலகத்தை கற்பனையில் கொண்டு வருவோம்.//

இவை அதனையும் உண்மை பாலா. ராஜேஷ்குமார் நாவல் படிக்கும் போது எல்லாம் அந்த கதாபாத்திரம் உடன் நானும் செல்வது போல இருக்கும்.

ILLUMINATI said... March 2, 2010 9:19 PM

Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

Cable Sankar said... March 2, 2010 9:32 PM

பாலா... இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்..எப்ப வரும்..? போன் அலலது.. நான் சொன்னது..:)

ஜெரி ஈசானந்தா. said... March 2, 2010 9:51 PM

பாலா,நட்சத்திர வாழ்த்துகள்,அப்புறம்,[Heat-] படம் பற்றியும் எழுதுங்களேன்.[bank robbery]

சென்ஷி said... March 2, 2010 10:32 PM

:)

pappu said... March 2, 2010 11:05 PM

VTVன்னா என்னன்னு தெரியாத பாஸீஸ்ட் பாலாவைக் கண்டித்து நாளை மன்றோ சிலை அருகே கண்டனகூட்டம் நடத்தப்படும். அவரவரும் அவரவர் இருந்த இடத்திலிருந்தே கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், மிடிலீஸ்ட்டில் இருந்தாலும் சரி, யூஎஸ்ஸில் இருந்தாலும் சரி.////

Fascist bala - rhymes :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said... March 2, 2010 11:05 PM

தல இதையும் தரவிறக்கிடுறேன்.
ஃபார்மாலிட்டி டன்.
அந்த டெல்ராய் தானே டோமினோ வில் பவுண்டி ஹண்டர் பாஸ்?ஃபார்மாலிட்டி டன்

கருந்தேள் கண்ணாயிரம் said... March 3, 2010 12:19 AM

டெல்ராய் லிண்டோ, விங் ரேம்ஸ், சாமுவேல் ஜாக்ஸன், மார்கன் ஃப்ரீமேன் ஆகிய இந்த நாலு பேரும் எனக்கு ரொம்பப் புடிச்சவங்க . .டெல்ராயப் பார்த்து தான் சிவாஜில மொட்ட பாஸ் கெட்டப் வெச்சாங்களோன்னு எனக்கு ரொம்ப நாளா டவுட்டு . .:-) இந்தக் கதையும் நல்லா கீது . . டெல்ராய்க்காகவே பாப்பேன் . . :-)

அறிவு GV said... March 3, 2010 12:29 AM

தல, பின்னிட்டீங்க...! நேத்துதான் கேட்டேன், ராப்பரி வேணும்னு, இன்னைக்கு பாத்தா ஒரு அருமையான விமர்சனம். இன்ப அதிர்ச்சி தல. கண்டிப்பா பாத்துடலாம். விவேக், ரூபலா, ராஜேஷ்குமார நினைவுபடுத்தியதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஒரு காலத்துல(ஸ்கூல் படிக்கும்போது) நான் அவருடைய மிக மிக மிக தீவிர வாசக வெறியன். க்ரைம் நாவல்களோட மொத்த கலேக்க்ஷனே வெச்சிருந்தேன். பழைய பேப்பர் கடைலலாம் தேடி புடிச்சி வாங்குவேன்...!
இப்பல்லாம் நம்ம ஏரியா பக்கமே நீங்க வர்றதில்ல, கவிதை தான் ஜாஸ்தி போடுறேன்னா..? சிஷ்யன கவனிச்சிக்குங்க குரு...! :)

மைதீன் said... March 3, 2010 1:10 AM

ஆங்கிலப்படத்துல இயல்பா விட்ருவாங்க .தமிழ்ப்படத்துல" இதனால் அறியப்படும் நீதி யாதனில்" னு ஆரம்பிச்சுடுவாங்க .படம் தரம் இறக்கி பார்த்துடுறேன்.விமர்சனத்துக்கு நன்றி.

ஹாலிவுட் பாலா said... March 3, 2010 1:52 AM

@சுப : ஹி.. ஹி.. அந்தப் படத்தை சொன்னீங்களா?? கிட்டத்தட்ட.. அதே ரேஞ்சுக்கு இப்ப ஒரு படத்தைப் பத்தி எழுதியாச்சி! ஸாரி! :( :)

@கோபி : உங்களுக்கு இல்லாத லீவா??!!! ஆனா.. அடுத்த வாரத்தில் இருந்து.. நானும் பெரிய மெடிகல் லீவில் போய்டுவேன்னு நினைக்கிறேன்! :(

@முகிலன் : ஹாக்மேன் என் ஃபேவரிட்டுங்க. இப்படி சொல்லிட்டீங்களே தல?! :( :(

@விஜய் : உங்க ஸ்பெஷல். எப்ப வேணும்னாலும் வாங்க! :)

@ரோமியோ : இது ரொம்பப் பழையப் படங்க தல. ஆனாலும். 75 வருசமா.. காதலை மட்டும் படமா எடுத்தா பார்த்துகிட்டே இருக்கோம். இதுக்கென்ன? :)

@Illuminati : வந்துட்டேன்.. வந்துட்டேன்.

@சங்கர் : மெயில் பண்ணியிருக்கேன் சங்கர். காலையில் கால் பண்ணுறேன்.

@ஜெரி : தல.. அந்தப் படத்தைப் பத்தி.. ஏற்கனவே எழுதியாச்சிங்க. மேலே மெனுவில்... ‘தொடர்கள்’ல பாருங்க. :)

@சென்ஷி : வந்தாச்சா.. ஸ்மைலி! :)

@பப்பு : யோவ்.. அதான் கண்டுபுடிச்சி போட்டுட்டேனில்ல?? இன்னும் என்ன ரைமிங் வேண்டி கிடக்கு! :)

@கார்த்திக்கேயன் : என்ன ஆச்சிங்க.. இந்த பார்மாலிட்டையை காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டே இருக்கீங்க. போனப் பதிவில் ரெண்டு முறை கமெண்ட் போட்டிருக்கீங்க! :)

@கருந்தேள் : இது.. நிச்சயம். உங்களுக்குப் பிடிக்கும் கருந்தேள். உங்க லிஸ்டில் எனக்கு கடைசி ரெண்டு பேர் மட்டும்தான். நீங்க சொன்ன அந்த மொட்டை மேட்டரை நானும் இப்பத்தான் யோசிக்கிறேன். :) :)

@அறிவு : ரொம்ப சாரிங்க அறிவு. ஏகப்பட்ட மேட்டர்களை.. ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டியிருக்கு. அதான்... ஒரு மாசமா.. எந்த ஏரியாவுக்குமே போறதில்லை. சீக்கிரம். பழைய ஃபார்முக்கு வந்து.. எல்லோரையும் தொந்தரவு பண்ண வந்துடுறேன்.

@மைதீன் : உண்மைங்க!!! நமக்கு கேமராவைப் பார்த்து அட்வைஸ் சொல்லலைன்னா தூக்கம் வராதில்ல?!:)

Balaji K said... March 3, 2010 6:36 AM

ரொம்ப நல்லா எழுதறீங்க பாலா.. நிறைய நல்ல படங்கள் பத்தி தெரிஞ்சுக்க முடியுது.. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்.. நான் IMDB-ல 10/10 மார்க் போட்ருக்க படங்கள்.. உங்களுக்கும் பிடிச்சுருந்தா இந்த படங்கள பத்தி எழுதுங்க..

12 Angry Men (1957)
A Beautiful Mind (2001)
Artificial Intelligence: AI (2001)
Casablanca (1942)
Cast Away (2000)
Eternal Sunshine of the Spotless Mind (2004)
Forrest Gump (1994)
Il buono, il brutto, il cattivo. (1966)
It's a Wonderful Life (1946)
Kill Bill: Vol. 2 (2004)
Life is beautiful (1997)
Amelie (2001)
Memento (2000)
Paths of Glory (1957)
Pulp Fiction (1994)
Rope (1948)
Saving Private Ryan (1998)
Schindler's List (1993)
Se7en (1995)
Sleuth (1972)
The Matrix (1999)
The Sixth Sense (1999)
The Terminal (2004)

நன்றி,
பாலாஜி

suresh said... March 3, 2010 9:22 AM

Ronin Italian Job Score heist எல்லாமே ஒரேவகை
படங்கள் ஒரு த்ரிளிங்குகாக பார்க்கலாம்

நெருப்புச் சக்கரம் said... March 4, 2010 5:03 AM

நல்ல திரைக்கதை.....கதைக்களத்திற்கு தேவையானவை மட்டுமே படம் முழுசும் சொல்லி இருக்காங்க.....neat flow...

ஒரே உறுத்தல்....அந்த மனைவி character தான்....ஆரம்பத்துல அந்நியோன்யமா இருந்துட்டு....வேற யாரொ ஒருவன் சொல்லி கதாநாயகன விட்டுட்டு போற மாதிரி சொன்னது....that too intha starting she says whatever he says is right....anyway good entertaining movie.. good movie to quote for the good screenplay...

சுரேகா.. said... March 4, 2010 10:26 AM

நட்சத்திர வாழ்த்துக்கள்!

நல்ல படங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். நன்றி!

நாஞ்சில் பிரதாப் said... March 4, 2010 3:18 PM

பார்த்துடலாம் தல... இட்டாலியன் ஜாப் பார்த்துட்டு ஆ,,,வாயைப்பொளந்தவன்... இது இன்னும் வாயைப்பொளக்கற மொதிரி இருந்தா நல்லது...பார்த்துட்டு சொல்றேன்...

டுபாக்கூர்கந்தசாமி said... March 6, 2010 12:35 AM

ஓட்டு போட்டாச்சிங்க தல

அடுத்து நம்ப நித்தியானந்தாவோட லீலைய எப்படி அவனுக்கு தெரியாம காமிரால சூட் பண்ணி இருப்பாங்க, அதே மாதிரி அமெரிக்கால பாப்பாராஸி என்ன என்ன கைங்காரியம் பண்ணி செலிப்பரிட்டிகளோட அந்தரங்க மேட்டர படம் புடிக்கிறாங்க(அத பத்தி எதாவது படம் இருந்து அத பத்தி எழுதுனா உத்தமம்) இப்படிலா பல பொது நல சப்ஜெக்ட்டுக்கு வாங்க தல குஜாலா இருக்கும் : ))

 

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

Resident Evil